பாகம் :2 எபிரெயர் நிருபத்தின் பேரிலான கேள்விகளும் பதில்களும் COD#6 57-10-02 பிரன்ஹாம் கூடாரம்,ஜெபர்சன்வில், இந்தியானா, அமெரிக்கா முதலாவதாக “மனைவிக்காக ஜெபிக்கும்படியான” செய்தியை பெற்றுக் கொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். அவள் மிக, மிக சுகவீனமாயிருந்தாள். அது என்னவாயிருந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை, என்ன சம்பவித்தது என்றும் எங்களுக்குத் தெரியவில்லை, அது கடுமையான வாந்தியாய் இருந்தபடியால், அவள் சுயநினைவற்றிருந்தாள். காய்ச்சலோ ஏறக்குறைய !05 பாகையாய் இருந்த படியால், அவளை தொடர்ந்து பனிக்கட்டியால் சுற்றப்பட்ட துணிகளில் சுற்றி வைக்க வேண்டியதாயிருந்தது. ஆகையால்…ஆனால் அவள் இப்பொழுது நன்றாய் இருக்கிறாள். காய்ச்சல் முற்றிலும் போய் விட்டது, அவள் சுகமாய் இருக்கிறாள். எனவே அவள் மிக மோசமாக பெலவீனமாகி, ஏறக்குறைய பத்து பவுண்டுகள் குறைந்து விட்டாள் என்று நான் நினைக்கிறேன். அவள்…கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து இன்று தான் அவள் தன்னுடைய ஆகாரத்தை முதலாவதாகப் புசித்தாள். ஆகையால் அவள் மிகவும் சுகவீனமாயிருந்துகொண்டிருந்தாள், நாங்கள் அவளுக்காக கர்த்தரை நம்பியிருந்தோம், அவர் அந்த சுகவீனத்திலிருந்து அவளை வெளியேக் கொண்டு வந்தார். இப்பொழுது அவள் மீண்டும் தன்னுடைய பெலனை பெற்றுக் கொள்ளும்படி நீங்கள் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். 304 இப்பொழுது கர்த்தருக்குச் சித்தமானால், வருகிற இந்த வார இறுதியில் நான் மியாமிக்கு செல்ல வேண்டியதாயுள்ளது. என்னுடைய வயோதிக நண்பர், சகோ.பாஸ்வர்த் அவர்கள் பரம வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார், அவருக்கு இப்பொழுது ஏறத்தாழ நூறு வயதாகிறது. எனவே அவர் என்னை அழைத்து, “சகோதரன் பிரான்ஹாம், ஒரு முறை என்னை வந்துப் பாருங்கள், ஏனென்றால் நான் பரம வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் நான் உங்களிடம் ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன்,” என்றார். அவர்…நல்லது, அவர் எனக்காக ஜெபிக்க விரும்புகிறார் என்றே நான் நினைக்கிறேன், உங்களுக்குத் தெரியுமா-? அவர் மரிப்பதற்கு முன்னர் தம்முடைய கரங்களை என் மீது வைத்து ஜெபிக்க விரும்புகிறார். 305 என்னுடைய நாட்கள் F.F பாஸ்வர்த் அவர்களைப் போல ஒரு கீர்த்தியோடு முடிவடையக் கூடும் என்று நான்—நான் நினைக்கிறேன். உலகில் நான் அறிந்த எல்லா மனிதரைக் காட்டிலும், உலகத்தில் எனக்குத் தெரிந்த எல்லா மனிதரையும்விட, நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேனென்றால் F.F பாஸ்வர்த் என்ற ஒரு ஊழியக்காரரைப் போல நான் இருக்க வேண்டும் என்று மிகவும் வாஞ்சையாயிருந்தேன், அப்படிப்பட்ட ஒரு மனிதனை நான் ஒரு போதும் சந்தித்ததேயில்லை. F.F. பாஸ்வர்த் அவர்கள் சரியாக ஒவ்வொரு காரியத்திலும் “ஒரு கிறிஸ்தவராக” இருந்தார் என்றும், ஒவ்வொரு காரியத்திலும் “ஒரு உண்மையான சகோதரனாயிருந்தார்” என்று எப்போதும் அவரைக் குறித்து எங்கும், உலகளாவிய அளவில் கூறப்படுகிற வாக்குமூலத்தைத் தவிர வேறெந்த நபரும் வேறெதையும் தவறாக அவரைப் பற்றிக் கூறினதை நான் ஒருபோதும் கேட்டதேயில்லை. 306 நமது அடிச்சுவடுகளைப் பின்னே கால மணல்களின் மேல் விட்டுச் செல்கிறோம். அவர் ஒரு அற்புதமான சகோதரனாயிருக்கிறார், இப்பொழுது அவர் உண்மையாகவே ஏறக்குறைய 100 வயதான வயோதிகராய் இருக்கிறார். ஆகையால் அவர் பரம வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறார், அவ்வளவு தான், அவர் அதை என்னிடம் கூறினார். அவர் போய்க் கொண்டிருக்கிறார் என்பதையும், அதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் அவர் அறிந்திருந்திருக்கிறார். இப்பொழுது அவர் அதற்காக காத்துக் கொண்டிருப்பதே தம்முடைய ஜீவயத்தின் இனிமையான நேரம் என்று கூறினார், ஆனால் அவர் சென்று கொண்டிருப்பதை அவர் அறிந்திருப்பதாகக் கூறினார். 307 நான் சகோ.பாஸ்வர்த் அவர்களே, “இந்த வாரம் நான் மிக்சிகனுக்கு வர வேண்டியதாயிருக்கிறது” என்றேன். 308 அவர், “சகோ.பிரான்ஹாம் அதற்கு நீண்ட நேரம் ஆகாது, என்னால் அதிக நேரம் நீடித்திருக்க முடியாது. நான் எல்லா நேரத்திலுமே பலவீனம் அடைந்து கொண்டிருக்கிறேன்” என்றார். 309 ஆகையால் அவர் எனக்கு ஒரு மிக நெருக்கமான நண்பராய் இருந்து வருகிறார், எனவே அங்கு போகாமல் இருக்க முடியாது, இப்பொழுது நான் ஆகாய விமானத்தின் மூலம் சென்றால், நான் குறைந்த பட்சம் ஞாயிறு இரவன்று ஒருக்கால விமானம் மூலம் திரும்பிவிடலாம். அப்படி இல்லையென்றால், அப்பொழுது நான் காரோட்டித்தான் செல்ல வேண்டும், அதற்கு எனக்கு சற்று இன்னும் கூடுதல் நாட்கள் ஆகலாம். 310 சகோதரன் பாஸ்வர்த் அவர்களுக்காக ஜெபியுங்கள். தேவன்…அவர் அந்த வயோதிகக் கோத்திரப் பிதாவை எடுத்துக் கொள்ளும்போது, அவர் ஒரு அக்கினி இரதத்தை அனுப்பி, அவரை மேலே கொண்டு செல்லும்படி ஜெபியுங்கள், பாருங்கள். நான் அவரை நேசிக்கிறேன், அவர் எனக்கு ஒரு தந்தையைப் போலவே இருந்து வருகிறார். 311 மற்றொரு வயோதிக மனிதன்… அவரை, சகோதரன் ஸீவர்ட். நான் ஒரு விதமான வயோதிக ஜனங்களின் சார்புடையவன், நான் அவர்களை நேசிக்கிறேன். வயோதிக சகோதரன் ஸீவர்ட் அவர்களும் கூட நித்திரை அடைந்துவிட்டார். நிச்சயமாகவே, சகோதரன் ஸீவர்ட் அவர்கள் சகோதரன் பாஸ்வர்த்தைப் போல மிகவும் வயதானவர் அல்ல என்றே நான் நினைக்கிறேன். 312 சகோதரன் பாஸ்வர்த் அவர்களுக்காக ஜெபியுங்கள். அவரை சுற்றிலும் உள்ள யாவும் அருமையானதாக இல்லை, ஆனால் அது… அவருக்கு உங்களுடைய ஜெபங்கள் தேவையாயிருக்கிறது, ஆனால் அதிகப்படியாக ஒன்றுமில்லை. ஆனால் அவருடைய… தேவன் அவரை சமாதனத்தோடு போகச் செய்யட்டும். 313 இப்பொழுது…ஆகையால் நாமும் கூட ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது, அதாவது நாளை, கர்த்தருக்குச் சித்தமானால், இந்த சபையிலிருந்த நம்முடைய சகோதரர்களில் ஒருவரான சகோதரன் சோல் கோட்ஸ் அவர்களை அடக்கம் செய்யப் போகிறோம். அவர் பலமுறை இங்கே வந்திருக்கிறார், அநேக வருடங்களாக தபால் அலுவலகத்தில் பணிபுரிந்தார். அன்றொரு இரவு அவர் இராணுவ படைத்துறை வீரர்களின் மருத்துவமனையில் மரித்துப் போய் விட்டார். சகோதரன் காக்ஸ் அவர்களும் நானும் அவரை அங்கு காணச் சென்றோம், அவர் நிலைமை மோசமாக இருந்தது, அவர் ஒரு கிறிஸ்தவராகவே இப்பொழுது மரித்துவிட்டார். எனவே நாங்கள் அவரை கூட்ஸ்—கூட்ஸினுடைய சவ அடக்க ஆராதனை நடத்தும் வீட்டிலிருந்து கொண்டு சென்று, நானும், சகோதரன் நெவிலும் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு அடக்கம் செய்ய உள்ளோம். நெவில் அவர்களின் மூவர் சேர்ந்து பாடும் குழுவானது பாடல்களை பாடும்; சகோதரன் நெவிலும் நானுமாக, நாங்கள் ஆராதனைகளை பிரித்துக் கொள்வோம். மேடாவின் சுகவீனத்தின் காரணமாக, எப்பொழுது அவர்கள் ஏற்பாடுகளை செய்தனர் என்பதை நான் அறியேன். எனவே அவருடைய அடக்க ஆராதனை நாளை பிற்பகல் ஒரு மணிக்கு கூட்ஸ் அவர்களின் இறுதி சவ அடக்க ஆராதனை வீட்டில் நடைபெறும். 314 அதன்பின்னர் வெள்ளிக் கிழமை இரண்டு மணிக்கு சகோதரன் வீலர் அவர்களின் அடக்க ஆராதனை நடைபெறும். நாங்கள் அவரை பாட் வீலர் என்று அழைத்து வந்தோம். அவர் ஒரு, நான் உண்மையாகவே அவருடைய சரியான…மறந்துவிட்டேன். உங்களுக்குத் தெரியுமா, நான் அவரைக் குறித்து கண்டறியும் வரை, முதலில் நான்—நான் அதை செய்தித்தாளில் கண்டபோது, அது யார் என்று தெரியவில்லை. அவர் அநேக வருடங்களாக எங்களுடைய ஒரு அண்டைவீட்டாராய் இருந்தார், அவரும் சற்று முன் மரித்துப் போய் விட்டார். அன்றொரு இரவு அவர் இங்கே சபையின் முன்னால் இருந்தார். அப்பொழுது நான் அவரை சபைக்குள் அழைத்துவர முயற்சித்துக் கொண்டிருந்தேன். அன்றொரு இரவும், ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்னர் அங்கு நின்று, நான் அவரை சபைக்குள் வரும்படி சம்மதிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் அவர் சபைக்கு செல்லவில்லை என்று நான் நினைக்கிறேன். வேறெந்த தொழிலையும் செய்யவில்லையென்றே நான் நினைக்கிறேன், அதே சமயத்தில் பாப்டிஸ்டு பிரசங்கியாயிருக்கிற ஒரு பையன் அவருக்கு உண்டு. ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் அவர் வருமானத்திற்காக எந்த வேலையையும் செய்ய வில்லை, அவர் இப்பொழுது தேவனை சந்திக்கச் சென்று விட்டார். ஆகையால் வெள்ளிக் கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு சவ அடக்கத்திற்கு முன் சடலம் வைக்கப்பட்டுள்ள கூட்ஸினுடைய சவ சடலங்களிலுள்ள வீட்டில் இறுதி ஆராதனை நடைபெறும். சகோதரன் நெவில் மற்றும் சிலரும் கூட அந்த சவ அடக்க முன் இறுதி ஆராதனையில் பாடுவர். 315 ஆகையால் உங்களில் எவரேனும் அந்த ஆராதனைகளில் கலந்து கொள்ள விரும்பினால், அது நாளை இரண்டு… இல்லை நாளை ஒரு மணிக்கு நடைபெறும். அதுவே சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். சகோதரனே, அப்படித் தானே-? 2 மணிக்கு, மற்றொன்று ஒரு மணிக்கு நடைபெறும். அது சரியா-? கூட்ஸினுடைய சடல பாதுகாப்பு இல்லத்தில் 2 மணிக்கு நடைபெறும். 316 இப்பொழுது ஞாயிறு காலை…சனிக்கிழமை ஒலிபரப்பப்படும். ஞாயிறு இரவு நமக்கு ஒரு சுகமளிக்கும் ஆராதனை இருக்குமா அல்லது நான் சகோதரன் பாஸ்வர்த் அவர்களைக் காண பிளாரிடாவிற்கு ஆகாய விமானத்தின் மூலம் சென்றால், எந்த நேரத்தில் நாங்கள் திரும்பி வருவோம் என்பதை…எந்த நேரம் என்பதை அநேகமாக சகோதரன் நெவில் அவர்கள் நீங்கள் அறிந்து கொள்ளும்படிச் செய்வார். நான் எப்படி அவரிடத்திலிருந்து உடனே புறப்பட்டு வருவது என்று எனக்குத் தெரியவில்லை, அவர் அப்பேர்பட்ட ஒரு அருமையான பழைய நண்பர். கர்த்தர் இதை அனுமதிப்பாரேயானால், இதுவே இந்த பூமியின் மேல் எங்களுடைய கடைசி சந்திப்பாயிருக்கலாம். அவர்…என்னால் உடனடியாக அவரிடத்திலிருந்து புறப்பட்டு வர முடியுமா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை; நான் அவரிடத்திலிருந்து உடனே புறப்பட்டு வர விரும்பவில்லை, ஆனால் அது எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் செய்ய வேண்டிய மற்றக் காரியங்களும் உங்களுக்கு உண்டு. 317 என்னுடைய நண்பர்கள் அநேகர் இல்லாதிருக்கையில், நான் இப்பொழுது இங்கே கூற விரும்புகிற ஒரு கூற்று உண்டு. 318 நான் அங்கே சகோதரி ஸ்மித் அவர்களைக் காண மகிழ்ச்சியடைகிறேன். நீண்ட காலத்திற்குப் பின்னர் முதன்முறையாக நான் அவளைக் கண்டேன். சகோதரி ஸ்மித் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்-? ஒரு வருடம், என்னே, கடந்த முறை நான் உங்களைக் கண்டது…[சகோதரி ஸ்மித் பேசுகிறார்—ஆசி.] பெண்டன் துறைமுகத்தில் என்று நான் நினைக்கிறேன். எப்போதாவது அங்கு செல்வேன் என்றே நான் நம்புகிறேன். அது அருமையாயுள்ளது. நான் கடந்த முறை உங்களைக் கண்டது லூயிவில்லில் நடைபெற்ற ஒரு அடக்க ஆராதனையில் என்று நான் நினைக்கிறேன். சகோதரி ஸ்மித் அது எனக்கு நன்கு ஞாபமிருக்கிறது. எப்படி நாம்…நாங்கள் சபைக்குச் செல்லும்போது நான் அவளை ஏற்றிச் செல்ல ஒரு பாரவண்டியில் வழக்கமாக வருவேன். அந்த வண்டியின் பின்புறத்திலோ கரி எண்ணெய் ஒழுகிக்கொண்டிருக்க, தடைகாப்புக் கம்பிகள் சரியாக இணைக்கப்படாமல் மேலும் கீழுமாக தொங்கிக் கொண்டிருக்க, குளிரில் என்னுடைய ஒரு காலை வெளிப்புறத்தில் வைத்துக் கொள்வேன். ஓ, என்னே. சகோதரி ஸ்மித் அதற்குப்பின் அநேகக் காலங்கள் உருண்டோடிவிட்டன. ஆம், ஐயா. நல்லது, அந்த விலையேறப்பெற்ற நினைவுகளுக்காக நாம் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம், நாம் இன்னமும் அவரை நேசிக்கிறோம். 319 ஒரு காரியம், யாராவது வியப்புறலாம், அன்றொரு இரவு…நான் இங்கே வீதியிலே சகோதரன் பிளீமேன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். சில நேரங்களில் யாராவது, “ஆராதனை முடிவுற்றவுடனே, சகோதரன் பிரான்ஹாம் அவர்களை உடனே புறப்பட்டுப் போகச் செய்கிறது எது-?” என்று கேட்கின்றனர். 320 அது என்னுடைய மனைவி தனிமையாயிருப்பதனாலேயாகும். புரிகிறதா-? நான் பேசிக் கொண்டேயிருந்தால், அப்பொழுது நான் நள்ளிரவு வரை பேசிவிடுவேன். அவளோ பெரும்பாலன சமயங்களில் தனிமையாகவே அங்கே அமர்ந்து கொண்டிருக்கிறாள். அந்தக் காரணத்தினால்தான், நீங்கள் பாருங்கள், இரவு நேரத்தில் நான் அவளண்டை திரும்பிச் செல்ல துரிதமாக புறப்படுகிறேன்; ஏனென்றால் நான் பேசிக் கொண்டேயிருந்தால், நான் நீண்ட நேரம் பேசிவிடுவேன். நான் ஒருவரிடத்திலேயே அரை மணி நேரம் பேசுவேன். எனவே என்னால் சீக்கிரமாகச் சென்று, “இன்றிரவு நீ எப்படியிருக்கிறாய்-? நீ எப்படியிருக்கிறாய்-? நீ எப்படியிருக்கிறாய்-?” என்று கேட்க முடியாது. நான் அதைச் செய்கிறதில்லை. ஆகையால் நான் பேசுவதை நிறுத்திக் கொண்டு போய்விடுகிறேன்; இல்லையென்றால் யாராவது எதைக் குறித்தாவது பேசப் போக வேண்டும், அப்பொழுது நான் அங்கே ஒரு மணி நேரமாவது இருப்பேன். புரிகிறதா-? அந்தக் காரணத்தினால் தான் அவள் அந்த விதமாக காத்திருக்கிறாள். அதுதான் இதற்கான காரணமாயுள்ளது. எனவே நான் என்னுடைய நண்பர்களை சந்தித்து அவர்களுடைய கரங்களை குலுக்கி, நம்முடைய ஐக்கியத்தை வெளிப்படுத்தாமலிருந்ததற்கு காரணம் இதுதான என்று நீங்கள் எண்ணிக் கொள்ள நான் விரும்பவில்லை, ஆனால் அது அந்தவிதமான ஒரு சம்பவமாயிருந்தது. 321 ஆகையால், இப்பொழுது, சுகவீனமாய் இருப்போருக்காகவும், பாதிக்கப் பட்டவருக்காகவும் ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள். 322 திருமதி ஹார்வே அவர்கள் அந்த எல்லா தொல்லையிலும் இருக்கிறாள், அவள் இப்பொழுது குணமடைந்து கொண்டிருக்கிறாள். ஆம் ஐயா. நான் பார்க்கவில்லை…நான்…இப்பொழுது ஒரு கால், எனக்குத் தெரிந்தமட்டில் யாரோ ஒரு மருத்துவர் இங்கிருக்கலாம். நான் இந்த மேடையில் இருந்து தவறாகக் கூறினால், தேவனே என்னை மன்னியும். ஆனால் மருத்துவர்கள் அந்த ஸ்திரீக்கு என்ன செய்தனர் என்பதற்கு தேவன் அவர்களை பொறுப்புள்ளவர்களாக்குவார் என்று நான் நம்புகிறேன். நான் அறுவை சிகிச்சையில் நம்பிக்கை கொண்டுள்ளேன், நான் மருந்துகளில் நம்பிக்கை கொண்டுள்ளேன், நிச்சயமாகவே நான் அதை நம்புகிறேன். நமக்கு உதவி செய்யவே தேவன் அவைகளை இங்கே அனுப்பினார் என்று நான் நினைக்கிறேன், அதேவிதமாகவே கார்கள் முதலியவற்றிற்காக அவர் பொறித்துறை வினைஞர்களை அனுப்பினார். ஆனால் அந்த ஸ்திரீயையோ மருத்துவர் அவளை படுக்க வைத்து பரிசோதித்துவிட்டு, “அவள் முழுவதும் புற்று நோயினால் பீடிக்கப்பட்டு விட்டாள், இனி அவளுக்கு ஒன்றுமே செய்யப்பட முடியாது” என்று கூறிவிட்டார். அந்த ஸ்திரீ ஒரு சில பிள்ளைகளுக்குத் தாய். 323 நான் அவளண்டை சென்று, எப்படி என்று ஜெபத்தின் மூலமாக அவளுக்கு விளக்க முயன்றேன்…அவள் ஏறக்குறைய இருபத்தைந்து வயதுடைய ஒரு வாலிப ஸ்திரீயாயிருந்தாள். தேவன் அவளுடைய சிறு குழந்தையை எப்படி குணப்படுத்தினார், அது மூளைக் காய்ச்சலிருந்து குணமடைந்து, “அற்புதக் குழந்தை” என்று இப்பொழுது குழந்தைகள் மருத்துவமனையில் அழைக்கப்படுகிறது. அந்த சிறு குழந்தையோ அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான நிலைமையிலிருந்தது, கர்த்தர் அதை அப்பொழுதே குணமாக்கினார். மருத்துவர்களால், அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் திருமதி ஹார்வே அவர்களிடம் சென்று, நான், “இப்பொழுது திருமதி. ஹார்வே, மருத்துவர்கள் உங்களை கைவிட்டுவிட்டார்களா-?” என்று கேட்டேன். 324 “ஆம் ஐயா. அது…” என்றாள். 325 அவளுடைய கணவர், “ஆம், இனிமேல் ஒன்றுமே செய்யப்பட முடியாதாம், அவளுக்கு முழுவதுமே புற்றுநோய் பரவிவிட்டதாம்” என்றார். 326 அப்பொழுது நான், “பரவாயில்லை. இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டுமென்று நாங்கள் விரும்புவதென்னவென்றால், தேவனை விசுவாசியுங்கள், அதாவது தேவன் உங்களைக் குணப்படுத்துவார்” என்று கூறினேன். மேலும் நான், “அது எப்படி சம்பவிக்குமென்றால், புற்று நோய் உடனடியாக போகாமலிருக்கலாம்; ஆனால் நாங்கள் ஜெபித்தால், அப்பொழுது புற்று நோயின் உயிர் போய்விடும். அதே சமயத்தில் நீங்கள் சிலகாலம் சுகவீனமாயிருக்கலாம்” என்று கூறி, “அதன்பின்னர் நீங்கள் நிவாரணமடையலாம்.” என்றும் கூறினேன். மேலும் தொடர்ந்து நான், “அதன் பின்னர் ஒரு சில நாட்கள் நீங்கள் இருந்ததைவிட சுகவீனமடையலாம்” என்றேன். ஆனால் நான், “நீங்கள் உங்கள் விசுவாசத்தை புற்று நோய்க்கு எதிராக வைக்க வேண்டும்” என்றேன். நான், “புற்றுநோய் உயிர்வாழ்ந்தால், நீங்கள் மரித்துப் போவீர்கள், புற்று நோய் மரித்தால், நீங்கள் பிழைப்பீர்கள்” என்றேன். அப்பொழுது நான், “இப்பொழுது நாம் ஜெபம் செய்வோம்” என்றேன். 327 நாங்கள் ஜெபித்தோம், நான் ஒவ்வொரு ஆதாரத்தையும் கண்டிருந்தேன், தேவன் அந்த ஸ்திரீயினுடைய சரீரத்தைத் தொட்டார். உடனடியாக அவள் மேலான நிலையை அடைந்தாள், அவள் என்னுடைய தாயைக் காணச் சென்றாள், அவள் சுற்றிலுமிருந்த அயலகத்தார்களை காண விஜயம் செய்தாள், (அவள் அப்பேர்ப்பட்ட துன்பத்தில் இருந்தாள்) ஆனால் இப்பொழுது அவளுக்கு வலியே இல்லை. அதன்பின்னர் ஏறக்குறைய மூன்று நாட்கள் கழித்து அவள் மீண்டும் சுகவீனமடையத் துவங்கிவிட்டாள். 328 அதன்பின்னர் அந்தப் பட்டிணத்தார் அதைக் கண்டறிந்து, “மருத்துவர்கள் அதற்கு அறுவை சிகிச்சை செய்தால், அவர்கள் அந்த மருத்துவக் கட்டணத்தை செலுத்திவிடுவோம்” என்று கூறினர். 329 இப்பொழுது நான் தவறாகக் கூறினால், தேவனே என்னை மன்னியும், ஆனால் அவர்கள் அந்த வாலிப தாயைக் கொண்டு சென்று, அவளை “மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தினர்.” அவர்கள் அங்கிருந்து அவளை அழைத்துச் சென்று, அவளுடைய வயிற்றிலிருந்து அவளுடைய குடல்களையும் மற்ற ஒவ்வொன்றையுங் கூட பரிசோதித்தனர். சிறு நீர் கழிக்கும் இடம், செயல்பாட்டிலிருந்த குடல்களையும் எடுத்து பரிசோதித்துவிட்டு, பக்கவாட்டில் மீண்டும் நுழைத்து விட்டனர். அவள் அறுவை சிகிச்சை செய்யும் மேஜையின் மேல் ஒன்பது மணி நேரமாகவோ, அதற்கு சற்று அதிகமான நேரமாகவோ இருந்தாள். மருத்துவச்சியோ, “அது ஒரு இறைச்சிக் கூடம் போன்றே காணப்பட்டது என்றும், அங்கே அவர்களை அவளுடைய உட்புறத்திலிருந்ததை ஒவ்வொரு இடத்திலிருந்தும் வெட்டி எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக பிளாஸ்டிக் கருப்பைகளையும், பிளாஸ்டிக் குழாய்களையும் பொருத்தினர்” என்று கூறினாள். அது வெளிப்படையானது, ஆனால் அது உண்மை. பிளாஸ்டிக் குடல்கள் மற்றும் அதுபோன்றவைகளை அதில் பொருத்த அந்த ஸ்திரீ கிடத்தப்பட்டிருந்தாள், ஒரு சிறு தாய். நான் என்னுடைய வழியில் அதை சிந்தித்துப் பார்க்கும்போது, அந்த மருத்துவர்கள் கொலைக் குற்றவாளியாயிருக்கிறார்கள் என்றே கூறுகிறேன். 330 அவள் அவர்களிடத்தில் கூறினாள், அதாவது அவள், “சகோதரன் பிரான்ஹாம் எனக்காக ஜெபித்தார்” என்று கூறியிருந்தாள். மேலும், “அந்தப் புற்று நோய்…அந்தப் புற்று நோய் மரித்துப் போய்விட்டது என்றே நாங்கள் விசுவாசித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினாள். 331 அதற்கு மருத்துவரோ, “நான் உனக்கு கூற வேண்டிய ஒரு செய்தி உண்டு, ‘அது உன்னுடைய புற்று நோய் உயிரோடுதான் உள்ளது’ என்பதாகும்” என்றார். 332 அவரால் எப்படி அதைக் கூற முடிந்தது-? அதுவோ உட்புறத்தில் இருந்தது, எந்த ஊடுகதிர் நிழற்படமும் அதைக் காட்ட முடியாது. புற்று நோய் ஒரு…உங்களால் ஊடுகதிர் நிழற்படத்தின் மூலம் புற்று நோயைக் கண்டறிந்து கூற முடியாது, அது மாம்சத்தில்தானே உள்ளது, உங்களால் அதைக் காண முடியாது. அந்த ஸ்திரீயினுடைய உட்புற சரீர சதைகளை வெட்டி, அதனுடைய துண்டுகளை பரிசோதித்துப் பார்த்து மாத்திரமே கண்டறியக் கூடும். அவ்வளவு தான். இப்பொழுது அந்த சிறு தாயாருக்கு புற்று நோய் அவ்வாறு தொடர்ந்து இருந்திருந்தாலும், நானோ அந்த விதமான ஒரு பரிசோதனையை யாரோ ஒருவர் செய்வதைப் பார்க்கிலும் அவளுடைய விசுவாசத்தை தேவன் பேரில் வைத்து சோதித்துப் பார்க்கச் செய்திருப்பேன். இப்பொழுது நான்—நான் தவறான எண்ணத்தை உடையவனாயிருந்தால், அப்பொழுது தேவன் என்னை மன்னிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நீங்கள் பாருங்கள். காரணம் நான் அறுவை சிகிச்சைகளில் நம்பிக்கைக் கொள்வதில்லை என்றும், அல்லது மருத்துவர்கள் மற்றுமுள்ளக் காரியங்களில் நம்பிக்கைக் கொள்வதில்லை என்றும் நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. பரவாயில்லை. ஆனால் நீங்கள் ஒரு நபருக்குள்ளாக வெட்டி ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்னர் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும், அவர்களை அதைப் போன்று வெறுமென பரிசோதனைக்குப் பயன்படுத்தக் கூடாது என்றே நான் எண்ணுகிறேன். அது உண்மை. இப்பொழுது உண்மையாகவே அவளால் உயிர்வாழ முடியாது. அவ்வளவு தான். அவள் பிழைப்பானேயானால், அப்பொழுது அது நிச்சயமாகவே எப்போதும் சம்பவித்திருந்த மகத்தான அற்புதங்களில் ஒன்றாகவே இருக்கும். அந்த ஸ்திரி கீழ் நோக்கிப் பார்த்து, தன்னுடைய குடல்கள் ஒரு பக்கத்தில் இருந்ததையும், அவளுடைய சிறுநீரகங்கள் மறுபுறத்தில் செயல்பட வேண்டியதாய் இருந்ததையும் கண்ட போது, அவள் இந்தவிதமாகவே மயங்கிப் போய் விட்டாள், மயங்கியே விட்டாள்… ஏன்-? அது ஒரு காரியமாயிருக்கவில்லை… அந்த பரிதாபமான சிறிய ஸ்திரீ மயங்கி விட்டாள். மூன்று அல்லது நான்கு பிள்ளைகளை வளர்க்க வேண்டிய கிட்டத்தட்ட 22 அல்லது 25 வயதுடைய ஒரு தாய். என் வாழ்க்கையில் நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் விசனமானக் காரியம். நான், “என்னுடைய வழியில் அதை சிந்தித்துப் பார்க்கும்போது, மருத்துவர்கள் அதற்கு…குற்றவாளியாயிருக்கிறார்கள்” என்றே கூறினேன். அந்த பட்டிணம் அவளுடைய மருத்துவ செலவினை செலுத்தப் போவதாயிருந்தபடியால் அவர் அந்த ஸ்திரீயை ஒரு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்றிருந்தால், அப்பொழுது அது தவறாகும், அது அனுமதிக்கப்படக் கூடாது. 333 [தேவனால் அந்த ஸ்திரீக்கு சுகத்தை திரும்பளிக்க முடியுமா என்று ஒரு மனிதன் கேட்கிறார்—ஆசி.] நல்லது, சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இது கூடாதது அல்ல. அது—அதுவல்ல…அது—அது கூடும், நிகழ்க் கூடியதாகவே உள்ளது. காரணம் கலிபோர்னியாவில் ஒரு கரமே இல்லாதிருந்த ஒரு மனிதனை நான் அறிவேன், (நீங்கள் எல்லோருமே செய்தித்தாளில் வெளியான அதை வைத்திருக்கிறீர்கள்), அந்த மனிதனுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது, இந்தக் கரம் இங்கே மேலே இல்லாதிருந்தது, அது கீழே வளர்ந்து விரல்கள் அதிலிருந்து இப்பொழுது வளரும் வரை, அதாவது மேலிருந்து முழங்கை வரை, மணிக்கட்டு வரை, பின்னர் உள்ளங்கை வரை, அதனுடைய விரல்களின் பின்னால் உள்ள கை முட்டிகளின் பாகங்கள் வரை வளர்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது ஒவ்வொரு மாதமும் விசுவாச தூதன் என்ற பத்திரிக்கையில் வெளி வந்தது என்று நான் நினைக்கிறேன். அந்த மனிதன் இந்த விதமாக தன்னுடைய கரத்தைப் பெற்றுக் கொண்டபோது, அவருடைய கரம் எங்கேயிருந்து இல்லாதிருந்தது என்றும், அது எங்கிருந்து வளர்ந்து வந்தது என்றும் அந்தப் பத்திரிக்கையில் காட்டப்பட்டது. ஏறக்குறைய ஒரு வருடகாலமாக அது எப்படி ஒவ்வொரு மாதமும் வளர்ந்து வந்தது என்றும் அதில் காட்டப்பட்டிருந்தது. 334 [முன்பு பேசின மனிதனே மீண்டும் சபையிலிருந்து பேசுகிறார்—ஆசி.] நிச்சயமாக, அது உண்மை. நான் நினைக்கிறேன…அது—அது—அது ஒரு அபூர்வமான காரியம், பாருங்கள், அது ஒரு மிக அபூர்வமான காரியம். ஒரே ஒரு முறை தான் நான் அதைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது, சகோதரன் பாஸ்வர்த், அவர் ஒரு இரவு ஒரு ஸ்திரீக்காக ஜெபித்தார். நான் என்னுடைய கூட்டத்தில் ஒருவரை உடையவனாயிருந்தேன். ஆனால் பாஸ்வர்த்தினுடையதோ உடனடியாக நிகழ்ந்தேறியது; ஆனால் என்னுடையது நிறைவேற சிலகாலம் தேவைப்பட்டது. 335 அவர் ஒரு ஸ்திரீக்காக ஜெபித்தார்…இப்பொழுது, நான் அந்த ஸ்திரீயினுடைய சாட்சியை வாசித்தேன். அவளுக்கு புற்று நோயிருந்தது, அது அவளுடைய மூக்கை தின்று விட்டபடியால் அவளுக்கு மூக்கேயில்லாதிருந்தது. ஜெபித்த அடுத்த நாள் காலையில் அவளுக்கு மூக்கு உண்டாயிருந்தது. இப்பொழுது, நான் இதை அறிவேன்…அது சகோதரன் பாஸ்வர்த்தினுடையது, அது கிறிஸ்துவே சுகமளிப்பவர் என்று பெயரிடப்பட்டுள்ள அவருடைய புத்தகத்தில் உள்ளது என்று நான் நினைக்கிறேன் அல்லது சந்தோஷத்தை கொண்டு வருபவர் என்ற ஒரு புத்தகத்தில் இருக்கலாம். இப்பொழுது, அதில் அந்த ஸ்திரீயினுடைய சாட்சி, அவளுடைய பெயர் மற்றும் முகவரியோடு உள்ளது. அது சம்பவித்ததை நிரூபிக்கும்படியாக அவள் அயலகத்தார்கள், மருத்துவர்கள் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் உடையவளாயிருக்கிறாள். 336 இப்பொழுது, நான் ஒரு இரவு ஒரு அறையில் ஆர்கன்ஸாஸில் உள்ள லிட்டில் ராக்கில் அங்கே…ஜெபித்திருந்தேன்…லிட்டில் ராக்கில் அல்ல, ஆனால் ஜோனஸ்பரோவில். அதாவது நான் ஜெபிப்பேன்…நான், “கடைசி நபருக்காக நான் ஜெபிக்கும் வரை நான் தரித்திருக்கப் போகிறேன்” என்றேன். அப்பொழுது நான் எட்டு இராப்பகல் மேடையிலேயே இருந்தேன், பார்த்தீர்களா-? அப்பொழுது,…அந்த அறைக்குப் பக்கத்தில் ஒரு ஸ்திரீ வந்தாள், அவள் இந்த விதமாக தன்னுடைய கைக்குட்டையை வைத்திருந்தாள், அப்பொழுது அவள் அழுது கொண்டிருந்தாள் என்று நான் எண்ணினேன். அப்பொழுது நான் கூறினேன்…ஓ, அது காலை இரண்டு அல்லது மூன்று மணியாயிருந்தது என்று நான் யூகிக்கிறேன், நான், “சகோதரியே அழாதீர்கள், தேவன் சுகமளிப்பவராயிருக்கிறார்” என்றேன். 337 அப்பொழுது அவள், “சகோதரன் பிரான்ஹாம், நான் அழுது கொண்டு இருக்கவில்லை” என்றாள். பின்னர் அவள் கைக் குட்டையை எடுத்த போது, பாருங்கள், அவளுக்கு மூக்கே இல்லாதிருந்தது. மருத்துவர்கள் இவ்வாறு கூறியிருந்தனர்…புற்று நோயானது அவளுக்குள்ளாக இருந்த வெள்ளை எலும்பையே தின்று விட்டிருந்தது… அவர்கள் அதை காண்பித்துக் கொண்டிருந்தனர். நான் அவளுக்காக ஜெபித்து, கர்த்தர் அவளைக் குணப்படுத்தும்படி வேண்டிக்கொண்டேன். 338 அப்பொழுதிலிருந்து ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து வாரங்கள் நான் டெக்ஸார்கானாவில் இருந்தேன், அப்பொழுது அங்கே அருமையாக ஆடையணிந்திருந்த ஒரு பெருந்தன்மையானவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர், “சகோதரன் பிரான்ஹாம், நான் ஒரு காரியம் சொல்ல முடியுமா-?” என்று கேட்டார். 339 அவர் மேடையண்டை எழும்பி வந்தவுடனே, வாயிற் காப்போன்களில் ஒருவர் அவரை அமைதியாயிருக்கும்படிச் செய்ய முயன்றார். அப்பொழுது நானோ, “பரவாயில்லை, நாம் என்னவென்று பார்ப்போம்” என்றேன். 340 அப்பொழுது அவர், “உங்களால் இந்த வாலிபப் பெண்மணியை அடையாளங் கண்டு கொள்ள முடிகிறதா-?” என்று கேட்டார். 341 அதற்கு நான், “இல்லை, எனக்கு அடையாளங்கொள்ள முடியவில்லை” என்றேன். 342 அவர், “நீங்கள் இந்த புகைப்படத்தை பார்த்திருந்தால், நீங்கள் அவளை அடையாளம் கண்டு கொண்டிருப்பீர்கள்” என்றார். அவர் டெக்ஸர்கானாவில் சுத்தம் செய்வதற்கு சர்வ நாசம் செய்கிறவராய் இருந்தார், அது ஒரு புத்தம்—புதிய வளர்ந்த, மற்றவர்களுக்கு இருப்பது போன்றே வடிவம் கொண்ட மூக்குடன் இருந்த அவனுடையதாயாய் இருந்தது. 343 இப்பொழுது தேவனையே…அது காண்பிக்கப் போகிறது, அது சிருஷ்டிக்கப்பட்டதை நான் கண்டிருக்கிறேன். இப்பொழுது தேவனால் அந்த திருமதி. ஹார்வேக்காகவும் அதைச் செய்ய முடியும். அந்த பரிதாபமான ஸ்திரீ ஜீவிக்க விரும்புகிறதற்காக அவர் அதை செய்வார் என்று நான் ஜெபித்தேன். 344 சகோதரன் டோனி, நீங்கள் கூற வேண்டியது ஏதேனும் உண்டா-? [சகோதரன் டோனி ஒரு சுகமளித்தலைக் கூறுகிறார்—ஆசி.] அது உண்மை. ஆமென். ஆமென். சரி, அதுவும் கூட நல்லதாயிருக்கிறது. ஆம், அவர் அதை நிச்சயம் செய்வார், அவர் ஒரு சுகமளிப்பவராயிருக்கிறார். 345 [மற்றொரு மனிதன் கருத்துரை வழங்குகிறார்—ஆசி.] ஆம், ஆம், சகோதரனே. ஆமென். நிச்சயமாக. ஆம். நான் நிச்சயமாக…மகனே, தேவன் அதை உங்களுக்கு திரும்பளிக்கிறார் என்று நான் நம்புகிறேன், எனவே நீங்கள் அதை திரும்பக் கொண்டு சென்று அவருக்கு காண்பிக்க முடியும். அதுவே சரியானது. அது தேவனுடைய மகிமைக்கான ஒரு சாட்சியாயுள்ளது, தேவன் அதைச் செய்வார் என்று ஜெபியுங்கள். ஓ, அவர்—அவர்…அவர் சர்வ வல்லமையுள்ள தேவனானால், அவரால் எல்லாக் காரியங்களையும் செய்ய முடியும். அவரால் அதை, எல்லாக் காரியங்களையும் செய்ய முடியவில்லையென்றால், அவர் சர்வ வல்லமையுள்ள தேவன் அல்ல. 346 நாம் என்னவாக இருக்க வேண்டும், நாம் இருக்க வேண்டிய விதத்திலும் நம்மை உண்டாக்கின ஒரு காரியம் உண்டு, இல்லையென்றால் நாம் ஒரு—ஒரு—ஒரு பறவையைப் போன்ற தலையை அல்லது அதைப் போன்ற ஒரு காரியமாயிருந்திருப்போம்; ஒரு தனிச் சிறப்போடு நம் ஒவ்வொருவரையும் உருவாக்க நமக்குப் பின்னே ஒரு மதிநுட்பம் இல்லாதிருந்திருந்தால், ஒரு கருவாலி மரத்தை, ஒரு புன்னை மரத்தை, ஒரு பனைமரத்தை, அவைகள் என்ன என்று வித்தியாசத்தை வேறுபடுத்திக் காட்டி உருவாக்க ஒரு மதிநுட்பம் இல்லாதிருந்திருந்தால் என்னவாயிருக்கும்-? நம்மை…ஏதோ விலங்கின் மென்முடியோடு, ஏதோ சிறகுகளோடு, ஏதோ ஒரு சருமத்தோடு உண்டாக்கவில்லை, அதாவது உங்களை…பாருங்கள், அது—அது அதற்குப் பின்னால் உள்ள ஒரு மதிநுட்பமாய் உள்ளது, அதுவே—அதுவே அதை ஆளுகை செய்கிறது. உண்மையாகவே அவர் தம்முடைய கரங்களில் எல்லாக் காரியங்களையும் தாங்குகிறார். அவரால் எல்லாக் காரியங்களையும் செய்ய முடியும் என்பதை நான் அறிவேன். நாம் அதற்காக ஜெபிப்போம். நாம் ஜெபம் செய்வோம். 347 [மற்றொரு மனிதன் சபையிலிருந்து பேசுகிறார்—ஆசி.] சரி. நாம்… 348 [சகோதரி ஸ்னைடர், “சகோதரன் பில்லி, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்கிறார்—ஆசி.] சரி, அம்மா, அதனால் பரவாயில்லை, சரி கூறுங்கள். [சகோதரி ஸ்னைடர், அவர்கள் சகோதரன் பிரான்ஹாம் அன்றொரு ஞாயிறு அவளுக்காக ஜெபித்தபோது “சுகமடைந்ததைக்” கூறுகிறாள்.] ஆமென். உங்களுக்குத் தெரியும், நானும் அதை எண்ணிப் பார்க்க முயற்சித்திருக்கிறேன், சகோதரி ஸ்னைடர், ஒரு சமயம் நான் அந்த அபிஷேகத்தில் இங்கே நின்று கொண்டிருந்தபோது, நான் நினைத்தேன்…நான் சகோதர்ன் காக்ஸ் அவர்களிடம் கூறினேன், நான், “இந்த கூடாரத்தில் இனிமேல் நான் ஒருபோதும் அந்த பகுத்தறிதல்களைக் கொண்ட கூட்டங்களை நடத்த முயற்சிக்கக் கூடப் போவதில்லை” என்றேன். ஓ, சகோதரியே, பிசாசு என்னைச் சுற்றி எப்படி கடிக்கிறான் எனபதை நீங்கள் அறியீர்கள். அவன் எப்படி—எப்படியய் அதைச் செய்கிறான். இந்த பகுத்தறிதலைக் குறித்து எனக்குத் தொல்லை கொடுக்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள். 349 இங்கே, திருமதி.உட் அவர்களுடைய சகோதரிக்கு இங்கே சம்பவித்ததைக் கண்டறிகிறோம்…அவர்களுடைய ஜனங்கள் எவரையுமே நான் ஒரு போதும் கண்டதேயில்லை. அந்த நேரத்தில் அவர்களுடைய ஒரு கூட்டமே சுகமடைந்து, ஒவ்வொருவரும்…ஏன், சுகமடைந்திருந்த அந்த ஜனங்களின் சதவிகிதமோ எண்ணிக்கையில் பெரியது என்பதை நீங்களே அறிவீர்கள். அதற்குப் பிறகு…இப்பொழுது விநோதமான காரியம்; அவளுடைய சகோதரியோடு கிட்டத்தட்ட அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் அவளோடு ஒரு இரவு இரவு ஆகாரத்தை புசித்திருந்தேன்…ஓ, அது கெண்டக்கியில் உள்ள மலைகளில் கீழே உள்ள வழியாகும், அவளுக்கு திருமதி.உட் அவர்களைப் போன்ற குரல் இருந்ததை நான்—நான் அறிந்திருந்தேன், அந்த அறையில் அதிக வெளிச்சமில்லாமலிருந்தது, நான் அவளிடத்தில் எந்த கவனத்தையும் செலுத்தாமல், அவளுடைய கணவனிடத்தில் அதிகமாக பேசிக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவளோ இரவு உணவினை ஆயத்தம் செய்திருந்தான். எனவே நாங்கள் சென்று அமர்ந்து புசித்துவிட்டு, மீண்டும் திரும்பி உள்ளே வந்து அவளுடைய கணவனிடத்திலேயே நான் பேசினேன், அவளோ எழுந்து வெளியே போய்விட்டான். என்னுடைய பயபக்திக்குரிய நியாயாதிபதியாயிருக்கிற தேவன் (இந்த பிரசங்க பீடத்தின் அருகில் நிற்கிற) நான் அந்த ஸ்திரீயை ஒரு போதும் அடையாளங்கண்டு கொள்ளவில்லை என்பதை அறிந்திருக்கிறார். 350 அப்பொழுது சுகமளிக்கும் ஆராதனை முடிவுற்றப் பிறகு, நான் மனந்திரும்பும்படிக்கு பாவிகளுக்கான பீட அழைப்பைக் கொடுத்தேன். அவளோ அதற்கு எதிராக மிகவும் கர்வமுள்ளவளாயிருந்து வந்தாள்; அப்பொழுது அவள் மனந்திரும்பி, அவளுடைய ஜீவயத்தை கிறிஸ்துவுக்குக் கொடுத்து, கிறிஸ்துவுக்கு தன்னுடைய ஜீவனை ஒப்புக் கொடுக்க மனதுள்ளவளாய் தன்னுடைய கரத்தை உயர்த்தி, அழுதுகொண்டிருந்தாள். என்னுடைய பீட அழைப்பு முதலியனவற்றை விடுத்து, எல்லா அபிஷேகமும் போய்விட்டப் பிறகு, அப்பொழுது நான் திரும்ப நேர்ந்தபோது, இங்கே ஒரு தரிசனம் உண்டானது, அப்பொழுது நான் அவளுடைய சகோதரரைக் கண்டேன்; ஒரு சகோதரியும் இருந்தாள், இது அவளுடைய சகோதரி, அவர்கள் ஒன்றாயிருந்தனர். 351 அது சார்லியினுடைய மனைவி என்று நான் நினைத்தேன், ஏனென்றால் அன்றொரு நாள் சார்லியினுடைய வீட்டில் மேஜையண்டை அமர்ந்திருந்ததை நான் அறிந்திருந்தேன்,…அவருடைய மனைவி, சிறு உருவம் படைத்தவள், அப்பொழுது கர்த்தர் அவளுக்கிருந்த ஒரு தொல்லையை எனக்குக் காண்பித்தார். அந்த மணி வேளையிலேயே கர்த்தர் அவளுடைய சரீரத்தைத் தொட்டார், அப்பொழுது அவளுடைய மேஜையண்டை அங்கே அமர்ந்திருந்தாள். டோனி நாம் எங்கே இருந்தோம், அங்கே அணில் வேட்டைக்குச் சென்றிருந்தோம். கர்த்தர் அவளுடைய சரீரத்தைத் தொட்டு, அவள் முழுவதுமே…அணிந்து கொள்ள வேண்டியிருந்த இந்தக் காரியத்தை அவளுடைய எஞ்சியுள்ள ஜீவியத்திற்காக அவளிடத்திலிருந்து எடுத்துப் போட்டுவிட்டார்; அங்கே அப்படியே அமர்ந்திருந்தாள். அந்த ஸ்திரீ எப்பொழுதுமே மேஜையின் மறுமுனையில் ஆகாரம் புசிக்கிறவள், ஆனால் அவள் சுற்றி வந்து, தன்னுடைய நாற்காலியை உள்ளே நகர்த்தி, எனக்குப் பக்கத்தில் அமர்ந்து புசித்தாள். அவள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதை அவள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அவளுடைய கணவர் இந்தவிதமாக அமர்ந்திருந்தார், சகோதரன் பாங்க்ஸ் அங்கே அமர்ந்து எங்களிடத்தில் பேசிக் கொண்டிருந்தார். அவள் சுற்றி வந்து, தன்னுடைய நாற்காலியை எடுத்துக் கொண்டு வந்து, என்னருகில் அதைப் போட்டு அமர்ந்தாள். அது ஒரு நோக்கத்திற்காகவாயிருந்தது, கர்த்தர் அங்கே ஒரு தரிசனத்தைக் காண்பித்தார். நான் அவளுடைய கணவரை வெளியே அழைத்தேன், ஏனென்றால் அது ஒரு ஸ்திரீகளுக்கான கோளாறாயிருந்தது, என்ன சம்பவித்தது என்பதைக் குறித்து நான் அவரிடம் கூறத் துவங்கினேன். அவர், “சகோதரன் பிரான்ஹாம், அது சரியாக அந்த விதமாகவே, சரியாக அந்த விதமாகவே சம்பவித்தது” என்று கூறினார். கர்த்தர் அவளை குணப்படுத்திவிட்டார் என்று அவர் அவளிடத்தில் கூறினார். சரி. 352 அதன் பின்னர் அன்றொரு இரவு ஆராதனை முடிவுற்றப் பிறகு, இந்த மற்ற சகோதரியை, இந்த வாலிப சார்லஸ் அவர்களும் இந்த ஸ்திரீயும் ஒன்றாயிருப்பதை நான் கண்டேன். அப்பொழுது நான், “அது அது அவருடைய மனைவியாயிருக்க வேண்டும்; ஆனால் அவளுடைய மனைவியே ஒரு இளம்பொன் நிறங்கொண்ட தலையினையுடைய ஒரு ஸ்திரீயாயிருக்கிறாளே” என்று எண்ணினேன். அப்பொழுது அங்கே இருந்த ஒரு மூலையில் தரிசனம் தோன்றினதை நான் கவனிக்க நேர்ந்தது. அப்பொழுது அவள் அங்கே அமர்ந்து கொண்டு தன்னுடைய கண்களை துடைத்துக் கொண்டிருந்தாள், கர்த்தர் ஒரு தரிசனத்தைக் காண்பித்து இருந்தார்,… பீட அழைப்பிற்கு பிறகு அவள்…ஜெபக் கூட்டம் முடிவுற்றப் பிறகு, வியாதியஸ்தரின் சுகமளித்தலுக்குப் பின்னர், பீட அழைப்பு விடப்பட்டிருந்தது, அப்பொழுது அவள் மனந்திரும்பி, தன்னுடைய ஜீவனை தேவனண்டை அளிக்கும் வரை அவர் காத்திருந்தார். அதன்பின்னர் அவள் திரும்பி செல்ல, அவளைக் குணப்படுத்தினார். அவள்…அவளுடைய தொல்லைகளோடு பல வருடங்களாக அவளுடைய சரீர பாகங்கள் வீங்கியிருந்தன. அவளுடைய சரீரத்திலிருந்து (விஷமானது) அவளுடைய சுருங்கியிருந்த பாதம் வரைக்கும் சென்று பரவியிருந்தது. அவள் இத்தனை வருடங்களாக உணர்ந்ததைவிட இப்பொழுது மேலாக உணருகிறாள், பாருங்கள், கர்த்தர் எப்படியாய் தம்முடைய ஆச்சரியமான கிருபையினால் அதைச் செய்கிறார். அதுவே அதைக் குறித்து நிகழ்ந்த சம்பவம் என்று நான் நினைக்கிறேன்; இல்லையா, சகோதரி உட்-? எப்படியாய் அவர் செய்கிறார். பிறகு…என்ன கூறுகிறீர்கள்-? [சகோதரி உட், “அவள் கடந்த வாரம் ஏழு பவுண்டுகள் எடை குறைந்து விட்டாள்” என்கிறாள்—ஆசி.] ஒரு வாரத்தில் ஏழு பவுண்டுகள் குறைந்துவிட்டாள். ஓ அவர் தேவனாயிற்றே! அவர் தேவனல்லவா-? 353 இப்பொழுது, நான் சகோதரன் நெவிலிடம் கூறின காரணத்தை நான் உங்களுக்குச் சொல்லுவேன்…இன்றிரவு அவர் ஒரு செய்தியை உடையவராயிருக்கலாம் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனாள் அவரோ, “இல்லை” என்று கூறிவிட்டார், அவர் வைத்திருக்கவில்லை. இங்கே பதிலளிக்காமல் விடப்பட்டுள்ள ஒரு சில கேள்விகளை நான் வைத்திருக்கிறேன், நான் இங்கே இந்த கேள்விகளுக்கு நேர்மையுணர்வோடு பதிலளிக்க கடமைபட்டிருப்பதை உணர்ந்தேன். அதன் பின்னர் இரண்டு அல்லது இன்னும் மூன்றை நான் வைத்துள்ளேன், அநேகமாக இன்றிரவு நான் பதிலளிக்கமாட்டேன். 354 ஒரு பிரசங்கியாரிடத்திலிருந்து சில என் கரத்தில் கொடுக்கப்பட்டன என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்க வேண்டும். சகோதரன் நெவில்…இல்லை பீலர் அவைகளை என்னிடத்தில் கொண்டு வந்தார். [சகோ.பிரான்ஹாம் பின்வரும் எட்டு கேள்விகளுக்கும் பாகம் III-ல் பாரா 668-ல் துவங்கி, கேள்வி எண்கள் 67-லிருந்து 74—வரை பதிலளிக்கிறார்—ஆசி.] வெளி-விசேஷம் 21:19 மற்றும் 20-ல் உள்ள கற்கள் எதைச் சுட்டிக் காட்டுகின்றன-? வெளி-விசேஷம் 5-ல் உள்ள நான்கு ஜீவன்களை விளக்கிக் கூறவும்… அவர் 6-ம் அதிகாரத்தையே பொருட்படுத்திக் கூறுகிறார்; அது வெளிப்படுத்தல் 5-அல்லவா, அது 6-ல் உள்ளது என்றே நான் நினைக்கிறேன். இருபத்தி நான்கு மூப்பர்கள் யார்-? ஆதியாகமம் 38-ம் அதிகாரத்தில் உள்ள சிவப்பு நூல் என்ன பொருட்படுத்தினது-? வெளி-விசேஷம் 11-ம் அதிகாரத்தில் உள்ள 2 சாட்சிகளின் மரணத்தைக் குறித்து அனுப்பப்பட வேண்டிய வெகுமதிகள் எங்கே உள்ளன-? ஆயிரவருட அரசாட்சிப் பிறகு பரிசுத்தவான்கள் எங்கே இருப்பார்கள்-? அவர்கள் எந்த விதமான ஒரு சரீரத்தை உடையவர்களாய் இருப்பார்கள்-? நாம் எப்படி தூதர்களை நியாயந்தீர்ப்போம்-? கொரிந்தியர் முதலாம் நிருபத்தில் உள்ளபடி தூதர்களினிமித்தமாக ஏன் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும்-? 355 இந்த நல்ல கேள்விகளைக் குறித்துப் பேசுவோம், அதில் சில நல்ல கேள்விகள் உள்ளன. இன்றிரவு நான் அவைகளுக்கு அநேகமாக பதிலளிக்கமாட்டேன், ஆனால் கர்த்தருக்குச் சித்தமானால், அதற்காக நாம் அடுத்த முறை வரும்போது நான் அவைகளுக்கு பதிலளிக்க முயற்சிப்பேன். 356 நான் இன்றிரவு இங்கே சில மிக நல்ல கேள்விகளை வைத்துள்ளேன்; ஆகையால் நாம் இப்பொழுது ஜெபித்து, கர்த்தர் நமக்கு உதவி செய்யும்படி வேண்டிக் கொண்டு, அடுத்த ஓ, முப்பதைந்து, நாற்பது நிமிடங்களில் அவைகளுக்குள்ளாக நாம் நேராகச் செல்வோம். 357 இப்பொழுது, ஸ்தோத்தரிக்கப்பட்ட பரலோகப் பிதாவே, நீர் எங்களுக்காக செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி உள்ளவர்களாயிருக்கிறோம். ஓ, அது உம்முடைய கிருபையானது எப்படி எங்களை வந்தடைகிறது என்பது மிகுந்த ஆச்சரியமாய் உள்ளது. நான் இப்பொழுது அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், அன்றிரவு என்னுடைய துணைவி, ஓ, மிகவும் சுகவீனமாயிருந்தபோது, நீர் காட்சியில் வந்தீர். அவளுடைய காய்ச்சலானது அந்த மணி நேரத்திலேயே நீங்கிப் போயிற்று, இப்பொழுது முற்றிலும் சுகமடைந்துவிட்டாள். நான் அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்…இன்றிரவு ஒவ்வொருவரும் கேட்டுள்ள ஒவ்வொரு வேண்டுகோளோடும் நீர் இருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். அது எங்களுடைய சொந்த வீட்டிற்கு வரும் வரையில் நாங்கள் அறிந்த சிறு காரியத்தையே செய்கிறோம், அது எதைப் பொருட்படுத்துகிறதென்றால் ஒரு சிறு ஜெபத்தையேயாகும். ஓ, தேவனே, என்ன…எப்படி—எப்படியாய் நீர் மெய்யானவராயிருக்கிறீர். அந்த நேரத்தில் ஒரு மருத்துவர், “எனக்குத் தெரியாது, அதைப் போன்று செயல்படுகிற எந்த காரியத்தையும் நான் ஒரு போதும் கண்டதேயில்லை” என்று கூறி நடந்து செல்லும்போது, அதன்பின் கர்த்தராகிய இயேசுவே நீர் காட்சியில் அசைவாடுகிறீர். 358 ஓ தேவனே, நீர் எங்களுக்கு மிகவும் உண்மையானவராயிருக்கிறீர், நாங்கள் அதற்காக மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். நீர் எங்களுடைய எல்லா சோம்பலான வழிகளையும், எங்களுடைய மதிகெட்ட வழிகளையும் எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஓ, கர்த்தாவே, எங்களை நினைவு கூர்ந்தருளும், அதாவது நாங்கள் ஒரு அந்தகார உலகில், ஒரு அந்த கார உலகத்தின் பாவம் மற்றும் பெருங்குழப்பத்திலும் உள்ள மானிடர்களாய் இருக்கிறோம். நாங்கள் ஒரு திரையினூடாகவே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அது இருந்தவிதமாகவே எங்களுடைய முகத்தின் மேலிருக்கிறபடியால், நாங்கள் கண்டு, அறிந்துள்ளதை மாத்திரமே இங்கே மனித சக்திக்குட்பட்டு செய்கிறோம். ஆனால் என்றோ ஒரு நாள் அந்தத் திரை எடுக்கப்படும்போது, நாங்கள் அறியப்பட்டிருக்கிற வண்ணமாய் முகமுகமாய் உம்மை கண்டு அறிந்துகொள்வோம். அந்த நாளுக்காகவே நாங்கள் வாஞ்சிக்கிறோம். 359 இப்பொழுதும் பிதாவே, ஜனங்களின் வேண்டுகோளின்படி, நாங்கள் அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை அளிக்க முயற்சிக்கையில் நீர் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். எங்களிடத்திலிருந்து எல்லா சுகவீனத்தையும் எடுத்துப் போடும். கர்த்தாவே, நீர் எங்களுக்குத் தேவை. நீர் இதை அருள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். உம்முடைய இரக்கங்கள் எங்களுக்கு அருளப்படுவதாக, ஏனென்றால் நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 360 இப்பொழுது கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் நான் தேசத்தில் மிகச் சிறந்தவன் அல்ல என்பதை நீங்களே அறிவீர்கள். ஆனால் என்னுடைய அறிவுக்கெட்டினவரை மிகச் சிறந்த முறையில் பதிலளிப்பேன். 361 அன்றொரு இரவு நான் துவங்கின ஒன்று இங்கே இருந்தது, நான் அதை நிறுத்த வேண்டியதாயிருந்தது: கேள்வி.60. “நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞான ஸ்நானம் பண்ணப்பட்டோம்” (இந்த கேள்வியில் தான் நான் இருந்தேன் என்பது உங்கள் எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். இப்பொழுது அது உண்மையாகவே 1 கொரிந்தியர் 12-ல் கண்டுபிடிக்கப்பட்டது)… அந்த நேரத்தில் நாம்… புதிய பிறப்பை ஏற்றுக் கொள்கிறோம், இதுவே சம்பவிக்கிறது இது…இது பரிசுத்த ஆவியின் அபிஷேகமா அல்லது பின்னர் பெற வேண்டிய ஒரு ஞானஸ்நானமா, அல்லது இது ஒரு நிரப்பப்படுதலா-? 362 இப்பொழுது இது வேறொன்றிற்கும் இடமில்லாத ஒரு கேள்வியாய் உள்ளது, எனவே நாம் அந்த ஒன்றின் பேரில் நம்முடைய நேரத்தை இன்றிரவும், நாளை இரவும் கூட செலவழிக்கக் கூடும். இது நேரத்தை எடுத்துவிடும்…இது—இதை எடுத்து முழு வேதாகமத்துடனும் ஒன்றாக இணைப்போம். ஒவ்வொரு வேதவாக்கியமும் வேதத்தில் உள்ள மற்ற ஒவ்வொரு வேதவாக்கியத்தோடும் சரியாக ஒன்றாக இணைக்கப்பட வேண்டும். 363 ஆனால் அதை சுருக்கமாக. கூற முயற்சிக்கிறேன், அதை எப்படி கூற வேண்டும் என்று நான் அறிந்த முறையில் தெளிவாகக் கூறுகிறேன்; நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது, அப்பொழுது நீங்கள் புதிய பிறப்பை உடையவராய் இருக்கிறீர்கள். நீங்கள் கர்த்தரை விசுவாசிக்கும்போது, நீங்கள் ஒரு புதிய சிந்தையை, ஒரு புதிய ஜீவனைப் பெற்றுக் கொள்கிறீர்கள், ஆனால் அது பரிசுத்த ஆவியின் அபிஷேகமல்ல. புரிகிறதா-? நீங்கள் விசுவாசிக்கும்போது, நீங்கள் புதிய பிறப்பை பெற்றுக் கொள்கிறீர்கள், நீங்கள் நித்திய ஜீவனை பெற்றிருக்கிறீர்கள். அது தேவன் உங்களுக்கு அளிக்கின்ற வரத்தை ஏற்றுக் கொள்வதனால் இராஜாதிபத்திய கிருபையினூடாக உங்களுக்கு அளிக்கப்படுகிற ஒரு தேவனுடைய வரமாய் உள்ளது. பாருங்கள். “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” நித்திய ஜீவனை உடையவராயிருத்தல்; அது புதிய பிறப்பாய் உள்ளது, நீங்கள் மனமாற்றமடைந்துள்ளீர்கள், அதன் பொருள் என்னவெனில் நீங்கள் “மேலான நிலையில் மாற்றப்பட்டிருக்கிறீர்கள்” என்பதாகும். 364 ஆனால் பரிசுத்தாவியின் அபிஷேகம் உங்களை கிறிஸ்துவின் சரீரத்திற்கு உள்ளாக வைத்து, ஊழியத்திற்கான வரங்களுக்கு கீழ்படுத்துகிறது. அது உங்களை ஒரு போதும் ஒரு கிறிஸ்தவன் ஆக்கவில்லை என்றாலும், அது சரீர வரங்களில் உங்களை பொருத்துகிறது. புரிகிறதா-? “இப்பொழுது ஒரே ஆவியினால்” (1 கொரி-12) “நாம் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். இப்பொழுது,” பவுல், “வித்தியாசமான வரங்கள் உண்டு, இந்த சரீரத்தில் ஒன்பது வரங்கள் உள்ளன” என்று கூறுகிறான். இந்த சரீரத்தில்…நீங்கள் இந்த வரங்களில் ஒன்றை சுதந்தரித்துக் கொள்ள இந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்க வேண்டும். அவைகள் சரீரத்தினால் உண்டாகின்றன. 365 ஆனால் இப்பொழுது நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வதைப் பொறுத்தமட்டில், ஒரு கிறிஸ்தவராயிருக்க வேண்டும், நீங்கள் விசுவாசிக்கிற அந்த நொடிப் பொழுதிலிருந்தே நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கிறீர்கள். இப்பொழுது, அது பாவனை விசுவாசமல்ல, அது உண்மையாகவே கர்த்தராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து, அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வதாகும்; நீங்கள் சரியாக அங்கே மீண்டும் பிறக்கும் போது, நித்திய ஜீவனை பெற்றுக் கொள்கிறீர்கள். அப்பொழுது தேவன் உங்களுக்குள்ளாக வருகிறார். 366 இப்பொழுது கவனியுங்கள், நித்திய ஜீவன்; இயேசு, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்றார். அப்பொழுதே நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள். அதன் பின்னர் அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தில், அந்த ஜனங்களில் சிலரை பவுல் சந்தித்திருந்தான். அவர்கள் அப்பொல்லோ என்னும் பேர் கொண்ட ஒரு மனமாற்றமடைந்திருந்த நியாய சாஸ்திரியை தங்களுக்கு ஒரு பிரசங்கியாக உடையவர்களாய் இருந்தனர். அப்பொல்லோ வேதாகமங்களில் வல்லவனுமாயிருந்து, அவன் இயேசுவே கிறிஸ்து என்று வேத வாக்கியங்களைக் கொண்டு நிரூபித்துக் கொண்டிருந்தான். புரிகிறதா-? 367 இப்பொழுது கவனியுங்கள். அப்பொல்லோ வார்த்தையினூடாக, வார்த்தையினாலே நிரூபித்துக் கொண்டிருந்தான். “விசுவாசம் கேட்பதனால், வார்த்தையைக் கேட்பதனால் வரும். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” உங்களுக்கு இது புரிகிறதா-? அப்பொல்லோ வார்த்தையினால் இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்துக் கொண்டிருந்தான். அவர்கள் மிகுந்த சந்தோஷத்தை உடையவர்களாய், வார்த்தையை ஏற்றுக் கொண்டிருந்தனர், அதே சமயத்தில் யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை மாத்திரமே அறிந்திருந்தனர். 368 பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்த போது, அவன் இந்த சீஷர்களைக் கண்டான், அப்பொழுது அவன், “நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா-?” என்று கேட்டான். புரிகிறதா-? 369 இப்பொழுது, நீங்கள் விசுவாசிக்கும்போது, இயேசு, “நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறீர்கள்” என்றார். அதுதான் புதிய பிறப்பு. அதுவே உங்களுடைய மனமாற்றமாய், மாற்றமாய் உள்ளது. ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, உங்கள் மூலமாக கிரியை செய்கிற இந்த ஒன்பது ஆவிக்குரிய பிரகாரமான வரங்களுக்கும் கீழ்படியச் செய்கிற தேவனுடைய வல்லமையாய் இருக்கிறது; நீங்கள் இந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படும்போது, பிரசங்கித்தல், சுவிசேஷகர்கள், அப்போஸ்தலர்கள், போதகர்கள், தீர்க்கதரிசிகள் போன்றவை…சரீரத்தின் எல்லா வரங்களும் இதற்குள் உண்டாகின்றன். அது…உங்களை ஒருபோதும் அதற்கு மேலாக ஒரு கிறிஸ்தவராக ஆக்குகிறதில்லை, அது ஜீவனுள்ள தேவனுடைய சபையில் ஒரு பணிவிடை ஆவியாயிருக்கும்படியான ஒரு ஸ்தானத்தில் உங்களை பொருத்துகிறது. இப்பொழுது உங்களுக்கு இது புரிகிறதா-? புரிகிறதா-? 370 இப்பொழுது கேள்வியானது…நாம் ஒவ்வொன்றாக பதிலுரைப்போம், மூன்று கேள்விகள் உள்ளன. “நாம் எல்லாரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞான ஸ்நானம் பண்ணப்பட்டோம்.” அது சரியே, 1 கொரிந்தியர் 12-ம் அதிகாரம் அதற்கு பதிலை அளிக்கும். சரி. இது சம்பவிக்கும் அந்த நேரத்திலா நாம் புதிய பிறப்பை பெற்றுக் கொள்கிறோம்-? அது எப்பொழுது-? 371 அதைத்தான் அவர்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள், ஆம்…“ஒரே ஆவியினால்…” இல்லை. இல்லை. “நாம் எல்லோரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்” பாருங்கள், அது புதிய பிறப்பு துவங்கும்போதல்ல, நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும்போது புதிய பிறப்பு துவங்குகிறது. 372 இப்பொழுது பாருங்கள், அங்கு ஒரு…ஒரு காரியமும் இல்லை.…இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் விசுவாசிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்-? நீங்கள் அதைப் பார்க்கிலும் வேறென்ன செய்ய முடியும்-? நீங்கள் அதை விசுவாசிப்பதைக் காட்டிலும் அதைக் குறித்து வேறென்ன செய்ய முடியும்-? அதைத் தவிர நீங்கள் செய்யக் கூடிய ஒரு காரியத்தைக் கூறுங்கள். அதை விசுவாசிப்பதற்கு புறம்பாக நீங்கள் செய்யக் கூடியது ஒரு காரியமும் இல்லை. இப்பொழுது, உங்களுடைய விசுவாசத்திற்கு புறம்பாக எந்த காரியமாவது உண்டானால், அது உங்களுடைய சொந்த செய்கையாயில்லையென்றால், அது ஒரு தேவனுடைய செயலாய் உள்ளது. ஆகையால்… 373 இப்பொழுது நீங்கள்…அதை நாம் கூறினால்…ஏராளமான நேரங்களில், பரிசுத்த ஆவி என்பது, “அந்நிய பாஷையில் பேசுவதே அதற்கான ஆரம்ப ஆதாரம்” என்று அநேக சமயங்களில் ஜனங்கள் ஏற்றுக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் ஜனங்களை குலுக்கி, அல்லது அவர்களை அடித்து, அவர்களைத் தட்டி, “அதைக் கூறு. அதைக் கூறு. அதைக் கூறு” என்கிறார்கள். உங்களுக்குத் தெரியும், ஒரே வார்த்தையை திருப்பித் திருப்பிக் கூறி, “அதைக் கூறு. அதைக் கூறு. அதைக் கூறு” என்கின்றனர். பாருங்கள், அது நீங்களாகவே செய்து கொண்டிருக்கிற ஏதோ ஒரு காரியமாய் உள்ளது. அதுவல்ல… அதுவல்ல…அது—அது ஒன்றுமல்ல. நீங்கள் அந்நிய பாஷையின் குழப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஏராளமான காரியங்களை, உணர்ச்சி வசப்படுதல்களைப் பெற்றுக் கொள்ளலாம், ஆனால் உங்களுடைய சொந்த தனிப்பட்ட விசுவாசத்திற்கு புறம்பே இருந்து எந்த காரியமாவது உண்டானால், அது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு தேவனுடைய தெய்வீக வரமாயிருக்க வேண்டும். புரிகிறதா-? 374 “நாம் எல்லோரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்.” அது சரியே, பாருங்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது புதியப் பிறப்பிலிருந்து ஒரு வித்தியாசமான செய்கையாயிருக்கிறது. ஒன்று ஒரு பிறப்பாயுள்ளது, ஒன்று ஒரு அபிஷேகமாயுள்ளது. ஒன்று உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொண்டு வருகிறது, மற்றொன்று உங்களுக்கு வல்லமையை அளிக்கிறது. அது செயல்படும்படியாக நித்திய ஜீவனுக்குள்ளாக வல்லமையை அளிக்கிறது. பாருங்கள், இப்பொழுது நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா-? சரி, சரி. 375 இப்பொழுது இங்கே மற்றொன்று உள்ளது, இரண்டாவதிற்கு வருவோம், இந்த இரவு நான் அறிந்த மிகச் சிறந்த பதில்களைக் கூறியிருந்தேன். கேள்வி.61. இயேசுவினுடைய சரீரம் கல்லறையில் இருந்த போது, அவருடைய ஆவி மூன்று நாட்கள் எங்கேயிருந்தது-? அவருடைய ஆவி எங்கேயிருந்தது-? 376 இப்பொழுது, அவருடைய ஆவி, நீங்கள் வேதவாக்கியங்களை பின் தொடர்ந்து பார்பீர்களேயானால்…நல்லது, நாம் அநேக இடங்களைக் கொண்டு வந்து விளக்க முடியும். ஆனால், நான் யாராவது ஒரு வேதத்தை வைத்துள்ளார்களா என்று எதிர்பார்க்கிறேன். சகோதரன் ஸ்டிரிக்கர், நீங்கள் ஒரு வேதாகமத்தை வைத்துள்ளீர்களா-? சரி. சகோதரன் நெவில், நீங்கள் ஒன்று வைத்துள்ளீர்களா-? சங்கீதம் 16:10 ஐ. எனக்காக எடுங்கள். வேறு யாராவது-? சகோதரி உட், நீங்கள் அங்கு ஒரு வேதாகமத்தை வைத்துள்ளீர்களா-? நல்லது, சகோதரன் ஸ்டிரிக்கர் (சரி, யாராவது ஒருவர்), நீங்கள் எனக்கு அப்போஸ்தலர் 2:27, அப்போஸ்தலர் 2:27-ஐ எடுங்கள். 377 இப்பொழுது, முதலாவது, இயேசு மரித்த போது…நீங்கள் மரிக்கும்போது, உங்களுடைய சரீரம் மரிக்கிறது. மரணம் என்ற வார்த்தை “வேறுபிரிதல்” என்று பொருள்படுகிறது, உங்களுடைய அன்பார்ந்தவர்களிடமிருந்து வேறுபிரிக்கப்படுதல் என்பதாகும். ஆனால் இங்கு அவர் இதை பரிசுத்த யோவான், 11-வது அதிகாரத்தில், “கேட்டு…” இல்லை…நான் உங்களுடைய மன்னிப்பை வேண்டுகிறேன்; அதை பரிசுத்த யோவான் 5:24-ல், “என் வசனத்தைக் கேட்கிறவனுக்கு நித்திய ஜிவன் உண்டு” என்று கூறினார். 378 இயேசு, அவரை சந்திக்க வந்த மார்த்தாளிடம் கூறினார்…அவள், “நீர் இங்கேயிருந்தீரானால், என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்கு தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்” என்றாள். 379 அவர், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்றார். பார்த்தீர்களா-? “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் என்றார்.” 380 இப்பொழுது—இப்பொழுது, நம்முடைய மரிக்காத பாகம் ஒன்று உண்டு. நான் அந்த வேதவாக்கியங்களின் வரிசையினுடாக வந்துள்ளபடியால், ஒரு துவக்கத்தையுடைய ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு முடிவு உண்டு. ஒரு துவக்கமேயில்லாத காரியங்களுக்கு முடிவேயில்லை. ஆகையால் நாம் கிறிஸ்துவை, தேவனை ஏற்றுக் கொள்ளும் போது, நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய் இருக்கிறோம், தேவனுடைய ஜீவன் முடிவு அற்றதாயிருப்பது போல, நம்முடைய ஜீவனும் முடிவற்றதாயிருக்கிறது; நாம் நித்தியத்தைப் பெற்று உள்ளோம். 381 இப்பொழுது, சதாகாலம் என்ற வார்த்தையை, நாம் அதனூடாகச் சென்றுப் பார்த்துள்ளோம். சதாக்காலம் என்ற வார்த்தை “ஒரு குறிப்பிட்ட கால நேரம்” என்பதாய், அதாவது என்றென்றும் (இணையிடைச் சொல்) என்றென்றும் என்பதாய் உள்ளது. அதற்கு—அதற்கு ஒரு முடிவு உண்டு என்பதை நாம் இங்கே கண்டறிகிறோம், எல்லா பாடுகளையும், எல்லா சுகவீனங்களையும், எல்லா துயரமும், எல்லா தண்டனைகளையும் போலவே நரகத்திற்குத் தானே ஒரு முடிவு உண்டு. 382 ஆனால் நித்திய ஜீவனுக்கு முடிவேயில்லை. ஏனென்றால் அதற்கு துவக்கமேயில்லாதிருந்தது. அது ஒரு போதும் மரிக்க முடியாது, ஏனென்றால் அது ஒரு போதும் பிறக்கவேயில்லை. அது துவக்க நாட்களை உடையதாயிருக்கவில்லை, எனவே அதற்கு முடிவின் நேரமும் இல்லை. இப்பொழுது, நாம் நித்தியமாய் ஜீவிக்கக் கூடியதற்கான ஒரே வழி நித்தியமாயிருக்கிற ஏதோ ஒரு காரியத்தை ஏற்றுக் கொள்வதன் மூலமேயாகும். எந்த ஒரு காரியமும் இல்லாதிருப்பதற்கு முன்னமே தேவன் இருந்தார், அவர் தேவனாயிருந்தார். தேவன் ஒரு போதும் ஒரு துவக்கத்தையோ அல்லது முடிவையோ உடையவராயிருந்ததில்லை. 383 தேவன் இந்த மகத்தான் ஆவியாயிருந்தார். வானவில்லின் ஏழு நிறங்களைப் போல,…நாம் அவரை வருணித்தோம்…அந்த வானவில் பூமியைத் தொடவில்லையென்றாலும், அது புவி முழுவதையுமே உண்மையாகவே மூடும். அது பூமியின் வளைவின் வட்டத்தில் உள்ள தண்ணீராய் உள்ளது, அதுவே அதை உண்டு பண்ணுகிறது. ஆனால், இப்பொழுது, தேவன் நித்தியமானவராயிருக்கிறபடியால், அவர் பரிபூரணமாயிருந்தார்; பரிபூரண அன்பு, பரிபூரண சமாதானம், பரிபூரண சந்தோஷம், பரிபூரண திருப்தி அந்த ஏழு ஆவிகளையும், (நாம் வெளிப்படுத்தின விசேஷத்தில் பார்க்கிறோம்), அவைகள் பரிபூரணமாயிருந்த தேவனிடத்திலிருந்து உண்டாயிருந்தன. அதற்கு புறம்பேயிருந்த ஒவ்வொரு காரியமும் அதிலிருந்து தாறுமாறாக்கப்பட்ட ஒரு காரியமாகவே இருந்து வருகிறது. 384 இப்பொழுது நாம் பரிபூரணத்தண்டைக்கு திரும்பி வரக்கூடிய ஒரே வழி அதனண்டைக்கு திரும்பி வருவதேயாகும். (பரிபூரணம், அது தேவனாய் இருக்கிறது). ஆகையால் நாம் பரிபூரணத்தண்டைக்கு திரும்பி வர வேண்டும் ஆனால், அப்பொழுது நாம் நித்திய ஜீவனை பெற்றிருக்க வேண்டும்; முடிவு இல்லாதது, அல்லது எந்தக் காரியமும் இல்லாமல், அது என்றென்றும் நித்திய ஜீவனாயுள்ளது. 385 இப்பொழுது அவர் ஆத்துமாவைக் குறித்து…ஆவியைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் நாம் நம்முடைய பரிசுத்தவான்களின் கல்லறைகளுக்கு மேலேயே, இந்த சரீரத்தை, நம்முடைய சரீரங்களை அடக்கம்பண்ண கொண்டு செல்கிறோம். சரீரம்…முதலாவது, தேவன், தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற லோகாஸ்… 386 முன்னமே நான் அதனூடாக பிரசங்கித்துள்ளேன். கத்தோலிக்கரோ, “அதை தேவனுடைய நித்திய குமாரத்துவம்” என்று அழைக்கின்றனர். நான் முன்னமே அதைக் கூறியிருக்கிறதுபோல, அந்த வார்த்தை சரியாக பொருள்படவில்லை. பாருங்கள், நித்திய குமாரனாய் இருக்க முடியாது, ஏனென்றால் ஒரு குமாரனுக்கு ஒரு துவக்கம் இருக்க வேண்டியதாய் இருந்தது. ஆகையால் இயேசுவுக்கு ஒரு துவக்கம் இருந்தது, தேவனுக்கோ ஒரு துவக்கமே இல்லாதிருந்தது. புரிகிறதா-? ஆனால் குமாரன்…நித்திய குமாரத்துவத்தையுடையவராயிருக்கவில்லை, ஆனால் பிதாவோடிருந்த குமாரன் ஆதியில் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற லோகாஸாய் இருந்தார். 387 அது தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற ஆவிக்குரிய சரீரமாயிருந்தது. அது நீங்கள் காண்கிற கண்களைப் போன்றில்லாமல், ஒரு மேலான கண்ணையுடைய மானிட ரூபம். அது நீங்கள் கேட்பது போன்ற செவிகளைப் பெற்றிராமல், ஒரு தொலை தூரத்தில் உள்ளதையும் கேட்கிற செவியாகும். பாருங்கள், அது ஒரு ஆவிக்குரிய சரீரமாயிருந்தது, அது, இந்த வானவில்லில்லிருந்த யாவும் ஒரு—ஒரு ஆவிக்குரிய சரீரத்திற்குள்ளாக இறங்கின. அது கன்மலையினூடாக கடந்து சென்ற போது, மோசே அதைக் கண்டான். அவன் பின்பாகத்தைக் கண்டு, “அது ஒரு மனிதனைப் போன்று காணப்பட்டது” என்றான். 388 அவர் மாம்ச சரீரத்திற்குள்ளாக இறங்கி வந்து, கன்றின் மாம்சத்தைப் புசித்து, பாலைக் குடித்து, வெண்ணெய்யைப் புசித்தபோது, ஆபிரகாம் அவரைக் கண்டார். அவர் மாம்ச சரீரத்தில் வந்து, பின்னர் அதிலிருந்து மறைந்து போனதை, ஆபிரகாம் கண்டார். நம்முடைய சரீரங்கள் பூமியின் பதினாறு மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளன என்று நாம் கண்டறிந்தோம், அவைகள் ஒன்று சேர்ந்து உருவாகின. தேவன் அவைகளை ஒன்று சேர்த்து, இந்த சரீரங்களிலேயே இரண்டு தூதர்களையும் உருவாக்கிக் கொண்டு வந்தார். அந்தத் தூதர்கள் நின்று பேசினர். தூதர்கள்…அந்த சமயத்தில் மனிதர்களாயிருந்தனர். 389 இப்பொழுது கவனியுங்கள், மெல்கிசேதேக்கு யாராயிருந்தாரென்றால் தேவன் தாமே என்பதை நாம் கண்டறிகிறோம். அது வேறு யாராகவும் இருந்திருக்க முடியாது, அவர் எருசலேமாயிருக்கிற சாலேமின் ராஜாவாயிருந்தார். அவருக்கு தகப்பனும், தாயும் இல்லாதிருந்தது; ஆகையால் அது இயேசுவாயிருந்திருக்க முடியாது, ஏனென்றால் அவர் தகப்பனும் தாயுமுடையவராயிருந்தார். அவருக்கு நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவுமில்லாததாயிருந்தது; அதை ஒருவர் மாத்திரமே உடையவராயிருக்கிறார், அது தேவனாகும். அது ஒரு ஆவிக்குரிய சரீரத்திலே இங்கே தேவன் வாசம் செய்து கொண்டிருந்ததாயிருந்தது. புரிகிறதா-? கவனியுங்கள், சாலேமின் ராஜா. 390 இப்பொழுது தேவன் காலத்தினூடாக, தம்முடைய ஜனங்களின் மூலமாக, வாழ்ந்து வந்துள்ளார். அது மலையின் மேல் அமர்ந்து, ஒரு புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக அழுத தாவீதுக்குள் இருந்த தேவனாயிருந்தது. அதே ஆவியானது தாவீதின் குமாரனாகிய இயேசுவுக்குள் வெளிப்படுத்தப் பட்டது, அவர் எருசலேமில் புறக்கணிக்கப்பட்டு அழுதார். 391 யோசேப்பு, தன்னுடைய தகப்பனால் நேசிக்கப்பட்டு, தன்னுடைய சகோதரர்களால் வெறுக்கப்பட்டு, முப்பது வெள்ளிக் காசுக்கு விற்கப்பட்டு, பார்வோனின் வலது பாரிசத்தில் உட்காரவைக்கப்பட்டான், யோசேப்பினால் அன்றி…வேறு எந்த மனிதனாலும் பார்வோனண்டை வர முடியாது, எக்காளம் ஊதப்பட்ட போது, யோசேப்புக்கு தெண்டனிட்டுப் பணிந்தனர்; கிறிஸ்துவிற்கு பரிபூரண மாதிரி. அதுவே அந்த மனிதர் மூலமாக ஜீவித்த கிறிஸ்துவின் ஆவியாயிருந்தது. புரிகிறதா-? 392 இப்பொழுது, இப்பொழுது இங்கே இயேசுவானவர் மரித்தபோது, அது மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனாயிருந்தது. தேவன் மனிதனானார். மீட்பின் பிரமாணங்களில், இஸ்ரவேலில் இழந்த சொத்தை மீட்கக் கூடிய ஒரு மனிதனுக்கு ஒரே வழி மாத்திரமே இருந்தது, அதாவது அவன் ஒரு இனத்தானாயிருக்க வேண்டியதாயிருந்தது. அவன் ஒரு நெருங்கின இனத்தானாயிருக்க வேண்டியதாயிருந்தது. ரூத்தின் புத்தகம் அதை அழகாக விவரிக்கிறது; அவன் ஒரு இனத்தானாயிருக்க வேண்டியதாயிருந்தது. ஆகையால் தேவனுக்கு மனிதன் நெருங்கிய இனத்தானாகும்படி தேவன் மனிதனுக்கு நெருங்கிய இனத்தாராக வேண்டியதாயிருந்தது. புரிகிறதா-? 393 அவர் அவனுக்குள் ஒரு ஆவியை உடையவராயிருக்கிறார், ஒரு மனிதன் பிறக்கும்போது அவன் செய்கிற காரியம், ஏனென்றால் அது ஒரு ஜென்மசுபாவமான ஆவியாயிருக்கிறது. அது ஒரு உலகத்தின் ஆவியாய் இருக்கிறது, அது இப்பிரபஞ்சத்தின் தேவனுடைய ஆவியாயிருக்கிறது. அவன் வெறுமனே ஆதாமின் ஒரு கர்ப்பப்பிறப்பாயிருக்கிறான். 394 ஒரு மரம் தானே பிரதியுற்பத்தி செய்து கொள்கிறது. தாவரம் தானே பிரதியுற்பத்தி செய்துகொள்கிறது. மிருகங்களும் தங்களை பிரதியுற்பத்தி செய்துகொள்கின்றன. மானிடர்கள் தங்களை பிரதியுற்பத்தி செய்து கொள்கின்றனர். அவர்கள் மூல சிருஷ்டிப்பின் உப உற்பத்தியாய் இருக்கிறார்கள். இது புரிகிறதா-? 395 இப்பொழுது, இப்பொழுது ஒரு மனிதன் பிறக்கும்போது, அவன் இந்த உலகத்தின் ஆவியை தனக்குள் கொண்ட ஒரு ஆவியோடு பிறக்கிறான். அந்தக் காரணத்தினால்தான் அவன் மீண்டும் பிறக்க வேண்டியவனாய் இருக்கிறான். ஏனென்றால் இந்த ஆவி தந்தை, தாயின் மூலம் கருத்தரித்தலிருந்து வருகிறது, அது பாலியல் கருத்தரித்தலாயிருந்தது, எனவே அது முற்றிலும் என்றென்றுமாய் ஜீவிக்க முடியவில்லை. ஆகையால் அவன் மீண்டும் பிறக்க வேண்டும். அவன் அதைச் செய்ய முடிந்ததற்கு முன்னே, தேவன் இறங்கி வந்து மீண்டும் பிறப்பதற்கு அவனுக்காக ஒரு வழியை உண்டு பண்ண வேண்டியதாயிருந்தது; ஏனென்றால் அவன் தன்னை மீட்டுக் கொள்ள அவனுக்கு வழியே இல்லாதிருந்தது, அவன் நம்பிக்கை இல்லாதவனாய் இருந்தான். அவன்… நம்பிக்கையில்லாமல், தேவனில்லாமல், கிறிஸ்துவில்லாமல், இந்த உலகத்தில் இழக்கப்பட்டுப் போய்விட்டான். அவனால்—அவன்…அவன் தன்னை இரட்சித்துக் கொள்ள ஒன்றுமே இல்லாததாய் இருந்தது. அவன்… ஒவ்வொரு…அவன் ஒரு பிரதான ஆசாரியனாயிருந்தாலும், அவன் ஒரு கண்காணியாயிருந்தாலும், அவன் ஒரு போப்பாண்டவராயிருந்தாலும், அவர் என்னவாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவன் அடுத்த மனிதனைப் போலவே குற்றவாளியாயிருக்கிறான். 396 ஆகையால், அதைச் செய்ய குற்றமில்லாத ஒருவர் தேவையாயிருந்தது. எனவே தேவன் ஒருவர் மாத்திரமே குற்றமில்லாதவராயிருந்தார். தேவன் நம்மை மீட்கும்படியாக மரணத்தின் கொடுக்கை எடுத்துப் போட, மரணத்தின் கொடுக்கை நங்கூரமிட, தேவன் இறங்கி வந்து மனிதனாக வேண்டியதாயிருந்தது (அவர் கிறிஸ்துவின் ரூபத்தில் வந்தார்), அதாவது நாம்…நம்முடைய கிரியைகளினால் அல்ல அல்லது நம்முடைய நற்குணத்தினாலும் அல்ல, (நம்மிடத்தில் ஒன்றுமே இல்லை), ஆனால் அவருடைய கிருபையினால் இரட்சிக்கப்பட வேண்டியதாயிருந்தது. ஆகையால் நாம் இந்த அழிவுள்ள சரீரத்தில் அவருடைய ஜீவனைப் பெற்றுக் கொள்கிறோம், இப்பொழுது நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய் இருந்து, நமக்குள்ளே நித்திய ஜீவனைப் பெற்றுள்ளோம். நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறோம். ஆகையால், இயேசு, உயிரோடிருக்கிறவராய்… 397 எந்த மனிதனுமே எவ்வளவு பொல்லாங்கனாயிருந்தாலும் அல்லது எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல…அவன் இந்த பூமியைவிட்டுச் செல்லும்போது, அவன் மரிப்பதில்லை, அவன் வேறெங்கோ இருக்கிறான். ஆனால் அவன் அழிந்துபோகும் ஒரு ஜீவனை உடையவனாயிருக்கிறான், அவன் நரகத்தில் அவனுடைய செய்கைகளுக்காக தண்டிக்கப்பட்டபிறகு, அவன்…ஆனால் அதே சமயத்தில் அந்த ஜீவன் அழிந்து போய்விடும். ஒரே ஒரு மாதிரியான நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு. 398 இப்பொழுது, நாம் அதனூடாகச் சென்று பார்த்துள்ளோம். ஒரு மனிதன் ஒரு பாவியாயிருந்து, என்றென்றுமாய் தண்டிக்கப்படுவானானால்…அவன் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தாலொழிய, அவன் என்றென்றுமாய் தண்டிக்கப்பட முடியாது. அவன் நித்திய ஜீவனை பெற்றிருந்தால், அவன் இரட்சிக்கப்பட்டிருப்பான். புரிகிறதா-? ஆகையால் ஒரே ஒரு மாதிரியான நித்திய ஜீவன் தான் உண்டு, அது ஸோயீ என்ற “தேவனுடைய ஜீவனாய்” உள்ளது. எனவே அவன் அழிந்து போகமுடியாது. 399 ஆனால் துன்மார்க்கர் கடைசி நாளில் அவர்களுடைய நியாயத்தீர்ப்பிற்காக (சரீரத்தில் செய்திருந்த கிரியைகளின்படி நியாயந்தீர்க்கப்பட) ஒரு வேதனைக்குரிய இடத்தில் காத்திருக்கிறார்கள். இப்பொழுது, ஆனால் நாம்…சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருக்கும், சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின் தொடரும். 400 இப்பொழுது நாம் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்தால், அவர் நமக்கு அதை அப்படியே மன்னிக்கிறார், ஆகையால் நாம் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் ஒருபோதும் நிற்பதில்லை. உங்களுக்கு இது புரிகிறதா-? பாருங்கள். ரோமர் 8:1, “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாய் இருக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை” என்று கூறுகிறது. அதாவது கிறிஸ்துவுக்குள் இருக்கிறவர்கள். அதாவது மரணத்தை விட்டுநீங்கி ஜீவனுக்குட்பட்டு இருக்கிறோம்; பாருங்கள், நாம் கிறிஸ்துவுக்கு உள்ளிக்கிறபடியால் ஆக்கினைத் தீர்ப்பேயில்லை. “மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு.” புரிகிறதா-? “என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” 401 நான் கிறிஸ்துவுக்குள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்து, கிறிஸ்து என்னுடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டிருக்க, நான் என்னுடைய பாவங்களுக்காக அவருடைய கிருபாதாரபலியை ஏற்றுக் கொண்டிருந்தால், தேவன் என்னை எப்படி நியாயந்தீர்க்க முடியும்-? அவர் கிறிஸ்துவை நியாயந்தீர்த்தபோது, அவர் என்னை நியாயந்தீர்த்து விட்டார். அதன் பின்னர் நான் நியாயத் தீர்ப்பிலிருந்து விடுதலையாயிருக்கிறேன். “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்.” புரிகிறதா-? 402 ஆனால், இப்பொழுது, துன்மார்க்கர் அவ்வண்ணமாயிருப்பதில்லை. அவன் வேதனையான ஒரு இடத்திற்குள்ளாகச் செல்கிறான். அது உண்மை என்பதை நாம் அறிவோம். துன்மார்கன் உயிரோடிருக்கிறான். அவன் ஒரு வேதனையான இடத்தில் இருக்கிறான். அவன் ஒரு இடத்தில் இருக்கிறான், அங்கே அங்கே…அறிவதில்லை. அப்படித் தான் இந்த இறந்தோரின் ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் ஆவியுலக இடையீட்டாளர்கள் இறந்து போயிருக்கிற ஜனங்களின் ஆவிகளை அழைக்கிறார்கள், நீங்கள் அதைக் குறித்த எதையாவது எப்போதாவது பார்த்திருப்பீர்களேயானால், அது ஒரு விதமான கும்மாளமும், அசுத்தமான கேலிப் பேச்சுகளுமாய், அவர்கள் செய்கிற கிறுக்குத்தனமான காரியங்களாய் இருக்கின்றன. சரி. ஏன்-? அவர்கள்… 403 டானி மார்டினின் அற்புதம் என்ற என்னுடைய கட்டுரை வெளிவருவதற்கு முன் வெளிவந்த இந்த செல்வி பைப்பர் என்ற கட்டுரையைப் பாருங்கள். எத்தனைபேர் அந்தக் கட்டுரையை வாசித்திருக்கிறீர்கள்-? ஆம், நிச்சயமாகவே உங்களில் அநேகர் வாசித்திருக்கிறீர்கள். அது ரீடர்ஸ் டை ஜிஸ்ட் என்ற பத்திரிக்கையில் உள்ளது. இந்த அற்புதத்திற்கு முன்னர் செல்வி பைப்பர் என்பவளைக் குறித்து வெளியானதை நீங்கள் கவனித்தீர்களா-? அவள் உலகத்திலேயே மிகப் பெரிய ஆவியுலக இடையீட்டாளாராக அறியப்பட்டு இருக்கிறாள். அவளுடைய கதை 12 பக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. ஐம்பது வருடங்களாக…அவள் உலகம் முழுவதும் சென்று செய்ததை, அதாவது, “அவள் மரித்தோரோடு முற்றிலும் பேசுவதையும், மரித்த ஜனங்கள் எழும்பி வருவதையுங் குறித்த” விஞ்ஞான நிரூபணம் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் அப்பத்திரிக்கையாளார்கள் வைத்துள்ளனர். என்ன-? தேவனுடைய பெயர் ஒரு முறையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை, எந்த மனந்திரும்புதலைக் குறித்தும், தெய்வீக சுகமளித்தலைக் குறித்தும், அதைக் குறித்த எதையுமே ஆவியுலத் தொடர்பு இடையீட்டில் குறிப்பிடப்படவில்லை, பாருங்கள். 404 அதில் இருந்த ஒரேக் காரியம், “ஜான், உனக்கு என்னைத் தெரியவில்லையா-? ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்த அந்த ஜார்ஜ் நான் தான், நான் இன்ன, இன்ன காரியத்தைச் செய்தேன். நாம் சென்று இதைச் செய்த அந்த இடம் உனக்கு நினைவிருக்கிறதா-?” என்று அந்த ஜனங்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருந்தனர். பாருங்கள், அவர்கள் அறிந்திருப்பது எல்லாம் அவ்வளவுதான். அவர்கள் மரித்துப் போய்விட்டனர்…கடந்து போய் விட்டனர். அவர்களுக்கு—அவர்களுக்கு நியாயத்தீர்ப்பேயன்றி வேறொன்றும் விடப்பட்டிருக்கவில்லை. 405 மரமானது சாய்கிறவிதமாகவே, அந்த விதமாகவே அது விழுகிறது. நீங்கள் மரிக்கும் நிலையில்…அந்தக் காரணத்தினால்தான் நான் மரித்தோருக்காக ஜெபிப்பதில் கருத்து வேற்றுமைக் கொள்கிறேன், பாருங்கள், பரிந்துரை பிராத்தனைகள் அல்லது—அல்லது மரித்த பரிசுத்தவான்களோடு கலந்துரையாடுதல் போன்றவற்றோடு கருத்து வேறுபாடு கொள்கிறேன். அது தேவனுடைய வார்த்தையின்படியிருக்க முடியாது. மரித்தப் பிறகு எந்த ஒரு நபருக்காகவும் ஜெபிப்பது எந்த ஒரு நன்மையும் செய்கிறதில்லை. அவர்கள் முடிவுற்றுவிட்டனர். அவர்கள்—அவர்கள்…அவர்கள் இரக்கத்திற்கும் நியாயத்தீர்ப்பிற்குமிடையேயுள்ள கோட்டை கடந்துவிட்டனர். அவர்கள் இரக்கத்தண்டை சென்றிருக்க வேண்டும் அல்லது இரக்கத்திலிருந்து விலகிச் சென்றிருக்க வேண்டும். இயேசு பரிசுத்த மத்தேயு 16-ம் அதிகாரத்தில் அவ்வண்ணமாய்க் கூறினார், அவர்—அவர்—அவர் அதைப் போதித்தார்; மாற்கு 16-வது அதிகாரத்தில் அது உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஐஸ்வரியவானும் லாசருவும். எந்த மனிதனும் இந்தப் பிளவைக் கடந்து வர முடியாது, ஒரு போதும் இதைக் கடப்பதில்லை. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. புரிகிறதா-? ஆகையால் அதுவே இதனைத் தீர்க்கிறது. 406 இப்பொழுது, ஆனால் கிறிஸ்து மரித்தபோது, அவர் கிறிஸ்துவாயிருந்தார் என்று ஒவ்வொரு காரியமும் சாட்சி பகர வேண்டியதாயிருந்தது. இப்பொழுது நாம் உங்களுடைய கேள்விக்குச் செல்வோம். முதாலவது காரியம், நட்சத்திரங்கள் ஒளிகொடுக்க மறுத்துவிட்டன, சூரியன் அஸ்தமித்துவிட்டது, சந்திரனும் தன்னுடைய ஒளியைக் கொடுக்கவில்லை, பூமியானது அவருடைய மரணத்திலே அதனுடைய கற்பாறைகளை வெண்மையாக்கிற்று. அவர் காவலிலிருந்த ஆத்துமாக்களுக்கு சென்று பிரசங்கித்தார், அவை நோவாவின் நாட்களில் தேவன் நீடிய பொறுமையோடு காத்திருந்தபோது, மனந்திரும்பாமற்போனவைகள். அவைகள் அவரை அடையாளங்கண்டு கொள்ள வேண்டியதாயிருந்தது. அதை கவனியுங்கள்! நீ இன்றிரவு இங்கே தற்செயலாக ஒரு பாவியாயிருந்தால், ஒரு நிமிடம் அதைக் குறித்து சிந்தித்துப் பார். இன்றிரவு இப்பொழுது பிரசங்கிக்கப்படுகிற இந்த சுவிசேஷத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிற நீ என்றோ ஒரு நாள் இதற்கு சாட்சியாய் இருக்க வேண்டியதாயிருக்கும். நீ யாராயிருக்கிறாய் என்பதை பொருட்படுத்தாமல், நீ எங்கே இருந்தாவது உன்னுடைய முழுங்காலை முடங்க செய்வாய். அது இன்றிலிருந்து ஒருகால் பத்தாயிரம் வருடங்கள் கழித்து நடக்கலாம், அது…இந்த காலையில் இல்லாமல் இருக்கலாம். அது எப்பொழுதாயிருந்தாலும், நீ எங்காவது முழங்காலை முடக்கப் போகிறாய், இதே மாறாத சுவிசேஷம் திரும்பவும் உனக்கு பிரசங்கிக்கப்படுவதை நீ கேட்கப் போகிறாய். 407 காவலில் இருந்த அந்த ஆத்துமாக்கள் ஏனோக்கும், அவர்கள் எல்லோரும், நோவாவும் பிரசங்கித்தபோதும் மனந்திரும்பாமல் இருந்தன, இப்பொழுது உள்ளதைப் போன்று தேவன் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து, அந்த நேரம் வருவதற்கு காத்துக் கொண்டிருந்தார். நோவாவும், ஏனோக்கும், அவர்கள் எல்லோருமே பிரசங்கித்தபோதும் அந்த ஜனங்கள் நகைத்து, அவர்களைக் குறித்து பரியாசம் செய்தனர். அவர்கள் காவல் வீட்டில் இருந்தனர், இயேசு காவலிருந்த ஆத்துமாக்களண்டைச் சென்று பிரசங்கித்தார். அவர் சாட்சி பகிர்ந்தாரே! வானங்களும், “அவர் இங்கு இருந்தார்” என்று சாட்சிப் பகர்ந்தன. பூமியும், “அவர் அங்கு இருந்தார்” என்று சாட்சி பகர்ந்தன. பாதளமும், “அவர் அங்கு இருந்தார்” என்று சாட்சிப் பகர்ந்தனர். 408 வேதம் அதைக் கூறினது…அநேக ஆண்டுகளுக்கு முன்னர், தாவீது, சங்கீதங்களில்… சரி, சகோதரனே, நீங்கள் அதைப் படிக்க விரும்பினால், நீங்கள் சங்கீதங்களை வாசித்துப் பாருங்கள். சங்கீதம் 16:10 [சகோ.நெவில் வாசிக்கிறார், “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் வீடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்”—ஆசி.] 409 சகோதரனே, பேதுரு பிரசங்கத்ததில் உள்ள அதே காரியத்தை அப்போஸ்தலர் 2-ம் அதிகாரம் 27-ம் வசனத்திலிருந்து வாசியுங்கள்: [சகோதரன் ஸ்டிரிக்கர், “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்” என்று வாசிக்கிறார்.—ஆசி.] 410 சகோதரனே நீங்கள் அதனுடைய கட்டத்தை புரிந்து கொள்ளும்படி, அதற்கு மேலே உள்ள இரண்டு வசனங்களை வாசியுங்கள்: [சகோதரன் ஸ்டிரிக்கர் வாசிக்கிறார், “அவரைக் குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப் படாதபடி அவர் என் வலது பாரிசத்திலே இருக்கிறார்; அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்.”-ஆசி.] 411 இப்பொழுது அடுத்த வசனத்தையும் வாசியுங்கள்: [சகோதரன் ஸ்டிரிக்கர் வாசிக்கிறார், “ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.”—ஆசி.] 412 ஆம், கவனியுங்கள். இப்பொழுது, என்னுடைய யேகோவா சாட்சிகள் உபதேசத்தை சார்ந்த நண்பனே, நான் அதைக் குறித்து உங்களைக் கேள்விகேட்க விரும்புகிறேன். புரிகிறதா-? நரகம்,…பாதாளம், மாண்டாரின் கீழ் உலகு என்ற ஒரு இடம் இருக்குமாயின், நீங்கள் அதை என்னவென்று அழைக்க விரும்பினாலும் சரி; அது கல்லறையிலேயே நிறுத்திவிடுமானால், அப்பொழுது அவர், “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்” என்று ஏன் கூறினார்-? அதைக் குறித்து என்ன-? புரிகிறதா-? 413 இங்கே அவருடைய சரீரம் கல்லறையில் இருந்தது; அவருடைய ஆத்துமா பாதாளத்தில் இருந்தது, உயிரோடு பிரசங்கித்துக் கொண்டிருந்தார்! அதைக் குறித்து என்ன-? அவர் மீண்டும் தம்முடைய ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார். அவருடைய ஆத்துமா ஆவிக்குரிய சரீரத்திலிருந்த ஜனங்களோடு கூட அங்கே இருந்தது. அவர் அவர்களுக்கு சாட்சி பகர்ந்து கொண்டிருந்தார், அவர்கள் “நீடிய பொறுமையோடே தேவன் காத்திருந்த போது, மனம் திரும்பாமற்போனவர்கள்.” 414 அவர்…வேறு வார்த்தைகளில் கூறினால், அவர் வாசலைத் தட்டினர். அப்பொழுது கதவானது சுழன்று திறந்தது, அங்கே மனந்திரும்பியிருந்த எல்லா ஆத்துமாக்களும் இருந்தன. அவர், “நான் தான் அந்த ஸ்திரீயின் வித்து, இங்கே ஏனோக்கு கூறியிருந்த ஒருவர் நான் தான்…” என்றார். அங்கே பரதீசில், அது மற்றொரு இடம். இப்பொழுது அந்த மூன்று ஸ்தலங்களையும் ஒரு போதும் மறந்துவிடாதீர்கள்; துன்மார்க்கரின் ஸ்தலம், நீதிமான்களின் ஸ்தலம் மற்றும் நரகமுமே. புரிகிறதா-? 415 பரலோகத்தைக் குறித்த திரித்துவத்தைப் போன்றே: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப் போன்றே; மிருகத்தைக் குறித்த திரித்துவத்தைப்போல; கள்ளத் தீர்க்கதரிசி, மிருகம், மிருகத்தின் முத்திரை. அவை யாவும், நினைவிருக்கட்டும், அவை யாவும் திரித்துவத்தில் உள்ளன. திரித்துவம் ஒன்றாகி, பரிபூரணப்பட்டது. ஒன்றாய் பரிபூரணப்படுத்தப்பட்டது. நீங்கள் மூன்றில் ஒன்றாய் பரிபூரணப்படுத்தப்படுகிறீர்கள்: ஆத்துமா, சரீரம், ஆவி; தண்ணீர், இரத்தம், மற்றும் நரம்புகள். பாருங்கள், நீங்கள் என்னவாய் இருந்திருந்தாலும், பரிபூரணமாக்கப்பட்ட ஒன்றாக ஆவதற்கு உங்களுக்கு மூன்று தேவைப்படுகிறது. ஒரு மும்முனை கொண்ட கண்ணாடி துண்டை எடுத்து, அதன் மேல் சூரிய வெளிச்சம் படும்படிச் செய்தால், அப்பொழுது நீங்கள் ஒரு பரிபூரணமான வானவில்லைப் பெற்றுக் கொள்வீர்கள். பாருங்கள், ஒவ்வொரு காரியமும், நீங்கள் ஒன்றை பரிபூரணப்படுத்த மூன்றினை உடையவர்களாயிருக்க வேண்டும். 416 இப்பொழுது, அது நினைவிருக்கட்டும், அவர் மரித்த போது, அவர் முதலில் காவலில் இல்லாத…காவலிருந்த ஆத்துமாக்களுக்கு பிரசங்கிக்கச் சென்று, அவர், “ஸ்திரீயினுடைய வித்தாயிருந்தார்” என்று சாட்சி பகர்ந்தார். அவர், “ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவாங்களோடுங்கூட வருபவராக ஏனோக்கு கண்டவராக” இருந்தார். நோவாவினால், ஏனோக்கினால், நீதிமான்களினால் பிரசங்கிக்கப்பட்டிருந்த வேதவாக்கியங்களுக்கு அவர் சாட்சி பகர்ந்து, “அவர்தான் அந்த ஒருவராயிருந்தார்” என்று கூற வேண்டியதாயிருந்தது. ஒவ்வொரு காரியமும் அதை அடையாளங் கண்டு கொள்ள வேண்டியதாயிருந்தது. 417 அதன்பின்னர் அவர் பாதாளத்திற்குள் இறங்கி, மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை பிசாசினிடத்திலிருந்து பெற்றுக் கொண்டார். 418 பரதீசிக்குள்ளாக திரும்பி வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இன்னும் மற்றும் நீதிமான்களை வெளியே கொண்டு வந்தார்; அவர்கள் உயிர்த்தெழுந்தனர் (மத்தேயு 27), அவர்கள் கல்லறைகளை விட்டு வெளியே வந்து, நரகத்திற்குள் பிரவேசித்து, வீதிகளினூடாக ஜனங்களுக்குக் காணப்பட்டனர். அல்லேலூயா! அங்குதான் காரியமே உள்ளது! 419 இப்பொழுது, ஆனால் அவருடைய சரீரம்…அவருடைய ஆத்துமா இங்கே இழக்கப்பட்டவர்களுக்கு சாட்சி பகர்ந்து கொண்டிருக்கையில், அப்பொழுது அவர் இங்கே கீழே பிசாசினிடத்திலிருந்து திறவு கோல்களை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து, ஆபிரகாம் ஈசாக்கை வெளியேக் கொண்டு வந்தார்; அவருடைய ஆத்துமா…அவருடைய ஆத்துமா அங்கே அதைச் செய்து கொண்டிருந்தது, அவருடைய சரீரம் கல்லறையில் கிடத்தப்பட்டிருந்தது. அந்தக் காரணத்தினால் இயேசு கூறினார்…ஜனங்கள், “இயேசு, ‘மூன்று நாளைக்குள்ளே நான் இதை எழுப்புவேன். மூன்று நாளைக்குள்ளே நான் எழுந்திருப்பேன்’ என்று ஏன் கூறினார்-? அவர்—அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் மரித்து, ஞாயிறு காலை உயிர்த்தெழுந்தாரே” என்று கூறுகிறார்கள். 420 ஆனால் அது “மூன்று நாளைக்குள்ளே” என்று இருந்ததைக் கவனியுங்கள், நீங்கள் கிரேக்க வேதாகம அகராதியில் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். தாவீது அபிஷேகத்தின் கீழிருந்து (பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழிருந்து), “உம்முடைய பரித்தர் அழிவைக் காணவொட்டீர்” என்று கூறினான் என்பதை அவர் அறிந்திருந்தார். அது அவருக்கு உரித்ததாயிருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். அது அவரைப் பொருட்படுத்தினது என்பதை அவர் அறிந்திருந்தார். அவரே தேவனுடைய பரிசுத்தராயிருந்தார், அழிவு எழுபத்தி இரண்டு மணி நேரத்திற்குள் துவங்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். மூன்று நாட்களுக்குள் எங்கோ ஓரிடத்திலிருந்து அழுகத் துவங்குமுன், அவர் அங்கிருந்து மீண்டும் வந்து விட்டார், ஏனென்றால் வேதவாக்கியங்கள் தவறிப்போக முடியாது. 421 அங்குள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் எனக்கு உரியதாயிருக்கிறது, உங்களுக்கு உரியதாயிருக்கிறது, அது நம்முடையதாயிருக்கிறதே!. 422 அவர், “நீங்கள் இந்த சரீரத்தை அழித்துப் போடுங்கள், நான் அதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவேன்” என்றார். ஏனென்றால் அவர், “என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்” என்று கூறியிருந்தார். 423 மூன்று நாளைக்குள்ளே அந்த சரீரம் அங்கிருந்து வெளியே வந்துவிடும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் மூன்று நாட்கள் முழுமையாக தங்கி இருக்கவில்லை. இல்லை ஐயா, அவர் நிச்சயமாக தங்கியிருக்கவில்லை. அவர் வெள்ளிக் கிழமை பிற்பகலிருந்து ஞாயிறு காலை வரையில் தரித்திருந்தார், அந்த சரீரத்தின் ஒரு உயிரணு கூட அழிந்து போக முடியவில்லை. 424 அவர் மரித்து, தைலமிடப்பட்டு…இல்லை துணியில் சுற்றப்பட்டு ஒரு கல்லறையில் கிடத்தப்பட்டார். அந்த உஷ்ணமான, ஈரப்பசை கொண்ட தேசத்தில் ஒரு சில மணி நேரத்திலே அவர் அழுகிப் போயிருக்கலாம். நீங்கள் அழுக…அழுகிப் போகும் போது, உங்களுக்குத் தெரியும், அந்த உஷ்ணமும், ஈரப்பசையுமான தேசத்தில் அவருடைய சரீரம், அவருடைய மூக்கு உள்ளேயே அழுகி விழுந்து போக இன்னும் மற்றவைகளும் அழுகிவிடும். அது அழிந்து போயிருந்திருக்கும், ஏனென்றால் அது ஒரு சரீரமாய் இருந்தது. ஆனால் அந்த உயிரணு அழுகுவதற்கு முன்பே, தேவன் தீர்க்கதரிசியாகிய தாவீது மூலம், “உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்” என்று கூறியிருந்ததை அவர் அறிந்திருந்தார். 425 அவர் எப்படியாய் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு அதைக் கொண்டு ஜீவித்தார். இப்பொழுது, அங்கிருந்த ஒவ்வொரு வாக்குத் தத்தங்களும் அவருக்கு உரித்தானதாயிருந்தது, அவைகள் ஒவ்வொன்றையும் தேவன் நிறைவேற்றினார். ஒவ்வொரு வாக்குத்தத்தமும் விசுவாசிக்கு உரித்தானதாயிருக்கிறது, தேவன் அதனுடைய ஒவ்வொரு வாக்குத் தத்ததையும் நிறைவேற்றுவார். ஆமென். அது சத்தியமாயிருக்கிறது என்று அப்படியே உறுதியாக இளைப்பாறுங்கள். ஆமென் ஆகையால், அவருடைய ஆத்துமா… நீங்கள் இதை நினைக்கிறீர்களா…இல்லை. என்னை மன்னிக்கவும். இயேசுவினுடைய சரீரம் கல்லறையிலிருந்த மூன்று நாட்களில் அவருடைய ஆவி எங்கேயிருந்தது-? 426 அவருடைய ஆவி பாதாளத்தில், தாழ்விடங்களில் இருந்தது. அவர் உயிர்த்தெழுந்தார். உங்களுக்கு அதிக உதவியாய் இருக்கும்படிக்கு நான் இங்கு ஒரு சிறு செய்தியை சேர்த்து கூறுவேனாக. அவர் உயிர்த்தெழுந்த போது, அவருடைய…அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த போது, அவர் இன்னமும் மீட்பின் பணியை முற்றிலும் முடித்துவிடாமலிருந்தார். அது உண்மை. அவர் முழு காரியத்தையும் சுத்திகரிக்க வேண்டியதாயிருந்தது, கிரயமோ செலுத்தப்பட்டிருந்தது, ஆனால் பாதாளத்தின் பேரச்சமும், அந்த கல்லறையின் பேரச்சமும்…இங்கே, அவர்—அவர் மரித்தபோது, அவர் தொடர்ந்து ஊழியம் செய்தார். அவர் மரித்த போது, அவர் ஒரு போதும் ஊழியத்தை நிறுத்திவிடவில்லை, அவர் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டு இருந்தார்-? என்னுடைய விநோதமான நடிப்பிற்காக என்னை மன்னிக்கவும், நான் யூகிக்கிறேன், ஆனால் அவர் ஒருபோதும் ஊழியத்தை நிறுத்த வில்லையே-! 427 நீங்கள் ஒருபோதும் மரிப்பதில்லையே! உங்களுடைய சரீரம் கொஞ்சகாலம் இளைப்பாறாலாம், ஆனால் தேவன் அதை எழுப்புவார், அவர் எழுப்புவதாக வாக்குப் பண்ணினார். தேவனால் அழிந்து போக முடியாதது போல நீங்களும் ஒரு போதும் அழிந்து போக முடியாது. அது உண்மை. பாருங்கள், அவருடைய…அவர் மரித்தப் பிறகு, என்ன…சிஷர்களுக்கோ மரித்து விட்டார். அவர் என்னவாயிருந்தாரென்றால், அவர் நித்திரையாய் இருந்தார். அவர், “நான் போய் லாசருவை எழுப்புவேன்” என்று அவனைக் குறித்து கூறினது போல, அவர்கள் அவரை நித்திரைக்குட்படுத்தினர். தேவன் அவரை எழுப்ப வேண்டியதாயிருந்தது. 428 பாருங்கள், அவர் தொடர்ந்து சென்றார், அவர் தொடர்ந்து பிரசங்கித்தார். அவர் இங்கே காவலிருந்த ஆத்துமாக்களுக்குப் பிரசங்கித்தார். நேராக பாதாளத்திற்குச் சென்று பிசாசினிடத்திலிருந்து திறவு கோல்களைப் பறித்துக் கொண்டார். மீண்டும் திரும்பி வந்து, பரதீசில் மீண்டும் பிரசங்கித்துவிட்டு, மீண்டும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார். தம்முடைய சீஷர்களோடு நாற்பது நாட்கள் விஜயம் செய்தார். நாற்பதாம் நாளின் முடிவிலே அவர் மேலேறிச் சென்றார்; ஏனென்றால் நம்மை அழித்துகிற ஒவ்வொரு காரியத்தையும், மூட நம்பிக்கைகளையும், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும்…அவர் ஒவ்வொரு மூட நம்பிக்கையையும், ஒவ்வொரு சந்தேகத்தையும் துண்டித்து, அவருடைய பரமேறுதலில் பூமியிலிருந்து மகிமைக்கு ஒரு ஜெபக் கயிற்றை உண்டாக்கினார். உன்னத்திற்கு ஏறி தம்முடைய மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார். ஜெயங்கொண்டாரே! மகத்தான ஜெயவீரர், முற்றிலுமாக. மரணத்தால் அவரைப் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லையே! பாதாளத்தால் அவரைப் பிடித்து வைத்துக் கொள்ள முடியவில்லையே! புவியால் அவரைப் பிடித்து வைக்க முடியவில்லையே! 429 அவர் பூமியின் மேலிருந்தபோது, அவர்…அவர் மிக இழிவான பட்டிணத்திற்கும், இழிவான ஜனங்களிடத்திற்கும் சென்றார், மிகவும் இழிவான பெயரிடப்பட்டார். அதைத்தான் மனிதன் அவருக்கு செய்திருந்தான். அவர் மிக இழிவான எரிகோ பட்டிணத்திற்கு சென்றார். மிக குள்ளமான மனிதன் ஒரு மரத்தில் ஏறி அவரை கீழ் நோக்கிப் பார்க்க வேண்டியதாயிருந்தது. அந்நிலையில்தான் மனிதன் அவரை வைத்தான். அவர் மிக இழிவான பணியாயிருந்த பாதம் கழுவும் பணியாளாயிருந்தார். அவர் தாழ்ந்தவரானார். அவருக்கு, பெயல்செபூல், “பிசாசுகளின் தலைவன்” என்ற இழிவான பெயரை சூட்டி, இழிவான இடத்தை அளித்து, பாதாளத்தின் தாழ்ந்த இடத்திற்கு தாழ அவரை அனுப்பினான். 430 தேவனோ அவரை எழுப்பி, வானங்களுக்கு மேலாக உன்னதத்திற்கு அனுப்பி எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அளித்தார். அல்லேலூயா! அதுமட்டுமின்றி, அவர் பரலோகத்தைக் காண கீழ் நோக்கிப் பார்த்திருந்திருப்பார். உம்முடைய சிங்காசனம் வானாதி வானங்களுக்கு மேலாக உயர்ந்திருக்கிறது. பரலோகத்திலும் பூலோகத்திலும் யாவுமே அவருக்கு கட்டுப்பட்டிருக்கின்றன…எப்போதும் இருந்திராத மகத்தான நாமம் அவருக்கு அளிக்கப்பட்டது. அதைத்தான் தேவன் அவருக்குச் செய்தார். மனிதன் அவரை இழிவான் நிலையில் வைத்தான், தேவனோ அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார். அவர் தாழ்விலிருந்து உன்னதத்திற்கு உயர்த்தப்பட்டார். 431 அவர் நம்மை உயர்த்தும்படிக்கு அவர் தாழ்மையுள்ளவரானார். நாம் அவருடைய கிருபையினூடாக அவரைப் போலாகும்படிக்கு, தேவனுடைய குமாரராகும்படிக்கு அவர் நம்மைப் போலானார். அந்நிலைக்கே அவர் சென்றார். ஆமென்! அவருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. நாம் வரும்படியான ஒரு வழியை உண்டு பண்ணி, என்றோ ஒரு நாளில், “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்” என்றார். 432 ஓ, வியப்பொன்றுமில்லையே…மனிதன் அந்த தரிசனத்தைப் புரிந்து பற்றிக் கொள்ளும்போது, அதை விளக்கிக் கூறக் கூடிய மனிதன் ஒருபோதும் இருந்ததேயில்லை. அவர்கள் அதை விளக்கிக் கூற முயற்சித்து தங்களுடைய சிந்தையை இழந்துவிட்டனர்; இந்த மகத்தான பாடல்: “ஓ தேவனுடைய அன்பு, எவ்வளவு ஐஸ்வரியமும் சுத்தமுமானது; எவ்வளவு ஆழங்காணவியலாததும், வல்லமையுமானது.” அந்தச் செய்யுளின் கடைசி வரிகள்…இல்லை, செய்யுளின் முதல் வரிகள் என்று நான் நினைக்கிறேன், அது இவ்வாறு உள்ளது: “நாம் சமுத்திரத்தை மையினால் நிறைத்து, ஆகாயத்தை தோல் காகிதமாக்கினாலும்:…” அந்த செய்யுள் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா-? பைத்தியக்கார…ஒரு பைத்தியக்கார சீர்திருத்த நிலையத்தின் சுவற்றில் எழுதப்பட்டிருந்தது. எந்த மனிதனுமே தேவனுடைய அன்பை ஒரு போதும் விளக்கிக் கூற முடியாது. ஓ, அவர் நமக்காக என்ன செய்தார் என்று ஒரு போதும் கூறப்படமுடியாது. என்னே, நீங்கள் எப்படி அங்கே ஒரு தகுதியைப் பொறுத்த முடியும்-? அது துவக்கத்திலிருந்து முடிவு வரை அவருடைய கிருபையாயுள்ளது. நான் காணாமற்போனேன், அதமானேன், உதவியற்றவனாய், எந்த நன்மையுமின்றி, அதைக் குறித்து ஒன்றுமில்லாதிருந்தேன், அவர் தம்முடைய கிருபையினால் வந்து என்னை இரட்சித்தார். ஓ, என்னே. அது அவருடைய…அது என்னுடைய கர்த்தர். அது அவருடைய அன்பு, அது அவருடைய நன்மையாயுள்ளது. 433 இப்பொழுது நமக்கு கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் உள்ளன, ஆனால் கிட்டத்தட்ட பதினைந்து கேள்விகள் உள்ளன. கேள்வி:62. சபைக்கு வெளியே ஸ்திரீகள் தனிப்பட்ட முறையில் வேலை செய்வது சரியென்று நீர் நினைக்கிறீரா-? 434 ஆம், அது ஒரு கேள்வியாகும், வெறுமென ஒரு…ஒரு வேதப்பிரகாரமான கேள்வியல்ல, ஆனால்…நிச்சயமாகவே நான் சரியென்று கருதுகிறேன். ஆம் ஐயா, நாம் எல்லோருமே ஒருங்கே பணிபுரிகிறவர்களாயிருக்கிறோம். ஸ்திரீகள் அவர்களுடைய ஸ்தானங்களை உடையவர்களாயிருக்கிறார்கள். நிச்சயமாகவே அவர்கள் அதை செய்கிறார்கள். ஆம், ஐயா. உங்களால் செய்ய முடிந்த எல்லா தனிப்பட்ட வேலையையும் அப்படியே செய்யுங்கள், தேவன் அதற்காக உங்களை ஆசீர்வதிப்பார். சரி, இப்பொழுது நாம் பார்ப்போம்: 63. தயவு கூர்ந்து திரித்துவத்தை விளக்கிக் கூறவும். பிதா, குமாரன் இரண்டு நபர்களாயில்லையென்றால், எப்படி குமாரன் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருந்து, பிதாவினிடத்தில்…பரிந்து பேச முடியும்-? 435 நல்லது, அன்புக்குரிய நண்பனே, அது ஒரு…அது—அது ஒரு வெளிப்பாடாயுள்ளது. இயேசு, “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்றார், அப்படியானால் எப்படி அவர்கள் இருவராயிருக்க முடியும்-? புரிகிறதா-? இப்பொழுது, அவர்கள் இருவரல்ல. 436 நான் அதை விளக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு முறை ஒரு ஸ்திரீ என்னிடத்தில், “நீரும் உம்முடைய மனைவியும் இருவராயிருக்கிறீர்கள், அதே சமயத்தில் நீங்கள் ஒன்றாயிருக்கிறீர்கள்” என்று கூறினாள். 437 அப்பொழுது நான், “ஆனால், தேவன் மற்றும் குமாரன் என்பது அதிலிருந்து வித்தியாமாயுள்ளது, பாருங்கள்” என்றேன். மேலும் நான், “சரி” என்று கூறி, “நீங்கள் என்னைக் காண்கிறீர்களா-?” என்று கேட்டேன். அதற்கு அவள், “ஆம்” என்றாள். அப்பொழுது நான், “நீங்கள் என்னுடைய மனைவியைக் காண்கிறீர்களா-?” என்று கேட்டேன். அதற்கு அவளோ, “இல்லை” என்றாள். 438 அப்பொழுது நான், “அப்படியானால் பிதாவும் குமாரனும் என்பது இந்தக் கருத்திற்கு வித்தியாசமானது; இயேசு, ‘நீங்கள் என்னைக் காணும்போது, நீங்கள் பிதாவைக் கண்டுவிட்டீர்கள்’ என்றாரே” என்று கூறினேன். புரிகிறதா-? 439 பிதா, குமாரன்…பிதா சர்வ வல்லமையுள்ள யோகோவா (தேவன்) அபிஷேகிக்கப்பட்ட தேவ குமாரனாயிருந்த இயேசு கிறிஸ்து என்றழைக்கப்பட்ட ஒரு கூடாரத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார். இயேசு ஒரு மனிதனாயிருந்தார், தேவன் ஒரு ஆவியாயிருக்கிறார். தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். அவர்…அவர்…அவருடைய தனித்தன்மை, அவருடைய அமைப்பு, அவருடைய தெய்வத்துவம், அவர் என்னவாயிருந்தாலும், அவர் தேவனாயிருந்தாரே! அவர் தேவனேயல்லாமல் வேறொன்றுமாயிருக்கவில்லை. அதே சமயத்தில், அவர் ஒரு மனிதனாயிருந்தார். அவர் ஒரு மனிதனாய், தேவன் உள்ளே வாசம் செய்த ஒரு வீடாயிருந்தார். அது உண்மை, அவர் தேவனுடைய வாசஸ்தலமாயிருந்தார். 440 இப்பொழுது, உங்களுக்கு அதன் பேரிலான சில வேதவாக்கியங்கள் தேவையானால்…சகோதரன் நெவில், நீர் எனக்காக மாற்கு 16:42—ஐ எடுத்தால் நலமாயிருக்கும். சகோதரி உட், நீங்கள் எனக்காக எபேசியர் 1:20-ஐ எடுங்கள். வேறுயாரேனும் ஒரு வேதாகமத்தை வைத்துள்ளீர்களா-? நல்லது, உங்களுடைய கர்த்தை உயர்த்துங்கள். சகோதரி ஆர்னால்ட், நீங்கள் அங்கே பின்னால் ஒன்றை வைத்துள்ளீர்களா-? சரி, நீங்கள் எனக்கு அப்போஸ்தலர் 7:55ஐ எடுங்கள். சரி. மாற்கு 14:62, சகோதரன் நெவில். சகோதரி உட் அவர்களுடையதோ எபேசியர் 1:20 ஆகும்; அப்போஸ்தலர் 7:55, சகோதரி ஆர்னால்ட். 441 சரி, சகோதரன் நெவில், நீங்கள் அதை எடுத்து வைத்துள்ளீர்களா-? சரி, இப்பொழுது வாசியுங்கள்: [சகோதரன் நெவில் வாசிக்கிறார், “அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷ குமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.”—ஆசி.] 442 சரி, இப்பொழுது அங்கே முதல் சொற்றொடரைக் கவனியுங்கள். இயேசு, “நான் அவர் தான்” என்றார். 443 “நான் அவர்தான்,” நான் அவர்தான் என்பது யாராயிருந்து-? உலகத்தில் எந்த மனிதனுமே அதை ஒருபோதும் வியாக்கியானிக்க முடியவேயில்லை. கிரேக்க வேதாகம அகராதி போன்றவற்றை வாசிக்கிற நீங்களும்…கூட எந்த ஒரு மனிதனாலும் அதை சேர்த்து உச்சரித்துக் கூற முடியவில்லை…அது J—v—h—u என்று உள்ளது. எபிரேய வேதபண்டிதர்களாலும் அதை ஒருபோதும் உச்சரிக்க முடியவில்லை. அங்கே அந்த எரிகிற முட்செடியில், அந்த நாளில் அவர் மோசேயை சந்தித்தபோது, அது J—v—h—u—என்பதாயிருந்தது. ஆகையால் அவர்கள் அதை “J—o—h, யேகோவா” என்று உச்சரித்தனர், ஆனால் அது “யேகோவா” என்பதாய் இருக்கவில்லை. J—v—h—u, பாருங்கள், எவருமே அறியார். 444 நீங்களோ, “பரவாயில்லை, மோசேயினாலும் அதை உச்சரித்துக் கூற முடியவில்லையா-?” என்று கேட்கலாம். 445 மோசே, “என்னை அனுப்பினது யார் என்று நான் கூற முடியும்-?” என்று கேட்டான். 446 அதற்கு அவர், “இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று கூறு. இருக்கிறவராக இருக்கிறேன்” என்றார். 447 இப்பொழுது கவனியுங்கள். நான் இருக்கிறேன் என்பது ஒரு நிகழ்காலமாயுள்ளது, “நான் இருந்தேன்” அல்லது “நான் இருப்பேன்” என்பது அல்ல. நான் இருக்கிறேன். இப்பொழுது, அவர், “நான் இருக்கிறேன் என்ற இது எல்லா தலை முறையினூடாகவும் ஒரு ஞாபகச் சின்னமாக இருக்கும்” என்றார். 448 இப்பொழுது இயேசு பண்டிகை நாளிலே அங்கு நின்றதை கவனியுங்கள். அவர்கள், “நீ பைத்தியம் என்பதை இப்பொழுது நாங்கள் அறிவோம்” என்றனர். சரியான வார்த்தைகளில் கூறினால், “நீ பித்து பிடித்தவன்” என்றனர். (பித்து என்றால் “பைத்தியம்” என்பதாகும்). “நீ பைத்தியம் பிடித்தவன் என்பதை நாங்கள் அறிவோம். நீ ஒரு சமாரியன், உனக்கு பிசாசு பிடித்துள்ளது” என்றனர். (பரிசுத்த யோவான் 6-வது அதிகாரம்) அவர்கள், “இப்பொழுது, நீ…ஆபிரகாமைக் கண்டேன் என்று கூறுகிறாயே, உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே-?” என்று கேட்டனர். (அவர் தன்னுடைய வயதில் சற்று வயோதிகரைப் போன்று காணப்பட்டிருக்கலாம், ஆனால் அவர் முப்பது வயதுடையவராய் மட்டுமே இருந்தார், ஆனால் அவருடைய ஊழியத்தின் நிமித்தம் அவ்வாறு வயோதிகரைப் போன்றிருந்திருக்கலாம்.) அப்பொழுது அவர்கள், “ஐம்பது வயது நிரம்பாத ஒரு மனிதனாயிருக்கிற நீ ‘ஆபிரகாமைக் கண்டதாக கூறுகிறாயே-?’ என்று கேட்டனர். மேலும் நீ பைத்தியம் பிடித்தவன் என்பதை இப்பொழுது நாங்கள் அறிவோம்” என்றனர். பார்த்தீர்களா-? அதற்கு அவரோ, “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்றார். 449 “நான் இருக்கிறேன்,” அவர் நான் இருக்கிறேன் என்ற மகத்தானவராக இருந்தார். இங்கே அவர் இந்த யூதர்களிடத்தில் மீண்டும், பாருங்கள், “நான் இருக்கிறேன்! என்று கூறிக்கொண்டிருக்கிறார். வலது பாரிசத்தில் வீற்றிருக்கிற நான் வருவதை நீங்கள் காணும்போது…” அது சரிதானே-? 450 சகோதரனே அதை மீண்டும் வாசியுங்கள். [சகோதரன் நெவில் வாசிக்கிறார், “மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்.”—ஆசி.] 451 சகோதரி உட், எபேசியர் 1:20 என்ற வசனமா என்று கேட்கிறாள்-?—ஆசி.] ஆம், அம்மா. [சகோதரி உட் வாசிக்கிறாள், “தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே…அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,”—ஆசி.] 452 சரி, சகோதரியே உங்களுடையதை வாசியுங்கள். பாருங்கள், அது அதேவிதமாக உள்ளது: [சகோதரி ஆர்னால்ட் வாசிக்கிறார், “அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு:”—ஆசி.] 453 இப்பொழுது, நீங்கள் பாருங்கள், தேவன் ஒரு பெரிய வலது கரத்தை உடையவராயிருந்திருக்க முடியாது, பாருங்கள், இயேசுவானவர் அவருடைய வலது பாரிசத்தில் நிற்கிறார். வலது பாரிசம் என்பது “அதிகாரத்தை” பொருட்படுத்துகிறது. புரிகிறதா-? உதாரணமாக, நான் சபை அதிகாரம் முழுவதையும் உடையவனாயிருந்தாலும் அல்லது நான் ஒரு விதமான ஒரு பேராயராயிருந்தாலும், சகோதரன் நெவில் என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு, அவர் என்னுடைய வலக்கையாயிருப்பார். பாருங்கள், அதன் பொருள் அவர்…அவர் என்னுடைய வலக்கரமாய் இருப்பார் என்பதேயாகும். 454 இப்பொழுது, இயேசு வலது பாரிச வல்லமையில் இருக்கிறார். இப்பொழுது, அவர் அவ்வண்ணமாய்க் கூறுகிறார், இங்கே எபேசியரில், அவர் அதை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தபோது, அவர் வலது பாரிசத்தின் வல்லமையில் இருக்கிறார். “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்” (அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர் கூறினார்) “எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் உடையவனாயிருக்கிறேன். ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார்.” 455 “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்.” அது எங்கே…அவரைத் தவிர மற்றொரு தேவன் அங்கேயிருந்தால், அவர் வல்லமை அற்றவராயிருப்பாரே. பாருங்கள், அங்கே மற்றொரு தேவனே இருக்க முடியாது. “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்” அவருடைய கரத்தில் இருக்கிறது. ஆகையால், நீங்கள் பாருங்கள், “அவர் வலதுபாரிசத்தில் நின்று கொண்டிருக்கிறார்,” (அந்த நபர் கேள்வி கேட்டுள்ளது போல), அதனை அது பொருட்படுத்துகிறதில்லை… 456 இப்பொழுது பாருங்கள்! சரீரம்…தேவன் ஆவியாயிருக்கிறார். ஆம், எத்தனைபேர் அதை புரிந்து கொள்கிறீர்கள்-? அப்படியானால், “ஆமென்” என்று கூறுங்கள். தேவன் ஆவியாயிருக்கிறார், இயேசு மனிதனாயிருக்கிறார், இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாயிருந்தார். இயேசு…நாம் ஒரு போதும் தேவனைப் பார்க்க முடியாது, பாருங்கள், அவர் ஆவியாயிருக்கிறார். உங்களால் ஆவியைப் பார்க்க முடியாது. “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை.” எந்த மனிதனாலும் தேவனைக் காண முடியாது. 457 நான் இதைக் கூறுவேனாக, அதாவது, “நீங்கள் என்னை ஒருபோதும் கண்டதில்லை.” நீங்கள் உங்கள் ஜீவியம் முழுவதிலுமே என்னை ஒருபோதும் கண்டிருக்கவில்லை. நீங்கள் என்னை ஒருபோதும் காணவேமாட்டீர்கள். அது உண்மை. இந்த நபரை அறிவிக்கிற இந்த சரீரத்தையே நீங்கள் காண்கிறீர்கள், அது இங்கே உள்ளே இருக்கிறது. இப்பொழுது, இந்த சரீரம் நித்திய ஜீவனை உடையதாயிருக்கவில்லை, ஆனால் ஆவி நித்திய ஜீவனை உடையதாயிருக்கிறது. இந்த சரீரம் திரும்பிப் போய்விடும், ஆனால் அது இதில் உள்ளதைப் போன்ற ஒத்த தன்மையாய் மீண்டும் வரும், அதாவது ஒரு கோதுமை மணியானது நிலத்திற்குள் செல்வது போன்றேயாகும். கிறிஸ்தவ மார்க்கம் உயிர்த்தெழுதலின் பேரில் சார்ந்தாயுள்ளதேயன்றி அதற்குப் பதிலாக வேறொன்றை மாற்றுவது அல்ல. உயிர்த்தெழுதல்; இயேசு மரித்து கீழே சென்ற விதமாகவே, அதேவிதமாகவே இயேசு திரும்பி வந்தார். நீங்கள் சிகப்பு தலையினையுடையவராய் மரித்து கீழே சென்றால், நீங்கள் திரும்பவும் சிகப்பு தலையினையுடையவராகவே வருவீர்கள்; நீங்கள் கறுப்புத்தலையினையுடையவராய் மரித்து கீழே சென்றால், நீங்கள் கறுப்புத் தலையோடு திரும்ப எழுப்பி வருவீர்கள். பாருங்கள், அது ஒரு உயிர்த்தெழுதலாய் உள்ளது. 458 நீங்கள் புசிக்கும்போது…நான் அதைக் குறித்து மருத்துவரிடத்தில் கேட்டேன், அண்மையில் நான், “ஏன்…நான் பதினாறு வயதாயிருந்தபோது…ஒவ்வொரு முறையும் நான் புசிக்கும்போது, நான் என்னுடைய ஜீவனை புதுப்பித்துக் கொள்கிறேனா-?” என்று கேட்டேன். 459 அதற்கு அவர், “அது உண்மையே” என்றார். 460 நீங்கள் ஒவ்வொரு முறையும் புசிக்கும்போது, புதிய—புதிய உயிரணுக்களை உள்ளே எடுத்துக் கொள்கிறீர்கள்…மாம்சம் அதை உண்டு பண்ணுகிறது…இல்லை ஆகாரம் இரத்த அணுக்களை உண்டுபண்ணுகிறது, அந்த இரத்த அணுக்கள் உங்களை பலமுள்ளவர்களாக்குகிறது. அந்த விதமாகத்தான் நீங்கள் ஜீவிக்கிறீர்கள். அதன்பின்னர், நீங்கள் உயிர் வாழ்வதற்காக ஏதோ ஒன்று ஒவ்வொரு முறையும் மரிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று மரிக்கிறது: நீங்கள் இறைச்சியை புசிக்கும்போது பசு மாடு மரித்துவிடுகிறது; அல்லது நீங்கள் எதைப் புசித்தாலும்; மீன் மரிக்கிறது; அல்லது ரொட்டியை உண்டுபண்ண உருளைக்கிழங்கு மரித்துவிடுகிறது;…ஜீவனின் ஒவ்வொரு ரூபமும்; நீங்கள் மரித்த பொருளினூடாக மாத்திரமே உயிர் வாழ முடியும். 461 ஏதோ ஒன்று மரித்த காரணத்தினால் மாத்திரமே உங்களால் நித்தியமாக வாழ முடியும், அது இயேசுவாகும். நீங்கள் சபையை சேர்ந்து கொண்ட காரணத்தினால் அல்ல, நீங்கள் ஞானஸ்நானம்பண்ணப்பட்ட காரணத்தினால் அல்ல, நீங்கள் கிறிஸ்தவமார்க்கத்தை ஒப்புக் கொண்ட காரணத்தினால் அல்ல; உங்களுக்காக சிந்தப்பட்ட இரத்தமான…இயேசு கிறிஸ்துவின் ஜீவனை நீங்கள் ஏற்றுக்கொண்ட காரணத்தினாலேயாம், நீங்கள் அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டீர்கள். 462 இப்பொழுது, கவனியுங்கள், நான் இதைக் கேட்கிறேன். நான் இதை உங்களிடத்தில் கேட்க விரும்புகிறேன். இதை நோக்கிப் பாருங்கள், இது அழகாயுள்ளது. ஒரு கால் நான் அதன்பேரில் இங்கே இதற்கு முன் பிரசங்கித்திருக்கலாம் (எனக்குத் தெரியவில்லை); எங்கும் பிரசங்கிக்கும்போது, நீங்கள் ஒரு…குறிப்பிட்ட இடங்களில் என்ன கூறினீர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடுவீர்கள். ஆனால் அது ஏனென்றால், அப்பொழுது… 463 இப்பொழுது, நான் நினைக்கிறேன், சகோதரி ஸ்மித்…எனக்குத் தெரிந்த சகோதரன் பிளீமேன் அங்கு பின்னால் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. திரிபேனாள், அவள் ஒரு சிறு பெண்ணாய் இருந்தபோது, அவளை எனக்கு நினைவிருக்கிறது. உங்களுக்கும் என்னை நினைவிருக்கும், நான் முன்பெல்லாம்…சற்று குட்டையாக, பருமனாக, கறுமையான வளை—வளைவான முடியினையுடையவனாயிருந்தேன். நான் முன்பு குத்துச் சண்டையிடுவது வழக்கம். ஓ, அப்பொழுது உலகத்திலேயே நான் ஒரு பகட்டான ஆடம்பரமான மனிதன் என்றே என்னைக் குறித்து எண்ணிக்கொண்டேன். “ஓ”, நான், “யாருமே என்னை அடித்துவிட முடியாது. இல்லை, ஐயா” என்று எண்ணியிருந்தேன். ஆனால் நான்—நான் அதன் பேரில் ஏமாற்றம் கொண்டேன். நீங்கள் பாருங்கள். ஆனால் நான்…இப்பொழுது, நான் அப்படியே, “ஓ, என்னே” என்று எண்ணிப்பார்த்தேன். மேலும் நான், “நீங்கள் இந்தப் பொருளை என்னுடைய முதுகின்மேல் வைத்தால், நான் அதனோடு வீதியில் நடந்து சென்றுவிடுவேன்” என்று எண்ணியிருந்தேன். நிச்சயமாகவே, எந்தக் காரியமும் என்னைத் தொல்லைபடுத்தவில்லை. ஒவ்வொரு முறையும் நான் சாப்பிடும்போது, நான் எல்லா நேரத்திலுமே பெரியவனாகவும், பலமுள்ளவனாகவும் ஆனேன். ஒவ்வொரு முறையும் நான் உள்ளே…புதிய ஜீவனைப் பெற்றுக் கொள்வேன். நான் இன்றைக்கு செய்வதுபோன்றே நான் முட்டை கோஸ், உருளைக்கிழங்கு, அவரை, இறைச்சி முதலியனவற்றைச் சாப்பிட்டேன். நான் எல்லா நேரத்திலும் பலமுள்ளவனாகவும், பெரியவனாகவும் ஆனேன். நான் ஏறக்குறைய இருபத்தைந்து வயதுடையவனாய் இருந்த போது… 464 நான் அப்பொழுது புசித்ததைவிட இப்பொழுது நன்றாக புசிக்கிறேன், உங்கள் எல்லாருக்கும் என்னைத் தெரியும், அவ்வாறு புசிப்பதும் தெரியும், என்னால் இப்பொழுது நன்கு புசிக்க முடிகிறது, நாம் எல்லோருமே நன்றாக புசிக்கிறோம். ஆனால் சகோதரன் ஈகன் இது ஏன் இவ்வாறு உள்ளது-? ஆகையால் நான் இன்னமும் நல்ல உணவினை அப்பொழுது புசித்ததைவிட, மேலான ஊட்டச்சத்துக்களையும் மற்றுமுள்ள ஒவ்வொன்றையும் புசித்துக்கொண்டிருக்கிறேன்…நான் அதிகமாக புசித்தாலும், நான் படிப்படியாக தளர்வுற்றுப்போகிறேனே. இப்பொழுது நான் குனிந்த—தோள்பட்டைகளை உடைய வயோதிகனாய், வழுக்கைத் தலையனாய், நரைமுடியாக மாறி, கைகள் சுருக்கங்கொள்ள, முகத்தில் குழிவிழுந்து, தோள்பட்டைகள் தொங்கிக் கொண்டிருக்க, ஒவ்வொரு நாள் காலையும் எழுந்திருக்க கடினமானவனாகவும் ஆகிக்கொண்டு வருகிறேன்,…ஓ, என்னே. அது ஏன் இப்படியாகிறது-? நான் ஒவ்வொரு முறை புசிக்கும்போதும் நான் என்னுடைய ஜீவனை புதுப்பித்தாலும், ஏன் இப்படியாகிறது-? 465 நான் ஒரு கூஜாவிலிருந்து ஒரு கண்ணாடி குடுவைக்குள்ளாக தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தால், அப்பொழுது அதே தண்ணீர் பாதியளவு தான் நிரம்புகிறது, அப்பொழுது தண்ணீரின் அளவு உயருவதற்கு பதிலாக அதேத் தண்ணீர் மாறிமாறி ஊற்றும்போது எல்லா நேரத்திலுமே குறையத் துவங்குகிறது; நான் உள்ளே அதிகமாக ஊற்றினால், அது வேகமாகக் குறையத் துவங்குகிறது. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. உங்களால் அதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாது, இந்த புத்தகம் மாத்திரமே தேவன் அதை நியமித்திருக்கிறார் என்று நிரூபிக்கும்படியானதாயுள்ளது; அது ஒரு நியமனமாய் உள்ளது, தேவன் நம்முடைய வளர்ச்சியைக் கண்டார். 466 வயோதிக மனிதராகிய உங்களைத்தான், வயோதிக ஸ்திரீகளாக உங்களைத்தான், உங்களில் சிலருடைய—உங்களுடைய கணவன்மார்கள், உங்களுடைய மனைவிகள் மரித்துப் போயிருக்கலாம். அது—அது எந்தக் காரியத்தையும் தொல்லைப்படுத்துகிறதில்லை. அல்லேலூயா. அவர்கள் முற்றிலுமாக காலத்தின் திரைக்கு அப்பால் கடந்துபோய் காத்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் உங்களோடிருக்க வாஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை, நிச்சயமாகவே அவர்கள் அவ்வாறிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும் என்று வாஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களோ, “ஆண்டவரே, எது வரைக்கும்-?” என்று சத்தமிட்டு கூப்பிட்டார்கள் என்று வேதம் உரைத்துள்ளது. புரிகிறதா-? அவர்கள் தங்களாகவே அறிந்து கொள்ளும் நிலையில் இல்லை. 467 தேவன் நம்மை ஒருபோதும் தூதர்களாக உண்டாக்கவில்லை, அவன் நம்மை மனிதனாகவும் மனுஷியாகவுமே உண்டாக்கினார். நாம் எப்பொழுதுமே புருஷராகும், ஸ்திரீயாகவுமேயிருப்போம், ஏனென்றால் நாம் தேவனுடைய சொந்த ஞானத்தின் ஒரு—ஒரு உற்பத்தியாயிருக்கிறோம். நாம் எப்பொழுதுமே புருஷரும், ஸ்திரீகளுமாகவே இருக்க முடியும். 468 ஆனால் இது என்ன செய்கிறது-? பாருங்கள், நீங்கள் கணவனோடு பீடத்தண்டை நடந்து சென்று, நாம் ஒருவரையொருவர் ஏற்றுக் கொண்டு, சட்டப்படியான மணம்புரிந்த மனைவியாயிருக்கும்படி தேவனுடைய கிருபையினால் இந்த பரிசுத்த விவாகத்தில் ஒன்று சேர்ந்து வாழ நீங்கள் அளித்த உங்களுடைய சாட்சியையும் நீங்கள் கூறின உங்களுடைய வாக்குறுதியையும் ஒருகால் நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். நீங்கள் அறிந்துள்ள, நீங்கள் இருவருமே கவனிக்கத் துவங்கின முதல் காரியம். அவர் நேராக, பளபளப்பான தலை முடியோடு இருந்ததும், அம்மா, அவள் அழகாகவும், சிறு பழுப்பு நிறக் கண்களோடு அல்லது நீல நிறக் கண்களோடு அல்லது அது என்னவாயிருந்ததோ அதைப் பார்க்கிறீர்கள். ஓ, நீங்கள் எப்படியாய் அவளை நோக்கிப் பார்த்தீர்கள். நீங்கள் வெளியே நடந்து போய், நீங்கள் தந்தையை பார்த்து, “இப்பொழுது அவர்களுடைய தோள்பட்டைகள் நேராக இருப்பதைப் பார்த்தீர்கள்.” கொஞ்சங்கழித்து அவைகள் தொங்கத் துவங்குகின்றன. அம்மாவோ நரைத்த தலையையுடையவளாகி, முடக்குவாதம் போன்றவை உண்டாக, கொஞ்சங்கழித்து அவள் மரித்துப் போனாள், அல்லது அவர் மரித்துப் போனார். 469 அது என்னவாயிருந்தது-? நீங்கள் அங்கே நின்று கொண்டிருந்ததை தேவன் கண்டு, அவர், “அதுதான் இது, அந்தவிதமாகத்தான் நீ எனக்கு வேண்டும்” என்றார். சரி, மரணமே, நீ வா, ஆனால் நான் உன்னை அனுமதிக்கும் வரை உன்னால் அவர்களை எடுத்துக்கொள்ள முடியாது. 470 ஓ, ஓ நான் யோபுவைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன். ஆம், தேவன் கீழ்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார், தேவன் யோபுவை நேசித்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். (சாத்தானால் உன்னை எடுத்துக் கொள்ள முடியாது என்பதை கவனி.) அவர், “நீ அவனை உன்னுடைய கரங்களில் எடுத்துக் கொள், ஆனால் நீ அவனுடைய ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொள்ளாதே” என்றார். 471 அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முதல் காரியம் என்னவென்றால் தோள்பட்டைகள் குனியத் துவங்கி, கொஞ்சங்கழித்து நீங்கள் மரித்துப் போய்விடுவீர்கள். என்ன சம்பவித்ததாயிருந்தது-? 472 இப்பொழுது உயிர்த்தெழுதலில் அங்கே மரணத்தின் அறிகுறிகள் என்ற ஒரு காரியமும் இருக்காது. அங்கே இந்த பூமிக்குரிய அறிகுறிகளின் ஒரு காரியமும் இருக்க முடியாது, அதைக்குறித்து என்னவென்றால்…பாருங்கள், நீங்கள் தேவனுடைய சித்தத்தினால் வளர்ந்து கொண்டிருந்தீர்கள், நீங்கள் ஜீவனை உடையவராயிருந்தீர்கள். அப்பொழுது மரணம் உள்ளே வந்து உங்களை கீழே கொண்டு செல்கிறது. அதே ஆகாரத்தையும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் புசித்து, அதே விதமான தண்ணீரையே பருகி, ஒவ்வொன்றையும் செய்கிறீர்கள், ஆனாலும் மரணம் உள்ளே வருகிறது. ஆனால் காட்சியோ ஏற்கெனவே அமைக்கப்பட்டாயிற்று. அல்லேலுயா. உயிர்த்தெழுதலில் நீங்கள் மீண்டும் ஜீவனோடிருப்பீர்கள். அங்கே மரணமே இருக்காது, அல்லது மரணத்திற்கொத்த தன்மையே இருக்காது அல்லது வயோதிகமோ அல்லது முடமோ அல்லது வேறெந்தக்காரியமோ இருக்காது. நாம் அவருடைய சாயலில் அழிவில்லாமல், என்றென்றுமாய் பரிபூரணப்பட்டவர்களாய் நிற்போம். அல்லேலூயா. ஓ, நான்…அது எந்த நபரையும் சத்தமிடச் செய்யும், விசேஷமாக நீங்கள் என்னுடைய வயதை அடையும் போது சத்தமிடச் செய்யும். 473 என்னுடைய வயதில் நீங்கள் அதைக் குறித்து எப்போதும் இருந்ததைக் காட்டிலும் அதிகமாக சிந்திப்பீர்கள் என்றே நான் யூகிக்கிறேன். நீங்கள் அந்த மாதிரியான மாறும் நிலையில் இருக்கிறீர்கள், நீங்கள் பாருங்கள்…நீங்கள், “இதைக் குறித்தெல்லாம் என்ன-? நான் என்ன செய்திருக்கிறேன்-?” என்று வியப்புறத்துவங்குகிறீர்கள். நான் இங்கே திரும்பி கீழ் நோக்கிப் பார்த்து, “என்னே நன்மை: கர்த்தாவே, அவர் எங்கே போயிருக்கிறார்-? இதோ நான் நாற்பத்தியெட்டு வயதுடையவனாய் இருக்கிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் நான் அரை நூறு வயதினை அடைவேன், வ்வூயு, நான் மாத்திரம்…” என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். 474 நான் ஆதாயம் செய்துள்ள ஒரு சில ஆத்துமாக்களை அப்படியே நோக்கிப் பார்க்கிறேன். நான் இன்னும் கோடா கோடி ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய வேண்டும். தேவனே எனக்கு உதவி செய்யும். நான் ஒரு விடுமுறைக் காலத்தில் கூட வீட்டிற்கு வருவதன் பேரில் நானே என்னைக் குறித்து வெட்கமடைகிறேன். அதாவது, “ஓ, அறுப்புக்கு வயல் நிலங்கள் விளைந்திருக்கின்றன, வேளையாட்களோ கொஞ்சம். கோடிக்கணக்கானோர் பாவத்திலும் அவமானத்திலும் ஒவ்வொரு நாளும் மரித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய கூக்குரலுக்கு செவிக்கொடுக்க வேண்டும்” என்பதை சிந்தித்துப் பாருங்கள். நான் அங்கே இரவிலே படுக்கைக்குச் செல்லும்போது, அப்பால் உள்ள தேசத்தில் உள்ள அந்த ஏழ்மையான அஞ்ஞானிகளின் கூக்குரலைக் கேட்டேன். நான் ஆகாய விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது எப்படியாய் ஆயிரக்கணக்கில் அவர்கள் வந்து, இயேசு கிறிஸ்துவின் கதையைக் கேட்பதற்கு என்னை பின் தொடர்ந்து வந்து இழுத்தபோது, அங்கே அவர்களை பின்னால் தடுத்த நிறுத்த அவர்கள் இராணுவத்தை வைக்க வேண்டியதாயிருந்தது. 475 நாமோ இங்கே கெஞ்சி, செய்தித்தாளில் விளம்பரம் செய்து, மற்றுமுள்ள ஒவ்வொன்றையும் செய்து, அவர்கள் அமருவதற்கு மிக அருமையான இடங்களை ஏற்பாடு செய்து, மிகச் சிறந்த பொழுதுபோக்கிற்காக அருமையான பாடலை பாடச் செய்தாலும், அவர்கள் வந்து, “ஓஓஓஓ, பரவாயில்லை, அது என்னுடைய விசுவாசத்தை சேர்ந்திராவிடினும், அது சரியாயிருந்தது என்று நான் யூகிக்கிறேன்” என்பார்கள். 476 ஓ, என்னே, அது எவ்வளவு—எவ்வளவு—எவ்வளவு காலம் நீடித்திருக்க முடியும்-? அதுவல்ல…இது சரியல்ல. நாமோ இங்கே கோடான கோடி டன் எடையுள்ள ஆகாரத்தை குப்பைத் தொட்டியில் கொட்டுகிறோம், அந்த ஜனங்களோ அதை ஏற்றுக் கொள்ள மகிழ்ச்சியடைவர்கள். நம்மைப் போன்றே அவர்களும் இப்புவியின் சிருஷ்டிகளாயிருக்கிறார்கள். என்னே, நாம்…நல்லது, அது நீண்ட காலத்திற்கு அந்தவிதமாக செயல்பட முடியாது. 477 சரி, இப்பொழுது, பிதா யாராயிருக்கிறார்-? பிதாவும் குமாரனும் ஒன்றாயிருக்கிறார்கள்.-! யோவான் 5:7-ல் கவனியுங்கள், அது, “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, (அது குமாரனாயுள்ளது)…பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” என்று உரைத்துள்ளது. 478 “பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம்” அந்த மூன்று மூலக்கூறுகளும் கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து வந்தன. அவர்கள் அவருடைய விலாவில் உருவக் குத்தினபோது: தண்ணீர் வெளியே வந்தது, இரத்தம் வெளியே வந்தது, “உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புக்கிறேன்” என்றார். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது, அதுவே அந்த மூன்று மூலக்கூறுகள். இந்த மூன்றும் ஒன்றாயிருக்கவில்லை, ஆனால் அவைகள் ஒருமைபட்டிருக்கின்றன. 479 பிதா, குமாரன், பரிசுத்த ஆவி; 1-யோவான் 5:7, “இம்மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள்” என்று கூறுகிறது. 480 “ஜலம், இரத்தம், ஆவி ஒருமைபட்டிருக்கின்றன.” ஒன்றாயல்ல, ஆனால் ஒருமைபட்டிருக்கின்றன. ஆகையால் பிதா…சரீரமானது செய்ய முடிந்த ஒரேக் காரியம், தேவன் தம்மையே காண முடிந்தபோது, அதாவது இந்த சரீரம் கடந்து சென்ற தண்டனையினூடாக பார்க்கும் போது, அங்கே இடைவெளி இருந்தது…அங்கே இடைவேளை இருக்கிறது, நீங்கள் பாருங்கள். அப்பொழுது அங்கே அந்த இரத்தமானது அவருக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையே நிற்கிறதை அவர் காண்கிறார். இதோ அவருடைய வார்த்தை, “அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று உரைத்தது. இங்கே இயேசு, “நான்…ஆனால் நான் அவர்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டேன். பாருங்கள், நான் அவர்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டேன்” என்றார். 481 அன்றொரு இரவு அங்கே அந்த அறையில் உண்மையாக மோசமாக இருந்த அந்த ஸ்திரீயைக் குறித்த தரிசனத்தை நான் கண்டபோது கூறின என்னுடைய கதை நினைவிருக்கிறதா-? நான் அவளை கடிந்து கொண்டிருந்தேன், “தேவனே, நீர் ஏன் அந்த இடத்தையே அழித்துப் போடக்கூடாது-?” என்றேன். பாருங்கள், அப்பொழுது அவர் எனக்குக் காண்பித்தார். அப்பொழுது நான் அவளிடம் நடந்து சென்று, என்ன சம்பவித்திருந்தது என்று அவளிடம் கூறினேன். இப்பொழுது, இது என்னுடைய கடைசி கேள்வியாயுள்ளது. கேள்வி:64. வேதவாக்கியங்களின்படி சபையின் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு முன்னர் அந்த யூதர்கள்… கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வார்கள் என்று நீர் நினைக்கிறீரா-? 482 நான்—நான்—நான் உண்மையாகவே சபையின் எடுத்துக் கொள்ளப்படுதலை…விசுவாசிக்கிறேன். இது என்னுடைய சொந்த கருத்தாயுள்ளது, பாருங்கள். நமக்கு நேரமிருந்தால், நாம் அதனூடாக செல்லலாம், ஆனால் இப்பொழுது ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது. பாருங்கள், யூதர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலே அவரை ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது நினைவிருக்கட்டும், எனவே அந்த நபர் இதை அறிந்து கொள்வார், நம்முடைய கண்கள் குருடாக்கப்பட்டன…இல்லை நாம் நம்முடைய பார்வையைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டன. வேதவாக்கியங்கள் அதைக் குறித்து உரைக்கின்றன என்பதை எவரும் அறிவர். அது சரியா-? அதாவது நம்முடைய…நாம் குருடாக்கப்பட்டோம்…நாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்படி யூதர்கள் குருடாக்கப்பட்டனர் என்று பவுல் நமக்குச் சொல்லுகிறான். புரிகிறதா-? நாம் புத்திர சுவிகாரத்தினாலே அந்த மரத்திற்குள்ளாக ஒட்டவைக்கப்படிருக்கிற காட்டொலிவ மரமாயிருக்கிறோம். 483 இப்பொழுது இதோ என்னுடைய கருத்து, நான் அதை அப்படியே உங்களுக்குக் கூற போகிறேன்…அவர்கள், “நீர்…அவ்வாறு நினைக்கிறீரா-?” என்று என்னைக் கேட்கிறார்கள். இப்பொழுது இந்தவிதமாகவே இது சம்பவிக்கும் என்று நான் நினைக்கிறேன். எனக்குத் தெரியாது. அது எப்போது என்னவாயிருந்தாலும், தேவனுடைய கிருபையினாலும், அவருடைய இரக்கத்தினாலும் நாம் அங்கே இருப்போம் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்: பாருங்கள், அவருடைய கிருபையின் மூலமேயாகும், அது என்னவாயிருந்தாலும் சரி. என்னால் அதைக் கணித்துக் கூற முடியாமலிருக்கலாம், ஆனால் இந்த விதமாகத்தான் என்று நான் நினைக்கிறேன். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். புறஜாதியாருடைய காலம் இப்பொழுது முடிவுற்றுக் கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் முடிவில் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். 484 இப்பொழுது யூதர்கள்: இங்கே யூதர்களுக்கு இரண்டு காரியங்கள் எப்பொழுதுமே அநியாயமாக்கப்பட்டு வந்துள்ளன; அவர்கள் குருடாய் இருந்து வருகின்றனர். அவர்களால் அதைப் பார்க்க முடியவில்லை; ஏனென்றால் புறஜாதியார், ஏனென்றால் ஒரு காரியம், அநேக முறை… 485 சகோதரி ஸ்மித் அவர்களே, நான் பென்டன் துறை முகத்தில் ஒரு யூதனிடத்தில் பேசினபோது, அவன் என்னிடத்தில் என்னக் கூறினான் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா-? (அங்கே இருந்த அந்த இஸ்ரவேலரின் இடங்களில்…அங்கே அந்த இஸ்ரவேலரின் இடங்களில் ஒன்று) அந்த கேள்வி ஒரு குருட்டு மனிதனின் சுகமளித்தலைப் பற்றியதாயிருந்தது. அப்பொழுது அவர், “நீர்…யூதனுக்கு துண்டித்து…நீர் தேவனை மூன்று துண்டிகளாக துண்டித்து ஒரு யூதனுக்கு அளிக்க முடியாது; அவனிடத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக அளிக்க முடியாது” என்றார். மேலும், “நீர் அதை ஒரு யூதனிடத்தில் அளிக்க முடியாது, நாங்கள் விக்கிரகாராதனைக்காரர்கள் அல்ல” என்றார். அதனைத் தொடர்ந்து, “நாங்கள் ஒரே தேவனில் விசுவாசங் கொண்டிருக்கிறோம்” என்றார். புரிகிறதா-? 486 நீங்கள் பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்த ஆவியாகிய தேவன் என்று தேவனை மூன்றாக்குகிறீர்கள்; நீங்கள் நிச்சயமாகவே அங்கே ஒரு யூதனை குருடாக்குகிறீர்கள், ஏனென்றால் அவன் அதை நன்கு அறிந்துள்ளான். அவன் அதைவிட நன்கு அறிந்துள்ளான். விக்கிரகாராதனை உள்ளது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அது உங்களை ஒரு விக்கிரகாரதைக்காரனாக்கிவிடும், நீங்கள் மூன்று தேவர்களை உடையவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் அவைகளை ஒரே தேவனாக்க வேண்டும், அது மூன்று தேவர்கள் அல்ல, அது அதே தேவனின் மூன்று உத்தியோகங்களாகும். பாருங்கள், தேவன் பிதாத்துவத்தில் ஊழியம் செய்தார். அவர் குமாரத்துவத்தில் ஊழியம் செய்தார், அவர் இப்பொழுது பரிசுத்த ஆவியின் யுகத்தில் ஊழியம் செய்கிறார். அது அதே மாறாத தேவனாகும். 487 அந்தக் காரணத்தினால்தான் நாம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட கட்டளையிடப்பட்டோம்; ஏனென்றால் ஒரு நாமத்தில் அல்ல…நாமத்தில், நாமங்களில் அல்ல; நாமங்களில் அல்ல, அல்லது பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அல்ல; ஆனால், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அல்ல.” பாருங்கள், அதே தேவன் கிறிஸ்துவாயிருப்பதை அடையாளங்கண்டு கொள்ளுதல், பாருங்கள், அது யாராயிருக்கிறது, அது வேறெந்தவிதமாயுமிருக்க முடியாது. புரிகிறதா-? வேதம்… 488 அப்படியானால் நம்முடைய வெளிப்பாடானது தவறாயிருந்தால், அப்பொழுது பேதுருவும், மற்ற அப்போஸ்தலர்களும் தவறான காரியத்தையே கற்பித்தனர் என்பதாகும், ஏனென்றால் வேதத்தில் ஒவ்வொரு நபரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். எந்த ஒரு நபரும் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்” எப்போதுமே ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை, அது ஒரு கத்தோலிக்க உபதேசம். என்னால் அதை உங்களுக்கு அவர்களுடைய சொந்த வார்த்தைகளைக் கொண்டு, அவர்களுடைய சொந்த கிரேக வேதாகம அதிகாராதியையும், மற்ற ஒவ்வொரு காரியத்தைக் கொண்டும் நிரூபிக்க முடியும். அது ஒரு கத்தோலிக்கக் கோட்பாடு, ஒரு வேதாகம உபதேசமல்ல, அல்ல. எந்த மனிதனுமே… 489 இங்கிலாந்து அரசனும் கூட இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டான். ஏறக்குறைய கடைசி அப்போஸ்தலன் மரித்த ஆறுநூறு ஆண்டுகள் கழித்தே இந்த ஞானஸ்நானம் மாற்றப்பட்டது. இங்கிலாந்து அரசன் ஞானஸ்நானம் பெற்ற அந்த சமயத்தில் அது இங்கிலாந்து என்று கூட அழைக்கப்படாமல், அது “தூதர் நிலம்” என்றே அழைக்கப்பட்டது. அதிலிருந்துதான் இங்கிலாந்து என்ற பெயர் உண்டானது. அந்த அரசன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டான். 490 அவனை மனமாற்றமடையச் செய்தது எதுவென்றால், ஒரு சிறு அடைக்கலான் குருவியாகும். எப்பொழுது…என்னால் எண்ணிப் பார்க்க முடிந்தால்…பரிசுத்த ஏஞ்சலோ அல்ல. இப்பொழுது, அவனுடைய பெயர் என்னவாயிருந்தது-? அகடாபஸ் [விளங்காத எழுத்துகள்—ஆசி.], பரிசுத்த அகடாபஸ் என்றே நான் நினைக்கிறேன். இப்பொழுது, எனக்கு அந்தப் பெயர்தானா என்று நிச்சயம் தெரியாது. ஆனால், எப்படியோ, அவன் அங்கு சென்றான், அவர்கள் இவர்களில் சிலரைப் பிடித்துக் கொண்டனர்… 491 அவர்கள் இவர்களை தூதர்கள் என்று அழைத்தனர், ஏனென்றால் அந்த ஜனங்கள் அசீரியர்கள் போன்றவர்கள், கருமை நிறமுடையவர்களாய் இருந்தனர், இந்த ஆங்கிலேயரோ நீண்ட, வெண்மையான, சுருளான தலைமுடியையுடைய இளம் பொன் நிறமான தலையை உடையவர்களாய் இருந்தனர், ஆங்கிலேயர்—சாக்சன் என்பவர்கள் நீலநிற கண்களை உடையவர்களாயிருந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அவர்கள், “இவர்கள் தூதர்களைப் போன்று காணப்பட்டனர்” என்று கூறினர். ஆகவே அவர்கள் அந்த தேசத்தையும், “தூதர் நிலம்” என்றே அழைத்தனர். 492 அப்பொழுது அங்கு கர்த்தருடைய ஊழியக்காரன் ஒருவன் சென்று அவர்களுடைய ராஜாவுக்கு பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவர்கள் ஒரு பெரிய, திறந்த கணப்படுப்பினை அமைத்திருந்தனர். நான் அண்மையில் அதைக் குறித்த சரித்திரத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சிறிய பறவை அந்த வெளிச்சத்தண்டைப் பறந்து வந்து, பின்னர் திரும்பிப் போய்விட்டது, அப்பொழுது ராஜா, “அது எங்கிருந்து வந்தது-? பின்னர் அது எங்கே சென்றது-?” என்ற கேள்வியைக் கேட்டான். புரிகிறதா-? அப்பொழுது அவன், “அந்தப் பறவை வெளிச்சத்திற்குள் வந்தது, நாம் அதைப் பார்த்தோம், பின்னர் அது மீண்டும் இருளுக்காக பறந்து சென்று விட்டது. அந்தவிதமாகவே ஒரு மனிதன் போகிறான் அல்லவா-?” என்றான். 493 அப்பொழுது பிரசங்கியார், “ஆனால் அவன் இங்கு வருவதற்கு முன்பு அவன் என்னவாயிருந்தான்-?” என்று கேட்டார், பாருங்கள். அது அந்த ராஜாவைப் பற்றிக் கொண்டது; அடுத்த நாள் காலையில் அவனும், அவனுடைய வீட்டாரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். அது உண்மை. 494 அதன் பின்னர் என்ன-? தெளிப்பு ஞானஸ்நானம் முதலில் ஒரு மனிதனுக்கு அல்லது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தது கத்தோலிக்க சபையாயிருந்தது. கத்தோலிக்க சபையே முதலில் தெளிப்பு ஞானஸ்நானத்தைக் கொடுத்தது. முதலில் தண்ணீரை ஊற்றி ஞானஸ்நானம் கொடுத்தது கத்தோலிக்க சபையாகும். பிராட்டஸ்டென் சபை எப்பொழுதுமே ஞானஸ்நானம் பண்ணப்பட்டபோது… வேதத்தில் அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீரில் மூழ்க்கு ஞானஸ்நானங் கொடுத்தனர். எல்லா இடத்திலுமே. அவர்கள் வேறு ஏதாவது வித்தியாசமாக எங்காவது செய்தார்களாக என்பதை ஒரு இடத்தில் கண்டறியுங்கள் பார்க்கலாம். 495 இப்பொழுது, இதில், இந்த மகத்தான நேரத்தில், யூதர்கள்…விசுவாசிக்க முடியவில்லை, நான் அந்த ரபீயினிடத்தில் கேட்டேன், நான், “ரபீ, தீர்க்கதரிசிகளை விசுவாசிப்பது உமக்கு கடினமானதாக இருக்குமா-?” என்று கேட்டேன். 496 அவர், “நான் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறேன்” என்றார். 497 அப்பொழுது நான், “ஏசாயா 9:6—ல், ‘நமக்கு ஒரு குமாரன் பிறப்பார்-?’ என்று அவர் எதைப் பொருட்படுத்திக் கூறினார்-? அவர் யாரைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்-?” என்று கேட்டேன். 498 அதற்கு அவர், “அவர் மேசியாவைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்” என்றார். 499 அப்பொழுது நான், “அப்படியானால் மேசியா பிறப்பாரா-?” என்று கேட்டேன். 500 அதற்கு, “ஆம், அவர் பிறப்பார்” என்றார். 501 அப்பொழுது நான், “அப்படி அவர் பிறக்க வேண்டுமானால், அவருக்கு ஒரு…அவர் ஒரு தாயை உடையவராயிருப்பாரே” என்றேன். 502 அதற்கு அவர், “ஆம், அவர் ஒரு தாயை உடையவராயிருக்க வேண்டும். அவர் ஒரு தந்தையையும் கூட உடையவராயிருக்க வேண்டும்” என்றார். 503 அப்பொழுது நான், “முற்றிலுமாக. சிவந்த சமுத்திரத்தை பிரிந்த மகத்தான யோகோவா தேவனால் மாசற்ற பிறப்பினால் இந்த குழந்தைக்கு ஒரு பிறப்பை அளிக்க முடியும் என்று விசுவாசிப்பது உமக்கு கடினமாயிருக்குமா-?” என்று கேட்டேன். புரிகிறதா-? அங்குதான் அவர் மாட்டிக் கொண்டார். 504 அவர், “ஆனால் நீங்கள் அவரை மூன்று தேவர்களாக்க முடியாது” என்றார். 505 நான், “அவர் மூன்று தேவர்களாயிருக்கவில்லை” என்றேன். மேலும் நான், “மேசியா தேவனுக்கு என்ன உறவு முறையாய் இருப்பார்-?” என்று கேட்டேன். 506 அவர், “அவர் தேவனாயிருப்பார்” என்றார். 507 அப்பொழுது நான், “இப்பொழுது நீர் அதைப் புரிந்து கொண்டீர். இப்பொழுது நீர் அதைப் புரிந்து கொண்டீர், அவர் தேவனாயிருக்கிறார்” என்றேன். அது சரியாயுள்ளது. 508 அதன் பின்னர் அவர் என்னிடத்தில் கூற முயன்றதோ, “இந்த மனிதன், இந்த நசரேயனாகிய இயேசு, ஒரு திருடனாயிருந்தார். அவர் ஒரு திருடனாயிருந்தார்” என்று கூறினார். 509 அப்பொழுது நான், “ரபீ, எப்படி அவர் ஒரு திருடனாயிருந்தார்-?” என்று கேட்டேன். 510 அதற்கு அவர் “உங்களுடைய சொந்த வேத வசனங்களே, ‘அவர் ஓய்வு நாளிலே பயிர் வழியேப் போய்க் கதிர்களை எடுத்துக் கொண்டார்’ என்று கூறியுள்ளதே” என்றார். 511 அப்பொழுது நான், “இப்பொழுது ரபீ, நீர் நன்கு…அதைப் பார்க்கிலும் வேதத்தைக் குறித்து அதிகமாக அறிந்திருக்கிறீர். உங்களுடைய சொந்த வேதவாக்கியமே அது நியாயப் பிரமாணஞ் சார்ந்தது என்று கூறுகிறதே, அதாவது ‘ஒரு மனிதனுடைய விளைச்சலில் பிரவேசித்தால், அவன் வேண்டுமான கதிர்களைக் கொய்யலாம், ஆனால் அவன் அந்த விளைச்சலை தன்னுடைய சாக்கு மூட்டையில் எடுத்துக் கொண்டு வரக் கூடாது என்பது நியாயமாயுள்ளதே.’ ரபீ, அது உங்களுடைய சொந்த நியாயப் பிரமாணமாயிற்றே” என்றேன். 512 அவர் அங்கேயே சற்று நேரம் திகைத்துப் போய் நின்று விட்டார், அவர்—அவர்—அவர் அதை விசுவாசித்தார், ஏனென்றால் அவர்—அவர் சாட்சி பகர்ந்தார். அவர் கொஞ்சம் கழித்து இவ்வாறு கூறினார், அவர், “ஜானுடைய கண்கள்…எந்த—எந்த காரணத்தால் திறக்கப்பட்டது-?” என்றும், “நீர் அதை எப்படி செய்தீர்-?” என்றும் கேட்டார். 513 அப்பொழுது நான், “இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்” என்றேன். 514 “ஊ”. அவர்—அவர் அதை அறிந்திருக்கவில்லை, தொடர்ந்து அவர், “உங்களால் தேவனை மூன்று துண்டுகளாக வெட்ட முடியாது” என்றார். 515 நான், “ரபீ, அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட யோகோவாவாயிருந்தார். அவர்…அந்தவிதமாகத்தான் அவர் இருந்தார், அவர் மாம்சத்தில் யேகோவாவாயிருந்தார். அவருடைய சொந்த மானிட நாமம், அதுவே மீட்பின் நாமமாயிருந்தது, ஏனென்றல் ஒரு மனிதன் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழே வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை, அந்த மானிட மீட்பின் நாமமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே. இரட்சிக்கப்பட முடியும். அது உண்மை. அவர் தேவனாய் இருந்தார், அவர் தேவனாயிருக்கிறார், அவர் என்றென்றைக்கும் தேவனாயிருப்பார், அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பது முற்றிலும் உண்மையே” என்றேன். 516 இப்பொழுது, புறஜாதி சபையானது சீக்கிரத்தில்…புறஜாதி சபையின் சரீரத்தின் முடிவு உண்டாகும் என்று நான் விசுவாசிக்கிறேன். வாசல்கள்…இடையே…இயேசு மத்தேயு 24-ல் கூறினார், (நான் அந்த ஒரு வேதவாக்கியத்தை ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ள உள்ளேன்), அவர், “புறஜாதி யுகம் நிறைவேறும் வரைக்கும் அவர்கள் எருசலேமின் மதில்களை மிதிப்பார்கள்” என்றார். 517 இப்பொழுது கவனியுங்கள். யூதர்கள் காட்சியிலிருந்து எடுக்கப்படுவர் என்று மத்தேயு 24-ல் நம்முடைய கர்த்தராகிய இயேசுவினால் அது கூறப்பட்டது. முன்பு இருந்த பண்டைய தீர்க்கதரிசிகளில், தானியேல் கூறினான், அவன், “எழுபதாவது வாரம் இன்னும் யூதர்களுக்கு குறிக்கப்பட்டிருக்கும். (பிரபு) வாகிய மேசியா வந்து, எழுபதாவது வாரத்தின் மத்தியில் தீர்க்கதரிசனம் உரைப்பார், அது ஏழு வருடங்களாயிருந்தது, அந்த வாரத்தின் பாதியில் அவர் சங்கரிக்கப்படுவார். அது எவ்வளவு பரிபூரணமாயிருந்தது என்று பாருங்கள், இயேசுவானவர் சரியாக மூன்றரை வருடங்கள் பிரசங்கித்தப் பிறகு சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் மூன்று…அது இங்கே இந்த மற்ற கேள்வியில் வருகிறது. யூதர்களுக்கு, இன்னும் அவர்களுக்கு மூன்றரை வருடங்கள் உள்ளன. அது இருக்கத்தான் வேண்டும். 518 இப்பொழுது நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 7-வது அதிகாரத்தை எடுத்துக் கொள்வீர்களேயானால், அதில் யோவான் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்கள் யாவரும் முத்திரையிடப்பட்டதையும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறித்தும் கண்டான். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா-? இன்னும் சம்பவிப்பதற்கு முன்னர், வருகை முதலியவற்றைக் குறித்துக் கண்டான். 519 இப்பொழுது நாம் முடிப்பதற்கு முன்பு இப்பொழுது இது எவ்வளவு அழகாக உள்ளது என்பதைப் பாருங்கள். அது எப்படி சுற்றி அசைகிறது—எப்படி என்று கவனியுங்கள். இப்பொழுது, அந்த யூதர்கள் அந்தகாரம் ஆக்கப்பட்டு இருக்கின்றனர். 520 இப்பொழுது, இங்கே இந்த யூதர்கள், இங்கே அவர்களில் அநேகர், அப்படியே…அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள், அவர்கள் உலகத்தின் செல்வத்தையே பிடித்து வைத்துள்ளனர். அவர்கள் வெறுமென—பண சிந்தை கொண்ட ஜனங்கள், அவ்வளவுதான் உங்களால் அவர்களிடத்தில் பார்க்க முடியும், பாருங்கள்; மிகவும் கர்வமுள்ளவர்கள், அலட்சியப் போக்குடையவர்கள், செவிகொடுக்கமாட்டார்கள். ஆனால் நீங்கள் கவனிப்பீர்களேயானால், அவர் பேசிக் கொண்டிருந்தது இந்த யூதர்களைக் குறித்து அல்ல. 521 இப்பொழுது, புறஜாதிகள்…இப்பொழுது கவனியுங்கள், இந்த யூதர்களுக்காக இன்னும் மூன்றரை வருடங்கள் விடப்பட்டிருக்கின்றன். இப்பொழுது, புறஜாதியாரின் யுகம் முடிவுறும் வரை எருசலேம் நகரம் புறாஜாதிகளால் மிதிக்கப்படும் என்று இயேசு கூறினார்…(இப்பொழுது ஜனங்களாகிய நீங்கள் யுகங்களில் நம்பிக்கைக் கொள்வதில்லை, அதைக் குறித்து என்ன-?)…புறஜாதி யுகம் முடிவுறும் வரை…புறஜாதி யுகம் முடிவுறும் போது (புறஜாதியாரின் காலம் முடிவுறும்போது), அப்பொழுது அந்த நகரம் யூதர்களிடத்திற்கு திரும்ப அளிக்கப்படும். இயேசு அந்த சந்ததியைக் குறித்து…அதைக் கூற முன்னதாகவே சென்றார்….அவர், “நீங்கள் வெளியே போய், அத்தி மரம் துளிர்விடுதையும், மற்ற எல்லா மரங்களும் துளிர் விடுவதையுங் காணும் போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்” என்றார். மேலும், “அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” என்றார். 522 இப்பொழுது, அவர்கள், “அந்தவிதமாக அவர் பேசிக்கொண்டிருந்தபடியால்” அந்த சந்ததியில் அதற்காக அவர்கள் கவனித்து வந்தனர். அப்படி இல்லையே! 523 கவனியுங்கள்! அவர், “அத்தி மரம் துளிர்விடுவதைக் கண்ட சந்ததி” என்றார். இப்பொழுது கவனியுங்கள், அவர், “அத்திமரமும், மற்ற எல்லா மரங்களும்” என்றார். இப்பொழுது வேறு வார்த்தைகளில் கூறினால், “அந்த நேரத்தில் ஒரு உலகளாவிய எழுப்புதல் உண்டாயிருக்கும்.” இப்பொழுது இந்த தீர்க்கதரிசனத்தைக் கவனியுங்கள், அது எப்படி கிரியை செய்கிறது என்றும், எப்படி பரிபூரணமாய் ஒன்று சேருகிறது என்பதையும் கவனியுங்கள். இப்பொழுது கவனியுங்கள். “மற்ற எல்லா மரங்களும் துளிர்விடுதல், புதுப்பித்தல்.” ஒரு மரம், அது துளிர்விடும் போது, புதுபித்துக் கொண்டிருக்கிறது. அது சரிதானே-? இப்பொழுது, எவருமே, அத்தி மரமானது எப்பொழுதுமே யூதர்களைக் குறிக்கிறதாய் இருந்து வருகிறது என்பதை ஒரு தீர்க்கதரிசன ஆசிரியரும் அறிவார். நாம் அதை அறிவோம். அது யூதர்களாகும். இப்பொழுது… 524 யோவேலைக் கவனியுங்கள், அவன் அதை எடுத்துக் கூறினபோது, அவன், “பச்சைப் புழு விட்டதை முசுக்கட்டைப் பூச்சி தின்றது; முசுக்கட்டைப் பூச்சி விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி புசித்து…” என்றான். நீங்கள் கவனிப்பீர்களேயானால், அந்த ஒரே பூச்சி வித்தியாசமான பருவங்களில் உள்ளது. பச்சைப் புழு, முசுக்கட்டைப் பூச்சி, வெட்டுக்கிளி. அது எல்லாமே ஒரே பூச்சியாயிருக்கிறது, அது அதனுடைய ஜீவியத்தின் வித்தியாசமான நிலைகளில் உள்ளது. இப்பொழுது கவனியுங்கள், அந்த அதே பூச்சி அங்கே முன்பிருந்த யூதமதத்தை தின்னத் தொடங்கினது, அது வெட்டப்பட்டு, அது அதனுடைய அடிக்கட்டை வரை தின்று கொண்டே சென்று விட்டது; ஆனால் அதன்பின்னர் அவன், “‘நான் திரும்ப அளிப்பேன்’ என்ற கர்த்தர் சொல்லுகிறார், ‘முசுக்கட்டைப் பூச்சிகள் இத்தனை வருடங்களாக பட்சித்ததைத் திரும்ப அளிப்பேன். நான் என் ஜனத்தை மகிழ்ச்சியாக்குவேன்!’ என்றார்” என்று கூறினான். புரிகிறதா-? இப்பொழுது, அந்த மரம் தின்னப்பட்டு வந்தது. புறஜாதிகள் அதற்குள் ஒட்ட வைக்கப்பட்டனர். அது உண்மை. சரி, நாம் கனி கொடுக்க வேண்டும். 525 இப்பொழுது முடிவின் நேரம் வரும்போது, நாம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும்போது, (அது சரியா என்று நான் பார்க்கிறேன்) சுவிசேஷத்தில், ஒரு மகத்தான எழுப்புதல் சம்பவிக்க வேண்டியதாயுள்ளது. 526 இப்பொழுது யூதக் கொடியானது உலகத்திலேயே மிகப் பழமையான கொடி என்பதை நீங்கள் அறிவீர்களா-? அது இரண்டாயிரம் ஆண்டுகளாக, அதற்கும் மேலாக, கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக பறக்காமல் கிடந்து வருகிறது. பாபிலோனுக்கு சிறைப்பட்டு போனது முதற்கொண்டு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக தாவீதின் அறுமுனை நட்சத்திரக் கொடியான யூதக் கொடி ஒருபோதும் பறக்கவேயில்லை. இப்பொழுது, ரோம சாம்ராஜ்யம் அவைகளைக் கைப்பற்றியிருந்த காரணத்தால் (மேசியா வந்த போது, அவர்கள் அவரை புறக்கணித்தனர்), அவர்கள் பூமியின் நான்கு திசைகளிலும் சிதறடிக்கப்பட்டிருந்தனர். ஆனால் மே மாதம் ஆறாம் தேதி 1946-ம் வருடம், மீண்டும் அந்தக் கொடியானது மீண்டும் எருசலேமின் மேல் பறந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா-? 1946-ம் வருடம் மே மாதம், ஏழாம் தேதி நாள் கர்த்தருடைய தூதன் எனக்கு இங்கே பிரசன்னமாகி, (அதற்கு அடுத்த நாள்) உலகம் முழுவதிலும் எழுப்புதலைக் கொண்டுவர, என்னை அனுப்பினதை நீங்கள் அறிவீர்களா-? அதற்கு அடுத்த காலையே! அந்தப் பிற்பகல் சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கையில் அந்தக் கொடியானது எருசலேமில் ஏற்றப்பட்டபோது, அதே நேரத்தில் இங்கே அமெரிக்க ஐக்கிய நாட்டில் கர்த்தருடைய தூதன் பிரசன்னமானார். “நீங்கள் அத்திமரமும், மற்ற மரங்களும் துளிர்விடுவதைக் காணும்போது!” 527 அநேக ஆண்டுகளுக்கு முன்னர் ஒஹையோ நதியில் அங்கே வந்து தொங்கின அந்த நட்சத்திரம் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது-? அப்பொழுது அவர் கூறினது…அவர் இறங்கி வந்தபோது, இதோ இன்னமும் அதைக் குறித்த ஒரு புகைப்படம் இங்கே உள்ளது. அவர், “முதல் வருகைக்கு ஒரு முன்னோடியாக யோவான் சென்றதுபோல உன்னுடைய செய்தியானது இரண்டாம் வருகைக்கு ஒரு முன்னோடியாக புறப்பட்டுச் செல்லும்” என்றார். பாருங்கள், உலகம் முழுவதிலும் ஒரு எழுப்புதல் வீசியது. கோடிக்கணக்கான மடங்கினைக் கொண்ட ஒரு மகத்தான எழுப்புதல். 528 பிரமாணங்கள் கடைபிடித்தவர்களும், தேசத்தை சுற்றிலுமிருந்த பல்வேறுபட்டவர்கள் மற்றும் பெரிய சபைகள், “பில்லி சண்டேயின் நாட்கள் முடிவுற்றுவிட்டன” என்றனர். ஆனால் சபையானது புதுப்பிக்கத் துவங்கினதை அவர்கள் (சாதாரண ஜனங்கள்) கண்டபோது, அவர்கள் தங்களுடைய தப்பிதங்களை உணர வேண்டியவர்களாயிருந்தனர். சார்லஸ் புல்லர் அந்த ஸ்தானத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், ஆனால் அவர் மிகவும் வயோதிகராயிருந்தார்; எனவே அவர்கள் பில்லி கிரஹாமோடு சென்றனர். தேவன் பில்லி கிரஹாமை தெரிந்து கொண்டு…இல்லை பாப்டிஸ்டு சபையில் செய்தார், அவர்கள் எல்லோரும் அவரைச் சுற்றிக் கொண்டனர். ஒரு பிரசங்கியாயிருப்பதைப் பொருத்தமட்டில் பில்லி கிரஹாமை சகோதரன் நெவிலோடு ஒப்பிட்டால், பாதிகூட இவர் பிரசங்கிப்பதைப் போன்று பிரசங்கிக்கிறதில்லை…இல்லை…எந்த வழியிலுமே ஒப்பிடவே முடியாது. ஆனால் அது என்னவாயுள்ளது-? அவர்கள் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது, அது கூட்டமைப்பாயுள்ளது, எல்லோரும் அதைச் சுற்றிக் கொண்டனர், அதைச் சுற்றி ஒன்று சேர்ந்து கொண்டனர். பில்லியும் அதேக் காரியத்தைக் கூறுகிறார். பாருங்கள், அவர்கள் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது. தேவனுடைய வார்த்தையை நிறைவேற்ற அது செய்யப்பட வேண்டியதாயிருந்தது. அவர்கள் ஒன்று திரளும்படியான ஆவியைப் பெற்றிருக்கவில்லை, ஆகையால் அவர்கள் ஒன்று திரளும்படியாக வார்த்தையை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது; எனவே அவர்கள் அவ்வாறு செய்தனர். பில்லி வார்த்தையை பிரசங்கிக்கும் ஒரு பிரசங்கியாய், ஒரு சிறந்த பிரசங்கியாயிருந்தபடியால் அவர்கள் சுற்றி ஒன்று திரண்டனர்; ஆகையால் அது அவர்களுடைய திரளான கூட்டத்தில் எல்லா குளிர்ந்த சம்பிரதாய முறையையும் கொண்டு சேர்த்தது. இயற்கைக்கு மேம்பட்டவர், தெய்வீக சுகமளித்தலோடு, வல்லமைகளோடு, கிரியைகளோடு தேவனுடைய அற்புதங்களினால் இந்த சபையில்…தன்னுடைய தீவட்டியில் எண்ணெய்யைப் பெற்றுக்கொண்ட எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய மணவாட்டியை, அவளுக்கு ஒரு எழுப்புதலை ஏற்படுத்தினார். புரிகிறதா-? குளிர்ந்த சம்பிரதாயமான சபையோ அதனுடைய எழுப்புதலை உடையதாயிருந்தது. இங்கே இஸ்ரவேலர் தங்களுடைய எழுப்புதலோடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 529 நான் இப்பொழுது என்னுடைய வீட்டில் நள்ளிரவிற்கு மூன்று நிமிடங்கள் என்ற ஒரு திரைப்படத்தை அங்கே வைத்துள்ளேன். அந்த யூதர்கள் தங்கள் தேசத்திற்குள் வருவதைக் குறித்த ஒரு புகைப்படத்தையும் நாங்கள் வைத்துள்ளோம். அவர்கள் தங்கள் தேசத்திற்குள் வருவதைக் குறித்து நீங்கள் லுக் என்ற பத்திரிக்கையில் பார்த்து படித்திருக்கிறீர்கள். கப்பல்களில் ஏற்றப்பட்டு அங்கே ஈரானிலிருந்து வந்து கொண்டிருந்தனர்; அந்த யூதர்கள் இயேசுவானவர் பூமியின் மேல் இருந்ததையும், அவர்கள் பாபிலோனுக்கு சிறையாகக் கொண்டு போகப்பட்டதையும் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அங்கிருந்ததைப் பற்றி மட்டுமே அறிந்திருந்தனர். அவர்கள் ஏர் உழுதனர்…அவர்கள் அங்கே பண்டைய மர கலப்பைகளைக் கொண்டு ஏர் உழுததை நீங்கள் லுக் அல்லது லைப் என்ற பத்திரிக்கையில் அவைகளைப் பார்த்திருக்கிறீர்கள். அவர்கள் அந்த ஆகாய விமானங்கள் அவர்களிலிருந்த இடத்திற்கு பறந்து வருவதைக் கண்டபோது, “அவர்கள் அங்கிருந்து கழுகின் செட்டைகளின் மேல் மீண்டும் சுமந்து கொண்டு செல்லப்படுவார்கள்” என்று தேவன் அவர்களிடத்தில் கூறியிருந்தபடியால், “அதுதான் இது” என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். அது உண்மை. அவர்கள் அந்நிலையில்தான் இருந்தனர். எனவே அந்த யூதர்கள், “அதுதான் இது” என்றனர். அவர்கள் அதில் ஏறிச் சென்றனர், உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த அவர்களிடத்தில் அவர்களுடைய சொந்த குரலில் அவர்களிடம் பேட்டிக் கண்ட அவர்களுடைய திரைப்படங்களை நாங்கள் வைத்துள்ளோம். அவர்களில் சிலர் தங்களுடைய முதியவர்களை, தங்களுடைய முதுகில் சுமந்து வந்தனர், அவர்கள் குருடாயும், முடமாயுமிருந்தனர். அவர்கள் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டு உள்ளே வந்தனர். 530 அவர்கள் உடனே நிலத்திலிருந்த கற்களை கோணிப்பைகளில் பொறுக்கத் துவங்கினர்; அவர்கள் இன்றைக்கு தண்ணீர் ஊற்றுக்களை கண்டுபிடித்துள்ளனர், அது உலகத்திலேயே மிக மகத்தான வேளாண்மை தேசமாக உள்ளது. உலகத்தில் உள்ள எல்லா ஐஸ்வரியங்களையும் ஒன்று சேர்த்தாலும், அதைப் பார்க்கிலும் அதிகமான ஐஸ்வரியங்களை சவக்கடல் வைத்துள்ளது. யூதர்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள், இது புறஜாதிகளிடத்திலிருந்து மறைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் ஒரு ரோஜாவைப் போல மலர்ந்து கொண்டிருக்கிறார்கள். 531 அவர்கள்—அவர்கள்—அவர்கள் யூதர்களிடத்தில் கேட்டனர், அவர்கள், “நீங்கள் மரிப்பதற்காகவா தாய் நாட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறீர்கள்-?” என்று கேட்டனர். 532 அப்பொழுது அவர்களோ, “நாங்கள் மேசியாவைக் காண திரும்ப வந்து கொண்டிருக்கிறோம். அவர் எங்கே இருக்கிறார்-? அவர் இங்கே இருக்க வேண்டுமே” என்றனர். 533 சகோதரனே, அத்திமரம் துளிர்விடுவதை நீங்கள் காணும்போது, அவர், “இவைகளெல்லாம் சமபவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாது” என்றார். சம்பிரதாயங்களோடுள்ள எழுப்புதலைப் பாருங்கள். சபையோடு உள்ள எழுப்புதலையும் பாருங்கள். யூதர்களோடு உண்டாகிற எழுப்புதலையும் பாருங்கள், அவர்கள் மேசியாவின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். சபை, ஆவியினால் நிரப்பட்ட சபை, மணவாட்டி…தங்களுடைய தீவட்டிகளில் எண்ணையோடு உள்ள கன்னிகைகள் கலியாண விருந்திற்குச் செல்வார்கள். 534 யூதர்களோ, “இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காக காத்திருந்தோம்” என்பார்கள். அங்குதான் உங்களுடைய ஒரு இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர் உள்ளனர்…அதை ரசல் என்பவரின் கருத்துரைகளைப் பின்பற்றுபவர்கள் குழப்பியுள்ளனர். அங்கே நின்று கொண்டிருக்கும் அந்த யூதர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள், “இவரே நம்முடைய தேவன்; இவருக்காகவே காத்திருந்தோம்” என்றனர். அவர்கள் அவரைப் பார்த்து, “அவைகளை உமக்கு எங்கே உண்டாயின-? உம்முடைய கையில் உள்ள வடுக்கள் உமக்கு எங்கே உண்டாயின-?” என்று கேட்பார்கள். 535 அவர், “நான் அவைகளை என் சிநேகிதரின் வீட்டில் பெற்றுக் கொண்டேன்” என்றார். அது உண்மை, “அது என் சிநேகிதரின் வீட்டில்.” 536 அவர் என்ன் செய்வார்-? புறஜாதி சபையானது மகிமைக்குள்ளாக எடுத்துக் கொள்ளப்பட்டு, மணவாட்டியோ கிறிஸ்துவை மணந்து கொள்வாள். 537 யோசேப்பு தன்னுடைய ஜனங்களுக்கு எப்படி தன்னை வெளிப்படுத்தினான்-? அவன் தன்னுடைய சமூகத்திலிருந்து எல்லா புறஜாதிகளையும் வெளியேற்றிவிட்டான். அவன் நிச்சயமாகவே செய்தான் ஸ்திரீயினுடைய சந்ததியான மற்றவர்களுக்கு என்ன சம்பவிக்கும்-? வலுசர்ப்பம் தன்னுடைய வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றி யுத்தம் பண்ணப் போயிற்று; இயேசு, “அவர்கள் புறம்பான இருளுக்குள் தள்ளப்படுவார்கள், அங்கே அழுகையும், புலம்பலும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும்,” என்றார். அந்த பெரிதான துன்ப வேளைகளில் புறஜாதி சபைக்கு சோதனைகள் உண்டாகும். 538 அப்பொழுது என்ன சம்பவிக்கும்-? இரத்த சாட்சிகள் வரும்போது, தேவன் அப்பாலுள்ள யூதர்களிடத்திலிருந்து ஒவ்வொன்றையும் பிரித்துள்ளபோது, யோசேப்பு செய்ததுபோல இயேசு திரும்புவார். அவர்கள் யோசேப்பைக் குறித்து கேள்விப்பட்டபோது, அவன் தன்னுடைய எல்லா காவலர்களையும் மற்றுமுள்ள எல்லோரையும் வெளியேற்றிவிட்ட போது, அவன் சிறிய பென்யமீனையும், அவர்கள் அங்கு நிற்பதையும், யோசேப்பை கொன்றதற்காக அவர்கள் வருத்தப்படுவதையும் கண்டான். அவர்கள் யோசேப்பை கொன்று விட்டோம் என்றே எண்ணியிருந்தனர், இங்கோ அவன் அவர்களுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன், “நான் யோசேப்பு. நான் உங்களுடைய சகோதரன்” என்றான். 539 அப்பொழுது அவர்கள், உண்மையாகவே நடுங்கி, “அவர் யோசேப்பு. இப்பொழுது நாம் அவரை அறிவோம்,” என்றனர். 540 அவர், “நான் இயேசு, நான் மேசியா” என்று கூறும்போது, 541 அவர்களோ, “ஓ, என்னே, இப்பொழுது நாம் என்ன தண்டனையை பெற்றுக் கொள்வோம்!” என்பார்கள். 542 இவையாவும் தேவனுடைய மகிமைக்காக நடந்தன. அது அவர்…மாட்டாது…நல்லது, பார்வோனின் அரண்மனையில் அவன் அழுவதை அவர்களால் கேட்க முடிந்தது, யோசேப்பு அவர்களுக்காக அழுதான். 543 புறஜாதியாராகிய நாம் ஒரு வாய்ப்பினைப் பெற்று, உள்ளே வரும்படிக்கு, இயேசு குருடாக்க வேண்டியதாயிருந்த அந்த யுதர்களை அவர் காணும் வரைக் காத்திருங்கள், அந்த வேளை உண்டாகும் என்றே நான் உங்களிடத்தில் கூறிக் கொண்டிருக்கிறேன். அவர் அந்த யூதர்களை ஏற்றுக் கொள்வார், நீங்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டாம், அந்த யூதர்கள் இரட்சிக்கப்படுவர். ஆம், ஐயா, அங்கே சம்பவிக்கத் தான் வேண்டும். அதுவே அதைக் குறித்த என்னுடைய கருத்தாயுள்ளது, வேதத்தில் அதை இதற்கு மேல் வேறெங்கும் என்னால் காண முடியவில்லை. நீங்கள் அவர்கள் மூவரையும் மீண்டும் ஒன்று சேர்த்து கவனிக்க வேண்டும். 544 நீங்கள் உறங்கும் கன்னிகையை, வெறுமென சாதாரண சபையை, ஒப்புதல் கொண்டுள்ளதைக் கவனிக்க வேண்டும், பாருங்கள். நீங்கள் சபைக்குச் சென்று…அதாவது முதலில் யூதர், முதலில் யூதர், குருடாக்கப்பட்ட நபராய் ஓரத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் அடுத்த கட்டத்தை கவனிக்க வேண்டுமானால் அது உறங்கும் கன்னிகையாய் உள்ளது, தாமதப்படுத்திக் கொண்டிருந்தவர்கள், வெறுமென சபைக்குச் சென்று, சபையில் சேர்ந்து, அழகான நல்ல நபராய் இருந்தனர். அதன்பின்னர் நீங்கள் சபையை, ஆவிக்குரிய பிரகாரமானதை, எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான மணவாட்டியைக் கவனிக்க வேண்டும், அவள் அங்கு நிற்கிறாள். அந்த மூன்று ஜனங்கள், உங்கள்…முடியாது…அவர்கள் சற்றேனும் கலக்கப்படவில்லை. அவர்கள் எல்லோரும் ஒரேவிதமாக இல்லை. யேகோவா சாட்சிக்காரர், “அங்குள்ள ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் மணவாட்டி” என்று கூறுவது போல் அல்ல; அது தவறாகும். அது யூதர்கள், பாருங்கள். ஒரு மணவாட்டி, யூதர்கள், உறங்கும் கன்னிகைகள் உள்ளனர். நீங்கள் அவர்கள் எல்லோரையும் புரிந்து கொண்டு, “நல்லது, அவர்கள் மூவரும் வித்தியாசமான இடங்களில் இருக்கிறார்கள்” என்று கூறுவீர்கள். அவர்கள் எல்லோருமே, மூன்று வகையான வித்தியாசமான ஜனங்களாய் உள்ளனர். நிச்சயமாகவே அவர்கள் ஒரே வகையானவர்களாயிருக்க முடியாது. 545 அதன்பின்னர் இயேசு பூமிக்கு திரும்பும்போது…யூதர்கள், அவர்கள் என்னவாயிருக்கிறார்கள்-? ஆலயத்தைக் காவல்புரியும் அண்ணகர்கள். இயேசு திரும்பி வரும்போது, அவர் மணவாட்டியோடு வருகிறார். இயேசு மூன்று முறை வருகிறார்: அவர் முதல் முறை தம்முடைய சபையை மீட்க வந்தார், அவர் இரண்டாம் முறை தம்முடைய சபையை ஏற்றுக்கொள்ள வருகிறார், அவர் மூன்றாம் முறை தம்முடைய சபையோடு வருகிறார். புரிகிறதா-? சரியாக. ஆகையால் அவை யாவும் ஒரு மகத்தான பரிபூரண வருகையாயுள்ளது, அவை யாவும் ஒரே மகத்தான பரிபூரண தேவனாய் உள்ளது; அவை யாவும் ஒரே மகத்தான பரிபூரண தேவனாய் உள்ளது; அவையாவும் ஒரே மகத்தான பரிபூரண கிறிஸ்துவாயுள்ளது: ஒரே மகத்தான பரிபூரண சபை, ஒரே மகத்தான பரிபூரண மீட்பு…ஒவ்வொரு காரியமும்; அது ஒரு திரித்துவமாய் உண்டாகிறது, ஆனால் அவை யாவும் ஒன்றில் உள்ளது. புரிகிறதா-? அது மூன்று ஜனங்கள் அல்ல, இது மூன்று அல்ல; அது ஒரே நபராய், ஒரே சபையாய், ஒரே சரீரமாய், ஒரே கிறிஸ்துவாய், ஒரே கர்த்தராய், “உங்கள் எல்லோருக்குள்ளும், உங்கள் எல்லோர் மூலமாயுமுள்ளது,” அதைப் போன்றதாகவே உள்ளது. எல்லாம் ஒன்றே! 546 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களை சற்று நீண்ட நேரம் பிடித்து வைத்துக் கொண்டேன். 547 இப்பொழுது கர்த்தருக்குச் சித்தமானால், நான் ஒரு சில இரவுகள், மீண்டும் வருவேனானால் அல்லது ஒரு ஞாயிறு இரவு அல்லது அதைப்போன்று ஒரு சமயம் வந்தால், அப்பொழுது இங்கு மேய்ப்பன் தன்னுடைய இருதயத்தில் கூறுவதற்கு எந்த ஒரு காரியத்தையும் உடையவராயில்லாமலிருந்தால், நான் இவைகளுக்கு இங்கு பதிலளிக்க முயற்சிப்பேன். ஓ, இங்கே சில சிறந்த கேள்விகள் இன்னும் உள்ளன. எத்தனைபேர் அவைகளைக் குறித்து கேட்டறிந்து கொள்ள விரும்புவீர்கள்-? ஓ, நான் அவைகளை விரும்புகிறேன். நாம் ஆராதனையை மேய்ப்பரிடம் ஒப்படைக்கும் முன் நான் மீண்டும் அவைகளினூடாக, உடனே துரிதமாகச் செல்லட்டும். 548 இதற்கு செவி கொடுங்கள். [சகோ.பிரான்ஹாம் பின்வரும் எட்டு கேள்விகளுக்கும் பாகம் III-ல் பாரா 668-லிருந்து துவங்கி, கேள்வி எண்கள் 67-லிருந்து 74-வரையிலுமாக பதிலளிக்கிறார்—ஆசி.] அந்த கற்கள் எங்கே பிரிதி…வெளிப்படுத்தின விசேஷம் 21—ல் உள்ள இந்த கற்கள் எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன-? அது ஒரு நல்ல கேள்வியாயுள்ளது. வெளிப்படுத்தின விசேஷம் 5 அதிகாரத்தில் உள்ள நான்கு ஜீவன்களைக் குறித்து விளக்கிக் கூறவும். அங்கே மற்றொரு நல்ல கேள்வியும் உள்ளது. இருபத்தி நான்கு மூப்பர்கள் யார்-? அங்கே இன்னொரு நல்ல கேள்வியும் உள்ளது, பாருங்கள். ஆதியாகமம் 38-ம் அதிகாரத்தில் உள்ள சிவப்பு நூல் எதைப் பொருட்படுத்தினது-? உங்களுக்கு நினைவிருக்கும், அவன் போய், தன்னுடைய சொந்த மருமகளையே ஒரு வேசி என்று எண்ணி அவளோடே சேர்ந்து விட்டான்; அதற்கு கிரயத்தையும் பேசி கொடுத்து அனுப்பினான்; அதன் பின்னர் அந்தப் பிள்ளை பிறக்கும் போது, அவர்கள் அதனுடைய கையில் சிவப்பு நூலைக் கட்டினர். (அந்தப் பிள்ளை முதலில் கையை வெளியே நீட்டி, பின்னர் அதை உள்ளே இழுத்துக் கொண்டது), எனவே இவனுக்கு முன்னால் அடுத்தவன் பிறந்து விட்டான். ஓ, அது நல்ல ஒன்று தான்; அது நிச்சயமாகவே நல்ல கேள்வியாய் உள்ளது. வெளிப்படுத்தின விசேஷம் 11-ம் அதிகாரத்தில் உள்ள சாட்சிகளின் மரணத்தைக் குறித்து அனுப்பப்படவுள்ள வெகுமதிகள் என்னவாய் இருக்கின்றன-? அப்பொழுதுதான் மோசேயும், எலியாவும் இந்த ஒரு 144000 பேர்களின் எழுப்புதலுக்காக திரும்பி வருகிறார்கள். அந்த வெகுமதிகள் என்னாவாயுள்ளன-? அவைகள் என்னவாயிருக்கின்றன என்பதைக் கவனியுங்கள், அதுவும் சிறந்ததாய் உள்ளது. ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு…பரிசுத்தவான்கள் எங்கேயிருப்பர்-? (பையனே, அதுவும் நல்ல ஒரு கேள்வி…)…ஆளுவார்களா-? அவர்கள் எந்தவிதமான ஒரு சரீரத்தில் இருப்பார்கள்-? நாம் எப்படி தூதர்களை நியாயந்தீர்ப்போம்-? கொரிந்தியர் முதலாம் நிரூபத்தில் ஏன் தூதர்களினிமித்தம் ஏன் தலையின் மேல் முக்காடிட்டுக்கொள்ள வேண்டும்-? கொரிந்தியரின் புத்தகம் முதலாம் நிரூபத்தில். சில நல்ல கேள்விகள், உண்மையாகவே நல்ல கேள்விகளாய் உள்ளன. 549 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் இந்தக் காரியங்களை ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்தறிய கர்த்தர் அனுமதிப்பார் என்று நான் நம்புகிறேன், அவை யாவும் அவருடைய மகிமைக்கானதாயுள்ளது. அவைகளைக் குறித்த கருத்துகளின் பேரில் நாம் வேறுபாடு கொள்ளலாம். ஆனால் நான் ஒரு காரியத்தைக் கூறுவேன், நான் அவைகளைக் குறித்து பேசும்போது, நீங்கள் எல்லோருமே அவைகளைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி கொள்வீர்களேயானால் நலமாயிருக்கும், நாம் ஒரு அற்புதமான நேரத்தை உடையவர்களாயிருந்து கொண்டிருக்கிறோம். ஆமென். ஆமென். 550 சரி, இப்பொழுது கர்த்தர் உங்களுக்கு உண்மையாகவே நல்லவராக இருப்பாராக. ஆராதனைகளை மறந்துவிடாதீர்கள். சகோதரன் நெவிலினுடைய ஒளிபரப்பு, இப்பொழுது, அது சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு W L R P என்ற ஒலிப்பரப்பில் ஒலிபரப்பப்படும், நெவிலின் நால்வர் குழுப் பாடல், அவை உங்களுக்கு நன்றாயிருக்கும், வானொலியைத் திரும்பி அவைகளைக் கேளுங்கள். என்னால் முடித்தால், என்னால் சீக்கிரமாக நேரத்திற்கு வர முடிந்தால், அல்லது நான் திரும்பி வரப்போவதைக் குறித்து என்னுடைய மனைவியை அழைத்து கேட்டுப்பாருங்கள்; அருமையான வயோதிக சகோதரன் பாஸ்வர்த்தைக் காணப் போகும்படி கர்த்தர் என்னை அனுமதித்தால் நலமாயிருக்கும். நான்…நீங்கள் யாவரும்…நான் ஞாயிறு இரவு திரும்பி வந்துவிடுவேன். 551 கர்த்தர் இப்பொழுது உங்களுக்கு நல்லவராக இருப்பாராக சகோதரன், மேய்ப்பன், ஒரு நிமிடம் இங்கு வந்து ஆராதனை ஏற்று நடத்தட்டும். மற்றும்: குடும்ப ஜெபத்தை மறந்துவிடாதிர்கள், இயேசு உங்களை அங்கு சந்திக்க விரும்புகிறார்; அவர் உங்களுடைய ஒவ்வொரு கவலையையும் ஏற்றுக்கொள்வார், ஓ, குடும்ப ஜெபத்தை மறந்துவிடாதீர்கள். 552 நீங்கள் அதை விரும்புகிறீர்களா-? உங்களுடைய சொந்த வீட்டில் எத்தனை பேர் ஜெபிக்கிறீர்கள்-? நாங்கள் பார்க்கட்டும், எல்லாரும்… எல்லோரும்-! அது அருமையாய் உள்ளது, தேவனண்டை நெருக்கமாய் தரித்திருங்கள். அது நன்மையாயிருக்கும், சிறு பிள்ளைகளே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி, சகோதரன் நெவில். எபிரெயர் நிருபத்தின் பேரிலான கேள்விகளும் பதில்களும் பாகம்- III COD-7 57-10-06 பிரன்ஹாம் கூடாரம்,ஜெபர்சன்வில், இந்தியானா, அமெரிக்கா 553. நமக்கு இலவசமாக அளிக்கப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தையைச் சுற்றிலுமான இந்த அற்புதமான ஐக்கியத்திலும், ஆராதனையிலும் எதிர்பார்ப்போடு மீண்டுமாய் இங்கே இன்றிரவு கூடாரத்தில் இருக்கும்படியாய் உள்ளதோ…நாம் இந்த ஆசீர்வாதங்களுக்கு பங்காளிகளாயிருக்க வேண்டும் என்றே… விரும்புகிறோம். 554 தேவன் இந்தக் காலை காலை செய்தியினால் ஆசீர்வதித்தது போல, இன்றிரவு அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்று மாத்திரமே நான் நம்புகிறேன். நான் என்னுடைய அண்டை வீட்டார், திருமதி உட் அவர்களோடு சற்றுமுன் பேசிக்கொண்டிருந்தேன், திரு.உட் மற்றும் அவர்களுமாக, நாங்கள் அதைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். சகோதரன் நெவில் பிரசங்கித்திருந்த எல்லா அருமையான பிரசங்கங்களிலும் மிக அருமையாக பிரசங்கித்த பிரசங்கமாய் அவருடைய பிரசங்கம் அன்று இருந்தது என்று நான் நம்புகிறேன், அவர் இதுவரை பிரசங்கித்திருந்ததிலேயே மேலானதாய் எனக்கு அந்த ஒன்று இருந்தது. எனவே நான் நிச்சயமாகவே அந்த அற்புதமான பிரசங்கத்தை போற்றிப் பாராட்டினேன். அது எனக்கு தைரியத்தை அளித்துள்ளது, அது என்னை ஒழுங்குபடுத்தியது. ஆகையால் நான்—நான் அந்த சத்தியத்தை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால் தைரியமாயிருக்க வேண்டிய, தைரியமான பகுதிகளைக் குறித்து நீங்கள் அறிவீர்கள், எப்படி…தாவீது அங்கே இருந்தான், அவன் எப்படி…அந்தப் பெரிய சோதனையில், “கர்த்தாவே, நான் போய் இதைச் செய்வேன், நீர் எனக்கு உதவி செய்யும்” என்று கூறுவதற்குப் பதிலாக, அவன் காத்திருந்து, என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடத்தில் போய்க் கேட்டான். அவன் ஏபோத்தைக் கொண்டுவந்து, “இப்பொழுது நாம் நின்று, ‘இந்த நெருக்கடியில் நாம் என்ன செய்ய வேண்டும்-?’ என்று தேவனிடத்தில் கேட்போம்” என்று கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஓ, அது உண்மையாகவே ஐஸ்வரியமானதாயிருந்தது. அது தேசத்தில் உள்ள எல்லா மருந்து கடைகளிலும் வைத்துள்ள ஊட்டசத்துக்களைக் காட்டிலும் அதிகமானதாய் இருந்தது. ஆம் ஐயா, அது உண்மையாகவே உங்களுக்கு நன்மை செய்கிறது. 555 இப்பொழுது, இன்றிரவு, நாம் கூடுமான வரை இந்தக் கேள்விகளின் பேரில் நாம் நள்ளிரவைத்தாண்டி தரித்திருக்கும் நோக்கம் கொண்டு இருக்கவில்லை. ஆகையால் நாம்—நாம் உடனடியாக அவைகளுக்குள்ளாக நேரடியாக செல்லப் போகிறோம். இது இந்த கேள்விகளை முடித்துவிடவதாய் உள்ளது, ஒவ்வொரு முறையும் நான் அவைகளை முடித்துவிட, துவங்கும்போது…இப்பொழுது, சகோதரி ஹாட்டி, நான் அதைப் பொருட்படுத்திக் கூறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நான்—நான் அதை வெறுமென கூறிக் கொண்டிருந்தேன், பாருங்கள்; சரி. ஆனால் ஒரு ஊழியக்காரரிடத்தில் இருந்து இங்கே உண்மையாகவே கடினமான சில கேள்விகளைப் பெற்றுக் கொண்டேன், அவைகள் உண்மையாகவே பதிலளிப்பதற்கு கடினமாய் உள்ளன. உங்களுக்குத் தெரியும், அந்தப் பிரசங்கிமார்கள், அவர்கள் உங்களைக் கேட்பதற்கு முன்னர் தங்களுடைய சொந்தப் பதிலைக் கண்டறிய முயற்சித்து வேதாகமத்தினூடாக அதை சுற்றிப் புரட்டுகிறார்கள், நீங்கள் பாருங்கள். ஆகையால்…இது ஒலிப்பதிவு செய்யப்பட்டு, இங்கே மிக, மிக உயரிய மிக விசேஷித்த எட்டு வேதாகம கேள்விகளை கேட்டுள்ள என்னுடைய ஒரு ஊழியக்கார நண்பரிடத்திற்கு ஜார்ஜியாவிற்குச் செல்கிறது. 556 இப்பொழுது இந்த வருகிற வாரத்தில் எங்களுக்காக ஜெபிக்க மறந்து விடாதீர்கள். 557 என்னுடைய மனைவி மேம்பட்ட நிலையில் இருக்கிறாள். அவள் இப்பொழுது பெலனடைந்து வருகிறாள், இன்றைக்கு அவள் சமைக்க உதவி செய்தாள். கனடாவிலிருந்து எங்களுடைய அருமையான நண்பர்களான, சகோதரன் மற்றும் சகோதரி சாத்மனும், இங்கே எங்களை சந்திக்க வந்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாகவே அவர்களுடைய வருகையைப் பாராட்டுகிறோம். என்னுடைய மனைவி, அவர்கள் வந்து கொண்டிருந்ததை அறிந்து, ஏன்-? அவள் இந்த அருமையான கிறிஸ்தவ ஜனங்களை உபசரித்து ஐக்கியமாயிருக்க ஏற்பாடுகளை செய்யப்போவதாயிருந்தாள். சகோதரன் பிரட்டி இன்றிரவு நம்மோடு இருப்பதற்கு நாம் மகிழ்ச்சியடைகிறோம், சகோதரி பிரட்டும்…அவள் இந்தக் காலை இங்கு இருந்தாள், ஆனால் அவள்…இல்லை, அது உண்மை, அவள் மேடாவோடு இருக்கிறாள், நாங்கள் வரும்போது, மேடாவோடிருக்கும்படி அவள் தங்கிவிட்டாள், ஏனென்றால் இன்றிரவு இராபோஜனமும், பாதங் கழுவுதலும் உள்ளபடியால் சற்று கால தாமதமாகும் என்பதை நான் அறிவேன். ஆகையால் அவர்கள் இருப்பதற்கு, புதியதான வருகையாளர்கள் எங்களோடிருப்பதற்கு நாங்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறோம். 558 இப்பொழுது, நாம் இந்தக் கேள்விகளை எடுத்து பதிலளிக்க முயற்சிக்கத் துவங்கும் முன்னர்…நான்—நான் தவறாக பதிலளிக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் பாருங்கள், நான்—நான் செய்கிற ஒவ்வொரு காரியமும் சரியென்று உரிமை கோரவில்லை. நான்—நான் சரியாயிருக்க முயற்சிக்கிறேன், ஆனால் நான்—நான் தவறாயிருக்கலாம். நான் தவறாயிருந்தால், அப்பொழுது நீங்கள் என்னை மன்னியுங்கள்; தேவனும் கூட மன்னிக்க வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன், ஏனென்றால் நான் தவறாயிருக்க வேண்டுமென்று பொருட்படுத்திக் கூறவில்லை. நான் அவைகளுக்கு பதிலளிக்க வெறுமென…இல்லை வெறுமென அந்தவிதமாக நான்…தவறான அபிப்பிராயங்களுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறதில்லை, நான் என்னுடைய அறிவிற்கு எட்டினவரை மிகச் சிறந்த முறையில் அவைகளுக்கு பதிலளிக்கிறேன், பாருங்கள். நான் ஒரு வேதாகம கேள்வியின் பேரிலான என்னுடைய கருத்துகளை மாற்றியமைக்க வேண்டுமானால், செய்யும்படியான அந்தக் காரியத்தை நான் யோசித்துப் பார்க்கிறேன். தேவனுடைய வார்த்தைக் கூறும்போது, எந்த நேரத்திலும் நாம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்; ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. 559 இப்பொழுது நாம் வழக்கமாக இன்றிரவும் வியாதியஸ்தருக்காக மீண்டும் ஜெபிக்கப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன். சில நேரங்களில் நீங்கள் அப்படியே வியப்புறுகிறீர்கள்; ஓ இங்கே இந்த சிறு கூடாரத்தில் உள்ள ஜனங்களை விட சிறிய ஒரு குழுவினருக்கு நீங்கள் ஜெபிக்கும்போது, சில நேரங்கள் நீங்கள் காண விரும்புகிற பலன்களை நீங்கள் காண்கிறதில்லை. ஆனால் நீங்கள் செய்துகொண்டிருக்கிற காரியமென்னவென்றால், நீங்கள் ஏறக்குறை இருநூறு பேர்களிடத்திலிருந்து பலனின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பெரிய கூட்டங்கள் ஒன்றிலோ நீங்கள் எங்காயினும் மூவாயிரத்திலிருந்து பத்தாயிரம் பேர்களிடத்திலிருந்து பலனின் முடிவினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம், நீங்கள் பாருங்கள், இன்னும் அதிகமாகவும் எதிர்பார்க்கலாம். ஆகையால் அந்தவிதமாகவே, நீங்கள் அதிகப்படியாக பெரிய அளவில் பதிலை பெறப் பார்க்கிறீர்கள். ஆனால் இன்றிரவு, நான் பதிலளித்துக் கொண்டு இருக்கையில்… உண்மையாகவே பகல் முழுக்க ஒரு சில நிமிடங்களுக்கு உள்ளாகவும், இரவிலும் அவ்வாறே தொலைபேசி மணியானது ஒலிக்கிறது. 560 நான் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிற திருமதி.ரெஸ்ஸர்ட் அவர்களா இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் இது-? சகோதரியே உங்களுடைய வேதாகமத்தை, சகோதரி உட் அவர்கள் அதை பின்னால் வைத்திருக்கிறார்கள். நான் அதை இந்தக் காலை உங்களுக்காகக் கொண்டுவந்தேன், நான்—நான் அதை உங்களுக்கு கொடுக்கவில்லை. நான்—நான் உங்களை இந்தக் காலைப் பார்க்கவில்லை, திருமதி.உட் அவர்கள் அதை வைத்திருக்கிறார். 561 ஆகையால் தொலைபேசியில் பதிலளிக்கையில், மகத்தான காரியங்கள் செய்யப்பட்டிருக்கிறதைக் கண்டறிகிறோம். ஒரு பெண்மணி என்னை தொலைபேசியில் அழைத்து, அவள், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் ஒரு குறிப்பிட்ட—குறிப்பிட்ட கூட்டத்தில் இருந்தேன், நான் நீண்ட காலமாக ஒரு குறிப்பிட்ட—குறிப்பிட்ட தொல்லையினால் அவதியுற்றுக் கொண்டு இருந்தேன். உங்களுக்குத் தெரியும், நீர் அங்கு பேசி, அப்படியேக் கூறினீர்…” என்றாள். மேலும் அவள், “அது ஜீவனுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்ட போது, நான் கிட்டத்தட்ட மயங்கியேப் போய்விட்டேன்” என்றாள். தொடர்ந்து, “நான் அது முதல் ஒருபோதும் வேதயுறவேயில்லை” என்று கூறினாள். 562 ஒரு பெண்மணி உள்ளே வந்து கூறினாள்…அவள் இன்றிரவு இங்கே இருக்கிறாள் அல்லது அவள் பெட்போர்ட் என்ற இடத்திலிருந்து காரேட்டி வரப்போவதாயிருந்தாள் என்று நான் நினைக்கிறேன், இல்லை அவள் அங்கு எங்கோ இருக்கிறாள் என்று நான் நினைக்கிறேன். அவர்களுடைய மகன் இங்கே இருந்தான் என்று நான் நினைக்கிறேன், அதாவது அவன் ஒரு மோசமான நிலையிலான இருதயக் கோளாறோடு இருந்தான். அவன் இங்கே கூட்டத்தில் உடகார்ந்து கொண்டிருந்தான், கர்த்தர் சுற்றி அசைவாடி அவனைத் தொட்டார்…அந்தப் பையனுடைய தொல்லையைக் குறித்து அவனிடத்தில் கூறினார், அவனால் தன்னுடைய கரத்தையே உயர்த்தமுடியாமலிருந்தது, ஒரு இருதய மாரடைப்பு உண்டாயிருந்தது, எனவே அவனுடைய கரம் முழுவதிலும் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தது, இந்தவிதமான மாரடைப்பு அவனுடைய இருதயத்தில் ஏற்பட்டிருந்தது. கர்த்தர் அவனைத் தொட்டவுடனே அவன் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு ஓட்டிச் சென்றுவிட்டான், அது முதற்கொண்டு அவனுக்கு எதுவுமே தொல்லைப்படுத்தவேயில்லை. அந்தப் பெண்மணி பெட்போர்டிலிருந்தா இங்கு வந்திருக்கிறாள்-? பெண்மணியே, நீங்கள் இங்கே இருக்கிறீர்களா-? அதோ அங்கே பின்னால் இருக்கிறாள். ஆம், சற்று முன்புதான் அவள் என்னைத் தொலைபேசியில் அழைத்தாள். 563 அதன் பின்னர் ஈவான்ஸ்வில்லிருந்து ஒரு பெண்மணி என்னை தொலைபேசியில் அழைத்தாள். அவளால் இங்கு வரமுடியவில்லை, ஏனென்றால் அவள் நீண்ட தூரத்தில் இருக்கிறாள், மேலும் இன்றிரவு நாம் சுகமளிக்கும் ஆராதனையை நடத்தப் போகிறோம் என்பதையோ அறிந்திருக்கவில்லை. அவள், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் ஈவான்ஸ்வில் கூட்டத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன், அப்பொழுது நீர் கூட்டத்தில் பின்னால் இருந்த…நான் யார் என்றும், நான் என்ன செய்து இருந்தேன் என்றும், நான் எதினால் அவதியுற்றிருந்தேன் போன்றவற்றைக் கூறினீர்” என்றாள். அவள், “எனக்கிருந்த காச நோயின் நிலைமையின் காரணமாக சரியாக சுவாசிக்க நான் சிறுபெண்ணாய் இருந்தது முதற் கொண்டே ஏதோ ஒன்றை எரிக்க வேண்டியதாயிருந்தது, ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து அந்தவிதமாக எந்த ஒரு சிறு சுவாசக் கோளாறும் எனக்கு இருக்கவில்லை” என்றாள். புரிகிறதா-? 564 இந்த சாட்சியை கேட்டு மகிழ இந்தக் காலை இங்கில்லாமல், இன்றிரவு இங்குள்ளவர்களுக்காகவே கூறுகிறேன். நான் நேற்றைய தினம் ஒரு பொம்மையை வாங்க ஒரு சிறிய கடைக்குச் சென்றிருந்தேன். இப்பொழுது, அது எனக்காகவல்ல, பாருங்கள். அது அங்கு இருக்கும் என்னுடைய சிறு பெண் ரெபேக்காவுக்காகவும். சாராள் மற்ற ஏதோ ஒன்றை செய்யப் போவதாயிருந்தாள். அவளுடைய பள்ளித் தோழிகள் சிலரோடு ஒன்று சேர்ந்து ஏதோ ஒன்றை ஒரு பிறந்த நாளைக்கோ அல்லது வேறெதெற்கோ செய்து கொண்டிருந்தாள், எனவே அவள் ஒரு அன்பளிப்பை தன் தோழிக்கு எடுத்துச் சென்று விட்டாள்; நான் கிட்டத்தட்ட இவ்வளவு நீளமுள்ள ஒரு குழந்தை பொம்மையை வாங்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கிருந்த ஒரு பெண்மணி நடந்து வந்து, “உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா-?” என்று கேட்டாள். 565 அதற்கு நான், “எனக்கு ஞாபகமில்லை என்றே நான் நினைக்கிறேன்” என்றேன். 566 அது இங்குள்ள சகோதரன் நெவிலினுடைய உறவினர் என்று தெரிய வந்தது, அது கிட்டத்தட்ட…நான் ஸ்வீடனுக்குச் செல்லும் என்னுடைய பாதையில் இருந்தபோது, அவர்கள்…அவள் அங்குள்ள சிறு எடித் என்ற பையனைப் போன்ற ஒரு சிறு பையனை ஒரு சக்கர நாற்காலியில் வைத்து இங்கே அழைத்து வந்தாள், அந்த சிறுவனுக்கு புற்றுநோய், மூளையில் வேகமாக கேடுவிளைவிக்கக் கூடிய ஒரு வளர்ச்சி உண்டாயிருந்தது. அவனுடைய சிறுதலையோ கீழ்நோக்கி இழுத்துக் கொண்டிருந்தது, அவன்… மூன்று வாரம் மட்டுமே உயிர் வாழ்வான் என்று மருத்துவர்கள் கூறி கைவிட்டுவிட்டனர். அவர்கள் அவனைக் கொண்டு சென்று நோய் ஆய்வுறுதி செய்து, அது என்னவாயிருந்து என்று பார்த்தனர், மேலும் மூன்று வாரம் மட்டுமே அவன் உயிர் வாழவதாயிருந்தது. அவர்கள் அவனை ஒரு சக்கர நாற்காலியில் வைத்து கொண்டு சென்று, அதன் பின்னர் ஒரு தூக்குப் படுக்கையில் வைத்து அந்த அறைக்குள்ளாக கொண்டு சென்று அவனை பரிசோதித்துவிட்டு, பின்னர் அவனைக் கீழே கொண்டு வந்தனர். அந்த சிறு பையனுக்காக சென்று ஜெபித்து, அவனைக் குணப்படுத்தும்படி கர்த்தரிடம் வேண்டிக்கொண்டோம். அதற்கு அடுத்த நாள், அவர்கள் அவனை அங்கே கொண்டு சென்றபோது, அவனோ, “எனக்கு அந்த சக்கர நாற்காலி வேண்டாம்” என்று கூறிவிட்டான். 567 காரில் ஏற்றி, அங்கு கொண்டு சென்றபோது, மருத்துவரோ தூக்குப் படுக்கையை விரிக்க, இச்சிறுவனோ, “எனக்கு அந்த தூக்குப் படுக்கையும் வேண்டாம்” என்று கூறினான். 568 அங்கு ஓடி அம்ர்ந்த அவனை மருத்துவர் பரிசோதித்தது விட்டு, “மூன்று வாரங்களுக்குப் பதிலாக, நீ நூற்றியெட்டு ஆண்டுகள் வாழப்போகிறாய் என்பதை நான் உனக்குக் கூறப்போகிறேன்” என்றார். 569 அந்தத் தாய் நேற்று என்னை சந்தித்தாள். எனக்குத் தெரிந்தமட்டில் அவள் ஒரு வேளை இன்றிரவு இங்கிருக்கலாம். அந்த சிறுபையன், ஒரு வாலிபனாக கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தான். மிகக் கொடிய கேடுவிளைவிக்கக் கூடிய சதை வளர்ச்சியான மூளைப் புற்றுநோய், அது… அப்படியே காண்பிக்கப் போகிறது… 570 ஓ இலட்சக்கணக்கான காரியங்கள், பாருங்கள். தேவனால் தவறிப்போக முடியாது. அவரால்—அவரால் தவறிப்போக முடியாது. 571 சகோதரன் ஜான், சகோதரனே உங்களுடைய கண் நன்றாக உள்ளதா-? அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டிருந்தது, ஒரு ஆணியை அடித்துக் கொண்டிருந்த போது, அது அவருடைய கண்ணில் பட்டுவிட்டது. சகோதரன் ஜான் ஓ போனான் அவர்களுக்காக நாங்கள் எல்லோரும் ஜெபித்துக் கொண்டிருந்தோம், லூயிவில்லிருந்து வரும் நம்முடைய சகோதரனுக்கு விபத்தோடு கண்ணில் ஆணி குத்திவிட்டிருந்தது. 572 இப்பொழுது, இவைகள் யாரோ ஒருவருடைய இருதயத்தினுடைய ஆழமான கேள்விகளாய் இருக்கின்றன; அதாவது அவர்கள் வேத வாக்கியத்தினூடாக வாசித்து இந்தக் காரியங்களைக் கண்டறிகிறார்கள், அவைகள்… ஒருகால் அவைகளை திருப்திபடுத்த முடியாமலிருக்கலாம், ஆகையால் நாம் பதிலளிக்க முயற்சிக்கும்படி இங்கே அவைகளை அவர்கள் கொடுத்திருக்கிறீர்கள். அது நமக்கு என்ன ஒரு இக்கட்டான நிலையை உண்டாக்குகிறது என்று நீங்கள் பாருங்கள்; ஏனென்றால் நீங்கள் என்னக் கூறுவீர்களோ, அவர்கள் அதைப் பற்றிக்கொள்வார்கள். எனவே நீங்கள் சரியாகக் கூறுகிறீர்களா என்ற நிச்சயத்தை நீங்கள் உடையவர்களாயிருக்க வேண்டும், நான்… நீங்கள் நிச்சயமுடையவர்களாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆகையால் அதன் பின்னர் நாம் சரியாகக் கூறுகிறோம் என்ற நிச்சயமுடைய காரியமாயிருக்க வேண்டும் நாம் நம்முடைய தலையை வணங்கி இருக்கையில், பரிசுத்த ஆவியானவர் நமக்காக இதை வியாக்கியானித்துத் தரும்படி இப்பொழுது கேட்போமாக. 573 இப்பொழுது, பரலோகப் பிதாவே, ஓ, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்த மகத்தான சிருஷ்டிகரை “பிதாவே” என்று கூறுவது என்ன ஒரு சிலாக்கியமாய் உள்ளது. நீர் இப்பொழுது உம்முடைய சொந்த கவனத்திற்கு உள்ளாக இந்தக் கேள்விகளை நீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அவைகள் ஆழ்ந்த உத்தமத்தோடு இங்கே அளிக்கப்பட்டிருந்தன. தேவனே, நாங்கள் அவைகளுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று அறிந்துள்ளபடி மிகச் சிறந்த முறையில், ஆழ்ந்த உத்தமத்தோடு அது எங்களுடைய இருதயத்திலிருந்து வருவதாக, இதை அருளும். 574 உம்முடைய இரக்கங்கள் ஒவ்வொருவர் மேலும் தங்கியிருப்பதாக. இங்குள்ள ஒவ்வொருவருக்கும் உதவியாயிருக்கும்படியான ஏதோ ஒரு காரியம் இன்றிரவு இங்கு கூறப்படுவதாக. நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபித்தபிறகு, இராபோஜனம் எடுத்துவிட்டு இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்போது, எம்மாவூரிலிருந்து வந்தவர்கள், “வழியிலே அவர் நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா-?” என்று கூறினது போல நாங்களும் கூறுவோமாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 575 இப்பொழுது, நான் அநேக முறை கூறியுள்ளது போல, அதாவது இங்கே இருக்கிற இவைகள், அவைகள் என்னுடைய மிகச் சிறந்த கருத்தாகும், அதன்பின்னர் சில சமயங்களில் அதில் ஒரு சிறு வாதம் எழுகிறது. இங்குள்ள முதல் ஒன்று, இதற்கு முன்பே நான் கூறியிருக்கிற ஒன்றே திரும்பி கொடுக்கப்பட்டுள்ளதை நான் காண்கிறேன். நீங்கள் விரும்பினால், நான் அதை இப்பொழுது வாசிக்க விரும்புகிறேன். கேள்வி:65. ஆதாமும் ஏவாளும் தங்களுடைய பிள்ளைகளை ஏதேனில் உடையவர்களாயிருந்த போது, அந்த நேரத்தில் மற்ற ஜனங்கள் பூமியின் மேலிருந்தனரா-? ஆதியாகம் 5-ம் அதிகாரத்தில் உள்ள 16-வசனத்தில் காயீன், நோத் என்னும் தேசத்தில் குடியிருந்து, தன் மனைவியை அறிந்தான் என்று கூறப்பட்டுள்ளது. 576 இப்பொழுது, அது ஒரு—ஒரு அற்புதமான கேள்வியாயுள்ளது. இப்பொழுது, நாம் வேததில் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்…அநேக சமயங்களில் இந்த…சில சமயங்களில் நாம் கவனக் குறைவு உள்ளவர்களாய் இருக்கிறோம்… நான் வழக்கமாக ஒரு சிறு துண்டு காகிதத்தில், “எந்த வேதாகம கேள்விக்கும் பதில் அளிக்கப்படும்” என்று எழுதிக் கொடுப்பேன். 577 யாரோ ஒருவர், “காயீனுடைய மனைவி யாராயிருந்தாள்-?” என்று கேட்டார். 578 ஓ, அதனோடு நான் ஒரு சிறு கேலியான காரியத்தைக் கூறுவேன், நான், “ஓ, அது அவனுடைய மாமியாருடைய மகளாயிருந்தது” என்றோ அல்லது அந்தவிதமான ஏதோ ஒன்றை, உங்களுக்குத் தெரியும், அல்லது—அல்லது “அவள் திருமதி.காயீனாயிருந்தாள்” என்றும் கூறுவேன். ஆனால் அது கேள்விக்கு பதிலளிப்பதல்ல. அங்கே… 579 காயீன் ஒரு மனைவியை உடையவனாயிருந்தான், ஏனென்றால் அவன் மனைவியை உடையவனாயிருந்தான் என்று வேதம் கூறியுள்ளது. காயீன் ஒரு மனைவியை உடையவனாயிருந்திருந்தால், அப்பொழுது அவன் அவளை எங்கிருந்தாவது கொண்டிருக்க வேண்டும். இது இங்கே இதற்குள்ளாக சரியாக வந்துவிடும்: ஆதாம் ஏவாள் தங்களுடைய பிள்ளைகளை ஏதேன் தோட்டத்தில் உடையவர்களாய் இருந்த போது, மற்ற ஜனங்கள் அங்கே பூமியின் மேல் இருந்தார்களா-? 580 இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால், ஒரு ஸ்திரீயினுடைய பிறப்பைக் குறித்து வேதத்தில் எப்போதுமே மிகவும் அபூர்வமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஆண்பிள்ளையையே எப்பொழுதும் வேதத்தில் பதிவு செய்திருந்தனர், ஸ்திரீகளை அல்ல. வேதாகமத்தில் ஒரு பெண் குழந்தையின் பிறப்பைக் குறித்து குறிப்பிடப்பட்டிருப்பது எப்போதுமே அபூர்வமானதாயுள்ளது. ஓ, வெளிப்படையாக கூறினால், இப்பொழுது என்னால் முடிந்தளவு ஒன்றை, ஒரு குழந்தையின் பிறப்பு எப்போதாவது எங்கேயாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ஞாபகப்படுத்திப் பார்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால் “அவர்கள் குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றனர்” என்று கூறப்பட்டுள்ளது. 581 இப்பொழுது, ஆதாம் ஏவாளுக்கு மூன்று பிள்ளைகள் மாத்திரமே பிறந்திருந்தனர் என்பதைக் குறித்த பதிவை மாத்திரமே வேதம் அளிக்கிறது, அது காயீனாய், ஆபேல் மற்றும் சேத்தாயிருந்தது. இப்பொழுது அவைகள் மூன்றும் ஆண் பிள்ளைகளாயிருந்ததால், அப்பொழுது எந்த பெண் பிள்ளைகளுமே பிறக்காமலிருந்திருந்தால், அப்பொழுது (ஏவாள்) என்ற பெண் மாத்திரமேயிருந்து மரித்திருந்தால், மானிட வர்க்கமே அப்பொழுது அழிந்து போயிருந்திருக்கும், ஏனென்றால் அவர்கள் உண்டாக வேறெந்த வழியுமே இல்லாதிருந்திருக்கும், மானிட வர்க்கம் பெருக வேண்டியதாய் இருந்தது, ஏனென்றால் அவ்வாறு பெருக வேண்டியதில்லை என்றால் எந்த பெண்களுமே இருந்து இருக்கமாட்டார்கள். ஏவாள் ஒருவள் மாத்திரமே இருந்திருப்பாள். ஆனால் நீங்கள் பாருங்கள், ஆனால் பெண் குழந்தைகளின் பிறப்புகளை அவர்கள் வேதத்தில் பதிவு செய்கிறதில்லை, ஆகையால் அவர்கள் பையன்களின் பிறப்பைப் போன்று பெண்களின் பிறப்பையும் பதிவு செய்திருந்திருக்க வேண்டும். 582 இப்பொழுது, பண்டைய எழுத்தாளர், நாம் பெற்றுள்ள மிகப் பழமையான எழுத்தாளர்களில் ஒருவரான ஜோஸிபஸ் அவர்கள் ஆதாம் ஏவாளுக்கு 70 பிள்ளைகள் இருந்ததாக உரிமை கோருகிறார்; பழமையான எழுத்தாளர்களில் ஒருவர், “70 பிள்ளைகள், அவர்கள் குமாரரும் குமாரத்திகளுமாய் இருந்தனர்” என்று கூறுகிறார். 583 இப்பொழுது…அப்பொழுது காயீன் நோத் என்னும் தேசத்திற்குச் சென்றிருந்தால்…இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால், இந்த எழுத்தாளர் இங்கே மிக மிக புத்திசாலித்தனமாக இங்கு எழுதியுள்ளார். அவர் அதை எப்படி மேற்கோள் காட்டினார் என்பதை நீங்கள் கவனித்தீர்களா-? ஏதேனில், அவர்கள் ஏதேனில் தங்கள் பிள்ளைகளை உடையவர்களாய் இருந்தபோது… இப்பொழுது, ஏதேன் தோட்டத்தில் அல்ல, எழுத்தாளர் அதை அறிந்திருந்தார். இங்கே குறிப்பு எழுதியிருந்தவர்; ஆதாம் ஏவாள் தங்களுடைய பிள்ளைகளை ஏதேனில் உடையவர்களாயிருந்தபோது… என்று எழுதியுள்ளார். 584 ஏதேன் தோட்டத்தில் அல்ல, ஏனென்றால் அவர்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் இன்னமும் ஏதேனில் தான் இருந்தனர், அதாவது ஏதேன் தோட்டம் ஏதேனில் கிழக்கில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏதேன் ஒரு தேசமாக இல்லை. இல்லை என்ன…அல்லது ஒரு மாநிலமாக, அதன்பின்னர் நோத் என்பது மற்றொரு தேசமாயிருந்தது இல்லை அதற்கு அடுத்த தேசமாய் இருந்தது. 585 இப்பொழுது, காயீன் தன்னுடைய சொந்த சகோதரியை மாத்திரமே திருமணம் செய்து கொண்டிருந்திருக்க முடியும். அவர் திருமணம் செய்து கொண்டிருந்திருக்க முடியும். அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டியதாய் இருந்தது. காரணம் ஒரே ஒரு ஆண் பெண்ணிடத்திலிருந்தே அவர்கள் வரவேண்டியதாயிருந்தது, பாருங்கள், எனவே அவன் தன்னுடைய சொந்த சகோதரியையே மணப்புரிய வேண்டியதாயிருந்தது. இப்பொழுது, அது அந்த நாட்களில் சட்டப் பூர்வமானதாயிருந்தது. 586 ஈசாக்கு தேவனால் நியமிக்கப்பட்டிருந்த ரெபேக்காளை, தன்னுடைய முதல் இரத்த உறவு முறையாளை விவாகம் செய்தான். சாராள் ஆபிரகாமினுடைய சகோதரியாய், அவனுடைய இரத்த சம்பந்தமான சகோதரியாய் இருந்தாள்; அவனுடைய தாயின் மூலமாயல்ல, தன்னுடைய தகப்பன் மூலமாய். பாருங்கள், ஒரு இரத்த சம்மந்தமான சகோதரியையே ஆபிரகாம் விவாகம் செய்தான்; வேறு தாய், ஆனால் ஒரே தகப்பன். 587 ஆகையால், நீங்கள் பாருங்கள், அப்பொழுது உறவில் விவாகம் செய்வது, மானிட வர்க்கத்தில் இரத்த ஓட்டம் பலவீனமடைவதற்கு முன்பு, அது முறைமை உடைமையாயிருந்தது, சரியானதாயிருந்தது. இப்பொழுது அது அவ்வாறில்லை. நீங்கள் இன்றைக்கு உங்களுடைய சகோதரியை மணந்து, பிள்ளைகளைப் பெற்றால், அவைகள் அநேகமாக…அவைகள் உருகுலைந்து போய்விடும். முதலாவது மற்றும் இரண்டாம் உறவு முறைவரையில் ஒருபோதும் விவாகம் செய்யவே கூடாது, பாருங்கள், ஏனென்றால் ரத்தம் ஓட்டம் தாழ்ந்ததாகி, தாழ்ந்த நிலையிலேயே ஓடும். 588 ஆனால் அப்பொழுது காயீன் செய்திருக்க முடிந்த ஒரேக் காரியம், தன்னுடைய சொந்த சகோதரியை மணந்திருக்க வேண்டும். அங்கிருந்தே பிள்ளைகள்…வந்தனர்…அவன் தன் மனைவியை தெரிந்துகொண்டு, நோத் என்னும் தேசத்திற்குச் சென்று அவளை அறிந்துதான், அங்கிருந்தே பிள்ளைகள் பிறந்தனர். பாருங்கள்,… 589 நீங்கள் கவனிப்பீர்களேயானால், காயீனின் வம்சத்திலிருந்து புத்திசாலியான மனிதர் தோன்றினர். சேத்தின் வம்சத்திலிருந்து பக்தியுள்ள மனிதர் தோன்றினர், நீதியின் திராட்சைக் கொடியையே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். சரியாக அங்கே, இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த இரண்டு வம்சங்களும் பிறப்பிக்கப்பட்டன. 590 இப்பொழுது இன்றைக்கு நீங்கள் கவனிப்பீர்களேயானால், (அப்படியே இந்தக் கேள்வியை முடிக்கையில்); அந்த காயீனின் வம்சம் இன்னமும் வாழ்கிறது, சேத்தின் வம்சமும் இன்னமும் வாழ்கிறது. அவர்கள் இருவருமே அதே விதமாக வந்து உள்ளனர். இன்றிரவு காயீனின் பிள்ளைகள் இங்கே ஜெபர்ஸன்வில்லில் இருக்கிறார்கள், சேத்தினுடைய பிள்ளைகளும் இன்றிரவு இங்கே ஜெபர்ஸன்வில்லில் இருக்கிறார்கள். இரத்தம் ஓட்டம் பெலவீனம் அடைந்து போனாலும் அந்த வம்சம் இன்னமும் தொடர்ந்து இருக்கிறது. 591 இப்பொழுது, கவனியுங்கள். காயீனின் பிள்ளைகள் எப்பொழுதுமே… ஜலப்பிரளய அழிவிற்கு முன்னர், அவர்கள் புத்தி சாதுர்யமான ஜனங்களாய் இருந்தனர்; விஞ்ஞானிகளாய், கல்வியாளர்களாய்; மிகவும் பக்தியானவர்களாய் இருந்தனர், ஆனால் ஆக்கினைக்குட்படுத்தப்பட்ட கூட்டமாயிருந்தனர். புரிகிறதா-? இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் அப்படியே தங்களுடைய தகப்பன் காயீனைப் போலவே இருந்தனர். காயீன், அவன் ஒரு பக்தியான மனிதனாயிருந்தான், அவன் ஒரு அழகான பீடத்தைக் கட்டினான், ஒரு அழகான சபையை உண்டுபண்ணினான், சேத்து அங்கே செய்திருந்த அந்த சிறு பணியைவிட மிக அழகாக அதை உண்டு பண்ண முயன்றான். நீங்கள் அதை அறிவீர்களா-? அவன் நிச்சயமாக…அவன் அந்தப் பீடத்தை மலர்களால் அலங்கரித்தான், அதை அழகாக ஆயத்தப்படுத்தி, அதை அழுகுபடுத்தி விட்டான், ஒரு மகத்தான, பெரிய சபையாக்கிவிட்டான், ஏனென்றால் அவன் அவ்வாறு செய்வதன் மூலம் தேவனிடத்தில் தயையைக் கண்டடைய முடியும் என்று எண்ணிக் கொண்டான். 592 ஆபேல் சென்று ஒரு சிறு ஆட்டுக்குட்டியை தெரிந்து கொண்டு, அதைப் பீடத்தண்டை இழுத்துக்கொண்டு வரத்துவங்கி, அதை ஒரு கற்பாறையின் மேல் கிடத்தி, அதைக் கொன்றான். 593 இப்பொழுது, தேவன் நீதியுள்ளவராயிருந்து, அவருக்குத் தேவையானது எல்லாம் ஆராதிப்பதாயிருந்தால், காயீன் ஆபேல் செய்தது போலவே அதிக உத்தமத்தோடு தேவனை ஆராதித்தான். அவர்கள் இருவரும் உத்தமமாய் இருந்தனர். அவர்கள் இருவருமே தேவனிடத்தில் கிருபையை கண்டடைய முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரில் எந்த ஒருவரும் நாத்திகராய் இருக்கவில்லை. அவர்கள் இருவருமே, முற்றிலுமாக, யேகோவாவில் விசுவாசிகளாயிருந்தனர். இப்பொழுது, அங்கே, அது நமக்கு சிந்திக்கும்படியான ஏதோ ஒன்றை அளிக்கிறது. 594 நான் ஒருபோதும் கண்டிராத ஜனங்கள் சிலர் இன்றிரவு இங்கு இருக்கிறார்கள்; நான் இதற்கு முன்பு உங்களைக் கண்டதேயில்லை. ஆனால் நீங்கள் இதை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும், இதை உங்களுடைய சிந்தையில் வைத்துக்கொள்ளுங்கள். புரிகிறதா-? நீங்கள் எவ்வளவு பக்தி உள்ளவர்களாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அதற்கு இதனோடு எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது. நீங்கள் சபையிலே ஜீவிக்கலாம், நீங்கள் எப்போதுமே மிகவும் உத்தமமாயிருக்கலாம், அப்படியிருந்தும் நீங்கள் இன்னும் இழக்கப்பட்டவராயிருப்பீர்கள். புரிகிறதா-? 595 நீங்களோ, “நல்லது” என்று கூறலாம், நீங்கள், “எங்களுடைய மேய்ப்பர்கள் புத்திசாலியானவர்களாயுள்ளனர், அவர்கள் மிகச் சிறந்த கல்வியறிவினைப் பெற்ற வேதபாட கருத்தரங்குகளின் மூலமாக வந்துள்ளனர். அவர்கள் வேத பண்டிதர்கள், அவர்கள் எல்லா வேத சாஸ்திரம் போன்றவற்றையும் அறிந்து இருக்கிறார்கள். அவர்கள் புத்திசாதுர்யமுள்ளவர்கள், பயிற்றுவிக்கப்பட்டவர்கள், நாங்கள் அறிந்தவரை மிகச் சிறப்பாக… தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்” என்று கூறலாம். அவர்கள் அப்படியிருந்து இழக்கப்படக் கூடும்-! புரிகிறதா-? 596 இப்பொழுது காயீன், அவனுடைய வம்சம்; அவர்கள், ஒவ்வொருவரும் மிகவும் பக்தியுள்ளவர்களாய் இருந்தனர்; மிகவும் புகழ் வாய்ந்த ஜனங்களாய் இருந்தனர்; அவர்கள் விஞ்ஞானிகளாய், மருத்துவர்களாய், கட்டிட அமைப்பாளர்களாய், சிறந்த தொழிலாளர்களாய், புத்திசாலியான மனிதராய் இருந்தனர். ஆனால் அந்த வம்சம் முழுவதுமே காயீனிலிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவிட்டது. 597 ஆபேலின் பக்கத்திலோ, அவர்கள் கட்டிட அமைப்பாளர்களாய், கல்வியாளர்களாய் அல்லது புத்திசாலியான மனிதராய் இருக்கவில்லை; அவர்கள் ஏறக்குறைய தாழ்மையானவர்களாய், ஆடு வளர்த்து மேய்ப்பவர்-களாய், விவசாயிகளாயிருந்து ஆவியின்படியே நடந்தவர்களாயிருந்தனர். 598 இப்பொழுது, வேதம், “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை” என்று உரைத்துள்ளது. ஆவிக்குரிய மனிதன் கொண்டுள்ள ஒரு ஆவிக்குரிய ஆத்துமா ஒருபோதும் மரிக்க முடியாது. மாம்சபிரகாரமான மனிதனோ அவனைச் சுற்றி ஒரு பக்தியான சூழ்நிலையைக் கொண்டிருந்தாலும் (ஆராதிக்க விரும்புகிறது போன்றவை) அவன் மாம்ச பிரகாரமானவனாய் இருக்கிறான்; ஒரு அவிசுவாசியாயல்ல, ஆனால் ஒரு மாம்சபிரகாரமான விசுவாசியாய் இருக்கிறான், அந்த விதமானது தான் புறக்கணிக்கப்பட்டது. 599 இப்பொழுது, அங்கிருந்து காயீன் புறப்பட்டுச் சென்று நோத் தேசத்தில் தன்னுடைய மனைவியை விவாகம் செய்தான். இப்பொழுது, அதில் சேத் யாரை விவாகம் செய்தான் அல்லது மற்றவர்கள் யாரை விவாகம் செய்தனர் என்று கூறவில்லை. அதைக் குறித்து மிக அழகான காரியம் காயீன் விவாகம் செய்தான் என்பதை அறிவதேயாகும், நமக்கு அதற்கு பதில் கிடைத்துவிட்டது. காரணம் அவன் தன்னுடைய சகோதரியை மணக்க வேண்டியதாயிருந்தது அல்லது அவன்…அல்லது அங்கு இருந்த ஒரு… 600 அப்பொழுது அங்கே பூமியின் மேல் எந்த ஸ்திரீயும் இல்லாதிருந்தனர், ஆனால் அப்படியே ஏவாளிடத்திலிருந்து வரவேண்டியதாயிருந்தது. அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயாயிருந்தாள். அதாவது ஜீவித்துக்கொண்டிருந்த எல்லா ஜனங்களுக்குமே, அவள் அதற்கு தாயாயிருந்தாள். அந்தக் காரணத்தினால் அவள்… ஏவாள் என்ற வார்த்தையோ, “ஜீவனுள்ளோருக்கு தாய்” என்றே பொருள்படுகிறது. ஆகையால் அவள் வந்து பிள்ளையை பெற்றெடுத்தாள். என்னால் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்த ஒரே வழியோ காயீன் தன்னுடைய சொந்த சகோதரியை மணந்து கொண்டான் என்பதாகுமே. ஆகையால் அந்த நாளில் உண்மையாகவே ஜனங்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். புரிகிறதா-? நல்லது… ஆதாம் ஏவாள் தங்களுடைய பிள்ளைகளை ஏதேனில் உடையவர்களாய் இருந்தபோது…இப்பொழுது கவனியுங்கள், அதுவே கேள்வியாயுள்ளது: அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை ஏதேனில் உடையவர்களாயிருந்தபோது, அந்த நேரத்தில் பூமியின் மேல் மற்ற ஜனங்கள் இருந்தார்களா-? இல்லையே-! அப்படியானால் ஆதியாகமம் 5:16-ல் காயீன் நோத் என்னும் தேசத்தில் குடியிருந்து தன்னுடைய மனைவியை அறிந்தான் என்று உள்ளதை நீங்கள் பாருங்கள். நிச்சயமாகவே. பார்த்தீர்களா-? 601 அதாவது ஆதியாகமம் 1-ல் அவர் அங்கு மனிதனை தம்முடைய சொந்த சாயலில் சிருஷ்டித்தார், அது ஆவிக்குரிய சரீரமாயிருந்தது. ஆதியாகமம் 2-ல் அவர் மனுஷனைப் பூமியின் மண்ணிலே உருவாக்கினார், அதுவே இப்பொழுது நாம் இருக்கிற மானிட மனிதனாயிருந்தது. அதன் பின்னர் 3-ம் அதிகாரத்தில் விழுந்துபோய், ஏதேன் தோட்டத்திலிருந்து உதைத்துத் தள்ளப்பட்டான்: அதன் பின்னர் பிள்ளைகள் பிள்ளைகளைப் பிறப்பித்தனர். காயீன் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டுபோய், வெளியே, நோத் என்னும் தேசத்தில் அவளோடு வாழ்ந்தான், ஏனென்றால் தேவன் தன்னுடைய சொந்த சகோதரனின் ஐக்கியத்திலிருந்து அவனை பிரித்திருந்தார் (ஆபேலின் மரணத்தின் காரணமாக) அவன் தனக்கிருந்த தன்னுடைய சொந்த சகோதரியை மணந்து கொண்டான்; அவன் எப்படி விவாகம் செய்தான் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்த, எனக்குத் தெரிந்த ஒரே வழி அதுவே ஆகும். 602 இப்பொழுது, அது கூறப்பட்டது…இங்குள்ள என்னுடைய கருப்பு நிற சகோதரர்கள் இந்த குறிப்புரைக்காக மன்னிப்பார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது முற்றிலும் சரியானதல்ல. நான் மனமாற்றமடைந்த பிறகு, நான் வாழ்க்கையில் நான் முதன்முறையாக எந்த ஒருவரை சந்தித்தேன் என்றால்,… நான்… அங்குள்ள சகோதரன் ஜார்ஜ் டீ.ஆர்க் அவர்களையும், அங்கிருந்த மற்றவர்களையுமே சந்தித்திருந்தேன். நான் நடந்து சென்றபோது, கர்த்தர் என்னை ஒரு சிறு இடத்திற்கு வழி நடத்திச் சென்றார். அங்கு அவர்கள் கறுப்பு நிற மனிதனர்கள் எப்படித் தோன்றினர் என்பதைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள்…அந்தக் காயீன் மனிதக் குரங்கு போன்ற ஒரு மிருகத்தை விவாகம் செய்தான் என்றும், அதனூடாகவே கறுப்பர் இனம் தோன்றினது என்றும் கூறினர். இப்பொழுது அது தவறாகும்-! அது முற்றிலும் தவறாயுள்ளது. அதற்காக ஒருபோதும் துணைநிற்க வேண்டாம். காரணம் கறுப்பு நிறமோ அல்லது வெள்ளையோ அல்லது மற்ற வேறெந்த வித்தியாசமோ அப்போதிருக்கவில்லை. அது ஜலப்பிராளயம் வரை ஒரே இன மக்கள்தான் இருந்தனர். ஜலப்பிரளயத்திற்கு பின்னரே பாபேல் கோபுரத்தின் போது அவர்கள் சிதறத் துவங்கி, அப்பொழுது அவர்கள் தங்களுடைய நிறங்கள் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் எல்லோரும் ஒரே மரத்திலிருந்து தோன்றினவர்களாயிருந்தனர். அது முற்றிலும் சரியே. பூமிக்குரிய, பூமியின் மீது வாழ்ந்து வந்த ஒவ்வொரு மானிட சிருஷ்டிக்கும், ஆதாம், ஏவாளே தகப்பனும் தாயுமாயிருந்தனர். அது உண்மை. கறுப்பு, வெள்ளை, மங்கின நிறம், பழுப்பு நிறம், மஞ்சள் நிறம், நீங்கள் என்ன நிறமாயிருந்தாலும், அது முற்றிலும் நீங்கள் வாழ்கிற இடத்தைப் பொருத்ததாயுள்ளது, அந்தவிதமாக—அந்த… 603 நான் இதன் பேரில் இருக்கையிலேயே நான் இதை வெளிப்படுத்திக் கூறலாம் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது ஜனங்கள் இங்கு இந்த பாகுபாடுகளில் இருந்து கொண்டு சட்டங்களையும் மற்றக் காரியங்களையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது கேலிக்கு உரியது என்றே நான் நினைக்கிறேன். நான் உண்மையாகவே அவ்வாறு நினைக்கிறேன், கவனியுங்கள், அந்த ஜனங்களை அப்படியே விட்டு விடுங்கள், அவர்களுக்கு என்னத் தேவை என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். தேவன் ஒரு மனிதனை ஒரு கறுப்புநிற மனிதனாக உண்டாக்கினால், அவன் அதைக் குறித்து மகிழ்ச்சியடைவான், முற்றிலுமாக. தேவன் என்னை ஒரு கறுப்பு நிற மனிதனாக உண்டாக்கினால், நான் அதைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்; அவர் என்னை ஒரு பழுப்பு நிறமான மனிதனாக உண்டாக்கினால், நான் மகிழ்ச்சியாயிருப்பேன்; அவர் என்னை ஒரு வெள்ளைக்கார மனிதனாக உண்டாக்கினால், நான் மகிழ்ச்சியாயிருப்பேன்; அவர் என்னை ஒரு மஞ்சள் நிற மனிதனாக உண்டாக்கினால், நான் மகிழ்ச்சியாயிருப்பேன். தேவனே நம்முடைய நிறங்களை உண்டு பண்ணினார். நாம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பும் விதத்தில் அவர் நம்மை உண்டாக்கினார், நாம் எல்லோரும் அவருடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். முற்றிலுமாக-! எனவே அவர்கள் சண்டையிட்டு, அந்தவிதமாக தொடர்ந்து செல்லக் கூடாது. அதைச் செய்வது தவறாயுள்ளது. அவர்கள் அதைச் செய்யக் கூடாது. தேவன் நம்மை உண்டாக்கின… விதமாகவே நாம் அதை விரும்ப வேண்டும். 604 கறுப்பு நிற மனிதன், அவன் அங்கிருந்து புறப்பட்டுப் போய், தன்னுடைய—தன்னுடைய சந்ததியை பிரித்துவிட அல்லது தன்னுடைய நிறத்தை வெள்ளையரோடு மற்றும் அதைபோன்ற எந்த ஒன்றோடும் கலக்க விரும்புகிறதில்லை. நான் அவன் மீது பழி சுமத்தவில்லை. நான் அவ்வாறு செய்கிறதில்லை. வெள்ளையனால் சுதந்தரிக்கக் கூடாத காரியங்களை கறுப்பு நிற மனிதன் உடையவனாயிருக்கிறான். முற்றிலுமாக-! அது முற்றிலும் சரியே. அவர்கள் அந்தவிதமாக இருக்க வேண்டும் என்று தேவன் ஒருபோதும் நோக்கங்கொண்டிருக்கவில்லை. 605 பாருங்கள். கறுப்பு நிற மனிதன்…அவன்—அவன் ஒரு…அவன் பெற்றுள்ள ஒரு—அவன் வெள்ளையன் ஒருபோதும் பெற்றிராத ஒரு மனநிலையை தன்னைக் குறித்துப் பெற்றிருக்கிறான். அவன் ஒரு மகிழ்ச்சியாக செல்லுகிற ஒரு அதிர்ஷடத்தைப் பெற்று, “தேவனை நம்பி, மற்ற யாவும் அப்படியே செல்லட்டும்” என்ற மனநிலையைப் பெற்றுள்ளான். அவன் எதையாவது பெற்றுக்கொண்டாலும் அல்லது அவன் பெற்றிருக்கவில்லையென்றாலும், அவன் எப்படியும் மகிழ்ச்சியாயிருக்கிறான். இன்றிரவு நான் அதனுடைய முழுப்பங்கையும் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன், நான் நிச்சயமாகவே விரும்புகிறேன். நல்லது, அவன் அதைப் பெற்றிருக்கிறான், அது அவனுடைய உடைமையாயிருக்கிறது; அவர்கள் அதனோடு மற்ற எந்த இனத்தையும் கலக்கவோ அல்லது பிரிக்கவோ விரும்புகிறதில்லை. அது முற்றிலும் உண்மை. 606 அங்கே ஷீவர்போர்ட்டில் இருந்த அந்த பெண்மணியோ நான் என்னுடைய வாழ்க்கையில் எப்போதும் கேட்டிருந்ததிலேயே மிகச் சிறந்த—மிகச் சிறந்த கருத்துரைகளைக் கூறினாள் என்று நான் கருதுகிறேன். அவள் ஒரு கருத்துரையைக் கூறினாள், அவர்கள் அதை செய்தித்தாளில் பிரசுரித்தனர். அவள் மேலே நடந்து வந்து, அவள், “இந்தவிதமாக இந்தக் காரியங்கள் இந்த பாகுபாட்டில் இங்கே நடந்து கொண்டிருக்கின்றன. நான் என்னுடைய பிள்ளைகள் அந்த வெள்ளையரின் பள்ளிக்குச் செல்வதை விரும்பவில்லை” என்றும், “அவர்கள் ஒரு கறுப்புநிற ஆசிரியர் கவனம் செலுத்துவது போல கவனம் செலுத்தமாட்டார்கள்” என்றும் கூறினாள். அந்த ஸ்திரீ ஒரு சாமர்த்தியமான ஸ்திரீ. அவள் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதை அவள் அறிந்திருக்கிறாள், அவர்கள் ஒரு சிறந்த கல்வியைப் பெறுகின்றனர். அது முற்றிலும் உண்மை. ஆகையால் அதைச் செய்வதன் மூலமே ஜனங்கள் தவறு செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். 607 ஆகையால் அவர்கள், “காயீன் மற்றும் ஆபேல்…” என்று அதைப் போன்று கூறுகிறார்கள். இல்லை ஐயா-! நிறத்திற்கு அதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. அங்கே உள்ளிருக்கிற ஆவிக்கே அதனோடு சம்மந்தமுண்டு. அது முற்றிலும் சரியே. 608 ஆகையால் காயீன் தன்னுடைய மனைவியை அறிந்தான், அது அவனுடைய சகோதரியாயிருந்தது. அவர்கள்…அவன் நோத் என்னும் தேசத்திற்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கிருந்தே பூமியின் பெரிய கோத்திரங்கள் உண்டாயின; பக்திமார்க்கத்தாரும், ஆராதிப்போரும் தோன்றினர். 609 நண்பனே, அப்படியே சற்று சிந்தித்துப் பார், அப்படியே ஒரு நொடி சற்று நின்று சிந்தித்துப் பார். முற்றிலுமாக சபைக்குச் செல்லுகிற கோடான கோடி ஜனங்கள், அவர்களால் முடிந்தளவு உத்தமமாயிருந்து, அந்த சபைக்கென்றே தங்களை அர்பணித்திருந்தாலும், காயீனைப் போன்று அந்த விதமாகவே இழக்கப்படுவர். புரிகிறதா-? அது தேவன் தெரிந்து கொள்ளுகிறதாயுள்ளதே-! அது தேவனுடைய தேர்ந்தெடுத்தலாயுள்ளதே-! புரிகிறதா-? தேவன் இரக்கம் அளிக்கிறாரே-! களிமண் குயவனிடத்தில் கூற முடியாது. அது குயவன் களிமண்ணை எடுத்து பயன்படுத்துகிறதாயுள்ளது. அது உண்மை. 610 இப்பொழுது இங்கே அழகான ஒன்று உள்ளது, இங்கே அடுத்த ஒன்று: பேதுரு இரண்டாம் நிரூபம் 2:4 — 2:4… 611 நான் இந்த வேதவாக்கியங்களை வாசித்துக்கொண்டிருக்கையில், நீங்கள் விரும்பினால், ஒரு வேதாகமத்தை வைத்துள்ள யாராவது இந்த வேத வாக்கியங்களை உடனே துரிதமாக திருப்பிப் பார்க்க விரும்பினால் பாருங்கள். 612 இப்பொழுது, இந்த காயீன் என்பதன் பேரில் போன்றவை, அது இப்பொழுது திருப்தி அளிக்கவில்லை என்றால், நீங்கள் அதை எங்களிடத்தில் கூற விடுங்கள்; அப்பொழுது நாம் மகிழ்ச்சியடைவோம்… 613 இப்பொழுது II பேதுரு 2:4. சரி, ஐயா, நாம் இங்கு இருக்கிறோம்: கேள்வி:66. II-பேதுரு-2:4, “பாவம் செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், நரகத்திலே தள்ளி,” I-பேதுரு-3:19-ல் ஏன் கிறிஸ்து காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்-? 614 இப்பொழுது, நாம் முதலில் பேதுரு 2:4 எடுத்துக் கொள்வோம். சரி: பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக் கொடுத்து; 615 இப்பொழுது, நாம் இப்பொழுது I பேதுரு (அதாவது II பேதுருவில் கண்டறிவோமாக, I பேதுரு 3:19, இதைக் கவனியுங்கள். இதோ நாம் இங்கே இருக்கிறோம். இவைகள் சற்று முன்னர் வந்தபடியால், நான் அவைகளைக் குறித்து எழுதியிருக்கவில்லை. அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். 616 ஓ, ஆம், இங்கு தான் நாம் இருக்கிறோம். நாம் அதற்கு முன்னிருந்தே சற்று துவங்குவோம், 18-வது வசனம்: ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதி உள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒரு தரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள்…கீழ்ப்படியாமற்போனவைகள்;… 617 என்னுடைய அருமையான நண்பனே, நீங்கள் அடுத்த வசனத்தை வாசீப்பீர்களேயானால், அங்கே அது அதனை விளக்கிக் கூறியுள்ளது. புரிகிறதா-? அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப் பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். (புரிகிறதா-?) 618 இப்பொழுது நீங்கள் இங்கு கவனிப்பீர்களேயானால், இந்தப் பிரசங்கியார் மற்றொன்றை… அதே வரியில் பெற்றுள்ள ஒரு காரியத்தின் பேரிலும் சற்றுக் கழித்து பதிலளிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன். 619 I பேதுரு. 4…இல்லை 2:4, நீங்கள் கவனிப்பீர்களேயானால், “…தூதர்களை தேவன் தப்பவிடாமல்” என்று உள்ளதையும், அந்த தூதர்கள் என்பது ஆங்கிலத்தில் எப்படி எழுதப்பட்டுள்ளது-? ஆங்கிலத்தில் தூதன் என்பதன் முதல் எழுத்தோ “சிறிய எழுத்தில்” உள்ளது. பார்த்தீர்களா-? இப்பொழுது, இங்கே, “நோவாவின் நாட்களின் நீடிய பொறுமையில் மனந்திரும்பாமற்போய் காவலில் இருந்த ஆவிகள்,” அதே தூதர்கள். அது மனிதனாயிருந்தது: செய்தியாளர்கள், பிரசங்கிமார்கள்; “தூதர்களை தப்பவிடாமல்.” தூதன் என்ற வார்த்தை “ஒரு செய்தியாளன்” என்ற வார்த்தையிலிருந்து வருகிறது…அது ஒரு…என்பதை நீங்கள் அறிவீர்களா-? தூதன் என்றால் “செய்தியாளன்” என்பதை எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள்-? முற்றிலுமாக, தூதன் ஒரு செய்தியாளனாயிருக்கிறான், “அவர் தூதர்களையும் தப்பவிடாமல்” புரிகிறதா-? 620 எபிரெயரில் இங்கு உள்ளது, நாம் ஒரு சில வாரங்களுக்கு முன்னர், “தூதர்கள்” என்பதினூடாக நாம் பார்த்தது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா-? 621 அவர்…வெளிப்படுத்தின விசேஷயத்தில், “சர்தை சபையின் தூதனுக்கு இந்தக் காரியங்களை எழுது, எபேசு சபையின் தூதனுக்கு இந்தக் காரியங்களை எழுது. சபையின் தூதனுக்கு…” அது ஞாபகமிருக்கிறதா-? நாம் அகராதியில் தூதன் என்ற வார்த்தைக்குப் பொருளைப் பார்த்தால், அது, “ஒரு செய்தியாளன்” என்று பொருள்படுகிறதை கண்டறியலாம். அது “பூமியின் மேலுள்ள ஒரு செய்தியாளனாய், ஒரு இயற்கைக்கு மேம்பட்ட செய்தியாளனாய்” இருக்கக் கூடும், தூதன் என்ற வார்த்தை. 622 ஆகையால் இந்த நிலையில், நாம் கிரேக்க வேதாகம அகராதியை எடுத்து, ஆராய்ந்துப் பார்த்தால், அது, “செய்தியாளர்கள், முதல் செய்தியாளர்கள்” என்று துவங்குகிறதை நீங்கள் கண்டறிவீர்கள். பாருங்கள், “…அவர் தப்பவிடாமல்…ஏனென்றால் பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல்,” (புரிகிறதா-?) “இயற்கைக்கு மேம்பட்டவர்கள்” (புரிகிறதா-?) “பிறகு காத்திருந்து…” இப்பொழுது கவனியுங்கள், அவர் கூறினார்: பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக் கொடுத்து; 623 ஆகையால் இங்கே I பேதுரு 3:19-ல் உள்ளதை மீண்டும் பாருங்கள், இப்பொழுது இதை வாசிக்கையில் என்று கவனியுங்கள்: அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது,… (பாருங்கள், அது அந்த நாளின் செய்தியாளர்களாயிருந்தது, செய்தியாளர்கள்) கீழ்படியாமற் போனவைகள்: அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப் பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். 624 இப்பொழுது பரலோகத்தில் உள்ள அந்த சிருஷ்டிகளைக் கவனிப்பீர்களே ஆனால் நலமாயிருக்கும். இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷம் 11…இல்லை 7-ம் அதிகாரம், என்று நான் நினைக்கிறேன்…அல்லது, இல்லை, இல்லை, அது 12-ம் அதிகாரத்தில் உள்ளது. அவர் ஸ்திரீ நின்று கொண்டிருந்த ஒரு காட்சியைக் கூறுகிறார்; அவளுடைய தலையிலே சந்திரன், சூரியன்… இல்லை, தலையிலே சூரியனை அணிந்திருந்தாள், அவளுடைய பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது. அந்தப் பிள்ளை பிறந்தவுடனே, அந்தப் பிள்ளையைப் பட்சித்துப் போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் நின்றது. அது தன்னுடைய வாலை எடுத்து, வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை இழுத்து, பூமியிலே விழத்தள்ளிற்று. நீங்கள் அதைக் கவனித்தீர்களா-? இப்பொழுது, சாத்தான் ஒரு—ஒரு நீண்ட வாலை உடையவனாயிருந்து, அவன் ஜனங்களை சுற்றி வளைத்துக் கொண்டான் என்பதை அது பொருட்படுத்துகிறதில்லை, ஆனால் “அவன் கூறின அந்த கட்டுக் கதையினால்” அந்த நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்தான். அந்த நட்சத்திரங்கள் ஆபிரகாமினுடைய சந்ததியாயிருந்தன. 625 ஆபிரகாம், “ஓ…” என்றான். 626 தேவன் ஆபிரகாமினிடத்தில், “வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை உன்னால் எண்ணக் கூடுமா-?” என்றார். 627 அதற்கு அவனோ, “என்னால் அதை எண்ணமுடியாது” என்றான். 628 அப்பொழுது அவர், “உன்னால் உன் சந்ததியையும் ஒருபோதும் எண்ண முடியாமலிருக்கும்” என்றார். நட்சத்திரங்கள். 629 பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம் யார்-? நசரேயனாகிய இயேசு, மாம்ச சரீரத்தில் எப்போதும் வாழ்ந்து வந்தவர்களிலேயே பிரகாசமாயிருந்தவர். அவர் பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமாயிருக்கிறார். அவர் ஈசாக்கினூடாக தோன்றின ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறார். நாம் கிறிஸ்துவுக்குள் மரித்து, ஆபிரகாமின் சந்ததியராயும், வாக்குத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறோம். 630 ஆகையால் வானத்து நட்சத்திரங்கள் இங்குள்ள மனித ஆவிகளை பிரதிநிதித்துவப்படுத்தின வலுசர்ப்பம் (ரோமாபுரி, அதனுடைய துன்புறுத்தலின் கீழே) மூன்றில் இரண்டை…இல்லை நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை இழுத்து, அவைகளைக் கீழே தள்ளிற்று, அது நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் சிலுவையேற்றமாயிருந்தது, அவர்கள் அவரை புறக்கணித்தபோது, அவர்…அவரைத் தள்ளினபோது, அவரோடு ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது; அது நட்சத்திதிர தூதர்களில் மூன்றிலொரு பாகம், தூதர்கள். 631 பாருங்கள், உங்களுடைய சரீரத்தில், உங்களுடைய உட்புறத்தில்…(நாம் அதன் பேரில் மற்றொரு கேள்வியைப் பெற்றுள்ளோம், நேரடியாக அதற்கு நன்றாக பதில் கூறலாம்). ஆகையால்…உங்களுடைய உட்புறத்தில் ஒரு ஆவி உள்ளது, அது மற்றொரு மனிதன். உங்களுடைய வெளிப்புறத்தில் ஒரு மனிதன் இருக்கிறான், உங்களுடைய உட்புறத்தில் மற்றொரு மனிதன் இருக்கிறான். ஆகையால் உங்களுடைய உட்புறத்தில் இருப்பது இயற்கைக்கு மேம்பட்டதாயுள்ளது, உங்களுடைய வெளிப்புறத்தில் உள்ளது சரீரம் சார்ந்ததாய் உள்ளது. புரிகிறதா-? இந்த சரீரத்தில், நீங்கள் தேவனால் ஆவியில் வழி நடத்தப்பட்டால், நீங்கள் ஒரு தேவனுடைய செய்தியாளராய் அல்லது ஒரு தூதனாகிறீர்கள். தேவனுடைய செய்தியாளர், தேவனுடைய தூதன் என்பதும் ஒரே வார்த்தையாயுள்ளது; அதைப் பிரிக்க முடியாது; தேவனுடைய செய்தியாளன் அல்லது தேவனுடைய தூதன். 632 யார் மிக உயரிய அதிகாரத்தைப் பெற்றுள்ளது-? வானத்திலிருந்து வரும் ஒரு தூதனா அல்லது பிரசங்க பீடத்திலுள்ள ஒரு தூதனா-? யார் அதைப் பெற்றிருக்கிறது-? பிரசங்கபீடத்தில் உள்ள தூதனே-! பவுல், “நான் உங்களுக்கு பிரசங்கித்திருக்கிற சுவிசேஷத்தையல்லாமல் வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனே வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றார். ஆகையால் தூதன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டு, வார்த்தையோடு தேவனுக்கு அடுத்தபடியாக நிற்கிறான். அது உண்மை. வானத்தில், அவருடைய அதிகாரம்… 633 “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் என்னுடைய கரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. போங்கள், நான் உங்களோடு செல்வேன். நீங்கள் பூமியில் கட்டுகிறதெதுவோ, நான் அதை பரலோகத்தில் கட்டுவேன். நீங்கள் பூமியில் கட்டவிழ்ப்பதெதுவோ, நான் அதை பரலோகத்தில் கட்டவிழ்ப்பேன்.” 634 ஓ, மகத்தான பரிசுத்த சபையானது இந்தக் காரியங்களைச் செய்யும்படியான அதனுடைய அதிகாரத்தை மாத்திரம் தெளிவாக உணர்ந்திருந்தால் நலமாயிருக்கும். ஆனால் அங்கே அதிகப்படியான சந்தேகமும், பயமும், நடுக்கமும், அது இருந்தால், “அது சம்பவிக்கக் கூடுமா-?” என்ற எதிர்பார்ப்புமே உள்ளது. அது இருக்கும்வரையில் சபையானது ஒருபோதும் நிமிர்ந்து நிற்கவே முடியாது. பயத்தின் ஒவ்வொரு பேச்சும் மறைந்துவிட்டு, பரிசுத்த ஆவியானவர் சபையின் ஆளுகையில் முழுமையாயிருக்கும்போதே, எல்லா பயங்களும் போய்விட சபையானது அதிகாரத்தை உடையதாயிருக்கும். புரிகிறதா-? ஏன்-? பரலோகம் சொந்தமாக கொண்டுள்ள ஒவ்வொரு காரியத்தையும் அவர்கள் தங்களுக்குப் பின்னே கொண்டுள்ளனர். அவர்கள் சிங்காசனத்தின் தூதர்களாயிருக்கிறார்கள். முற்றிலுமாக-! கிறிஸ்துவின் தூதர் அதிகாரத்தை உடையவராயிருக்கிறார்கள், கிறிஸ்துவுக்கு சொந்தமான ஒவ்வொரு காரியமும் அந்த தூதருக்கு சொந்தமானதாயிருக்கிறது. அவர், “நீங்கள் உலகமெங்கும் போய், பரிசுத்த ஆவி உங்கள் மீது வந்த பிறகு, நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்” என்றார். சாட்சி என்றால் என்ன-? ஒரு தூதனாக வந்து ஒரு காரியத்தை சாட்சி பகருவதாகும். பரலோகத்தின் அதிகாரங்கள் முழுவதும் உங்களுடைய கரங்களில் உள்ளனவே-! ஓ, நாம் ஏன் அமர்ந்திருக்கிறோம்-? சபையானது மலடாய் உள்ளது, நாம் செயலற்றவர்களாய் அமர்ந்துள்ளோம். காரணம் என்னவெனில் நாம் இந்த காரியங்களை அடையாளங்கண்டு கொள்ளுகிறது இல்லை. 635 இப்பொழுது, காவலிலிருந்த ஆத்துமாக்கள் (அந்த மனந்திரும்பாதவைகள்) தூதர்களின் ரூபத்தில் கீழே கொண்டு வரப்பட்டிருந்த தூதர்களாய் இருக்கவில்லை, ஆனால் அது உலகத் தோற்றத்திற்கு முன்பே விழுந்த அந்த தூதர்களின் ஆவிகளாயிருந்தனர். முன்னே அங்கே வானத்திலே யுத்தம் உண்டாயிற்று. சாத்தான்-வலுசர்ப்பம் யுத்தம் பண்ணிற்று, அதன் பின்னர்… இல்லை மிகாவேலும் வலுசர்ப்பமும் யுத்தம் பண்ணினர் (அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி) அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி தன்னுடைய எல்லா பிள்ளைகளோடும் (அவன் வஞ்சித்திருந்த எல்லா தூதர்களோடும்) தள்ளப்பட்டான், அந்த தூதர்கள் பூமிக்கு வந்து மானிடர்களைக் அடிமைப்படுத்தினர். அவர்கள் அவ்வாறு செய்த போது, அப்பொழுது “தேவ குமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.” 636 அவர்கள் தேவ புத்திரராயிருக்கிறார்கள். இந்த பூமியில் பிறந்திருக்கிற ஒவ்வொரு மனிதனும் ஒரு தேவ குமாரனாயிருக்கிறான். அவன் பாவியாயிருந்தாலும் அல்லது அவன் என்னவாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவன் ஒரு தேவ குமாரனாய் இருக்கிறான். தேவனுடைய புகழுக்காக தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான், அவன் அந்தவிதமாக சிருஷ்டிக்கப்பட்டான். ஆனால் தேவன் யார் அவரை ஏற்றுக்கொள்வார்கள், யார் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை ஆதியில் அறிந்திருந்தார். ஆகையால் அவரால் முன்குறிக்க முடிந்தது…அல்லது முன்குறிக்க அல்ல, ஆனால் முன்னறிவினால் யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதை அவரால் கூற முடியும், ஏனென்றால் அந்த நபர் எந்த ஆவியை ஏற்றுக்கொள்வார் என்பதை அவர் அறிந்திருந்தார். 637 அந்த ஆவிகள் தேவனுடைய சிங்காசனத்திலிருந்து வந்தன, தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கின்றன,…உலகம் உண்டாவதற்கு கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்னரே, தேவனுடைய பிரசன்னத்தில் இருந்தன, ஆராதிப்பதைக் குறித்ததான ஒரு காரியத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லையென்று நீங்கள் நினைக்கிறீர்களா-? அவைகள் கீழே வந்து, மனிதனுக்குள்ளாகச் சென்றன, அவைகளே தேவனை ஆராதிக்கின்றன-! முற்றிலுமாக, அவைகள் தேவனை ஆராதிக்கின்றன; அவைகளுக்கு தேவனைக் குறித்த அறிவு உண்டு, அவைகள் எப்பொழுதும் புத்தி சாதுர்யமாயும், அறிவாற்றல் கொண்டதாகவும், கல்வி பயின்றதாகவும் உள்ளன. ஆனால் தேவன் துவக்கத்திலிருந்தே அவைகளை புறக்கணித்துவிட்டார்-! 638 ஆகையால் நண்பனே, ஒரு சபையின் அங்கதினராயிருப்பது, அல்லது—அல்லது ஏதோ ஒரு வேத சாஸ்திர அறிவைப் பெற்றிருப்பது அல்லது ஏதோ ஒன்று, அதற்கு இதனோடு எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது. அது உங்களை அவரிடத்தில் ஒரே நபராக இணைக்கிற இயேசு கிறிஸ்துவின் இரத்தமாயும், ஒரு புதிய பிறப்பாயுமிருக்க வேண்டும். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. 639 தேவன் அதை அறிந்திருந்தபோது, ஆதியில் அவர்…மனுஷனையும், ஸ்திரீயையும் ஒன்றாக உண்டாக்கினார், இருவராய் அல்ல, அவர்கள் ஒன்றாய் உண்டாக்கப்பட்டனர். அவர்கள் வேறுபிரிக்கப்பட்டு, ஒரு மாம்சத்தில், ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் வைக்கப்பட்டனர். அவர் அதை அறிந்திருந்தார். ஆகையால் முறைப்படி அதை உங்களுக்கு நிரூபிக்க, தேவன் ஸ்திரீயை உண்டாக்கினபோது, அவர் மனிதனை உண்டாக்கினதுபோல கொஞ்சம் மண்ணை எடுத்து அவளை ஒருபோதும் உண்டாக்கவில்லை; அவர் ஆதாமினுடைய பக்கவாட்டிலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்தார், அவள் ஒரு மனிதனின் உப உற்பத்தியானாள் (ஏனென்றால் அவள் அவனுடைய பாகமாயிருக்கிறாள்) இப்பொழுது இது உங்களுக்குப் புரிகிறதா-? புரிகிறதா-? அங்குதான் காரியமே உள்ளது. 640 தூதர்கள் இருந்தனர். தேவனும், தேவனோடு இணைந்துள்ள ஆவியும் ஒரே ஆவியாயுள்ளது. அது உண்மை. இப்பொழுது, சபையில் வாசம்செய்கிற தேவனுடைய ஆவி பரலோகத்திலிருந்து வந்த ஆவியாயுள்ளது, அதாவது உலகத்தோற்றத்திற்கு முன்பே அது பிசாசினுடைய பொய்யை புறக்கணித்துவிட்டதை தேவன் அறிந்திருந்தார். அந்த ஆவி தன்னுடைய சோதனைகளை ஏற்றுக்கொள்ள…ஒரு மாம்ச சரீரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. அவர் இந்த மற்றவர்கள் செய்ததுபோலவே மாம்சத்தில் வர வேண்டியதாயிருந்தது, அவர்கள் எல்லோர் மேலும் சமமான நுகம் வைக்கப்பட்டது. தேவன் துவக்கத்திலேயே ஏற்க மனதுள்ள ஆவிகளையும், எது ஏற்றுக்கொள்ளாதென்பதையும் அறிந்திருந்தார். அங்குதான் காரியமே உள்ளது. கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் பிசாசு வஞ்சிக்குமளவிற்கு அவன் மிகவும் புத்தியுள்ளவனாயிருக்கிறான். 641 ஆகையால் இந்த ஆவிகள், பிரசங்கித்த இந்த தூதர்கள் காவலில் இருந்தனர்; தூதர்கள், நீங்கள் அதை இங்கே கவனிப்பீர்களேயானால், அது ஆங்கில எழுத்தில் சிறியதாய் தூதன் என்ற முதல் எழுத்து உள்ளது, அது “மனிதன்” என்பதையே பொருட்படுத்துகிறது. தூதர்கள், இங்கே பூமியின் மேல் உள்ள செய்தியாளர்கள். அவர்கள் பாவம் செய்தனர், அவர்கள் பாவஞ்செய்யக் கூடிய ஒரே வழி அவிசுவாசிப்பதேயாம்-! அந்தவிதமாக…அவர்கள் தங்களுடைய சொந்த மார்க்கங்களை உடையவர்களாயிருந்தனர், அவர்கள் நோவாவின் செய்தியை விசுவாசிக்கவில்லை. அவர்கள் ஏனோக்கின் செய்தியை விசுவாசிக்கவில்லை. அவர்கள் அவர்களுடைய செய்தியை புறக்கணித்து, “ஆக்கினைக்குட்படுத்தப்பட்டனர்” என்று வேதம் கூறியுள்ளது, அவர்கள் அவ்வாறே இருந்தனர். 642 ஏனோக்கு அவர்களிடத்தில் தீர்க்கதரிசனமுரைத்திருந்தான், அதாவது, “ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவாங்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார்” என்று கூறியிருந்தான். 643 அவர்கள் தீர்க்கதரிசனமுரைத்தனர். நோவா ஒரு பேழையைக் கட்டினான், அவர்கள், “அவன் ஒரு பரிசுத்த உருளை-! அவன் ஒரு மதவெறியன்-! மழை வரப்போகிறது என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது” என்று கூறினர். நூற்றியிருபது ஆண்டுகள் கடந்து சென்றன, அவன் ஒரு மார்க்கத்தை உடையவனாயிருந்து, அதில் இரட்சிப்பை உடையவனாயிருந்தான், தப்பித்துக்கொள்ளும்படியான ஒரு வழி உண்டாக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர்களோ தங்களுடைய நிலையில் திருப்தியடைந்திருந்தனர். 644 அந்தவிதமாகவே அது இன்றைக்கும் உள்ளது, அதாவது மனிதர் தங்களுடைய நிலையில் திருப்திடைந்திருக்கின்றனர். ஆனால் தப்பிக்கொள்ளும்படியான ஒரு வழி உண்டு, அந்த வழி இயேசு கிறிஸ்து மூலமாக உள்ளது. ஆமென். அங்குதான் காரியமே உள்ளது: அதே மரபினர், அதே ஆவிகள். 645 அவர்கள் முற்றிலும் பக்தியுள்ள, மிகுந்த பக்தியுள்ள மனிதராயிருந்தனர், ஆனால் அவர்கள் இப்பொழுது உடன்படிக்கை வாக்குறுதியை தவறவிட்டுவிட்டனர். 646 அது இன்றைக்கும் அவ்வண்ணமாகவே உள்ளது. மனிதன் சபைக்குச் செல்கிறான், பெரிய சபையில் சேர்ந்து, பட்டிணத்திலேயே மிகவும் புகழ்வாய்ந்த நபராயிருக்க வேண்டும் என்று முயற்சிக்கிறான். அவர்கள் ஒரு சபையை சேர்ந்துகொள்ள வேண்டுமானால், அவர்கள் நகரத்தில் உள்ள மிகப்பெரிய, மிகச் சிறந்த, பட்டிணத்தில் நன்றாக கருதப்படுகிற சபையில் சேர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் முற்றிலுமாகவே அந்த அழைப்பை தவறவிடுகிறார்களே-! அவர்கள் முற்றிலுமாகவே அதை தவறவிடுகிறார்களே-! 647 நீங்கள் இயேசுகிறிஸ்துவை எப்போதுமே அறிந்துகொள்ளும்படியான ஒரே வழி ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மூலமேயாகும், வேதசாஸ்திரத்தின் மூலமாயல்ல, நீங்கள் வேதத்தை எந்த அளவு கற்கிறீர்கள் என்பதன் மூலமாயுமல்ல. நீங்கள் கிறிஸ்தவ விஞ்ஞானத்தையுடையவராகவோ, மெத்தோடிஸ்டாகவோ, யேகோவா சாட்சிக்காரராகவோ அல்லது நீங்கள் என்னவாக இருந்தாலும் சரி; நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, நீங்கள் அவரை வார்த்தையைக் கொண்டு ஒருபோதும் அறிந்து கொள்வதில்லை, அது தேவனுடைய ஆவி உங்களுக்கு அவரை வெளிப்படுத்துகிறதாயுள்ளது. அது ஒரு ஆவிக்குரிய வெளிப்பாடாயுள்ளதே-! 648 ஆதாமும் (ஏதேன் தோட்டத்தில்) ஏவாளும்…அந்த பிள்ளைகள் துரத்தப்பட்டபோது, காயீன் இங்கு நல்ல வேத சாஸ்திரத்தோடு வந்தான். அவன், “நாம் இதை நம்முடைய இருதயத்திலிருந்து மிகச் சிறந்த முறையில் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை தேவன் அறிந்திருக்க வேண்டும். நான் ஒரு அழகான பலிபீடத்தை கட்டுவேன், நான் அதன்மேல் மலர்களை வைப்பேன், நான் அதன் மேல் பழங்களை வைப்பேன், நான் அதை அழகாக்குவேன். நிச்சயமாகவே என்னால் இதனைக் கொண்டு தேவனை சாந்தப்படுத்த முடியும், நான் என்னுடைய இருதயத்தில் உத்தமமாயிருக்கிறேன் என்பதை அவரை அறிந்து கொள்ளச் செய்வேன்” என்றான். அவன் வார்த்தைக்கு சென்றதைப் பொருத்தமட்டில் சரியாக இருந்தான்; தேவன் ஆராதிக்க விரும்பினார், அவன் ஆராதிக்கச் சென்றான். அவன் ஆராதிக்க ஒரு அழகான இடத்தை, பெரிய, அருமையான தேவாலயத்தை (அவர்கள் இன்றைக்கு அதை அழைக்கிறதுபோல) உண்டுபண்ணினான். அவன் அதை சரியாகச் செய்தான், அவன் அதை சரியாகக் கட்டினான், அதில் பலிபீடத்தையும் வைத்தான்; அவன் ஒரு நாத்திகனாயிருக்கவில்லை. 649 ஆனால் ஆபேல், தேவனுடைய வார்த்தையின் பேரில்…அப்பொழுது வேதமானது எழுதப்படாததாயிருந்தது, ஆனால் நம்மை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேக் கொண்டு வந்தது கனியல்ல என்றும், அது ஆதாம் ஏவாள் புசித்த ஆப்பிள்கள் அல்லவென்றும், அவர்களை வேறுமடுத்தி, அவர்களை பிரித்திருந்தது முற்றிலும் பாலியல் காரியங்களாயிருந்தது என்பதை தேவன் அவனுக்கு வெளிப்படுத்தினார். அவர்கள் அழிவு உள்ளவர்களானார்கள் என்றும், ஆதாமினுடைய இரத்தத்தினூடாகவும், சர்ப்பத்தினுடைய இரத்தினூடாகவுமே இது துவங்கியிருந்தது என்று அறிந்து, ஆபேல் தெய்வீக வெளிப்பாட்டினால் போய் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்து அதை பலியிட்டான். அப்பொழுது தேவன், “அது தான் சரியானது” என்றார். நிச்சயமாக. 650 அவர்கள் மறுரூப மலையிலிருந்து இறங்கி வந்தபோது, இயேசு, “மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்-?” என்று கேட்டார். 651 அப்பொழுது, “சிலர் உம்மை ‘மோசே’ என்றும், சிலர் உம்மை ‘எலியா’ என்றும், சிலர் உம்மை ‘எரேமியா’ என்றும், சிலர் உம்மை ‘அந்த தீர்க்கதரிசி’ என்று கூறுகிறார்கள்” என்றனர். 652 அதற்கு அவர், “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்-?” என்று கேட்டார். 653 அப்பொழுது பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். 654 அவர், “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை,” என்றார். (கவனியுங்கள்-!) “கடிதத்தின் மூலமாயல்ல, வேதபள்ளியின் மூலமாயல்ல; நீ இதை ஒரு வேதபாட கருத்தரங்கில் ஒருபோதும் கற்கவில்லை, வேறு யாரோ உனக்கு சொல்லவுமில்லை. மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்றார், அங்குதான் காரியமே உள்ளது. அங்குதான் ஜீவனுள்ள தேவனுடைய சபை உள்ளது. அதுவே இதுவாகும். அந்த சபையின் மேல்…அந்த வெளிப்பாட்டின் மேல், இந்த சபை கட்டப்பட்டுள்ளது. அது இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாய் இருக்கிறார் என்று தேவன் வெளிப்படுத்தியிருக்கிற ஒரு தெய்வீக வெளிப்பாடாய் உள்ளது, நீங்கள் அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள், எனவே நீங்கள் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள். 655 இந்த சரீரத்தின் அங்கத்தினர்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானது அசைவாடி கிரியை செய்துகொண்டிருக்கிறது. அதுவே சபையாயுள்ளது-! ஏழ்மையாயிருந்தாலும், ஊழியத்தில், நீ எங்கோ ஒரு தேவதாரு மரத்தின் கீழிருந்தாலும், அல்லது அது என்னவாயிருந்தாலும், அது யாரோ ஒருவருடைய வீட்டில் நடைபெறும் ஒரு தனிப்பட்ட கூட்டமானாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அது எங்கே இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அழகும் மற்ற காரியங்களும் தேவனை வசியப்படுத்துகிறதில்லை. அது இயேசு கிறிஸ்து தேவ குமாரனாக, நம்முடைய சொந்த இரட்சகராக தந்தருளப்பட்டிருக்கிறார் என்ற ஒரு வெளிப்பட்டினால் உண்டான இருதயத்தின் உத்தமமாயுள்ளது. ஆமென்-! 656 என்னே, நாம்…அந்தவிதமாக பார்ப்பதன் மூலம் நீங்கள் இவைகளை ஒருபோதும் புரிந்துகொள்ளுகிறதில்லை, நாம் புரிந்து கொள்வோமா-? 657 அவர் பிரசங்கிக்கச் சென்றபோது…அங்கிருந்தவர்கள் அவர்கள்தான்: தூதர்கள், செய்தியாளர்கள், அவர்கள் பிரசங்கிமார்கள், அவர்கள் அறிவாற்றலுள்ளவர்கள், நோவா அவர்களிடத்திற்குச் சென்று, “இந்தப் பேழைக்குள் வாருங்கள்” என்று அவர்களிடம் கூறினபோது அதை விசுவாசிக்காத அந்த செய்தியாளர்கள். 658 அவர்கள், “இந்த பரிசுத்த உருளையை கவனியுங்கள், அந்த மதவெறியனை கவனியுங்கள். ஏன்-? மழை என்பதே இல்லை. அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எப்போதோவாது கேள்விப்பட்டது யார்-? ஏன்-? என்னே, நாம் சபைகளை உடையவரகளாய் இருக்கிறோம் அல்லவா-? நாம் பக்தி உள்ளவர்களாய் இருக்கிறோம் அல்லவா-?” என்றனர். ஏன்-? அவர்கள் பக்தியுள்ளவர்களாய் இருந்தனர்-! 659 அப்பொழுது ஒழிந்து போன சந்ததியைப் போன்றே இந்த சந்ததி இருக்கும் என்று இயேசு கூறினார், அதாவது அவருடைய வருகைக்கு முன்பாக உள்ள அந்த சந்ததி மீண்டும் அதைச் செய்யும், அதாவது, “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷ குமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில் அவர்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டும், பெண் கொடுத்துமிருந்தனர்” என்றார். அப்பொழுது அவர்கள் எங்கோ இப்பொழுது உள்ளது போன்று நெவாடா மாநிலத்தில் உள்ள ரேனோவுக்குப் போய் அங்கு ஒரு பெண்ணை மணப்பதும், அவளை பதினைந்து நிமிடத்திற்குள் விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் வேறொரு பெண்ணை மணப்பது போன்றதும் இருந்து வந்தது. இவர்கள் இன்றைக்கு பெற்றுள்ள எல்லா விதமான அர்த்தமற்ற காரியங்களையும் அவர்கள் உடையவர்களாயிருந்தனர்; அணிதிரளுதல், கும்மாளம் போடுதல், பரியாசம் செய்தல், பரியாசக்காரர்கள் போன்றவராயிருந்தனர்; தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, உண்மையான சத்தியத்தை உடன்படிக்கையை, கிருபையின் செய்தியை மறுத்தலித்தல்: தேவன் தம்முடைய வழியை உண்டு பண்ணி, ஜனங்கள் எப்படி தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தம்முடைய—தம்முடைய உடன்படிக்கையைத் தருகிறார்; அது அதில் இரட்சிப்பை உடையதாயிருந்தது, இரட்சிப்பே தப்பித்துக்கொள்ளும்படியான ஒரு ஸ்தலமாயிருந்தது. 660 “நாம் இரட்சிப்போடு என்ன செய்ய வேண்டும்-?” இன்றைக்கு ஜனங்களோ, “நாம் ஒரு நல்ல ஜனநாயக அமைப்பிலான அரசாங்கத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லவா-? என்று கூறுகிறார்கள். நமக்கு என்ன தேவை-? 661 நாம் எவ்வளவு தான் ஜனநாயக உருவிலான அரசாங்கத்தில் வாழ்ந்தாலும் எனக்குத் கவலையில்லை, நமக்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தமே தேவை. சரியே-! நமக்கு கிறிஸ்து தேவை. நான் ஒரு ஜனநாயக முறையிலான அரசாங்கத்தைப் பாராட்டுகிறேன்; அதற்கு ஆத்தும இரட்சிப்போடு எந்த சம்மந்தமும் கிடையாது. முற்றிலுமாக-! அந்த அரசாங்கங்கள் ஒழிந்து போம், ஒவ்வொரு தேசமும் ஒழிந்துபோம். பார்வோன்கள் நின்ற இடங்களுக்கு அருகில்…நான் நின்றிருக்கிறேன், அவர்கள் அமைத்திருந்த அவர்களுடைய சிங்காசனங்களைக் கண்டறிய நீங்கள் இருபது அடி கீழே நிலத்தில் தோண்ட வேண்டும். எல்லா பார்வோன்களும், இந்த பூமிக்குரிய எல்லா அவர்களுடைய ராஜ்யங்களும், அதனுடைய எல்லா புகழ்ச்சியான காரியங்களும் ஒழிந்து மறைந்து போகும், ஆனால் யேகோவா என்றென்றுமாய் ஆளுகை செய்வார், ஏனென்றால் அவர் அழிவில்லாத தேவனாயிருக்கிறார். நாம் கிறிஸ்து இயேசு என்னும் உறுதியான கன்மலையின்மேல் நிற்கிறோம், ஏனென்றால் மற்ற எல்லா நிலங்களும் அழிந்துகொண்டிருக்கிற மணல்களாய் உள்ளன. 662 அதை கவனித்தாலும்…ராஜ்யங்கள் எழும்பும், ஒழிந்து போம், ஆனால் ஓ, ஒன்றுமேயில்லை…அது…எந்தக் காரியமானாலும்…நான் கவலைப்படுகிறதில்லை; நிகழ்காரியமானாலும், வருங்காரியமானாலும், (பட்டினியோ அல்லது நாசமோசங்களோ அல்லது எந்தக் காரியமாயினும்) கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை ஒருபோதும் பிரிக்க முடியாது. ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் பிறந்திருக்கும்போது, அவன் இனி ஒருபோதும் ஒரு காலத்தின் சிருஷ்டியாயிராமல், அவன் ஒரு நித்திய சிருஷ்டியாயிருக்கிறான். ஆமென். அவன் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். அவன்…நீங்கி…அவன் காலம் என்ற மூலகத்துவக்கத்திலிருந்து நீங்கி நித்தியத்திற்குட்பட்டிருக்கிறான். அவன் ஒரு போதும் அழிந்து போக முடியாதே-! தேவன் அவனை கடைசி நாளில் எழுப்புவதாக ஆணையிட்டுவிட்டாரே-! 663 ஆகையால் அவர்கள் உங்களுக்கு எல்லா பெரிய சபைகளையும் விரும்புகிற எல்லாவற்றையும், அளித்து, உங்களுக்கு அசுத்தமான நகைச் சுவைகளையும், உங்களுக்கு சூதாட்டங்களையும், இரவு விருந்துகளையும், நீங்கள் விரும்புகிற ஒவ்வொன்றையும் அளித்து, அங்கு ஒரு கல்விபயின்ற பிரசங்கியாரை நிற்கச் செய்யக்கூடும். தங்களுடைய மொழியின் முதலெழுத்துகளைக் கூட அறிந்திருந்திராத இந்த சில பையங்களைவிட மேலான் ஒரு ஊழியத்தை அந்தப் பிரசங்கியார் செய்யாலாம். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், உங்களுடைய எல்லா கல்வியறிவின் கருத்துகளோடும் இருக்ககூடிய எல்லா பெரிய வேதப்பண்டிதர்களும் எனக்கு பிரசங்கிப்பதைக் காட்டிலும் தன்னுடைய மொழியின் முதல் எழுத்துகளை அறிந்திராத ஒரு பையன் (அறிந்துள்ள கிறிஸ்துவை) எனக்கு பிரசங்கிப்பதையே நான் தெரிந்துகொள்ள விரும்புவேன். முற்றிலுமாக-! 664 அண்மையில் இங்கு கென்டக்கியில் தன்னுடைய சொந்த பெயரைக் கூடப் படிக்க முடியாத ஒரு பையனை கர்த்தர் அழைத்து அவனைப் பிரசங்கிக்கும்படிக் கூறினாராம், எனவே அவனுக்கு ஒரு பள்ளிக்கூடம் தேவைப்பட்டதாம், ஆனால் அதிகாரிகளோ அவன் பள்ளியில் கூட்டம் நடத்த அனுமதிக்கவில்லையாம். அதன்பின்னர் ஒரு மகத்தான பெரிய பிரசங்கியார் அங்கு அந்தவிதமான தன்னுடைய பெயரோடு கூட, தன்னுடைய பெரிய தெய்வீக பாண்டித்துவப் பட்டத்தைக் கூற அவர்களோ அவருக்கு பள்ளியை கூட்டத்தை நடத்த கொடுத்தார்களாம். நிச்சயமாகவே. அவர் இரண்டு வார எழுப்புதல் கூட்டம் நடத்தினதில் ஒரு ஆத்துமா கூட இரட்சிக்கப்படவில்லையாம். அதன்பிறகு இந்த பையனுடைய தகப்பனார் திரும்பவும் போய், “நீங்கள் இப்பொழுது அவனுக்கு கூட்டம் நடத்த இடமளியுங்கள். நான் வரிசெலுத்தும் ஒருவனாயிருக்கிறேனே, எனவே என்னுடைய பையனுக்காக அந்த இடத்தைப் பெற்றுத்தர எனக்கு உரிமை உண்டு. என்னுடைய பையனும் கூட அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டும்” என்றார். 665 ஆகையால் அதைக் கண்டறியும்படியாய் அவன் திரும்பிப் போய் அவர்களிடத்தில் கேட்டான், அப்பொழுது அவர்கள், “பரவாயில்லை, அவன் குறைந்தபட்சம் இரண்டு இரவுகளாவது அந்த இடத்தில் கூட்டம் நடத்த நாங்கள் அனுமதிப்போம்” என்றார்கள். ஆகவே அவர்கள் தொடர்ந்து இரண்டு இரவுகள் அவனை அந்த இடத்தில் கூட்டம் நடத்த அனுமதித்தனர். 666 அந்த இரவு அந்தப் பையன் அங்கு எழும்பி நின்றபோது, அவனால் வேதத்தைக் கூட வாசிக்க முடியவில்லை, வேறுயாரோ ஒருவரே அவனுடைய பாடப்பொருளுக்கான வேதப்பகுதியை வாசிக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் அவன் மேடையண்டை நடந்து சென்றபோது, அவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டிருந்தான். அவன் பிரசங்கித்தபோது, ஏறக்குறைய இருபது பேர் பீடத்தண்டை வந்தனர்; தனக்குத்தானே ஒரு பாணியில் பிரசங்கிக்கும் அந்தப் பிரசங்கியார் கல்வாரியின் பாடுகளை நினைத்து அழுது பீடத்தண்டை வந்தாராம். 667 நிச்சயமாகவே, சகோதரனே, அது—நீங்கள் என்ன அறிந்துள்ளீர்கள் என்பது அல்ல, அது நீங்கள் யாரை அறிந்துள்ளீர்கள் என்பதாயுள்ளது. அதுவே திட்டமாயுள்ளது, அதுதான் இதற்கு தேவையாயுள்ளது, அதுவே கிறிஸ்துவை அறிந்துகொள்ளச் செய்கிறது. அவரை அறிந்து கொள்வதே ஜீவனாயுள்ளது; அவரைப் புறக்கணிப்பதோ மரணமாயுள்ளது. 668 துரிதமாக நம்முடைய மற்றக் கேள்விக்குச் செல்வோம், இப்பொழுது இந்த கேள்விகளுக்கான பதிலகள் பதிவிசெய்யப்பட்டு ஜார்ஜியாவிற்கு செல்கின்றன. கேள்வி:67. வெளிப்படுத்தின விசேஷம் 21:19 மற்றும் 20-ல் உள்ள கற்கள் எதைப்…பிரதிநிதித்துவப்படுத்துகின்றன-? 669 நீங்கள் உங்களுடைய வேதாகமங்களை திறந்து பார்க்கும்படியான நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பினால் நலமாயிருக்கும், நமக்கோ இப்பொழுது அதிகப்படியான நேரம் இல்லை, ஆனால் நான் அவைகளுக்கு துரிதமாக பதிலளிக்க முயற்சிப்பேன். வெளிப்படுத்தின விசேஷம் இருபத்தி…அது 21:19 மற்றும் 20-ல் உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஆம். 670 சரி, அங்கே கட்டிடத்தில் இருந்த அந்த கற்களைக் குறித்து அவர் என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பதை நீங்கள் கண்டறியலாம். அந்தக் கற்கள் அஸ்திபாரங்களாயிருந்தன. நீங்கள் கவனிப்பீர்களேயானால்…சகோதரன் நெவில், நீங்கள் அதை அங்கு எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு கல்லும் ஒரு அஸ்திபாரமாயிருந்தது. ஒரு கல்லே ஒரு அஸ்திபாரமாயல்ல, மற்றவைகள்…ஆனால் ஒவ்வொரு கல்லும் ஒரு அஸ்திபாரமாயிருந்தது. அங்கு பன்னிரண்டு கற்கள் இருந்தன. அந்த பன்னிரண்டு கற்களையும் நீங்கள் கவனிப்பீர்களேயானால், ஒவ்வொரு… அளிக்கிறது…முதலாவது வச்சிரக்கல்லில் துவங்கி, பதுமராகம். அது போன்று ஒவ்வொரு கல்லும் ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன. 671 வேதத்தில் அங்கே அழைக்கப்பட்ட குறிப்பிட்ட கற்களை நீங்கள் கண்டடைவீர்கள். அவைகளில் சில சற்று வித்தியாசமானது, நீங்கள் அதைக் குறித்து ஒரு போதும் கேட்டிருக்கமாட்டீர்கள். நீங்கள் அகராதியில் தேடிப் பார்த்தால், அது அதே கல்லாயிருப்பதையும், அப்படியே சற்று ஒரு வித்தியாசமான பெயராய் மாற்றப்பட்டிருப்பதையும் நீங்கள் கண்டறிவீர்கள். 672 ஆனால் அது வச்சிரக்கல்லோடு துவங்குகிறது. வஞ்சிரக்கல் பென்யமீனுடைய கல்லாயிருந்தது…இல்லை அந்தக் கல்…ஓ, முதல் குமாரன் ரூபனுடையதாயிருந்தது. முதல் கல் ரூபனுடையதாயிருந்தது, அது வச்சிரக் கல்லாயிருந்தது. கடைசி கல் பென்யமீனுடையதாயிருந்தது, மேலே உள்ள கடைசி கல். 673 இப்பொழுது இந்தப் பன்னிரண்டு கற்களில் அஸ்திபாரங்கள் போடப்பட்டு இருந்தன, அவைகள் ஆரோனுடைய மார்பதகத்தின் மேல் தொங்கின கற்களாயிருந்தன. அவைகள் அவன் இந்த—இந்த கோத்திரங்களுக்கு பிரதான ஆசாரியனாய் இருந்தான் என்பதை பிரதிநிதித்துவப்படுத்தின. இந்த—இந்த மார்ப்பதகத்தில் இங்கு உள்ள ஒவ்வொன்றும் அவர்களுடைய பிறப்புக் கற்களாயிருந்தன. ஜனங்கள் இந்த மார்ப்பதகத்தைக் கண்டபோது, இந்த மார்ப்பதக்கத்தில் அவர்கள் பிறப்புக்கல்லைக் கண்டபோது, அந்த முழு கோத்திரத்திற்கும் ஆரோன் பிரதான ஆசாரியனாய் இருந்தான் என்பதை அடையாளங் கண்டு கொண்டனர். 674 இப்பொழுது, நாம் இந்தக் காலை சகோதரன் நெவிலினுடைய செய்தியில் கேட்டோம். அவர்கள் அநேக சமயங்களில் ஊரீம் தும்மிம்மைக் கொண்டு வந்தனர். அவர்கள் தங்களுடைய செய்தி உண்மையாயிருந்ததா அல்லது இல்லையா என்பதை அந்தவிதமாகவே அறிந்துகொண்டார்கள் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்கிறீர்கள். அந்தக் கற்கள், அந்த மனிதன் என்னக் கூறினான் என்பதை அவர்கள் கூறப்போகும்போது, தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தபோது, அந்தக் கற்கள் யாவும் ஒன்று சேர்ந்து பிரதிபலித்தன. அது இந்திர நீலம், வச்சிரக்கல், மாணிக்கம் என்ற அந்த கற்களின் ஒன்று சேர்ந்த ஒளியை உண்டாக்குகினது, அந்த மற்ற எல்லா கற்களும் தங்களுடைய ஒளியைப் பிரதிபலிக்க, அது பெரிய மகத்தான முழுக்காரியமும் ஒன்று சேர்ந்து கலந்த ஒரு அழகான வானவில் நிறத்தை உண்டாக்கிற்று. 675 இப்பொழுது, இப்பொழுது, இன்றைக்கு அந்த ஊரீம் தும்மீம் அந்த ஆசாரியத்துவத்தோடு எடுக்கப்பட்டுவிட்டபோது, இப்பொழுது இந்த வேதமே இன்றைக்கு தேவனுடைய ஊரீம் தும்மீமாய் உள்ளது. ஒரு பிரசங்கியார் பிரசங்கிக்கும்போது, அது மற்ற இடங்களில் முரண்பட்டதாயிருக்க, அவன் அந்த சிறு இடத்தில் மாத்திரம் நம்பிக்கைகளை வைக்கக் கூடாது. அந்த மனிதன் பிரசங்கித்துக் கொண்டிருக்க செய்தியானது முழு வேதாகமத்தையும் பிரதிபலிக்க வேண்டும். அது தான் காரியமாகும். வெறுமென ஒரு இடத்தில் கூட, “பரவாயில்லை, வேதம் இதைக் கூறுகிறது” என்று கூறக்கூடாது. ஓ, நிச்சயமாக, அது ஏராளமாக காரியங்களைக் கூறுகிறது. ஆனால் நீங்கள் அவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இணைக்க வேண்டும். தேவனுடைய ஆவியானது வந்து வார்த்தைக்குள்ளாக செல்லும்போது, அது அவை எல்லாவற்றை ஒன்று சேர்த்து பொருத்த, அப்பொழுது அது ஒரு மகத்தான பெரிய வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது, அந்த வெளிச்சம் இயேசு கிறிஸ்துவாயுள்ளது. ஆமென். 676 இப்பொழுது, இந்த பன்னிரண்டு கற்கள் ரூபனிலிருந்து துவங்கி, காத் தொடர்ந்து பென்யமீன் வரையிலான பன்னிரண்டு அஸ்திபாரங்களாயிருந்தன; பன்னிரண்டு கோத்திரங்கள், பன்னிரண்டு கற்கள். அந்தக் கற்கள் புதிய பரலோக எருசலேமில் உள்ள ஆலயத்தில் உள்ளன, ஒவ்வொரு அஸ்திபாரமும் ஒவ்வொரு கோத்திரப் பிதாவின் பேரில் வைக்கப்படும். 677 இப்பொழுது கவனியுங்கள், நீங்கள் அந்தக் கற்களை கவனிப்பீர்களானால், இப்பொழுது அந்த கோத்திரப் பிதாக்கள் வேறு ஒரு காரியத்திற்குள், அப்படியே மற்றொரு கேள்வியில் சரியாக பிரதிபலிக்கப்பட்டதை நீங்கள் கவனிக்கப் போகிறீர்கள். கேள்வி:68. வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரத்தில் உள்ள நான்கு… நான்கு ஜீவன்களை விளக்கவும்—விளக்கிக் கூறவும். 678 சகோதரன் நெவில், நீர் அதை சரியாக எடுத்து வைத்திருந்தால் அல்லது உங்களில் சிலர் வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரத்தை எடுத்திருந்தால், நாம் இதை ஒரு நிமிடம் அப்படியே வாசிப்போம். அது—அது இங்கு ஒரு அழகான காட்சியாயுள்ளது… இதோ நானே அதை எடுத்து விட்டேன், வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரம்: அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின் மேல் வீற்று இருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன். 679 இப்பொழுது அந்த இடம் அல்ல. நான் இன்னும் சற்று முன்னோக்கி செல்லவேண்டும், நான்கு ஜீவன்கள். நாம் 14—வது வசனத்தைப் பார்ப்போம். சரி, ஐயா. இப்பொழுது நாம் இங்கே பார்ப்போம், அது சரி. இப்பொழுது நாம் இங்கே 12-வது வசனத்தில் துவங்குவோம், இல்லை, நான் நினைக்கிறேன்…“அதற்கு நான்கு ஜீவன்களும் ‘ஆமென்’ என்று சொல்லின.” இல்லை, அதற்கு சற்று பின்னால் உள்ள இடத்தில் உள்ளது, சகோதரன் நெவில் “பின்னும் நான்…சத்தத்தைக் கேட்டேன்…” 680 நாம் அப்படியே ஒரு நிமிடத்தில் அதைப் பார்ப்போம், நான் சற்று முன்னர் அதை வாசித்துக் கொண்டிருந்தேன். ஓ, இதோ நமக்கு கிடைத்துவிட்டது, நாம் 6-வது வசனத்தில் துவங்குவோம். 5-வது வசனம்: அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவங்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். 681 நீங்கள் அந்தக் கேள்வியை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் அதற்கு இங்கு ஒரு நிமிடத்தில் பதிலளிக்கவில்லையென்றால், நீங்கள் அதை மீண்டும் திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அப்பொழுது நான், “ஆட்டுக்குட்டியாவனருக்கு இருந்த ஏழு கண்களின் ஏழு ஆவிகளின்” பேரில் தொடர்ந்து பேச விரும்புகிறேன். ஓ, அது உண்மையாகவே அழகான காரியமாயுள்ளது. (பரவாயில்லை, நாம் இப்பொழுது இந்த சகோதரனுடைய கேள்வியைப் பார்க்க வேண்டும்.) சரி, அதை இப்பொழுது மறந்துவிடாதீர்கள். அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும்… 682 இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், இங்குள்ள அந்த நான்கு—நான்கு ஜீவன்கள், இப்பொழுது நாம் தொடர்ந்து சற்று மேற்கொண்டு வாசிப்போம்: …சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும்,… தேவரீர்…பாத்திரராயிருக்கிறீர்;…புதியபாட்டைப் பாடினர்கள். (தொடர்ந்து அவர்களுடைய…அவர்களுடைய ஆராதனை கர்த்தருக்கே…) 683 இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள இந்த நான்கு ஜீவன்களும், நீங்கள் அவைகளை கவனிப்பீர்களேயானால், ஒவ்வொரு இடத்திலும்…(வேத வாசகர்களாகிய நீங்கள், அந்த மனிதன் இந்த ஒலிப்பதிவினைக் கேடகப் போகின்றார்). அந்த நான்கு ஜீவன்களும், அவைகள் நான்கு முகங்களை உடையவைகளாயிருந்தன: ஒன்று ஒரு மனித முகத்தைப் போன்றதாயிருந்தது, மற்றொன்று ஒரு காளை முகத்தைப் போன்றதாயிருந்தது, மற்றொரு முகம் ஒரு கழுகைப் போன்றிருந்தது, மற்ற முகமோ ஒரு சிங்கத்தைப் போன்றிருந்தது. அவைகள் ஒருபோதும் பின்னோக்கிச் செல்லவில்லை. அவைகளால் பின்னோக்கிச் செல்ல முடியவில்லை. 684 பண்டைய வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை, அவர்கள் அநேக ஆண்டுகளுக்கு முன்னர் அதை கற்றபோது, நான் இங்கே இந்த வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தின் பேரில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் பிரசங்கித்தது எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது-? அதிகம் பண்டைய—காலத்தவர்களே நினைவில் வைத்திருக்கிறீர்கள். 685 பாருங்கள், அவைகளால் பின்னோக்கி செல்ல முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் சென்ற ஒவ்வொரு வழியிலும் அவைகள் முன்னோக்கியே சென்று கொண்டிருந்தன. அவைகள் இந்தவிதமாய்ச் சென்றதானால், அவைகள் ஒரு மனிதனைப் போல சென்று கொண்டிருந்தன; அவைகள் இந்தவிதமாய்ச் சென்றதானால், அவைகள் ஒரு சிங்கத்தைப் போல சென்று கொண்டிருந்தன; இந்தவிதமாய்ச் சென்றால், அவைகள் கழுகைப் போல சென்று கொண்டிருந்தன; அவைகள் இந்தவிதமாய்ச் சென்றதானால், அவைகள் காளையைப் போல சென்று கொண்டிருந்தன. பாருங்கள், அவைகளால் பின்னோக்கி செல்ல முடியவில்லை, அவைகள் எல்லா நேரத்திலும் முன்னோக்கியே சென்று கொண்டிருந்தன. 686 இப்பொழுது அந்த நான்கு ஜீவன்கள். இப்பொழுது இதைத் துரிதமாகப் பார்ப்போம், ஏனென்றால் நான் இதன் பேரில் நீண்ட நேரம் தரித்திருக்க விரும்பவில்லை. ஆனால் நான்கு ஜீவன்கள்…வேதாகமத்தில் மிருகம் “வல்லமையைக்” குறிக்கிறது. இந்த ஜீவன்கள் அங்குள்ள ஏரியில் இல்லை எங்கோ சமுத்திரத்திலிருந்து எழும்பி வந்ததல்ல, ஆனால் இந்த ஜீவன்கள் தேவனுடைய சிங்காசனத்தில் இருந்தன, அவைகள் தேவனை ஆராதித்துக்கொண்டிருந்தன. அந்த நான்கு ஜீவன்களும் பூமியிலிருந்து எழும்பி வருகிற நான்கு வல்லமைகளை பொருட்படுத்துகின்றன, அந்த நான்கு வல்லமைகளும் நான்கு சுவிசேஷங்களாயிருந்தன; மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்; ஒன்று மற்றொன்றோடு முரண்படுகிறதில்லை. 687 அவைகளில் ஒன்று,…சுவிசேஷம் ஒரு சிங்கத்தைப் போல புறப்பட்டுச் செல்கிறபடியால், அது கண்டிப்பானதாய் உள்ளது, அது தைரியமானதாயுள்ளது; சுவிசேஷம் ஒரு சிங்கத்தைப் போல தைரியமுள்ளதாயுள்ளது. அது ஒரு சிங்கத்தைப் போல ஒரு ராஜாவாய் உள்ளது. அது மனித முகத்தைப் போல செல்லுமானால், அது ஒரு மனிதனைப் போன்று தந்திரமும், புத்திசாலித்தனமுமாயுள்ளது. அது கழுகைப் போல் செல்லுமானால், அது துரிதமான செட்டைகளோடு மிக உயரத்துக்கு செல்வதாயுள்ளது. அது…நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா-? அது காளையைப் போல செல்லுமானால், அது பணிபுரியும் குதிரையாய் இழுக்க முடிந்ததாயுள்ளது, பணிபுரியும் காளையாய் சுவிசேஷ பாரத்தை இழுக்கிறது. நான்கு ஜீவன்களும் நான்கு வல்லமைகளாய் இருந்தன, அவைகள்; மத்தேயு, மாற்கு லூக்கா மற்றும் யோவான் என்பவைகளாயிருந்தன; இந்த நான்கு சுவிசேஷங்களும் தேவனுடைய பிரசன்னத்தில் வெளியே வட்டமிட்டுள்ளன. அது… 688 நீங்கள் கவனித்திருப்பீர்களேயானால், அவைகள் முன்னாலும், பின்னாலும் கண்களை உடையவைகளாயிருந்தன. அவைகள்—அவைகள்…அது எங்கெங்கெல்லாம் சென்றதோ, அதனை பிரதிபலித்தது. அவைகள் எங்கெங்கெல்லாம் சென்று கொண்டிருந்தன என்பதை அவைகள் கண்டன. அது வெளியே செல்லுகிற விதமாக அந்த சுவிசேஷங்களின் வல்லமையும் உள்ளது, அது…அது ஒரு மனிதனின் புத்திசாலித்தனத்தைப் பெற்றுள்ளது; அது கழுகின் வேகத்தைப் பெற்றுள்ளது; அது காளையைப் போன்று வல்லமையை, இழுக்கும் வல்லமையை, பாரம் சுமப்பதாயுள்ளது; அது ஒரு சிங்கத்தின் கண்டிப்பையும், தைரியத்தையும் பெற்றுள்ளது. பாருங்கள், அவை நான்கு சுவிசேஷங்களாய் உள்ளன, அவைகளே வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்தில் உள்ள நான்கு வல்லமைகளாய் உள்ளன. சரி, இப்பொழுது அடுத்தது: 69. இருபத்தி நான்கு முப்பர்கள் யாராயிருக்கிறார்கள்-? சரி, நான் நினைக்கிறேன் அந்த…இருபத்தி நான்கு மூப்பர்கள் யார்-? 689 இப்பொழுது அது எளிமையானது, நாம் அதைப் புரிந்து கொள்ள முடியும். இருபத்தி நான்கு மூப்பர்களும் சிங்காசனத்திற்கு முன்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அது…அது 4-ம் வசனத்தில் கண்டறிப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். “புறப்பட்டுச் சென்ற மற்றொரு…” நான்…நாம் பார்ப்போம், நான்…4:10 690 சரி, வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரம் 10-ம் வசனம். அது சரி. நாம் அதை எடுப்போம். இருபத்து நான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின் மேல் வீற்று இருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுது கொண்டு, தங்கள் கீரிடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து: கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாகி இருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள். 691 இப்பொழுது இருபத்து நான்கு மூப்பர்கள். ஒரு முப்பன் என்பவன் கண்காணியாயிருக்கிறான். இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் பன்னிரண்டு கோத்திரப் பிதாக்களும், பன்னிரண்டு அப்போஸ்தலர்களுமாயிருந்தனர். அவர்கள் ஒரு புறத்தில் பன்னிரண்டு பேர்களும், மறுபுறத்தில் பன்னிரண்டு பேர்களுமாய் உட்கார்ந்துகொண்டிருந்தனர். இருபத்து நான்கு மூப்பர்களாயிருந்தவர்கள், பழைய ஏற்பாட்டு கோத்திரப்பிதாக்கள் ஒருபக்கம் இருந்தனர்; புதிய ஏற்பாட்டு பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மற்றொரு பக்கத்தில் இருந்தனர். இயேசு, “நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்கள்” என்று கூறவில்லையா-? 692 இப்பொழுது அஸ்திபாரங்கள், பாருங்கள், அங்கே ஒரு மரமும் கூட உள்ளது. அந்த மரம் பன்னிரண்டு விதமான கனிகளைத் தரும். அது மாதந்தோறும் அதனுடைய கனியைத் தரும், அது வருடத்தில் பன்னிரண்டு மாதங்களாய் உள்ளன. அது ஒவ்வொரு வருடமும் பன்னிரண்டு விதமான கனிகளைக் கொடுக்கும். பன்னிரண்டு, “ஆராதனை” என்பதைக் குறிக்கும் எண்ணாயுள்ளதை நீங்கள் பாருங்கள். அங்கே இருந்தது இருபத்து நான்கு, இருபத்தி நான்கு, பன்னிரண்டு அப்போஸ்தலர்களும், பன்னிரண்டு கோத்திரப் பிதாக்களுமாகும். அவர்கள் சிங்காசனத்தண்டை வீற்றிருக்கிறார்கள். 693 சரி, இப்பொழுது 4-வது வசனம்…இல்லை நான்காவது கேள்வி: கேள்வி:70. ஆதியாகமம் 38-ம் அதிகாரத்தில் உள்ள சிவப்பு நூல் எதைச் சுட்டிக்காட்டினது-? 694 சிவப்பு நூல், நீங்கள் கவனிப்பீர்களேயானால், அது யூதாவாயிருந்தது. அவனுக்கு குமாரர்கள் இருந்தனர், அவனுடைய குமாரர்களில் ஒருவன் ஒரு கானானிய ஸ்திரீயை விவாகம் செய்தான். இந்த கானானிய ஸ்திரீ எந்த பிள்ளையையும் பெற்றெடுக்கவில்லை, அவனுடைய குமாரனோ மரித்துப் போனான். அதன்பின்னர், அப்பொழுதிருந்த பிரமாணப்படி…அடுத்த குமாரன் சகோதரனுடைய மனைவியை ஏற்றுக்கொண்டு மரித்தவனுக்காக சந்தானம் உண்டாக்க வேண்டியதாயிருந்தது. மற்ற மனிதன் செய்ய வேண்டியதை செய்ய ஒத்துழைக்காததால் கர்த்தர் அவனைக் கொன்று போட்டார். அதன்பின்னர் அவனுக்கு இன்னும் ஒரு இளைய குமாரன் இருந்தான்; ஆகையால் யூதா, “இந்த குமாரன் பெரியவனாகி அவன் விவாகம்பண்ணும் ஸ்தானத்தை அடையும் வரை நீ காத்திரு” என்றான். 695 அவன் பெரியவனாகி, தன்னுடைய இரண்டு சகோதரரின் முந்தின மனைவியை விவாகம் பண்ணி, அவனுக்கு முன் மரித்துப் போயிருந்த தன்னுடைய சகோதரர்களுக்கு சந்தானம் உண்டாக்க வேண்டிய ஒரு ஸ்தானத்தை அடைந்தபோது, யூதா அந்த ஸ்திரீயை (கானானிய ஸ்திரீயை) அந்த குமாரனுக்கு, அந்த பையனுக்குத் தராமல் அப்படியே அவனை விட்டுவிட்டான். ஆகையால் அவன் தவறு செய்து கொண்டிருந்தான் என்பதை அவள் கண்டு, அவள் வெளியே போய் தன்னுடைய முகத்தின்மேல் ஒரு முக்காடு போட்டுக் கொண்டு, ஒரு வேசி அமர்ந்திருப்பது போல ஒரு பொதுவான இடத்தில் அமர்ந்திருந்தாள். 696 யூதா அந்த வழியே வந்தபோது அந்த ஸ்திரீயை ஒரு வேசியென்று எண்ணி, தன்னுடைய மனைவியைப் போல அந்த ஸ்திரீயை அழைத்துச் சென்று, அவளோடு சேர்ந்தான். அப்பொழுது அவள், “நீர் என்னோடு சேருவதற்கு என்ன பேரம் தருவீர்-?” என்று கேட்டாள். அவன்…அவள் கேட்டாள்… 697 அவன், “நான் ஒரு—ஒரு வெள்ளாட்டுக் குட்டியைத் தருகிறேன்” என்றான். அப்பொழுது அவள், “நீர் அதை செய்வீர் என்பதற்கு இப்பொழுது எனக்கு அடையாளத்தைத் தாரும்” என்றாள். எனவே அவள் அவனுடைய கைக்கோலையும், முத்திரை மோதிரத்தையும் வாங்கி வைத்துக்கொண்டாள். 698 அதன் பின்னர் அவர்கள் ஆட்டுக்குட்டியை கொண்டு வந்த போது, அவர்களால் அந்த வேசியை கண்டறிய முடியாமற் போயிற்று, ஏனென்றால் அவள் ஒரு வேசியாய் இருக்கவில்லை. 699 கொஞ்சங்கழித்து அவள் ஒரு தாயாயிருக்க வேண்டியிருந்தாள் என்பதை அவள் காண்பித்திருந்தாள். அவள் ஒரு தாயாயிருக்க வேண்டியிருந்ததை அவள் காண்பித்தபோது, அவர்கள் யூதாவினிடத்தில் வந்து, “உன்னுடைய மருமகள் வேசித்தனம்பண்ணியிருக்கிறாள்” என்றும், “காரணம் அவள் தாயாக வேண்டியவனாய் இருக்கிறாள், உம்முடைய இரு பையன்களும் மரித்து விட்டார்களே” என்றனர். 700 அப்பொழுது அவன், “அவளை வெளியே கூப்பிட்டு, அவளை சுட்டெரித்துப் போடுங்கள்” என்றான். 701 அப்பொழுது அவள் யூதாவினிடத்தில், “இந்த கைக்கோலும், இந்த முத்திரை மோதிரமும் யாருடையதோ, அந்த மனிதனே இதைச் செய்தான்” என்று சொல்லியனுப்பினாள். சரி, அது அவளுடைய மாமனராயிருந்தது. 702 அப்பொழுது அவன், “என்னிலும் அவள் நீதியுள்ளவள்” என்றான். 703 இப்பொழுது, அவள் தன்னுடைய பிள்ளைகளை பிரவசிக்க வேண்டியதை அறிந்தபோது, அவைகள் இரட்டைப் பிள்ளைகளாயிருந்தன. அந்த இரட்டைப் பிள்ளைகள்…பண்டைய யூத வழக்கப்படி, பிறக்க வேண்டிய முதல் குழந்தைக்கு, அந்த முதல் குழந்தையே, முதல் குழந்தை வெளிப்படும்போது, அதுவே சேஷ்ட புத்திரபாகத்தை உடையவதாயிருந்தது. அது அவளுடைய முதல் குழந்தையாயிருந்தது என்பது நினைவிருக்கட்டும். மற்ற பையன்கள் அவளுக்கு இதற்கு முன்னர் இல்லாதிருந்தது. அவள் இதற்கு முன் ஒருபோதும் ஒரு குழந்தையைப் பெற்றிருந்ததில்லை. 704 அவளுடைய முதல் குழந்தை வெளிப்பட்டபோது, அது முதலில் ஒரு கரத்தையே நீட்டியிருந்தது. எனவே மருத்துவச்சியோ அந்த கையில் ஒரு சிவப்பு நூலை சுற்றிக் கட்டினாள், ஏனென்றால் ஒரு சிவப்பு நூல் கன்னி மரியாளின் முதல் குமாரனின் மீட்பைக் குறித்து பேசினது…சிவப்பு நூல் மீட்பைக் குறித்தாயிருக்கிறது. 705 அவன் தன்னுடைய கையைத் திரும்ப உள்ளே வாங்கிக் கொண்டபோது, மற்றொருவன் முதலில் வெளிப்பட்டான். அவன் அதைச் செய்தபோது, “நீ ஏன் இதைச் செய்தாய்-? முந்தின மற்றவனே சேஷ்ட புத்திரபாகத்தை உடையவனாயிருக்கிறான்” என்று கூறினாள். 706 ஆகையால் அதைத்தான் ஆதியாகமம் 38 பொருட்படுத்துகிறது, நீங்கள் பாருங்கள். அந்த முதல் குழந்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை வரையில் அப்படியே தரித்திருந்தது. அந்த முதலாவது மீட்பின் பிரமாணத்தின் கீழே இருந்தது. 707 …கோவேறு கழுதை குட்டியைக் குறித்து நான் கூறினதை நீங்கள் அறிவீர்கள், நான் அதை குறித்து கூறியிருப்பதை நீங்கள் அறிவீர்கள், அதாவது அதனுடைய கண்கள்…எப்படியெல்லாமோ இருக்க, அதனுடைய காதுகள் நிலைகுலைந்து போய், ஆனால் அதே சமயத்தில் அது ஒரு சேஷ்ட புத்திரபாகத்தோடு பிறந்திருந்தாலும், ஒரு குற்றமற்ற பரிபூரண ஆட்டுக்குட்டியே அதனுடைய ஸ்தானத்தில் மரித்தது. அங்குதான் காரியமே உள்ளது. 708 ஆகையால் அது சேஷ்டபுத்திர பாகத்திற்கானதாயிருந்தது. அந்த முதல் குழந்தை தாயினிடத்திலிருந்து வெளிப்பட்டபோது, அவர்கள் அந்தக் கரத்தைக் கண்டனர். (அது மீண்டும் திரும்ப உள்ளேயும் இழுத்துக்கொள்ளலாம் என்பதையும் அறிந்திருந்தனர்) அவன் அதை உடையவனாயிருந்தான் என்பதை அவன் காண்பிக்கும்படி தன்னுடைய கரத்தை வெளியே நீட்டினபோது, அவனே முதலாவதாயிருந்தான், அப்பொழுது மருத்துவச்சி அவனுடைய கையில் சிவப்பு நூலை சுற்றிக் கட்டினாள், அப்பொழுது அவன் தன்னுடைய கரத்தை திரும்பவும் உள்ளே இழுத்துக் கொண்டான். புரிகிறதா-? ஆனால், அவனே முற்றிலும் முதலாவதாயிருந்தான். அது சிவப்பு நூலாயிருந்தது, சிவப்பு நூல்…வேதாகமம் முழுவதுமே மீட்பையே பொருட்படுத்துகிறது; அது முதல் பிள்ளையின் வருகையை முன்னோக்கியவாறு சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தது. 709 குதிரையின் முதல் குட்டி பிறந்தால், பசுவின் முதல் கன்று பிறந்தால், அது என்னவாயிருந்தாலும், முதலில் பிறந்திருந்த யாவும் (அது பிறந்தவுடன்) மீட்பின் கீழாக, மீட்கப்பட வேண்டியதாயிருந்தது; ஒவ்வொன்றும் மீட்கப்பட வேண்டியதாயிருந்ததே-! அல்லேலூயா-! ஓ, அது என்னை அப்படியே சிலிர்படையச் செய்கிறது. உங்களுக்கு இது புரிகிறதா-? முதலாவது மீட்கப்பட வேண்டியதாயிருந்தது. அது ஒரு பிரமாணமாயிருந்தது. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக-! 710 இயேசு கிறிஸ்து பிறந்தபோது, அவர் முழு உலகையும் மீட்டார்.நிச்சயமாகவே அவர் மீட்டார். பூமியின் மீது சிருஷ்டிக்கப்பட்டிருந்த ஒவ்வொரு சிருஷ்டிக்கும் அவர் மீட்பராய் இருந்தார். அவரே மீட்பராயிருந்தார். அதாவது…எல்லா மீட்பும் அவருக்குள் இருந்தது, வேறு எந்த வழியிலும் உங்களால் ஒருபோதும் வரவே முடியாது, நற்கிரியைகள் மூலமாகவோ, சபையில் சேர்ந்து கொள்ளுதலின் மூலமாகவோ அல்லது அது என்னவாயினும் வேறெந்த வழியில் வரவே முடியாது: நீங்கள் அந்த சிவப்பு நூலின் மூலமாகவே, அந்த மீட்பரின் மூலமாகவே, அந்த இனத்தான் மீட்பரின் மூலமாகவே வர வேண்டும். சரி, இப்பொழுது அடுத்தது. கேள்வி:71. வெகுமதிகள் எங்கே… வெளி-விசேஷம் 11-ம் அதிகாரத்தில் உள்ள இரண்டு சாட்சிகளின் மரணத்தைக் குறித்து அனுப்பப்படவிருக்கிற வெகுமதிகள் என்னவாயுள்ளன-? ஓ, சகோதரன் பாமர், நீங்கள் கடினமாக சில கேள்விகளையே கேட்கிறீர்களே-! 711 இப்பொழுது, மீட்பு, இங்கே இந்த நூல்களை, இந்த சிவப்பு நூலை, நாம் அது மீட்பை பொருட்படுத்தினதைப் பார்க்கிறோம். 712 இப்பொழுது அடுத்த கேள்வியாயிருப்பது: வெளி-விசேஷம் 11-ல் உள்ள வெகுமதிகள் என்ன-? 713 ஒரு நேரம் வந்து கொண்டிருக்கிறது… இப்பொழுது அன்றொரு இரவு பதில் அளிக்கப்பட்ட ஒரு கேள்விக்கே பதில் கூறப்போகிறோம், அதாவது என்னுடைய நண்பராயிருக்கும் ஒரு பிரசங்கியார் யூதரைக் குறித்து எழுதி, அது எப்படி இருக்கும் என்று கேட்டிருந்த கேள்வியே தான். 714 இப்பொழுது இந்த யூதர்களுக்கு மூன்றரை வருடம் வாக்களிக்கப்பட்டு இருக்கிறது. எத்தனை பேருக்கு அது தெரியும்-? எழுபதாவது வாரம் வாக்களிக்கப்பட்டிருந்தது. அதில், “மேசியா வந்து அந்த வாரத்தின் மத்தியிலே சங்கரிக்கப்படுவார்” என்று கூறப்பட்டிருந்தது. மூன்றரை வருடங்கள் கிறிஸ்து பிரசங்கித்து, சரியாக மூன்றரை வருடத்தில், கொல்லப்பட்டார், மூன்று வருடங்களும் ஆறு மாதமும் அவர் பிரசங்கித்தார். 715 அதன் பின்னர் பாழாக்குகிற அருவருப்பு உண்டாகிறது, முகமதியரின் பள்ளி வாசலானது பரிசுத்த ஸ்தலத்தில் கட்டப்பட்டது, அது அங்கே நிற்கும் என்று தேவன் கூறினவிதமாகவே இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே அது சம்பவித்தது. தீர்க்கதரிசி அதைப் பார்த்தான், அதைக் கண்டான், “அவர்கள்…புறஜாதி யுகம் முடிவடையும் வரையில் அது புறஜாதிகள் அங்கே உடைமையாயிருப்பர்” என்று கூறினான். 716 இப்பொழுது இன்னும் மூன்றரை வருடங்கள் வாக்களிக்கப்பட்டு இருக்கின்றன. நீங்கள் கவனிப்பீர்களேயானால், வெளி-விசேஷம் 11-ன் படியான இந்த சாட்சிகள் 1260 நாட்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; சரியாக மூன்றரை வருடங்கள். இப்பொழுது… அவர்கள் இரட்டு வஸ்திரமுடுத்தி இருந்தனர். இப்பொழுது அவர்களுடைய ஊழியத்தையும், அவர்கள் என்னவாய் இருக்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள். இப்பொழுது, இந்த இரண்டு சாட்சிகளும் கொல்லப்படுகின்றனர். 717 இப்பொழுது… புறஜாதி சபையின் எடுத்துக் கொள்ளப்படுதலுக்குப் பிறகு அவர்கள் யூதரிடத்திற்குத் திரும்பினர். விவாகம் செய்து கொண்ட போது ரெபேக்காள் ஈசாக்கோடு ஆபிரகாமினுடைய ஸ்தலத்திற்குள்ளாக கொண்டு செல்லப்பட்டதுபோல, புறஜாதி சபையானது கலியாண விருந்திற்காக பரலோக வீட்டிற்குச் செல்கிறது. ரெபேக்காளும் ஈசாக்கும் ஆபிரகாமுக்கிருந்த முழு உடைமையோடும் வெளியே வந்தனர், அவை யாவும் ஈசாக்கைச் சென்று அடைந்தது. முற்றிலுமாக-! ஈசாக்கு முதலில் விவாகம் செய்து கொள்ளும் வரையில் அது ஈசாக்கினண்டை வர முடியவில்லை. ஓ அல்லேலூயா-! அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. 718 கிறிஸ்து… தேவன் அந்த பரிபூரணத்தில் வாசம் செய்கிறார், அழிவுள்ள சரீரமானது முற்றிலுமாக என்றென்றைக்கும் நித்தியத்தினூடாக நிலைத்து இருக்கும். ஆட்டுக்குட்டியானவரும் மணவாட்டியும் பரலோகத்தில் விவாகம் செய்து கொள்ள, அவளோ முழு சொந்தத்தில் வெளியே நடந்து வருகிறாள். முற்றிலுமாக-! ஈசாக்கும் ரெபேக்காவும் முழு உடைமையில் புறப்பட்டு வந்தனர். 719 இந்த விழா பரலோகத்தில் நடந்து கொண்டிருக்கையில், மணவாட்டி, புறஜாதி மணவாட்டி பிரபுவை (தேவனுடைய குமாரனை) மகிமையில் விவாகம் செய்து கொள்கிறாள்; அவர்கள் விவாகம் செய்து கொண்டு, அங்கே மூன்றரை வருடங்கள் நிகழ்கிற… மோசேயும், எலியாவும்… 720 மோசே ஒரு போதும் மறைந்து விடாமல்… இல்லை, அவனுடைய சரீரம் தூக்கிச் செல்லப்பட்டது. தூதர்கள் அவனைக் கொண்டு சென்றனர், அவன் சரீரத்தில் அழிந்து போய்விடவில்லை, அவன் கிறிஸ்துவின் ஒரு பரிபூரண மாதிரியாய் இருந்தான். அவன் மரித்தபோது, தூதர்கள் அவனைத் தூக்கிச் சென்றனர், அவன் எங்கே அடக்கம் பண்ணப்பட்டான் என்று பிசாசு கூட அறிந்திருக்கவில்லை. அவன் பிராதான தூதனாகிய மிகாவேலிடத்தில் அவனுடைய அடக்கத்தைக் குறித்து தர்க்கித்துப் பேச முயன்றான். அப்படித் தான் வேதம் உரைத்துள்ளது. தேவன் அவனை எடுத்துக் கொள்ளப்படுதலில் கொண்டு சென்றார். 721 எலியா, ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி, அங்கே நடந்து சென்று கொண்டிருந்தபோது, யோர்தானண்டை நடந்து சென்று தன்னுடைய சால்வையை எடுத்து, தண்ணீரை அடித்தபோது, அந்தத் தண்ணீர் வலது, இடது பக்கமாகப் பிரிந்தது. அவன் மலையின்மேல் ஏறிச் சென்றான். எலிசா கூறினான்…எலியா, “நீ எதற்காக என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறாய்-?” என்று கேட்டான். 722 அதற்கு அவன், “உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்க வேண்டும்” என்றான். 723 அப்பொழுது எலியா, “நீ ஒரு அரிதான காரியத்தைக் கேட்டிருக்கிறாய், ஆனால் நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் நீ என்னைக் கண்டால் உனக்குக் கிடைக்கும்” என்றான். அவன் எலியாவை கவனித்துக் கொண்டேயிருந்தான். 724 கொஞ்சங்கழித்து பரலோகத்திலிருந்து ஒரு அக்கினிரதமும், அக்கியமயமான தூதர்களும், அக்கினிக் குதிரைகளும் இறங்கி வந்தது, எலியா அதில் ஏறி மகிமைக்குள்ளாகச் சென்றான். அவன் மரணத்தை ஒரு போதும் ருசிபார்க்கவில்லை, அவன் எடுத்துக் கொள்ளப்பட்டான், அவன் மரிக்க வேண்டியதாயுள்ளதே-! 725 வெளிப்படுத்தின விசேஷம் 11-ன் படியான இந்த இரண்டு தீர்க்கதரிசிகளையும் நீங்கள் கவனிப்பீர்களேயானால், மோசேயும் எலியாவும் செய்த அதேக் காரியத்தை அவர்கள் செய்கிறார்கள். நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, அந்த எலியாவும், மோசேயும் இன்னமும் உயிரோடிருக்கிறார்கள் என்று எனக்கு பொருட்படுத்திக் கூறுகிறீரா-?” என்று கேட்கலாம். முற்றிலுமாக-! 726 ஏன்-? மறுரூப மலைக்கு முன்பே…மறுரூபமலையிலே இயேசு கல்வாரிக்கு செல்லும் முன்னே, அங்கே மோசேயும், எலியாவும் அங்கே நின்று கொண்டு அவரிடத்தில் பேசிக்கொண்டிருந்தனர். நிச்சயமாகவே அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர், அவர்கள் மரித்துப்போகவில்லை. அவர்கள் ஒருபோதும் மரித்துப் போயிருக்கவில்லை; அவர்கள் சாவுக்கேதுவானவர்கள், அவர்கள் மரிக்க வேண்டும். ஆகையால் அவர்கள் ஒரு மகிமையடைந்த நிலையில் அந்த நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். 727 ஆகையால் அவர்கள் திரும்பி வந்து சரியாக மூன்றரை வருடங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழே பிரசங்கிக்கும்போது, புறஜாதிகளிடத்திலிருந்து ஆசீர்வாதங்கள் எடுக்கப்பட்டிருக்கும், (சபையானது எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும்); குளிர்ந்துபோன சம்பிரதாயமான சபையோ கம்யூனிஸ்டுகளினாலும், ரோம அரசாங்கத்தாலும் நாய்களைப் போல வேட்டையாடப்படும், அவர்கள் வேட்டையாடப்படும்போது கொல்லப்படுவர். அப்பொழுது அவர்கள் கொல்லப்படுகின்றனர்; இந்தத் தீர்க்கதரிசிகள் மூன்றரை வருடங்கள் பிரசங்கித்தப் பின்னர், அவர்கள் மகா நகரத்தின்…விசாலமான வீதியிலே கொல்லப்பட்டனர், அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார். அது ஞானர்த்தமாய் சொல்லப்பட்டது, அது முன்னர் எருசலேமாயிருந்தது; பாருங்கள் முன்பு எருசலேம். 728 அவர்கள் மூன்று இராப் பகல் வீதியிலே கிடந்தனர். அதன் பின்னர் மூன்றரை நாளைக்குப் பின்பு ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் எழும்பி நின்றனர். அவர்கள் மற்ற சாவுக்கு எதுவானவர்களைப் போலவே மரிக்க வேண்டியதாயிருந்தது, அவர்கள் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது. அவர்கள் இந்த இரண்டு பிரசங்கிமார்களைக் கொன்றபோது… 729 அவர்கள் தவறானதற்கு எதிராக பிரசங்கித்தனர், அவர்கள் வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தனர். யார் அதைச் செய்தது-? பார்த்தீர்களா-? அவர்கள் வானத்திலிருந்து வாதைகளைக் கொண்டு வந்து,… தங்களுக்கு வேண்டும் போதான எந்த நேரத்திலும்… அவ்வளவு துரிதமாக செய்து பூமியை வாதித்தனர். அவர்கள் வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தனர். தங்களுக்கு வேண்டும் வரை மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைத்தனர். அது யாராயிருந்தது-? சரியாக மோசேயும், எலியாவுமே. அவர்களே இரண்டு சாட்சிகளாய் இருக்கிறார்கள். 730 அவர்கள் சபையை இல்லை உலகத்தை வேதனைப்படுத்தின போது, தங்களுடைய பிரசங்கத்தினால் யூதர்களை திரும்ப ஏற்றுக் கொள்ளச் செய்து, அவர்களை மனந்திரும்பதலுக்குக் கொண்டு வந்து, அவர்களை திரும்ப விசுவாசிக்கும்படிக்கு கொண்டுவந்து…மணவாட்டிக்காக இயேசு வருவதை அவர்கள் காணும்போது, அவர்கள், “இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், அது அவரே-!” என்று கூறுவர். ஆனால் அவர் அவர்களுக்காக வரவில்லை; அவர் தம்முடைய மணவாட்டிக்காக வருகிறார். அவருடைய மணவாட்டி… 731 யோசேப்பு எகிப்திற்குச் சென்றபோது, அவன் தன்னுடைய சகோதர்களை தன்னோடு அழைத்துச் செல்லவில்லை, ஆனால் அவன் அங்கே தன்னுடைய மணவாட்டியை பெற்றுக்கொண்டான். முற்றிலுமாக-! ஆனால் அவன் தன்னை தன்னுடைய சகோதரர்களுக்கு வெளிப்படுத்தினபோது, அப்போது அங்கே யாருமே இருக்கவில்லை. அது முற்றிலும் உண்மை. அவர் தம்மை இந்த யூதர்களுக்கு வெளிப்படுத்தும்போது, அப்பொழுது அங்கே யூதர்களைத் தவிர வேறுயாரும் இருக்கமாட்டார்கள். அங்கே யோசேப்பைக் கொன்றவர்கள் அங்கே நின்றனர்; அப்பொழுது அவனோ, “நான் தான் யோசேப்பு, உங்களுடைய சகோதரன்” என்றார். அவன் அழுதான். 732 அப்பொழுது அவர்களோ, “இப்பொழுது அதற்கான தண்டனை எங்களுக்கு உண்டு என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம், ஏனென்றால் நாங்கள் அவனைக் கொன்றுபோட்டோம்” என்றனர். 733 அதேக் காரியம், அந்த யூதர்கள் இப்பொழுது வருகைக்கு சற்று முன்னர் பெரிய இக்கட்டு காலத்தை உடையவர்களாயிருக்க, துன்புறுத்தலோ அவர்களை திரும்பவும் தாய் நாட்டிற்கு ஓடச் செய்யும். அது ஒரு கூட்ட ஆடுகளைத் திரும்ப அப்பாலுள்ள கர்மேல் பர்வதத்திற்கு அவைகளை விரட்டுகிறது போன்றதாயுள்ளது. 734 கர்த்தராகிய இயேசு தம்முடைய மணவாட்டிக்காக வரும்போது, அவர்கள் அவரைப் பார்ப்பார்கள், அப்பொழுது அவர்கள், “இவருக்காக காத்திருந்தோம், அதோ அவர் இருக்கிறாரே-!” என்பார்கள். அவர் தம்முடைய ஆரோக்கியமான செட்டைகளோடு எழும்புவார். அது உண்மை. 735 சபை, மீதமுள்ள யூதர்கள், அவர்கள் இந்த இரண்டு தீர்க்கதரிசிகளைக் கொல்லும்போது, அவர்கள் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும் சோதோம், எகிப்து என்ற வீதியில் கிடப்பர், அங்கே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார். அப்பொழுது அவர்கள் ஒருவருக்கொருவர் வெகுமதிகளை (உலகம் செய்கிறது போல) அனுப்புவார்கள். 736 இப்பொழுது, சகோதரன் பாமர், நீர் இங்கே இருக்கிறீர். முழு உலகத்திலும் ஒரே ஒரு தேசமே ஒரு யுத்தத்திற்குப் பிறகு வெகுமதிகளை எப்போதும் அனுப்பினதாயுள்ளது, அதுவே ரோம சாம்ராஜ்யம் என்பதை நீர் ரோம சரித்திரத்தை திருப்பிப் பார்த்தால் கண்டறிவீர். 737 அந்தக் காரணத்தினால் தான் அந்திக் கிறிஸ்து ரோமாபுரியில் இருந்து வருகிறான் என்று நான் கூறுகிறேன். மிருகம் ரோமாபுரியிலிருந்து வருகிறது, அது மாஸ்கோவிலிருந்து வரமுடியாது. அது ரோமபுரியிலிருந்தே வருகிறது, அந்த வலுசர்ப்பம் அந்த ஸ்திரீ தன்னுடைய பிள்ளையை பெற்றவுடனே அதைப் பட்சித்துப் போடும்படிக்கு நின்றது. அந்த பிசாசு, அந்தப் பிசாசு எங்கே இருந்தது-? அது யாராயிருந்தது-? அகஸ்துராயன் ஆட்களை அனுப்பி, இரண்டு வயத்திற்குட்பட்ட ஆண் பிள்ளைகளையெல்லாம் கொன்று போட்டான். அந்த வலுசர்ப்பம், சர்ப்பம், மிருகம், “வல்லமையைக்” குறிக்கிறது. அந்த ரோம அதிகாரம் அந்த பிள்ளை கிறிஸ்துவைக் கண்டறிந்து துன்பப்படுத்த முயன்றது. 738 அந்த அதேக் காரியம் தான்-! ஒவ்வொரு முறையும் அந்த ரோமர்கள், அந்த பண்டைய அஞ்ஞான ரோமர்கள் ஒரு பெரிய வெற்றியைக் கொண்டாட வழக்கமாக அவர்கள் வெள்ளைக் கற்களையும் மற்ற ஒவ்வொருகாரியத்தையும் ஒருவருக்கொருவர் அந்தவிதமான வெகுமதிகளை ஒரு நினைவாக அனுப்புவார். ஆகையால் அந்த கற்கள்…அது என்னவாயிருந்ததென்றால், ரோம சபையானது அந்த சிறு வெகுமதிகளை அவர்களுக்கிடையே அனுப்பிக் கொண்டதாயிருந்தது. முற்றிலுமாக-! சரியாக. அது அவ்வாறு சம்பவிக்க வேண்டியதாயுள்ளது. 739 நான் அங்கே வாடிகன் நகரத்தில் நின்று அதை வேதாகமத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தேன். போப்பாண்டவர் மூன்று கிரீடங்களை அணிந்து கொண்டிருக்கிறார், விக்காரிவ்ஸ் பிலிஐ டெய் என்று நான் கேள்விப்பட்டிருக்கிற அந்த எல்லாக் காரியங்களும் முற்றிலும் உண்மையாயிருக்கிறது; ஒரு மதசம்பந்தமான கூட்டமே வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு தேசத்தையும் ஆளுகை செய்கிறது, அதுதான் செய்கிறது. அங்கு உள்ள அது அவ்வண்ணமாகவே உள்ளது. 740 கத்தோலிக்க ஜனங்களுக்கு எதிராக ஒன்றுமேயில்லை, (இல்லை ஐயா), அவர்கள் எவரையும் போல நல்லவர்களாகவே உள்ளனர், ஆனால் அவர்களுடைய மார்க்கமோ இந்த வேதத்தின் படியில்லாமல் தவறானதாயுள்ளது. இந்த வேதம் சரியானதாயிருந்தால், அவர்கள் தவறாயிருக்கிறார்கள். அவர்கள் கூறுவது…“வேதம் என்ன கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, அதாவது சபை என்னக் கூறுகிறது என்பதே முக்கியம்” என்கின்றனர். வேதம் தலைமையான உச்ச அதிகாரத்துடன் பேசுகிறது என்பதை நாம் விசுவாசிக்கிறோமே-! முற்றிலுமாக, அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. 741 ஆகையால் நீங்கள் அங்கு பாருங்கள், அப்பொழுது அனுப்பப்பட்டிருந்த அந்த கற்கள், இங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தக் கற்களே வெகுமதிகளாக ஒருவருக்கொருவர் அனுப்பினர். அது எதை மாத்திரம் காண்பிக்கப்போவதென்றால்…வேதம் இங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில், “ஞானமுள்ளவன் இந்த மிருகத்தின் இலக்கத்தைக் கணக்குப்பார்க்கடவன். ஞானமுள்ளவன் இன்ன—இன்னதைச் செய்யக்கடவன். குறிப்பிட்ட வரங்களின் ஆவியையுடையவன் இன்ன—இன்னதைச் செய்யக்கடவன்” என்று உரைத்துள்ளது. சபையானது எவ்வளவு குறைவுள்ளதாயிருக்கிறது என்று நீங்கள் பார்த்தீர்களா-? 742 இந்தக் காலையில் ஒரு வாலிபன் என்னிடத்தில் ஆவிக்குரிய வரங்களைக் குறித்தும், அந்நிய பாஷைகளில் பேசுவதைக் குறித்தும் கேட்டான். ஒரு வாலிப நபர், மிகவும் உண்மையாய் இருந்தான், இந்நாட்களில் ஒன்றில் அவன் ஒரு ஊழியக்காரனாயிருப்பான் என்று நான் நினைக்கிறேன். அப்பொழுது சபையைக் குறித்து நான், “அங்கே அதிக மாம்சப்பிரகாரமானவை உள்ளன. எங்களுக்கு அது வேண்டாம், ஆனால் எங்களுக்கு உண்மையான காரியமே வேண்டும். நாங்கள் அதையே பெற்றுக் கொள்ள வாஞ்சிக்கிறோம்” என்று கூறினேன். 743 நீங்கள் போய் அதை சபையில் போதிக்க முடியாது; நீங்கள் அறிந்த முதல் காரியம், நீங்கள் பெற்றிருப்பதோ, ஒருவன் அந்நிய பாஷையில் பேசுவதைப் பெற்றுள்ளான், ஒருவன் ஒரு சங்கீதம் பாடுகிறான், அப்பொழுது அந்த காரியத்தில் உங்களுக்கு சண்டை உண்டாகிறது. ஆனால் தேவன் ஒரு வரத்தை முதன்மையான நிலையில் அறிந்திருக்கும்போது, அது தன்னை வெளிப்படுத்தும். அது உண்மை பாருங்கள், அதுதான் தேவனுடைய வரங்கள், அந்தவிதமாகத்தான் ஜெயங்கொள்வதற்காக அவர் சபைக்கு அனுப்புகிறார். 744 இப்பொழுது, அந்திகிறிஸ்து ஆதரவாகவும் எதிராகவும் இருப்பது போன்று ஒரு காரியத்தை உடையவனாயிருக்கிறான். அது அந்த காரியத்தை தாறுமாறாக்கப்பட்ட வழியில் செய்வதையே உடையதாயிருக்கிறது. அந்த ரோம சாம்ராஜ்யத்தில் ஒருவருக்கொருவர் வெகுமதிகளை, மாம்சபிரகாரமான வெகுமதிகளை அனுப்பிக் கொள்கின்றன. தேவன் ஜெயங்கொள்பவர்களுக்கு ஆவிக்குரிய வரங்களை அனுப்புகிறார்; ரோமாபுரியில் மாம்சபிரகாரமான வெகுமதிகளையே ஒருவருக்கொருவர் அனுப்பிக்கொள்கின்றனர். 745 பரிசுத்த ஆவி ஒரு ஆவியாயுள்ளது என்று நாம் விசுவாசிக்கிறோம், உன்னதத்திலிருந்து வருகிற ஒரு அபிஷேகத்தினால் நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம். 746 கத்தோலிக்க சபையோ, “பூசை நேரத்தில் வழங்கப்படும் ஒரு பரிசுத்த அப்பமே கிறிஸ்துவின் சரீரமாயுள்ளது; அதாவது நீங்கள் இந்த கோஷர் அப்பத்தை உட்கொள்ளும்போது, அதுவே பரிசுத்த ஆவியாயுள்ளது, பரிசுத்த ஆவியாய், பரிசுத்த திருப்பலியாயுள்ளது” என்று போதிக்கிறது. புரிகிறதா-? 747 அது ஒரு அப்பத்துண்டு என்றே நாம் நம்புகிறோம், அது கிறிஸ்துவின் சரீரம் என்று நாம் விசுவாசிப்பதில்லை, (நாம் அதை இன்னும் ஒரு சில நிமிடங்களில் எடுக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்) அது கிறிஸ்துவின் சரீரத்தைச் சுட்டிக் காட்டுகிறது என்று நாம் விசுவாசிக்கிறோம். ஆனால் அதுவல்ல… 748 அதுவே கத்தோலிக்கத்துக்கும், பிராட்டெஸ்டன்டு உபதேசத்துக்கும் இடையே உள்ள வித்தியாசமாயுள்ளது. புரிகிறதா-? கத்தோலிக்க சபையோ, “சரீரமாய்…அப்பமே உண்மையான சரீரமாயுள்ளது. சபையானது இதை மறுரூபப்படுத்தும்படியான வல்லமையைப் பெற்றுள்ளது” என்று கூறுகிறது. ஒரு கத்தோலிக்கன் ஒரு கத்தோலிக்க ஆலயத்தைக் கடந்து செல்லும்போது, தன்னுடைய தலையைத் தாழ்த்தி சிலுவை போட்டுக்கொள்வதை நீங்கள் எப்போதாவது பார்த்துள்ளீர்களா-? ஏனென்றால் அந்த ஆலயத்தின் உள்ளே அங்கே அந்த சிறு வாசஸ்தலத்தின் கீழே அந்த சிறு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அங்கே உள்ளே ஒரு சிறு விளக்கு எரிந்துகொண்டிருக்க, அங்கே உள்ளே கோஷர் அப்பம் கீழே வைக்கப்பட்டிருக்கும். “அதுவே கிறிஸ்துவின் சரீரம் என்கின்றனர். நீங்கள் அதை உட்கொள்ளும்போது, நீங்கள் உங்களுடைய முதல் இராபோஜனம் மற்றும் உங்களுடைய அறிக்கைகள் போன்றவற்றின் பேரில் உண்மையாகவே கிறிஸ்துவின் சரீரத்தையே முற்றிலுமாய் புசிக்கிறீர்கள். நீங்கள் உண்மையாகவே கிறிஸ்துவின் சரீரத்தையே புசித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்கின்றனர். 749 அது கிறிஸ்துவின் சரீரத்தையே சுட்டிக் காண்பிக்கிறது என்று நாம் கூறுகிறோம், பாருங்கள், அதாவது அது ஒரு துண்டு அப்பமேயல்லாமல் இந்த உலகில் வேறொன்றுமில்லை. அது அப்பமாயில்லாமலிருந்தாலும் கூட கவலைப்பட வேண்டியதில்லை, அது மற்ற வேறெந்த காரியமாயிருந்தாலும், அது அதையே சுட்டிக்காட்டினதாயிருந்தது, சரியாக. அவர்கள்… 750 இந்த ஜனங்கள் கூறுவதைப் போல, “நான் ஒரு குளத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட விரும்பவில்லை. நான் நதியில் ஞானஸ்நானம் பண்ணப்பட விரும்புகிறேன்” என்கின்றனர். 751 நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படுதலைப் பொருத்த வரையில் அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது-? அது ஒரு குளத்தில் இருந்தால்,…ஏன்-? பிலிப்பு…காந்தாகே என்பவளின் மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்த போது, ஒரு குளத்தில் தான் ஞானஸ்நானம் கொடுத்தான். பிலிப்பு மந்திரிக்கு குளத்திலே ஞானஸ்நானங்கொடுத்தபோது, பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவை இருநூறு மைல் தூரம் காணப்படாதபடிக்கு அவனை அவ்வளவு தூரத்திற்கு எடுத்துக் கொண்டு சென்று விட்டார். அவன் ஆவியில் எடுத்துக் கொள்ளப்பட்டான், இருநூறு மைல்தூரம் செல்லுமளவிற்கு பரலோகத்தில் இருந்து ஒரு—ஒரு இரதத்தை அவனுக்கு அளித்தார். ஆமென். அற்புதம்-! இப்பொழுது: ஆயிர வருட அரசாட்சிக்குப் பிறகு பரிசுத்தவான்கள் எங்கே இருப்பர்-? அவர்கள் எந்த விதமான ஒரு சரீரத்தைப் பெற்றுக் கொள்வார்கள்-? நான் இன்னும் ஒரு நொடியில் அதற்கு திரும்ப வருவேன். [சகோதரன் பிரான்ஹாம் இதற்கு 74-ம் கேள்வியின் துவக்கத்தில் 820 பாராவில் பதிலளிக்கிறார்-ஆசி.] அவர்கள் இயேசுவோடு இருப்பார்கள். 752 சரி, ஏழாவது கேள்வி: கேள்வி:72. நாம் தூதர்களை எப்படி நியாயந்தீர்ப்போம்-? 753 அது கண்டறியப்பட்டு உள்ளது. நாம் எப்படி தூதர்களை நியாயந்தீர்ப்போம்-? தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருப்பதினாலேயாம். தூதர்கள் ஊழியக்காரர்களாய் இருக்கிறார்கள்; நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய் இருக்கிறோம். நாம் தூதர்களை நியாயந்தீர்ப்போம் என்று வேதம் கூறியுள்ளது. அது உண்மை. இப்பொழுது, இப்பொழுது நீங்கள்… 8-வது கேள்வி: கேள்வி:73. கொரிந்தியர் முதலாம் நிரூபத்தில் தூதர்கள் நிமித்தமாக முக்காடிட வேண்டும் என்று ஏன் கூறப்பட்டுள்ளது-? 754 இப்பொழுது யாராவது ஒருவர் எனக்காக I கொரிந்தியர், 11-ம் அதிகாரத்தை எடுங்கள், நீங்கள் அதைக் கண்டறியும்படியாய்… நாம் அங்கே பார்ப்போம். I கொரிந்தியர் 11-வது அதிகாரத்தில், பவுல் அதைக் குறித்து பேசிக் கொண்டு இருக்கிறதை நாம் கண்டறிகிறோம். நான் இன்னும் ஒரு நிமிடத்தில் அதற்கு வரவுள்ளேன், அப்பொழுது நாம் அதை உடனே வாசித்து, நாம்—நாம் அதற்கு கீழேயே பதிலைப் பெற்றுக் கொள்வோம். 755 இங்குள்ள இந்த மற்ற வசனத்தின் பேரில் நான் ஒரு காரியத்தைக் கூற வேண்டும், அதாவது நாம் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டியவிதமாகவே கர்த்தர் அதை நமக்குத் தருகிறார் என்று நான் நம்புகிறேன். யாராவது அதை எடுத்திருந்தால்,… அது 11-ம் அதிகாரத்தில் உள்ளது என்று நான் நினைக்கிறேன், ஆம் சரி. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், நீங்கள் அதை புரிந்து கொள்ளும்படியாக உண்மையாகவே இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது நான் இதை வாசித்தப்பிறகு, நீங்கள் பாருங்கள், அதன் பேரில் வியாக்கியனிக்கும் வரை உங்களுடைய சிந்தையை எங்கும் சிதறவிடாதீர்கள். உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள், இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்: நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். (பவுல், “நான் கிறிஸ்துவை பின்பற்றுகிறது போல நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்” என்றான்.) சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக் கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன். ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாய் இருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாய் இருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாய் இருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். 756 அது எப்படி உள்ளது என்று புரிகிறதா-? தேவன், கிறிஸ்து, மனிதன், ஸ்திரீ. இப்பொழுது: ஜெபம் பண்ணுகிற போதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்த புருஷனும் கிறிஸ்துவை கனவீனப்படுத்துகிறான். ஜெபம் பண்ணுகிற போதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்… 757 இப்பொழுது இன்னும் ஒரு நிமிடத்தில் புரிந்து கொண்டு, ஸ்திரீக்கு தலைமுடியே அவளுடைய முக்காடாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உங்களுக்கு காண்பிப்போம்: …அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே. (அவள் தன்னுடைய முடியை கத்தரிக்கப்போவதாயிருந்தால், அப்பொழுது அதை சிரைத்துப் போடக்கடவள் என்பதையே அது பொருட்படுத்துகிறது.) ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால், தலைமயிரையும் கத்தரித்துப் போடக்கடவள்; (சவரம் செய்தல் என்பது சிரைத்துப் போடுதலையே பொருட்படுத்துகிறது, பாருங்கள்)… தலைமயிர் கத்தரிக்கப் படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக் கொண்டிருக்கடவள். 758 இப்பொழுது நீங்கள் இங்கே கேட்டுக்கொண்டிருக்கிற கேள்விக்கு நேராக வந்து கொண்டிருக்கிறோம். புரிகிறதா-? சரி, வேதாகமத்தின்படி ஒரு பெண்மணி தன்னுடைய தலைமுடியை கத்தரிப்பது தவறாயுள்ளது. இப்பொழுது நீங்கள் இங்கே கவனியுங்கள், மனைவி தன்னுடைய தலைமுடியைக் கத்தரித்தால், கணவன் அவளை தள்ளி விடலாம் என்று வேதம் சட்டப்பூர்வமாக கூறவில்லையா என்று பாருங்கள், இது சரியா அல்லது இல்லையா என்று பாருங்கள். ஒரு மனிதன்… புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாய் இருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை; (அதாவது நீண்ட தலைமுடியை உடையவராயிருத்தல்), ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாய் இருக்கிறாள். (நீங்கள் எப்போதாவது அதைக் குறித்து சிந்தித்ததுண்டா-?) 759 இப்பொழுது நான் இங்கே நிறுத்த விரும்புகிறேன், ஏனென்றால் உண்மையாகவே இதை நன்கு ஆழமாய்ப் பதிய வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன், பாருங்கள். இப்பொழுது நினைவிருக்கட்டும், குட்டையான தலைமுடியையுடைய இலட்சக்கணக்கான அழகான கிறிஸ்தவ ஸ்திரீகளை நான் பார்த்திருக்கிறேன். (அவர்களை இப்பொழுதும் அறிவேன், அவர்களில் அநேகர் இந்த சபையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்). நான் அதை உங்கள் மீது பழியாக சுமத்தலாம், நீங்கள் அந்தவிதமாக போதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றே நான் கூறுகிறேன். புரிகிறதா-? அதுதான் இது. உங்களுடைய பிரசங்கியார் இதை உங்களிடம் ஒருபோதும் கூறவேயில்லை. ஆனால் கூடாரத்தைச் சுற்றி எந்த ஸ்திரீயாவது அந்தவிதமாக இருந்தால், அப்பொழுது அவர்கள் குற்றவாளிகளாயிருக்கிறார்கள். பாருங்கள், ஏனென்றால் நாம் அதைக் குறித்து நிச்சயமாகவே கூறுகிறோம். 760 இப்பொழுது, இப்பொழுது இதைக் கவனியுங்கள்: …புருஷனானவன்… (7-வது வசனம்)… புருஷனானவன்… 761 இப்பொழுது, இங்கே பேசிக்கொண்டிருக்கிறது யார்-? இப்பொழுது, ஒரு சமயம் ஒரு பெண்மணி, “ஓ, பவுல் ஸ்திரீகளை—வெறுக்கும் வயோதிகனாயிருந்தான்” என்று கூறினாள். 762 இப்பொழுது நாம் அந்தக் காரியத்தில் இருக்கையில், நாம் இங்கே கலாத்தியர் 1:8-க்குத் திருப்பி, பவுல் இதைக் குறித்து கலாத்தியர் 1:8-ல் என்னக் கூறுகிறான் என்று பார்ப்போமாக. பவுல் இங்கே கலாத்தியர் 1:8-ல் கூறினதை நீங்கள் கண்டறியலாம். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். 763 இப்பொழுது என்னை குற்றஞ்சாட்டாதீர்கள், நீங்கள் அவனைக் குற்றஞ்சாட்டுங்கள், பாருங்கள். புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை; ஸ்தீரியானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள். 764 இப்பொழுது அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்: புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள். 765 இப்பொழுது, நான் இதை இப்பொழுது உண்மையாகவே அன்புடனும், இனிமையுடனும் பொருட்படுத்திக் கூறுகிறேன், நான் இதைக் கூறுவிதமாகவே நீங்கள் இதை புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அமெரிக்கா… ஒரு சர்வதேச பிரயாணியாய் இருக்கிறபடியால் இதைக் கூறுகிறேன், உலகத்தில் உள்ள எந்த தேசத்தைக் காட்டிலும் அமெரிக்கா தன்னுடைய ஸ்திரீகளுக்கு மிக இழிவான தரமிழந்த சில ஒழுங்கு முறை விதிகளையேக் கொண்டுள்ளது. அமெரிக்கா தங்களுடைய ஸ்திரீகளை செய்ய அனுமதிக்கும் விதத்தோடு ஒப்பிட்டால் பாரீஸூம், பிரான்ஸும் மிக உயரிய வானளாவிய சட்டத்திட்டங்களை உடையதாயிருக்கக் கூடும். அது ஒரு அவமானமாயிற்றே-! 766 அமெரிக்காவின் தேவன் ஸ்திரீ என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்து உள்ளீர்களா-? என்னால் அதை உங்களுக்கு இந்த வேதாகமத்தின் மூலம் நிரூபிக்க முடியும்-? அது உண்மை. கத்தோலிக்கச் சபையானது தங்களுடைய கன்னி மரியாளின் உபதேசத்தை உள்ளேக் கொண்டு வரும்படியாக அது அந்த விதமாக வரவேண்டியதாயுள்ளது என்பதை நீங்கள் தெளிவாக அறிந்து உள்ளீர்களா-? 767 இப்பொழுது, ஒரு ஸ்திரீயானவள் ஒரு புருஷனுக்காக சிருஷ்டிக்கப்படவில்லையென்றால், இல்லை…ஒரு புருஷன் ஒரு ஸ்திரீக்காக சிருஷ்டிக்கப்படவில்லையென்றால், ஆனால் ஸ்திரீயானவள் ஒரு புருஷனுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டாள், அப்படியானால் நீங்கள் எப்படி ஒரு ஸ்திரீயைத் தொழுதுகொள்ள முடியும்-? புரிகிறதா-? இப்பொழுது அது என்ன செய்ததென்றால், அது பாரீஸில் துவங்கி, நவநாகரீக திரைப்படத் துறையான ஹாலிவுட்டில் களமிறங்கியுள்ளது. இப்பொழுது பாரீஸ் தங்களுடைய மாதிரிகளையும், தங்களுடைய நாகரீகங்களையும் மற்றக் காரியங்களையும் பெற்றுக் கொள்ள ஹாலிவுட்டிற்கு வரவேண்டியதாயுள்ளது. அது நம்முடைய அமெரிக்க ஸ்திரீகளை இழிவுபடுத்துகிறதாயுள்ளது. 768 அது என்னவாயுள்ளது-? நம்முடைய தேசமானது ஆண்களை பணியிலிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் இங்கே ஸ்திரீகளை அமர்த்தியுள்ளபடியால், அவ்வளவு இழிவான நிலைக்கு வந்துவிட்டது, ஏறத்தாழ தொண்ணூறு சதவிகிதம் விபசாரிகளாயிருக்கின்றனர். பணியை விட்டுச் சென்றுவிட்ட மனிதரைக் குறித்துப் பேசுகிறோம், நிச்சயமாக, அதற்குக் காரணம் அவர்கள் அங்கே அவர்களுடைய இடங்களில் ஸ்திரீகளை நியமித்துவிட்டனர். அவர்கள் வீதிகளில் சாமாதான அதிகாரிகளாக நியமிக்கும் அளவிற்கு அவர்கள் அவ்வளவு இழிவான நிலையினை அடைந்துவிட்டனர். அது எந்த ஒரு தேசத்திற்கும் அவமானமாயுள்ளதே-! ஆம் ஐயா. நீங்கள் அதைக் குறித்து என்ன செய்யப் போகிறீர்கள்-? 769 “சகோதரன் பிரான்ஹாம், நீர் அதைக் குறித்து என்ன செய்கிறீர்-? நான் அதற்கு மரியாதை அளிக்க வேண்டும், நான் ஒரு அமெரிக்க குடிமகன், பெரிய முதலாளி என்ன செய்யும்படி கூறுகிறாரோ நான் அதை செய்கிறேன். நான்…ஒரு—ஒரு குடும்பம் தன்னுடைய மரியாதையை எப்போதாவது இழக்குமேயானால் (பிள்ளைகள் பெற்றொருக்கு மரியாதை செலுத்துவதை இழந்துவிட்டால்), அந்த குடும்பம் சின்னாபின்னமாகிவிடும். ஒரு—ஒரு சபையானது அதனுடைய மேய்ப்பருக்கு மரியாதை செலுத்துவதை இழந்துவிட்டால், ஏன் அந்த சபையே ஒன்றுமில்லாமல் போய்விடும். ஒரு தேசமானது எப்போதாவது உச்ச நீதிமன்றத்திற்கும், அதனுடைய தீர்மானத்திற்கும் மரியாதை செலுத்துவதை இழந்துவிட்டால், அந்த தேசம் சின்னாபின்னமாகிவிடும். அது முற்றிலும் உண்மை. நாம் அந்தக் காரியங்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் பெரிய முதலாளியாயிருக்கிறார்கள், பாருங்கள். ஆனால் அது துவக்கத்திலேயே சரியாயிருக்கவில்லை. முற்றிலுமாக-! 770 ஒரு மனிதன்…வேதத்தில், ஆதியாகமம் 1-ம் அதிகாரத்தில், தேவன் மனிதனையும் ஸ்திரீயையும் சிருஷ்டித்தபோது, மனுஷனையும், ஸ்திரீயையும் உண்டாக்கினபோது, தேவன் ஏவாளிடத்தில், “உன்னுடைய புருஷன் உன்னை ஆண்டுகொள்வான், உன்னை ஆளுகை செய்பவனாயிருப்பான்” என்று கூறினதை நீங்கள் அறிந்துள்ளீர்களா-? அதை அமெரிக்காவில் பேசிப் பாருங்கள், அப்பொழுது நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று பாருங்களேன்-! பையனே, அதுவல்ல இது, ஸ்திரீ புருஷனை ஆளுகிறாள்; அவர்கள் அதைச் செய்ய வேண்டும், பொது இடங்களில் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. 771 என்னுடைய அறையில் டஜன் கணக்கில் சந்திக்க அங்கே வருகிற ஒழுக்கமான ஸ்திரீகளைக் குறித்து என்னால் கூற முடியும்…எல்லா ஸ்திரீகளுமே எந்த ஒரு நேரத்திலும் வேலை செய்யக் கூடாது என்று நான் கூறவில்லை; அவர்களுடைய கணவன் சுகவீனமாயிருக்கலாம் அல்லது ஏதோ ஒரு காரியமாயிருக்கலாம், அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் பணிபுரியத்தான் வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறில்லையென்றால், அவர்கள் அதைச் செய்யக்கூடாது. அப்பொழுது அவர்களுடைய இடம் வீட்டில் தங்களுடைய சிறிய கோட்டையில் தரித்திருப்பதேயாகும், அங்கேதான் அவர்கள் சரியாக இருக்க வேண்டும். 772 நம்முடைய அமெரிக்க ஸ்திரீகள் போய் விரும்பினவற்றை செய்யும்படியான சிலாக்கியம் பெற்றுள்ளனர். எல்லா மிருகங்களிலும் கூட, அந்தக் காரியம் மேற்கொள்ளும்போது, அது சம்பவிக்கிறது, அது அதனுடைய முழு வார்த்தையுமே இழிவான நிலைக்கு கொண்டு வருகிறது. 773 ஆப்பிரிக்காவில் ஒரு சிறு பறவை உள்ளது. அது ஒரு குறிப்பிட்ட வகையான பறவையாகும். 774 இப்பொழுது, வழக்கமாக, ஆண், பெண் இரண்டிலும் பெண்தான் அசிங்கமானதாயிருந்து வருகிறது. ஆண் தான் எப்பொழுதுமே மிகவும் அழகானதாயிருந்து வருகிறது, ஆண் மான், ஆண் காட்டுமான், நெடுவால் பகட்டு வண்ண சேவல், சேவல்கள் எப்பொழுதுமே மிகவும் அழகாயுள்ளன. ஏனென்றால் பெண் பறவையோ வீட்டில் உள்ள பறவையாகும். அது கூட்டில் அமர்ந்து தன்னுடைய குஞ்சுகளை வளர்க்கிறது. அது பருந்து, பாம்பு, ஓநாய் இன்னும் என்னவெல்லாமோ, பாருங்கள், தன்னுடைய குஞ்சுகளை மறைத்துக் கொண்டு பராமரித்து வளர்க்கிறது. 775 ஆனால் அங்கே அந்த வர்க்கத்தில்…இல்லை பாலியலில் உள்ள அந்த—அந்த ஸ்திரீ இல்லை பெண் அழகில் பிரபலமாகும்போது, அது எப்பொழுதுமே ஒரு இழிவான மாதிரியாகவே உள்ளது. ஆப்பிரிக்காவில், நீங்கள் ஒரு பறவையை எடுத்துக் கொண்டால்…அங்கே ஒரு சிறிய பறவை உண்டு, எனக்குத் தெரிந்த ஒரே ஒரு கண்டத்தில் உள்ள அந்த பெண் பறவை ஆண் பறவையைக் காட்டிலும் அழகாயுள்ளது. அது…அதுவே—அந்த பறவை எப்போதுமே ஒரு விபச்சாரியாக இருந்து வருகிறது. அது சுற்றித் திரிந்து ஒரு ஆண் துணையைக் கண்டறிந்து, பின்னர் ஓடிப் போய் முட்டைகளை இட்டு விட்டு, பின்னர் அது மற்றொரு துணையோடு சேருகிறது, அது தன் துணையை முட்டைகள் மீது அடைகாக்க வைத்து விட்டு, அது போய் மற்றொரு துணையைத் தேடுகிறது. அது முற்றிலும் உண்மை. புரிகிறதா-? நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா-? 776 இப்பொழுது இன்றைக்கு அமெரிக்காவில் உள்ள நம்முடைய ஸ்திரீகளை நோக்கிப் பாருங்கள். ஒரு சில நாட்களுக்கு முன்னர் கென்டக்கியிலிருந்து வந்த ஒரு வாலிபன் இங்கே கென்டக்கியில் உள்ள ஒரு குறிப்பிட்ட தொழிற் கூடத்தில் எண்ணூறு ஸ்திரீகள் பணிபுரிந்து கொண்டிருந்ததாகக் கூறினான். மேலும் அவன், “அவர்களில் நானூறு பேர் முற்றிலும் தெரு விபச்சாரிகளாய், திருமணமான ஸ்திரீகளாய் பிள்ளைகளோடு இருக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்” என்றான். ஒரு நபர் தன்னுடைய மனைவியை அங்கிருந்து அழைத்துச் சென்று, ஒரு குழுவினரோடு அவள் வேலை செய்தபோதே அவளை கொன்று போடவிருந்தான். மற்றொருவன் ஒரு மனிதனைச் சுடச் சென்றான். மற்றொருவவனோ வெட்டிக் கொண்டும் சண்டையிட்டுக்கொண்டுமிருந்தான். அவ்வாறு செய்யக்கூடாது. அது சரியல்ல. 777 ஸ்திரீயை, அவளுக்குச் சொந்தமான சமையலறையில் வையுங்கள், அப்பொழுது எல்லாம் சரியாகிவிடும். ஆனால் நீங்கள் அவளை அங்கே பொது இடத்தில் பணிபுரிய வைக்கும்போது, அவள் ஒழிந்து போய்விடுகிறாள். முற்றிலும்…நான் அதை கூறவில்லை. 778 அமெரிக்க ஸ்திரீகள் தங்களுடைய மூக்குகளை மேலே உயத்தினவாறு அடக்கமின்றி சிரித்து, “அதனால் ஒன்றுமில்லையே” என்று கூறுகிறார்கள். மேலும், “நீர் எனக்குக் காண்பியும்” என்கின்றனர். நிச்சயமாகவே, நீங்கள் அதைச் செய்ய வேண்டும், ஏனென்றால் நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று வேதம் முன்னுரைத்துள்ளது. எனவே நீங்கள் அதைச் செய்யத்தான் வேண்டும். 779 இங்கே…முன்பெல்லாம், நீண்ட காலத்திற்கு முன், ஒரு மெத்தோடிஸ்டு சபையில் ஒரு ஸ்திரீ தன்னுடைய தலைமுடையை வெட்டிக் கொண்டால், அவளை சபையைவிட்டு புறம்பாக்கிவிட்டிருந்தனர். நிச்சயமாகவே, அவர்கள் அதைச் செய்தனர். ஆம், உண்மையாகவே, நசரேயன்கள், யாத்ரீக பரிசுத்தர், பெந்தேகோஸ்துக்கள், அவர்கள் எல்லோருமே வழக்கமாக அதைச் செய்வர். என்ன சம்பவித்தது-? 780 ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா-? நீங்கள் பிரசங்க பீடத்திற்குப் பின்னே சில பெண்மைத் தன்மைக் கொண்டவர்களைப் பெற்றுள்ளீர்கள். அது முற்றிலும் உண்மையே. சிலர் தங்களுடைய ஆகாரச் சீட்டைக் குறித்துப் பயப்படுகின்றனர்…நீங்கள் அவர்களை வெளியேற்றிவிடுவீர்களோ என்றும், சபையிலிருந்து அவர்களை ஓடச் செய்வீர்களோ என்றும் பயப்படுகின்றனர். அவர்கள் உறுதியாய் நிற்பதற்கு மிகுந்த தைரியத்தை பெற்றிருக்கவில்லை, அது புண்படுத்தினாலும் அல்லது அது புண்படுத்தவில்லையென்றாலும், தேவனுடைய வார்த்தையின் பேரில் உறுதியாக நிற்க வேண்டும். அது முற்றிலும் சரியே. 781 புருஷனே ஆளுகை செய்பவனாயிருக்கிறான் என்பதை இங்கே கவனியுங்கள். நீங்கள் இல்லத்தை ஆளுகை செய்யலாம் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். நீங்கள் இல்லத்தை ஆளுகை செய்பவரல்ல. நீங்கள்…முற்றிலுமாக…இப்பொழுது நீங்கள் ஒரு அடிமை அல்ல; ஆனால் நீங்கள் ஒரு துணையாயிருக்கிறீர்கள். ஆதாம்…புருஷன் தன் மனைவியின் மேல் ஆளுகை செய்பவனாயிருக்கிறான், அவன் தன்னுடைய மனைவிக்காக மட்டுமே பொறுப்புள்ளவனாயிருக்கிறான். தேவன் புருஷனை அவனுடைய மனைவிக்காக பதில் கூறச் செய்கிறார். இப்பொழுது, தேவன் இப்பொழுது அதைக் கூறுகிறாரா என்று வாசித்துப் பாருங்கள். புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை… 782 தேவன் ஒரு ஸ்திரீயல்ல, தேவன் ஒரு மனிதனாயிருக்கிறார். உங்களுக்குத் தெரியுமா-? அவர்கள் கன்னி மரியாள் மற்றும் அவை யாவையும், பரிந்து பேச… இல்லை பரிந்துரைத்தல், அது போன்ற ஒவ்வொரு காரியத்தையும் உண்டாக்கினபோது, கன்னி மரியாளிடத்தில் ஜெபிப்பதை உருவாக்கின போது, அது எனக்கு எதை நினைவூட்டுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா-? அது தியானாள் என்ற பெரிய தேவதையை நினைவூட்டுகிறது, பவுல் அதைக் கடிந்து ஒழித்துக் கட்டினான். அது உண்மை. அவன், “காரணம், தேவன் பெண்ணல்லவே-!” என்றான். 783 ஒரு கற்பாறை நிலத்தில் விழுந்த போது, தேவதையே தன்னுடைய சாயலை கீழே வீசியெறிந்தாள் என்று அவர்கள் கூறினர், அந்தக் காரணத்தினால் கொரிந்துவிலே இருந்த ஸ்திரீகள் அங்கே… அந்த தியானாளை ஆராதித்தனர், அவர்கள் பிரசங்கிமார்களாக விரும்பினர். 784 அவர்கள், “ஏன்-? நாங்களும் பிரசங்கிக்கலாம் என்று ஆவியானவர் கூறினார்” என்றனர். 785 அப்பொழுது அவன், “என்ன-? தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது-? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது-? ஒருவன் தன்னைத் தீர்க்கதரியென்றாவது, ஆவியைப் பெற்றவென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன்: சபையிலே ஒரு ஸ்திரீ பேசாமல் அமைதியாய் அடக்கமாயிருக்கக்கடவள், உபதேசம்பண்ணவோ அல்லது அதிகாரஞ் செலுத்தவோ நான் உத்தரவு கொடுக்கிறதில்லை” என்றான். அது சரியே-! அப்படித்தான் வேதம் உரைத்துள்ளது. புரிகிறதா-? தேவன் அதற்காக நியாயத்தீர்ப்பின் நாளிலே ஒரு கூட்ட பிரசங்கிமார்களை பதில் கூறச் செய்யப் போகிறார். 786 கவனியுங்கள்-! நீங்கள், “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் அதற்கு கற்பிக்கப்பட்டேன்” என்று கூறலாம். இப்பொழுது நீங்கள் நன்கு அறிந்துள்ளீர்களே-! அது உண்மை. நீங்களோ அல்லது வேறுயாராவது ஒரு விழுங்கு மருந்தினை எடுத்துக்கொள்ளத் துவங்கினால், அப்பொழுது யரோ ஒருவர் அது ரசாயணமான விஷம் என்று உங்களிடத்தில் கூறியும், நீங்கள்—நீங்கள் போய் எப்படியோ அதை உட்கொண்டால், அப்பொழுது அதற்குபிறகு அது உங்களுடைய சொந்த தவறாயுள்ளது. புரிகிறதா-? 787 இப்பொழுது இதற்கு செவி கொடுங்கள்: புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின் மேல் முக்காடிட்டுக் கொள்ளவேண்டும். 788 உங்களில் எவரேனும் அதை வாசிக்கிறீர்களா-? கொரிந்தியர் முதலாம் நிரூபம் 11-ம் அதிகாரம், 10-வது வசனம். நீங்கள் கவனிப்பீர்களேயானால், “அதிகாரம்” (ஏன்-?) “தூதர்களினிமித்தமாக” I கொரிந்தியர், காரணம் தூதன் மனிதனாய் இருக்கிறான், செய்தியாளனய் இருக்கிறான். பாருங்கள், அது ஆங்கிலத்தில் தூதர்கள் என்ற வார்த்தையின் முதல் எழுத்து சிறிய எழுத்தில் உள்ளது. பரலோக தூதர்களைக் குறித்து எங்கே குறிப்பிடப்பட்டுள்ளதோ, அங்கு அது ஆங்கிலத்தில் அந்த தூதர்கள் என்ற வார்த்தையின் முதல் எழுத்து பெரிய எழுத்தில் உள்ளது. அது எங்கே ஆங்கிலத்தில் தூதர்கள் என்ற வார்த்தையின் முதல் எழுத்து சிறியதாய் குறிப்பிடப்பட்டுள்ளதோ அது தூதர்களாக மனிதர்களைக் குறிப்பதாகும். ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷன் இல்லாமல் ஸ்திரீயுமில்லை. ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறது போல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது. ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது (குட்டைத் தலைமுடியோடு இருப்பது) இலட்சணமாய் இருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக் கொள்ளுங்கள். (அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள்) 789 இப்பொழுது கவனியுங்கள்: புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது… சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறது இல்லையா-? 790 “அது எதைச் சார்ந்ததாயிருந்தது-?” என்று கூறுவீர்களா-? தலைமுடியை. பவுல் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா-? முடியை, தலைமுடியையே-! ஸ்தீரீ நீளமான தலை முடியை வளர்த்திருக்க வேண்டும். இப்பொழுது 14-வது வசனம்: புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்குக் கனவீனமாய் இருக்கிறதென்று… சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா-? 791 உங்களுக்கு இது புரிகிறதா-? ஒரு புருஷன் தலைமுடியை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறது, ஆனால் ஒரு ஸ்திரீ…அது ஒரு ஸ்தீரியின் ஸ்தானமாயுள்ளது. தேவன் ஒரு மனிதனை ஒரு ஸ்திரீயிலிருந்து வித்தியாசமாக உண்டாக்கினார், பால் வேறுபாடு மற்றும் தோற்றம் இன்னும் ஒவ்வொரு காரியத்திலுமே வித்தியாசமாய் உண்டாக்கினார். அவள்…ஒரு…ஆடையை அணியக் கூடாது. வேதமோ, “ஒரு ஸ்திரீ தளர்காற் சட்டைகளை அல்லது ஒரு புருஷனின் உடையையோ தரித்தால், அது தேவனுக்கு முன்பாக அருவருப்பானதாயும், அசுத்தமானதாயும், இழிவான காட்சியாயுமிருக்கும்” என்று உரைத்துள்ளது. தேவன் அதற்கான தண்டனையை அவள் பெறும்படிச் செய்வார். நீங்கள் யாருக்கு செவிகொடுக்கப் போகிறீர்கள்-? ஆனால் இது வேதமாயுள்ளதே-! 792 நீங்களோ சுற்றும் முற்றும் ஓடி, “ஏன்-? அது அருமையானது…என்று நான் கருதுகிறேன், பாருங்கள், ஸ்திரீகள் தளர்காற்சட்டைகளை அணிவது” என்று கூறலாம். ஆனால் தேவன் அவர்களை வித்தியாசமாக உண்டாக்கினார், எனவே அவர்கள் வித்தியாசமாக உடை உடுத்த வேண்டும் என்று விரும்புகிறார். 793 வேதம், “ஓரு ஸ்திரீ ஒரு புருஷனின் உடையைத் தரிப்பது ஒரு அருவருப்பாயுள்ளது” என்று உரைத்துள்ளது. அருவருப்பு என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா-? அது, “தேவனுடைய பார்வையில் இழிவான ஒரு காரியமாய் உள்ளது” என்பதாகும். மகத்தான யேகோவா உங்கள் மீது அசுத்தமாயிருக்கிற காரியத்தை நோக்கிப் பார்க்கிறார்…வேதம் கூறியுள்ளது… 794 நீங்கள் கூறுகிறதோ…இப்பொழுது பெண்மணிகளாகிய உங்களில் சிலர் உங்களுடைய வாலிபப் பருவ பெண்பிளைகளாக பதினெட்டு, பன்னிரெண்டு, இருபது வயதுடையவர்களை அந்தவிதமாக அவள் உடை உடுத்திக் கொண்டு சுற்றித் திரிய அவர்களை அனுமதிக்கிறீர்கள். 795 தாய்மார்களாகிய நீங்களும் கூட-! புரிகிறதா-? நீங்கள் அந்த தளர் காற் சட்டைகள் மற்றவைகளை அணிந்து வெளியே வீதிக்கு செல்லும்போது, அவர்கள் இப்பொழுதெல்லாம் தயாரித்துக் கொண்டிருக்கிற அந்த ஆடைகளை அணியும்போது, அது நீங்கள் இல்லாத ஏதோ ஒன்றாக் நீங்கள் காணப்படும்படிச் செய்கிறது. புரிகிறதா-? நீங்கள் அங்கே வெளியே வீதியில் எல்லோரும் பாலியல் கவர்ச்சியாய் உங்களைக் காணும்படி செல்லுகிறீர்கள், நீங்கள் உங்களுடைய கணவனுக்கு முன்பாக ஒவ்வொரு காரியத்திலும் அவ்வளவு குற்றமற்றவரய், சுத்தமாயிருக்கலாம், ஆனால் நீங்கள் வெளியே வீதிக்குப் போய், அந்தவிதமான நீங்கள் உங்களை கவர்ச்சியாக காண்பிக்கும் காரணத்தால் ஒரு மனிதன் உங்களை நோக்கிப் பார்த்தால், அப்பொழுது நீங்கள் குற்றவாளியாயிருக்கிறீர்கள், அந்தவிதமாக உங்களை நோக்கிப் பார்த்த ஒவ்வொரு மனிதனோடும் விபச்சாரஞ் செய்ததற்காக நியாயத்தீர்ப்பின் நாளிலே பதில் கூறப் போகிறீர்கள். அப்படித்தான் வேதம் உரைத்துள்ளது. 796 வேதம், “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று” என்று உரைத்துள்ளது. எனவே நீங்கள் குற்றவாளியாயிருக்கிறீர்கள்… 797 நீங்கள் நியாயத்தீர்ப்பில் வந்து, “கர்த்தாவே, நீர் என் இருதயத்தை அறிந்திருக்கிறீர்; நான் ஒரு போதும் விபச்சாரஞ் செய்யவேயில்லை, நான் என்னுடைய கணவனுக்கு உண்மையாக வாழ்ந்து வந்தேன்” என்று கூறலாம். 798 ஆனால் இங்கு ஒரு மனிதன் இருப்பார், இங்கே மற்றொருவர் இருப்பார், இங்கே மற்றொருவர் இருப்பார், மற்றொருவர், மற்றொருவர் பதினைந்து, இருபது, முப்பது, அங்கே நாற்பது பேர் நின்று “விபச்சாரக்குற்றத்தைக்” கூறுவர். ஏன்-? யாரோ ஒரு மனிதன் உங்களை நோக்கிப் பார்த்தார். 799 “ஆயினும், எனக்கு அதனோடு எந்த சம்மந்தமும் இல்லை” என்று கூறலாம். நீங்கள் ஏன் உங்களை அந்தவிதமாக காண்பிக்கிறீர்கள்-? தேவன் அந்தவிதமான ஆடைகளை நீங்கள் உடுத்தக் கூடாது என்று உங்களிடம் கூறினபோதும், அதைச் செய்வது அருவருப்பாயிருந்தது, யார் சூசியை நேசிப்பது என்ற நிகழ்ச்சியைக் காணப் போகிறீர்கள் அல்லது அது என்ன… 800 யார் சூசியை நேசிப்பது என்ற நிகழ்ச்சியில் நடிக்கும் பெண்ணுடைய கணவனுக்கு என்ன நேர்ந்தது என்பதை நீங்கள் கண்டறிந்தீர்களா-? நீங்கள் எல்லோரும் அதை இங்கே செய்த்தித்தாளில் பார்த்திருப்பீர்கள்-? நாங்கள் வாமிங்கில் உள்ள காஸ்பர் என்ற இடத்தில் இருந்தபோது, அது வெளியானது. அவனுடைய பெயர் என்ன-? அந்த நபர்…அந்த நாம் சூசியை நேசிக்கிறோம், இல்லை என்ன—அது என்னவாயிருந்தது-?…ஓ, நீங்கள் எல்லோரும் புதன்கிழமை இரவு வீட்டிலேயே தரித்திருந்து அதைப் பார்த்துவிட்டு, ஜெபக் கூட்டத்திற்கு வர தவறிவிடுகிறீர்கள். அது இப்பொழுது என்னவாயுள்ளது-? நாம்…நேசிக்கிறோம் என்ற நிகழ்ச்சி, அதனுடைய பெயர் என்ன-? [ஒரு சகோதரி, “நான் லூசியை நேசிக்கிறேன்” என்று கூறுகிறார்—ஆசி.] நான் லூசியை நேசிக்கிறேன், அவளுடைய கணவன்…நவேடா என்ற இடத்தில் உள்ள் ரெநோவில் நான்கு வருடங்களாக ஒரு கறுப்பு நிற பெண்ணோடு வாழ்ந்ததாக தெரியவந்துவிட்டது…சுவிசேஷத்தை போய் கேட்பதற்குப் பதிலாக அந்தவிதமாக வீட்டிலே தரித்திருந்து தொலைக்காட்சியைப் பார்க்கிறீர்கள். அந்த ஸ்திரீ அதை அறிக்கை செய்தாள். ஓ, இரக்கம்-! கிறிஸ்துவுக்கு புறம்பே யாதொரு சுத்தமும் கிடையாதே-! 801 சகோதரரே, உங்களுடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக-! நான்—நான் உங்களுக்குச் சொல்லுவேன்—நீங்கள், சிலர்…நீங்களோ, “ஓ, என்னே-! சில வர்கங்களைப் பாருங்கள்” என்று கூறலாம். நாம் சில மிக மோசமான அழுகிய பொருட்களை உண்டு வாழும் அழகான பருந்துகளையும் பெற்றுள்ளோம். நீங்கள் ஒரு பறவையை அதனுடைய சிறகுகளைக் கொண்டு நிதானிக்க முடியாது, பாருங்கள். ஆகையால் அதை அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஓ, என்னே-! 802 இப்பொழுது கவனியுங்கள்: புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது (அதுதான் அந்த 14-வது வசன்ம்) அவனுக்குக் கனவீனமாய் இருக்கிறதென்றும்… சுபவாமே உங்களுக்குப் போதிக்கிறது இல்லையா-? (அது ஒரு ஸ்திரீயைச் சார்ந்ததாய் இருக்கிறது.) ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாய் இருக்கிறதென்றும்… 803 இப்பொழுது அவர் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறான்-? கத்தோலிக்க ஜனங்களாகிய நீங்கள் சபையில் அணிந்து கொள்கிற ஒரு தொப்பியையா-? உண்மையில் அது இல்லையே-! ஒரு கைக் குட்டையினால் உங்களுடைய தலையின் உச்சியை சற்று மூடிக்கொள்ளுதலையா-? அவன் உங்களுடைய தலைமுடியைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறானே-! 804 இப்பொழுது-! ஒரு ஸ்திரீ தன்னுடைய தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டால், அவள் தன்னுடைய மகிமையைத் துண்டித்துக் கொள்ளுகிறாளே, அவள் ஜெபிக்க பீடத்தண்டைச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாருங்கள், இங்கே என்ன கூறப்பட்டிருக்கிறதென்றால், “ஒரு ஸ்திரீ ஜெபம் பண்ணப் போகும்போது தலையை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்பது ஒரு வழக்கமான காரியமாயிருக்கிறதல்லவா-?” இங்கே, “அவள் தன்னுடைய தலை முடியை கத்தரித்துக் கொண்டால்,” அப்பொழுது “அவள் சிரைத்துப் போடக் கடவள்” என்று கூறுகிறது. “அவள் சிரைத்துப் போடப்படுவதாயிருந்தால்,” அப்பொழுது, “அது ஒரு அவமானமாயுள்ளது, அதைச் செய்வது ஒரு ஸ்திரீக்கு ஒரு வெட்கக் கேடாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது, நான்—நான் பவுலினுடைய நிரூபத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எல்லோருமே, அதாவது அது உங்களைப் பொறுத்தது, பாருங்கள். ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாய் இருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா-? தலை மயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. 805 அவளுக்கு ஒரு தொப்பி கொடுக்கப்படும் என்று அது கூறியுள்ளதா-? கத்தோலிக்க ஜனங்களாகிய நீங்கள் அல்லது பிராட்டஸ்டெண்டுகளாகிய நீங்கள் சபைக்குச் சென்று ஒரு தொப்பியை அணிந்து கொள்ள விரும்புகிறீர்கள், மேலும், “நான் சபைக்குச் செல்லுகிறபடியால், ஒரு தொப்பியை அணிந்து கொள்ள வேண்டும்” என்று கூறுகிறீர்கள். இல்லை, நீங்கள் உங்களுடைய தலைமுடியை வளர விட வேண்டும். அது தான் வித்தியாசமே. புரிகிறதா-? …தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. (முடியினால் மூடப்படாமல் அவள் சபைக்கு வந்து, பீடத்தண்டை ஜெபிக்கச் செல்வது ஒரு அவமானமாகும்.) ஆகிலும் ஒருவன்…(அந்த வார்த்தையை வாக்குவாதம்…என்று உச்சரிக்கக்கூ டாது என்று நான் நினைக்கவில்லை…) …வாக்குவாதஞ்செய்ய-வாக்குவாதம் செய்ய மனதாயிருந்தால் (வாக்குவாதம் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள்), எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்ட வழக்கம் இல்லை என்று அறியக்கடவன், 806 இப்பொழுது நீங்கள் அதைக் குறித்து வாதிட விரும்பினால், நீங்கள் அதனோடு வாதிடுங்கள். சரி. நீங்கள் அதைக் குறித்து வாக்குவாதஞ் செய்ய வேண்டுமென்றால், “ஓ, அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகிறதில்லை. அவர்கள் வாக்குவாதம் செய்யட்டும். ஏன்-? அதனால் ஒன்றுமில்லை என்று நான் கருதுகிறேன். நான்…அது தலைமுடி என்ன என்பதாயிருக்கவில்லை, எப்படியோ அது இருதயம் என்னவாயுள்ளது என்பதாயுள்ளது.” அது உண்மையே; இருதயம் சரியாயிருக்குமானால், தலைமுடி சரியாயிருக்கும் (உ—ஊ). 807 நீங்கள் வாக்குவாதஞ் செய்ய மனதாயிருந்தால், செய்யுங்கள், பவுல், “எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்” என்றான். மேலும், “நீங்கள் காயீனின் பக்கம் சார்ந்தவராயிருக்க விரும்பினால், போய் சேர்ந்து கொள்ளுங்கள்” என்றான். ஆனால் இதைத்தான் பவுல் கூறிக் கொண்டிருந்தான். 808 ஓ, நான் சிரிக்க வேண்டுமென்பதற்காகக் கூறவில்லை, ஏனென்றால் இது ஒரு சிரிப்பதற்கான காரியம் அல்ல. ஆனால் நண்பர்களே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்தக் காரியங்களை செய்யும்படிக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிற வழியைக் காண்பதே ஒரு அவமானமாயுள்ளது. நான்… 809 கவனியுங்கள்-! என்னுடைய அருமை சகோதரிகளே, உங்களைத்தான், நான் உங்களுடைய மிகச் சிறந்த முறையில், உங்களுடைய சிறந்த முறையில் உங்களைக் காண விரும்புகிறேன், அந்தவிதமாகத்தான் நீங்கள் இருக்க வேண்டும். அந்தவிதமாகத்தான் நீங்கள் இருக்க வேண்டும். உங்களுடைய கணவன் வரும்போது, அவர் உங்களுடைய இனிய இருதயமாயிருந்து வருகிறது போலவே நீங்களும் உங்களால் முடிந்தளவு ஒவ்வொரு காரியத்திலும் இனிமையாயும், புது மலர்ச்சியாயும் இருக்க வேண்டும். நீங்கள் அவரை அந்த நாளில் பீடத்தண்டையிலே உங்களுடைய கணவராயிருக்கும்படி முத்தமிட்டதுபோன்றே ஒரு இனிமையான முத்தத்தோடு நீங்கள் அவரை இப்பொழுது வாசலண்டை சந்திக்க வேண்டும். அது உண்மை. மிகச் சிறந்த முறையில் காணப்படுவதற்காக, மிகச் சிறந்த முறையில் இருப்பதற்காக நான் உங்களை குற்றப்படுத்துகிறதில்லை. நீங்கள் அந்தவிதமாயிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் விரும்புவதை தேவன் அறிவார். 810 இங்கே அண்மையில், நான் ஜேக் சூளரிடத்தில் பேசிக்கொண்டிந்தேன். ஜேக் சூளரைப் பற்றி யாரேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா-? மெத்தோடிஸ்டுகள் பெற்றுள்ள மிகவும் புகழ்வாய்ந்த பிரசங்கியார். அவர், “ஒரு ஸ்திரீ அவரிடத்தில் வந்து கூறினதை கூறினார்…அதாவது தலைமுடி முழுவதும் அழுக்காயும், மெல்லும் சவ்வு மிட்டாயை மென்றுகொண்டே, பாதியளவே ஆடையணிந்தவளாய் வந்து, உங்களுக்குத் தெரியுமா, என்னுடைய கணவர் என்னோடு இனி ஒருபோதும் சகிப்புத் தன்மையோடு இருக்க விரும்பவில்லை” என்று கூறினானாம். 811 அதற்கு அவரோ, “நான் அவரைக் குற்றப்படுத்தமாட்டேன்” என்றாராம். 812 அது உண்மை. இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், நீங்கள் சரியான விதமாயிருக்க வேண்டும். உங்களுடைய புத்துணர்ச்சியையும், அழகையும் நவநாகரீக திரைப்படத் துறையான ஹாலிவுட்டிலிருந்து எடுத்துக் கொள்ளாமல், தேவனுக்கு முன்பாக வேதத்திலிருந்து அதை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பெண்மணியாயிருங்கள், ஒரு பெண்மணியைப் போல நடந்துகொள்ளுங்கள், ஒரு பெண்மணியைப் போல உடை உடுத்திக்கொள்ளுங்கள், சுத்தமாயிருங்கள். ஒரு பெண்மணியைப் போல நடந்துகொள்ளுங்கள், அந்த…அணிந்து கொள்ளாதீர்கள்… 813 தன்னுடைய மனைவி அந்தவிதமான அற்பமான காரியங்களை அணிந்து மனிதருக்கு முன்பாக வெளியே செல்ல அனுமதிக்கும் எந்த மனிதனும், அந்த பழைய காரியங்களை…அதுபோன்ற காரியங்களை அணிந்து கொண்டு வெளியே வந்து புல்வெட்ட முற்றத்திற்கு சென்றாலும்…திருவாளரே, சகோதரனே, நான் உனக்குச் சொல்லுகிறேன், நான்—நான் இழிவாகக் கூற வேண்டும் என்று கருதிக் கூறவில்லை, நான்…அது என்னுடைய இருதயத்தில் உள்ளது என்பதை தேவன் அறிந்திருக்கிறார். ஆனால்…என்னுடைய மனைவி அதைச் செய்ய நான் அனுமதிக்கும் முன்பே நான் பெரும் மாற்றத்தை உடையவனாயிருக்க வேண்டும். நீங்கள் பாருங்கள், என்னால் முடிந்தளவு நான் அந்தக் குன்றின் மேல் முதலாளியாயிருக்கிறேன். என்னால் இருக்க முடியாமற் போகும்போது, நான் அங்கிருந்து வெளியேறிவிடப் போகிறேன். அது உண்மை. 814 ஓ, சகோதரனே, ஸ்திரீ அதைச் செய்வது ஒரு வெட்கக்கேடாயும், ஒரு அவமானமாயும் உள்ளது. சகோதரியே நான்—நான் இழிவுபடுத்திக் கூறவில்லை…நான்—நான் உங்களுக்கு அவமதிப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கவில்லை, இங்கே வருகிற ஜனங்களில், எங்களுடைய சபையில் இங்கே அப்படிப்பட்ட அங்கத்தினர்கள் இல்லை என்றே…நான் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இது ஒரு தேவனுடைய வீடாய் உள்ளது, எனவே அந்தக் காரியங்களை ஜனங்கள் அணிந்து கொள்ளக் கூடாது என்றே முற்றிலுமாய் நாம் கூறுகிறோம். அதாவது அது…நீங்கள் நியாயத்தீர்ப்பின் நாளிலே அதற்காக பதில் கூறப்போகிறீர்கள். இப்பொழுது இங்கே கவனியுங்கள். உங்களுடைய தலைமுடியை வளரவிடுங்கள், பாருங்கள், ஒரு பெண்மணியாயிருங்கள். 815 இப்பொழுது: உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறதே. முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன்;…(அது இப்பொழுது இராபோஜன பந்தியண்டைக்குச் செல்கிறது) 816 இப்பொழுது அதற்கு செவி கொடுங்கள். அந்தக் காரணத்தினால் தான் தூதர்கள்… 817 இப்பொழுது, சகோதரன் பாமர், நான் இங்கே பிரசங்கித்துக் கொண்டிருக்கிற அதேக் காரியத்தையே நீர் அங்கே பிரசங்கிக்கிறீர் என்று இந்த ஒலி நாடாவில் நான் உங்களுக்கு கூறவில்லையா. ஆனால் நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள், நீங்கள் ஒரு பிரசங்கியாயிருக்கிறபடியால், சகோதரே, அது சத்தியம் என்பதை நீர் அறிந்திருக்கிறீர். சரி. 818 ஆகையால் இங்கே தூதர்கள் என்று உள்ளது “மனிதனைக்” குறிக்கிறது. நீங்கள் அதை கவனிப்பீர்களேயானால், சகோதரன் பாமர் அவர்களே, அது ஆங்கிலத்தில் சிறிய எழுத்துகளில், “தூதர்கள்” என்று உள்ளது. வேதம் தொடர்ந்து கூறும்போது…அவன் புருஷனையும், ஸ்திரீயையும் குறித்தே பேசிக்கொண்டிருக்கிறான், பாருங்கள், அதுதான் பொருளாய் உள்ளது. 819 அந்த விதமாகவே ஜனங்கள் வேதாகமத்தில் மிகவும் குழப்பமடைந்து, அவர்கள், “நல்லது, தேவன் இங்கே ஒரு காரியத்தைக் கூறுகிறார், ஒன்று…” என்கிறார்கள். இல்லை, நீங்கள்—நீங்கள் பாடப் பொருளைவிட்டு அகன்று செல்லுகிறீர்கள். அதேப் பாடப் பொருளின் பேரில் தரித்திருங்கள், அவ்வளவுதான். அவன் புருஷனையும், ஸ்திரீயையுங் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். 820 நாம் முடிப்பதற்கு முன்பு, இப்பொழுது நான் இன்னுமொரு காரியத்தைத் தொட விரும்புகிறேன், அதற்கு எனக்கு ஏறக்குறைய இரண்டு நிமிடங்கள்தான் தேவைப்படும். கேள்வி:74. ஆயிர வருட அரசாட்சிக்குப் பிறகு பரிசுத்தவான்கள் எங்கே இருப்பர்-? அவர்கள் எந்தவிதமான ஒரு சரீரத்தை உடையவராயிருப்பர்-? 821 அது மிக இனிமையான கேள்வியென்றே நான் கருதுகிறேன், நான் அதை விரும்புகிறேன். இப்பொழுது நாம் அதற்க்குள்ளாக நேராக நோக்கிப் பார்ப்போமாக. 822 ஆதியிலே, தேவன்…நாம் அப்படியே ஒரு சில நிமிடங்கள் நம்முடைய எபிரெய போதனைக்கு திரும்பிச் செல்வோம். தேவன் இந்த மகத்தான, ஏழு நிறங்களைக் கொண்ட பெரிய ஊற்றாயிருந்தார். எத்தனைபேர் அதை அறிந்திருக்கிறீர்கள்-? புரிகிறதா-? தேவன் ஏழு ஆவிகளை உடையவராய் இருக்கிறார் என்பதை எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள்-? முற்றிலுமாக, ஏழு ஆவிகளே. ஆட்டுக்குட்டியானவருக்கு ஏழு கண்களிருந்தன, இப்பொழுது அவையாவும் ஒன்றாக சேருகின்றன. புரிகிறதா-? இப்பொழுது அது தேவனாய் இருந்தது. 823 இப்பொழுது அவர் (லோகாஸ்) தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றபோது, அது இந்த ஒரு பெரிய ஊற்றிலிருந்து வந்த தேவன் ஒரு சரீரத்திற்குள், ஒரு—ஒரு மனித ரூபத்திற்குள் வந்தார். அது லோகாஸானது, நாம் அதை ஆவிக்குரிய சரீரம் என்றழைக்கிறோம். 824 இப்பொழுது, நீங்கள் ஆவிக்குரிய சரீரத்தை எடுத்து, நீங்கள் அதை நோக்கிப் பார்க்கும்போது, அது ஒரு மனிதனாயிருக்கிறது. இப்பொழுது அதாவது நாம்…இப்பொழுது, நாம் அங்குதான் ஆதியில் இருந்தோம். இப்பொழுது, நீங்கள் இப்பொழுது இதை புரிந்து கொள்ளவில்லை, ஆனால் நீங்கள் அந்தவிதமாகத்தான் ஆதியில் அங்கே இருந்தீர்கள். மனிதன் உண்டாக்கப்பட்டபோது,…தேவன் மனிதனை தம்முடைய சாயலில் உண்டாக்கினபோது, அவர் அவனை ஒரு ஆவிக்குரிய சரீரமாக உண்டாக்கினார். அவர் அவனை மாம்ச சரீரத்தில்…மாத்திரம் வைத்தார்…தேவனை மனிதனை தன்னுடைய சாயலில், அவருக்கு ஒப்பான சாயலில் உண்டாக்கினபோது, அவர்கள்…ஆதியாகமம் 2-ல்,…இல்லை ஆதியாகமம் 1 : 28-ல் அது உள்ளது என்று நான் நினைக்கிறேன், “நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.” தேவன் ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். அது உண்மை, “நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.” 825 அதன் பின்னர் தேவன் மனிதனை சற்று கீழான ஒரு மிருக ஜீவியத்தில் அவனை வைத்தார், அதுவே இந்த சரீரமாய் உள்ளது, அவன் நிலத்தைப் பண்படுத்தும்படியாய், அதைத்தொட்டுப் பார்க்கும்படியாய் மிருகங்களைப் போலாக்கினார். ஆவிக்குரிய சரீரமோ தொட்டுப்பார்க்கிறதில்லை, அது பார்க்கிறதில்லை, ருசிக்கிறதில்லை, முகருகிறதில்லை, கேட்கிறதில்லை; ஆனால் நாம் இந்த புலன்களை உடையவர்களாயிருக்கிறோம். ஆகையால் மனிதன் தொட்டுப் பாக்கும்படியாக, உணரும்படியாக அங்கே வைத்தார். 826 அவன் ஏதேன் தோட்டத்தினூடாக நடந்து சென்றபோது, முதலில் ஒரு ஆவிக்குரிய சரீரத்திலிருந்தபடியால் (இங்கே பரிசுத்த ஆவியைப் போலிருந்து இங்கே நடந்து கொண்டிருந்தான்), அந்த சரீரம் மிருக ஜீவனை வழி நடத்தினது. அது ஒவ்வொரு காரியத்தையும் கட்டுப்படுத்தினது, ஆனால் அதனால் நிலத்தைப் பண்படுத்த முடியவில்லை, பாருங்கள். ஆகையால் அவன் நிலத்தைப் பண்படுத்தும்படியாய் தேவன் அவனை மாம்ச சரீரத்தில் வைத்தார். அவன் நிலத்தைப் பண்படுத்தும்படிக்கும், திராட்சை தோட்டங்களை பண்படுத்தும்படிக்கும் அவனுக்கு அவனுடைய ஐம்புலன்களைக் கொடுத்தார். அதன்பின்பும் மனிதன் தனிமையாக இன்னமும் காணப்பட்டான். ஓ, இது ஒரு அழகான காட்சியாயுள்ளது. 827 பாருங்கள், அவன் முதலில் சிருஷ்டிக்கப்பட்ட போது, அவன் இரண்டு பேராய் சேர்ந்தே சிருஷ்டிக்கப்பட்டான். அவன், மனிதன் ஆணும் பெண்ணுமாகவே உண்டாக்கப்பட்டு இருந்தான். அவன் அவ்வாறு இருந்தான் என்று வேதம் உரைத்துள்ளது. தேவன் மனிதனை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். “அவர் அவ்வாறே அவனை சிருஷ்டித்தார்.” இப்பொழுது கவனியுங்கள், மனிதன் ஆவிக்குரிய சரீரத்திலிருந்து பிரிக்கப்பட்ட போது, மாம்ச சரீரத்தில் வைக்கப்பட்டான், அப்பொழுது அவன் அங்கே அவ்வாறு சேர்ந்திருக்கவில்லை; அவனுடைய ஒரு பாகம் இன்னமும் ஒரு ஆவிக்குரிய சரீரமாகவே இருந்தது, ஆகையால் அது சரியாகக் காணப்படவில்லை. 828 காளை, பசு என்று ஆணும் பெண்ணுமாக அங்கே சென்றன. அங்கே குதிரை அவ்வாறு சென்றது, அங்கே காளை சென்றது, ஒவ்வொன்றும் ஜோடு ஜோடாகச் சென்றன. ஆனால் ஆதாம், அவன்…அது…பாருங்கள், அங்கே ஒரு காரியம் குறைவாயிருந்தது. அந்த மிகுந்த ஏக்கமோ அவனுக்காக ஒரு துணை காத்துக் கொண்டிருந்தது என்பதையே காண்பித்தது. உங்களுக்கு அது புரிகிறதா-? நாம் பெற்றுள்ள சிந்தனைகள் இங்கே மரிக்க வேண்டியதாயுள்ளன, அதாவது நாம் தொல்லைக்குள்ளாக்கப்பட்டு குழப்பமடைந்திருக்கிறோம், நாம் மரணமில்லாத ஒரு ஜீவனுக்காக ஏங்குகிறோம், அது நமக்காக காத்துக் கொண்டிருக்கிறது. புரிகிறதா-? 829 ஆதாம் தனிமையாயிருந்தான். தேவன், அவர்கள் வேறு பிரிக்கப்பட முடியாது என்பதை காண்பிப்பதற்கு… இப்பொழுது இன்னும் ஒரு விநாடியில் நான் இந்த அதேக் காரியத்திற்கு திரும்பி வரப் போகிறேன். 830 பாருங்கள், அவர் போய் மண்னை எடுத்து ஒருபோதும் ஏவாளை உண்டு பண்ணவில்லை, ஆனால் அவர் மூல மண்ணிலிருந்து, ஆதாமிலிருந்து எடுத்து உண்டுபண்ணினார். அவர் ஆதாமினுடைய பக்கவாட்டிலிருந்த ஒரு விலா எலும்பை எடுத்து அவனுக்கு ஒரு துணையை உண்டுபண்ணினார், அதுவே ஏவாளாயிருந்தது, அவள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டு, மனிதனின் ஒரு பாகமாயிருந்தாள். அவள் சிருஷ்டிப்பில், ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் ஆதியில் அவனுடைய பாகமாயிருந்தாள். அவள் இந்த சிருஷ்டிப்பில் இங்கே அவனுடைய பாகமாயிருந்தான். அவளை மற்றொரு சிருஷ்டிப்பில் பிரிக்க முடியாது, அவள் அதே சிருஷ்டிப்பில் சிருஷ்டிக்கப்பட வேண்டியவளாயிருந்தாள். 831 சரியாக அந்தவிதமாகவே கிறிஸ்துவும் தேவனும் ஒரே நபராக இருக்க வேண்டியதாயிருந்தது, அது வித்தியாசமான எந்தக் காரியமுமாயிருக்க முடியாது. அவர் ஒரு நல்ல மனிதனாக அல்லது ஒரு தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், அவர் ஒரு மீட்பராய் இருந்திருக்க முடியாது; அவர் தாமே சிருஷ்டிகராய் இருக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் அவர் இன்னமும் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் இப்பொழுதும் இருக்கிறார், நீங்கள் பாருங்கள், அந்தவிதமாகவே அவர் அப்பொழுதும் இருந்தார். 832 இப்பொழுது ஒரு மனிதன் இங்கே கிழே இறங்கி வந்தார், அவர்—அவர் அற்புதமானவராயிருந்தார்; தேவன் அதை நேசித்தார், அவர், “அது அழகாயுள்ளது, அவர்கள் பூமியின்மேல் இருக்கட்டும், அங்கே என்றென்றுமாய் ஜீவிக்கட்டும். அவ்வளவுதான்; ஏனென்றால்—ஏனென்றால் நித்தியத்தில் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கட்டும். அது அப்படியே வளரட்டும், ஒவ்வொரு தாவரமும் அதைப் போன்றே ஒவ்வொன்றையும் பிறப்பிக்கட்டும். மனிதன் வாழட்டும், மிருகங்களும் மற்றுமுள்ள ஒவ்வொன்றும் என்றென்றுமாய் வாழட்டும். அவ்வளவுதான்” என்றார். புரிகிறதா-? 833 அதன்பின்னர் பாவம் பிரவேசித்தது. நான் இந்த விவரத்தைக் கூற விரும்புகிறேன். இந்த…அநேக ஜனங்கள் இந்த ஒரு வேதவாக்கியத்தின் பேரில் அப்பேர்பட்ட ஒரு பயங்கரமான தவறைச் செய்கிறார்கள். அது 23-ம் சங்கீதத்தில் உள்ளது. அவர்கள் அதை இந்தவிதமாக, “நான் மரண நிழலின் இருளான பள்ளத்தாக்கிலே நடந்தாலும்” என்று வாசிக்கிறார்கள். இப்பொழுது, அப்படிப்பட்ட ஒரு காரியமும் இல்லை. வேதம் அதை, “இருளின் நிழலான பள்ளத்தாக்கு…மரண நிழல்களின் இருளான பள்ளத்தாக்கு” என்று கூறவில்லை. 834 அது, “நான் மரண நிழலின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்” என்றேக் கூறுகிறது. இப்பொழுது ஒரு நிழல் இருப்பதற்கு முன்பு, அந்த நிழலை உண்டுபண்ண வெளிச்சம் இருக்கவேண்டும். பாருங்கள், தாவீது ஒரு தீர்க்கதரியாய், அபிஷேகத்தின் கீழிருந்த படியால், அவன் ஒரு தவறும் செய்யவில்லை, அவன் அப்படியே சத்தியத்தையேக் கூறினான்: “நான்…” இருளின் பள்ளத்தாக்கினூடாக நடந்தாலும் என்றல்ல, ஆனால், “மரண நிழலின் பள்ளத்தாக்கினூடாக” என்றான். 835 அப்படியானால் நீங்கள் ஒரு நிழலை உண்டு பண்ண ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வெளிச்சத்தை உடையவராயிருக்க வேண்டும். அந்த விதமாகத்தான் அது இங்கே உள்ளது. நாம் இயற்கையாகவும் இயற்கைக்கு மேம்பட்டவர்களுமாயிருக்கிறோம். இந்த சரீரம் ஒரு ஸ்திரீயினால் பிறப்பிக்கப்பட்டு, வேறெதனூடாகவுமல்ல, மரணத்திற்கு கீழ்பட்டிருக்கிறது;… தேவனாலல்ல, நீங்கள் ஆதாம், ஏவாளிலிருந்து வந்த ஒரு இனப்பெருக்கமாயிருக்கிறீர்கள். கறுப்பாயிருந்தாலும், வெள்ளையாயிருந்தாலும் அல்லது நீங்கள் என்னவாயிருந்தாலும், நீங்கள் ஆதாம் ஏவாளின் கர்ப்பப் பிறப்பிலிருந்து வந்த ஒரு உற்பத்தியாயிருக்கிறீர்கள். அதுவே, “பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவர்களால் உலகத்திற்கு வந்த” உங்களுடைய சரீரங்களை உண்டாக்குகிறது. நீங்கள் உங்களுடைய ஜீவியத்தின் துவக்கத்திலேயே எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமலிருந்தும் கூட ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டு, குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறீர்கள். 836 இப்பொழுது, காரணம் சுபாவத்தினால் உங்களிடத்தில் வந்துள்ள ஆவியினால், பாலியல் உடல் உறவிலிருந்து தோன்றின சுபாவத்தினால், புருஷனாலும், ஸ்திரீயானாலும் உண்டான வாஞ்சையினால் ஒரு பூமிக்குரிய குழந்தை உருவாகிறது. அந்தக் குழந்தையை தனியே விட்டுவிட்டு, சரியானதை அவனுக்கு போதிக்கவில்லையென்றால், அப்பொழுது அவன் தவறாக சென்று விடுவான். அவனுக்கு சரியானதையும், தவறானதையும் போதிக்கவில்லையென்றாலும், அவன் தவறானதையே தெரிந்து கொள்வான். காரணம் அது அப்படிப்பட்டதைச் செய்யும்படியான அவனுடைய சுபாவமாய் உள்ளது. 837 அந்த அளவு கூட உயரமாயிராத ஒரு சிறு குழந்தையானது மிகுந்த எரிச்சல் கொள்வதைக் கவனித்துப் பாருங்கள்; அது அப்படியே…அது—அவன் தன்னுடைய கரங்களை முறுக்கிக் கொண்டு, முகம் சிவந்து போய், தன்னுடைய மூச்சை இழுத்துப் பிடித்துக் கத்துகிறது. நிச்சயமாகவே. அது என்ன-? அது அவனுடைய சுபாவமாயுள்ளது. அவன் அதை தன்னுடைய அப்பா அல்லது தன்னுடைய அம்மா, யாரோ ஒருவரிடத்திலிருந்தேப் பெற்றுள்ளான். அவள் ஒரு இரம்ப ஒலியைப் போல சண்டையிடும்படி அதிக கோபமுடையவளாயிருந்திருப்பாள் அல்லது அவனுடைய தந்தை அவ்வாறு இருந்திருப்பான். அவர்கள் அவ்வாறு இருக்கவில்லையென்றால், அவனுடைய தாத்தாவோ அல்லது பாட்டியோ அவ்வாறு இருந்திருப்பார். பாருங்கள், அது கர்ப்பப்பிறப்பாயுள்ளது. 838 ஆகையால் அதுவே… இதை உண்டாக்குகிறது…நீங்கள் உலகத்தில் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் சுபாவத்தினால் உண்டானீர்கள். உங்களுடைய முழு உடலமைப்புமே கருமையாய், மாசுபடிந்ததாய், ஆக்கினைக்குட்படுத்தப் பட்டு, சபிக்கப்பட்டு நரகத்திற்கு போகிறதாயிருக்கிறது. அது உண்மையே-! 839 ஆனால் நீங்கள் மீண்டும் பிறக்கும்போது, அப்பொழுது தேவனுடைய வெளிச்சம் அந்த ஆத்துமாவிற்குள் பிரகாசிக்கிறது (அல்லேலூயா) அதன்பின் அது ஒரு இருளான பள்ளத்தாக்காய் ஒரு போதும் இருப்பதில்லை, ஆனால் அது அதற்குள் ஒரு நிழலைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்காயுள்ளது. நீங்கள் இங்கே மாம்சத்தினால் திரையிடப்பட்டிருக்கலாம், நம்முடைய முகத்தின் மேல் சில காரியங்களால் திரையிடப்பட்டிருக்கலாம், ஆனால் அங்கே போதுமான வெளிச்சம் உள்ளது. என்றோ ஒரு நாள் அந்த வெளிச்சமும், இருளும் பிரிய வேண்டுமே-! வெளிச்சம் பிரகாசிக்கையில், இருள் விலகி ஓடுகிறது. நாம் கிறிஸ்துவோடு அந்த சரீரத்தில் இருக்கும்படி செல்லும் போது, அந்தகாரமும், மரணமும் மறைந்து விட நாமோ அந்த பரிபூரண வெளிச்சத்திற்குள்ளாக பிரகாசிக்கிறோம். தேவனுக்கே மகிமை-! நாம் அங்கு இருக்கும்போது, ஒருபோதும் சுகவீனமாயிருக்காது, அதனோடு எந்த இருளும் ஒருபோதும் கலக்கப்படாது. 840 இப்பொழுதோ நாம் சுகவீனத்தையும், சந்தோஷத்தையும் உடையவர்களாய் இருக்கிறோம், ஆரோக்கியத்தையும், பெலனையும் உடையவர்களாய் இருக்கிறோம். நாம் அடுத்தடுத்து வரும் இன்ப துன்பங்களையும், ஏற்றத் தாழ்வுகளையும், சந்தோஷத்தையும், துக்கம் போன்றவற்றையும் உடையவர்களாய் இருக்கிறோம். இது வெறுமென ஒரு நிழலாய் உள்ளது. அங்கே வெளிச்சம் உண்டு என்பதை அறிந்து கொள்ளும்படியான போதுமான வெளிச்சத்தை நாம் பெற்றுள்ளோம். நாம் இன்னமும் மாம்ச சரீரத்தில் இருக்கிறோம். ஆனால் என்றோ ஒரு நாள் விடியப்போகிறது. அப்பொழுது மரண தூதன் படுக்கையின் கால்மாட்டில் அமர்ந்திருக்க, அப்பொழுது மருத்துவரோ எல்லாம் முடிந்து விட்டது என்று கூறும்போது, இயற்கைக்கு மேம்பட்டது வரும்போது இந்த இயற்கையானது விலகிச் செல்ல, ஒளியானது ஒளியண்டை பிரகாசிக்க, இருளோ இருளுக்கே திரும்பிச் செல்லுகிறது. அப்பொழுது இந்த அழிவுள்ளது அழியாமையைத் தரித்துக் கொள்கிறது. அப்பொழுது இந்த அழிவு அழியாமையைத் தரித்துக் கொள்கிறது. அதாவது இந்த அழிவுள்ளது அழியாமையைத் தரித்துக் கொள்ளும் போது, நாம் ஒரு காலத்தின் சிருஷ்டியிலிருந்து ஒரு நித்திய சிருஷ்டியாக மாறுகிறோம். நீங்கள் முற்றிலும் அந்தகாரத்தைக் கொண்டு அங்கே வெளியே செல்ல முடியாது, நீங்கள் அந்தகாரத்தில் ஒளியைப் பெற்றிருக்க வேண்டும். அங்கு தான் காரியமே உள்ளது. அந்த விதமான சரீரத்தையே நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். 841 நாம் என்ன செய்கிறோம்-? என்னுடைய அருமையான பரிசுத்த சகோதரனே, என்னுடைய அருமையான பரிசுத்த சகோதரியே, உலகத் தோற்றத்திற்கு முன்பே, தேவன் உங்களை தம்முடைய சாயலில் சிருஷ்டித்த போது, இல்லை மனிதனை தம்முடைய சாயலில் சிருஷ்டித்த போது, மனுஷனுடைய மகிமைக்காக மனுஷ சாயலில் ஸ்திரீயை சிருஷ்டித்தார், அவர் உங்களை ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் உண்டு பண்ணினார். அப்படியே தம்மைப் போலவே, அவர், “உண்டாக்குவோமா” என்று அவர் உண்டு பண்ணி இருந்த சிருஷ்டிகளிடத்தில், அதாவது, “நமது சாயலாகவும், நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக, ஒரு ஆவிக்குரிய சரீரமாக உண்டாக்குவோமாக” என்றார். அதே சமயத்தில் தேவன் ஒரு போதும் அப்பொழுது மாம்சம் ஆகாமலிருந்தார், அவர் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார். 842 மோசே அவரைக் கண்டான். மோசே, “கர்த்தாவே, நாம் உம்மைக் காணட்டும்” என்று கதறினான். 843 அப்பொழுது அவர், “போய் அந்தக் கன்மலையின் வெடிப்பில் மறைந்து கொள்” என்றார். மோசே போய் அந்த வெடிப்பில் நின்றான்; அப்பொழுது தேவன் கடந்து சென்றபோது, மின்னலும், இடிமுழக்கமும்…தேவன் கடந்து சென்ற போது, அவர் இதைப் போன்று தன்னுடைய முதுகைத் திருப்பி இருந்தார். அப்பொழுது மோசே, “அது ஒரு மனிதனின் பின்பக்கமாய் இருந்தது” என்றான். அல்லேலூயா-! 844 அது யாராயிருந்தது-? அது இறங்கி வந்த மெல்கிதேசேக்காய், சாலேமின் ராஜாவாய், தகப்பனும், தாயுமில்லாதவராய், நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமில்லாதவராயிருந்தார். அது அவரே-! அவரே இறங்கி வந்தார். அந்த ஒருவரே ஆபிரகாமினிடத்தில் பேசினார்; அதாவது தம்மை அந்தவிதமான ஒரு மாம்ச சரீரத்தில் அடக்கிக்கொண்டு, “வ்வூயு” என்று ஊதி, அதற்குள் அடியெடுத்து வைத்து இறங்கி வந்து, கன்றினைப் புசித்து, பசுவின் பாலைப் பருகி, வெண்ணையையும், சில அப்பங்களையும் புசித்தார். இரண்டு தூதர்களோடும் வந்தார். 845 அவர்கள் அங்கிருந்து நடந்து சென்றபோது, அந்த எல்லா காரியமும் “வ்வூயூ” என்று மறைந்து போய்விட்டன. 846 நான் அதைக் குறித்து ஒருபோதும் நினைத்ததேயில்லை. இங்கே அண்மையில் ஒரு துப்பாக்கியில் தோட்டாக்களை நிறைத்துக் கொண்டிருந்தேன், நான் .22 என்ற ஒரு துப்பாக்கியை வைத்துள்ளேன். அது ஒரு .220 என்ற ஸ்விப்ட் துப்பாக்கியாகும். துப்பாக்கியை உபயோகப்படுத்தும் இங்குள்ள சகோதரர்கள் அதை அறிவர். அந்த சிறிய தோட்டாவானது, அது ஒரு நாற்பத்தியெட்டு கிரெயின் அளவு கொண்ட இந்த அளவு நீளமுள்ள தோட்டா, அதாவது வழக்கமான .22 தோட்டாவாகும். அது 30-க்கு 06 என்ற அளவில் வல்லமையாய் வெடிக்கக் கூடியதாய் கிட்டத்தட்ட நிரப்பிவைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நான்…அந்த நிறுவனம் ஏறக்குறைய ஒரு விநாடிக்கு ஏறக்குறைய நாலாயிரத்து நானூறு அடி தூரம் பாய்ந்து சுடக்கூடிய அளவுள்ள தோட்டாவை மாத்திரமே நிரப்புகிறது. சரி, நீங்கள் போதிய…அதாவது ஒரு விநாடிக்கு ஐயாயிரம் அடி சுடக்கூடிய அளவிற்கு நீங்களாகவே தோட்டாவை நிரப்பலாம். மற்றபடி நீங்கள் சுட்டால்…அன்றொரு நாள் நாங்கள் இருநூறு கெஜ தூரத்தில் சுட்டுக் கொண்டிருந்தபோது, அந்த தோட்டா புழுதியில் பட்டு, அந்த துப்பாக்கி வெடித்த எதிரொலி எழும்பும் முன்னே அது புழுதியாய் பறந்து கொண்டிருந்தது. அந்தவிதமாக அவ்வளவு வேகமானதாயுள்ளது. 847 ஆகையால் நீங்கள் ஒரு பல் குத்தியை எடுத்து, (உங்களுக்குத் தெரியும், தட்டையான பாகமான ஒரு பல்குத்தி) அதில் உங்களுடைய வெடி மருந்தினை அந்த அளவு முனையில் வைத்து, கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து சிறு தோட்டாக்களை அங்கே உங்களுடைய துப்பாக்கியில் நிறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இங்கு நின்று உங்கள் கையில் உள்ள தோட்டாவை ஒரு விநாடியில் வெடிக்கச் செய்யலாம். உங்களிடத்திலிருந்து இருநூறு அடி தூரத்தில் தரையில் அமர்ந்திருக்கும் பன்றியை அங்கிருந்து சுட்டால், அந்தப் பன்றியோ ஒரு போதும் அசையாமல் இருக்கும். காரணம் அந்தத் தோட்டா, பன்றியை சென்றடைவதற்கு முன்னரே வெடித்து அதனுடைய மூல நிலைக்கு திரும்பி, மீண்டும் வாயுவாகிவிடுகிறது. இங்கே ஒரு தோட்டாவில் செப்பும் ஈயமும் ஒன்று சேர்ந்து கலந்துள்ளது, அது ஒரு விநாடியில் நீங்கள் அதை ஒருபோதும் கண்டறியாத பழைய நிலைக்கு திரும்பி விடுகிறது. அது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு திரும்பி, மீண்டும் வாயுக்களாக மாறிவிடுகின்றன. அந்த வாயுக்கள் மீண்டும் திரும்ப செப்புவாக உருவாகி, ஈயமாக அந்தவிதமாக உருவாகி வரக் கூடும். அந்த வாயுக்கள் அவ்வாறு உருவாக வேண்டியதாயுள்ளன. 848 இப்பொழுது அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அந்தவிதமாகவே நாம் இங்கே இருக்கிறோம், நாம் ஒரு உயரிய வர்க்கத்திலிருந்து வந்துள்ளோம். ஆதியிலே நாம் தேவனுடைய சாயலில் இருந்தோம். திரையும், அந்தகாரமும் அதை இப்பொழுது நாம் அறியாதபடி தடுக்கின்றன. ஆனால் இயேசு தம்முடைய சீஷர்களிடத்தில் அவர், “உலகத்தோற்றத்துக்கு முன்னே அவர்களோடு இருந்தார்” என்று கூறினார். புரிகிறதா-? நாம் அவரோடிருந்தோமே-! உங்களால் இப்பொழுது அதைப் புரிந்துகொள்ள முடியாது, ஆனால் நீங்கள் ஆதியில் இருந்தீர்கள். “இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்துபோனாலும், நமக்கு ஏற்கெனவே ஒன்று காத்துக்கொண்டிருக்கிறதே-!” அல்லேலூயா-! அப்பொழுது நாம் ஒருகாலத்தில் ஜீவித்து வந்த இந்த ஆவிக்குரிய சரீரத்திற்குள்ளாக பிரவேசிக்கிறோம், எனவே நாம் புசிக்கவும், கரங்களைக் குலுக்கவும் முடியும். பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களோ, “எதுவரைக்கும், ஆண்டவரே-?” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டனர். 849 தேவனண்டை செல்லுகிற ஏழு படிகள் உள்ளன, அவை ஏழு ஆவிகளாக இறங்கி வருகின்றன. சரி, நீங்கள் தேவனுடைய பலிபீடத்தின் கீழே செல்லும்போது, அவைகள், “எதுவரைக்கும் ஆண்டவரே-? நாங்கள் இங்கிருந்து திரும்பி போக முடியுமா-?” என்று சத்தமிட்டு கொண்டிருந்தன. 850 அதற்கு தேவன், “அவர்கள் தங்களைப் போலக் கொலை செய்யப்படப் போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங் கொஞ்சகாலம் இளைப்பாற வேண்டும்” என்றார். பார்த்தீர்களா-? 851 அதன் பின்னரே ஆத்துமாக்கள் திரும்பி வருகின்றன, எல்லா அந்தகரமும், மரணமும், சுகவீனமும், கருமையான துயரங்கள் மங்கிப்போகும் போது, அவர்கள் மீண்டும் புருஷரும், ஸ்திரீகளுமாகி என்றென்றுமாய் ஜீவிப்பார்; அப்பொழுது அங்கு நிழலே இராது, அது முற்றிலும் சூரிய வெளிச்சமாய் இருக்குமே-! 852 கவனியுங்கள். அது தான் இங்குள்ளது. அது எவ்வளவு அந்தகாரமாக வேண்டுமானாலும் ஆகட்டும்; சூரிய வெளிச்சம் அந்தகாரத்தின் மீது படும்படுபோது அது மிகுந்த அந்தகாரமாயிருக்க முடியாது. இருளும் ஒளியும் ஒன்று சேர்ந்து வாசஞ் செய்ய முடியாது. ஏனென்றால்…எது அதிக சக்தி வாய்ந்தது-? ஒளியே. ஒளியானது பிரகாசிக்கும்போது, இருளானது விலகியோடுகிறது. ஆமென். நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா-? நீங்கள் அதை அறிந்திருப்பதால் சந்தோஷமாயிருக்கவில்லையா-? எங்குமே ஒரு நிழலே இருக்காது என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் இப்பொழுது நம்முடைய இருதயங்களில் உள்ள இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஒளியானது ஏதோக் காரியத்தை திரும்பவும் சாட்சி பகருகிறது: தேவ குமாரனை, தேவனுடைய வல்லமையைக் குறித்து சாட்சி பகருகிறது. 853 நாம் இங்கே நடக்கிறோம், பரிசுத்த ஆவியின் வல்லமை இறங்கி வந்து ஒரு கூட்டத்திற்குள்ளாகச் சென்று, “நீ திருமதி இன்னார்—இன்னார், அதாவது நீ ஒரு குறிப்பிட்டக் காரியத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் செய்தாய். நீ இதனோடு நீண்ட காலமாக பாதிக்கப்பட்டிருக்கிறாய், ஆனால் கர்த்தர் உரைக்கிறதாவது ‘உன்னுடைய காலூன்றி எழும்பி நில், நீ குணமடைந்துவிட்டார்’” என்று கூறுவதைக் கவனியுங்கள். ஒரு முடமானவரும், குருடனும் தங்களுடைய காலூன்றி எழும்புகிறார்கள். ஒரு மனிதனின் மேல் கருத்த நிழல் காணப்பட, புற்று நோயினால் தின்றுவிடப்பட்ட அவன் ஜீவனை அடைந்து, மீண்டும் புதிய ஆரோக்கியத்தை பெறுகிறான். 854 சந்தேகமேயில்லை, இயேசு, “நான் செய்கிற இந்தக் கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்” என்றார். அவர், “பிதாவனவர் எனக்குக் காண்பிக்கும் வரை நான் ஒன்றையும் செய்கிறதில்லை” என்றார். 855 அது என்னவாயுள்ளது-? அதுவே நம்மை மீட்கும்படியாக இந்த இருளுக்குள்ளாக வந்து கலந்து கொண்டிருக்கிற ஒளியாய் உள்ளது. நீங்கள் பாருங்கள், நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா-? 856 இப்பொழுது, என்றோ ஒரு நாள் அங்கே திரும்பிச் செல்லப் போகிறோம், அப்பொழுது அந்த ஆவிக்குரிய சரீரமானது ஆதியில் இருந்தது போன்றே மீண்டும் அழிவில்லாத மாம்சமாயிருக்கிறது, அதன்பின்னர் இயேசு வருகிறார், தேவனும்…கிறிஸ்துவும் ஒருவராயிருப்பவர். கிறிஸ்து சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார், எல்லா ஜனங்களும் மானிடராயிருப்பர். கிறிஸ்து, கர்த்தராகிய இயேசு தாவீதின் சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார், எந்த ஒரு மனிதனும் ஒரு போதும் மரிப்பதில்லை. நாம் ஒருபோதும் மரிப்பதில்லை, நாம் ஒரு போதும் சுகவீனமடையமாட்டோம், அங்கே ஒரு போதும் துயரமே இருப்பதில்லை, நாம் ஆயிர வருடங்கள் ஜீவிப்போம். 857 இந்த பூமியின் மேல் ஆயிர வருட அரசாட்சி முடிவுறும்போது, அப்பொழுதே பிசாசு வருகிறான், அதன் பின்னரே இரண்டாம் உயிர்த்தெழுதல், அநீதிமான்களின் உயிர்த்தெழுதல் உண்டாகிறது. அவர்கள் கடற்கரை மணலைப் போல ஒரு பெரிய சேனையாய் கூடுவர். அவர்கள் பரிசுத்தவான்களின் பாளையத்தை வளைந்து கொள்ள வருவார்கள், அவர்கள் அவ்வாறு வளைந்து கொள்ளும் போது, தேவன் வானத்திலிருந்து அக்கினியையும், கந்தகத்தையும் பொழியப் பண்ணி அவர்களை அழித்துப் போடுகிறார். 858 யோவான், “பின்பு, நான் புதிய வானத்தையும், புதிய் பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின; சமுத்திரமும் இல்லாமற் போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நரகத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக் கண்டேன்: அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது” என்றான். அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. 859 அவன், “மனைவி... ஆட்டுக்குட்டியும் மணவாட்டியும் அங்கே என்றென்றுமாய் இருப்பர்” என்றான். புதிய பூமியோ கோடிக்கணக்கான மைல்கள் சதுரமாயிருக்கும். ஓ, என்னே, நகரம், வேதாகம அளவுகளின்படி நகரம் பதினைந்தாயிரம் மைல்கள் சதுரமாயிருக்கும். அது பதினைந்தாயிரம் மைல்கள் நீளமும், பதினைந்தாயிரம் மைல்கள் அகலமும், பதினைந்தாயிரம் மைல்கள் உயரமுமாயிருக்கும். அதுவே அந்த நகரத்தைக் குறித்து வேதம் அளிக்கிற சரியான விவரமாயிருக்கிறது. அங்கே சமுத்திரம் இல்லாதிருப்பதில் வியப்பொன்றுமில்லையே, அதற்கு அங்கே இடமே இல்லாதிருந்தது. 860 ஓ, அது அப்பேர்ப்பட்ட அழகாயிருக்கும்-! அங்கே, அங்கே தேவனுடைய சிங்காசனத்தண்டையிலே ஒரு ஊற்று உண்டு, அது சிங்காசனத்திற்கு முன்பாக பாய்ந்தோடுகிறது. ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதியின்… இருகரைகளிலும் ஜீவ விருட்சங்களிருந்தன. பன்னிரண்டு விதமான கனிகளைத் தரும் இந்த விருட்சமானது ஒவ்வொரு மாதமும் அதனுடைய கனிகளைக் கொடுக்கும். 861 அங்கே இருப்பத்து நான்கு மூப்பர்கள் இருக்கின்றனர். அங்கே மணவாட்டியும் இருக்கிறாள். அங்கே 144000 ஆலய அண்ணகர்களும் இருக்கின்றனர். ஓ, சகோதரனே, நாம் எங்கோ சென்று கொண்டு இருக்கிறோம். காரியங்களோ நமக்காக முன்னதாகவே வைக்கப்பட்டு உள்ளன். நான்கு… இருபத்தி நான்கு மூப்பர்கள் உள்ளனர். 144000 அண்ணகர்கள் உள்ளனர். மணவாட்டியோ கிறிஸ்துவோடு அமர்ந்திருக்கிறாள். என்னே, நீங்கள் பேசி… என்னுடைய பரமவீடு, இனிமையான பரம வீடு-! ஆமென். 862 அங்கே போகும் சிலாக்கியம் எனக்கு உண்டு என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன், அங்கே போகும் சிலாக்கியம் உங்களுக்கும் உண்டு. அப்படி இருக்க நீங்கள் ஏன் இந்த அந்தகாரத்தில் நடக்கவும், எந்த வெளிச்சத்தையும் காணாமல் மரித்து, குழப்பத்திற்குள்ளாக சென்று ஒன்றுமில்லாமல் போக மனதாயிருக்கிறீர்கள்-? ஏனென்றால் வெளிச்சம் தன்னுடைய உயரிய அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும்போது, அங்கே அந்தகாரத்திற்கு இடமே இல்லை. வெளிச்சமானது வரும்போது, அந்தகாரம் எங்கே என்று போய் கண்டறியுங்கள். எல்லாக் காரியங்களும் தேவனிடத்தில் திருப்பப்படுகின்ற போதும் அப்படித் தான் உள்ளது. இருளுக்கு ஒரு துவக்கம் உண்டாயிருந்தது, இருளுக்கு ஒரு முடிவும் உண்டு. வெளிச்சத்திற்கோ ஒருபோதும் ஒரு துவக்கமே இல்லாதிருந்தது, அதற்கு ஒருபோதும் ஒரு முடிவும் கிடையாது. தேவனுக்கு ஒருபோதும் ஒரு துவக்கமும் இல்லாதிருந்தது, ஒருபோதும் ஒரு முடிவும் கிடையாது. ஆகையால் என்றோ ஒரு நாள் முழு ஒழுக்கக் கேடான உலகமானது அதனுடைய எல்லா பாவத்தோடும், அதனுடைய அழகோடும், அதனுடைய எல்லா அற்புதமான காரியங்கள் மற்றும் உணர்ச்சிகளோடும், அதனுடைய எல்லா கவர்ச்சி என்ற அழைக்கப்படுகிற ஒவ்வொரு காரியத்தோடும் ஒன்றுமில்லாமல் மங்கிப் போய்விடும், அது இனி ஒரு போதும் இல்லாமலே போய்விடும். அது இனி ஒரு போதும் இராது, அதைக் குறித்த சிந்தனையும் ஒரு போதும் இல்லாமற் போய்விடுமே-! “அது இனி ஒரு போதும் நினைவு கூறப்படுவதற்குள்ளாகவும் கூட தோன்றாது” என்றே கூறப்பட்டு உள்ளது. 863 ஆனால் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் அவரோடிருப்பர். நாம் அவருடைய சொந்த மகிமையான சரீரத்தைப் போன்ற ஒரு சரீரத்தை உடையவர்களாயிருப்போம்; அவரோடு ஜீவிப்போம், அவரோடு புசிப்போம், அவரோடு அமருவோம், அவரோடு என்றென்றுமாய், யுகயுகமாக வாசம் பண்ணுவோம்; நித்திய காலங்களோ உலகத்தோடு முடிவேயில்லாமல் உருண்டோடும். 864 இன்றிரவு உங்களுக்கு ஒரு தருணம் உண்டு. அந்த இடத்தைச் சந்திக்க நீங்கள் ஆயத்தப்படவில்லையென்றால், நீங்கள் எவ்வளவுதான் சபைக்குச் சென்றாலும், நீங்கள் எவ்வளவுதான் ஒரு நல்ல அங்கத்தினராயிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் நடக்கிற அந்த அந்தகாரத்தில் கிறிஸ்து உங்களுக்கு புதிய ஜீவனை அளிக்கும்வரை நீங்கள் இழக்கப்பட்டவராகவே இருக்கிறீர்கள். நீங்கள் பக்தியுள்ளவர்களாயிருக்கலாம். பக்தி, கவனியுங்கள், நண்பர்களே, சமயம் அறிவுப் பூர்வமானதாயுள்ளது. புரிகிறதா-? காயீனின் பிள்ளைகள் எல்லோருமே எப்பொழுதுமே ஒரு மார்க்கத்தை உடையவர்களாயிருந்து வந்தனர். இயேசு வந்தபோது அந்த யூதர்கள் ஒரு மார்க்கத்தை உடையவர்களாயிருந்தனர், ஆனால் அவர்கள் இரட்சிப்பைப் புறக்கணித்தனர். 865 நீங்கள் இன்றிரவு மிகுந்த பக்தியுள்ளவர்களாயிருக்கலாம். நீங்கள் பிரஸ்பிடேரியனாய், மெத்தோடிஸ்டாய், பெந்தேகோஸ்தேக்காரராய், நசரேயனாய், யாத்திரீகப் பரிசுத்தராயிருக்கலாம். நீங்கள் நேர்மையான மார்க்கத்தை உடையவராயிருப்பதால், உங்களுடைய சபைக்குச் சென்று, சாட்சி பகரலாம். நீங்கள் பாடலாம், ஆரவாரமிடலாம், கர்த்தரை ஸ்தோத்தரிக்கலாம், நீங்கள் சபைக்கு உங்களுடைய தசமபாகங்களைக் கொண்டு வரலாம், நீங்கள் உங்களுடைய அண்டைவீட்டாரை சரியாக நடத்தலாம். அதற்கு உங்களுடைய நித்திய பயண இலக்கோடு எந்த ஒரு சம்மந்தமுமில்லை. காயீன் அந்த ஒவ்வொரு சிறு காரியத்தையும் செய்தான். முற்றிலுமாக. 866 வேதம், “கோதுமையும் களைகளும் ஒன்று சேர்ந்து வளர்ந்தன” என்று கூறியுள்ளது. அந்த கோதுமை மழைக்காக கடும் வேட்கையுற்றுக் கொண்டிருந்தபோது, களைகளும் கூட வேட்கையுற்றுக் கொண்டிருந்தன. மழை வந்த போது கோதுமையைப் போலவே களைகளும் மழையைப் பெற்றுக்கொள்ள மகிழ்ச்சியடைந்தன. “ஆனால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” இப்பொழுது நீங்கள் உங்களுடைய கனிகளை சோசித்துப் பார்க்கையில், நாம் ஜெபம் செய்வோமாக. 867 இப்பொழுது, பிதாவாகிய தேவனே, இன்றிரவு இங்கே சில கடினமான கேள்விகள் இருந்து வந்தன. நான் சரியாக பதிலளிக்காமலிருந்திருக்கலாம், ஆனால் என்னுடைய அறிவுக்கெட்டினவரையில் மிகச் சிறந்த முறையில் பதில் அளித்து உள்ளேன். நீர் என்னுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர். தேவனே, நீர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது ஒருகால் இன்னும் இந்த கேள்விகளில் சிலவற்றிற்கு நான் சரியாக பதில் அளித்திருக்கவில்லை என்றால், அப்பொழுது நீர் ஜனங்கள் உடைய இருதயத்தில் பேசும், அவைகள் எங்கே இருக்க வேண்டும் என்பதை நீர் அவர்களுக்கு தெரியப்படுத்தும். நீரே என்னிடம் கூறினீர் என்பதை நான் உணருகிறேன். ஆனால் நான் தவறாயிருந்தால், அப்பொழுது நீர் என்னை மன்னிப்பீராக. 868 தேவனே, இந்த ஒவ்வொன்றையும் அவர்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொண்டு, அவர்கள் அவைகளை ஆழ்ந்து சிந்தித்து, “ஆம், அங்கே உள்ள சபையில் இந்தக் காரியங்கள் உள்ளன. அதைத்தான் வேதம் கூறியுள்ளது” என்று இந்தவிதமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன். 869 கர்த்தாவே, பெண்மணிகளுக்கு நான் எந்தக் காரியத்தையும் தனிப்பட்ட விதத்தில் குற்றமாகக் கருதிக் கூறவில்லை என்பதை நீர் அறிந்திருக்கிறீர். ஆனால் தேவனே, நான்—நான் என்னுடைய சகோதரிகளை நேசிக்கிறேன், பிதாவே, நீர் அதை அறிவீர். நான் அவர்களைக் குறித்து எப்படி நினைக்கிறேன் என்பதை நீர் அறிவீர். ஆனால் நான் நின்று தவறான ஒரு காரியத்தை அவர்களிடம் கூறினால், நான் அவர்களுக்கு ஒரு—ஒரு வஞ்சனாக இருப்பேன். நான் என்னுடைய சகோதரிகளுக்கு ஒரு வஞ்சகனாக இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை; நான் அவர்களுக்கு சத்தியத்தை கூறவே விரும்புகிறேன். பிதாவே, நான் அதை சரியாக உம்முடைய வார்த்தையில் இருந்து எடுக்கிறேன். 870 இப்பொழுது நான் என்னுடைய சகோதரர்களை கண்டனம் செய்கிறதில்லை, ஆனால் கர்த்தாவே, அவர்கள் இந்தக் காரியங்களை அனுமதிக்கும்போது, அவர்கள் தவறாயிருந்து வருகிறார்கள் என்றே நான் கூறுகிறேன். பெண்மணியோ அந்த வித்தியாசத்தை அறிந்திருந்திருந்தும், போய் அதைச் செய்திருந்தால், அப்பொழுது அது அவளைப் பொறுத்ததாய் உள்ளது, அப்பொழுது போதகர் குற்றவாளியல்ல. 871 அப்பா, பிதாவே அந்தக் காரியங்கள் உம்முடைய வார்த்தையாய் இருக்கின்றன, அவர்களும் உம்மிடத்தில் இருக்கிறார்கள். இப்பொழுது நீர் ஜனங்களுடைய இருதயத்தில் பேசும், நான் அவர்கள் எல்லோரையும் உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். நீர் என்ன செய்துள்ளீர் என்பதை நான் காண்பேன், பிதாவே; உமக்குத் தெரியும், ஒவ்வொரு இருதயத்திலும் பேசும். நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். நம்முடைய தலைகள் வணங்கிருப்பதோடு; 872 யாராவது தங்களுடைய கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், நான் ஒரு முற்றிலும் ஜெயங்கொள்பவனாகவும், கடைசி நாளில் கலியாணா வஸ்திரம் தரித்து, கிறிஸ்துவோடிருக்கும்படியாகவும் என்னை நினைவு கூரும்” என்று கூறுவீர்களா என்று நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “எனக்காக ஜெபிப்பீரா-?” என்று கூறுவீர்களா-? 873 ஒவ்வொருவரும் உங்களுடைய தலையை இப்பொழுது தொடர்ந்து வணங்கியவாறே அப்படியே இருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அது அருமையாயுள்ளது. அங்குள்ள உங்களை, என்னுடைய சகோதரிகளை; என்னுடைய சகோதரர்களையும் கூட, உங்களுடைய கரங்களை உயர்த்தியுள்ள உங்களையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. அது அற்புதமாயுள்ளது. 874 இப்பொழுது, பிதாவே, நீர் அவர்களுடைய கரங்களைக் காண்கிறீர். (நீங்கள் சில நேரத்தில், “பரவாயில்லை, வெறுமென அதைப் போல ஒரு சிறு ஜெபந்தானே-?” என்று நினைக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.) தேவனே, நேற்று அந்தத் தாய், “மூளையில் வேகமாகப் பரவக்கூடிய அந்த நோயினால் பாதிக்கப்பட்டு, மூன்று வாரம் மட்டுமே உயிர்வாழ்வதாயிருந்து, அந்தப் பையன் மரித்துக் கொண்டிருந்தபோது அவளுடைய வீட்டில் ஏறெடுக்கப்பட்ட ஒரு சிறு ஜெபம் இப்பொழுது காரியங்களையே மாற்றிவிட்டது” என்று கூறினதைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். 875 நான் எசேக்கியாவைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன், அவன் தன் முகத்தை சுவர்புறமாகத் திருப்பிக்கொண்டு, “கர்த்தாவே, நீர் என்னிடத்தில் இரக்கமாயிருக்க வேண்டும் என்று நான் உம்மிடம் விண்ணப்பண்ணுகிறேன், என்னை எண்ணிப் பாரும், ஏனென்றால் நாம் உமக்கு முன்பாக ஒரு உத்தம இருதயத்தோடு நடந்துள்ளேனே” என்று கதறினான். அது மரணத்திலிருந்து ஜீவனைக்கு மாற்றினது. 876 தேவ குமாரனிடத்திலிருந்து, “லாசருவே வெளியே வா” என்ற ஒரு கூக்குரலினால் ஒரு மரித்த மனிதன் வெளிவந்தான். 877 ஓ தேவனே, நீர், “சொல்லுங்கள், கேளுங்கள், அப்பொழுது கொடுக்கப்படும். நீங்கள் எந்தக் காரியத்தையாவது கூறும்போது, நீங்கள் கூறினது நிறைவேறும் என்றும், நீங்கள் கூறினதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசியுங்கள்” என்றும் கூறினீர். 878 இப்பொழுது பிதாவே, தங்களுடைய கரத்தை உயர்த்தின ஒவ்வொருவரும், அவர்கள் தங்களுடைய கரங்களை எதற்காக உயர்த்தினார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. தேவனே, நீர் எங்களுடைய சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், அதாவது அவர்கள்… அவர்கள் தங்களை சரியாக நடத்திக் கொள்வார்களாக, அதாவது சாத்தான் தொலைக்காட்சி மற்றும் உண்மையான கதை என்ற பத்திரிக்கைகளினூடாக உறுதியற்ற நிலையில் இருக்கும்படி அவர்களை கையாண்டு வந்திருக்கிறான். தணிக்கை செய்யப்படாத நிகழ்ச்சிகள் மூலமாக எப்படியாய் அசிங்கமாகவும், தொலைக்காட்சி போன்றவற்றின் பேரில் கொச்சையான காரியங்களைக் கொண்டு கையாண்டு வந்துள்ளான், அது…அவர்கள் உமக்கு கோடிக்கணக்கான ஆத்துமாக்களை ஆயத்தம் செய்யும் ஒரு கருவியாயிருப்பார்களாக, ஆனால் எப்படியாய் அவைகள் தணிக்கை செய்யப்படாமல், இந்த எல்லா அசிங்கமான காரியங்களை வெளியிடுகிறார்கள்…ஓ எவ்வளவு ஏளனத்துக்குரியதாயுள்ளது-! பிசாசின் ஆவியானது உள்ளே வந்து எங்களுடைய சகோதரிகளை சுற்றிக்கொள்ள, அவர்களை தங்களை நாகரீகப்படுத்திக்கொள்ள முயன்று அந்த விதமான ஆடைகளை உடைத்திகொள்கிறார்கள் என்பதை அறிந்து உள்ளோம். 879 …கர்த்தாவே, எங்களுடைய சகோதரர்களும் கூட, அதாவது அவர்கள் புகைப்பிடித்து, மது அருந்தி, அதைப்போன்றதை தொடர்ந்து செய்து இன்னமும் கிறிஸ்தவர்கள் என்று தங்களை எப்படியாய் கருதிக்கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் “விசுவாசிப்பதாக” கூறிக்கொள்கிறதையும்…நாங்கள் கண்டறிகிறோம். அவர்கள், “பிசாசும் கூட விசுவாசிக்கிறான்” என்பதை அறிந்து கொள்வார்களாக. அவன் இரட்சிக்கப்படவில்லை, “அவன் விசுவாசித்து, நடுங்குகிறான்.” 880 இப்பொழுது பிதாவே, நீர் எங்கள் எல்லோரிடத்திலும் இரக்கமாயிருக்க வேண்டும் என்றும், எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்றும் நாங்கள் ஜெபிக்கிறோம். சிலர் தங்களுடைய கரங்களை உயர்த்தாமலிருந்திருக்கலாம், ஓ தேவனே, இரக்கமாயிரும். ஒருகால் அவர்களுக்கு இருக்கிற அடுத்த சந்தர்ப்பத்தில் அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தலாம். 881 கர்த்தாவே, நாங்கள் இராபோஜனம் எடுக்க ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறோம். எங்களுடைய தப்பிதங்களையும், எங்களுடைய ஜீவியத்தின் பழங்குறைபாடுகளையும் எங்களுக்கு மன்னியும். நாங்கள் உம்முடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோமாக, ஏனென்றால் நாங்கள் இதை கிறிஸ்துவினுடைய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 882 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை இந்த விதமாக காக்க வைத்ததற்காக நான் வருந்துகிறேன். இராபோஜனத்திற்கு முன்பாக எவரேனும் ஜெபிக்கப்படுவதற்காக வருவீர்களா என்றும், ஜெபிக்கப்பட விரும்புகிறீர்களா என்றும் நான் எதிர்பார்க்கிறேன், எவரேனும் ஜெபிக்கப்படுவதற்காயிருந்தால், நாங்கள் அதை இந்த நேரத்தில் செய்ய மகிழ்ச்சியடைகிறோம். 883 சரி, சகோதரனே, நீங்கள் அவளை இங்கே மேலே கொண்டு வாருங்கள், அது அருமையாயிருக்கும். அப்படியே ஒரு விநாடி காத்திருங்கள், அதன்பின்னர் நாம் கலைந்து செல்லப் போகிறோம். ஆகையால் நாம் கலைந்து செல்லும்போது, அப்பொழுது இராபோஜனத்திற்காக தரித்திருக்க விரும்புகிறவர்கள் தரித்திருக்கலாம். ஆனால் இப்பொழுது நாம் வியாதியஸ்தருக்காக ஜெபத்தை ஏறெடுக்கப் போகிறோம். வேதம் என்ன கூறியுள்ளது-? 884 அந்த சகோதரனால் எழுந்திருக்க முடியவிலையென்றால்…பரவாயில்லை, அவர் அங்கேயே அமர்ந்திருக்கட்டும். நாங்கள் அவரிடத்திற்கு வருவோம். பரவாயில்லை, அவர் அங்கேயே அப்படியே அமர்ந்திருக்கட்டும். நாங்கள் வந்து அவருக்காக ஜெபிப்போம். அதனால் பரவாயில்லை. சரி, ஐயா, அவர் அப்படியே அங்கேயே அமர்ந்திருக்கட்டும். அவர் இங்கு வந்து நிற்பது கடினமாயுள்ளபடியால், நாங்கள் அவரண்டை வர மகிழ்ச்சியடைவோம். 885 இப்பொழுது என்னுடைய அருமையான நண்பனே, நான் இந்த ஒரு சிறு குறிப்பினைக் கூற விரும்புகிறேன். பாருங்கள், கர்த்தர் இதை அநேக முறை திரும்பத் திரும்ப நிரூபித்திருக்கிறார் என்பதை நான்—நான் அறிவேன். புரிகிறதா-? நான் ஒரு பெரிய பிரசங்கியல்ல, எனக்கு கல்வியறிவு முதலியன இல்லை. நான் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். ஆனால் நான் ஒரு காரியத்தைச் செய்ய அழைக்கப்பட்டேன், அது வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதாகும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? நான் இந்த வரத்தைக் குறித்து அறிந்து கொள்வதற்கு முன்னர் கூட, நான் அங்கே வழக்கமாக மருத்துவமனைக்குச் சென்று ஜெபிப்பேன்; அப்பொழுது மருத்துவச்சிகளோ அவர்களிடத்தில், “இப்பொழுது நீங்கள் குணமடையப் போகிறீர்கள்” என்று கூறுவது எனக்கு நினைவிருக்கிறது. புரிகிறதா-? அதாவது ஏதோ ஒரு காரியம், அதாவது தேவன் ஜனங்களுக்கான என்னுடைய ஜெபங்களைக் கனப்படுத்தும் படி மிகவும் கிருபையுள்ளவராயிருந்து வருகிறார். 886 இன்றிரவு அது உலகளாவிய அளவில் எங்கும் பரவி அழைக்கப்பட்டால் எப்படியிருக்கும் என்று நான் யூகிக்கிறேன். சகோதரன் பிரான்ஹாம் அவர்களால் ஜெபிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொருவரும் இங்கே வாருங்கள், நீங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்கத்திற்கு பதில் கூறும்படியான ஒரு கடிதத்தை கொடுக்க நான் விரும்புகிறேன் என்று கூறினால் அப்பொழுது அது ஒரு உலகளாவிய ஒளிபரப்பாயிருக்கும். அப்பொழுது அது அவ்வாறு தெரிவிக்கப்பட்டால், ஒரு கால் நாற்பது அல்லது ஐம்பது இலட்சம் ஜனங்கள் அந்த அழைப்பிற்கு பதிலளிப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன். புரிகிறதா-? 887 அந்த ஜனங்கள், அல்லது அவர்களில் சிலர் ஏற்கெனவே மரித்துப் போயிருக்கலாம், மருத்துவரால் கைவிடப்பட்டு, சவ அடக்கம் செய்பவரால் அடக்கம்பண்ணப்பட்டிருக்கலாம். அவர்களில் சிலர் விபத்துகளில் கொல்லப்பட்டிருக்கலாம்: அவர்களில் சிலர் ஒரு இயற்கையான மரணம் அடைந்திருக்கலாம். அவர்களில் சிலர் குருடாய், நொண்டி நடப்பவராய், முடமானவராய், கைக்கால் திருகு நிலையில் உள்ளவராய், மன நோயினால் பாதிக்கப்பட்டு…மருத்துவமனையில் இருந்து கொண்டு, நாம் அவர்களுக்காக ஜெபிக்க மருத்துவமனையில் இருந்தோம் என்பதைக்கூட அறியாதிருக்கலாம். அவர்களை உள்ளேக் கொண்டு வந்து, அவர்களை சுகத்தோடு கொண்டு செல்லட்டும். அவர்கள் தங்களுடைய வழியில் போராடி, தங்களை சின்னா பின்னமாக்கிக் கொண்டு, தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதைக் கூட அறியாதிருக்கிறார்கள். ஐந்தே நிமிடங்களில் அவர்கள் இயல்பு நிலைக்கு உள்ளாகி, இனிமையாய், அன்பான ஜனங்களாய், தங்களுடைய எஞ்சியுள்ள நாட்களில் தெளிந்த புத்தியோடிருப்பார்கள். புரிகிறதா-? 888 அது…அது என்னவாயுள்ளது-? அது சகோதரன் பிரான்ஹாம் அல்ல. அது இயேசு கிறிஸ்துவாய் உள்ளது, அவர் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி என்னை அனுப்பினார். இப்பொழுது அதுதான் இங்கு உள்ளது. அது ஜெபர்ஸன்வில் அதிக வெற்றிகரமாய் இருந்து வரவில்லை, ஏனென்றால், அதற்குக் காரணம் இங்கு உள்ளது. இப்பொழுது எனக்கு இந்தப் பட்டிணத்தில் இங்கே என்னுடைய மிக நெருங்கிய, மிகச் சிறந்த நண்பர்கள் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தப் பட்டிணம் தாமே, இந்தப் பட்டிணத்தின் மாநிலத்தையே, நான் இதை விரும்புகிறதில்லை. நான் இந்த நிலைமையை விரும்புகிறதில்லை, ஒரு போதும் விரும்பினதில்லை; நான் ஒரு சிறு பையனாய் இருந்த போது, என்னுடைய சரித்திர புத்தகங்களை அமர்ந்து வாசித்துக் கொண்டு இருந்தேன், அப்பொழுது நான், “என்றோ ஒரு நாள் நான் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுவேன்” என்று கூறிக்கொண்டேன். புரிகிறதா-? 889 நான் ஜெபர்ஸன்வில்லை விரும்புகிறதில்லை, இது ஒரு சதுப்பு நிலமாய் உள்ளது, இது இங்கே கீழே உள்ளது. இது உண்மையாகவே சதுப்பு நிலமாகவே உள்ளது, இது மிக மோசமாகவும் உள்ளது. நீங்கள் பார்க்க வேண்டுமென்றால், இங்கிருந்து மேலே ஸ்பிக்கர்ட் நப்ஸ் அல்லது எங்காவது உச்சியில் ஏறிச் சென்று, அங்கிருந்து நியூ ஆல்பனியையும், ஜெபர்ஸன்வில்லையும் கீழ் நோக்கிப் பாருங்கள். இங்கே பாருங்கள், மருத்துவர்களும் கூட, “இந்தப் பள்ளத்தாக்கின் நிலைமையின் காரணமாக இங்குள்ள ஜனங்கள் இரத்த சோகையுள்ளவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். 890 இங்கே உள்ள ஒரு பெண்மணி திருமதி.மார்கன் புற்று நோயிலிருந்து குணமாக்கப்பட்டாள், அவள் தன்னுடைய நாயை இங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றாள், ஏனென்றால் அதற்கு சொறி பிடித்து விட்டது என்று எண்ணிக் கொண்டாள். அது என்னவாய் இருந்தது என்று உங்களுக்குத் தெரியுமா-? அது கோல்கேட் என்ற இடத்தில் களைச் செடிகள் வளர்ந்து காணப்படும் இடத்தினூடாக அந்த நாய் சென்றிருந்தது. இது மிகவும் ஆரோக்கியமற்ற ஸ்தலமாகவே உள்ளது. 891 இராணுவத்தில் இருந்த ஒரு நபர் இங்கு சென்றார்…அவருக்கு காச நோயிருந்தது. அவர் இங்கே பிளாரிடாவிற்கு வந்த போது, அவருடைய கண்கள் உண்மையாகவே கருமையாகி விட்டன, அவர் மருத்துவரிடம் சென்றார், அப்பொழுது அவர், “மருத்துவரே…” என்றார். 892 அப்பொழுது மருத்துவரோ, “இப்பொழுது நீங்கள் ஒரு சண்டையிட்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் சண்டையிட்டிருக்கவில்லையா-?” என்று கேட்டார். 893 அதற்கு அவர், “இல்லை ஐயா, நான் சண்டையிட்டிருக்கவில்லை” என்றார். 894 அது யார் என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அவருடைய பெயர் ஹெர்பை என்பதாகும். இப்பொழுது என்னால் ஞாபகப்படுத்திப் பார்க்க முடிந்தால் நலமாயிருக்கும்… அது—அது நியூ ஆல்பனியில் உள்ள ஐக்கிய தேசிய வங்கியில் அவர் பணம் கொடுக்கல் வாங்கல் செய்பவராயிருக்கிறார். அங்குபோய், “ஹெர்பை” என்று கூறுகிற ஒருவரைப் பார்த்து, அவரிடத்தில் கேட்டுப் பாருங்கள். 895 அவர் கூறினார்… அவர் சென்றார், அவர், “மருத்துவரே” என்று அழைத்து, அவர், “எனக்கு எலும்பு உட்புழை பாதிப்பு உள்ளது” என்றார். 896 அப்பொழுது மருத்துவர் அவரை பரிசோதித்துப் பார்த்துவிட்டு “அது உண்மை” என்றார். அவர், “நீங்கள் ஒரு சண்டையிலிருந்து வருகிறீர்கள் என்றே நான் எண்ணிக் கொண்டேன்” என்றேன். மேலும் அவர், “நீர் எங்கே வசிக்கிறீர்-?” என்று கேட்டார். 897 அதற்கு இவரோ, “நீர் அந்த இடத்தை அறியாதிருக்கலாம்” என்று கூறி, “நான் கென்டக்கியில் உள்ள லூய்வில்லின் இந்தியானாவில் உள்ள நியூ ஆல்பனி என்று அழைக்கப்படும் ஒரு சிறு பட்டிணத்தில் வசிக்கிறேன்” என்றார். 898 அப்பொழுது அவர், “நீர் இந்த எலும்பு உட்புழை பாதிப்பை இங்கே மியாமியிலிருந்து வருகிற உப்புத் தண்ணீரிலிருந்து பெற்றுக் கொள்கிறேன் என்று என்னிடம் பொருட்படுத்திக் கூறுகிறீரா-?” என்று கேட்டார். மேலும் மருத்துவர், “நீங்கள் இந்தியானாவில் உள்ள ஜெபர்ஸன்வில்லில் வாழ்ந்து விட்டால் அல்லது இந்தியானாவில் உள்ள நியூ ஆல்பனியில் வாழ்ந்து விட்டால், அப்பொழுது நீங்கள் இந்த உலகில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவம் உங்களை அனுப்பும் எந்த இடத்திலும் வாழலாம்” என்றார். அப்படித் தான். புரிகிறதா-? 899 அது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் சதுப்பு நில நச்சுக்காற்று வீசும் இடத்திற்கு அடுத்தபடியாக அது உலகத்திலேயே மிகவும் ஆரோக்கியமற்ற ஸ்தலமாக இது உள்ளது என்பதை நான் அறிவேன். புரிகிறதா-? எனக்கு—எனக்கு—எனக்கு—எனக்கு இங்கே நண்பர்கள் உண்டு. 900 இங்கே பாருங்கள், என்னால் இந்தவிதமாக போய் அவர்களை அழைக்க முடியும். என்னுடைய நண்பர் மருத்துவர் சாம் அடேயர் அவர்களைப் பாருங்கள். சரி, அங்கே மைக் ஈகன் அமர்ந்து கொண்டிருக்கிறார். ஓ, என்னே-! எத்தனை பேரை என்னால் பெயர் சொல்லி கூற முடியும். உண்மையாகவே ஆயிரக் கணக்கான நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள், நான் சிநேகம் வைத்துள்ள என்னுடைய பழைய சிநேகிதர்கள்…எத்தனை புதிய நண்பர்களை நான் கண்டறிந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, ஆனால் அது ஒரு பழைய நண்பரின் ஸ்தானத்தை ஒருபோதும் எடுத்துக் கொள்ளாது. நீங்கள் அதை அறிவீர்கள். 901 என்னுடைய வயோதிகத் தாயார் அங்கே பின்னால் அமர்ந்திருக்கிறார், அவர்கள் இந்த பூமியில் அநேக நாட்கள் இருக்கப் போவதில்லை, அவர்கள் இப்பொழுது தன்னுடைய அறுபது வயதினை கடந்தவராயிருக்கிறார்கள். என்னுடைய மனைவினுடைய தாயார், எழுபது வயது, எழுபத்தி ஒன்று ஆகப் போகிறது; அவரும் அங்கு எங்கோ இன்றிரவு பின்னால் அமர்ந்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர்களும் பூமியிலிருந்து போகத் தான் வேண்டும். என்னுடைய தந்தையை இங்கே அடக்கம் செய்துள்ளேன்; மனைவியை இங்கே வால்நட் ரிட்ஜ் என்ற இடத்தில் அடக்கம் செய்தேன்; என்னுடைய குழந்தை அங்கே வைக்கப்பட்டுள்ளது. நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா-? 902 நானும்—நானும்—நானும் விரும்பவில்லை…நானும்—நானும்—நானும்—நானும் இங்கே தரித்திருக்க விரும்பவில்லை, அதாவது சீக்கிரத்தில் நான் போய்விட வேண்டியதாயிருக்கப் போகிறது என்று நான் நினைக்கிறேன். பாருங்கள். காரணம் அது என்னிடத்திற்கு வந்து கொண்டிருக்கிறது, நான் இதை என் பிரசங்கபீடத்தின் மேலுள்ள வேதாகமத்தின் முன்னே தொடர்ந்து கூறிவருகிறேன். 903 நான் என்னுடைய மனைவியினிடத்தில் கூறின போது, அதாவது அவர்கள் இந்த சபைக்கு நான் திரும்பி வந்தபோது போதகர் இல்லத்தைக் கட்ட எங்களுக்கு பணத்தைக் கொடுத்த போது…இந்த சபைக்கே அந்த போதகர் இல்லத்தை சொந்தமாக கொடுத்துவிட்டேன்; அது அவ்வாறில்லையா என்று இங்கே போய் கண்டறியுங்கள். பாருங்கள், நான் அதை எனக்கென்று எடுத்துக் கொள்ளமாட்டேன். 904 இப்பொழுது, நான் அங்கே கட்டப் போவதாயிருந்தபோது, மேடா, “நான் என்னுடைய தாயினிமித்தமாக இங்கே தங்கியிருக்க வேண்டும்” என்றாள். 905 அப்பொழுது நான், “தேனே, நாம் நிச்சயம் அதைச் செய்யும்போது, நாம் அதைக் குறித்து வருத்தமடைவோம். புரிகிறதா-? அது கிரியை செய்யாது. தேவனோ, ‘வேறு பிரித்துக் கொள்’ என்று கூறிவிட்டார், எனவே நான் அதைச் செய்ய வேண்டும்” என்றேன். 906 அதற்கு அவளோ, “என்னுடைய தாயாயாயிற்றே-!” என்று கூறினாள். 907 அப்பொழுது நான், “என்னுடைய தாயையும் கூட. ‘ஆனால் தன்னுடைய சொந்தத்தை மறந்து என்னைப் பின்பற்றாதவன் என்னுடையவன் என்று அழைக்கப்பட பாத்திரன் அல்ல’ என்றாரே. அது உண்மையாயிற்றே” என்றேன். 908 என்றோ ஒரு நாள் சீக்கிரத்தில் நான் இங்கிருந்து போகவேண்டியிருப்பதை நான் உணருகிறேன், அதாவது இதைவிட்டுப் போகப் போகிறேன். ஆனால் இங்கே இந்தவிதமாக இருந்தால் கூட்டங்கள் இங்கே சரிவர நடைபெறாது. அது வேறெங்கும் நடப்பது போன்று இங்கு நடைபெறாது, கூட்டங்களில் கலந்து கொண்டுவந்துள்ள எந்த நபருமே அது உண்மை என்பதை அறிவர், ஏனென்றால் இது இங்கே நான் பிறந்த என்னுடைய சொந்த பட்டிணமாய் உள்ளது. அதுதான் இது. 909 இயேசுவானவர் வந்த போதும், இதேக் காரியத்தைக் கூறினார். 910 அவர்கள், “யார் இந்த நபர்-? அதாவது அவர் இங்குள்ள தச்சனுடைய பையன் அல்லவா-? அவர் எந்த பள்ளிக்குச் சென்றார்-? அவர் இதை எங்கே கற்றுக் கொண்டார்-? இப்பொழுது நீங்கள் செய்கிறதை…நான் பார்க்கட்டும்…நீ அற்புதங்களை இங்கே செய்தாய் என்று நீ கூறினாயே, நீ அதேக் காரியத்தை இங்கே செய்ய நான் காணட்டும். நீ கப்பர்நாகூமில் என்ன செய்தாயோ, அதை நீ இங்கு செய்ய நான் காணட்டும்” என்றனர். 911 இயேசு கூறினார்…அவர் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார். அவர் திரும்பி, “ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் உள்ள தன் ஜனங்கள் மத்தியிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்று மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். அது சரிதானே-? 912 நாம் அறிவோம்…பாருங்கள்…பின்னி அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள், சாங்கி, மூடியை எடுத்துக் கொள்ளுங்கள்; ஜான் வெஸ்லியை எடுத்துக் கொள்ளுங்கள், பாருங்கள், அவர் தன்னுடைய தேசத்தை விட்டு செல்லும்வரை அவரால் ஒன்றுமே அதைக் குறித்து செய்ய முடியாதிருந்தது. மூடி அவர்களை நோக்கிப் பாருங்கள். மூடி பாஸ்டனில் ஒரு செருப்புத் தைப்பவராய் இருந்த போது, அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, அவர் புகழ் வாய்ந்தவறாவதற்கு முன்னரே அவர் சிக்காகோவிற்கு வந்து விட்டார். புரிகிறதா-? அவர் தன்னுடைய சொந்த பட்டிணத்திலிருந்து வெளியேற வேண்டியதாயிருந்தது. நீங்கள் எப்பொழுதுமே அதைச் செய்ய வேண்டும். 913 ஆனால் இப்பொழுது, இங்கே, நீங்கள் வில்லியம் பிரான்ஹாம் என்பதை மறந்து விட்டால், வில்லியம் பிரான்ஹாம் இதனோடு எந்தக் காரியத்தையாவது செய்யமுடியும் என்பதை நீங்கள் மறந்து விட்டால் தேவன் ஜெபத்திற்கு பதிலளிப்பார், (புரிகிறதா) ஒருவர் மாத்திரமே உங்களுக்காக நின்று ஜெபிக்க முடியும். அது நீங்கள் செய்யும்படி கேட்டுக் கொண்டதை ஏற்கனவே செய்துவிட்ட இயேசு கிறிஸ்துவாகும். நீங்கள் அதை அப்படியே விசுவாசித்தால் நலமாயிருக்கும். புரிகிறதா-? நான் செய்வதற்கு எந்தக் காரியமும் இல்லை…அதற்கு என்னோடு எந்த சம்மந்தமும் கிடையாது, சாட்சி மாத்திரமே பகருகிறேன். ஆனால் இங்கே உங்களோடு வளர்ந்து வந்தது போலவே, எனக்கு உள்ள ஒவ்வொரு களைப்பையும், நான் செய்கிற ஒவ்வொரு தவறையும்…நீங்கள் அறிந்துள்ளீர்கள். தேவன் இந்தப் பட்டிணத்தில் என்ன செய்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள், 914 இந்தப் பட்டிணம் நியாயத்தீர்ப்பின் நாளிலே ஒரு பெரிய கிரயத்தை ஒரு நாளில் செலுத்தும், ஏனென்றால் இங்கே (அது உண்மை), சரியாக இங்கே கோடிக் கணக்கான விசேஷித்த அற்புதங்கள் நடந்து வந்துள்ளன. அடையாளங்களும், அற்புதங்களும், இங்கே கீழே தூதனின் பிரசன்னமாகுதல், மற்றும் செய்த்தித்தாளில் வெளியான ஒவ்வொரு காரியமும், இன்னமும் ஜனங்கள்… அறியாதிருக்கின்றனர், அது ஏன்-? 915 இப்பொழுது என்றோ ஒரு நாள் நான் இங்கிருந்து போகப் போகிறேன். நானோ, “என்னுடைய முடிவு என்னவாயிருக்கும்-? இது முற்று பெற்று விட்டதா-? இதைக் குறித்து என்ன-? எனக்கு 48 வயதாகிறது. இது ஏறக்குறைய முடிவுற்றுவிட்டதா-?” என்று வியப்புற்றுக்கொண்டிருக்கிறேன். நான் இதைக் குறித்து வியப்புறுகிறேன். அது… 916 பாருங்கள், அங்குள்ள அந்த புகைப்படத்தை ஏன் உலகம் தெளிவாக உணரவில்லை-? ஏன் அதைத் துரிதமாக புரிந்து கொள்ள வில்லை-? அவர்கள் ஏன் இந்த மற்றக் காரியங்களைப் புரிந்து கொள்கிறதில்லை-? ஏன் அவர்கள் இந்த தீர்க்கதரிசனங்களையும் மற்றக் காரியங்களையும் புரிந்து கொள்கிறதில்லை-? உங்களுக்குத் தெரியும், அவர்களால் அதை இப்பொழுது புரிந்து கொள்ள முடியாது, ஆனால் ஒரு நாள் நான் இந்த உலகைவிட்டுச் செல்லப் போகிறேன், நான் செல்லும்போது, அப்பொழுது அவர்கள் அதை அடையாளங் கண்டு கொள்வார்கள். நான் போய்விட்டப் பிறகு உங்களில் சில வாலிப ஜனங்கள் அதை தெளிவாக உணருவார்கள். புரிகிறதா-? ஆனால் அது இப்பொழுது புரிந்து கொள்ளப்பட தேவன் அனுமதிக்கமாட்டார். என்னவென்பதைப் பாருங்கள்…நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] 917 ஒரு சிறு பெண்ணுடைய காப்பு. எவரேனும் அதைப் பெற்றுக்கொள்ளலாம். சகோதரன் சாத்மன் அவர்கள் கடந்த முறை இங்கே இருந்தபோது, அவர் ஒரு வேதாகமத்தை விட்டுச் சென்று விட்டதாகக் கூறினார் என்று நான் நினைக்கிறேன். எவரேனும் ஒரு வேதாகமத்தை தவறிப்போயிருந்த ஒரு—ஒரு வேதாகமத்தை இங்கே கண்டீர்களா-? நீங்கள் அதைக் கண்டெடுத்திருந்தால், அது கனடாவிலிருந்து வந்துள்ள சகோதரன் பிரட் சாத்மன் அவர்களுக்குச் சொந்தமானதாயிருக்கிறது. இப்பொழுது நாம் ஜெபம் செய்வோமாக. 918 கர்த்தாவே, இரக்கமாயிரும், இசையானது இனிமையாக இசைக்கப்படுகையில், சகோதரன் நெவில் எண்ணெயைப் பூசுகையில், நான் இயேசுவின் நாமத்தில் வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கப் போகிறேன். கர்த்தாவே அவர்களுடைய சுகமளித்தலை அருளும். ஆமென். 919 இப்பொழுது ஒவ்வொருவரும், ஒவ்வொருவரும் ஜெபியுங்கள். சரி. கர்த்தாவே, இந்த சிறு பிள்ளைக்காக அதனுடைய தாத்தா இங்கே நிற்கிறார். அந்தப் பிள்ளை பால் குடிக்க முடியாதபடி ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நீர் எல்லா வல்லமையையும் உடையவராயிருக்கிறீர், இந்த சிறுபிள்ளைத் தானே அதற்கான விசுவாசத்தை உடையதாயிருக்க முடியாது. ஆகையால் கர்த்தாவே, நான் அதற்காக விசுவாசத்தை உடையவனாய், அந்த பெற்றோரோடும், தாத்தாப் பாட்டியோடும் சேர்ந்து, அந்தக் குழந்தை பாலைப்பருகி, தேவனுடைய மகிமைக்காக ஜீவிக்க வேண்டும் என்று நாங்கள் இயேசுவின் நாமத்தில் கூறுகிறோம். ஆமென். அது அந்த விதமாகவே இருக்கும். ஓ, தேவனே, அவள் தன்னுடைய தகப்பனுக்காக ஜெபிக்கிறாள். நீர் அவளுடைய தகப்பனைக் குணப்படுத்தி, அவருக்கு தேவைப்படுகிறதை அவருக்குத் தரும்படி கிறிஸ்துவின் நாமத்தில் நான் அவளோடு ஜெபிக்கிறேன். ஆமென். 920 இப்பொழுது அது எளிமையாயிருக்கவில்லையா-? ஜனங்கள் ஜெபிக்கிறார்கள், ஆனால் அதனால்தான் ஜனங்கள்…அவர்கள் ஒரு பெரிய காரியத்திற்காக எதிர்பார்த்து, அவர்கள் அதை சிக்கலாக்குகிறார்கள். தேவனோ அதை எளிமையாக்குகிறார். நீங்கள் அதை சிக்கலாக்கிவிட்டு, அதை தவறவிட்டுவிடுகிறீர்கள். புரிகிறதா-? அப்படியே…அது தேவன் கூறினது போன்றே எளிமையாயிருக்கட்டும், தேவன் கூறினது போன்று, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன்; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று இருக்கட்டும். 921 கர்த்தாவே, நாங்கள் இந்த ஸ்திரீயின் மேல் கரங்களை வைத்து, இங்கே நின்று கொண்டிருக்கிற எங்களுடைய இந்த சகோதரி குணமடைவாளாக என்று நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தில் வேண்டுக் கொள்கிறோம். ஆமென். 922 பிதாவே, நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், வேதாகம நினைவு கூருதலின்படியும், கர்த்தருடைய போதனையின்படியும் எங்களுடைய சகோதரியின் மேல் கரங்களை வைக்கையில் அவள் குணமடைவாளாக. பிதாவே, நாங்கள் எங்களுடைய சகோதரியின் சுகமளித்தலுக்காக கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம், நாங்கள் உம்முடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, என்னுடைய சிந்தையில் ஒரு சந்தேகமும் இல்லாதிருக்கிறபடியால் நீர் அவளை முழுமையாய் சொஸ்தமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், ஆனால் அவள்…-?…ஆமென். 923 பிதாவே, நாங்கள் எங்களுடைய சகோதரி மீது கரங்களை வைத்து, நீர் அவளைக் குணப்படுத்தி, அவளை முழுமையாய் சொஸ்தமாக்க வேண்டும் என்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் எங்கள் சகோதரன் மீது கரங்களை வைத்து, நீர் அவரை தேவனுடைய மகிமைக்காக முழுவதும் சொஸ்தமாக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம். பிதாவே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் சகோதரிக்கு எண்ணெய்யைப் பூசி, அவள் மீது கரங்களை வைத்து, அவளுடைய சுகமளித்தலுக்காக இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். பிதாவாகிய தேவனே, நாங்கள் எங்களுடைய சகோதரன் மீது கரங்களை வைத்து, நாங்கள் அவருக்கு எண்ணெய்ப் பூசுகையில், நீர் அவரை முழுமையாய் சொஸ்தமாக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். பிதாவே, இங்கே அவருடைய அன்பான மனைவி…-?…அவளுக்கு எண்ணெய் பூசி, அவள் மீது கரங்களை வைத்து, அதை இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். 924 தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் குட்டி எடித்துக்கு எண்ணெய் பூசி, அவள் மீது கரங்களை வைத்து, நீர் அவளுடைய வேண்டுகோளை அருள வேண்டும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். பிதாவே அவளுடைய தாயாருக்கும் கூட நாங்கள் எண்ணெய் பூசி, அவள்மேல் கரங்களை வைத்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளுடைய சுகமளித்தலுக்காக வேண்டிக் கொள்கிறோம், அவள் முழுமையாய் சுகமடைவாளாக. 925 பிதாவே, நாங்கள் இந்த குடும்பத்தின் இந்த விலையேறப்பெற்ற சிறு சம்பத்திற்கு, சிறு இருதயத் துடிப்பிற்கு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் எண்ணெய்யைப் பூசுகிறோம், ஒரு நாளில் அவரிடத்தில் சமர்ப்பிப்போம், நீர் அவளைக் குணப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்… 926 ஓ, தேவனே, நீர் எங்களுடைய சகோதரியின் வேண்டுகோளை அறிந்திருக்கிறீர், அவளுடைய தீரமான விசுவாசத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்பொழுது அவள் கேட்டுள்ள அந்தக் காரியங்கள் தாமே…-?…அவள் சிறுமியாயிருந்தபோது அவள் விளையாடினாள், தேவனே சத்துரு அந்த ஸ்திரீயை விடுவிப்பானாக, அவள் சுகமாய் வீட்டிற்கு வருவாளாக. நாங்கள் அந்த மனிதனுக்காகவும் கூட ஜெபிக்கிறோம், அதற்காகவே அவள் வேண்டிக் கொண்டாள், நீங்கள் என் நாமத்தில் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன் என்று நீர் வாக்களித்திருக்கிறீர். நீர் இந்த வேண்டுகோளை இயேசுவின் நாமத்தில் அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 927 கர்த்தாவே, என் சகோதரனுடைய நெற்றியில் உள்ள இந்த நரம்பு மரித்துக்கொண்டிருக்கிறபடியால், நாங்கள் அது ஜீவனைப் பெறுவதற்காக வேண்டிக் கொள்கிறோம், நாங்கள் அவர் மேல் கரங்களை வைக்கையில், அந்த நரம்பு குணமடைய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் இதை வேண்டிக் கொள்கிறோம். பிதாவாகிய தேவனே, நாங்கள் எண்ணெய்யை எங்களூடைய சகோதரியின் மீது பூசினப் பிறகு, அவள் மீது கரங்களை வைத்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் அவளுடைய சுகமளித்தலுக்காக வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 928 பரலோகப் பிதாவே, நீர் கொண்டுவந்துள்ள அநேக மகத்தான வெற்றிகளுக்காக எங்களுடைய சகோதரி நின்றிருக்கிறபடியால், அவள் உம்முடைய ஊழியக்காரர்களில் ஒருவருக்காக, ஒரு ஊழியக்காரருக்காக மிகவும் பதட்டமாக நின்று கொண்டிருக்கிறாள்; அவர் எதனூடாக செல்கிறார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறபடியால், எங்களுடைய இருதயத்தின் பரிவிரக்கம் அவருக்காகச் செல்கிறது. தேவனே, அவருக்காக இங்கு நின்று கொண்டிருப்பதற்காக எங்களுடைய சகோதரியை நீர் அபிஷேகிக்க வேண்டும் என்றும், அவருடைய சுகமளித்தலுக்காக அவரையும் அபிஷேகிக்க வேண்டும் என்றும் நான் ஜெபிக்கிறேன். நான் கிறிஸ்துவினுடைய நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்…-?…கர்த்தர் அறிந்திருக்கிறார்…-?… 929 நல்லது. நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அது உண்மையாகவே கர்த்தருடைய அபிஷேகமாயுள்ளது. தேவனாகிய கர்த்தாவே, இந்த ஸ்திரீ அநேக ஆண்டுகளாக போராடி வந்த ஒரு பிசாசினிடத்திலிருந்து விடுவிக்கப்படும்படியாக அவள் கதறியப் பிறகு, அவள் பீடத்தண்டை கிடந்து எப்படி செய்ய வேண்டும் என்று அவள் அறிந்திருந்த ஒவ்வொரு காரியத்தையும் அவள் செய்திருந்த பிறகு, ஒரு நாள் அங்கிருந்த வீட்டண்டை அவள் வந்த போது, ஆவியானவர் இறங்கி வந்து, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று கூறினார். அதற்கு கர்த்தர் உரைக்கிறதாவது தேவைப்பட்டது. இப்பொழுது அவள் தன்னுடைய சகோதரியினுடைய குழந்தை வாந்தியெடுத்துக் கொண்டிருப்பதற்காகவும், ஒரு வயது ஏற்கெனவே பூர்த்தியாகியும் நடக்க முடியாமல் இருப்பதற்காகவும் வந்திருக்கிறாள். கர்த்தாவே, நீர் அவளுக்கு தேவனுடைய ஆசீர்வாதங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அதற்காக மிகவும் மகிழ்ச்சியாயும், சகோதரியோ வித்தியாசமாயுங்கூட காணப்படுகிறாள். நீங்கள் இப்பொழுது மரிப்பதிலிருந்து ஒரு நீண்ட பாதையில் இருக்கிறீர்கள், நீங்கள் அவ்வாறில்லையா-? பிதாவாகிய தேவனே, நாங்கள் எங்களுடைய சகோதரிக்கு எண்ணெய் பூசி, அவள் மேல் கரங்களை வைத்து, நீர் கூறியுள்ள, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்ற இந்த காரியத்தை வேண்டிக்கொள்கையில், நீர் அவளை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, நாங்கள் விசுவாசிகளாயிருக்கும்படியாக அறிக்கை செய்கிறோம், ஆகையால் நீர் இயேசுவின் நாமத்தில் ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்…-?… 930 பிதாவாகிய தேவனே, இந்த சிறு ஸ்திரீ தன் இருதயத்தை ஊற்றி இருக்கிறபடியால், நீர் அவளுடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியால், நீர் அவளிடத்தில் இரக்கமாயிருக்க வேண்டும் என்றும், அவள் கேட்டுக்கொண்ட வேண்டுகோளை அவளுக்கு அருள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஓ, பிதாவாகிய தேவனே, அவளுடைய குடும்பதிற்காகவும், அவளுடைய பிள்ளைகளுக்காகவும், விசேஷமாக அவளுடைய பையனுக்காகவும் நீர் இந்தக் காரியங்களை அருள வேண்டும் என்று தேவனே என் முழு இருதயத்தோடு இப்பொழுது நான் ஜெபிக்கிறேன்…-?…நான் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். ஆமென். பிதாவாகிய தேவனே, நாங்கள் இந்த ஸ்திரீக்கு எண்ணெய் பூசி, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அவளுக்காக ஜெபிக்கையில், நீர் அவளை குணப் படுத்தி, தேவனுடைய மகிமைக்காக அவளை முழுவதும் சொஸ்தப்படுத்தும். 931 உங்களுடைய பெயர் வெஸ்ட் என்பது தானே, அப்படித்தானே-! பிதாவே, நாங்கள் இந்த பெண்மணிக்காக ஜெபிக்கிறோம். அவள் தன்னுடைய தகப்பனாருக்காக வேண்டிக் கொள்கிறாள். இப்பொழுது, கர்த்தாவே நீர் அந்த தகப்பனுடைய இருதயத்தில் பேசி, அவளுடைய தந்தையை அவளுக்குத் தந்தருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர் இரட்சிக்கப்பட வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். அவள், அவருடைய சொந்தப் பிள்ளை, அவருடைய கற்பப்பிறப்போ அவர் இப்பொழுது இருக்கிறதுபோல உலகத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. பிதாவே, நீர் அவருக்கு இரக்கமாயிருக்க வேண்டும் என்று கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். 932 என் மகனே, தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ கேட்டுக் கொண்டு உள்ள காரியத்தை உனக்குத் தந்தருள்வாராக. அன்புள்ள தேவனே, நாங்கள் இரக்கத்திற்காகவும், அவளுக்காகவும் ஜெபிக்கிறோம், நாங்கள் அவளுக்கு எண்ணெய் பூசுகையில்-? நீர் இரக்கமாயிருக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். COD-8 டீக்கன்மார்களை நியமித்தல் Ordaining of Deacons 58-07-20E பிரன்ஹாம் கூடாரம்,ஜெபர்சன்வில், இந்தியானா, அமெரிக்கா 1. ஆகவே, அது தான், அது முதலாவதாக சபைக்குள்ளாக சில உதவிக்காரர்களை, டீகன்மார்களை (Deacons) வைப்பது தான். இங்கேயுள்ள நம்முடைய சிறு சபை ஆனது தனியுரிமை ஆட்சியுடையது. அதற்கு எந்த ஒரு ஸ்தாபனமோ அல்லது வேறொன்றோ கிடையாது. அது தனக்கு உதவிக்காரர்களை, மகன்மார்களை தெரிந்து எடுத்துக் கொள்கின்றது. அது தன்னுடைய மேய்ப்பரை தெரிந்தெடுத்துக் கொள்கின்றது, அது தன்னுடைய தர்மகர்த்தாக்களை தெரிந்தெடுத்துக் கொள்கின்றது, சபைக்கு உள்ளே அல்லது வெளியே வருகின்ற எல்லாவற்றையுமே அது தெரிந்தெடுக்கின்றது. எந்த ஒரு காரியத்தின் மேலும் செல்வாக்கு கொள்ள எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை, அது சபையாகும். சபைக்கு வந்து, தங்களுடைய இருத்தலினாலும் தங்கள் தசமபாகம் மற்றும் காணிக்கைகளினால் சபையைத் தாங்குபவர்கள் தான் சபையாகும், இவ்விதமான உதவிக்காரர்களை, டீக்கன்மார்களை வைத்தல் போன்றவற்றில் செல்வாக்கு உடையவர்கள் இவர்களே ஆவர். 2. மேலும் முன்னாள் உதவிகாரர்கள் (Deacons) குழுவிற்கு நான் நன்றி கூற விரும்புகிறேன், நான் இங்கிருந்து இந்த முழு சபையின் சார்பாக இதைக் கூறுகிறேன். அந்த சகோதரர்களில் யாராவது இங்கிருப்பார்களாயின், சகோதரன் காக்ஸ், சகோதரன் ஃபிளீ மேன், சகோதரன், ஹிக்கின்போத்தம் மற்றும் சகோ.டீட்ஸ் மேன், அவர்கள் நமக்கு, கர்த்தருக்கு, இந்த கூடாரத்தில் நல்ல ஒரு சேவையை செய்தனர். 3. ஆகவே ஒவ்வொரு தடவையும், சபையின் உப-சட்டத்தின்படியும், ஒவ்வொரு வருடமும் உதவிக்காரர்கள் (Deacons) அல்லது தர்மகர்த்தாக்கள் தானாகவே தங்களுடைய காலத்திற்கேற்றவாறு அமர்த்திக் கொள்வார்கள். அவர்கள் திரும்பவுமாக வரவிரும்பினால், சரி. திரும்பவுமாக இருக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால், இந்த குழு ராஜினாமா செய்ததென்றால் அப்பொழுது தங்கள் இடங்களில் மற்ற ஒருவரை அமர்த்தலாம். 4. முந்தைய இரவு நான் தர்மகர்த்தாக்களின் குழுவை- புதிய தர்மகர்த்தாக்கள் குழு இருக்கிறது. அதை அழைத்தேன், நான் சகோதரன் லூத்தர் மெக்டோலை இங்கே இன்றிரவில் பார்த்தேன், அவர் முன் இருந்த தர்மகர்த்தாக்களின் குழுவில் இருந்தார், அவரை உள்ளே காண்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த வாரத்தில் நான் சென்று சபைக்கு அளிக்கப்பட வேண்டிய ஜெராக்ஸ் நகல் எடுக்கப்பட்டு விட்டதா என்று கண்டறிய சென்றேன். இப்பொழுது சபையின் தர்மகர்த்தாக்கள் சகோ.வில்லியம் மார்கன், சகோதரன் மைக் ஈகன், சகோதரன் பாங்க்ஸ் உட், மற்றும் சகோதரன் ராய் ராபர்சன் ஆவர். இந்த இரண்டு நகரங்கள் நடுவில் வசிக்கின்ற சகோ.ராய் ராபர்சனைத் தவிர, ஏனையோரெல்லாம் இந்த நகரத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். இந்த மனிதர் சரியானவர்கள் என கர்த்தர் கண்டார், மேலும் கனம்மிக்க மதிப்பிற்குரிய மனிதரான இவர்கள், இப்பொழுது, இந்த சபை தர்மகர்த்தாக்களின் பணியை பெற்றுள்ளனர். 5. ஆகவே இந்த கூட்டமானது நடைபெற்றுக் கொண்டு இருக்கையில், உதவி மேய்ப்பர் எங்களிடம்... இவர்களுடைய பணிக்காலம் முடிவுற்று, இராஜினாமா செய்து விட்டனர்- ஆகவே புதிய உதவிக்காரர், டீகன்மார்கள் குழுவை தேர்ந்து எடுக்க, இன்னும் சில உதவிக்காரர், டீகன்மார்கள் தேர்ந்தெடுக்க வேண்டியதாய் இருக்கின்றது. இப்பொழுது சபை... அந்த விதமாகத்தான் இது செய்யப்பட்டு இருக்கின்றது, - ஐக்கியப்பட்டிருக்கின்றவராக இருந்து, மதிப்பிற்குரியவராகவும் நற்புத்தி உள்ள மனிதனாக இருக்கின்ற மனிதனையே குழுமமானது (board) உதவிக்காரர்களாக, டீகன்களாக நியமிக்கும். 6. ஒரு உதவிக்காரனுடைய, டீகனுடைய அலுவலானது மிகவும் மகத்தான ஒரு அலுவலாகும், ஊழியமாகும் - மேலும் சபையில் ஒரு உதவிக்காரனாக, டீகனாக இருப்பது தேவனுக்கு ஒரு மகத்தான கனமாக இருக்கிறது. ஆகவே கடந்த இரவு கூட்டத்தில், ஒரு குறிப்பிட்ட மனிதர் என்னிடம் கொண்டு வரப்பட்டார். மேய்ப்பருடனான கூட்டத்தில், அடுத்த ... இவர்களெல்லாம் மதிப்புமிக்கவர்களும் நீதியுள்ள மனிதர் என்று கடந்த வெள்ளியன்று, இந்த மனிதர் ஒப்புக் கொண்டார். 7. அவர்கள் கண்டெடுத்த ஒரு இளம் மனிதன், முற்றிலுமாக தகுதியில்லாதவராக இருந்தார் (அவர் சரியான மனிதன் அல்ல என்பதனால் அல்ல) நம்முடைய தர்மகர்த்தாக்களின் குழுவைச் சார்ந்த கனம் மிக்க ஒரு மனிதனால் இவர் குறிப்பிடப்பட்டிருந்தார். ஆனால் நானும் மேய்ப்பரும் ஒன்று சேர்ந்து இந்த இளம் மனிதனின் வயதைக் கேட்டோம், இவருடைய வயது - இருபதுகளின் தொடக்க வருடங்களில் இருந்தார். கனம் மிக்க, நீதியான, மற்றும் உண்மை உள்ள மனிதனாக இருந்தார், ஆனால் அவர் திருமணமாகாதவராக இருந்தார். ஒரு உதவிக்காரன், மக்கள் விவாகமான மனிதனாக இருக்க வேண்டுமென்று வேதாகமம் கட்டளையிடுகின்றது. அவன் ஒரே மனைவியையுடைய புருஷனாய் இருக்க வேண்டும். 8. அதன் பிறகு, ஒரு சகோதரன் குறிப்பட்டது போல, இன்னொரு மனிதன் மிகவும் தகுதி வாய்ந்தவராகவும் இருந்தார், மிகவும் உத்தமமுள்ள மனிதனாக இருந்து இருப்பார். காரியத்தை விசாரித்த பிறகு, அந்த சகோதரன் இந்த விசுவாசத்திற்குள் மிக சமீபத்தில் வந்தவராக இருந்தார், அவருடைய மனைவி இதை விசுவாசிப்பது இல்லை என்றும் கண்டறியப்பட்டது. அப்படியானால் ஊழியத்தில் அந்த மனிதனை அது தகுதி அற்றவராகச் செய்கிறது. ஏனெனில் அவர் தன்னுடைய முழு குடும்பத்தையும் கீழ்ப்படியப் பண்ணுகிறவராக இருக்க வேண்டும், அவர்களும் கூட விசுவாசத்தில் இருக்க வேண்டும், இல்லையென்றால் அது ஒரு முரண்பாடாக இருக்கும். 9. ஆகவே நாம் இப்பொழுது கட்டிக் கொண்டிருக்கிறோம் மற்றும் இந்த சபையை சரியாக பொருத்த விரும்புகிறோம். சபையின் பொது கண்காணி என்கின்ற முறையில், நான் இது வேதப்பூர்வமாக, ஒவ்வொன்றும் சரியாக வார்த்தையின் மேல் வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டியவனாக இருக்கிறேன். 10. ஆகவே இந்த மனிதர், இந்த ஊழியத்தை ஏற்றுக் கொள்ள மனது உடையவர்களாய் இருப்பதை உணர்ந்தால், சேவை செய்யலாம். ஒருக்கால் தேவன் அவர்களை அழைத்திருக்கிறார் என்று உணர்கிறார்களா என்று பார்க்கத் தக்கதாக சிறிது காலத்திற்கு இவர்கள் வருவார்கள். பிற்பாடு, தாங்கள் தகுதி இழந்தவர்கள் என்று அவர்கள் உணர்ந்தால், அப்பொழுது, அடுத்த சில வாரங்களில் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய இவர்களுக்கு உரிமை உண்டு, பிறகு தங்களுடைய இடங்களில் வேறு ஒருவர் நியமிக்கப்பட ஏதுவாக இருக்கும். 11. ஆனாலும், எழுப்புதலின் ஆரம்பத்தில், (தேவனுக்கு சித்தமானால்) சற்று ஓய்வெடுத்த பிறகு, இந்தக் கூடாரத்தில் இங்கே, அப்பொழுது நான் அப்பொழுது நான்... இந்த சபையில் இந்த உதவிக்காரர், டீக்கன்கள் மேல் கைகளை வைத்து நாங்கள் அபிஷேகிப்போம், இவர்கள் எப்படி இதை விரும்புகின்றனர் அல்லது சபையோர் எப்படி இதை விரும்புகின்றனர் என்று பார்க்க வேண்டும். பிறகு அது இரண்டு பக்கங்களில் இருந்தும் சரியானது என்பதாக காணப்படுமானால், அப்பொழுது இந்த மனிதரை அபிஷேகிக்கப்பட்ட உதவிக்காரராக, டீக்கன்மாராக ஆக்குவோம். தர்ம கர்த்தாக்களும் இதே விதமாகத் தான் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். 12. இது தேவனுடைய வார்த்தையின்படி சபையினுடைய சட்டமும், தனி உரிமையும் ஆகும். ஆதலால் ''இந்த மனிதன் சரியான நபராக இருப்பான் என்று நான் நினைக்கிறேன்” “இந்த மனிதன் சரியான நபராக இருப்பார் என சகோதரன் நெவில் எண்ணுகிறார்” அல்லது “இந்த மனிதன் சரியான நபராக இருப்பார் என்று தர்மகர்த்தாக்களின் குழு நினைக்கிறது'', என்று அவர்களால் கூற முடியாது, அது அவ்வாறே அல்ல. அது சபையால் மாத்திரமே இருக்க வேண்டும்-! யாரும் இங்கே தன்னுடையதை மாத்திரம் செய்வதில்லை. அது சபையின் ஓட்டு ஆகும். அது தனி உரிமை உடைய சபையாகும். 13. பழைய உபசட்டங்களின் பிரதிகள் 1937 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கில் அழிந்து போயின. அவைகளை நாங்கள் மறுபடியுமாக எழுதியுள்ளோம், தர்ம கர்த்தாக்கள், உதவிக்காரர் (டீக்கன்மார்கள், பொருளாளர், இன்னும் மற்றோர், மேய்ப்பர், உதவி மேய்ப்பர், இன்னும் மற்றோர் ஆகியோரின் பணிகளை பற்றி இங்கே விரைவில் அது சுவற்றில் தொங்கவிடப்படும். 14. தேவனுடைய கிருபையால், இந்த சபையின் குழுமத்தினூடாக நூறு சதவீத வாக்குகள் மூலம் சகோதரன் ஹாலின் ஹிக்கர்சன், நீதியுள்ள, கனம் பொருந்திய மனிதனாகவும், இந்த கூடாரத்தின் உதவிக்காரர் (டீக்கன்) என்கின்ற மகத்தான கனத்தை - பொறுப்பை பெற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்கிறார் என்று அவர்கள் கண்டு உள்ளனர் என்று என்னிடம் கூறப்பட்டுள்ளது. 15. மேலும், குழுமத்தின் வாக்களிப்பின் மூலமாக, சகோதரன் காலின்சும் ஒரு கனம் மிக்க, நீதியுள்ள மனிதரென்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது என நாங்கள் அறிந்து கொண்டோம். ஒரு ஊழியக்காரனாக அவர் இருப்பதால், சபையில் உதவிக்காரராக (டீக்கன்) இருக்கும் படியாக நாங்கள் அவரை அழைக்கிறோம், ஒரு உதவிக்காரராக (டீக்கன்) மாத்திரமே அல்ல, ஆனால் சகோதரன் நெவிலுக்கு உதவியாளராக மேலும் ஞாயிறு பள்ளி வகுப்புக்கு (Sunday school class) அல்லது சகோதரன் நெவிலுக்கு பதிலாக இருப்பதற்காக, அல்லது சகோதரன் நெவிலுக்கு எந்த விதத்திலெல்லாம் உதவியாளராக இருக்க முடியுமோ அந்த விதத்தில் அவர் இருப்பார். அது சகோதரன் காலின்ஸ் ஆகும். 16. மேலும், சகோதரன் டோனி-சேபில் ஒரு கனம் மிக்க, நீதியுள்ள மனிதரென்று சபையானது கண்டெடுத்துள்ளது, மேலும் இந்தக் கூடாரத்தின் உதவிக்காரர் (டீக்கன்) பதவியை பெற்றுக் கொள்ள அவரை அழைக்கத்தக்கதாக தர்ம கர்த்தாக்கள் குழு மற்றும் மேய்ப்பர்கள் ஆகியோரிடம் இருந்து ஆதரவுக் குறிப்பு அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 17. மேலும் மற்றும் இதுவும் கூட சொல்லப்பட்டு, நம் மத்தியில் ஒரு கனம்மிக்க நபர் கண்டெடுக்கப்பட்டு உள்ளார்.... (இல்லை.... இவர்கள் தான் கனம் மிக்க நபர் என்றல்ல, ஆனால் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாத்திரமே) ஹென்றிவில், அல்லது மெம்ஃபிஸைச் சார்ந்த சகோதரன் டெய்லர், அது இண்டியானாவிலுள்ள மெம்ஃபிஸ் என்று நான் நினைக்கிறேன். அவர் சில காலமாக நம்முடனே இருக்கின்றார், வாயில் காப்போனாக மற்றும் என்னவெல்லாமாக இருக்க முடியுமோ அவ்விதமாக இருந்தார். இவர் இந்த கூடாரத்தின் உதவிக்காரராக (டீக்கன்) இருக்கின்ற மகத்தான பதவியை ஊழியத்தை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக சபை அல்லது குழுமம் மற்றும் மேய்ப்பரின் அனுகூலத்தை பெற்று உள்ளார். 18. இன்னுமாக சகோ.மைக் ஈகனுடைய மருமகனான சகோ.சகோதரன் பாப் ஹார்னார்ட், கனம் மிக்க பொறுப்பாகிய கனமும் நியாயமும் தேவைப்படுகின்ற இந்த சபையின் பொருளாளர் பதவியை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக குழுமத்தாலும் மற்றும் மேய்ப்பராலும் தெரிந்தெடுக்கப்பட்டு உள்ளார். 19. இதைச் செய்வதினால் என் சகோதரரே, இங்கிருந்து உங்களை அழைப்பது உங்களுக்கு அது ஒரு மகத்தான கனமாக இருப்பது மாத்திரமல்ல, ஆனால் ஏதோ ஒன்றைச் செய்யத்தக்கதாகவும் அது இருக்கு மென்று நான் நினைக்கிறேன். 20. இந்த நேரத்தில், நம்முடைய உடனுழைப்பாளரான சகோ.நெவில் அவர்கள், உதவிக்காரராக (டீக்கன்) இருக்க, அதற்கு அவசியமாயுள்ளவைகளை- வாசிப்பார். சகோ.நெவில், அதை தேவனுடைய வார்த்தையிலிருந்து வாசிப்பார் (சகோ.நெவில் 1-தீமோத்தேயு-3:8-13-ஐ வாசிக்கின்றார் - ஆசி): அந்தபடியே, உதவிக்காரரும் இரு நாக்குள்ளவர்களாயும், மதுபானப் பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கம் உள்ளவர்களாயும், விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக் கொள்ளுகிறவர்களாயும் இருக்க வேண்டும். மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்பட வேண்டும்; குற்றஞ் சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம். அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறு பண்ணாத வர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர் களுமாயிருக்க வேண்டும். மேலும் உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்த குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாய் இருக்கவேண்டும் இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள். 21. ஆமென். இந்த நேரத்தில், அழைக்கப்பட்டிருக்கின்ற சகோதரர், இங்கே சற்று நேரம் மேலே மேடையை நோக்கி வரும்படியாய் நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை சற்று தாழ்த்துகையில் இவர்கள் தாமே... இது என்னவென்பதை சபை அறியும், அது தாமே உங்களுடைய உதவிக்காரர் (டீக்கன்மார்) குழுவையும் மற்றும் உங்கள் பொருளாளரையும் தேர்ந்தெடுப்பதாகும். 22. கர்த்தராகிய இயேசுவே, தெளிந்தவர்களாய், தேவ சிந்தனை உடையவர்களாக இப்பொழுது உம்மிடம் நாங்கள் வருகிறோம். உம்முடைய மிகுந்த பரிசுத்த வார்த்தைக்கு மரியாதையாக நாங்கள் வருகிறோம், ''ஒவ்வொரு மனிதனுடைய வார்த்தையும் தவறாயிருப்பதாக, ஆனால் தேவனுடைய வார்த்தை சத்தியம்'' என்று விசுவாசித்துக் கொண்டு நாங்கள் வருகிறோம். இயேசு தம்முடைய சொந்த விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே சம்பாதித்த இந்த சபைக்காவும், நாங்கள் ஆராதிக்க இந்த கட்டடத்தை எங்களுக்கு அளித்ததற்காகவும் உமக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். 23. இந்த மகத்தான மந்தையின் கண்காணிகளாக, அப்படி இருக்கத்தக்கதாக பரிசுத்த ஆவியானவர் எங்களை நியமித்திருக்கிற வேளையில், ஆவியில் நிரப்பப்பட்டு, ஊழியத்திற்கு, பணிக்கு தயாராய் இருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிற உத்தமமான, நீதியுள்ள மனிதரை, இந்த சபையாருக்கு அளிக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். உதவிக்காரர், டீக்கன்களைக் குறித்து ''நீங்கள் சென்று விதவைகளையும் அனாதைகளையும் விசாரிக்கவும், சபையின் நற்காரியங்களைக் கவனிக்கவும் இவ்விதமான வேலைக்காக பரிசுத்த ஆவியும் நற்சாட்சிப் பெற்றிருப்பவரை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்,'' என்று சொல்லப் பட்டிருக்கின்றது. வருடங்கள் கடந்த பின், மகத்தான பரிசுத்த பவுல்,, பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு அந்த ஸ்தானத்தின் தேவை என்னவென்று நாங்கள் சற்று முன் வாசித்ததை பிரகடனம் செய்தான். 24. தேவனே, இந்த மனிதரை கெளரவித்தருளும். இப்பொழுது, கர்த்தாவே, ஒரு தனியுரிமை கொண்ட சபையாய், கர்த்தராகிய இயேசுவின் சரீரமாக, அவர்கள் தேர்ந்தெடுத்தலைச் செய்வார்கள், இது தேர்வுரிமையாகும். பிறகு (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி).... அந்த நீதியுள்ள பரிசுத்த நாமமாகிய இயேசுவில், ஆராதனையின் இந்த பாகத்தை விசேஷித்த விதத்தில் நடத்துவார். 25. இப்பொழுது நம்முடைய தலைகள் தாழ்த்தப்பட்டிருக்கையில், நம்முடைய தலைகள் மாத்திரமல்ல நம்முடைய இருதயங்களும் கூட, இந்த சபையின் ஒவ்வொரு அங்கத்தினர் என்கிற வகையில்.... இங்கே தவறாமல் வந்து, தங்களுடைய தசம பாகத்தினாலும் மற்றும் காணிக்கைகளாலும் இதை தாங்குகின்றவர்கள், இவர்கள் சபையின் அங்கத்தினர்களாக கருதப்படுகிறவர்களாவர். நானும், மற்றும் உதவி மேய்ப்பர் (சகோ.நெவிலும்) இதைக் கவனிப்போம். உங்களுக்கு தெரிந்தவரையில், இந்த மக்கள் கூட்டத்திற்கு உதவிக்காரராக, சகோ.டெய்லர் நியாயமான மனிதனென்றும் தகுதியுள்ளவர் என்றும், டீக்கனாக இருக்கலாம் என இந்த சபையானது காண்கிறதா என்று நான் கேட்கிறேன்? அப்படியென்றால் உங்கள் கைகளை உயர்த்தி தெரிவியுங்கள். (சகோதரன் பிரன்ஹாம் சற்று நேரம் இடையே சிறிது நிறுத்துகிறார் -ஆசி) அல்லது முரண்பாடாக இருக்கிறதென்றால், உங்கள் கையை உயர்த்துவீர்களா? (சகோதரன் பிரன்ஹாம் அமைதலாகுகிறார்ஆசி) உங்களுக்கு நன்றி. 26. இந்த சபையின் அங்கத்தினர்கள் எவராவது இங்கே... எல்லாரும் சகோதரன் ஹாலின் ஹிக்கர்சன் நியாயமுள்ள, கனம் மிக்க மனிதனாக, மற்றும் இந்த சபையின் உதவிக்காரராக, டீக்கனாக ஆவதற்கு உங்கள் கண்களில் பாத்திரவானாக இந்த மனிதன் காணப்படு கின்றாரா-? இதை ஆமோதிக்கும் வகையில் உங்கள் வலது கரத்தை உயர்த்துங்கள் (சகோதரன் பிரன்ஹாம் சிறிது நேரம் இடையே சற்று நிறுத்துகிறார் - ஆசி) அல்லது அதற்கு முரண்பாடாக இருந்தால், அப்படியானால் உங்கள் கையை உயர்த்துங்கள். (சகோதரன் பிரன்ஹாம் இடையே சிறிது நிறுத்துகிறார் - ஆசி) 27. சகோதரன் காலின்ஸ் அதே விதமாக, ஒரு நீதியுள்ள மனிதனென்றும், இந்த சபையின் உதவிக்காரராக, டீக்கனாக ஆவதற்கு உங்கள் கண்களில் பாத்திரவானான மனிதனாக இந்த சபையாருக்கு காணப்படுகிறாரா-? உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? (சகோதரன் பிரன்ஹாம் இடையே சிறிது நிறுத்துகிறார்-ஆசி) சரி. அதற்கு முரண்பாடாக இருந்தால் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-!. (சகோதரன் பிரன்ஹாம் இடையே சிறிது நிறுத்துகிறார் - ஆசி). 28. சகோதரன் டோனி-சேபில் ஒரு கனம்மிக்க மனிதனாக, இந்த சபையிலுள்ள இந்த மந்தைக்கு ஒரு உதவிக்காரராக, டீக்கனாக இருக்கின்ற இந்த பணிக்கு பாத்திரவானாக இந்த சபையினரால் காணப்படுகின்றாரா-? உங்களுடைய கையை உயர்த்துவீர்களா. (சகோதரன் பிரன்ஹாம் இடையே சிறிது நிறுத்துகிறார்- ஆசி) அதற்கு மாறாக இருக்குமாயின் உங்கள் வலது கரத்தை உயர்த்துவீர்களா. (சகோதரன் பிரன்ஹாம் இடையே சிறிது நிறுத்துகிறார்- ஆசி) 29. சில காலமாக நம்முடன் இருக்கின்ற, இந்த சபையின் நிதியை கையாளுவதற்கும் மற்றும் இதனுடைய ரசீதுகளுக்கு பணம் செலுத்தத்தக்கதாக, செயலாளர்- பொருளாராக இருக்கும் படியாக, ஒரு நியாயமான மற்றும் நீதியுள்ள மனிதனாக சகோதரன் ஹார்னார்ட் இருக்கின்றார் என்று சபையார் உணர்கிறீர்களா-? அப்படியானால், உங்கள் வலது கரத்தை உயர்த்துங்கள். (சகோதரன் பிரன்ஹாம் இடையே சிறிது நிறுத்துகிறார்- ஆசி). அதற்கு மாறாக இருக்குமானால், உங்கள் வலது கையை உயர்த்துங்கள் (சகோதரன் பிரன்ஹாம் இடையே சிறிது நிறுத்துகிறார் - ஆசி). 30. இங்கே இந்நேரத்தில், சிலுவையின் அடியில் நின்று கொண்டிருக்கிற இந்த சகோதரரிடத்தில் நான் கூற விரும்புவது என்னவென்றால், (முரண்பாடான கருத்து எதுவுமே இல்லை) தேவன் உங்களை அழைத்திருக்கிறார் என்றும் இந்த பணிக்கு தேவனுடைய பார்வையில் நீங்களெல்லாரும் பாத்திரவானாக காணப்படுகிறீர்கள் என்றும் இந்த சபையானது காண்கிறது. 31. இப்பொழுது "இவர்கள் முதலாவது சோதிக்கப்பட வேண்டும். இந்த அலுவலை விரும்புகின்றனரா என்று பார்க்க வேண்டும்,'' என்ற நீங்கள் கூறியிருக்கிறீர்கள். மற்றும் அவர்கள் இந்த அலுவல்களை விரும்பினால் சில வாரங்களுக்குள்ளாக, தேவனுக்கு சித்தமானால், இவர்களை முறையான தர்ம... அல்லது டீக்கன்களாக இந்த சபையின் பொருளாளர் மற்றும் டீக்கன்களாக ஆக்கும் பொருட்டு இந்த மனிதரின் மீது கைகளை வைக்கத்தக்கதாக நான் திரும்பவுமாக வருவேன். நாம் நமது தலைகளை சற்று தாழ்த்துவோமாக. 32. கர்த்தாவே, உலகத்தாருக்கு முன்பாக தேவபக்தியுள்ளவர்களாக நாங்கள் நடக்கத்தக்கதாக இன்னுமாக பூமியின் மீது மனிதன் ஜீவித்துக் கொண்டு இருக்கிறான் என்பதற்காகவும் இந்த விதமாக விதிவிலக்கிற்கு இடந்தராத மிகவும் கண்டிப்பான தனியுரிமை விதிகளையுடைய, (rules) இந்த சபைதங்களை வழிநடத்துகிறவர்களாய் இருக்கும் ஐந்து பேர்களை ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கின்ற, அதற்கு மாறாக ஒரு ஓட்டும் இல்லாதிருக்கிற மிக தேவபக்கியுள்ள இந்த கூடாரத்திற்காகவும் (tabernacle) இன்றிரவு நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அவர்களுக்காக நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம், மேலும் மேய்ப்பர்களாகிய எங்களோடும், குழுமத்தோடும் இந்த தீர்மானங்களை நாங்கள் எடுக்கையில் நீர் எங்களோடு இருந்தீர் என்பதை நாங்கள் உணர்கிறோம். 33. இந்த மனிதரை தேவன் ஆசிர்வதிப்பாராக. இவர்கள் மூலமாக பரலோகத்தில் மிகவும் அதிகமாக சம்பாதிக்கப்படுகிறது என்பதை அறிந்தவர்களாக, தங்களுடைய முழு இருதயத்தோடும் இந்த பணியில் இவர்கள் சேவை செய்வார்களாக. என்றாவது ஒரு நாளிலே பரலோகத்தின் புஸ்தகங்கள் மூடப்படுகையில் பரலோக ஜீவிகளின் புத்தகமும் மற்றும் பரலோகத்தின் மகத்தான புத்தகமும் திறக்கப்படுகையில் அதில், இவர்களுடைய பெயர்கள் தாமே இரட்சகருக்கும் தேவனுக்கு முன்பாகவும், மற்றும் பரலோகத்தின் எல்லா சேனைகளுக்கும் முன்பாகவும், அவருடைய ராஜ்யத்தில் இதே விதமாக நூறு சதவீதம் இருப்பதாக. அவர்களை ஆசீர்வதியும், கர்த்தாவே, இந்த பணியில் இவர்கள் தாமே சிறந்த விதத்தில் சேவை செய்யட்டும். இவர்களுக்காக இயேசுவின் நாமத்தில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென். 34. நான் உங்கள் கைகளை குலுக்க விரும்புகிறேன், (சகோதரன் பிரன்ஹாம் இவர்களுடைய கைகளைக் குலுக்குகிறார் - ஆசி) சகோதரன் ஹார்னார்ட், மற்றும் சகோதரன் சேபில், மற்றும் சகோதரன் காலின்ஸ், சகோதரன் ஹிக்கர்சன், மற்றும் சகோதரன் டெய்லர். இந்த விதமான மிகவும் கனம் மிக்க மனிதருடன் இவ்வளவு காலமாக நாங்கள் ஐக்கியப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாங்கள் சரியான நேரத்தில் உங்களை சந்திப்போம், நான் சிறிது ஓய்வு பெற்று மறுபடியுமாக திரும்பியவுடனே உங்களுடைய உத்யோகத்தை எப்படி நீங்கள் விரும்பு கிறீர்கள் என்பதை காண்போம். சரி, இவர்களுடைய ஓட்டுக்களின்படி, முரண்பாடான ஒன்றில்லாமல், நூறு சதவீதம் என்று நான் நினைக்கிறேன். 35. ஓ, தேவனுக்கு முன்பாகவும், மற்றும் இப்பொழுதுள்ள, இந்த விதமான சூழ்நிலையில் இருக்கின்ற இந்த உலகத்திற்கு முன்பாகவும் தேவபக்தியுள்ளவர்களாக இன்றைக்கு ஜீவிக்க முடிகின்ற மக்களுடன் நீங்கள் ஐக்கியப்பட்டிருக்கிறீர்கள் என்பதில் உங்களுக்குள் மகிழ்ச்சி கொள்கிறீர்களா-? அது ஒரு அற்புதமான காரியமாகும். 36. இந்த மனிதர் மற்றும் இந்த சபையை என்னுடைய நண்பர்களாக கொண்டிருக்கும் சிலாக்கியத்தை உடையவனாக இருக்கின்றேன் என்பதை அறிந்து கொள்வதில் இன்றிரவு நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உலகம் முழுவதும் உள்ள தம்முடைய சபையில் தேவன் என்னை ஐக்கியம் கொள்ளச் செய்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஓ, அவர்கள் புறக்கணிக்கப்பட்டு, விமர்சிக்கப்படுகிறார்கள், இன்று காலை என்னுடைய செய்தியில் நான் கூறின விதமாக, ஒருக்கால் சகதி பூசினவர்களாக இருப்பர், உலகம் அவ்வாறு அவர்களை பார்க்கின்றது - ஒரு ''தீவிர மதவெறி பிடித்த கூட்டமாக''. ஆனால் தேவனோ அவர்களை தம்முடைய பிள்ளைகளாக பார்க்கின்றார். அதற்காக நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த முழு வானமண்டலத்தைக் குறித்தும், அது எவ்வாறு இயங்குகிறது என்பதையும் குறித்து அவர்களால் கூற முடியாது தான். ஆனால் அவர்கள் அறிந்திருக்கிற ஒரு காரியம் உண்டு, தாங்கள் மறுபடியும் பிறந்த மணி நேரத்தை அவர்கள் அறிந்துள்ளனர். அவர்களுக்காக நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 37. நான் கற்றுக் கொண்ட ஒரு சிறு உவமை, அது இன்றிரவு நமக்கு மிகவும் தத்ரூபமாக ஆகத்தக்கதாக, அதன் பொருளை நீங்கள் புரிந்து கொள்ளத்தக்கதாக, அந்த உவமையை என்னுடைய சிறிய பெண் பிள்ளைகளோடு நான் பொருத்தப்போகிறேன். ஒரு காலை பொழுதில், படுக்கையை விட்டு எழுந்திருக்கையில்... எனக்கு இரண்டு சிறு மகள்கள் உண்டு. அவர்களில் ஒருத்தி ரெபெக்கா, இன்னொருவள் சாரா, அவர்கள் இருவரும் அப்பாவின் சிறு பெண் பிள்ளைகள். 38. எனக்கு ஜோசப் என்கின்ற சிறு பையன் இருக்கிறான். சட்டனூகாவில் கடைசி கூட்டங்கள் நடைபெற்றது. ஒரு நாள் இரவு கூட்டத்திலிருந்து நான் வந்து கொண்டிருக்கையில், என்னுடைய மூத்த மகன் பில்லியுடன் நான் காரில் இருந்தேன். அவனுடைய மனைவியும், மேடாவும், மகள்களும் காரில் இருந்தனர். நாங்கள் காரோட்டி வந்து கொண்டிருக்கையில், அநேக நகரங்கள் கடந்து வந்தும் யாருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அந்த இரவு அந்த மக்கள் செய்து கொண்டிருந்ததைக் குறித்து மிகவும் கடிந்துக் கொண்டு பேசினேன். சிறு ஜோசப் தாண்டி என்னிடம் வந்து என் தோளை பற்றிக் கொண்டு ''அப்பா, இன்றிரவு நீர் கடினமாக பிரசங்கித்தீர்!'' என்றான். 39. ஆகவே இக்காலை நான் புறப்பட்டு எய்த் மற்றும் டென்த் தெருவிற்கு அந்த ... இல்லை பென் மற்றும் டென்த் தெருவிற்கு நான் செல்கையில், மனைவியும் இரண்டு பெண்பிள்ளைகளும் - யாருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை, சிறு ஜோசப் மறுபடியுமாக என் தோளைப் பற்றிக் கொண்டு, "அப்பா, இக்காலை பிரசங்கம் எனக்கு மிகவும் பிடித்தது” என்றான். நான், "ஓ, நான் ஒரு ரசிகனைப் பெற்றுக் கொண்டேன், அது என்னுடைய மகன்” என்றேன். 40. இப்பொழுது நம்முடைய சிறு உவமைக்குச் செல்வோம். ஒரு நாள் காலை, அறையில் உட்கார்ந்திருந்த போது, சிறு பெக்கி ஓடி வந்து, என் காலை பரப்பச் செய்து அவள் என்னை சுற்றி கரத்தைப் போட்டாள். அவள் அப்பாவின் சிறு பெண் பிள்ளை. அவள் என்னை அணைத்துக் கொண்டிருந்தாள். பிறகு சிறு சாராளும் கட்டிலிலிருந்து குதித்து தன்னுடைய சிறு பைஜாமா உடையுடன் ஓடி வந்து, அடுத்ததாக வந்தாள். அவள் சிறு பழுப்பு நிறக் கண்களை உடையவள் ஆவாள். 41. சிறு பெக்கி, "ஓ, சாரா, நீ வர வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் முழு அப்பாவும் என்னிடம் இருக்கிறார். அப்பா முழுவதும் எனக்குத்தான்-!'' என்று கூறினாள். சிறிய சாராளோ, அவளுடைய சிறு உதடுகள் கீழே தொங்கிவிட்டது, அவளுடைய சிறு பழுப்பு நிறக் கண்கள் கண்ணீரால் நிரம்பிற்று. நான் இந்த விதமாக சைகை செய்து இன்னொரு முழங்காலை வெளியே நீட்டினேன், அவள் வந்து அமர்ந்து கொண்டாள். 42. பெக்கிக்கு நீண்ட கால்கள் இருந்தன, ஆகவே அவை தரையைத் தொடுகின்ற அளவுக்கு இருந்தன. சிறு சாராளோ, தத்து நடையிட்டு (toddling) வந்தாள். ஆகவே நான் சாராளின் மீது என் இரண்டு கரங்களையும் வைத்து இழுத்து அணைத்தேன். சிறிய சாராள் பெக்கியை நோக்கிப் பார்த்து, "பெக்கி, நீ வேண்டுமானால் முழு அப்பாவையும் வைத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் அப்பா என் முழுவதையும் வைத்துக் கொண்டிருக்கிறாரே-!'' என்று கூறினாள். 43. அதே விதமாகத் தான் இங்கேயும் கூட என்று நான் நினைக்கிறேன். நமக்கு எல்லா வேதக் கல்லூரி அறிவும், எல்லா மகத்தான கிரேக்க வார்த்தைகளும் நமக்கு தெரியாமல் இருக்கலாம், இந்த மக்கள் கூட்டத்திற்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு காரியம் நிச்சயம், நம்முடைய எல்லாவற்றையுமே இயேசுவானவர் கொண்டிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென். சரி, சகோதரன் நெவில். சபை ஒழுங்கு CHURCH ORDER – COD#9 ஜெபர்ஸன்வில், இந்தியானா,அமெரிக்கா 58-10-07 1 இக்கூடாரத்தில் ஐந்து இரவுகள் நடைபெற்ற கூட்டங்களின் முடிவுக்கு நாம் வந்திருக்கிறோம், தேவனுடைய கிருபையினாலும், அவருடைய ஒத்தாசையினாலும், நாம் பிரன்ஹாம் கூடாரத்தில் விசுவாசம் கொண்டுள்ள பிரகாரமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபையை ஒழுங்குக்குள் வைக்கும்படியாக வேதவாக்கியங்களைக் கொண்டு நான் கடினமாக முயற்சி செய்துள்ளேன். 2. நான் கூற விரும்பும் முதலாவது காரியம் என்னவெனில், நான் சபையில் இல்லாத நாட்களில் எப்போதுமே மேய்ப்பர் தான் முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும், நான் சபைக்குத் திரும்பி வரும்போது, மேய்ப்பரை மாத்திரமே கவனிப்பேன். எனவே, நான் தூரமாய் இருக்கும் போது, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் கீழாக, எதையும் மாற்றவோ அல்லது அவர் சிறந்ததென்று எண்ணுகிறபடி எதையும் செய்யவோ அவருக்குத் தான் முழு பொறுப்பும் உள்ளது. 3. நாம் ஒரு அப்போஸ்தல பிரகாரமான சபையிலும், இந்நாளின் ஜனங்களுக்காக அப்போஸ்தல ஆசீர்வாதங்களை போதிப்பதிலும் விசுவாசம் கொண்டுள்ளோம். நாம் முழு சுவிசேஷத்தில் விசுவாசம் கொண்டுள்ளோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வருகிற வரையில், அவர் உரைத்துள்ள அடையாளங்கள் அற்புதங்கள் எல்லாம் அவருடைய சபையில் தொடர்ந்து வரும் என்று விசுவாசிக்கிறோம். நாம் அந்த சபை ஒழுங்கு காரியங்களை விசுவாசிக்கிறோம், அவைகள் ஒழுங்குக்குள் இருக்க வேண்டும் என்றும், சபையானது அதனுடைய ஒழுங்குக்குள் இருக்கிறது என்றும் விசுவாசிக்கிறோம். ஒவ்வொரு சபைக்கும் அதனுடைய உபதேசங்களும், ஒழுங்குகளும், கட்டுப்பாடுகளும் உண்டு. 4. நம்முடைய சபையில் அங்கத்தினர்களை சேர்ப்பவர்களாக யாரும் கிடையாது. ஜீவனுள்ள தேவனுடைய முழுஉலகளாவிய சபை தான் நம்முடைய சகோதரர்களும் சகோதரிகளுமாக உள்ளனர் என்று விசுவாசிக்கிறோம்; ஜனங்கள் தாங்கள் எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொருட்டல்ல, ஜெபர்ஸன்வில், இந்தியானாவிலுள்ள, எய்த் அன்டு பென் தெருவில் அமைந்துள்ள பிரன்ஹாம் கூடாரத்திற்கு எல்லா ஜனங்களும் எப்போதுமே வரவேற்கப்படுகின்றனர். 5. நாம், "விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலில் (justification)” (ரோ.5:1) விசுவாசம் கொண்டுள்ளோம். ஒரு நபர் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்ட பிறகு, அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் சமாதானமாயிருக்கிறார் என்று விசுவாசிக்கிறோம். ஆனால் இதே நபர் குடித்தல், புகைபிடித்தல், அவர் செய்யக் கூடாத காரியங்களைச் செய்தல், மாம்சத்தின் அருவருப்பான பழக்கங்கள் போன்ற பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கக் கூடும் என்பது சாத்தியமே. 6. அதன் பிறகு இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது கர்த்தருடைய ஊழியத்திற்காக அந்நபரை பரிசுத்தப்படுத்துகிறது என்று விசுவாசிக்கிறோம். அதாவது, எபிரெயர் 13:12 மற்றும் 13-ன் படி, "பரிசுத்தமாக்கப்படுதல் (sanctification)” என்பதை விசுவாசிக்கிறோம், "அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தம் செய்யும் படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.” புதிய ஏற்பாட்டில் பரிசுத்தமாக்கப்படுதல் போதிக்கப்படுகிறது என்றும் நாம் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கும் புதிய ஏற்பாட்டின் காலத்தினூடாக விசுவாசிகளுக்காக அது சம்பவிப்பது சாத்தியமே என்றும் விசுவாசிக்கிறோம். அந்த நபர் பரிசுத்தமாக்கப்பட்ட பிற்பாடு, அசுத்தமான பழக்கவழக்கங்கள் அந்நபரை விட்டு போய் விடும் என்றும்கூட நாம் விசுவாசிக்கிறோம். 7. அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய ஒரு விசுவாசியாக இருக்கிறான், அவனுடைய பழக்க வழக்கங்கள் போய் விட்டது, அப்போது, அவன், விசுவாசியை நிரப்புவதற்காக வருகிற "பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை” நாடுபவனாக இருக்கிறான் என்று விசுவாசிக்கிறோம். அதன் பிறகு அந்த விசுவாசி... 8. அது அநேக நேரங்களில் நான் எண்ணியபடியே இருக்கிறது, அது ஒரு கண்ணாடிக் குவளையைக் கோழிப்பண்ணையிலிருந்து எடுப்பது போன்றதாகும். நீதிமானாக்கப்படுதல் என்பது இருதயத்தில் ஒரு நோக்கத்தோடு, "அந்த குவளையை எடுத்து அதை உபயோகப் படுத்துவதற்காக ஆயத்தமாக வைப்பதாகும்.” அதைத்தான் தேவன் அந்த பாவிக்குச் செய்கிறார். அவன் இன்னும் அசுத்தமானவனாகத் தான் இருக்கிறான். 9. அதன் பிறகு அவன் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் சுத்திகரிக்கப்படுகிறான். பரிசுத்தமாக்கப்படுதல் என்ற வார்த்தையானது ஒரு கூட்டு வார்த்தையாகும். அதற்கு அர்த்தம் என்னவெனில், "சுத்திகரிக்கப்பட்டு ஊழியத்திற்காக ஒதுக்கி வைக்கப் படுதலாகும்.'" பழைய ஏற்பாட்டில், பலிபீடமானது பாத்திரத்தை பரிசுத்தப்படுத்தி, அது ஊழியத்திற்காக ஒதுக்கி வைக்கப்படுகிறது. 10. பரிசுத்த ஆவியானவர் அதே பாத்திரத்தை ஊழியத்திற்கென்று வைக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். பரிசுத்தாவி என்பது கிருபையின் அடுத்தபடியல்ல, ஆனால் கூடுதலான அதே கிருபையானது 1-கொரிந்தியரில் உரைக்கப்பட்ட அப்போஸ்தல வரங்களைப் போன்ற அடையாளங்களும் அற்புதங்களும் இருக்கும் அளவிற்கு அது அந்த விசுவாசியை நிரப்பி, சபை ஒழுங்கு... பரிசுத்த ஆவியானவர் அந்த வரத்தைக் கொண்டு வரும் போது, அந்த விசுவாசியின் வழியாக தம்மைத்தாமே வெளிப்படுத்துகிறார். 11. "வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இன்றியே கொடுக்கப்படுகிறது" என்று வேத வாக்கியம் போதிக்கிறது என்பதை நான் விசுவாசிக்கிறேன், நாம் இந்த உலகத்தில் பிறக்கும் போது, நாம் இங்கே ஒரு நோக்கத்துடன் அனுப்பப்படுகிறோம், அதாவது தேவனுக்காக. நாம் வயது வந்தவர்களாக ஆகும் முன்பதாக, நாம் இன்னும் பிள்ளைகளாக இருக்கையில், நாம் தேவனுடைய வரங்களை நமக்குள் கொண்டிருக்கிறோம், பரிசுத்த ஆவியானவர் நிரப்பும் போது மட்டுமே அந்த வரங்கள் கிரியை செய்யும்; ஆனால், போதகர்கள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், அந்நிய பாஷை வரங்கள், மற்றும் 1-கொரிந்தியர் 12-ன் படியான ஒன்பது ஆவிக்குரிய வரங்கள் போன்றவற்றை தொடக்கத்திலேயே நாம் கொண்டு உள்ளோம். இப்பொழுது, இந்த வரங்கள் இன்று கிரியை செய்கின்றன என்றும் அவைகள் ஒவ்வொரு உள்ளூர் சபைகளிலும் இருக்க வேண்டும் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். 12. அப்படிப்பட்டவைகள் இருந்த போதிலும், உலகம் முழுவதும் அப்போஸ்தல விசுவாசிகளாய் இருக்கிறோம் என்று அறிக்கை செய்யும் ஜனங்கள் அதிகமான மதவெறித் தனத்தனத்தால் இழுக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மற்ற ஒழுங்குகளிலும் இன்னும் பிறவற்றிலும் இருப்பதைப் போன்று, நாம் மத வெறித்தனத்தில் இருக்கிறோம். அவைகள் தொடக்கத்திலிருந்து இருந்து வந்துள்ளன, காலங்களினூடாக நாம் அவைகளைக் கொண்டு இருந்தோம். அப்போஸ்தலர்களுடைய நாளிலும் அவர்கள் அதைக் கொண்டிருந்தனர்; பவுல் அங்கே சொன்னது போல, சிலர் எப்படியாக வந்து, “வேறு உபதேசங்களுக்குப் பின்னால் செல்லும்படி அவர்களை வற்புறுத்தினார்கள்” இன்னும் மற்றவைகள். ஆனால் அவனுடைய சொந்த போதகத்தில், அவன் போதித்தவைகளைக் காட்டிலும் "பரலோகத்திலிருந்து வரும் ஒரு தூதன் வேறு எதையாவது போதித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றான். 13. எனவே, இங்கே எயித் அன்ட் பென் தெருவில் அமைந்துள்ள பிரன்ஹாம் கூடாரத்தில் இருக்கிற நாம் புதிய ஏற்பாட்டின் உபதேசங்களை பின்பற்ற முயற்சிக்கிறோம். “இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்” என்று நாம் விசுவாசிக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல், புறஜாதி சபையை ஒழுங்கிற்குள் வைப்பதற்காக அனுப்பப்படும் பொருட்டு, தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின் மூலம் அழைக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரமாக இருந்தான். 14. இப்பொழுது, பிரன்ஹாம் கூடாரத்தில், "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்” முழுகி எடுக்கப்படும் “தண்ணீர் ஞானஸ்நானத்தில்” நாம் விசுவாசம் கொண்டுள்ளோம், அது வேதாகமத்திலுள்ள அப்போஸ்தல போதகமாயுள்ளது. பிரன்ஹாம் கூடாரத்தின் எல்லா அங்கத்தினர்களும் அல்லது இங்கு வாஞ்சித்து வருபவர்களும், அவர்களுக்கு எந்த சமயத்திலும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் முழுகி (ஞானஸ்நானம் கொடுக்கப்படும்) (அவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.) மேய்ப்பரை கலந்து பேசலாம்; அவர்கள் மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால், மேய்ப்பர் அவரால் கூடுமான வரை எவ்வாளவு கூடுமோ அவ்வளவு சீக்கிரமாக அவர்களுக்கு உடனடியாக ஞானஸ்நானம் கொடுப்பார். இது அவர்களை விசுவாசிகளின் ஐக்கியத்திற்குள் கொண்டு வருகிறது. தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலமாக நாம் ஒரு ஐக்கியத்திற்குள் கொண்டு வரப்படுகிறோம் என்று விசுவாசிக்கிறோம். 15. ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம், நாம் உலகம் முழுவதிலுமுள்ள இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய அங்கத்தினர்களுக்குள் கொண்டு வரப்படுகிறோம். 16. இப்பொழுது, நாம் விசுவாசிக்கும் மற்றொரு காரியம் என்னவெனில், "ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய சபை ஒழுங்கு பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டு இருக்கிறது” என்பதாகும். இப்பொழுது, இந்த வரங்களும் மற்றவைகளும் சபையில் கிரியை செய்யும் போது, விருப்பமும் வாஞ்சையும் கொண்ட ஆவியின் வரங்களைப் பெற்ற ஜனங்கள் வந்து நம்முடன் ஆராதிப்பார்கள் என்று நாம் விசுவாசிக்கிறோம். 17. இப்பொழுது, அநேக இடங்களில், ஜனங்களில் இந்த வரங்கள் இருந்து, இந்த வரங்களை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்றோ, எப்போது உபயோகப்படுத்துவது என்றோ அறியாதவர்களாக, அவ்விதம் செய்து கொண்டிருந்தால், அவர்கள் ஒரு நிந்தையை மாத்திரமே கொண்டு வருவார்கள் என்று நாம் கண்டு கொள்கிறோம்; புறம்பே இருக்கிறவர்களைக் கொண்டும், அவிசுவாசிகளைக் கொண்டும் மற்றவர்களைக் கொண்டும் சாத்தான் அதைச் செய்யக்கூடும் என்று நாம் விசுவாசிக்கிறோம், இந்நாட்களில் தேவன் சபைக்குக் கொடுத்திருக்கிற இந்த அற்புதமான ஆசீர்வாதங்களைக் குறித்து நாம் பயப்பட வேண்டும். 18. பவுல், "ஒரு அந்நியர் நம் மத்தியில் வரும்போது, நாமெல்லாரும் அந்நிய பாஷையில் பேசுவோமானால், அம்மனிதன் போய், நம்மை பைத்தியக்காரர்கள் என்று கூறமாட்டானா ஆனால் ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்து, இருதயத்தின் அந்தரங்கத்தை அறிந்து கொண்டால், அவர்கள் முகங்குப்புற விழுந்து, 'தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறார், என்று சொல்லுவான்” என்றான். 19. இப்பொழுது, விசுவாசிகள் மத்தியிலுள்ள ஆவிக்குரிய வரங்கள் இந்த நாளின் ஒழுங்காய் உள்ளது என்று நாம் விசுவாசிக்கிறோம். ஒரு மனிதன் சுகமளித்தலின் வரத்தையோ அல்லது தீர்க்கதரிசன வரத்தையோ அல்லது அந்நிய பாஷைகளில் பேசுவதையோ அல்லது பாஷைக்கு அர்த்தம் உரைப்பதையோ அல்லது இந்த மற்ற எந்த வரங்களையுமோ மறுதலித்து, அம்மனிதன் ஊக்குவித்தலின் கீழே பிரசங்கிக்க முடியும் என்றோ அல்லது அவன் ஒரு ஊக்குவிக்கப்பட்ட போதகர் என்றோ நாம் விசுவாசிப்பதில்லை. 20. ஆகையால், தேவனுடைய வார்த்தையில் தான் என்னுடைய விசுவாசம் உள்ளது. அதே விதமாகவே இங்கே ஜெபர்ஸன்வில்லில் எய்த் அன்ட் பென் தெருவில் உள்ள பிரன்ஹாம் கூடாரத்திலும் நடைமுறைபடுத்தப்பட வேண்டும். நான் எண்ணிப் பார்க்கும் முதலாவது காரியமும் விசுவாசிக்கும் முதலாவது காரியமும் என்னவெனில், கர்த்தரிடத்தில் அனுகூலம் அடையும்படி, நான் கூறுகிற இந்தக் காரியங்கள் அத்தியாவசியமானதும் பிரன்ஹாம் கூடாரத்தில் இவ்விதமாக செய்யப்படவும் வேண்டும். எந்த நேரத்திலாவது இந்தக் காரியங்களைக் குறித்து கேள்வி எழுமானால், அதைக் குறித்து கேள்வி எழுப்புகின்ற நபர் - தாங்கள் மேய்ப்பரை அழைக்க முடியவில்லை என்றால் என்னிடம் யோசனை கேட்கலாம் அல்லது மேய்ப்பரிடம் கலந்தாலோசிக்கலாம். நான் பிரயாணங்களை மேற் கொள்ளாமல் நான் வீட்டில் இருந்தால், பொது ஜனங்களுக்கோ அல்லது மேய்ப்பருக்கோ எந்த சமயத்திலும் உதவி செய்ய மகிழ்ச்சியாயிருப்பேன். இந்தக் காரியங்கள் வேதப் பூர்வமானது, இது சபையின் ஒழுங்கு என்று நான் விசுவாசிக்கிறேன். 21. முதலாவது பிரன்ஹாம் கூடாரத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் அல்லது ஆராதனை செய்கிற ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் அதிகமாக தெய்வீக அன்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அது... அவர்கள் இங்கிருந்து போக வேண்டியதாய் இருக்கும் போதும், இரவில் ஆராதனைக்குப்பிறகு ஒருவர் மற்றவரை விட்டு போகும் போதும், அவர்கள் இருதயங்கள் ஒருவர் மற்றவருக்காக வாஞ்சையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நான் "தெய்வீக அன்பில்” ஒரு உண்மையான விசுவாசியாக இருக்கிறேன். அது பரிசுத்த ஆவியின் நிரூபணம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். "நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லா மனுஷரும் அறிந்து கொள்வார்கள்” என்று இயேசு கூறினார். தேவனுடைய அன்பு தான் இயேசு கிறிஸ்துவை உலகத்தில் அனுப்பி, நம் எல்லாருக்காகவும் மரிக்கும்படி செய்தது என்று நாம் விசுவாசிக்கிறோம். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." இங்கே கூறப்பட்டிருக்கும் நித்திய ஜீவன் என்பது "தேவனுடைய சொந்த ஜீவனாக” இருக்கிறது, ஏனெனில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமாக நாம் தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம்; அது ஆபிரகாமுடைய வித்தாயிருக்கிறது, அவன் விருத்தசேதனம் பண்ணப்படுவதற்கு முன்பு, அவன் விசுவாசித்த போது, அவன் கொண்டிருந்த விசுவாசத்தை நமக்கு அருளுகிறார். 22. இப்பொழுது, அடுத்த காரியமாக, ஆராதனை செய்கிற இவர்கள் - அந்நிய பாஷை போன்ற வரங்களைப் பெற்றிருக்கிற ஜனங்களும், வெளிப்பாடுகளும் அர்த்தம் உரைத்தல்களும் மற்றவைகளும் உடைய ஜனங்களும் ஒன்றாகக் கூடி சந்திக்க வேண்டும் என்று நாம் விசுவாசிக்கிறோம். ஆராதனை தொடங்குவதற்கு முன்பு குறைந்தது 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் இந்த அங்கத்தினர்கள் அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், இந்த விசுவாசிகள் ஒன்றாகக் கூடி வர வேண்டும். குறித்த நேரத்திற்கு முன்பே சபையானது திறக்கப்பட்டு, ஆராதனை தொடங்குவதற்கு முன்னால், விசுவாசிகள் இந்த இரவுகளில் குறைந்தது 45 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் வரை ஒன்றாகக் கூடி வர வேண்டும். 23. பிரன்ஹாம் கூடாரத்தில் எல்லா நேரங்களிலும் குறித்த நேரத்திற்கு முன்பே வருகிறவரும், ஆவியால் நிரம்பினவரும் பியானோ இசைக்கருவி மீட்டுகிறவருமாகிய ஒருவர் இருக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன், அவர் பரிசுத்த ஆவியால் நிறைந்து, "மீட்பர் மரித்த குருசண்டை , நான் ஜெபித்த ஸ்தலத்தண்டை பாவத்திலிருந்து தூய்மையானேன்; என் இருதயத்தில் இரத்தம் பூசினார், அவர் நாமத்திற்கே மகிமை!” போன்ற ஆவிக்குரிய சங்கீதத்தை மென்மையாக, மிகவும் மென்மையாக இசைக்க வேண்டும். அதே மாதிரியான ஏதோவொன்றாக அது இருக்க வேண்டும். "உம்மண்டை தேவனே, உம்மிடம்." "பிளவுண்ட மலையே, புகலிடம் தாருமே.” அல்லது "சிலுவையண்டை " அல்லது அதே மாதிரியான ஏதோவொன்றாக இருக்கலாம்; அவர் மென்மையாகவும், மெதுவாகவும், இடைவிடாமல் பரிசுத்தாவியைக் கொண்டு தியானம் பண்ணுகிற நிலையில் இசைக்க வேண்டும், அது அவனோ அல்லது அவளோ யாராகவும் இருக்கலாம். 24. அதன் பிறகு, ஆராதிப்பவர்கள் உள்ளே வரும் போது, அவர்களை சந்தித்து, அவர்களுடைய... அவர்களுடைய கோட்டுகளையும், தொப்பிகளையும் உபசரணையுடன் அவர்களுடைய இருக்கைகளில் காணத்தக்கதாக தொங்க விட வேண்டியது யாரென்றால், பரிசுத்தாவியால் நிறைந்த உதவிக்காரர்களோ அல்லது டீக்கன்மார்களோ மட்டுமே என்று நான் விசுவாசிக்கிறேன். ஜீவனுள்ள தேவனுடைய சபையானது தொடர்ந்து செல்லுவதைக் காணும்படி, அது அன்புடன் செய்யப்பட வேண்டும். 25. ஆராதிக்கிற இவர்கள் ஒருவர் மற்றவரோடு பேசவோ, குறுக்கே பேசவோ, சபையில் கூச்சல் போடுவதோ கூடாது. 26. அவர்கள் ஒன்றாக வர வேண்டும். முதலாவதாக, ஓசையின்றி சிறிது நேரம் அமைதியாக ஜெபிக்க வேண்டும், அநேகமாக பீடத்தில். சத்தமாக ஜெபிக்க வேண்டாம், நீங்கள் அவ்வாறு செய்தால், வேறு யாரோ ஒருவருக்கு தடையாய் இருக்கிறீர்கள்; அமைதியாக ஜெபியுங்கள், நீங்கள் ஆராதனையில் இருக்கிறீர்கள். உங்கள் ஆவியில் ஆராதித்து, அதன் பிறகு உங்கள் இருக்கைக்குத் திரும்பிச் செல்லுங்கள். 27. அல்லது, நீங்கள் பீடத்திற்குப் போக வேண்டியதில்லை. அப்படியே உள்ளே வந்து, ஒரு இருக்கையைப் பெற்றுக் கொண்டு, உட்கார்ந்து கொண்டு, இசையைக் கேளுங்கள்; உங்கள் கண்களை மூடிக் கொண்டு, தலையைத் தாழ்த்துங்கள்; தொடக்கத்திலிருந்தே அமைதியாயிருந்து தேவனை ஆராதியுங்கள். 28. அதன் பிறகு, ஆவியானவர் வேறொருவருக்கு ஏதோவொன்றை வெளிப்படுத்தவோ அல்லது - அல்லது பரிசுத்த ஆவியால் நிரம்பின யாரோ ஒருவர் அந்நிய பாஷையில் பேசும் படியான ஒரு நிலைக்கு வருவாரானால், அந்த நபர் எழுந்து நின்று செய்தியைக் கொடுக்க வேண்டும். அர்த்தம் உரைத்தல் வருவது மட்டுமாய் ஒவ்வொருவரும் அமைதி காக்க வேண்டும். 29. அர்த்தம் உரைத்தல் வரும் போது, அது வேத வாக்கியத்தை மேற்கோள் காட்டுவதாகவோ அல்லது அர்த்தமற்ற எதுவாகவோ இருக்கக்கூடாது. அது சபைக்கு நேரடியான ஒரு செய்தியாக இருக்க வேண்டும், அல்லது அது மாம்சீகமானதாக இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம். நாம் அதைக் குறித்த அநேகமானவைகளைக் காண்கிறோம். மேலும் இப்பொழுது, ஆவியானவர், "சபைக்கு பக்திவிருத்தி” உண்டாக்குவதற்கு மாத்திமே பேச வேண்டும் என்று நான் - நான் விசுவாசிக் கிறேன். 30. இப்பொழுது, அது ஒருவேளை இந்த மாதிரியான ஏதோவொரு செய்தியாக இருக்கலாம். ஜனங்கள் இந்நேரத்தில் கூடி வரும் போது, ஒருவேளை சில வியாதிப்பட்ட ஜனங்களும் உள்ளே வரலாம். அங்கே முடமானவராய் இருக்கிற (paralyzed) அல்லது ஏதோவொன்றால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் படுத்துக் கிடக்கலாம். நீங்கள் அம்மனிதனை இதற்கு முன்பு ஒரு போதும் கண்டதில்லை. ஆனால் அர்த்தம் உரைத்தல் வரும் போது, அது இதே விதமான ஏதோவொன்றாக இருக்கலாம்; அர்த்தம் உரைத்தல் அல்லது சற்று முன்னர் பேசினவர், “நல்லது, கர்த்தர் உரைக்கிறதாவது, நம்முடைய மத்தியில் இருக்கிற இம்மனிதன் இன்ன - இன்ன இடத்திலிருந்து வருகிறான்” என்று சொல்லலாம், மேலும் அந்த இடத்தை விவரித்துக் கூறலாம். "அவர் முடமானவராயுள்ளார், ஏனெனில் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பு,” அல்லது அது என்னவாகவும் இருக்கலாம், இந்த காரியம் ஒரு வேளை, "அவர் தீமையான ஏதோவொன்றை செய்தார்." இது போன்று "அவருடைய மனைவியையும் பிள்ளைகளையும் விட்டு ஓடினார். அவர் மேசையின் சாய்வான உதைகால் இணைகளுள் ஒன்றிலிருந்து (trestle) விழுந்தார்” அல்லது அதைப் போன்ற ஏதோவொன்று, "அது அவரைக் காயப்படுத்தி, முடமாக்கிப் போட்டது. கர்த்தர் உரைக்கிறதாவது, அவர் அதிலிருந்து மனந்திரும்பி, தம்முடைய மனைவியிடம் சென்று, அவர் தாமே ஒப்புரவானால், இப்பொழுதே அவர் சுகமாக்கப்பட்டு, அவருடைய குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்வார்” என்ற விதமாக சொல்லப்படலாம். 31. அதன் பிறகு, யாராவது எதையாவது சொல்லுவதற்கு முன்பு, ஆவியை நன்றாகப் பகுத்தறியக் கூடியவர்களும், சுவிசேஷ உபதேசத்தில் நல்ல ஆவிக்குரிய நிலையில் உள்ளவர்களுமாய் கட்டிடத்திற்குள் இருக்கிற, குறைந்தது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனுஷர்கள் எழுந்து நின்று "அது கர்த்தருடையது” என்று கூற வேண்டும். 32. இந்தக் காரியம் செய்யப்படவில்லையென்றால், அந்நிய பாஷையானது சபையில் பேசக் கூடாது. அந்த நபர் அந்நிய பாஷையில் பேசினால், பவுல் சொன்னான், "அர்த்தம் உரைக்கிறவன் இல்லாவிட்டால்” மேலும் இது போன்ற மற்றவைகள், "அவர்கள் வீட்டில் பேசட்டும்”, அல்லது அவர்கள் ஒருவேளை எங்கிருந்தாலும், "அவர்கள் தாங்கள் மாத்திரமே ஆசீர்வதிக்கப்படுகின்றனர், அது சபையின் பக்திவிருத்திக்காக அல்ல” என்றான். 33. பிறகு, இந்த நபர் பேசின பிற்பாடு, அதற்கு அர்த்தம் உரைக்கப்பட்ட பிற்பாடு, பரிசுத்த பவுலுடைய வேதாகம உபதேசத்தின்படி, இரண்டு அல்லது மூன்று நிதானிக்கக் கூடியவர்கள் (judges) - அது, “இரண்டு அல்லது மூன்று நிதானிக்கக் கூடியவர்களால் நிதானிக்கப்பட வேண்டும்.” 34. பிறகு, அது (பரிசுத்த ஆவி) யாரை அழைக்கிறாரோ, அந்த நபர் போகக்கடவன். அதற்காக ஒரு குறிப்பிட்ட நபரோ அல்லது மேய்ப்பரோ அல்லது யாரோ ஒருவரோ நியமிக்கப்பட்டிருக்கலாம், அவர் சென்று வியாதியிலோ அல்லது உபத்திரவத்திலோ இருக்கும் நபரின் மேல் கைகளை வைக்கலாம். அவர்கள் சுகமடைவார்கள். மேய்ப்பரோ அல்லது வேறு நபரோ, போய் "விசுவாச ஜெபத்தை ஏறெடு” என்று பரிசுத்த ஆவியானவரால் நியமிக்கப்பட்ட யாராக இருந்தாலும் அவர்கள் சென்று ஆவியானவர் சொன்னதின்படியே அந்த நபருக்கு ஊழியம் செய்யக்கடவர்கள். அந்த நேரத்தில், அந்நபர்... பரிசுத்த ஆவியானவர் என்ன சொன்னாலும், அவர் அதை கூறினபடி அது உடனடியாக செய்யப்பட வேண்டும். 35. அதன் பிறகு ஜனங்கள் களிகூர்ந்து, நன்றி செலுத்தி, துதித்து தேவனை ஆராதிக்கலாம், ஏனெனில் தேவன் ஆராதனை செய்ய வேண்டுமென்று விரும்புகிறார். 36. பிறகு அவர்கள் - அவர்கள் தங்களுடைய தலைகளை வணங்கி, பரிசுத்த ஆவியானவர் இந்த வரங்களை ரூபகாரப்படுத்த விரும்பும்படியான வேறொரு செய்தி உண்டா என்பதை அறியும்படியாக அதற்கு முன்பாக மீண்டும் ஜெபத்தில் இருக்க வேண்டும். 37. எந்த நேரத்திலாவது ஒரு நபர் அந்நிய பாஷையில் பேசி, அதற்கு அர்த்தம் உரைக்கப்பட்டு, நிதானிப்பவர்கள் அந்நபர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டதோ அதை செய்ய சொல்லியும், அது சம்பவிக்கவில்லையென்றால், அந்த முழு கூட்ட ஜனங்களும் பீடத்தண்டை சென்று அந்த ஆவியை அவர்களை விட்டு எடுத்துப் போட வேண்டுமென்று தேவனிடம் ஜெபிக்க வேண்டும், ஏனெனில் யாருமே அதைப் போன்ற ஒரு ஆவியை விரும்பவில்லை. அது கள்ள ஆவியாகவோ, சத்துருவாகவோ, தேவனுடையதல்லாததாகவோ இருக்க வேண்டும் என்று நாம் அறிவோம், ஏனெனில் தேவன் சத்தியத்தை மாத்திரமே கூற முடியும். இந்த புதிய ஒழுங்கினை நீங்கள் தொடங்குவதற்கு முன்பு, அதை சபை தெளிவாய் புரிந்து கொள்ளட்டும். 38. பிறகு, ஒருவேளை, அது இதைப்போன்ற ஏதோவொன்றாக இருக்கலாம், செய்தியானது ஒரு குறிப்பிட்ட நபரிடம் இவ்விதமாக ஒருவேளை கூறப்படலாம், "அவர் ஒரு இரயில் பாதையினருகே வசிக்கின்றார்" அல்லது ஏதோவொன்று, "அவர் அவ்விடத்தை விட்டு போயாக வேண்டும், ஏனெனில் பாதையில் விபத்து ஏற்படப் போகிறது" அல்லது ஏதோ ஓன்று, அல்லது அதைப்போன்ற ஏதோவொன்று. 39. நிதானிப்பவர்கள், அந்தச் செய்தியைப் பேசலாம் என்றோ அல்லது முன்சென்று அதை உபயோகிக்கலாம் என்றோ சபைக்கு அனுமதி அளித்த பிற்பாடு, அவர்களுடைய நிதானிப்பு, "அது தேவனுடையது” என்று இருந்தால், அது சம்பவிக்கிறதா என்று கவனித்துப் பாருங்கள். 40. அது சம்பவித்தால், தேவனுக்கு நன்றி செலுத்தி, அவர் பட்சமாக உங்களுடைய இருதயத்தில் மிகவும் இனிமையாக - இனிமையாக இருங்கள். அவருக்கு துதியும் ஆராதனையும் ஏறெடுத்து, தாழ்மையாயிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தாழ்மையாய் இருங்கள். 41. உங்களுடைய மேய்ப்பரைக் காட்டிலும் அல்லது நீங்கள் ஆராதித்துக் கொண்டிருக்கும் சபையைக் காட்டிலும் - அதைக் குறித்து உங்களுக்கு அதிகமாகத் தெரியும் என்ற ஒரு நிலைக்கு உங்களை நீங்களே ஒரு போதும் தலைக்கனம் கொண்டவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். நீங்கள் அந்த நிலைக்கு வருவீர்களானால், நீங்கள் ஆராதனை செய்வதற்கான வேறொரு நிலையை அடைய நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் புத்தி சொல்லுவேன். ஏனெனில், இங்கே சபையில் நாம் கண்டிருக்கிற விதமாக, வேதாகம ஒழுங்குக்கு வெளியே எதையும் ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம் என்று நான் மேய்ப்பரிடம் கேட்டுக் கொள்கிறேன். பிறகு இந்த ஸ்தலத்திலும், ஆராதனை செய்பவர் களிலும் இந்த வரங்கள் செயல்பட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். அது வார்த்தையின் பிரகாரமாக தொடர்ந்து சரியாக செய்யப்படுமானால், நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் மகத்தானதும் அற்புத மானதுமான ஒரு சபையை காண்பீர்கள். 42. இப்பொழுது, செய்ய வேண்டிய அடுத்த காரியம் என்னவெனில், இச்சமயங்களில் ஜனங்கள் ஒழுங்கை விட்டு விலகினால், பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களும் தங்கள் உடைய இருதயத்தில் மிகுந்த கிருபையுள்ளவர்களுமாகிய ஒரு டீக்கனோ அல்லது ஏதோவொரு உதவிக்காரரோ அந்த நபரிடம் மரியாதையோடும் ஒரு தகப்பனைப் போன்றும் இவ்விதமாகச் சென்று அவர்களைத் திருத்த வேண்டும். அல்லது, மேய்ப்பர், அது யாராகவும் இருக்கலாம், அதைச் செய்வதற்கு டீக்கன்மார்களுக்குத் தான் அதிகமான தேவையாயுள்ளது. இச்சமயத்தில், இந்த ஆவிக்குரிய ஆராதனைகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும்போது, மேய்ப்பர், ஜெப அறையிலோ அல்லது எங்கோ ஓரிடத்தில் ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும். 43. பிறகு இந்தச் செய்திகள் - எந்த செய்திகளோ எந்த வெளிப்பாடுகளோ கொடுக்கப் படவில்லையெனில், ஜனங்கள் விரும்பினால் தாங்கள் எழுந்து ஒரு சாட்சியை கூற சிலாக்கியம் பெற்றிருப்பார்கள். அந்த சாட்சி தேவனுடைய மகிமைக்காக மாத்திரமே இருக்க வேண்டும். அவர்கள் இதைச் செய்வது கட்டாயமில்லை, ஆனால் செய்தியோ அல்லது எந்த பாடல் ஆராதனை தொடங்குவதற்கு அல்லது எதற்கும் முன்பு சாட்சி கூறப்பட வேண்டும், இந்த ஆராதனைகளில் அப்போது தான் சாட்சி கூறப்பட வேண்டும். 44. சபையோரே, உங்களுக்குப் புரிகிறதா-? இதைச் செய்யும்படிக்கு, போதிக்கப்பட வார்த்தை வரும் முன்பதாக நீங்கள் ஆராதனையின் ஆவியைக் கொண்ட முழு சபையாய் இருக்க வேண்டும் என்பது புரிகிறதா-? அப்போது உங்களுடைய ஆராதனையை உறுதிப்படுத்தும்படி, பரிசுத்தாவியானவர் வார்த்தையை ஊக்குவித்து, வார்த்தையினூடாக தேவனை ரூபகாரப்படுத்துகிறார். 45. இப்பொழுது, இதற்குப்பிறகு, மேய்ப்பருக்கான நேரம் வருகிறது. செய்திகள் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால், உத்தேசமாக..... மேய்ப்பர் சரியாக , உத்தேசமாக, 7:30 அல்லது 7:45 மணிக்கு, வெளியே வர வேண்டும். மேய்ப்பர் அவருடைய... வருவதற்கு முன்பாக, இந்தச் செய்திகள் இன்னும் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால்.... அவர் வாசித்துக் கொண்டிருந்தாலோ அல்லது அவர் ஒருவேளை எங்கிருந்தாலும் மேடையில் அவருடைய இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்; ஏதோவொரு சகோதரன் அவரை அறிவுறுத்த வேண்டும், ஏனெனில் மேய்ப்பர் மேடைக்கு வரும்போது, பரிசுத்தவான்கள் அறிவார்கள், அது ஆராதனைக்கான அவருடைய நேரமாக உள்ளது. அது சபையோருக்குள் தேவனுடைய ஆவியைக் கொண்டு வரும்படிக்கு, வரங்களுடைய எல்லா ரூபகாரப்படுத்தல்களுக்காகவும் போதுமான அளவு ஏராளமான நேரத்தைக் கொடுக்கிறது. 46. ஏதாவது அவிசுவாசி ஒழுங்கற்ற விதமாக அங்கிருக்க நேர்ந்தால்; ஒரு உதவிக்காரர் அல்லது டீக்கன் போன்ற இரக்க குணம்படைத்த ஒரு நபர் அவர்களிடம் போய் சொல்ல வேண்டும், அவர்கள் - அவர்கள்.... ஆராதனை ஒழுங்கில் இருக்கும் போது, அவர்கள் பயபக்தியாய் இருக்க வேண்டும் என்றோ அல்லது மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றோ கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஆவியானவர் கட்டிடத்திற்குள் இருக்கிறார், சபையின் பக்திவிருத்திக்காக தேவனுடைய வரங்கள் ரூபகாரப்படுத்தப் படுகிறது. இந்த நபரிடம் அன்போடு கூறப்பட வேண்டும், கடுமையாக அல்ல. ஒருவேளை அவர்கள் தண்ணீர் குடிக்கும்படி ஓரிடத்திற்கு வந்திருந்தாலோ அல்லது ஏதோவொரு கீழ்படியாமையோ அல்லது வேறு ஏதோவொன்றோ கர்த்தருடைய ஆராதனையில் குறுக்கிடுமானால், அப்போது வரங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்குமானால், அந்த நபரை ஒரு பக்கத்திற்கு - பின்னாலுள்ள அறைகளில் ஒன்றிற்கோ அல்லது ஏதோவொரு இடத்திற்கோ அழைத்துச் சென்று அவரிடம் பேசி, அன்போடு நடந்து கொள்ள வேண்டும். 47. இப்பொழுது, மேய்ப்பர் மேடைக்கு வரும்போது... மேய்ப்பர் மேடைக்கு வந்த பிறகு, இங்கே பிரன்ஹாம் கூடாரத்தில் இருக்கிறபடி, மேய்ப்பர் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு நல்ல பாடல்களைப்பாடி சபையோரை வழிநடத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்கின்றேன். நாங்கள் அதை அவ்வாறு கண்டிருக்கிறோம், அநேகர் நடத்துவதற்கு முயற்சிக்கும் போது... அது சபையில் பிரச்சனையை மாத்திரமே கொண்டு வருகிறது. நான் சபையில் மேய்ப்பராக இருந்த போது செய்த விதமாகவே, அதை பரிந்துரை செய்கிறேன்; நானே பாடல்களைப்பாடி நடத்துவேன். மேய்ப்பர் தாமே அவ்வாறு செய்வாரானால், அது நல்ல காரியமாக இருக்கும் என்று நான் உணருகிறேன். 48. எல்லா ஜெபக்கூட்டங்களிலும் அவர்கள் ஒன்று கூடி வரும் போது, ஜெபக்கூட்டங்களின் குழுக்கள் ஒவ்வொருவரோடும் மேய்ப்பர் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கூட்டங்களை நடத்தும்படி எந்த தனி நபரிடமும் அதை ஒருபோதும் விட்டு விடக்கூடாது. அவர்கள் பாதையை விட்டு விலகிச்சென்று, உபதேசத்தை சபைக்குள் திரும்பவும் கொண்டு வருகின்றனர், அநேக நேரங்களில், ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு சம்பந்தமில்லாத மாறுபட்ட உபதேசங்களையும் மற்றவைகளையும் கொண்டு வருகின்றனர் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். சபையோர் கூடி வரும் இடத்தில் - எல்லா ஜெபக் கூட்டங்களிலும் மற்றவைகளிலும் மேய்ப்பர் அவசியம் இருக்க வேண்டும். 49. ஒரு கூட்டத்தார் இந்த விதமாகவும் வேறு கூட்டத்தார் அந்த விதமாகவும் இருக்கும்போது, மேய்ப்பர் எந்த கூட்டத்தின் பக்கமும் சாரக்கூடாது. மேய்ப்பர் அந்த இரு கூட்டத்தினருக்கும் இடையில் நின்று அவர்களிடம் சென்று, உடனடியாக அவர்களை சமாதானப்படுத்த வேண்டும். அவரால் சமாதானப்படுத்த முடியவில்லையென்றால், ஒரு டீக்கனை அவருடன் அழைக்க வேண்டும். அவர்கள் - அவர்கள் மேய்ப்பரையோ டீக்கன் கூறுவதையோ கேட்கவில்லையென்றால், அது சபையில் கூறப்பட வேண்டும், இயேசு கூறினபடி, "அவர்கள் உனக்கு ஆஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப் போலவும் இருப்பானாக." "பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகளைப் பரலோகத்திலும் நான் கட்டுவேன்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகளைப் பரலோகத்திலும் கட்டவிழ்ப்பேன்” என்று இயேசு சொன்னார். 50. இப்பொழுது, மேய்ப்பர் மேடையில் வரும் போது, அவர் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பாடல்களை நடத்தி விட்டு, நேராக வார்த்தைக்குப் போகலாம். 51. ஒவ்வொருவரும் எழுந்து நின்று ஒரு வார்த்தையை சாட்சியாக சொல்லும்படியான நீண்ட சாட்சி ஆராதனைகளுக்கு நேரமில்லை. அது பிரன்ஹாம் கூடாரத்தில் செல்லுபடியாகாது. 52. இந்த ஒலிநாடாவைக் கேட்கும் யாராவது - உங்கள் சபையில் அது சரியாக இருக்குமானால், நல்லது, அது முற்றிலும் சரி தான். நாங்கள் அதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம், அது உங்களுடைய சபையில் சரியாக உள்ளது. 53. ஆனால் இங்கே நம்மிடத்தில் அது செல்லாது, அது குழப்பத்திற்கு மாத்திரமே காரணமாகும். நான் இங்கே இருபது சொச்சம் வருடங்கள் மேய்ப்பராக இருந்துள்ளேன், அது குழப்பத்திற்கு மாத்திரமே காரணமாவதை நான் கண்டிருக்கிறேன். உங்களிடம் ஒரு சாட்சி இருக்குமானால், அதற்கு... முன்பாக, ஆவியானவர் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் போதும் அதைப் போன்ற நேரங்களிலும் சபை ஜனங்களிடத்தில் சாட்சி கொடுங்கள். 54. அல்லது, சாட்சி கொடுக்க உண்மையான வழி என்னவெனில், அது சபையிலல்ல, அது வெளியே அந்தகாரமான இடங்களில் இருக்க வேண்டும். உங்களுடைய வெளிச்சம் இருளில் பிரகாசிக்கக்கடவது. பாவமும் காரியங்களும் குவிந்திருக்கும், நகரத்திற்கு வெளியிலுள்ள மதுக்கடைக்கோ வித்தியாசமான இடங்களுக்கோ சென்று அங்கே உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கட்டும். அதை செய்வதற்கான இடம் அது தான். 55. ஆனால், எப்படியாகிலும், கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து ஏதோவொரு மகத்தான விசேஷமான ஆசீர்வாதத்தையோ அல்லது நீங்கள் ஜனங்களிடம் கூற வேண்டிய ஏதோ ஓரு காரியத்தையோ உங்களிடம் கொடுத்திருப்பாரானால், அதை வேறு ஆராதனையிலோ, ஆராதனை தொடங்குவதற்கு முன்போ தொடக்கத்திலோ, அல்லது ஆவியானவர் ஆசீர்வதித்து, சாட்சிகளையும் வெளிப்பாடுகளையும், அந்நிய பாஷைகளையும், பாஷைக்கு அர்த்தம் உரைத்தல்களையும் மற்றவைகளையும் கொடுக்கும் போது, தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வருவதற்கு முன்பு பரிசுத்தவான்களுடைய ஆராதனையில் அதை செய்யலாம். 56. அதன்பிறகு, மேய்ப்பர் இந்த பாடலை நடத்திய பிறகு, உடனடியாக சபையை ஜெபத்தில் வழி நடத்த வேண்டும், அவர் தாமே மேடையில் நின்று கொண்டிருக்கையில் சபையோர் கூடி ஜெபிப்பதற்காக அவர்களில் எஞ்சியவர்களை ஜெபத்திற்காகத் தலைகளைத் தாழ்த்தும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். 57. இது ஒரு மகத்தான ஆசீர்வாதமாகவும், சபை செயல்பாடுகளில் அதிகமான ஒழுங்காகவும் இருக்கும் என்பதை நாம் கண்டிருக்கிறோம். 58. பிறகு, அடுத்த காரியமானது மேய்ப்பரே அதை செய்ய வேண்டும். அவர்கள் ஜனங்களுடைய இருதயங்களின் அநேக இரகசியங்களையும் வெளிப்படுத்தும் வரங்களோடும், கூட்டத்தில் வரங்களைக் கொண்டு செய்யப்பட வேண்டிய காரியங் களுடனும் கூடிய ஒரு உண்மையான ஆவிக்குரிய கூட்டத்தை கொண்டிருப்பார்களானால்; அப்போது தேவனுடைய ஆவியானாவர் கூட்டத்தில் இருக்கிறார், மேலும் மேய்ப்பர் வாசித்து போதனையை ஆரம்பிக்கும் போது, தேவனுடைய வார்த்தையின் பேரில் தேவனுடைய ஆவியை (அது கூட்டத்தில் ஏற்கனவே உள்ளது) அவர் கண்டு கொள்வது மிகவும் எளிதானது. அப்போது பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய இருதயத்தில் வைத்திருக்கிற எதையும் மேய்ப்பர் போதிக்க வேண்டும், அங்கே நின்று கொண்டு அவர் செய்ய வேண்டுமென்று விரும்புகிற எதையும் பிரசங்கிக்க வேண்டும். 59. ஆனால் சபையயோர்.... அவர் பிரசங்கிக்கும் போது களிகூர்ந்திருக்க முடியும், நிச்சயமாக, அல்லது வார்த்தையானது முன்னே வருகையில் "ஆமென்” என்று சொல்லக் கூடும். ஆனால், பரிசுத்த ஆவியானவர் மேய்ப்பர் மூலமாக கிரியை செய்து கொண்டு இருக்கும் போது, (யாராவது) எழுந்து நின்று அந்நிய பாஷையில் செய்திகளைக் கொடுத்து, அதற்கு அர்த்தம் உரைப்பார்களானால், வேதவாக்கியம் அதைக் கடிந்து கொள்கிறது, "தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கி இருக்கிறது” என்று வேதவாக்கியம் கூறுகிறது. 60. மேய்ப்பர் இந்த நபரை அழைத்து, அவர்கள் பயபக்தியோடு தங்களுடைய இடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டுமென்று அவர்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும். மேய்ப்பர் அந்நபரைக் குறித்து மிகவும் தாழ்மையான ஒரு வழியில் அணுகும்படியான ஒரு மனிதராயிருக்க வேண்டும், ஆனால் மிகவும் தாழ்மையாக அல்ல, ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சபையில் தவறான காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்ட போது, கயிறுகளைப் பின்னி, அவர்களை சபையை விட்டு வெளியே துரத்தியடித்தது போன்று அவரும் செய்ய வேண்டும். இப்பொழுது, தேவனுடைய சபையானது நியாயத் தீர்ப்பின் வீடாக உள்ளது, மேய்ப்பர் தான் சபையில் மிக உயர்ந்த அதிகாரம் கொண்டவராக இருக்கிறார். மூப்பரோ, பரிசுத்த ஆவியைத் தவிர்த்து அப்போஸ்தல சபையில் மிக உயர்ந்த அதிகாரமுள்ளவராக இருக்கிறார். பரிசுத்தாவியானவர் தம்முடைய செய்தியை நேரடியாக மூப்பருக்குக் கொண்டு வருகிறார், மூப்பர் அதை சபைக்குக் கொடுக்கிறார். 61. முதலாவது, பரிசுத்தவான்களுக்கும் அவர்களுடைய வரங்களுக்கும், ஆராதனை செய்வதற்கும் ஒன்றாகக் கூடி வருவதற்கும் தங்களுடைய ஸ்தானம் இருக்க வேண்டும், (நான் முன்னரே கூறிய படி), அது மேய்ப்பருக்காக கர்த்தருடைய ஆவியை கட்டிடத்திற்குள் கொண்டு வருகிறது. அப்போது, ஒரு நல்ல ஆவிக்குரிய கூட்டத்தில் அவருடைய போதனை தொடங்குவதற்கு சற்று முன்பதாக பரிசுத்த ஆவியானவர் அவர் மூலமாக கிரியை செய்வதற்காக அது அதை மிகவும் எளிதானதாக ஆக்குகிறது. அப்போது பரிசுத்த ஆவியானவர் வார்த்தைக்குள் வந்து வார்த்தையைப் போதிக்கிறார்; வரங்களின் மூலமாக அது ரூபகாரப்படுத்தப்படுகிறது. 62. அதன் பிறகு, பீட அழைப்பு கொடுக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் படியும், மேய்ப்பர் பொருத்திக் காண்பித்த தேவனுடைய வார்த்தையின்படியும், நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய சபையாக இருக்கிறீர்கள் என்பதை அநேகர் காண்பார்கள் மற்றும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். பண்டைய கால பவுல் கூறினபடி, "அவன் (முகங்குப்புற) விழுந்து, 'மெய்யாகவே தேவன் உங்களோடு இருக்கிறார்' என்று கூறுவான்” என்ற பிரகாரமாக இருக்கும். இப்பொழுது, இந்தக் காரியங்கள் பயபக்தியுடன் செய்யப்படுவதாக. 63. இப்பொழுது, மேய்ப்பர் தான் (இச்சமயத்தில் சகோதரன் நெவில்) சபையை முழுமையாக தலைமை தாங்கி நடத்துபவராக இருக்கிறார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவருடைய எந்த அதிகாரத்தையும் உபயோகிக்க சகோதரன் நெவிலுக்கு உரிமை உண்டு, வேறு வார்த்தைகளில் சொன்னால், சொல்ல வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் அவரிடம் கூறுகிற எதற்கும். சபையில் அவர் செய்ய வேண்டுமென்று தேவன் வழிநடத்துகிற எதற்கும் அவருக்கு உரிமை உண்டு. அவருடைய டீக்கன் வாரியத்தின் மேலும் அவருக்கு உரிமை உண்டு. டீக்கன் வாரியத்தையோ, தருமகர்த்தாக்களையோ, அல்லது - அல்லது பியானோ இசைக்கருவி மீட்டுபவரையோ, அல்லது சபையின் மற்ற எந்த அலுவலையோ, அவர் மாற்ற விரும்பினால், அவ்வாறு செய்யும்படி பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவதை உணர்ந்தால், அவரால் அவர்களை மாற்றக் கூடும். அவன் எதைச் செய்தாலும், அவன் தேவ மனிதனாக இருக்கிறானா என்பதை அடையாளம் கண்டு கொள்வேன். அது கர்த்தருடையதுதானா என்பதை நான் அடையாளம் கண்டு கொண்டு, அதற்கு அதிகாரப் பூர்வமாக ஆதரவளிப்பேன், எனவே சபையை எவ்வாறு நடத்த வேண்டும் என்று வழி நடத்தும்படி உணருகிற வழியில் அதை நடத்தும் அதிகாரம் அவருக்குக் கொடுக்கப் படுகிறது. இப்பொழுது, அல்லது, சபையிலுள்ள எந்த அலுவலையும் - அவர் ஜனங்களை ஒன்றிலிருந்து வேறு ஒன்றிற்கு மாற்ற வேண்டுமென்று அவர் விரும்பினால், அதைச் செய்ய அவருக்கு அதிகாரம் உண்டு. இது எப்போதுமே அருமையானதாகவும், ஒரு போதும் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு சாதகமாக பயன்படுத்தாமலும் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். 64. இப்பொழுது, கர்த்தர் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக. இதை நீங்கள் மிகவும் நன்றாக அறிந்து கொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் உங்கள் ஒவ்வொருவரையும் காத்துக் கொள்வாராக. 65. நீங்கள் சபையில் உங்கள் அலுவலை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதற்காக தேவன் உங்களைப் பொறுப்பாளியாக்கப் போகிறார் என்பதை, தங்களுடைய உத்தியோகத்தில் நியமிக்கப்பட்டுள்ள இந்தச் சபையின் ஒவ்வொரு உத்தியோகஸ்தர்களும் அறிந்து கொள்வார்களாக. ஒவ்வொருவரும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். 66. தீர்க்கதரிசனம், அல்லது அந்நிய பாஷையில் பேசுதல், அல்லது அதற்கு அர்த்தம் உரைத்தல் அல்லது வெளிப்பாடுகளைக் கொண்டிருத்தல் போன்றவற்றை உடைய பொது ஜனங்களே, வரங்களைக் கொண்டிருக்கிற, நம்முடைய சபையின் அன்பார்ந்த பரிசுத்தவான்களே, நாங்கள் உங்களை சபையில் கொண்டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் பேசியிருக்கிறார் என்பதை, அவர் நிரூபிக்கும் ஒவ்வொன்றிலும் நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். மேலும் நாங்கள் உங்களை நேசிக்கிறோம். இந்த வரங்கள் உங்களில் இருக்கின்றன என்றும், உங்களுக்கு சரியான தருணம் கிடைத்து, வேத பிரகாரமாக அதை நீங்கள் அளித்தால், நீங்கள் எங்கள் மத்தியில் மகத்தான உத்தியோகர்களை உண்டாக்குவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். கர்த்தர் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக. அதுவே என்னுடைய உத்தமான ஜெபமாக உள்ளது. 67. இந்த ஒலிநாடாவைக் கேட்டுக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களே, நான் இங்கிருந்து கடந்து சென்ற பிறகு ஒரு காரியத்தைக் கண்டிருக்கிறேன், இது தான் அது: ஜனங்கள் அந்நிய பாஷையில் பேசும் போது, வேதவாக்கியத்தின்படி " இரண்டு அல்லது மூன்று பேர் மட்டில்” இருக்க வேண்டும், அவர்கள் ஒவ்வொருவராய் பேச வேண்டும். அதாவது, ஒவ்வொரு தனி ஆராதனையிலும் இரண்டு அல்லது மூன்று செய்திகள் மாத்திரமே கொடுக்கப்பட வேண்டும். வேத வாக்கியங்களின் படி, அது, “அது இரண்டு அல்லது மூன்று பேர் மட்டில் இருக்க வேண்டும், அவர்கள் ஒவ்வொருவராய் பேச வேண்டும்.'' எனவே பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வேதாகமத்தில் காண்பிக்கிறபடியான வழியில் இந்த காரியங்களை செய்வீர்களாக. இவையே என்னுடைய அறிவுக்கு எட்டினவரை, செய்யப்பட வேண்டிய வழியாகும். பவுல், "அவர்கள் அந்நிய பாஷையில் பேசும் போது, இரண்டு அல்லது மூன்று பேர் மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய் பேசவும் வேண்டும்” என்றான். COD#10 கேள்விகளும் பதில்களும் 59-06-28E பிரன்ஹாம் கூடாரம், ஜெபர்சன்வில், இந்தியானா. 1 பழைய ஏற்பாட்டில் ஒருவர், ''நாம் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று அவர்கள் சொன்னபோது, ''நான் மகிழ்ச்சி அடைந்தேன்'' என்று கூறினார். ஆகவே இப்பொழுது, மிகவும் உஷ்ணமான மாலைப் பொழுதாகத் தான் இருக்கிறது. இங்கே எங்களுடன் வந்துள்ளவர்களாகிய நீங்கள், இந்த இந்த இங்கே இண்டியானாவில் ஜீவிப்பது ஏன் மிகவும் கடினமான ஒன்று என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளலாம். அது வெறும் 93 டிகிரி தான், 93 டிகிரி வெயில் தான். ஆனால் நீங்கள் பாருங்கள், நீங்கள் 120 டிகிரி உஷ்ணத்தில் செல்வீர்களானால், லூஸியானா மற்றும் அரிசோனாவில் உள்ளது போல, அது எப்படிப்பட்டது என்பதை எப்படியும் அதனுள் செல்ல முடியுமென்பதை உங்களால் உணரமுடியும், அது மாத்திரம் இங்கேயிருக்குமானால், நாம் மாண்டுபோவோம், அதுவே முடிவாக இருக்கும். ஆனால் இங்கேயிருந்து ஆராதனையில் நேரத்தை செலவிடுவது மிகவும் நலமான ஒன்றாகும். இக்காலை நான் வீட்டிற்குச் சென்ற பிறகு, நான் மிக அருமையாக உணர்ந்தேன். அந்த... அநேகர் இக்காலை சுகமாயினர் என்று நான் விசுவாசிக்கிறேன், ஒருக்கால், இந்நேரம் வரை அநேகர் அதை உணராமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் சுகமடைவார்கள்; ஏனெனில் கர்த்தருடைய வார்த்தையானது இக்காலையில் நம்முடைய இருதயங்களுக்கு விலையேறப் பெற்றதாக இருந்தது. நான்... புறப்பட்ட போது, பரிசுத்த ஆவியானது இங்கே மிகவுமாக இருக்கையில் இந்த சுவர்கள் முழுவதும் பெரிதாக ஊதப்படுவது போல, சுவாசிப்பது போல காணப்பட்டது. அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக இருந்தேன். 2 ஆன்டர்சனைச் சார்ந்த தேவனுடைய சபையின் மேய்ப்பரும், என் நண்பருமாகிய சகோதரன் ஸ்மித் சற்று முன்னர் ஜெபித்துக் கொண்டிருந்ததை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். சகோ.ஸ்மித் ஒரு சிறிய கைப்பிரதியைக் கொண்டு இருந்தார், இங்கே அவைகளைக் கூடாரத்தில் கொடுக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அந்த சிறிய கைப்பிரதி உங்களில் யாருக்காவது கிடைக்கவில்லையெனில், நீங்கள் அதை வாசியுங்கள். அது மிகவும் திகைப்படையச் செய்கின்ற சிறிய கைப் பிரதியாகும்; அது முற்றிலுமாக வேதாகம சத்தியமாகும். நான் அவைகளில் நிறையவற்றை சிக்காகோவிற்கும் பல இடங்களுக்கும் விநியோகிக்கக் கொண்டு சென்றேன், ஏனெனில் அவை உண்மையான சத்தியமுள்ள, அருமையான கைப்பிரதிகளாகும். தேவனை நேசித்து மற்றும் உத்தமமான இருதயத்திலிருந்து அவை எழுதப்பட்டவையாகும் என்பதை நான் அறிவேன். இதில் சகோதரன் ஸ்மித்திற்கு எந்த ஒரு சுயநல நோக்கமும் கிடையாது, எல்லாம் கிறிஸ்தவமாகும். ஆகவே அந்த விதமான பண்பாற்றலுடைய மக்களுடன் இன்றிரவில் ஐக்கியப்பட்டிருப்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். 3 இங்கே கலிபோர்னியாவிலிருந்து வருகின்ற என் அருமை நண்பர், சகோதரன் பார்டர்ஸைக் காண்கின்றேன் என்று நம்புகிறேன். சமீபத்தில் - கர்த்தருக்காக - அங்கே சான் ஜோஸ் கூட்டத்தை ஒருங்கே சேர்ந்து துவங்கி அவர் எனக்காக ஒரு மகத்தான பெரிய வேலை செய்தார். அடுத்ததாக வர விருக்கின்றதற்கும் நீங்கள் ஒரு அருமையான பணியை செய்வீர்களென்று எதிர்பார்க்கிறேன். அவருக்குள் ஒரு தாழ்மையான, மிருதுவான ஆவியை நான் காண்பதால் தான் சகோதரன் பார்டர்ஸை எனக்கு பிடிக்கும், அது ஒரு மகத்தானது என்று நான் - நான் நினைக்கிறேன். அந்த விதமான ஆவியைக் கொண்டிருக்கிற ஒரு மனிதன் மிக மகிழ்ச்சியாக இருக்கத்தான் வேண்டும். 4 இங்கே நான் எத்தனைப் பேர் இருக்கின்றனர் என்று எண்ணிக்கையளிக்க முடியாதிருக்கிற அநேகர் இங்குள்ளனர். நம்முடைய சகோதரனாகிய சகோதரன் காலின்ஸ் அங்கே இருப்பதை நான் காண்கிறேன், மற்றும் - மற்ற ஊழியக்காரர்கள், மற்றும் வடக்கு சாஸ்கட்சேவான் பகுதியிலிருந்து வருகின்ற நம்முடைய அருமை நண்பர் சகோதரன் சாத்மன், அவருடைய குடும்பத்தினர், சகோதரன் ஈவான்ஸ் இங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்; இன்னும் அவரை நான் காணவில்லை, ஆனால் அவருடைய குடும்பத்தாரை நான் பார்த்தேன், அவர்கள் ஜார்ஜியாவிலிருந்து வருகின்றனர். ஜார்ஜியாவைச் சார்ந்த சகோதரன் பாமர் அங்கிருக்கிறார், மற்றும் - மற்றும் சகோதரன் வெஸ்ட், அலபாமா அல்லது ஜார்ஜியாவைச் சார்ந்தவர் என்று நான் நம்புகிறேன். சகோதரன் வெஸ்ட் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்-? நான்... அது.... ஓ, ஹண்ட்ஸ்வில். ஆகவே பிறகு... ஓ உங்கள் எல்லாரையும் நான் இங்கே காண்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.“ ஆகவே இப்பொழுது, சகோதரன் லைல், அங்கே உள்ளார், உட் மற்றும் அவருடைய அருமையானவர்கள், வடக்கு இண்டியானாவைச் சார்ந்தவர்கள், இங்குள்ளனர். என்னுடைய பழைய கூட்டாளி வேட்டை கூட்டாளியான கெண்டக்கியைச் சார்ந்த சகோதரன் சார்லி (கெண்டிக்கியிலேயே சிறந்த அணில் வேட்டைக்காரர்களில் இரண்டாவது நபர், சிறந்த அணில் வேட்டைக்காரரில் இரண்டாவது சிறந்தவர். அதற்காக நான் பணம் செலுத்த அனுமதிப்பார். சரிதானே-!) மற்றும் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தார் இங்கிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். மற்றும் உங்களெல்லாருக்கும் கிறிஸ்தவ வாழ்த்துக்கள். இங்கிருக்கின்ற சிறு சகோதரன், அவருடைய பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை. இங்கே, பலத்தரப்பட்ட பேர் உள்ளனர். கூடாரத்தில் எங்களோடு இன்றிரவு ஆராதிக்க நீங்கள் வந்ததற்காக உங்களை நான் மிகவுமாக மெச்சுகிறேன் என்பதை நீங்களெல்லாருமே அறிவீர்கள். 5 ஆகவே இப்பொழுது, கூடாரத்தில் இன்றிரவு ஒரு வழக்கத்திற்கு மாறான இரவாகும், ஏனெனில் இதுகேள்வி பதில் இரவாகும். இது வழக்கமாக வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தடவை நடைபெறும், நான் அதைச் செய்த காரணம் என்னவெனில், ஜனங்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை என் மனதில் கொண்டு, அதினால் அவர்களுடைய கேள்விகள் என்ன என்பதை நான் அறிந்துகொள்ள ஏதுவாயிருக்கும் என்பதே. எல்லாரும் ஒரு கேள்வியை உள்ளே போடும்படிச் செய்து, பிறகு அதற்கு பிரசங்க மேடையிலிருந்து பதிலளிப்பதாகும். 6 இப்பொழுது, இதில் என்னால் - இது மிகவும் செயலாக்க முடையதாக இருக்கும் என்று நான் எண்ணினேன், ஆனால் என்னிடம் சில கேள்விகள் மாத்திரமே உள்ளன. ஆகவே இதற்கு பதிலளிக்க நமக்கு நீண்ட நேரம் எடுக்காது. தட்டு நிறைய கேள்விகள் இருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் சில எளிமையான மற்றும் எளிய கேள்விகள் மாத்திரம் உள்ளன. ஆனால் அவைகளில் சில உபதேசத்தைக் குறித்ததாக இருக்கின்றன. ஆகவே இந்த உபதேசத்தைப் பற்றி மக்களின் கேள்விகளுக்கு அவர்கள் யார் என்று அறியாமலே நான் பதிலளிக்க வேண்டியவனாகவுள்ளேன் (ஏனெனில் அநேகர் கேள்விகளில் தங்கள் பெயர்களை எழுதவில்லை); ஆதலால், கூடாரத்தில் எந்த போதகத்திற்காக நாம் நிற்கிறோமோ அதன்படியாகவே நான் அதற்கு பதிலளிக்க வேண்டியவனாகவுள்ளேன். ஆகவே அதைச் செய்வதின் மூலம். ஆகவே நம்மிடம் வந்திருக்கும் சகோதரருக்கு அல்லது சகோதரிக்கு முரண்பாடான சில காரியங்களை நான் பேச நேரிடுமானால், அதை ஒரு காரணமில்லாமல் நாங்கள் செய்திருக்கமாட்டோம். சிறு வேதப்பிரகாரமான காரியங்களின் பேரில் குழப்பிக்கொண்டிருக்கும் எந்த ஒருவர் பேரிலும் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. நம்மெல்லாரையும் இரட்சிக்ககிறிஸ்து மரித்தாரென்றும், மேலும் நாமெல்லாரும் அவருடைய இரத்தத்தின் மூலமாகவே இரட்சிக்கப்பட்டோம் என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். 7 ஒரு சபையாக, ஜனங்களாக, ஒரு சபையோராக, ஒரு சபையாக இருக்கத்தக்கதாக நாம் ஒரு போதகத்தைகொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும். ஆகவே நாங்கள் எந்த போதகத்திற்காக நின்று கொண்டிருக்கிறோமோ அது தேவனுடைய சத்தியமாகிய தேவனுடைய வார்த்தையே. நாங்கள் அறிந்தவரை அதுவே சிறந்த ஒன்றாகும். இப்பொழுது, உங்களுக்கு விருப்பமானால் அதை ஒருவித்தியாசமான கோணத்தில் நீங்கள் பார்க்க உங்களுக்கு பரிபூரண உரிமை உள்ளது. ஆதலால் நான்..... 8 இங்கே யாரோ கேள்விகள் கேட்டுள்ளனர். இரண்டு கேள்விகள் நீண்டதாக உள்ளன. எனக்குத் தெரிந்த வரையில் இப்பொழுது நான் பதிலளிப்பேன். இப்பொழுது, ஒரு கேள்வியைக் கையாள நான் முயற்சிப்பது இந்த வழியாகத் தான். ஒரு கேள்வி... ஒருவன் ஒரே ஒரு வசனத்தை எடுத்து, அது என்ன கூற வேண்டும் என்று நீ விரும்புகிறோயோ அதை ஏறக்குறைய அவ்விதமே கூறும்படிக்குச் செய்யலாம். ஆனால் அந்த வேத வசனம், ஒவ்வொரு வேத வசனமும் சத்தியமாகும். அது மிகவும் பரிபூரணமானதாகும், அந்த வேத வசனத்தை உரைத்த அந்த முடிவில்லாத தேவனைப் போன்றே, அதற்கு ஒரு முடிவே இல்லாதவகையில் அது மிகவும் பரிபூரணமான ஒன்றாயிருக்கிறது. ஆதலால், அது ஆதியாகமம் துவங்கி வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் அதே விதமாகத் தான் சென்று கொண்டிருக்கும். அது ஒரு போதும் திசைமாறாது. ஆகவே அப்படியானால், வேதாகமமானது ஊக்குவிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையாக இருக்குமானால், அது எந்த ஒரு இடத்திலும் தன்னைத் தானே திசைமாற்றிக் கொள்ளாது. அது வேதவசனத்தின் மூலமாகவே அது செல்லும். இப்பொழுது, அநேக தடவை. இக்காலை நான் சிம்சோன் தெலிலாளை மற்றும் உலக பிரகாரமாக இருக்கின்ற சபையைப்பற்றி பிரசங்கிக்கையில் நான் சற்று கடினமாக பேசினேன், நான் கடினமாக பேசுவது என் நோக்கமல்ல, ஆனால் நான் உத்தமமாக இருக்க வேண்டுமென்று விழைந்தேன், என்னுடைய உண்மைப் பற்றானது எவ்வாறிருக்கிறதோ அதைப் போன்றே உத்தமமாக இருக்க வேண்டுமென்பதே என்னுடைய உறுதியான நம்பிக்கையாகும். 9 இப்பொழுது, இந்த வேதவசனங்களில், அவைகள் தவற முடியாத பிழையற்ற தேவனுடைய வார்த்தையாயிருக்கையில் அந்த வேதவசனத்தை சரியாக வியாக்கியானிக்க ஒன்று தான் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன், அது பரிசுத்த ஆவி தான், நான் நம்புவது, அது... இந்த வேத வசனங்களை எழுதிய அந்த பரிசுத்த ஆவியானவர் தாமே, அவைகள் ஒரு தனிப்பட்ட வியாக்கியானத்திற்காக அல்லவே என்று கூறினார், அப்படியானால் காலந்தோறும் அதை வியாக்கியானித்தது அதே பரிசுத்த ஆவியாகத் தான் இருக்கும். ஆனால் இப்பொழுது, அநேக மக்கள் தங்கள் சபைகளில் மற்றும் தங்கள் மார்க்கங்களில், கருத்து வேறுபாடுகள், தாங்கள் பிடித்துக்கொண்டிருக்கிற ஒன்றின் பேரில் சிறிது முரண்பாடாக இருப்பார்கள். அப்படியிருந்தால், நான் ஒரு செர்ரீ கேக்கை உண்ணும் போது நான் என்ன செய்கிறேனோ அதே போன்று நீங்களும் செய்யுங்கள். நான் ஒரு கொட்டையைக் கடிக்கையில், அந்த கொட்டையை வெளியே எறிந்து விட்டு, தொடர்ந்து கேக்கை சாப்பிடுவேன். அதைப் போன்றுதான் நீங்களும் செய்ய வேண்டும். 10 நம்முடைய சகோதரி வூட்டன் அங்கே தன்னுடைய சிறு குழந்தையுடன் நின்று கொண்டிருப்பதை நான் காண்கிறேன். சகோதரியே, அக்குழந்தை வெப்பத்தை உணருகிறதென்றால், உங்களுக்கு ஒரு இருக்கை இல்லையெனில், நம்முடைய சகோதரரில் ஒருவர் உள்ளேயிருந்து ஒரு நாற்காலியை கொண்டு வந்து அங்கே மின் விசிறியின் அருகில் வைத்தால் நலமாயிருக்கும், ஏனெனில் சகோதரிக்கு உட்காரும்படி ஒரு குளிர்ந்த இடம் உண்டாயிருக்கும். அதைச் செய்வதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாயிருக்கும், இங்கே சகோதரரில் யாராவதொருவர்... சகோதரியே, இங்கே இருக்கின்ற மின்விசிறி, இங்கே காற்றை வீசிக் கொண்டிருக்கிறது, மற்றும் அங்கே ஒரு இருக்கை உள்ளது. நீங்கள் அதில் உட்கார விரும்பினால் நீங்கள் சென்று அமரலாம். இப்பொழுது, சகோதரரில் யாராவது உங்கள் கோட்டை, கழற்ற விரும்பினால் நீங்கள் தாராளமாகச் செய்யலாம், நீங்கள் நலமாக மற்றும் மகிழ்ச்சியாக உணரும்படிக்கும் செய்து கொள்ளுங்கள். 11 இப்பொழுது, அவர்கள் எனக்காக ஜெபிப்பார்களா என்று குழுவை நான் கேட்டுக் கொள்ளப்போகிறேன். ஒரு இரவு ஆராதனைக்காக நான் அடுத்த வாரத்தில் கலிபோர்னியா செல்ல வேண்டியவனாகவுள்ளேன். கிறிஸ்தவ வியாபாரிகளின் சர்வதேச கன்வென்ஷன் கூட்டத்தில் ஒரு இரவு மாத்திரம் நான் பிரசங்கிக்கிறேன். ஆனால் அவர்கள் அதை விளம்பரப்படுத்தியுள்ளனர், ஆகவே அநேக ஆயிர மக்கள் அங்கே இருப்பார்களென்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். அவர்களை ஏமாற்றம் அடையச் செய்ய எனக்கு விருப்பமில்லை. திட்டமிட்டபடியே அந்த நேரத்தில் நான் ஆஸ்திரேலியாவில் இல்லையெனில் நான் அங்கு வருவேனென்று அவர்களிடம் கூறியுள்ளேன், ஆகவே எங்களுக்காக ஜெபியுங்கள். 12 உங்களுடைய அன்றாட பணிகளிலிருந்து விடுமுறையில் இருக்கின்ற இந்த பூமியின் அருமையான யாத்ரீகர்களில் யாராவது கூட்டங்களில் ஒன்றிலாகிலும் இருக்க விரும்புவீர்களானால், டென்னஸியிலுள்ள, கிளீவ்லாண்டில், தேவனுடைய சபையில் (Church of God) மூன்று நாள் கூட்டங்கள் இருக்கும். அது டாம்லின்ஸசனின் அசைவான, பெந்தெகொஸ்தே தேவனுடைய சபை என்று நான் நினைக்கிறேன். சகோதரன் லிட்டில் பீல்ட், மேய்ப்பராயுள்ளார், அவர் ஒரு அருமையான கிறிஸ்தவ நபர் ஆவார். அவர் வடக்கிலிருந்து, மெய்னிலுள்ள பங்கோரிலிருந்து வருகின்ற ஒரு அமெரிக்கர், ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்தவர், அருமையான சகோதரன். ஆகவே, நீங்கள் பிரயாணத்தில் இருந்து வரவிரும்பினால், ஒருக்கால் திங்கள் இரவு அவர்கள் கட்டியுள்ள பெரிய, விஸ்தாரமான கூடாரம் பிரதிஷ்டை செய்யப்படும். பிறகு, அடுத்த வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், கர்த்தருக்கு சித்தமானால்-? வருகின்ற வாரம் அல்ல, அடுத்த வாரம் சுகமளிக்கும் ஆராதனைகள் இருக்கும், அது 6ஆம், 7ஆம் மற்றும் 8ஆம் தேதியாக இருக்கும். இப்பொழுது நாம் வார்த்தையை திறப்பதற்கு முன்னர், ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை நாம் தாழ்த்த நான் விரும்புகிறேன். 13 கர்த்தராகிய தேவனே, கர்த்தராகிய இயேசுவை, மரித்தோரிலிருந்து மறுபடியுமாக கொண்டு வந்தவரே மற்றும் அவரை பரிசுத்த ஆவியின் வடிவில் எங்களுக்கு அளித்தவரே, எங்களெல்லாருடைய விலையேறப்பெற்ற தகப்பனே, சிலுவையிலறையப்பட்டப் பிறகு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிரோடெழுந்து, மகிமைக்குள் மேலேறிச்சென்று, மத்தியஸ்த ஊழியம் செய்ய என்றென்றும் வாழ்ந்து, எங்கள் பலவீனங்களுக்காக பரிதபிக்கிற மகா பிரதான ஆசாரியராய், இருப்பதிலேயே மிகவும் சிறியதான தெருவில் விழுகின்ற ஒரு குருவியைக் கூட அறிந்தவராக இருக்கின்றாரே, அப்படியானால் வார்த்தையை கேட்க மாத்திரமே இந்த உஷ்ணமான கட்டிடத்தில் இன்றிரவு அமர்ந்திருக்கின்ற தம்முடைய பிள்ளைகளின் உத்தமத்தை அவரால் எப்படி கடந்து சென்று விட முடியும். ஒன்றை நிச்சயமாக அறிவேன், கர்த்தராகிய தேவனே, நான் கேட்கவில்லை என்றாலும், நீர் தாமே உம்முடைய ஆசீர்வாதங்களை தங்களுடைய கடமையென்னும் ஸ்தானத்தில் நின்று கொண்டிருக்கிற இவர்களுடைய தீரத்திற்காக இவர்கள் மீது நீர் ஊற்றுவீர். இங்கே சிலர், வருகை புரிந்துள்ளனர், கர்த்தாவே, இவர்களுக்காகவும் இவர்களுடைய சபைகளுக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த கேள்விகளுக்கு என்னை விட இன்னும் அதிகமாக பதிலளிக்கக்கூடிய, சுவிசேஷத்திற்காக நியமிக்கப்பட்ட- தேவனால் நியமிக்கப்பட்ட போதகர்கள் இங்கே அமர்ந்துள்ளனர். கர்த்தராகிய தேவனே, நாங்கள் கூறவேண்டிய சரியான காரியங்களை எங்களுக்கு அளித்து, அது தாமே சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷத்தை எங்கள் இருதயத்திற்குக் எங்களுக்கு கொண்டுவந்து, நாங்கள் ஒன்றாக கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் அமர்ந்து, எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் கெட்ட உணர்வுகள் இல்லாமல் வேதவாக்கியங்களை ஆராய்ந்து, சத்தியம் என்ன என்பதையும் மற்றும் அந்த சத்தியத்தை ஆராதிக்க மாத்திரம் நீர் தாமே பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு எங்களிடம் வரச் செய்யும்படி நான் ஜெபிக்கிறேன், கர்த்தாவே, இதை அருளும். 14 இங்கே ஒன்று கூடுகின்ற இந்த ஆட்டு மந்தையை ஒவ்வொரு ஆண்டும் கடுமையான மற்றும் அசைவில்லாத நேரங்களினூடாக வழிநடத்தி மேய்த்து கடமையில் நிறுத்திப் பெற்றுள்ள ஸ்தானத்தில் நேர்த்தியுடன் துணிவுடன் நிற்கின்ற எங்களுடைய அருமையான மேய்ப்பராகிய சகோதரன் நெவிலை ஆசீர்வதிக்குமாறு நாங்கள் கேட்கிறோம். உம்முடைய ஆவிதாமே அவர் மீது இருந்து, அவருக்கு உதவுமாறு ஜெபிக்கிறோம். கூடாரத்தோடு தொடர்புடைய எல்லாரையும் ஆசீர்வதியும். கர்த்தாவே, உம்முடைய சித்தமாயிருக்கும் பட்சத்தில், ஒரு அழகான, பெரிய கூடாரமானது இங்கே மூலையில் விரைவில் இருக்கவும் அங்கே ஒரு பள்ளியை நாங்கள் அமைத்து பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக போராடும்படியாக இளம் ஊழியர்களுக்கு போதிக்கும்படி நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். கர்த்தாவே, நாங்கள், மூப்படைந்து கொண்டிருக்கிறோம், விரைவில் நான் வேதாகமத்தை வேறு யாரேனும் ஒருவருடைய கரங்களில் அளிக்கவேண்டும். கர்த்தாவே, இந்த முயற்சியில் எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் அவரில் சார்ந்திருக்கையில், இன்றிரவு எங்கள் கேள்விகளுக்கு பரிசுத்த ஆவியின் மூலமாய் பதிலளியும், இதை உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். 15 இப்பொழுது, மிக அதிக வெப்பமாக இருக்கிறதென்பதை நான் அறிவேன், ஆனால் தேவனுக்கு முன்பாக நான் சரியாக அதற்கு பதிலளித்தேன் என்று நான் கருதும் வரை ஒரு கேள்வியை கடந்து செல்வதில் எனக்கு விருப்பமில்லை. இப்பொழுது, நம்மிடம் அநேக கேள்விகள் இல்லை; நான் அவைகளை எண்ணிப் பார்க்கவில்லை, மிகச்சொற்பமான கேள்விகள் மாத்திரமே இருக்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையுமே பார்க்க முடியாமலும் போகலாம், ஆனால் கூடுமானால் எல்லாவற்றையும் முடிக்க நாங்கள் விரும்புகிறோம். இங்கே இளஞ் சிவப்பு நிறத்தில் இங்கே இருக்கும் இந்த சிறுமியை நான் கேட்க... தேனே, இங்கே வா. இவள் சகோதரன் பீலருடைய சிறு பெண் என்று நான் நினைக்கிறேன். நீ இந்த கேள்விகளை அங்கே கீழே எடுத்துச்சென்று, இவைகளை ஒன்றாய்க் கலக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், நான் என்ன கூற வருகிறேனென்று உனக்கு விளங்குகிறதா, இவைகளை ஒன்றின் மேல் ஒன்று வைத்து இதைப்போன்று குலுக்கி பிறகு என்னிடம் திரும்பவுமாக கொண்டு வா. புரிகின்றதா-? நான் ஒரு கேள்விக்கு பதிலளித்தேன் என்று எண்ணிக்கொண்டு, வேறொன்றிற்கு பதிலளிக்கச் சென்று, மற்றொருவருடைய கேள்வியை இடமாற்றாதபடிக்கு இவ்விதம் செய்கிறேன். அவ்வாறிருக்க நான் விரும்பவில்லை. இந்த சிறுமி இதை ஒன்று சேர்த்து கலந்து பிறகு நாம் எது மேலே இருக்கிறதோ அதற்கு நாம் பதில் உரைப்போம். இப்பொழுது, இங்கே (இனியவளே, உனக்கு நன்றி) - நான் கூறத்தக்கதாக ஏதாவது கேள்வியாருடைய மனதிலே இருக்குமாயின், உங்கள் கேள்விக்கு நான் பதிலளித்து விட்டு, அது உங்களுக்கு திருப்தியளிக்காமல் இருக்குமென்றால், நீங்கள் உங்கள் கைகளை உயர்த்தி பதிலளிப்பீர்களானால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் இங்கு நான் வார்த்தைகளைக் குறித்த விவரங்களுக்கு கிரேக்க, எபிரேய கிரேக்க மற்றும் எபிரேய மூல அகராதி (Lexicon) இங்கே வைத்திருக்கிறேன், (உங்களுக்கு புரிகின்றதா-?) ஏனெனில் சிலர் எபிரேய மற்றும் கிரேக்க வார்த்தைகளுக்குக் கூட விவரம் கேட்கின்றனர். 16 ஆகவே இப்பொழுது, நாம் பதிலளிக்கையில் கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. நான் உங்களுக்கு தெளிவாகக் கூறட்டும்.... (அங்கே பின்பாக இருக்கிறவர்களுக்கு நான் பேசுவது தெளிவாகக் கேட்கிறதா, அப்படியானால் உங்கள் கைகளை உயர்த்துங்கள். அது அருமையானது) இப்பொழுது நான் தெளிவாகக் கூறட்டும், இந்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்கையில் இது ஒரு எதிர்ச்சார்பாக இருக்கும் படிக்கு அல்ல, ஆனால் அது போ தகத்தையொட்டி இருக்குமானால் அதற்கு இங்கே எங்களுடைய சத்தியப்பற்றுக் கேற்றவாறே நாங்கள் அதற்கு பதிலளிக்க வேண்டியவர்களாக உள்ளோம் என்பதை கூடாரத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் நினைவில் கொண்டு உள்ளனர், உங்களுடைய சொந்த கருத்துக்களுக்கு முரணாக இருக்கவேண்டும் என்றல்ல, ஆனால் - எங்களுடைய சத்தியப்பற்றுறுதியைக் கொண்டு வரவே. சில சமயங்களில் அதை மிக கடுமையாக ஆணித்தரப்படுத்துவோம். ஆகவே ஆராதிப்பவர் நிச்சயப்படுத்திக் கொள்ளவே இதைச் செய்கிறோம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். 17 இப்பொழுது, மேலே உள்ள முதலாவது கேள்வி. ஓ, ஆம், இது ஒருசிறிய கேள்வியாகும். இது ஒரு கேள்வியல்ல, இது ஒரு ... நல்லது, இது ஒரு கேள்வியாகும். இது வாரத்தின் முதலிலே என்னுடைய தனிப்பட்ட பேட்டியை வைக்க விரும்புகிற ஒருவருடையதாகும். இப்பொழுது, இந்த தனிப்பட்ட பேட்டி எவ்வாறு நாங்கள் நடத்துகிறோம் என்பதை நான் உங்களுக்கு கூறுகிறேன். இது அங்கொன்று இங்கொன்றுமாக, மற்றும் முதலாவதாக யார் வருகிறார்களோ என்பதின் அடிப்படையில் இருந்தது, ஆனால் நாங்கள் அதற்கு ஒரு முறைமையை கொண்டிருக்கிறோம். ஆகவே, ஜெப வரிசைகளில் வருகின்ற அநேக மக்கள் இருக்கின்றனர், அவர்களில் துரிதமாக செல்லுகின்ற வரிசைகளில் செல்பவர், அல்லது சிலர் அதைக் குறித்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருப்பவர் உள்ளனர், ஆகவே அவர்கள் கர்த்தரிடம் கேட்க விரும்புகின்றனர். இப்பொழுது, அதைக் கேட்க அவர்களுக்கு பரிபூரண உரிமை இருக்கிறது; அதற்காகத் தான் இந்த தீர்க்கதரிசன வரமானது அளிக்கப்பட்டது, அந்த நோக்கத்திற்காக மாத்திரமே அது அளிக்கப்பட்டுள்ளது. 18 வேதாகமத்திலே ஏதாவதொன்றை தெரிந்து கொள்ள அவர்கள் விரும்பினால், தீர்க்கதரிசிகளிடம் சென்றனர், இவர்கள் தேவன் பதிலளிக்கும் வரை ஜெபித்து பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். என்ன, ஒரு குழுவை போஷித்து மற்றொரு குழுவை பட்டினிபோடும் தேவன் அவரல்ல. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். ஆதலால், தீர்க்கதரிசன வரம் அதற்காகத் தான் இருக்கிறது. இந்த தனிப்பட்ட பேட்டிகளில், நாங்கள் ஒரு நபரின், காரியத்தை எடுப்போமானால், அதைக்குறித்து ஒரு வழியில் அல்லது மற்றொரு வழியில் தேவனிடமிருந்து அறியும் வரைக்கும் நான் அதை விடமாட்டேன். அவை சற்று தாமதமாகவே வரும். அது ஆறுமாதம் அல்லது ஒரு வருடம்கூட ஆனாலும், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நாங்கள் பெறுகின்ற வரையிலும் அதிலே நாங்கள் அப்படியே தரித்திருப்போம். பாருங்கள்-? ஆதலால், அவைகள் சற்று தாமதமாகவே வருகின்றன, ஆனால் ஆயிரக்கணக்கானோர் அழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாங்களோ.... அன்றொரு நாள் பாப்டிஸ்டாகிய ஒரு மனிதன் என்னிடம் வந்திருந்தார் இந்த மனிதன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக அநேக அநேக மாதங்களாக காத்திருந்தார் என்று நான் நம்புகிறேன். ஆனால் நாங்கள் அவரை அப்படியே விட்டு விடவில்லை, அவரை வர அனுமதித்தோம், முடிவாக தேவனுடைய கிருபையால் ஒரு தனிப்பட்ட பேட்டியில்.... உள்ளே வந்தார் என்ன காரணம் என்பதை அறிய ஒரு தரிசனத்தை காண அவர் எப்பொழுதும் விரும்பினார். அப்பொழுது அந்த தரிசனம் வந்தது, அவர் தன்னுடைய நாற்காலியில் உட்கார்ந்தவாறே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார். 19 பிறகு ஒரு - ஒரு கத்தோலிக்கர், சமீபத்தில் மனமாறிய அவர், ஒரு நாளிலே சிக்காகோ நகரத்திலிருந்து தனிப்பட்ட பேட்டிகளுக்காக வந்திருந்தார் - அவர் சுமார் இரண்டு ஆண்டுகளாக பேட்டிகளில் கலந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார்; அறையில் பதினைந்து நிமிடங்களில் நடந்த அவருடைய முதல் பேட்டியில் கர்த்தர் ஒரு தரிசனத்தை அளித்து, மற்றும் எல்லாவற்றையும், அவர் பரிசுத்த ஆவியை பெறும் முன்னர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும், முழு காரியத்தையும் வெளிப்படுத்தினார். பாருங்கள், அதற்காகத் தான் அது இருக்கின்றது. இப்பொழுது, யாராவதொருவர் எந்த சமயத்திலும் அழைப்புகள் வரும் போது, அவர்கள் வந்து பார்க்கவோ, அல்லது இந்த தனிப்பட்ட பேட்டிகளில் சந்திக்க விரும்புகிறவர்கள், பட்லர் (Butler) 2-1519 என்ற எண்ணிற்கு தொலைபேசி செய்தால், எந்த இடத்தில் தனிப்பட்டபோட்டி நடைபெறும் என்ற சரியான தகவலை அலுவலகம் உங்களுக்கு அஞ்சல் செய்யும். மேலும், உங்களுடைய தனிப்பட்ட பேட்டி எதற்காக என்பதைக் குறிப்பிடுங்கள், அதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்கலாம் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அப்பொழுது அது நீதியாக இருக்கும், மற்றும் ஒவ்வொரு நபரும்.... அந்த ஒதுக்கப்பட்ட நேரமானது போதுமானதாக இல்லாதிருக்கும் பட்சத்தில், அப்பொழுது அந்த குறிப்பிட்ட காரியத்திற்கு நாங்கள் மறுபடியுமாக வருவோம். அது சரியாக பதிவேட்டில் எழுத்து மூலமாக பதிவு செய்யப்படும், எங்களுக்கு தேவனிடத்திலிருந்து ஒரு தரிசனத்திலோ அல்லது தேவன் பேசுகின்ற ஏதாவதொரு விதத்தினாலோ அது அறியப்படும் வரை அந்த பதிவேட்டை நாங்கள் வைத்திருப்போம். ஆகவே இந்த விதமாகத்தான் எங்களுடைய தனிப்பட்ட பேட்டிகள் நடத்தப்படுகின்றன. 20 ஆதலால், பாருங்கள், நான் வெளியே சென்றிருக்கையில், சில சமயங்களில் மக்கள் சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் போதுமான அளவிற்கு மக்களை சந்திப்பதில்லை'' என்று எண்ணுகின்றனர். மக்களை சந்தித்துக் கொண்டும் அதே சமயத்தில் தேவனோடும் இருக்கமுடியாது. புரிகின்றதா-? யாரோ ஒருவரை கூர்ந்து கவனிக்கிறேன், மேலும் நான் நான் குகையிலோ அல்லது எங்கோ ஓரிடத்திலோ ஜெபித்துக் கொண்டிருக்கிறேன், அப்பொழுது அப்பொழுது.... இதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என நான் பார்க்க விரும்புகிறேன். (சகோதரன் பிரன்ஹாம் குறிப்பை மெதுவாக வாசித்துக்கொள்கிறார் - ஆசி) ஓ, ஆமாம். ஆம், ஆம் இந்த மனிதன்தான் (ஜீன் இதை இங்கே இப்பொழுது வைத்தார்) அந்த ... அன்றொரு நாள் சிக்காகோவிலிருந்து ஒரு மனிதன் வந்தார், மருத்துவர் அவருடைய இருதயத்தை அறுத்தெடுத்து, இருதயத்தை திறந்து அதற்குள்ளாக இருக்கும் கோளாறு என்ன என்பதை பார்க்க வேண்டுமென்றிருந்தார். அது என்னவென்று சரியாக பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தினார், அதனால் அவருடைய இருதயத்தை அறுத்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லாமற் போயிற்று; அவர் சுகமாக்கப்பட்டார். ஆகவே நீங்கள் பாருங்கள், அநேக காரியங்கள் பேட்டிகளில் உள்ளது. மேலும் அது எவ்வளவு மெதுவாக வருகின்றது என்பதை உங்களுக்கு கூறுவேனானால், தேவனிடமிருந்து ஒரு பதிலுக்காக, ஒரு தரிசனத்திற்காக நானே பதினைந்து ஆண்டுகளாகக் காத்திருந்தேன். தேவன்.... இன்னொருவர் வருவார், அவர் மூன்று நிமிடங்களுக்கு கூட காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாருங்கள்-? அது... தேவன் தம்முடைய சொந்த நேரத்தில் தான் பதிலளிக்கின்றார். அதை நாம் கட்டுப்படுத்துவதில்லை, அது தான் நம்மை கட்டுப்படுத்துகின்றது. கேள்வி:75 இப்பொழுது மேலே இருக்கின்ற இரண்டாவது கேள்வியானது... சகோதரன் பில், ஆவிக்குரிய வரங்களில் விசுவாசம் கொண்டிராத ஒரு சபையார் மத்தியில், என் மூலமாக தேவன் பயனளிக்கின்ற கிரியை செய்ய முடியுமா-? 21 இதில் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால், ஆவிக்குரிய வரங்களில் விசுவாசம் கொண்டிராத ஒருசபைக் கூட்டத்தில் அவர்கள் ஊழியம் செய்யும்போது தேவன் அவர்களோடு கிரியை செய்வாரா என்றறிய இந்த நபர் விரும்புகிறார். அப்படி இருக்குமோ என்று சந்தேகங்கொள்கிறேன். அருமையான நண்பரே, கர்த்தர் உங்கள் மூலமாக பலனுள்ள வகையில் கிரியை செய்வாரா என்று நான் மிகவுமாக சந்தேகங்கொள்கிறேன், ஏனெனில் நீங்கள் அவிசுவாசிகள் மத்தியில் இணைக்கப்பட்டுள்ளீர்கள், வேதாகமமானது, 'அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் உங்களை பிணைத்துக் கொள்ளாதீர்கள், ஆனால் அவர்கள் மத்தியிலிருந்து வெளியே வந்து, வேறு பிரிக்கப்பட்டவர்களாயிருங்கள், என்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்“ என்று கூறுகின்றது. நீங்கள் ஒரு நகரத்தில் வசிப்பீர்களென்றால், அடையாளங்களில் மற்றும் ஆவிக்குரிய வரங்களில் விசுவாசம் கொண்டிருக்கும் ஒரு சபை அங்கே இருக்குமானால், அவைகள் உங்கள் மீது கிரியை செய்துகொண்டிருக்குமானால், அதை விசுவாசிக்கின்ற அந்த சபைக்கு நானே சொல்வேன். மற்றொரு காரியத்தையும் நான் கூறுவேனாக, நான் வழக்கமாக அளிக்கின்ற - ஒரு வேதவசனத்தை அளிக்க விரும்புகிறேன். அருமை நண்பரே, எப்படியாவது இந்த மக்கள் விசுவாசிக்க வேண்டுமென்று உங்களாலான சிறந்த முயற்சியை நீங்கள் மேற்கொண்டீர்கள், அவர்கள் விசுவாசிக்க வேண்டும்மென்று உங்களாலான சிறந்த முயற்சியை நீங்கள் மேற்கொண்டீர்கள், அவர்கள் விசுவாசிக்க வேண்டுமென்று முயற்சி செய்தீர்கள், ஆனால் அவர்களோ அதை அப்படியே செய்வதற்கு விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம். அப்படியானால், கர்த்தராகிய இயேசு நமக்கு அளிக்க விரும்புகின்றார் என்று நான் விசுவாசித்து நான் உங்களுக்கு ஒரு வேதவசனத்தை அளிக்கப்போகிறேன். 22 நீங்கள் முயற்சி செய்திருந்தால், நீங்கள் அந்த மேய்ப்பரிடம் பேசியிருந்தால், நீங்கள் அவர்களில் அநேகரிடம் பேசி அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் விட்டு அவை விசுவாசிக்காமல் இருந்தால், இங்கே மத்தேயு 7:6 ல் அதைக் குறித்து இதைத் தான் இயேசு கூறியுள்ளார். பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களை பன்றிகள் முன் போடாதேயுங்கள். போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் முழு சுவிசேஷத்தையும் விசுவாசியாமல், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று விசுவாசியாமல் இருக்கின்ற ஒரு சபைக் கூட்டத்தோடு நான் இணைந்திருப்பேனா என்பது சந்தேகம் தான். நான் ஒரு சபைக்கூட்டத்தில் உட்கார்ந்து அவர் கிரியை நடப்பிப்பதை அவர் கூறினவிதமாகவே அவர் செய்கிறதை நான் பார்க்கையில், நான் மக்களிடம் இப்படிப்பட்டவைகளிலிருந்து வெளியே வந்து, எல்லா வேதவசனங்களையும் பிரசங்கம் செய்து அவைகளை விசுவாசிக்கும் ஒரு நல்ல சபையை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள் என்று நான் கூறுவது சரியெனக் காட்டுகிறது. கேள்வி:76. இப்பொழுது, அடுத்த கேள்வி: நீங்கள் பரிசுத்தாவியைப் பெற்று இராமல் இருந்தால் நீங்கள் இரட்சிக்கப்படவில்லை என்பது உண்மையா-? 23 இதன் பேரில் ஐந்து மணி நேரம் விவாதிக்கலாம். நீங்கள் கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு தண்ணீர் ஞானஸ்நானத்திற்காக ஆயத்தமாய் இருக்கையில்; நீங்கள் இன்னுமாக குணப்படவில்லை; நீங்கள் மனந்திரும்புதலுக்காக விசுவாசிக்கிறீர்கள். மனந்திரும்புதல் என்றால், ''மாற்றப்படுவதற்காக'' என்பதாகும். 24 இப்பொழுது, இதை இன்னுமாக வலியுறுத்தத்தக்கதாக, தம்மை 3½ ஆண்டுகளாக பின்பற்றி வந்த பேதுருவிடம் இயேசு ... மத்தேயு 10 வது அதிகாரத்தில் இயேசு பேதுருவிற்கு வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்கவும், சுவிசேஷத்தை பிரசங்கிக்கவும், அசுத்த ஆவிகளை துரத்த, அவைகளுக்கு எதிராக பிரயோகிக்க வல்லமையை அளித்தார். பரிசுத்த யோவான்17:17ல் பேதுருவை சத்தியத்தின் மூலமாக பரிசுத்தப்படுத்தி, வசனமே சத்தியம் என்றும், அவர் தான் அந்த வார்தை என்றும் கூறினார். பிறகு - பெந்தெகொஸ்தேவிற்கு முன்னர் அவர், ''நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்று கூறினார். நீங்கள் விசுவாசித்து மாற்றப்படத்தக்கதாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். 25 இப்பொழுது, உங்களில் அநேகர், என்னுடைய பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் நண்பர்களாகிய உங்களை அறிவேன், ஏனெனில் நீங்கள் இந்த வேதவசனத்திற்கு திரும்பிச் செல்கையில்.... இப்பொழுது, இங்கே தான் இதை நான் ஆணித்தரமாக கூற வேண்டியவனாக இருக்கிறேன். பாருங்கள்-? நீங்கள் வேதவசனத்திற்கு திரும்பிச் செல்லுங்கள்; ஆபிரகாம் (ரோமர்-4) தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக கொடுக்கப்பட்டது அல்லது எண்ணப்பட்டது. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், ஆகவே தேவன் அவனுடைய விசுவாசித்தின் அடிப்படையில் அவனுக்கு அதை நீதியாக எண்ணப்படச் செய்தார். ஆனால் ஆபிரகாமை நிரூபிக்க, அவர் அவனுக்கு (பண்புக்குரியவனாக குறித்துக் காட்டப்படுதல், அவன் அவனுடைய பாவத்திலிருந்து பண்புக்குரியவனாக குறித்துக் காட்டப்பட்டான், பிறகு அவர் அவனை அவனுடைய பாவத்திலிருந்து கொண்டு வந்தார்), ஏனெனில் அவன் விசுவாசித்திருந்தான், அவர் அவனுக்கு ஒரு அடையாளத்தை அளித்தார். இங்கே தான் என் அருமையான பிரஸ்பிடேரியன் மற்றும் பாப்டிஸ்டு நண்பர்களாகிய நீங்கள் அதைக் காணத்தவறுகிறீர்கள். பாருங்கள்-? தம்மில் அவன் கொண்டிருந்த விசுவாசத்தை அவர் பெற்றுக் கொண்டார் என்பதன் ஆதாரமாக, ஒரு சாட்சியாக, விருத்தசேதனத்தின் முத்திரையை அவர் அவனுக்கு அளித்தார். ஆகவே அதன் காரணமாகத் தான் பவுல் அப்போஸ்தலர் 19ல் அப்பொல்லோவை தங்கள் மேய்ப்பனாகக் கொண்டிருந்த, யோவான் பிரசங்கித்த விதமாக அதை விசுவாசித்த அந்த பாப்டிஸ்ட் சகோதரரிடம், ''நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா-?' என்றான். நீங்கள் பாருங்கள், அவர்கள் விசுவாசித்திருந்தனர். ஆனால் இன்னுமாக அவர்கள் குணப்படாதிருந்தார்கள். 26 இப்பொழுது, நாம் மாற்றம் என்ற வார்த்தையை இன்றைக்கு தவறாக அர்த்தங்கொள்கிறோம். ஒருமனிதன் மது அருந்துவதை நிறுத்தி மற்ற எல்லாவற்றையும் நிறுத்தி சபைக்கு சென்றால்அல்லது சபையை சேர்ந்து கொள்வானானால் அவன் மாற்றப்பட்டவன் என்று நாம் கூறுகிறோம்.ஒருக்கால் அவன் சபையை சேர்ந்து கொள்ளலாம், ஆனால் அவன் மாற்றப்பட்டான் என்பதற்கான அடையாளம் அதுவல்ல. அவனுடைய பழைய ஜீவியமானது மரித்து பிறகு கிறிஸ்துவுக்குள்ளாக அடக்கம் பண்ணப்பட்டு புதியதான ஜீவியத்தின் உயிர்த்தெழுதலில் அவருடன் எழுந்து, பரிசுத்த ஆவியின் மூலமாகவே வருகின்றதான நித்திய ஜீவனின் ஜீவிக்கின்ற நம்பிக்கையை பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள்ளாக உருவாக்கும் வரை அவன் மாற்றப்படவில்லை. பாருங்கள்-? 27 இப்பொழுது, இப்பொழுது, அந்த மகத்தான வேதவசனத்தை நான் அறிவேன், நானே அதை பிரயோகிக்கிறேன் - இங்கே அதை எழுதிவைத்துள்ளேன் - பரி. யோவான் 5வது அதிகாரம், 24ஆம் வசனம். இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஏனெனில் இயேசு இதைக் கூறினார்: ''மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. இதை நான் வாசிக்கட்டும். ஏனென்றால் அதை நான் சரியாக வாசிக்கையில் - பரி. யோவான் 5 இந்த வேத வசனத்தை நாம் பார்க்கையில் நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், 5:24வது வசனம். என் வசனங்களைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குப்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ''என்னை விசுவாசிக்கிறவனுக்கு. இப்பொழுது, பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவை கிறிஸ்து என்று ஒருவனும் சொல்லக் கூடாதென்றும் வேதவசனம் கூறுகின்றது. ஆகவே நீங்கள் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை பெறும்வரைக்கும் இயேசுதான் கிறிஸ்து என்று உங்களால் விசுவாசிக்க முடியாது. மேய்ப்பர் என்ன கூறுகிறாரோ அதை, தாய் என்ன கூறுகிறாரோ அதை அல்லது யாரோ ஒரு அருமையான பிரசங்கி கூறுவதை மாத்திரமே அவர்கள் கூறுகின்ற வேதவாக்கியங்களையே நீங்கள் கூறவோ அல்லது சாட்சி கொடுக்கவோ செய்கிறீர்கள். அவர் தம்முடைய உயிர்த்தெழுதலை உங்களுக்கு சாட்சியாய் அறிவிக்கும் வரை உங்களால் அதை அறிந்துகொள்ள முடியாது. பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவை கிறிஸ்து என்றுஒருவனாலும் சொல்ல முடியாது. 28 ஆதலால், கேள்வி என்னவென்றால், ஒரு மனிதன் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால், அவன் கல்வாரியை நோக்கி பார்த்துக் கொண்டே, அந்த நிலையிலேயே அவன் மரிப்பானென்றால், அவன் இரட்சிக்கப்படுவான். நிச்சயமாக, அவன் இரட்சிக்கப்படுவான் என்று நான் விசுவாசிக்கிறேன். முன்பு அவன் ஒரு தருணம் பெற்றிராவிடில், அவன் கடந்து செல்வான் என்று விசுவாசிக்கிறேன். ஆனால் அது .... சிலுவையில் மரித்துக் கொண்டிருந்த அந்த கள்ளனைப் பாருங்கள். நினைவில் கொள்ளுங்கள், அதுதான் அவனுக்கு முதலும் முடிவான தருணமாயிருந்தது. நீங்களோ இந்த இரவைப் பெற்றிருக்கின்றீர்கள். உங்களுக்கு ஒரு இரவு இருக்குமானால் அந்த நேரம் வரைக்கும் நீங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டாம், ஏனெனில் உங்களுக்கும் அந்த விதமாகவே இருக்காது. உங்களுக்கு மரணப்படுக்கையில் அறிக்கை செய்யும் தருணம் இல்லாமல் போகலாம். நான் உங்களுக்கு கூறுகிறேன், அவையெல்லாம் சரிதான், ஆனால் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது என்பது சரியானதல்ல. உங்களுடைய மரணப்படுக்கைக்காக காத்திருக்க வேண்டாம்; சரியாக இப்பொழுதே இதை ஒரு மரணப்படுக்கையாக கருதுங்கள், ஏனெனில் இப்பொழுது நீங்கள் மரித்து பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களாயிருங்கள். 29 இப்பொழுது, அடுத்த கேள்வி... இப்பொழுது அதன் பேரில் ஒரு கேள்வி இருக்குமானால் உங்கள் கரத்தை மாத்திரம் உயர்த்துங்கள். என்னால் முடிந்ததைச் செய்ய எனக்கு மகிழ்ச்சி. கேள்வி:78 பெந்தெகொஸ்தேயிற்கு பிறகு அப்போஸ்தலர்கள் இராப்போஜனம் எங்காகிலும் எடுத்துள்ளனர் என்பதை எங்காகிலும் உங்களால் காண முடிகிறதா-? மக்கள் வார்த்தையை பகுத்தறிவதில்லை என்று பவுல் கூற முனைந்தானா-? தேவனை தொழுது கொள்வதற்கு பரிசுத்த ஆவியானவர் மாத்திரம் தான் வழியா-? நீங்கள் திராட்சை ரசமும் பிஸ்கட்டும் சாப்பிட்டால் வியாதியும் நித்திரை உங்கள் மேல் வருமா-? இப்பொழுது, இங்கே இந்த அருமையான நபர் அவர்கள் என்ன கேட்கின்றனரோ அல்லது அல்லது அவர்கள் அதை கேட்காமலிருப்பதோ, இந்த கேள்வியை உத்தமத்தோடும் ஆழத்தோடும் கேட்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை என்று நான் நம்புகிறேன். ஆகவே நான் - என் சகோதரன் அல்லது சகோதரி அல்லது யாராயிருந்தாலும், நீங்கள் எவ்விதம் கேட்டுள்ளீர்களோ அதே விதமாக நானும் மிகவும் உத்தமமாக ஆழமாக அதற்கு பதிலளிப்பேன். 30 இப்பொழுது நீங்கள் என்னுடன் அப்போஸ்தலரின் புத்தகத்திற்கு திருப்ப நான் விரும்புகிறேன் - 42வது வசனத்திலிருந்து நாம் துவக்குவோம். அப்போஸ்தலர் 2வது அதிகாரம், நான் கூறின்விதமாக 42வது வசனத்திலிருந்து துவக்குவோம். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், பவுல் இராப்போஜனம் எடுத்ததைக் குறித்தும், பிறகு பேதுரு சென்று அதை கைக்கொண்டதை வேதாகமம் எங்கே கூறுகிறது என்பதை என்னால் சரியாக கூறமுடியும் என்று நான் விசுவாசிக்கவில்லை; ஆனால் அவர்கள் சபையைக் குறித்து பேசும் பொழுது, ஒன்றாக இருந்த எல்லாரைக் குறித்தும் என்றே காணப்படுகிறது. பவுல் ஒன்றைப் பிரசங்கித்து, பிறகு அவன் செய்யாததை, மற்றவர்களிடம் செய்யுமாறு கூறியிருப்பான் என்பதை நான் விசுவாசிக்கவில்லை. ஆகவே அப்போஸ்தலர்களில் இதை நாம் காண்கிறோம் : அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும்..... அந்நியோந்நியத்திலும்.... (கவனியுங்கள்-! சரீரமாகிய முழு சபை).... அப்போஸ்தலருடைய உபதேசத்திலும் மற்றும் அந்நியோந்நியத்திலும்..... (மற்றும், (and) அங்கே வாக்கியத்திற்கு இடையே வரும், இணைச்சொல் (Conjuction) பாருங்கள்-?) (ஆங்கில வேதாகமத்தில் உள்ளபடியே - தமிழாக்கியோன்).... அப்பம் பிட்குத்லிலும்... (அது தான் இராப்போஜனம்) ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். 31 பிரசங்கிகளாயிருந்த அந்த அப்போஸ்தலர்கள் தங்கள் உபதேசத்திலும், அப்பம் பிட்குதலிலும் (இராப்போஜனம்), அந்நியோந்நியத்திலும் மற்றும் ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். அப்படியானால், அப்போஸ்தலர் இடமிருந்து அது இராப்போஜனத்தை எடுத்துப்போடுமென்றால், அது அப்போஸ்தலரிடமிருந்து ஜெபத்தையும் கூட எடுத்துப்போட்டுவிட்டதென்பதாகும். பாருங்கள்-? நாம் இன்னுமாக தொடர்ந்து வாசிப்போம். பாருங்கள். எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து சகலத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் ஒவ்வொரு மனிதனுக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து... (அது அப்போஸ்தலர்கள் மற்றும் எல்லாரும்).... அப்பம்பிட்டு.... (அவர்கள் கூடின ஒவ்வொரு தடவையும் இராப்போஜனம்)... 32 அது தான் ஆதி சபையின் மற்றும் அப்போஸ்தலர்களின் உபதேசமாக இருந்தது, அது, அவர்கள் ஒவ்வொரு தடவையும் ஒன்று கூடினபோது இராப்போஜனத்தை கைக்கொண்டார்கள். ஒவ்வொரு தடவையும்-!இப்பொழுது, கிறிஸ்தவ சபைக்கு போகின்ற கிறிஸ்தவ மக்களாகிய உங்களை நான் அறிவேன் (நாம் அறிந்துள்ளபடி அந்த காம்பெல்லைட் சபை.... அவைகளில் இரண்டு உள்ளன, ஒன்று கிறிஸ்துவின் சபை ஸ்தாபனம், மற்றொன்று தான் காம்பெல்லைட் சபை), நீங்கள் நாங்கள் ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் அதைக் கைக் கொள்ளுகிறோம். அதன் பேரில் இருக்கிற வேதவசனம் கூட எங்களுக்கு தெரியும்' என்று கூறுகிறீர்கள். நீங்கள் பிரன்ஹாம் கூடாரம் செய்வதை விட அதற்கு மேலான ஒரு வேத வசனத்தை கொண்டிருக்கிறீர்கள். பிரன்ஹாம் கூடாரம் அதை மாதத்திற்கு ஒரு தடவை கைக்கொள்கிறது. ஆனால் வேதாகமம் நீங்கள் கூடி வரும்போதெல்லாம் என்று கூறுகிறது. அது சரி. அது ஒவ்வொரு தடவையும். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்தில் தொடர்ந்து அநுதினமும் தரித்திருந்து... வீடுகள் தோறும் அப்பம் பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணினர். பாருங்கள், ஒவ்வொரு தடவையும் அப்போஸ்தலர்கள் தேவாலயத்தில் ஜெப குழுக்கள், கூட்டங்களை நடத்தி, ஒவ்வொரு வீடாக, அவர்கள் கூடி வந்தபோதெல்லாம் அப்பத்தைப் பிட்டு இராப்போஜனத்தைக் கைக்கொண்டனர். 33 இப்பொழுது, பவுல், ஒன்று கொரிந்தியரில், இராப்போஜனத்தின்போது இங்கே நாம் வாசிக்கின்ற, அந்த 11வது அதிகாரத்தையும் கூட நாம் வாசிப்போம்..... நாம் அதை வாசிப்போம்... நான் அதை வாசிக்கிறேன், அதனால் உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும், ஒன்று கொரிந்தியர் 11வது அதிகாரம். இப்பொழுது பவுல் பேசுவதைக் கவனியுங்கள், 23வது வசனம். நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில் கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று ராத்திரியிலே அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம்பண்ணின பிறகு அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணின பின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தை எடுத்து:... (இப்பொழுது பாத்திரம்) ....இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தை தெரிவிக்கிறீர்கள். பார்த்தீர்களா-? இது தான் இராப்போஜனம். ஜீவிக்கிற வார்த்தையாகிய கர்த்தருடைய சரீரமானது, கிறிஸ்து தாமே என்பதை நாம் உணர்ந்து அதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஞானஸ்நானம், கால் கழுவுதல் மற்றும் மற்றைய சபை ஒழுங்குகளைப் போன்றே இவைகளும் அடையாளங்கள் தான். ஆனால் அப்பம், அப்பமும் திராட்சரசமும் ஒரு இராப்போஜனத்திற்கு முற்றிலுமான அத்தியாவசியமான தேவையாகும். 34 இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ.... இப்பொழுது, இங்கே கேட்கப்பட்ட கேள்வியானது: ''நீங்கள் திராட்சரசமும் பிஸ்கட்டுகளும் எடுப்பது, வியாதியும் நித்திரையும் உங்கள் மீது...'' பாருங்கள் அது... இந்த கேள்வி என்ன என்று நான் நினைப்பதென்னவென்றால், இருக்கின்ற ஒரேயொரு தொழுதுகொள்ளுதல் என்னவெனில், பரிசுத்த ஆவிக்குள் மாத்திரமே, பரிசுத்த ஆவிக்குள் தொழுதுகொள்வது. சரியாக - அதுதான் சத்தியமாகும். நீங்கள் தொழுதுகொள்ள வேண்டியது.... பரிசுத்த ஆவிக்குள் எல்லா தொழுது கொள்ளுதலும், மேலும் பவுல் இங்கே கூற விழைவது என்னவெனில், இதை புசித்து பானம்பண்ணும் முன்னர் நீங்கள் பரிசுத்தஆவிக்குள் இருக்க வேண்டும், இல்லையெனில் உங்களுக்கு தானே ஆக்கினைத் தீர்ப்புவரும்படிக்கு ஆகும் என்பதே (சரியா-?) - நீங்கள் இதைச் செய்யும் முன்னர், இந்த கட்டளையானது கைக்கொள்ளப்படும் முன்னர். 35 இப்பொழுது, அதற்கு இன்னுமாக கூறத்தக்கதாக, இங்கே ஜோசபஸ் என்பவர் எழுதியுள்ள ஒன்றை நான் இங்கே வைத்துள்ளேன். அதில் அவர், ஆதி கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரணத்திற்குப்பிறகு, மனித மாம்சம் தின்பவர்கள் என கருதப்பட்டனர், ஏனெனில் அவர்கள் கர்த்தருடைய சரீரத்தை எடுத்து அதைப் புசித்தனர் என்று எழுதியுள்ளார். அவர்கள் (சீஷர்கள்) அவருடைய கல்லறையத் தோண்டி, அவருடைய சரீரத்தை எடுத்து, அதைத் துண்டுகளாக்கி அதைப் புசித்தனர் என்று அவர்கள் (ஜனங்கள்) நினைத்தனர். இது அவர்கள் இராப்போஜனம் எடுத்ததைக் குறித்ததே ஆகும். பாருங்கள்-? இப்பொழுது, கவனியுங்கள், ஏன் இந்த வேதவசனம் - இங்கே எப்படி பவுல் கூறுகிறான் என்று பாருங்கள். எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து இந்த அப்பத்தில் புசித்து,.... அப்பத்தில் புசித்து. இப்பொழுது, இயேசுதான் ஜீவ அப்பம் என்பதை நான் அறிவேன்; அது உண்மை. ஆனால் இது ஞானஸ்நானத்தைப் போன்றே ஒரு அடையாளம் ஆகும். ஞானஸ்நானம் உங்களை இரட்சிக்காது; நீங்கள் இயேசு கிறிஸ்துவினுடைய மரணம், அடக்கம் உயிர்த்தெழுதலில் விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள் என்பதை சபையாருக்கு சாட்சியாக அறிவிப்பதின் அடையாளம் தான் ஞானஸ்நானமாகும். அது உங்களை இரட்சிக்காது. தண்ணீர் உங்களை இரட்சிக்காது. உங்களை இரட்சிப்பது உங்கள் விசுவாசம் மாத்திரமே. ஆனால் ஞானஸ்நானம் என்பது ஒரு “கட்டளை ஆகும், அது செய்யப்பட வேண்டும், ஏனெனில் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்று கூறிய பிறகு மறுபடியுமாக அப்படி செய்யத் தேவை இல்லை என்று தேவனால் கூறமுடியாது. அதே போன்று இராப்போஜனம் எடுங்கள் என்று கூறிய பிறகு மறுபடியுமாக அதை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அவரால் கட்டளையிட முடியாது. நீங்கள் அதைக் கைக்கொள்ளத்தான் வேண்டும். அது தேவனோடு இருக்கின்ற மாறாத ஒரு கட்டளை ஆகும். 36 என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். இப்பொழுது, உங்களால் காண முடிகிறதா-? கிறிஸ்துவுக்குள்ளாக இல்லாமல், ஆவியில் ஐக்கியங்கொள்ளாதிருக்கின்ற ஒரு கிறிஸ்துவன் இராப்போஜனத்தை எடுக்க முயற்சிப்பதைக்குறித்து தான்; அவன் எடுக்க தகுதியுடையவன் அல்ல. மேலும் அவன் சென்று புகைபிடித்து,பொய் சொல்லி, திருடி, விபச்சாரம் அல்லது அதைப் போன்றதைச் செய்து, அல்லது ஒரு கிறிஸ்தவ ஜீவியத்தை செய்யாமல் இந்த இராப்போஜனத்தை எடுப்பானானால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். அவன் ஜீவிக்கின்ற அந்த ஜீவியத்தை மக்கள் காண்கிறார்கள். பிறகு அவன் உள்ளே வந்து, கிறிஸ்துவின் சரீரம் மற்றும் - மற்றும் மரணத்திற்குரிய இந்த கட்டளையை, ஒழுங்கை எடுத்து, வார்த்தையாகிய கிறிஸ்துவை தன்னுடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டான் என்னும் அடையாளத்தை அவனுக்குள் எடுக்கையில், அங்கே-? இருக்கின்ற அந்த அடையாளத்தை எடுக்கையில், அவன் கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். 37 இன்னும், சில நிமிடங்களில் அந்த அதே கேள்வியை நான் எடுக்கபோகிறேன், நாம் அதை எடுப்போமானால், அது பரிசுத்த ஆவியின் தூஷணத்தின் அதே வரிசையில் வருகிறது. பாருங்கள்-? ஏனெனில் ஏதோ ஒன்றை வெளிப்படையாக பிரசங்கித்து பிறகு நீ செய்யக் கூடாததை செய்வாயானால் நீ ஒரு மாய்மாலக்காரனாகக் காணப்படுகின்றாய். சரி-! இதை நான் முடிக்கட்டும், பிறகு நாம் நிறுத்துவோம். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி உள்ளவர்களுமாய் இருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். நாம் நியாயந்தீர்க்கப்படும் போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். ஆகையால் என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள் (இப்பொழுது கவனியுங்கள்) ...ஒருவனுக்கு பசியிருந்தால்,...... 38 உள்ளே வரவேண்டாம். ஏனெனில், இங்கே மற்றுமொரு வேதவசனத்தில், அவர்கள் இறைச்சியை, இவ்வளவு பானத்தை இன்னும் அதைப் போன்றவற்றை, உள்ளே கொண்டு வந்து, கர்த்தருடைய வீட்டை புசிக்கின்ற இடமாக ஆக்கி, கர்த்தருடைய போஜன பந்தியில் குடித்து வெறித்த நிலையில் இருந்தனர். இங்கே கொரிந்தியர் புத்தகத்தில் அது இருப்பதை நீங்கள் நினைவில் கொண்டுள்ளீர்கள். கர்த்தருடைய போஜன பந்தியில் குடித்து வெறித்திருந்தனர். ஆனால் பவுல் இங்கே கூறுகிறான்: ...நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடி வராதபடிக்கு, ஒருவனுக்கு பசியாயிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம் பண்ணுவேன். (பாருங்கள்) 39 இப்பொழுது, நான் நினைப்பதென்னவெனில் பிஸ்கட் தின்பது... இப்பொழுது, ஒரு பிஸ்கட்டிற்கு பதிலாக வட்ட ரொட்டியை வைக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அது ஒரு பரிசுத்தமான புளிப்பில்லாத அப்பமாயிருக்க வேண்டும் என்றே நான் விசுவாசிக்கிறேன், எகிப்தில் செய்யப்பட்ட அந்த புளிப்பில்லாத அப்பத்தைப் போன்று அது புளிப்பில்லாத பரிசுத்த அப்பமாயிருக்க வேண்டும். அதே போன்று இரத்தமும் குடிப்பதற்கு திராட்சைப் பழச்சாற்றை உபயோகிக்க கூடாது, அது திராட்சை ரசமாக இருத்தல் அவசியம். திராட்சை பழச்சாறானது (Grape Juice) பழையதாகும் போது புளிப்பாகும், பிறகு கெட்டுப்போகும். ஆனால் திராட்சை ரசமோ (Wine) பழையதாகுகையில் இன்னுமாக சிறப்பையும் வீரியத்தையும் பெறும்; அது தன்னுடைய சக்தியை இழக்காது. கிறிஸ்துவின் இரத்தமும் புளித்து கெட்டுப்போகாது; அது பழையதாகையில், இன்னுமாக அது வீரியமடைந்து, ஒரு விசுவாசிக்கு நாட்கள் கடந்து செல்லச் செல்ல சிறப்பானதாக இருக்கும். ஆகவே இது திராட்சரசமும் அப்பமும் தான். இராப்போஜன அப்பமானது தங்களைத் தாங்களே அர்ப்பணம் செய்து, தேவனுக்காகத் தங்களையே அர்ப்பணித்துள்ள மக்களால் தான் செய்யப்பட வேண்டும். பாவிகள் சாபமிட்டு கூச்சல் போட்டு அசுத்தமானதை செய்து கொண்டிருந்த ஒரு சபைக்கு ஒருமுறை நான் சென்றேன், அவர்கள் இவ்வாறு செய்து கொண்டே ஒரு பழைய ரொட்டி துண்டை எடுத்து ஒருபழச்சாறில் (Grape Wine) தொட்டு சாப்பிட்டனர். என்னைப் பொறுத்தவரை அது முட்டாள்தனமான ஒன்றாகும். நான் விசுவாசிப்பதென்னவென்றால் அது சரியாக வேதாகமம் கூறியுள்ளவாறே அதேவிதமாகவே இருக்கவேண்டும், மேலும் வேதாகமத்திலிருந்து ஒரு இம்மியளவு கூட அது பிசகாமல், சரியாக அதேவிதமாகவே தரித்திருக்க வேண்டும். கேள்வி:79 இப்பொழுது, கேள்வி-! சகோதரன் பிரன்ஹாம், ஒருகாலத்தில் சாத்தான் (வானத்தில் இருந்தவனாக) பிறகு வெளியே துரத்தப்பட்டானா, அவனும் அவனுடைய தூதர்களும் கீழே பூமிக்கு வந்தார்களா, அல்லது அது யோவான் பத்ரு தீவில் கண்ட தரிசனத்தைப் போன்ற ஒன்றா இது-? இதை ஏன் நான் கேட்கிறேனென்றால், அது ஒரு தரிசனமாகும் என்று எனக்கு கூறப்பட்டு உள்ளது. 40 யோவான் அதை ஒரு தரிசனமாகக் கண்டான், ஆனால் அதுவோ உண்மையாகவே நடந்த ஒரு சம்பவமாகும். நீங்கள் ஏசாயா-14:12க்கு திருப்புவீர்களானால். இப்பொழுது, இவை மெதுவாகச் செல்கின்றன. ஆனால் எனக்கோ இவையெல்லாம் - இவையெல்லாம் பாடங்களாயுள்ளன. இது ஏதோ ஒரு... ஒருக்கால் நீங்கள் நல்லது, இப்பொழுது அது எனக்கு தேவைப்படவில்லை'' என்று நினைக்கலாம். தேவனுடைய வார்த்தையின் பேரில் பரிசுத்த ஆவியானவர் எப்படியெல்லாம் போஷிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாது. போஷிக்கப்படுதல் - அது வார்த்தையினாலேயே இருக்க வேண்டும், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையின் பேரில் மாத்திரமே போஷிக்கின்றார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? வேதம் அவ்வாறு கூறுகின்றது, ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். அது சரியே-! ஏசாயா 14ஆம் அதிகாரம், இப்பொழுது நாம் 12ஆம் வசனத்திலிருந்து துவக்கப்போகிறோம் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது லூசிபரைக் குறித்து வாசிப்போம். அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, ஓ லூசிபர் (ஆங்கில வேதத்தில் உள்ளபடி - தமிழாக்கியோன்) ...நீ வானத்திலிருந்து விழுந்தாயே-!.... (வானத்திலிருந்து விழுந்தவன் - பரலோகத்தைச் சார்ந்த ஒரு தூதன்) அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, ஓ, லூசிபர், நீ வானத்திலிருந்து விழுந்தாயே-! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே நடந்து - விழ வெட்டப்பட்டாயே-! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும் நான் மேகங்களுக்கு மேலாக உயரத்தில் ஏறுவேன்; உன்னதமாணவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆகவே நீங்கள் பாருங்கள், அது ஒரு தரிசனம் அல்ல. நிச்சயமாகவே, லூசிபர் வானத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டான். 41 இப்பொழுது, ஒரு நிமிடம் புதிய ஏற்பாடு, லூக்கா 10:18ற்கு திருப்பி இயேசு என்ன கூறினார் என்பதைப் பார்ப்போம். லூக்காவின் புத்தகத்தில், இந்த கேள்விகளை புரிந்துகொள்ள யாசிப்பவர்கள், இப்பொழுது உங்கள் வேதாகமங்களை லூக்கா10:18க்கு திருப்புங்கள், அவர்களை அவர் நோக்கி, (இயேசு பேசுகின்றார்) சாத்தான் மின்னலைப் போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். பாருங்கள், சாத்தான் தேவனுடைய மூல பிரதான தூதனாவனன். ஒரு சமயத்தில் அவன் பரலோகத்தில் வாசம் செய்தான். தேவனுக்கடுத்ததாக வானங்களில் அவன் ஒரு சமயத்தில் மிகப்பெரிய நபராக இருந்தான். தேவனுடன் ஐக்கியமாக அவன் தேவனுடைய வலதுகரமாக விளங்கினான், ஆகவே அவன் தன் இருதயத்தில் மேட்டிமை கொண்டவனாக ஆனான். 42 இன்றைக்கும் மக்கள் அந்த விதமாகத்தானே ஆகின்றார்கள்-? தேவன் ஒருவனை ஆசீர்வதித்து அவன் பேரில் சிறிது நம்பிக்கையை வைப்பாரானால், பிறகு அவன் எல்லாம் தெரிந்த ஒருவன் என தன்னை நினைத்துக்கொள்கிறான். பிறகு அவன் ஒரு ... அவன் ஒரு ஸ்தாபனத்தையோ அல்லது வித்தியாசமாகத் தென்படுகிற ஏதோ ஒன்றையோ அவன் செய்ய ஆரம்பித்துவிடுவான். ''ஓ லூசிபர் நீ வானத்திலிருந்து விழுந்தாயே-!'' அது தம்மால் தொடர்பு கொள்ளக்கூடிய, ஒன்றைச் செய்ய தேவன் அழைக்கும் வரை தாழ்மையுள்ளவனாக, கீழ்ப்படிதலுள்ளவனாக அப்படியே தரித்திருக்கின்ற, தேவனால் ஆசீர்வதிக்கப்பட இயலுகின்ற வகையில் உள்ள ஒரு மனிதன், மேலும் தன்னை ஒரு தூதனாகவோ அல்லது தேவனாகவோ பாவிக்காமல், இன்னுமாக தன்னைத்தான் ஒரு மனிதனாகவே பாவிக்கின்ற ஒரு மனிதனை கண்டெடுக்க தேவன் மிகவுமாக பிரயாசப்படுகின்றார். அந்த மனிதன் ஆசீர்வதிக்கப்பட்ட, உடனே, தனக்கு ஒன்று அளிக்கப்பட்டவுடன், அவன் ஒரு தேவனாக ஆக விரும்புகிறான்; ஒரு தூதனாக ஆக விருப்பம் கொள்கிறான். அவன் ஒரு மகத்தான மனிதனாக ஆக விரும்புகிறான். ''நான் செய்வது தான், அது .... நான் மற்றும் என் மற்றும் என்னுடையது .... அது தவறான ஒருமனப்பான்மையாகும். தம்மால் ஆசீர்வதிக்கப்படும் வகையில் உள்ள, ஆசீர்வாதங்கள் அவன் மேல் ஊற்றப்பட்டு பிறகு - பிறகு இன்னும் அதிகமாக அவரால் ஆசீர்வதிக்கப்பட்டு, இன்னும் சிறியவனாக ஆகின்ற ஒரு மனிதனை தேவன் கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டேயிருக்கிறார். ஆகவே நீ ஒன்றுமில்லாதவனாக ஆகும் வரை தேவனிடமிருந்து ஒன்றும் உன்னால் இன்னுமாக பெறமுடியாது. நீ உன்னைத் தானே சிறியவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தன்னை தானே உயர்த்திக்கொள்கிறவனை தேவன் தாழ்த்தி விடுகின்றார். தன்னைத் தானே தாழ்த்திக்கொள்ளுகிறவனை தேவன் உயர்த்துகின்றார். நீ பெரியவனாக ஆகும் முன்னர், நீ சிறிவனாக ஆகவேண்டும். அப்போது உன்னாலேயே பெரியவனாக இருக்க முடியாது; உனக்குள்ளாக தேவன் பெரியவராக இருக்கின்ற வகையில் தான் நீ பெரியவனாக இருக்க முடியும். பாருங்கள்-? 43 ஆகவே இன்றைக்கு லூசிபர் பூமியின் மேல் இருந்து, உலகத் தோற்றத்திற்கு முன்னே அவன் ஆரம்பித்த அந்த அதே நோக்கத்தை நிறைவேற்றத்தக்கதாக சபைக்குள் கிரியை செய்து முயற்சித்துக்கொண்டிருக்கிறான். லூசிபர் வானத்திலிருந்து வெளியே உதைத்து தள்ளப்பட்டான். சரி. இதைக்குறித்து வேறொன்றும் உள்ளதென்று நான் நம்புகிறேன், எசேக்கியல் 28 ஆம் அதிகாரம், 12வது வசனம். எசேக்கியல் 28 : 12 என்ன கூறுகிறதென்று நாம் பார்ப்போமாக. ஆகவே இதை நாம் ஆராய்கையில், கர்த்தர் உரைக்கிறதாவது என்ன என்பதை நாம் காண்கையில், அப்பொழுது உண்மையாகவே அவன் வானத்திலிருந்து விழுந்தானா அல்லது அது ஒரு தரிசனம்தானா என்று நாம் அறிந்து கொள்ளலாம் - 28 மற்றும் 12. சரி. 28:12, இதைத்தான் குறித்து வைத்துள்ளேன் என்று நான் விசுவாசிக்கிறேன். சரி. இங்கே நாம் ஆரம்பிப்போம். இப்பொழுது, இங்கே இது ஒரு மகத்தான காரியமாகும்; இதன் பேரில் சிறிது பிரசங்கிக்க நமக்கு சமயமிருந்தால் நலமாயிருக்கும் என்று விரும்புகிறேன். (புரிகின்றதா-?), ஏனெனில் உண்மையாகவே ஏதோ ஒன்று உள்ளது. 44 இப்பொழுது, வானத்தில் லூசிபர் தன்னைத் தானே உயர்த்திக்கொள்ள முயற்சித்ததையும், தன்னுடைய எஜமானனுக்கும் மேலாக சிறிது பெரியவனாக இருக்க வேண்டும் என்று எண்ணி, இதன் பேரில் அடிப்படையாகக் கொண்டு பேச முற்பட்டேன். ஆகவே அவன் மிகாவேலுக்கு துரோகம் செய்து தனக்காக வடக்கில் ஒரு பெரிய இராஜ்யத்தை உண்டாக்கிக் கொண்டு கீழே வந்தான். இப்பொழுது அவனும் அவனுடைய தூதர்களும் வெளியே தள்ளப்பட்டார்கள். அந்த நபர் கேட்டது வெளிப்படுத்தல்.... அது வெளிப்படுத்தல் 12, பத்மு தீவில் கண்டது. ஆனால் இப்பொழுது இங்கே 12 வது வசனத்தை கவனியுங்கள், அவன் மனிதனுடைய இராஜ்யத்தில் எப்படி அவன் உட்கார்ந்துள்ளான் என்று கவனித்துப் பாருங்கள். வானத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு தேசத்தையும் பிசாசானவன் தன் கட்டுக்குள்வைத்திருக்கிறான் என்பதை இங்கே எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அமெரிக்காவை இயக்கிக் கொண்டிருப்பது பிசாசுதான். அமெரிக்க ஐக்கிய நாட்டினுடைய அரசாங்கம் பிசாசுதான். ஜெர்மனியின் அரசாங்கம் பிசாசுதான். வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாட்டையும் இயக்கிக் கொண்டிருப்பது பிசாசுதான். அவன் ஒவ்வொரு நாட்டையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறான் என்று வேதாகமம் கூறுகின்றது. மத்தேயு 4ஆம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். சாத்தான் இயேசுவை உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவருக்கு காண்பித்து, அவைகள் தன்னுடையவை என உரிமை கோரி, ''நீர் என்னை பணிந்துகொண்டால் இவற்றை உமக்குத் தருவேன்“ என்று கூறினான். ''சாத்தானே, நீ பொய் சொல்கிறாய்'' என்று இயேசு கூறவேயில்லை. அவையெல்லாம் அவனைச் சார்ந்திருந்தன என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் வெளிப்படுத்தல் புத்தகத்தில் வானங்களே, பூமியே களிகூருங்கள், உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தரும் அவருடைய கிறிஸ்துவுக்கு முரிய ராஜ்யங்களாயின. அவர் பூமியின்மேல் ராஜ்யபாரம்பண்ணுவார்'' என்று கூறப்பட்டுள்ளது. ஆயிர வருட அரசாட்சியில் எல்லா அரசாங்கங்களும் ராஜ்யங்களும் உடைந்து போகும் என்றும், அவைகளெல்லாம்வற்றின் மேலும் அவர் தேவனும், அதிபதியுமாயிருப்பார் என்றும் இயேசு அறிந்திருந்தார். அவையெல்லாவற்றிற்கும் சுதந்திரவாளி அவர் தான் என்று அறிந்திருந்தார், ஆதலால், அவர் சாத்தானிடம் ''அப்பாலே போ சாத்தானே-!'' என்றார், ஏனெனில் தாம் செய்ய வேண்டியது என்ன என்பதை அவர் அறிந்திருந்தார். 45 இப்பொழுது இதைக் கவனியுங்கள், இந்த தீர்க்கதரிசி எசேக்கியேல் மேலிருந்த கர்த்தருடைய ஆவியானவர், இந்த ராஜாவிடம் பேசிக்கொண்டிருக்கவில்லை, ஆனால், அந்த ராஜாவிற்குள்ளிருந்த ஆவியிடம் பேசிக் கொண்டிருந்தான். இதை கவனியுங்கள். எப்படி சபையானது மனிதனுடைய ஸ்தாபனங்களை எடுத்துக்கொண்டதினால் தவறான பாதையில் சென்றுவிட்டது என்று நான் இன்று காலை வேத வசனங்களில் காண்பித்தது உங்களுக்கு நினைவிலிருக்கும். அதே காரியம் தான், இஸ்ரவேலானது தேவனை தன்னுடைய ராஜாவாக இராதபடி புறம்பாக்கி, சவுலை ராஜாவாக கொண்டிருக்க விரும்பி பாதையை விட்டகன்றது. பிறகு அவர்களுடைய உண்மையான ராஜாவாகிய இயேசு வந்தபோது, அவரை அவர்கள் அறியாதிருந்தனர், ஏனெனில் அவருடைய - அவருடைய பிரசங்கமும் அவருடைய உபதேசமும், பூமிக்குரிய ராஜாக்களைவிட மிகவும் வித்தியாசமாக காணப்பட்டு அவரை அவர்கள் அறியாமல் போனார்கள். இன்றைக்கும் பரிசுத்த ஆவியானவராகிய சபையின் ராஜா, அவர் இங்கிருக்கையில், மக்களை புதுப்பிக்கத்தக்கதாக, அவர்களுக்கு புதிய பிறப்பை அளிப்பதற்காக அவர் சபைக்குள் வருகையில், அது இந்த ஸ்தாபனங்கள் மற்றும் அமைப்புகளைக் காட்டிலும் மிகவும் வித்தயாசமாகக் காணப்படுவதால் இந்த மக்கள் ஆ, அவர்கள் எனக்கு பரிசுத்த உருளையரைப் போன்று காணப்படுகின்றர் என்கின்றனர். பாருங்கள்-? 46 அது உனக்கு எந்தவிதமாகத் தென்படுகிறது என்றல்ல, அதைக் குறித்து தேவனுடைய வார்த்தை என்ன கூறுகின்றது என்பது தான். பெந்தெகொஸ்தே நாளின் போது என்ன ஆயிற்று, அது எந்தவிதமாக தென்படுகிறது-? மற்ற சமயங்களில் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றபோது; அது எந்தவிதமாகத் தென்படுகிறது-? ஸ்திரீகளும், புருஷர்களும் கன்னி மரியாள் மற்றும் அவர்களெல்லாரும் குடித்து வெறித்த மனிதனைப் போன்று தள்ளாடி, பரியாச உதடுகளாலும், மற்றும் அந்நிய பாஷைகளாலும் கூச்சலிட்டு, புரண்டு, ஒரு பைத்தியக்கார கூட்டத்தைபோன்று சத்தமிட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு தாங்களே மரித்துக்கொண்டிருந்தனர். அப்போது பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள்ளாக வந்துகொண்டிருந்தார். அப்பொழுது அவர்கள் உலகத்தை தீப்பற்றிக் கொள்ளச் செய்தனர். இன்றைக்குள்ள தேவையென்னவெனில் தங்களுக்குத் தாங்களே மரித்து, தங்களுக்கு தாங்களே அழுகிப்போய், ஒவ்வொரு காரியத்தையும் பின்பாகச் சுட்டெரித்து எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கு சரணடையச் செய்யும் மனிதர்தான். 47 இப்பொழுது, அந்த ராஜாவுக்குள்ளிருந்த பிசாசிடம் பரிசுத்த ஆவியானவர் பேசுவதை கவனியுங்கள். இந்த ராஜாவை கட்டுக்குள் வைத்திருந்த இவன் யார் என்பதை கவனியுங்கள். அங்கே கீழ்த்தரமான நிலையில் காணப்பட்ட ஆடைகளை அணிந்திருந்த அந்த பெண்கள் கூட்டத்தை, அந்த பெண்ணைப் பற்றி என் மனைவி கூறினதை நான் இக்காலை கூறினது உங்களுக்கு நினைவிலிருக்கிறதா-? சரியா-? ''அவர்கள் சரியான மனநிலையில் இல்லாமல் இருந்திருக்கக்கூடும். ஒரு மனநிலை சரியாயில்லாத ஒரு பெண்தான் அந்த விதமாக தன் நிர்வாணத்தை வெளிக்காட்டுவாள் என்று கூறினாள். நான், ''தேனே, அவள் ஒரு அமெரிக்க பெண்; அவ்வளவே தான். இங்கே அது வாடிக்கையாய் நடக்கிற ஒன்றுதான்“ என்றேன். பாருங்கள், அவர்கள் தங்கள் கல்வியறிவின்படி செயல்படுகின்றனர். நீங்கள் அறிவின்படி, உங்கள் சிந்தையின்படி செயல்படு வீர்களானால், நீங்கள் பிசாசினால் இயக்கப்படுகிறீர்கள். பிசாசானவன் மனிதனின் மூளையை எடுத்துக்கொண்டான், ஆனால் தேவனோ மனிதனின் இருதயத்தை எடுத்துக்கொள்கிறார். நீங்கள் ஏதோ ஒன்றைக் காணும்படியாக பிசாசானவன் செய்வான். நீங்கள் ''நல்லது, அது சரிதான், அது சரிதான், யோசியுங்கள், சிந்தித்துப் பாருங்கள்'' என்று கூறுகிறீர்கள். ஆனால் வேதாகமம் நம்முடைய யோசனைகளை புறம்பாக்கி நம்மால் காணமுடியாதவைகளை விசுவாசத்தினாலே நாம் விசுவாசிக்கிறோம். தேவன் மனித இருதயத்தின் மீது வருகையில் அதைத் தான் செய்கின்றார். 48 ஏதேன் தோட்டத்திலே பிசாசானவன் மனிதனுடைய மூளையை எடுத்தான் : தேவனோ அவனுடைய இருதயத்தை எடுத்தார். அந்த மனித இருதயம் தான் தேவன் வாசம்பண்ணுகிற தேவனுடைய சிங்காசனமாக இருக்கின்றது. ஆகவே இப்பொழுது அது அறிவு பூர்வமாக ... நிச்சயமாக, தேவனால் பிறந்த எந்த ஒரு மனிதனோ அல்லது பெண்ணோ , தாங்கள் எந்த இராஜ்யத்திலிருந்து வந்துள்ளனரோ அந்த விதமாகவே நடந்துகொள்வார்கள். அல்லேலூயா அது என்னை சத்தமிடச் செய்கிறது. ஏன்-?ஏனெனில் நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் வந்திருப்பதனால், நீங்கள் பாவத்தை வெறுத்து, மேலும் நீங்கள் தேவனை நேசிக்கிறீர்கள்; ஆதலால் நீங்கள் மரித்தாலும் அல்லது மரிக்காமலிருந்தாலும் அதை எதிர்த்து நிற்பீர்கள். அது தவறாயிருப்பதால், அதை தவறு என்று கூறி அதை எதிர்த்து நின்று தேவனுக்கு முன்பாக நீங்கள் உத்தமராய் நடப்பீர்கள். அது உங்களுடைய ஆவி , உங்களுக்குள் இருக்கின்ற அந்த ஜீவனானது வேறொரு இடத்திலிருந்து வந்திருக்கிறது என்று காண்பிக்கின்றது, அங்கே அது பரிசுத்தமாகவும், சுத்தமாகவும், கற்புடையதாகவும், கறைபடாததாகவும் இருக்கிறது. 49 தெய்வீக சுகமளித்தல்-?'' என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக-! தெய்வீக சுகமளிப்பவர் எங்கே இருக்கின்றாரோ அங்கிருந்து தான் என்னுடைய ஆவியும் வந்திருக்கிறது. தெய்வீக சுகமளித்தலின் தேசத்திலிருந்து தான் நாம் வந்துள்ளோம். ஆமென்-! நீங்கள், ''தேவன் இருந்த இடத்திலிருந்தா'' எனலாம். நிச்சயமாக, தேவன் இருந்த இடத்திலிருந்துதான் வந்துள்ளோம். நாம் ஆபிரகாம் ஈசாக்கைப் போல பரதேசிகளும் அந்நியர்களுமாயிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவரின் நிழலாட்டம் அவர்கள் மேல் வந்தபோது அவர்கள் அந்த தேசத்தினூடாகச் சென்று தாங்கள் பரதேசிகளும் அந்நியர்களுமென்று அறிக்கை செய்தனர். தேவன் தாமே கட்டி உண்டாக்கின அந்த நகரத்தை அவர்கள் தேடிக்கொண்டிருந்தனர். இப்பொழுதோ, அது நமக்குள் ஜீவிக்கின்றது என்பதற்கான ஆதாரத்தை நிச்சயத்தை நாம் பெற்ற பிறகு, எவ்வளவாக நாம் பரதேசிகளும் அந்நியர்களுமாயிருந்து, உலகத்தினூடாக நடந்து, தீய காரியங்களிலிருந்து நம்முடைய தலைகளை திருப்ப வேண்டியவர்களாயிருக்க வேண்டும், ஏனெனில் நாம் வேறொரு தேசத்தைச் சார்ந்தவர்கள், அப்பாற்ப்பட்ட மக்கள். நிச்சயமாக-! 50 இப்பொழுது நாம் எசேக்கியேல் 28:12 வாசிக்கையில் பிசாசானவன் இந்த உலகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை கவனியுங்கள். மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக் குறித்துப் புலம்பி, அவனை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது ..... (இப்பொழுது கவனியுங்கள்: அந்த ராஜாவிற்குள்ளே இருந்த அந்த ஆவியிடம் அவர் பேசுகிறார். புரிகின்ற தா-?). கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம், நீ ஞானத்தால் நிறைந்தவன்...... பூரண அழகுள்ளவன். (சாத்தான், பிரதான தூதர்களிலேயே மிகவும் அழகாக சாத்தான் காணப்படுவதை பார்த்தீர்களா-?) நீ .... ஏதேனில் .... தீருவின் ராஜா அந்த நேரத்தில் ஏதேனில் இருந்திருக்க மாட்டான், ஏனெனில் அது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒன்றாகும். பாருங்கள்-? “நீ ஏதேனில் இருந்தவன்'', அவர் பேசிக்கொண்டிருப்பது யாரிடம்-? அந்த ராஜாவிற்குள்ளிருந்த சாத்தானிடம் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அல்லேலூயா சகோதரனே, நான் பக்தி வசப்படுகிறேன். அப்போது.... 51 அப்படியானால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் கிரியை நடப்பிக்கப்படுகிற மக்களை தூஷித்து ஏளனம் செய்கிற மக்களைக் குறித்தென்ன-? இப்படிப்பட்ட மக்களை அவர்கள் பரிகசிக்கும்போது அவர்கள் பரிசுத்த ஆவியை தூஷிக்கிறார்கள், அது முற்றிலும் மன்னிக்கப்பட முடியாத ஒன்றாகும். நீ அந்த மனிதனைக் குறித்துப் பேசவில்லை, அந்த மனிதனுக்குள் அசைவாடிக் கொண்டிருக்கும் ஆவியானவரிடம் தான் நீ பேசிக்கொண்டிருக்கிறாய். நாம் ஒருவருக்கொருவர் கனம்பண்ணி, ஒருவரையொருவர் நேசித்து, ஒருவருக்கு ஓருவர் புத்தி சொல்லி, ஒவ்வொருவரைக் குறித்து நன்மையானதையே பேசுங்கள். இதைத்தான் நாம் செய்ய வேண்டும். இப்பொழுது, இதைக் கவனியுங்கள். சரி. ... நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம், நீ ஞானத்தால் நிறைந்தவன்.... பூரண அழகுள்ளவன் நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகல வித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது. 52 இதோ லூசிபர். ஒரு காலத்தில் அவன் ஏதேனில் வாசம் செய்தான். இப்பொழுது, இன்னும் ஒருநிமிடத்தில் நாம் அந்த கேள்வியைப் பார்க்கப்போகிறோம், ஏதேனில் லூசிபர், ஏனெனில், மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய சர்ப்பத்தின் வித்தைக் குறித்ததானது இங்கே எங்கேயோ உள்ளது. நான் அதைக் கடைசியில் பார்க்கலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவன், பிசாசானவன் வானத்திலிருந்து உதைத்து வெளியே தள்ளப்பட்டான். அவன் எந்த நோக்கத்திற்காக பரலோகத்தில் பிரயாசப்பட்டானோ, அதை, அந்த நோக்கத்தை, அவன் பூமியின் மீது வந்த பிறகு, அதை நிறைவேற்றிக் கொள்ள அவன் தன்னால் இயன்ற அளவிற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவன் ராஜாக்களிடமும் அதிபதிகளிடமும் செல்கிறான். அவன் அவர்களை அடைந்தவுடன், பிறகு நேராக சபைக்கு வந்து மக்களை அல்லது பிரசங்கியை அடைகின்றான். அப்பொழுது பிரசங்கியிடமிருந்து நேராக சபையார் மத்தியில் சென்று அந்த சபையாரை அந்த அதே பாதிப்பிற்குள், செல்வாக்கிற்குள் கொண்டு வருகிறான், அந்த அதே பிசாசானவன் அதே காரியங்களைச் செய்கிறான். ''உனக்குத் தெரியுமா, நீ ஒரு பிரஸ்பிடேரியன், நீ ஒரு பரிசுத்த உருளையனாக இருக்க முடியாது. நீ இது, அது அல்லது மற்றவனாக இருக்கையில் அவர்கள் மத்தியில் இருந்து கொண்டு, உன்னை நீயே ஏன் அவமானம்படுத்திக்கொள்ள வேண்டும். ஏன், அந்த தெருவில் இருக்கின்ற அந்த பழைய கூடாரங்களில் அல்லது சபைகளில் உட்காருவதைவிட சிறந்தது உனக்குத் தெரியுமே என்ன, அந்த மக்களுக்கு மனநிலை பாதித்து பித்து பிடித்திருக்கிறது. ''இல்லை, இவர்கள் அவ்விதம் இல்லை. இல்லை, அவர்கள் அவ்விதமாக இல்லை; அவர்கள் தங்கள் இருதயத்தின்படியே உள்ளனர்; அவ்வளவுதான். அவர்கள் மனநிலை பாதிக்கப்படவில்லை, அவர்கள் தங்கள் இருதயத்தின்படியே ஆட்கொள்ளப்பட்டுள்ளனர். தேவன் அவர்களுடைய இருதயத்தில் வாசம் செய்கிறார், ஆதலால் அவர்கள் அவருக்கு சொந்தமான ஜனம், ராஜரீகமான ஆசாரியக் கூட்டம், ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகிறவர்கள். அதை உணர்ந்தாலும் அல்லது இல்லையென்றாலும் அவர்கள் தங்கள் உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலிகளைக் செலுத்துகின்றனர். அந்தப் பாடலை எழுதினவன் ''சில சமயங்களில் அவரை நான் காண்பதில்லை, நான் அவரை நம்புகிறேன், அவரைத் துதிக்கிறேன்'', என்றான். 53 “நல்லது, நான் சபைக்குச் செல்வேன், அதை நான் உணர்ந்தால் நான் கர்த்தரைத் துதிப்பேன்” என்று நீங்கள் கூறலாம். நல்லது இப்பொழுது ஒரு ஆசாரியன் பலியைச் செலுத்த விருக்கிறான். சபையார் தான் ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகிற தேவனுடைய பிரதான ஆசாரியர்கள் ஆவர்; அதுதான் உங்கள் உதடுகளின் கனிகளாகிய தேவனுக்கான ஸ்தோத்திரங்கள். நீங்கள் சென்று, “நல்லது, நான் அதை உணர்ந்தேன், நான் சென்று யாருக்காவது சாட்சி சொல்லுவேன்'' என்று கூறலாம் . நல்லது, எப்படியாயினும் அதைச் செய்யுங்கள்-! ஒரு பலியைச் செலுத்த சகோதரனே, நீ ஒரு பிரதான ஆசாரியனாயிருந்தால், நீ அதைச் செய்யவேண்டுமா அல்லது வேண்டாமா என்று உணர்ந்தாலும் சரி, அது உன்னுடைய இருதயத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. நீ சென்று எப்படியாயினும் அதைச் செய், ஏனெனில் நீ ஒரு பலியைச் செலுத்த வேண்டியவனாக இருக்கிறாய், செய்வதற்கு கடினமான ஒன்றுதான். எப்படியாயினும் அதைச் செய், ஏனெனில் தேவன் இந்த இருதயத்தில் வாசம் செய்வதால் நீங்கள் ஒரு ஆவிக்குரிய ஆசாரியத்துவம் உடையவர்கள்; தேவனுக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுக்கும் ராஜரீக மக்கள். 54 இப்பொழுது, நீங்கள் சாத்தானைச் சார்ந்தவர்களாயிருந்தால் அந்த மக்களை விட சிறிது சிறந்தவர்கள் நீங்கள் தான் என எண்ணுவீர்கள். இப்பொழுது, எது சரியென நீங்கள் எப்படி அறிந்து கொள்ளப்போகிறீர்கள்-? வேதவாக்கியங்களின்படி அதை எடுங்கள். ஒரு மனிதன் தேவனால் பிறந்தவனாக இருப்பானானால், எழுதப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையையும் அவன் விசுவாசிப்பான், இன்றைக்கு அவர் மகத்தானவராக இருப்பது போல என்றென்றும் அவர் இருப்பார் என்றும், அவர் மாறாதவர் என்றும், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்றும் அவன் கூறுவான். அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தால், பெந்தெகொஸ்தே நாளில் அவர் அளித்த அதே பரிசுத்த ஆவியை அவன் பெற்றிருக்கிறான், அதேவிதமாக அது அவனை கிரியை நடப்பிக்கச் செய்து அதே காரியங்களை அவன் செய்யும்படிக்குச் செய்யும். அவன் தேவனுடைய ஆவியினால் பிறந்திருப்பானானால், மாற்கு 16ல் இயேசு,''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்“ என்று கூறினார். உண்மை-! ஆகவே அவன் ”நான் ஒரு விசுவாசி என்று கூறி, அந்த அடையாளங்கள் அவனைப் பின் தொடரவில்லையெனில், அவன் ஒரு பாவனை விசுவாசியாக இருக்கிறான், ஒரு விசுவாசி அல்ல. 55 மூன்று வகையான மக்கள் உள்ளனர், ஒன்று விசுவாசி , ஒன்று பாவனை விசுவாசி , மற்றும் ஒரு அவிசுவாசி. இந்த மூன்று வகையினர் மட்டுமே உள்ளனர். அநேக பாவனை விசுவாசிகள் உள்ளனர், அநேக உண்மையான விசுவாசிகள் இருக்கின்றனர்; அநேக அவிசுவாசிகளும் இருக்கின்றனர். ஆனால் நீ ஒரு உண்மையான விசுவாசியாய் இருப்பாயானால், இயேசு, 'விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்கள் மேல் அவர்கள் காலை எடுத்து அடியெடுத்து வைக்க நேரிட்டாலும் (சகோதரன் இவான்ஸ்) அது அவர்களுக்கு தீங்குசெய்யாது. அவர்கள் வியாதியஸ்தர் மேல் தங்கள் கைகளை வைப்பார்களானால் அவர்கள் சொஸ்தமாவார்கள்-!'' என்று கூறினார். ஓ, தேவனுடைய வார்த்தை அவ்வளவு உண்மையானது. அதிலிருந்து எதையும் எடுத்துப்போட நமக்கு எந்த உரிமையும் கிடையாது. அந்த வார்த்தையோடே எதையாகிலும் எடுத்துப்போட்டால் அல்லது கூட்டினால், அவனுடையது ஜீவ புத்தகத்திலிருந்து எடுத்துபோடப்படும். தேவன் மிகவும் பரிபூரணமுள்ளவர், ஆதலால் ஒவ்வொரு வார்த்தையும் பரிபூரணமாயிருந்து, ஒவ்வொரு வார்த்தையும், தேவனுடைய ஒவ்வொரு கட்டளையும் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தல் வரை அதேவிதமாக இருக்க வேண்டும். ஆனால் நீங்களோ அதைக் குறித்து இங்கே ஏதாவதொன்றைக் கூறுவீர்கள் அல்லது சிறிது மாற்றிவிடுகிறீர்கள். 56 ஒரு நாள் நான் சகோதரன் சார்லி மற்றும் சகோதரன் உட் அவர்களுடன் ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தேன்; நாங்கள் கெண்டக்கியில் வேட்டையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் ஒரு துப்பாக்கியுடன் வேட்டையாடினோம். நான் .... சகோதரன் சார்லி சகோதரன் உட் அக்காலை தங்கள் வேட்டையை சுட்டிருந்தனர். சுமார் 50 கெஜம் தூரத்தில் அந்த பெரிய இடம், அணிலைப் போன்று பெரிய இடத்தில் ஒரு இலக்கை சுட்டுக் கொண்டிருந்தனர். ''அதுசரி“ என்று அவர்கள் கூறினர். நான் அங்கு சென்றேன். நான் 50 கெஜத்தில் ஆணி அடித்துக் கொண்டிருந்தேன். நான் அணிலின் கண்ணை சரியாக சுடாமல் அதன் கன்னத்தில் சுட்டு விட்டேன். நான் “அது சரியல்ல; என் துப்பாக்கி பழுதடைந்தது” என்றேன். நான் நாள் முழுவதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அடுத்த மாலையில் நான் சீக்கிரமாகச் சென்றேன். அநேக் குண்டுகளைச் சுட்டுப் பார்த்தேன். நான்... நான் வலதுபக்கம் அதை அங்குலத்திற்கு சிறிது நான் சுட்டேன். ஏன், அது அந்த அணிலின் தலையில் எப்படியாவது சுட்டுவிடும். 57 ஆகவே சார்லி மற்றும் அவர்களும் அடுத்த நாள் காலை அங்கு இருந்தனர், துப்பாக்கிகள் சுட்டுக்கொண்டிருந்தன, அணில்களை சுட்டுக் கொண்டிருந்தன, நானோ ஒரு மரத்தின் பின்பாக உட்கார்ந்து கைகளைப் பிசைந்து “ஓ, என் துப்பாக்கிக்கு என்ன ஆயிற்று-?'' என்று கூறிக் கொண்டிருந்தேன். நான் மிகவும் வெட்கப்பட்டு, முழங்காலிட்டு, ”ஆண்டவராகிய தேவனே, எனக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை. நீர் ஏன் இவ்வாறாக கவலைப்படும்படிக்கு விட்டு விட்டீர்-? நான் ஏன் இவ்வாறு இருக்க வேண்டும்-? அங்கே அவர்கள் அணில்களை சுட்டுகொண்டிருக்கின்றனரே, தங்களால் முடிந்தவரை வேட்டையாடிக் கொண்டு இருக்கின்றனரே. அவர்கள் ஏற்கெனவே அநேக அணில்களை வேட்டையாடி விட்டனர். ஆனால் நானோ இங்கே மரத்தின் பின்னால் உட்கார்ந்து கொண்டு என் கையை பிசைந்துக் கொண்டு 'என்னுடைய - என்னுடைய துப்பாக்கி ஐம்பது கெஜத்திற்கு கூட சுடவில்லையே' '' என்று வியந்து கொண்டிருந்தேன். அங்கே ஒரு வெட்டப்பட்ட மரத்துண்டருகே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தேன் . அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் வந்தார், ஒரு சத்தத்தில் அல்ல, ஆனால் வெளிப்பாட்டில் வந்து, “ஒரு நோக்கத்திற்காகவே நான் உனக்கு அந்த விதமாக நேரிடச் செய்தேன்'' என்றார் 58 என்ன-? வேதாகமம் இங்கே ஒன்றைக் கூறும் போது, சபையானது “பரிசுத்த ஆவி அங்கே இருக்கின்ற அந்த குழுவிற்கு மாத்திரம் தான்” என்று கூறினால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது; சபை அவ்விதமாக கூறுகிறது; வேதாகமமோ ''விரும்புகிறவன் எவனெவனோ“ என்று கூறுகிறது. அது இலக்கை எட்ட வைக்க என்னால் முடியாது. கர்த்தர் பேரில் மாத்திரம் விசுவாசம் வையுங்கள், அப்போது உங்களுக்கு நித்திய பாதுகாப்பு கிடைத்துவிடும் என்கின்ற கால்வினிச போதகத்தையும், நான் அதைத் தொடாமலும், கையாளாமலும், சுவைக்காமலும் இருப்பேனானால், அதைச் செய்ய எனக்கு - எனக்கு விருப்பம், ஆனால் அதை என்னால் செய்ய முடியாது-!'' என்கின்ற ஆர்மீனியர்களின் உபதேசமானது.... ஆர்மீனிய கொள்கை கால்வினியக் கொள்கையை விட மிகவும் அகன்றுள்ளது, ஆனால் இரண்டுமே தவறான போதகங்களாகும். நான் அதை அவர்கள் இருவருமே வேதவசனங்களைக் கொண்டுள்ளனர், ஆனால் அது இலக்கை எட்டும் வகையில் சரியாக அமைந்திருக்க வேண்டும். இந்த வேதாகமத்தில் தேவன் ஒரு காரியத்தைக் கூறியிருப்பாரெனில், அது சரியாக இலக்கை அடிக்கத்தான் வேண்டும். அது வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வளையமும் சரியாக அந்த இலக்கு மையத்தை வந்தடைய வேண்டும். அது அப்படித்தான் இலக்கை அடையவேண்டும், ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாகும்; அவர் முடிவற்றவர். ஆதலால் அவரால் மாற முடியாது. ஆமென் எனக்கு அது பிடிக்கும், ஏனெனில் அது தேவனுடைய நித்திய வார்த்தை என்று பரிபூரணமாக திருப்தியடைந்து உன்னால் இளைப்பாற முடியும். ஆதலால் தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறதென்று பார்க்கத்தக்கதாக நான் அதை பல்வேறு வேதவாக்கியங்களைக் கொண்டு ஆராய முயற்சிப்பேன். சரி. 59 தேவனாலும் பிரதான தூதனாகிய மிகாவேலாலும் சாத்தான் வானத்திலிருந்து வெளியே பிடித்துத் தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான், அவன் பூமிக்கு வந்து சர்ப்பத்திற்குள்ளாக புகுந்துகொண்டு ஏவாளை வஞ்சித்து, பிறகு மனிதன் மற்றும் பெண்களுக்குள்ளாக புகுந்து, துவக்கத்தில் அவன் ஆரம்பித்த அதே காரியத்தை காலங்களினூடாக செய்து வந்தான் - ஒரு மகத்தான பெரிய இராஜ்யம், மற்றவனைக் காட்டிலும் அழகான ஒன்று, எல்லாவற்றின் மேலும் ஆளுனராக, எல்லாம் அறிந்தவனாக இருத்தல். ''எங்கள் ஸ்தாபனம் தான் மிகப் பெரியது, அது - அது - அது மற்றெல்லாரையும் விட உயர்ந்த செல்வாக்கு மிக்கதாகும்''. ''என்ன, எங்கள் ஸ்தாபனத்தில் அநேக நூற்றுக்கணக்கான பிரசங்கிகள் இருக்கின்றனர். அங்கே நகரத்திலே மிகப்பெரிய சபைகள் எங்களுக்கு உண்டு' என்று அவர்கள் கூறுவதைக் கேட்டுள்ளீர்கள். அது எனக்கு சா - த் - தா - ன் என்று தான் எழுத்து கூட்டிச் சொல்கிறது. அது சரி. என்னைப் பொறுத்த வரை அது எனக்கு பிசாசுதான். ஒரு மனிதன் பிரிந்து, ஸ்தாபித்துக் கொண்டு, சகோதரத்துவத்தை உடைத்து இந்த சிறிய சபையுடன் ஈடுபடுவதற்கு ஒன்றுங் கிடையாது என்று கூறுகையில்.... 60 கீழ்த்தரமான ஒரு நபரையும் நான் கண்டதில்லை, அல்லது பாவத்தில் மிகவுமாக உள்ள எந்த ஒரு நபரையும் நான் கண்டதில்லை; மிகவும் தாழ்ந்து கொடுக்கின்ற ஒரு பெண்ணையோ அல்லது மிகவும் தாழ்ந்து கொடுக்கின்ற மனிதனோ நான் கண்டதில்லை, நான் அவனிடம் சென்று என்ன செய்வேனென்றால், என் கரங்களை அவன் தோள் மீது போட்டு என்னால் கூடிய மட்டும் அதினின்று அவனை வெளியே கொண்டு வருவேன். குதித்து கொண்டு, சத்தமிட்டுக் கொண்டு, கூச்சலிட்டுக் கொண்டு இருக்கின்ற ஒரு கூட்டம் பரிசுத்த உருளையர்களை அல்லது நீங்கள் அவர்களை எப்படியெல்லாம் அழைக்கிறீர்களோ அங்கே சென்று அவன் கறுப்பு, மஞ்சள், பழுப்பு அல்லது வெள்ளை நிறத்தவனாயிருந்தாலும் அல்லது அவன் என்னவாயிருந்தாலும் சரி நான் அவர்களுடன் சேர்ந்து குதித்து, கூச்சலிட்டு, தேவனை மகிமைப்படுத்துவேன். ஆம், ஐயா-! பரிசுத்த ஆவியானவர் ஒரே சீரான நிலையில் வருகின்றார்; அங்கே தான் நீ தேவனுடைய தேவையை பூர்த்தி செய்கின்றாய். நீ அதைப் பெறுவாயானால், நீ தேவனுடைய சீரான சமநிலையில் வருகின்றாய் - பரிசுத்த ஆவியைக் குறித்த உன்னுடைய சொந்த எண்ணங்களின்படியல்ல.சாத்தான் அதை முதல் தரமான இலக்கிய நயம் வாய்ந்த, ஏதோ மகத்தான ஒன்றாக, ஏதோ பெரிய ஒன்றாக, அறிவு பூர்வமானதாக ஆக்க முயல்கிறான். அந்த விதமான சிந்தனையை நீங்கள் வெளியே எறிந்து, அதைக் குறித்து வார்த்தை என்ன கூறுகிறதோ அதை மாத்திரம் விசுவாசியுங்கள். ஆமேன்-! கேள்வி:80 இப்பொழுது இங்கே வேறொரு கேள்வி; இது என்னவென்பதை நாம் பார்ப்போம். சரி. ஐந்து கன்னிகைகளைக் குறித்த உவமையை விளக்கவும். ஒரு கிறிஸ்தவன் பாவம் செய்வானா-? 61 இப்பொழுது, ஐந்து கன்னிகைகளைக் குறித்த உவமை - அல்லது அது பத்து கன்னிகைகளைக் குறித்தது, தயவு கூர்ந்து பொறுத்துக் கொள்ளவும். பத்து கன்னிகைகள் மத்தேயு 25:1ல் காணப்படுகின்றனர். பத்து கன்னிகைகள் மணவாளனை சந்திக்கப் புறப்படுகின்றனர் (இப்பொழுது கவனியுங்கள் ) அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களாயிருந்து தங்கள் தீவட்டிகளில் எண்ணெயைக் கொண்டிருந்தனர், ஐந்து பேர் புத்தி இல்லாதவர்களாக தங்கள் தீவட்டிகளில் எண்ணெயைக் கொண்டிராமல் இருந்தனர். அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கையில் ''இதோ மணவாளன் வருகிறார் அவருக்கு எதிர்கொண்டுப்போகப் புறப்படுங்கள் என்ற சத்தம்- சத்தம் வந்தது. தங்கள் தீவட்டிகளில் எண்ணெயை உடையவர்களாக இருந்தவர்கள், தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினர், நெருப்பு எரிந்து கொண்டிருந்தது, அவர்கள் மணவாளனைச் சந்திக்கச் சென்றனர். மற்றவர்களோ எண்ணெய் வாங்கிக்கொள்ள இவர்களிடம் வந்தனர், இவர்களோ நீங்கள் விற்கிறவர்களிடத்திற்கு போய் உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினர். அவர்கள் சென்றபோது, மணவாளன் வந்து விட்டார், அப்பொழுது புத்தியுள்ள கன்னிகை உள்ளே பிரவேசித்தாள், தூங்கிக் கொண்டிருந்த கன்னிகை புறம்பே தள்ளப்பட்டாள். 62 இது உங்களை புண்ப்படுத்தப் போகிறது, உண்மையாகவே புண்படுத்தப் போகிறது, ஆனால் நான் அதை கூற வேண்டியவனாகவே இருக்கிறேன். கேள்வியை நான் கேட்கவில்லை; நான் அதற்கு பதிலளிக்க கட்டமைப்பட்டவனாக இருக்கிறேன். இப்பொழுது, இது மிக நெருக்கமாக வருகிறது, சகோதரனே, மிக நெருங்கி காணப்படுகிறது, இது உங்களை புண்படுத்துவதை விட உங்களுக்கு உதவும் விதத்தில் இருக்கும் என நான் நம்புகிறேன். வழக்கமாக புண்படுதல்..... என் தாயார் என்னை அடிக்கையில் வழக்கமாக இவ்வாறு கூறுவார்கள், ''உனக்கு அது நன்மை செய்யும் முன்னர் அது உன்னை புண்படுத்த வேண்டும்'' என்பார்கள். நல்லது, அது - அது சரியே. பாருங்கள்-? அப்பொழுது என்னால் அதைக் காண முடியவில்லை, ஆனால் நான் - நான் இப்பொழுது அதைக் காண்கிறேன். 63 கவனியுங்கள், இந்த ... அங்கே புறப்பட்டுச் சென்ற பத்து பேரும் கன்னிகைகள். இப்பொழுது, கர்த்தரை சந்திக்கும்படியாக அங்கே பத்து கன்னிகைகள் இருந்தனர். இப்பொழுது, கன்னிகை என்ற வார்த்தைக்கு, ''பரிசுத்தமாக்கப்பட்டது (யாருக்காவது இது தெரியுமா-?) பரிசுத்தம், சுத்தமான, பரிசுத்தமாக்கப்பட்ட'' என்று அர்த்தம். கர்த்தரை சந்திக்கப் புறப்பட்டுச் சென்ற அவர்கள் பத்து பேர்களாயிருந்தனர். இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் முதல் ஜாமம், இரண்டாவது ஜாமம், மூன்றாம் ஜாமம் துவங்கி ஏழாம் ஜாமம் வரை நித்திரை செய்ய ஆரம்பித்தனர். ஆனால் இவர்களோ உண்மையாகவே கர்த்தரைச் சந்திக்கச் சென்றனர். ஆகவே நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது கர்த்தர் வந்தார். அது கர்த்தருடைய வருகையின் நேரமாக இருந்தது. எந்த ஜாமத்தில் .... சிலர் முதலாம் மணி நேரத்தில், சிலர் இரண்டாம் மணி நேரத்தில் நித்திரை செய்தனர். சிலர்... என்பதை குறித்து இயேசு பேசினார். ஆனால் கர்த்தருடைய வருகையின்போது அவர்கள்ளெல்லாருமே விழித்துக்கொண்டனர். ஆனால் இந்தக் காரியத்தில், இது கடைசி மணி நேரமாக இருந்தது, ஏனெனில் அவர்கள் பத்துபேரும் கர்த்தரைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றனர். ஐந்து பேர்களின் தீவட்டிகள் எண்ணெயில்லாமல் புகைபிடித்து போயிருந்தது, மற்ற ஐந்து பேர்களோ எண்ணெயைக் கொண்டிருந்தனர். 64 இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், வேதாகமத்தில் எண்ணெய் எதற்கு அடையாளமாகக் காணப்படுகிறது-? யாராவது கூறமுடியுமா-? (சபையார் பரிசுத்த ஆவி என்று பதிலளிக்கின்றனர்-ஆசி) பரிசுத்த ஆவி-! அப்படியானால் நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிராமல், நீங்கள் சுத்தமாயும், தூய்மையாகவும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். சுத்தமாக்கப்படுதல் என்பது நீங்கள்.... இப்பொழுது கவனியுங்கள், நான் இந்த சிறிய பாட்டிலை எடுக்கப்போகிறேன். இது அங்கே கோழிகள் அறுத்தெறியப்படும் இடத்தில் காணப்படுகிறது, அந்த இடம் முழுவதுமாக இருக்ககின்றது. நான் இதை எடுக்கின்றேன்; அதுதான் நீதிமானாக்கப்படுதல்: ''நான் இந்த பாவியை உபயோகப்படுத்தப் போகிறேன்.'' பிறகு இதை நான் உபயோகப்படுத்தப் போகிறேன் என்றால் நான் செய்ய விருக்கின்ற அடுத்த காரியம் நான் இதை சுத்தமாக்க வேண்டும். பிறகு நான் அதை சுத்தப்படுத்தின பின்பு, இதற்கு அடுத்ததாக நான் என்ன செய்வேன்-? இதை பரிசுத்தப்படுத்துவேன். பரிசுத்தப்படுத்துதல் என்கிற வார்த்தைக்கு ''சுத்தமாக்கு“ இது பரிசுத்தம் என்கிற வார்த்தை இணையானது வார்த்தை. பரிசுத்தம் -பரிசுத்தம் என்பது எபிரேய வார்த்தையாகும். பரிசுத்தமாகுதல் என்பது கிரேக்க வார்த்தையாகும். பரிசுத்தமாகுதல் என்ற வார்த்தை ”ஊழியத்திற்கென சுத்தப்படுத்தி தனியாக வைத்தல்“ என்று பொருள்படும். ஆகவே பிறகு, நீதியின்மேல் பசிதாகம் உடையவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் நிரப்பப்படுவார்கள், பிறகு அவர்கள் ஊழியத்தில் வைக்கப்படுவார்கள். 65 இந்த பாத்திரங்கள்... பழைய ஏற்பாட்டின் கூடாரம், பீடம் பாத்திரங்களை பரிசுத்தப்படுத்துகின்றது. அவைகள் ஊழியத்திற்கென்று தனியாக வைக்கப்படுகின்றன. அவைகள் ஊழியத்திற்கென்று இருக்கும் பொழுது அப்பொழுது அவைகள் நிறப்பப்படுகின்றன. இப்பொழுது இங்கே தான், அருமையான, விலையேறப் பெற்ற நசரீன்கள், இன்னும் மற்றவர்கள் வழிவிலகிப் போயிருக்கிறார்கள். பாருங்கள்-? நாமெல்லாரும் .... ஏன் நீங்கள் தவறிப்போகிறீர்கள்-? ஏன் பெந்தெகொஸ்தேயினர் உங்களை விட்டு ஓடிப்போனார்கள். ஏனென்றால் நீங்கள் ஒளியில் நடக்க மறுத்ததால், அது முற்றிலும் சரியே. பாருங்கள்-? அது சரிதான். நான் முதன் முதலாக முழங்காலிட்ட பலிபீடம் அந்த விலையேறப் பெற்ற அங்கே இருக்கின்ற அந்த பழைய நசரின் பலிபீடம் தான். அந்த அருமையான, பரிசுத்தமுள்ள, சுத்தமான சபையாகிய அவர்களை தேவன் ஆசீர்வதிப்பாராக, ஆனால் நீங்கள் மிகவுமாக வழிமுறைகளின்படி நடக்கப் பார்க்கிறீர்கள், ''நீ இதைச் செய்ய வேண்டும், நீ அதைச் செய்துதான் ஆக வேண்டும். நீ இதை செய்து தானாக வேண்டும்'' என்று கூறி, அது தேவனுடைய கிருபையென்றும், நீங்கள் தெரிந்துகொள்ளுதலின்படி அழைக்கப்பட்டுள்ளீர்கள் என்றும் உணராதிருக்கிறீர்கள். ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல ஓடுகிறவனாலும் அல்ல இரங்குகிற தேவனாலேயாம். பாருங்கள்-? தேவன் சபையை உலகத்தோற்றத்திற்கு முன்னரே முன் குறித்தார் (இன்னும் சற்று கழித்து அதைக் குறித்த கேள்வி நம்மிடம் இருக்கிறது. பாருங்கள்-?), உலகத் தோற்றத்திற்கு முன்பே சபையை முன் குறித்தார். 66 கவலைப்படுகிறதினால் உன் சரீர அளவோடு ஒரு முழத்தையும் உன்னால் கூட்ட முடியாது. “என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்'' பாருங்கள்-? பாருங்கள், தேவன் தான் அழைப்பை விடுத்தார், தேவன் தான் இழுத்தார், தேவன் தான் சபையை அமைத்தார். இப்பொழுது, இப்பொழுது, நீங்கள், ''சகோதரன் பிரன்ஹாம், அது முழுக்க கால்வீன் கொள்கையாயிற்றே' எனலாம். இல்லை, அது அவ்வாறல்ல. இப்பொழுது, பொறுங்கள் தேவன் ஒரு மனிதனை எடுத்து, ”இதோ, நான் உன்னை எடுத்து பிறகு...'' என்று கூறிவிடுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இந்த பாப்டிஸ்டுகளும் பிரஸ்பிடேரியன்களும் நல்லது, நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன், என் மனசாட்சி குற்றப்படுத்துவதற்கான அவசியமே இல்லை-!'' எனலாம். குற்றப்படுத்துவதற்கு உங்களிடம் ஒன்றுமே இல்லாதிருப்பதே ஒரு ஆச்சரியமிக்க காரியம் தான். அவர்கள், ''நல்லது நடனமாடுவது என்னைக் குற்றப்படுத்துவதில்லை. சமுதாய விருந்தில் சிறிது மது அருந்துவது எனக்கு எந்த பாதிப்பையும் உண்டாக்காது' என்கின்றனர். ஏனெனில் உங்களுக்கு பாதிப்பை உண்டு பண்ண உங்களுக்குள் ஒன்றுமே இல்லை. ''கீழ்த்தரமான தரங்கெட்ட நகைச்சுவைத் துணுக்குகள் கூறுவது எனக்கு ஒன்றும் தொல்லை தராது'' ஏன்-? உங்களுக்கு பாதிப்பை உண்டுபண்ண உங்களுக்குள் ஒன்றுமே இல்லை . 67 நான் சேவை செய்யாவிடில் அவர் என்னை நரகத்திற்கு அனுப்பிவிடுவாரோ என்றெண்ணி நான் கர்த்தருக்கு சேவை செய்வதில்லை; நான் அவரை நேசிப்பதால் அவருக்கு சேவை செய்கிறேன். எனக்குள் ஏதோ ஒன்று இருப்பதால் தான் நான் அவருக்கு சேவை செய்கிறேன். நீங்கள் வெளியில் சென்று, ''எங்கள் சபை இதில் விசுவாசம் இல்லாமலிருப்பதால் நான் இதை விட்டுவிட வேண்டியதாயிற்று'' என்று கூறினால் நீங்கள் ஒரு மாய்மாலக்காரனைப் போன்று நடந்து கொள்ளுகிறீர்கள். அது சரி. ஆனால் நீங்கள் அதை நேசிப்பதனால் அதை செய்வீர்களானால், அது தேவனுக்கு ஒரு சேவையாக இருக்குமாயின், உங்கள் இருதயத்தில் ஏதோ ஒன்று தேவனுக்கான உங்கள் அன்பை , இந்த காரியங்களைக் காட்டிலும் அதற்கு மேலாக மிகப் பெருகச்செய்யுமென்றால், இப்பொழுது நீங்கள் சரியான வரிசையில் இருக்கிறீர்கள். ஆனாலும் நான் இன்னுமாக மது அருந்தாமலும், புகைபிடிக்காமலும், மெல்லாமலும், சாபமிடாமலும் இருந்தால் கூட இன்னுமாக நான் நரகத்திற்குச் செல்வேன். நிச்சயமாக-! நான் எல்லா சபைகளையும் சேர்ந்து, ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லா சபைப் புத்தகங்களிலும் என் பெயர் இருந்தாலும், நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும், ''ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்''. அது சரியே-! 68 இப்பொழுது இந்த கன்னிகைகள் பத்து பேர்கள் வந்தனர். நசரீன் மக்களை அப்படியே ஆடிப்போக வைத்தது : ஏனெனில் பரிசுத்த ஆவியின் ஆரம்ப அடையாளமாகிய அந்நிய பாஷையில் பேசுதலை பெந்தெகொஸ்தேயினர் எடுத்தனர். அவர்கள் மக்களை பலிபீடத்தண்டை கொண்டு வந்து அவர்களை ஏதோ ஒன்றைக் கூறச் செய்து அல்லது ஒன்றன் மேல் ஒன்றைக் கூறச் செய்து அல்லது ஒன்றன் மேல் ஒன்றை பேச வைத்து அந்நிய பாஷை பேசும் வரை காக்க வைத்தனர். ஒரு மெய்யான, உண்மையான பெந்தெகொஸ்தே மக்கள் அவ்விதமாகச் செய்ய விழையமாட்டார்கள். உங்கள் நசரின் சபையின் பிசாசும் கூட அநேக காரியங்களை கொண்டிருந்தானே . பாருங்கள்-?பெந்தெகொஸ்தே சபையில் அநேகமான காரியங்களை அவன் கொண்டிருக்கிறான், ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பொறுத்த வரையில், அது சத்தியமாகும். அது முற்றிலும் சத்தியம் ஆகும். 69 எனக்குத் தெரிந்த வரையில் அவர்களில் அநேகம் பேர் உள்ளனர். மக்கள் அந்நிய பாஷையில் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். என்னால் நியாயந்தீர்க்க முடியாது; நியாயத்தீர்ப்பு செய்ய நான் அனுப்பப்படவில்லை. அவைகளில் அநேகவற்றை நான் கேட்டிருக்கிறேன்; சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் அது காணப்படும். ஆனால் அந்நிய பாஷையில் பேசுகின்ற உண்மையான பரிசுத்த ஆவி இருப்பதை நான் அறிவேன். அது உண்மை என்பதை நான் அறிவேன். ஆம், ஐயா-! ஆனால் மக்கள் உள்ளே வந்து “தேவனுக்கு மகிமை , நான் அதைப் பெற்றுக்கொண்டேன்'' என்று கூறுவதை அவர்கள் கண்டனர். நல்லது அப்படியானால், அந்த அதே காரியமானது ....இப்பொழுது அவர்கள் மேலும் கீழும் குதித்து அந்நிய பாஷையில் பேசினதால் அதை பெந்தெகொஸ்தே என்று அழைக்காதீர்கள், நீங்கள் அவர்களை யாரோ ஒருவருடைய மனைவியுடனோ அல்லது யாரோ ஒருவருடைய கணவனோடு கண்டிருக்கிறீர்கள். ''அது பரிசுத்த ஆவியா-?'' என்று நீங்கள் கேட்கலாம். நசரீன் ஸ்தாபனத்தாராகிய நீங்கள் தரை முழுவதுமாக புரண்டு கூச்சலிட்டு பிறகு அதே காரியத்தை செய்கிறீர்கள். நீங்கள் கூச்சலிடும்போது அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று நீங்கள் கூறினீர்கள். பாருங்கள்-? நீங்கள் ஜீவிக்கும் ஜீவியத்தின் மூலமாக தவிர அதை நிரூபிக்கத்தக்கதாக எந்த ஒரு வழியும் கிடையாது. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்“ இது ஒன்றுதான் வழி. ஆழ்ந்த பக்தியுள்ள ஜீவியம் மற்றும் கிறிஸ்து உன்னுடன் கிரியை செய்து வார்த்தையை உறுதிபடுத்தி, உன் ஆழ்ந்த பக்தியுள்ள ஜீவியத்தினால்அடையாளங்களும் அற்புதங்களும் பின் தொடர்ந்தால், அதுதான் உண்மையான காரியமாகும். ஜீவியம் இல்லாமல் அநேக அடையாளங்களையுடையவராயிருக்கலாம். நீங்கள் அடையாளங்கள் இல்லாமல் ஜீவியத்தை போலியாக நடித்துக் காட்டலாம், ஆனால் நீ இரண்டையும் ஒன்றாகக் கண்டாயானால், அப்பொழுது அதுதான் சரியானதாகும். அதுதான் சரியான ஒன்றாகும். இப்பொழுது-! அப்படியானால், நினைவுகூருங்கள், மணவாட்டியானவள்... இப்பொழுது உங்களுக்கு சில நிமிடங்கள் இருக்குமாயின் நான் இதை முடிக்க ஏதுவாயிருக்கும். 70 கவனியுங்கள், ஒரு பெண் உடுத்த ஒரு ஆடையை வெட்டி எடுக்கப்போகிறாள். அவள் ஒரு பெரியதுண்டு துணியை வைத்திருக்கிறாள். (அதை என்னவென்று அழைப்போம்-? பருத்தித் துணி , கட்டங்களிட்டு நெய்யப் பெற்ற பருத்தித் துணி வகை அல்லது ஏதோ ஒன்று, ஏதோ ஒரு பெயரிட்டு அழைக்கிறீர்கள். அதை பட்டு என்று அழைப்போமாக) அவளிடம் ஒரு அமைப்பு (Pattern) இருக்கின்றது. அவள் இந்த பெரிய துண்டு துணிகளைப் பார்க்கிறாள். இப்பொழுது இந்த துணிகளைப் பார்க்கிறாள். இப்பொழுது இந்த மாதிரித்துணியை எங்கே வைத்துப் பார்க்கப்போகிறாள் என்பது அவளைப் பொறுத்தது தான். அது சரியா-? அந்த முழுதுணியும் எந்த ஒருபாகத்தையும் அவள் தெரிந்தெடுக்கலாம். அந்த முழு துணியுமே பரிசுத்தமாக்கபட்ட துணி, சுத்தமான துணி ஆகும். பாருங்கள், அது தான் தெரிந்துகொள்ளுதல். தேவனின் தெரிந்துகொள்ளுதல். ஆகவே அவர் செய்வது என்ன-? தெரிந்து கொள்ளுதலின்படி அவர் அதை எடுத்து, இந்த கிறிஸ்துவாயிருக்கின்ற மாதிரி அமைப்பை எடுத்து துணியின் எந்த பாகத்தில் அவர் வைக்க விரும்புகிறாரோ அங்கே அவர் பொருத்திப் பார்க்கிறார். பிறகு அது வெட்டி எடுக்கப்படுகின்றது. இந்த வெட்டி எடுக்கப்பட்ட பகுதி எப்படி பரிசுத்தமாக இருந்ததோ அதே போன்று துணியின் மற்றைய பாகமும் பரிசுத்தமாயிருந்தது, ஆனால் தேவன் தெரிந்துகொள்ளுதலின்படி, தம்முடைய தெரிந்துகொள்ளுதலை உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே செய்தார். பவுல் கொரிந்தியர் 8ல் - இல்லை, ரோமர் 8ல் “குயவன் - களிமண் குயவனை நோக்கி நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா-?'' என்று கூறவில்லையா. நீதியுள்ள தேவனாகிய அவர் ஏசா அல்லது யாக்கோபிடம், அந்த இருவரும் பிறப்பதற்கு முன்னர் அல்லது சரியானதை அல்லது தவறானதை செய்யுமுன்னர் எப்படி ”ஏசாவை வெறுத்து யாக்கோபைச் சிநேகித்தேன்'' என்று கூறமுடியும்-? ஏனெனில் முன்னறிவின்படி ஏசா எப்படிப்பட்டவனென்றும் யாக்கோபு எப்படிப்பட்டவனென்றும் அவர் அறிந்திருந்தார். மனிதனுக்குள் என்ன இருக்கிறதென்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னரே அவர் அறிந்திருந்தார், அவர்.... 71 முடிவில்லாதவர் என்கிற வார்த்தையை உங்களால் விவரிக்க முடியுமானால் ....முடிவில்லாதவர் என்கின்ற வார்த்தையானது .... கோடான கோடி கணக்கான கொசுக்கள் இருக்கின்றன, கோடிக் கணக்கான கொசுக்கள் இவ்வுலகில், அவை ஒவ்வொன்றும் தங்கள் கண்களை நூறாயிரங் கோடி இன்னும் அதிகமான கோடி முறைகள் கண்மூடித் திறந்திருக்கும். அவைகள் ஒன்றாகிலும் தங்கள் கண்ணை மூடித் திறக்கும் முன்னரே தேவன் அதை உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே அறிந்திருந்தார். அதுதான் முடிவில்லாமை நிலை. அதுதான் முடிவில்லாத நிலையில் இருக்கும் ஒன்றாகும். பாருங்கள்-? அவர் முடிவில்லாதவர். ஆகவே நீ என்ன செய்வாய் என்பதை உலகத் தோற்றத்திற்கு முன்னரே அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர். கிறிஸ்துவை அனுப்பினார், அந்த ... யாராவது ஒருவர், ''நல்லது நான் என்னுடைய இழிவான மனப்பான்மையை விட்டு விட்டு அவரைப் பின்பற்றுவேனானால்'' அல்லது அதைப் போன்ற ஒன்றை நினைப்பாரெனில், அவ்வாறல்ல. யார் யார் இரட்சிக்கப்படுவார்களென்பதை அவர் அறிந்திருந்தார், ஆகவே யார் இரட்சிக்கப்படுவர் என்பதை அவர் முன்னதாகவே கண்டவர்களை இரட்சிக்க அவர் கிறிஸ்துவை அனுப்பினார். 72 இப்பொழுது, சபைக்கும் கூட நித்திய பாதுகாப்பானது இருக்கின்றது. நீங்கள் சபைக்குள் இருப்பீர்களானால், நீங்கள் சபையுடன் பாதுகாப்பாய் உள்ளீர்கள். ஆனால் நீங்கள் சபைக்கு வெளியே சென்றால், நீங்கள் பாதுகாப்பில் இல்லை. பாருங்கள்-? இப்பொழுது, நீங்கள் சபையிலேயே தரித்திருக்கிறீர்கள். சபைக்குள்ளாக எப்படி நீங்கள் வருகிறீர்கள்-? கைகள் கோர்ப்பதினாலா, உங்கள் பெயரை புத்தகத்தில் எழுதுவதாலா-? எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம். அதுதான் சபை. எப்படி-? பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மூலமாக நாம் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக முத்திரையிடப்பட்டுள்ளோம். எவ்வளவு காலத்திற்கு-? எபேசியர் 4:30. அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்.'' மீட்கப்படும் நாள் வரைக்கும் நீங்கள் முத்திரையிடப்பட்டுள்ளீர்கள். இப்பொழுது, நிச்சயமாக, நிச்சயமாக, அதுதான் பரிசுத்த ஆவியாகும். 73 ஆகவே இப்பொழுது அந்த சபையானது எடுக்கப்பட்டு, தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் கொண்டிருக்கிற மீதியாயிருக்கிற ஸ்திரீயின் வித்தானது (பாருங்கள்-?), மணவாட்டியல்ல, மீதமாயிருக்கின்ற அந்த ஸ்திரீயின் வித்து. அப்பொழுது அந்த வலுசர்ப்பமானது தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றி அந்த வித்தின் சந்ததியுடன் யுத்தம் பண்ணப்போயிற்று. அது தான் இப்பொழுது உருவாக்கப்பட்டுள்ள, மிருகத்திற்கு சொரூபமான, சபைகளின் சங்கத்தின் கீழிருக்கின்ற பிராடெஸ்டெண்ட் சபையாகும். இதைப்போன்று எல்லா சபைகளும் புறக்கணிக்கப்படும். இப்பொழுது வரி வசூலிப்பது நாம், அது சர்ச்சையில் உள்ளது, நாம் ஒரு சபையல்ல என்று கூற முயற்சிகள் செய்யப்படுகின்றன, ஆனால் நாம் சபைதான் என்று நம்மை அழைத்துக் கொள்ளத்தக்கதாக நமக்கு அரசியல் சாசன உரிமைகள் இருக்கின்றன. நம்முடைய முற்பிதாக்கள் அதற்காகத்தான் உறுதியாக நின்றார்கள். ஆனால் நாம் செய்திருப்பது என்ன, ஒவ்வொரு அரசியல் சாசன சட்டத்தையும் நாம் உடைத்து, எல்லா சபைகளும் ஸ்தாபனங்களையும் உள்ளடக்கிய சபைகளின் சங்கத்தை உள்ளே வரவேற்றுள்ளோம், ஆகவே பிசாசு இதற்குள்ளாக உள்ளே வந்து உலகப்பிரகாரமான காரியங்களும் மற்றும் எல்லாவற்றையும் உள்ளுர் சபை அங்கத்தினர்களுக்குள் கொண்டு வந்து, இன்னும் மகத்தான சபைக்குழுக்கள் மற்றும் உயர்தர வகுப்பார், மற்றும் சமுதாயத்தினர் இன்னும் பிறவற்றைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த பழைய சபையோ மற்ற பிறப்பைப் போன்று குழப்பத்திலிருந்து மறுபடியும் பிறந்து, இன்னுமாக அதற்கான கிரயத்தை செலுத்திக் கொண்டு, இன்னுமாக அமர்ந்து, பெந்தெகொஸ்தே நாளிலே அவர்கள் எப்படியாக பிறந்தனரோ இன்னும் அதே விதமாகவே செயல்பட்டுக் கொண்டு, அங்கே இருக்கின்ற அதே சபையானது. அவைகள் சபைகளின் சங்கத்தின் கீழாக மூடப்பட்டு அடைக்கப்படும். அது ஒரு சங்கம் அல்லது அதைப்போன்று ஒன்றினால் புறக்கணிக்கப்படும். ஒன்று நீங்கள் உள்ளே வரவேண்டும் அல்லது வெளியே செல்லவேண்டும். 74 மிருகத்தின் முத்திரையானது இப்பொழுது இன்றைக்கு செயலில் உள்ளது. மேலும் - பரிசுத்தஆவி தான் தேவனுடைய முத்திரையாகும். அதைப் புறக்கணிப்பதென்பது மிருகத்தின் முத்திரையாகும். நீ கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டிய பரிசுத்த ஆவியை நீ கண்டு, அதை ஏற்றுக் கொள்ளாமல் போனால், தானாகவே நீ அந்த மிருகத்தின் முத்திரையை எடுத்துக் கொள்கிறாய், ஏனெனில் இரண்டு சாரார் மாத்திரமே இருக்க முடியும்: தேவனுடைய முத்திரையை கொண்டிராத எல்லாரும் மிருகத்தின் முத்திரையை பெற்றிருந்தனர். ஆகவே தேவனுடைய முத்திரையைப் பெற பரிசுத்த ஆவியைப் பெறத்தான் வேண்டும். அதை பெற வேண்டும். இதோ இதுதான் முழு காரியமும். அது முற்றிலுமாகச் சரியே. 75 இப்பொழுது மணவாட்டி மேலே செல்கிறாள், மீதமுள்ளவர்கள் இங்கே விடப்படுகின்றனர். இவளே இரண்டாம் உயிர்த்தெழுதலில் வருகிறவள். முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான். இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. அது சரி. இரண்டாம் உயிர்த்தெழுதலானது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பாக இருக்கும், பிறகு சபையானது .... பவுல் ''நீங்கள் அவிசுவாசிகளிடத்திற்கும் வழக்கறிஞர்களிடமும் ஏன் செல்கிறீர்கள், பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா-?' என்றான். இவ்வித காரியங்கள் சபைக்கு முன்பாக நியாயந்தீர்க்கப்பட வேண்டும், அநீதியான நீதிபதி, மாஜிஸ்ட்ரேட் மற்றும் இன்னாருக்கு முன்பாக செல்லக்கூடாது, ஆனால் நம்முடைய காரியங்கள் சபைக்கு முன்தான் கொண்டு வரப்பட வேண்டும். நீங்கள் அங்கே ஒருவருக்கொருர் சட்டத்திற்கு கொண்டு செல்கிறீர்கள். ஒரு கிறிஸ்தவனை சட்டத்திற்கு முன் நிற்கவைக்கின்ற மனிதன் மீது தேவன் இரக்கம் பாராட்டுவாராக. அது சரி. அவ்விதமாகச் செய்ய பவுல் அவர்களுக்கு சவாலிட்டான். இப்பொழுது, அது தான் மணவாட்டி ஆகும், உறங்கிக் கொண்டிருந்த கன்னிகைகள் பூமியின் மீது விடப்படுகின்றனர். புத்தியுள்ள கன்னிகை தன்னுடைய தீவட்டியில் எண்ணையை உடையவளாக பரலோகத்திற்குள் செல்கின்றாள். இதன் பேரில் அதிக நேரத்தை நாம் செலவிடலாம் என்பதை நானறிவேன், ஆனால் நான் துரிதமாக சொல்லப்போகிறேன். 76 கிறிஸ்தவர்கள் பாவம் செய்வார்களா-? நிச்சயமாக கிடையாது-! ஒரு கிறிஸ்தவன் பாவம் செய்வான் என்று கூறும் எந்த வேதவாக்கியமும் கிடையாது. இதற்கு ஆக்ஷேபனை உண்டு என்பதை நான் அறிவேன். நல்லது, 1யோவான் 3ற்கு திருப்பி வேத வசனம் என்ன கூறுகிறதென்று நாம் பார்ப்போம். ஒரு கிறிஸ்தவன் பாவமே செய்யமாட்டான். நீங்கள் எப்பொழுதாகிலும் ஒரு கறுப்பு, வெள்ளை நிறப்பறவை அல்லது வெள்ளை, கறுப்பு பறவையை கண்டதுண்டா-? இல்லை-! நீங்கள் ஒரு பாவி பரிசுத்தவானை பார்த்ததும் கிடையாது. அப்படிப்பட்ட ஒன்றுமே கிடையாது. இப்பொழுது, இது சிறிது புண்படுத்துமானால் இதற்குள் நிறைய தைலத்தை வைத்துவிடுங்கள், அது உங்களுக்குத் தெரியும், ஆகவே அது - அது சிறிது நேரத்தில் சுகத்தை அளிக்கும். 77 இப்பொழுது நாம் பேசிக்கொண்டிருப்பவைகளின் முற்றிலும்மான, ஒருபோதும் தவறாத ஆதாரங்கள் வேத வசனங்கள் தான். 1யோவான், 3வது அதிகாரம் 9வது வசனம். சரி, இதற்கு செவிகொடுங்கள் பாவங்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ் செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்படுத்தப்பட்டார். கவனியுங்கள், நீங்கள் தயாராக இருக்கிறீர்களா-? உங்கள் கவச உடைகளைத் தரியுங்கள், சர்வாயுதவர்க்கத்தை இறுக்கிக் கட்டிவிட்டீர்களா-? கூர்ந்து கவனியுங்கள். இது அதிர்ச்சியூட்டும் ஒன்றாகும். தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்வதில்லை; ... (புரிகிறதா-?). ஏனெனில் அவருடைய வித்து...(அவருடைய வித்து, தேவனுடையது) .... அவனுக்குள் தரித்திருக்கிறது .... (அந்த மனிதன்-!) .... அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படுத்தப்படும்கின்றது. நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்பு கூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. ஆகையால் நீங்கள் ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி, வேறுபாடுகளை வரையுறுத்தி, இன்னும் அதைப்போன்றவைகளைத் தெரிந்துகொண்டு பிறகு எப்படி நீங்கள் தேவனால் பிறந்தவர்கள் என்று உங்களாலே கூறமுடிகின்றது-? அப்படிப்பட்ட ஒன்று கிடையவே கிடையாது. அது சாத்தானுடைய ஏமாற்று வேலை யாகும். அது சரி. ஆனால் தேவனால் பிறந்த ஒரு மனிதனால் பாவமே செய்யமுடியாது; பாவம் செய்வதென்பது அவனால் கூடாத ஒரு காரியமாகும். 78 கவனியுங்கள்-! இதை என்னால் எடுக்க முடியுமானால் கிறிஸ்து அறையப்பட்டுள்ள சிலுவையை இங்கே ஒரு நிமிடத்திற்கு நான் எடுக்கட்டும். பாவ நிவாரணப்பலியாக இருந்தவர் யார்-? இயேசு கிறிஸ்து. நாம் எப்படி கிறிஸ்துவுக்குள் செல்லுகிறோம்-? நமக்காக மரித்தவர் யார்-? கிறிஸ்து. அவர் எதற்காக மரித்தார்-? நம்முடைய பாவங்களுக்காக . என்னுடைய ஆக்கினையை அவர் எடுத்துகொண்டார். அது சரி தானே-? ஆகவே அப்படியானால் நான் எவ்வாறு அவருக்குள் செல்கிறேன் -? ஒரே ஆவியால் நாமெல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். ஆகவே இந்த சரீரத்தில் நாம் இரத்தத்தினாலே மூடப்பட்டு நியாயந்தீர்ப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலைப் பெற்றிருக்கிறோம். அவனால் பாவமே செய்யமுடியாது, ஏனெனில் அவனுக்காக இரவும் பகலுமாக ஒரு இரத்த பலியானது இருந்து கொண்டிருக்கிறது. அல்லேலூயா-! அவனால் பாவம் செய்ய முடியாது. பாவம் செய்ய அவனுக்கு விருப்பமே இராது. அவ்வாறு செய்வானானால் - ஏதாவது தவறை அவன் புரிவானானால், அதை வேண்டுமென்றே அவன் செய்திருக்கமாட்டான். வேதாகமம் எபிரேயர் 10 ஆம் அதிகாரத்தில் - சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்த மென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். 79 ஏனெனில் நாமெல்லாரும் ஒரே ஆவியாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம். ஆகையால் பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றவராயிருப்பதால், நம்மால் பாவம் செய்யமுடியாது, பாவமே செய்ய முடியாது. நமக்காக ஒரு பாவபிரயாசித்த பலி காத்துக்கொண்டிருக்கிறது. ஆகவே உங்கள் இருதயத்தில் இன்னுமாக பாவம் செய்ய வேண்டும் என்கின்ற வாஞ்சை இருக்குமானால் நீங்கள் இன்னுமாக அந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை என்று அர்த்தமாகிறது, ஏனெனில் நீங்கள் மரித்து உங்கள் ஜீவனானது கிறிஸ்துவுக்குள்ளாக தேவனின் மூலமாக மறைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் பாவமே செய்வதில்லை. அவர்கள் தவறுகள் செய்வார்கள், ஆனால் அவர்கள் பாவம் செய்வதில்லை. ஆமென் அதன் காரணமாகத்தான் அவர்களால் முடியாது, ஏனெனில் அவனால் பாவம் செய்யமுடியாது. என்னால் எப்படி .... நான் இங்கே நகரத்தினூடாக செல்கையில் நகரத்தின் மேயர் என்னிடம் வந்து திரு. பிரன்ஹாம், நீங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க செல்லும் ஒருவர் என்று எனக்குத் தெரியும். வேகக்கட்டுப் பாடுகள் இங்கே உண்டு. நகரத்தில் அதிகபட்சமாக மணிக்கு முப்பது மைல் வேகத்தில் தான் செல்ல வேண்டும். ஆனால் உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் தொண்ணூறு மைல் வேகத்தில் செல்ல நான் உங்களுக்கு அனுமதிதருகிறேன், ஏனெனில் உங்களுக்கு மிக அவசரமான அழைப்போ அல்லது யாரோ ஒருவர் விபத்தில் மரித்துக் கொண்டிருக்கும் தருவாயில் இருந்தாலொழிய தவிர மற்ற நேரத்தில் நீங்கள் வேகக் கட்டுபாடு விதிகளை மீறமாட்டீர்கள் என்ற நம்பிகை உங்கள் மேல் எனக்கு உண்டு. நீங்கள் ஒரு சிகப்பு விளக்கை அல்லது அதைப் போன்ற ஒன்றை பொருத்தி நீங்கள் வாகனத்தை ஓட்டிச் செல்லலாம் என்று, இந்த நகரத்தின் மேயர் என்கின்ற அடிப்படையில் நான் உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன்“ என்று கூறும் பட்சத்தில், நான் முப்பது மைல் வேகத்தில் செல்ல வேண்டிய பகுதியில் நாற்பது மைல் வேகத்தில் சென்றால் ஒரு சாதாரண அதிகாரியினால் எப்படி என்னை கைது செய்ய முடியும்-? அவனால் முடியாது. இந்த நகரத்தில் இருக்கின்ற வேகக்கட்டுப்பாட்டு விதிகளை என்னால் உடைக்க முடியாது. ஏன்-? ஏனெனில் அந்த வேகக்கட்டுபாடு விதிகளுக்கு மேலாக நான் உள்ளேன். ஆமென் நான் சொல்ல விழைவதைக் காண்பீர்கள் என நான் நம்புகிறேன். 80 ஆகவே நாம் மரிக்கையில் நம்முடைய மனந்திரும்புதலை தேவன் அங்கிகரிக்கின்றார், நம்முடைய ஞானஸ்நானத்தை அங்கிகரிக்கின்றார், விசுவாசத்தின் மூலம் வைக்கப்பட்ட அவர் தம்முடைய சொந்த குமாரனின் இரத்தத்தை அங்கிகரிக்கின்றார். அவருடைய முன் குறித்தலை அவர் அங்கிகரித்து நான் அதைச் செய்வேன் என்று அறிந்திருந்து, கிறிஸ்துவுக்குள்ளாக என்னை அவர் அடையாளங் கண்டுகொண்டு, மரித்த... உலகத் தோற்றத்திற்கு முன்பாக அவர் அடிக்கப்பட்ட போது என் ஸ்தானத்தில் கிறிஸ்து மரித்தார். ஒரு கிறிஸ்தவனாக என்னுடைய பெயர் அவருடைய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அல்லேலூயா-! என் மரணத்தை கிறிஸ்து மரித்தார். கிறிஸ்துதான் என்னுடைய பலி. தேவன் இனிமேல் என் பாவத்தை எண்ணாதிருப்பார். நான் மரணத்தினின்று ஜீவனுக்குள் கடந்து சென்றேன் என்பதற்கான சாட்சியாக பரிசுத்த ஆவியின் முத்திரையை அவர் எனக்களித்தார். வியூ அது தான் செய்கிறது. 81 அப்படியானால் தேவனால் பிறந்த எவரும் பாவம் செய்வதில்லை. ஏனெனில் அவனால் பாவமே செய்ய முடியாது. பழைய ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பாவத்தைக் குறித்து நினைவுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் கிறிஸ்து , ஒரே பலியினாலே அந்த வழிபடுபவனை அவர் என்றென்றுமாக பரிபூரணப்படுத்தினார். ''ஆராதனை செய்கிறவர்கள் ஒருமுறை சுத்தமாக்கப்பட்ட பின்பு, இன்னும் பாவங்கள் உண்டென்று உணர்த்தும் மனசாட்சி அவர்களுக்கு இல்லாதிருக்கிறார்கள்.'' ஆகவே சபையில் ஓடி, மேலும் கீழுமாக குதித்து, சத்தமிட்டு, அந்நிய பாஷையில் பேசி, ஒரு கிறிஸ்துவனைப் போலவே சரியாக செய்யும் இந்த மக்களை நீங்கள் எடுத்துக்கொள்வீர்களானால், அவர்கள் பிறகு வெளியே ஓடி, அடுத்த வருடம், அடுத்த வாரம் அவர்கள் மறுபடியுமாக வரவேண்டியதாக இருக்கும். அவர்கள் துவக்கத்திலேயே சரியான ஒன்றிற்கு அருகாமையில் கூட வரவில்லை. அவர்கள் போலித்தனமாக செய்து கொண்டிருக்கிறார்கள், ஏனெனில் நம்முடைய மீட்கப்படும் நாளுக்கென்று பரிசுத்த ஆவியானவர் நம்மை கிறிஸ்துவுக்குள்ளாக முத்திரையிட்டிருக்கின்றார் என்று வேதாகமம் கூறியுள்ளதே. அல்லேலூயா-! தேவன் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளபடியால், அதுவே என்னை மிகவும் நிச்சயத்திற்குள்ளாக்குகின்றது. 82 பாவம் இனிமேல் கிடையாது. பாவத்திற்கான பிரயாசித்தம் செலுத்தப் பட்டாயிற்று. அதன் காரணமாகத்தான் ஒரு கிறிஸ்தவனுக்கு பாவம் மிகவும் அசுத்தமாகக் காணப்படுகிறது. அதன் காரணமாகத்தான் இங்கே குட்டைக் கால்சட்டை, ஷார்ட்ஸ், (Shorts) அணிந்து காணப்படுகின்ற பெண்கள் ஒரு கிறிஸ்தவனுக்கு மிக அசுத்தமாகக் காணப்படுகிறார்கள். அதன் காரணமாகத்தான் பாலுணர்வு காட்சிகள், மற்றும் அநேக அசுத்தமாக காரியங்கள் உள்ளன, அதனால் தான் புகைபிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல், தொலைகாட்சியில் (TV) வருகின்ற தணிக்கை செய்யப்படாத காட்சிகள், எல்லாம் அசுத்தமாயிருக்கின்ற காட்சிகள். ஏன்-? - ஏனெனில் நீங்கள் வேறொரு இராஜ்யத்தை சேர்ந்தவர்களாயிருப்பதனால். நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிறந்து மீட்கப்படும் நாள் வரை பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்டுள்ளீர்கள். தேவனாலே பிறந்தவன் பாவம் செய்யமாட்டான், ஏனெனில் அவனால் பாவமே செய்ய முடியாது. தேவனுடைய வித்து அவனுக்குள் இருப்பதால் அவனால் பாவமே செய்ய முடியாது. பரிசுத்த ஆவி உங்களுக்குள் இருக்கும் வரை அது பாவத்தைக் குறித்த ஒவ்வொரு வாஞ்சையும் உங்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடும். ஆமென் உங்களால் பாவமே செய்யமுடியாது; உங்களுக்குள் வாஞ்சையே இராது. அதன் பேரில் நாம் அதிக நேரம் செலவிடலாம், ஆனால் துரிதமாகப் பார்ப்போம். அப்படியில்லையெனில் எல்லாவற்றையுமே கடந்து செல்ல முடியாது என்று நான் நினைக்கிறேன். கேள்வி:81 பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கும் சபைகள் ஏன் பெண் பிரசங்கிகளை பிரசங்கம் செய்ய அனுமதிக்கின்றன, ஏன் அவர்களுக்கு அவ்வளவு வல்லமையும் அதிகாரமும் இருக்கிறது-? 83 இப்பொழுது, இது ஒரு சிக்கலான காரியம் தான். இப்பொழுது, இதில் கருத்து வேறுபாடு கொள்ளப்போகின்ற மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன், ஆனால் ஒரு கிறிஸ்தவன் என்கின்ற வகையில் நான் அதைக் கூறித்தானாக வேண்டும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்த வேதவசனப் பூர்வமான மேற்கோள் வேதாகமத்தில் இல்லவேயில்லை. பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் எந்த ஒரு நபருக்காகிலும் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டதாக வேதாகமத்தில் எந்த இடத்திலும் இல்லை. அது ஆறாம் நூற்றாண்டில் போதிக்கப்பட்ட ஒரு கத்தோலிக்க பாரம்பரியமாகும். தெளிக்கப்படுதல் என்பதும் வேதாகமத்தில் கிடையாது, மக்களின் மீது தெளிக்கப்படுதல் அல்லது ஊற்றப்படுதல் என்பது கிடையாது. ஆனால் தண்ணீரில் மூழ்குதல் என்பது உள்ளது. நீங்கள் அதை அறிந்துகொள்ள விரும்பினால், இதைக் குறித்து என்னிடம் கிரேக்க மற்றும் எபிரேய குறிப்புகள் என்னிடம் உள்ளன. 84 பெந்தெகொஸ்தே நாளிலே, தங்கள் பாவ மன்னிப்புக்கென்று மனிதர் மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று பேதுரு முக்கிய நிபந்தனை விதித்தான். ஆகவே பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்பது ஒரு நாமமல்ல. பிதா, குமாரன் பரிசுத்த ஆவி... மத்தேயு 28:19 கூறுகிறது, ''ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளுக்கும் உபதேசித்து ... நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து நாமங்களில் அல்ல, நாமத்திலே, ஒருமை ... பிதாவின் நாமத்திலே, குமாரனின் நாமத்திலே பரிசுத்த ஆவியின் நாமத்திலே அல்ல, ஆனால் பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலேதான். பிதா ஒரு நாமம் அல்ல; குமாரன் ஒரு நாமம் அல்ல; பரிசுத்த ஆவி ஒரு நாமம் அல்ல. அவையெல்லாம் ஒரு நாமத்தைச் சார்ந்த பட்டப் பெயர்கள் தாம் ஆகும். 85 இப்பொழுது, பத்து நாட்கள் கழித்து பேதுரு “மனந்திரும்பி, ஒவ்வொருவரும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறினான். பிதா, குமாரன் பரிசுத்த ஆவி - பாருங்கள் அந்த தீவிரமான திரித்துவ கருத்தானது... பாருங்கள், அதிலிருந்து மூன்று தேவர்களை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். மூன்று தேவர்கள் கிடையாது. இங்கே அதை மூல கிரேக்க வேதாகமத்திலிருந்து உங்களுக்கு வாசித்துக் காண்பிக்க விரும்புகிறேன். அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்த ஒரே வழி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான், ஏனெனில் அதன் மூலமாக அவர்தான் தேவன் என்று அவர்கள் அடையாளங் கண்டுகொள்ளச் செய்ய வேண்டும் என்று மூல கிரேக்க வேதாகமமானது கூறுகின்றது. பிதா,குமாரன், பரிசுத்த ஆவி என்பது ஒரே தேவனின் அலுவல்களாகும். அவர் பிதாவாயிருந்தார்; அவர் குமாரனாயிருந்தார்; அவரே பரிசுத்த ஆவியானவராக உள்ளார். இது மூன்று அலுவல்கள் அல்லது மூன்று யுகங்கள், பிதாத்துவம், குமாரத்துவம், மற்றும் பரிசுத்த ஆவியின்யுகம். ஆனால் பிதா, குமாரன், பரிசுத்த ஆவிக்கு ஒரேயொரு நாமமுண்டு, அது தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதே. ஆகவே அந்த நாள் முதற்கொண்டு ஒவ்வொரு நபரும் இயேசு கிறிஸ்து நாமத்திலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர், மேலும் சிலர் எந்த நாமமும் இல்லாமல் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதை அவர்கள் கண்டுபிடித்தனர். ஆகவே மூல கிரேக்க மற்றும் எபிரேய வேதாகமமும், இயேசுவின் நாமத்திலே கொடுக்கப்படுகின்ற ஞானஸ்நானமானது பாவங்களின் மன்னிப்புக்காகத்தான் என்கிறது- கிரேக்க மற்றும் எபிரேய வேதாகமம் இரண்டுமே. மன்னிப்பு (Remit) என்றால், ''கருணைகாட்டுதல்' என்பதே. நான் ஏதாவதை மன்னித்தால், அதை எடுத்துப் போட்டுவிடுவதே என்பதாகும். அதை மன்னித்தல் - ''அதை எடுத்துப்போடுவதே''. 86 வேதாகமத்தில் எந்த ஒரு வேதவசனமும் காணப்படவில்லை .... மற்றும் அபோஸ்தலனாகிய பவுல் மேடான வழியாய் கடந்து போய் சில பாப்டிஸ்ட் சகோதரர்களைக் கண்டான், அப்போஸ்தலர் அவர்கள் ஒரு மகத்தான நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர்; அவர்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர்; அவர்கள் மகத்தான களிகூருதலையும் மற்றும் மகத்தான காரியங்களையும் உடையவர்களாயிருந்தனர்; அவர்கள் பிரசங்கித்து கூடாரத்தில் களிகூர்ந்து கொண்டிருந்தனர். 18 ஆம் அதிகாரத்தில் ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் இம்மக்களை சந்தித்திருந்தனர். அப்போலோஸ்; அவர்கள் பாப்டிஸ்டுகளாயிருந்தனர். ஆகவே பவுல் அவர்களிடம் சென்று, ''நீங்கள் விசுவாசிகளான முதற்கொண்டு பரிசுத்த ஆவி பெற்றீர்களா-?' என்று கேட்டான். அதற்கு அவர்கள், பரிசுத்த ஆவி என்பது உண்டு என்று எங்களுக்கு தெரியாதே“ என்றனர். அவன், “எவ்வாறு உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது-?'' என்று கேட்டான். ஜேமஸ் அரசன் மொழிப்பெயர்ப்பில் ''அப்படியானால் எந்த'' என்றுள்ளதை நானறிவேன்; மூல வேதாகமத்தில், ”அப்படியானால் எவ்வாறு என்றிருக்கிறது. ''எந்த அல்லது எவ்வாறு நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்கள்-?'' அவர்கள், 'இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்த அதே யோவான் தான் எங்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தான்'' என்றார்கள். பவுல், “இனிமேல் அது கிரியை செய்யாது. நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பெற வேண்டும் என்றான் என்று கூறினான். அவர்கள் இதைக் கேட்ட மாத்திரத்திலே மறுபடியுமாக தண்ணீருக்குள் வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே மறு ஞானஸ்நானம் பண்ணப்பெற்றார்கள். பவுல் அவர்கள் மீது கைகளை வைத்தான், பரிசுத்த ஆவி அவர்கள் மீது வந்தார். இப்பொழுது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று இங்கே கூறப்பட்டு, இங்கேயும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று கூறப்பட்டிருக்குமானால், அது இரண்டுமே ஓரே இலக்கை அடிக்காது. அது சரியாக இருக்கவேண்டும். 87 இப்பொழுது, மத்தேயு 28:19, இது தான் மத்தேயுவின் கடைசி அதிகாரம், மற்றும் கடைசி வசனம். நீங்கள் ஒரு காதல் கதையை , அது 'ஜானும் மேரியும் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்'' என்றிருந்தால், ஜானும் மேரியும் யார்-? நீங்கள் திருப்பி புத்தகத்தின் துவக்கத்திற்கு சென்று அவர்கள் யாரென்பதை கண்டு பிடியுங்கள். பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்த ஜானும் மேரியும் யாரென்பதை தெரிந்துகொள்ளுங்கள். இயேசுவும் புறப்பட்டுப் போய் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்றார், பிதா என்பது ஒரு பெயரல்ல, குமாரன் என்பது ஒரு பெயரல்ல,பரிசுத்த ஆவி, என்பதும் ஒரு பெயரல்ல, அப்படியானால் அவர் பேசிக் கொண்டிருந்தது எதைக் குறித்ததாயிருந்தது-? பிதா, குமாரன், பரிசுத்த ஆவி யார்-? அதைக் குறித்ததுவக்கத்திற்கு சென்று வாசித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் வம்ச அட்டவணையை நான் மேற்கோள் காட்டுவேன் , 1 ஆம் அதிகாரம் 18வது வசனம். இயேசுகிறிஸ்துவினுடைய ஜெபத்தின் விவரமாவது..... இப்பொழுது மிக கூர்ந்து கவனியுங்கள். அந்த கம்பத்தை நாம் பிதா என்று அழைக்கலாம், இந்த பிரசங்க பீடம், குமாரன் எனலாம், இது பரிசுத்த ஆவி எனலாம். இப்பொழுது இயேசுகிறிஸ்துவினுடைய பிதா யார்-? தேவன். நீங்கள் எல்லாருமே அதை ஏற்றுக்கொள்கிறீர்களா-? தேவன் தான் இயேசு கிறிஸ்துவின் பிதா. அது பிதாவாகிய தேவன் (கம்பம் -தமிழாக்கியோன்) இது தேவனாகிய குமாரன் (பிரசங்க பீடம் - தமிழாக்கியோன்) இது தேவனாகிய பரிசுத்த ஆவி. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெபத்தின் விவரமாவது.... (மத்தேயு 1:18) அவருடைய திருமணமான - தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடிவருமுன்னே அவள் .....(சபையார் பரிசுத்த ஆவியினால்-!'' என்று கூறுகின்றனர் - ஆசி) கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. (தேவன் தான் அவருடைய பிதா என்று நான் நினைத்திருந்தேன். நம்முடைய பிதாவானவர் தேவன் தான் என்று அவர் கூறினதாக நான் நினைத்திருந்தேன். அப்படியானால் தேவனும் மற்றும் பரிசுத்த ஆவியானவராகிய இருவரும், வெவ்வேறு மக்களாக இருப்பார்களானால், இரண்டு பேரும் வித்தியாசமான நபர்களாக தனிப்பட்ட நபர்களாக இருப்பார்களானால் தனிப்பட்ட குணம் வாய்ந்தவராயிருப்பார்களானால் அல்லது எந்தவிதத்திலும் நீ அவர்களை கூறி பொருத்தினாலும், எவ்விதத்தில் இருவரும் அவருடைய பிதாவாக இருக்க முடியும்-? அப்படியானால் அவர்கள் அதே தன்மை கொண்ட ஒரே நபராக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவருக்கு இரண்டு ஆவிக்குரிய தகப்பன் இருந்தார்கள் என்று தான் எடுக்க வேண்டும்) இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது : அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே அவள் பரிசுத்த ஆவினாலே... (பிதாவாகிய தேவனால் அல்ல) தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு பிள்ளையை சுமப்பாள்... (பாருங்கள்-?) அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள். இம்மானுவேல் என்பதற்கான வியாக்கியானம் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். 88 அவருடைய நாமம் என்னவென்று அழைக்கப்பட்டது-? இயேசு. சரி. பிதா குமாரன் பரிசுத்த ஆவி. இப்பொழுது பிதா மற்றும் பரிசுத்த ஆவி இரண்டுமே ஒரே தன்மையுடைய ஆவியானவர்தான். ஆவி என்றால் என்ன-? அது தேவனுடைய ஆவியாகும். அது அவ்வாறிருக்கையில், இயேசுவின் ஞானஸ்நானத்தின் மீது வந்து அவருக்குள் வாசம்பண்ணினார், ''இவர் என்னுடைய நேசகுமாரன். இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன். ''அவர் கீழே வந்து இயேசுவுக்குள் வாசம் செய்து அவரை பூமியின் மீது இம்மானுவேல் ஆக்கினார். ஆகவே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்னவாயிருந்தது-? (சபையார், ''இயேசு கிறிஸ்து“ என்று பதிலளிக்கின்றனர் - ஆசி) நிச்சயமாக அது தான். அதே வெளிப்பாட்டைத்தான் பேதுருவும் கொண்டிருந்தான். இப்பொழுது நம்முடைய பார்வையை சரியாக திசை நோக்கச் செய்வோம். நாம் சரியாக குறியை நோக்கி சுடுகிறோம். சீஷர்களும் அதே விதமாகத்தான் சரியாக சுட்டார்களா என்று நாம் பார்ப்போம். ஒவ்வொரு தடவையும் அவர்கள் கூடி வந்த போது, ஒவ்வொரு தடவையும் ஒரு ஞானஸ்நானமானது கூறப்பட்டபோது இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டியதாயிருந்தது, ஏனெனில் நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை'' என்று அவர் கூறினார். ஆகவே அது பிசாசின் பொய்யான ஒரு கருத்தாகும், இதை ஆதரிக்க எந்த ஒரு வேதவசனமும் கிடையாது. அது சரியே. 89 ஆகவே இப்பொழுது இது புண்படுத்தவில்லையென்று நான் நம்புகிறேன், ஆனால் இது சத்தியமாகும். பாருங்கள்-? இது சத்தியமே, சகோதரனே. உன்னால் அதை ... பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்நாமத்தில் யாருக்குமே கொடுக்கப்படாதிருக்கையில் உன்னால் பிதா குமாரன் பரிசுத்தஆவியை ஒரு புறத்திலும் இயேசுவை மறுபுறத்திலும் பொருத்த முடியாது. வேதாகமத்தில் ஒவ்வொரு நபருக்கும் இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அவ்விதமாக ஞானஸ்நானம் பெறாதவர்கள், பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுமுன்னர் மறுபடியுமாக வந்து ஞானஸ்நானம் பெற வேண்டியிருந்தது. அவர்கள் அதிக வல்லமையுடையவர்களாக ஒருக்கால் காணப்படலாம். ஆனால் தேவனுடைய மாபெரிய திட்டத்தை நீ பின்பற்றித்தான் ஆக வேண்டும். அது முற்றிலுமாக சரி. சரி. பிதா, குமாரன் பரிசுத்த ஆவி தவறான ஒன்றாகும். இப்பொழுது, பெண் பிரசங்கிகளைப் பொறுத்தவரையில், அது தவறான ஒன்று என்று எந்த ஒருவரும் அறிவர். அதைக் கூட நீங்கள் அறியாமலிருந்தால் அதைக் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என்று கிரேக்க வேதாகமத்திலிருந்து உங்களுக்கு வாசித்துக் காண்பிக்க எனக்கு நேரமிருந்தால் நலமாயிருக்கும். “ஸ்திரீகள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது வெட்கக்கேடானதாயும் (shameful), அவமானம் விளைவிக்கிறதாயும் (disgraceful) இருக்கிறதே கிரேக்க மொழியில் அல்ல, எபிரேய மொழியில் - அவர்கள் மேய்ப்பர்களுக்கு (Pastors) எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து பேசாமலிருக்ககக்கடவர்கள் என்று நியாயப்பிரமாணமும் (law) சொல்லுகிறது, (பாருங்கள்-?) ஏனெனில் ஸ்திரீகள் சபையில் பேசுவது வெட்கக்கேடானதாயும் (shameful) அவமானம் விளைவிக்கிறதாயும் (disgaceful) இருக்கிறதே. என்னே அதை ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டும். இப்பொழுது... அவைகள் வேதமுழுவதிலும் - மற்றும் தீமோத்தேயு இன்னும் மற்ற வேதவசனங்களையும் நான் இங்கே எழுதி வைத்துள்ளேன். அது சத்தியாயிருக்கிறது. சரி. 90 இப்பொழுது, அப்படியானால் அவர்களிடம் எப்படி வல்லமை இருக்கிறது-? நீங்கள், எப்படி அது செயல்படுகிறது'' எனக் கேட்கலாம். கவனியுங்கள், சகோதரனே உங்களை நான் கேட்கட்டும், அல்லது சகோதரனே, இந்த கேள்வியை கேட்டிருப்பவர் யாராயிருந்தாலும் சரி, சற்று கவனியுங்கள். முகமதியர்கள் மத்தியில் நடந்த சில மிக வல்லமை மிகுந்த கூட்டங்களை நான் கண்டிருக்கிறேன், அவர்கள் கூச்சலிட்டு, குதித்து, ஒரு கத்தியை எடுத்து இந்த விதமாக சரியாக நேராய் இருதயத்திற்குள் குத்தி மறுபக்கத்தில் அந்த ஓட்டைக்குள்ளாக தண்ணீரை ஊற்றுவார்கள், வெறுங்காலால் நெருப்பிற்குள் நடந்து செல்வார்கள், அதைப் போன்ற மற்ற எல்லாவற்றையும் செய்வார்கள், ஆணிகளாலான படுக்கைகளின் மேல்படுத்துக் கொள்வார்கள், மேலும் - மேலும், ஒரு பட்டயத்தை எடுத்து தங்கள் வாயில் நிற்க வைத்து அதை அப்படியே உள்ளே புகுத்துவார்கள் - நீங்களே போய் அதை வெளியே இழுத்து எடுக்கலாம், அதன் மீது இரத்தம் மற்ற எல்லாமும் இருக்கும். அந்த காரியங்களைக் குறித்து நீங்கள் பேசவேண்டாம். பாருங்கள்-? அது சத்தியம் அல்ல; அது எதையுமே உறுதிபடுத்துவதில்லை. பாருங்கள்-? இயேசு கூறினார். இங்கே உங்களுக்காக நான் எழுதி வைத்துள்ள வேத வசனங்களை நான் வாசிக்கட்டும், மத்தேயு 7:21-23; பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே-! கர்த்தாவே-! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே-! கர்த்தாவே-! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா-? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா-! உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா-? என்பார்கள். அப்பொழுது நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்கு சொல்லுவேன். 91 ஆகவே நீங்கள்... பாருங்கள், சத்தியம் ஒரேயொரு வழியில் மாத்திரம் தான் வரும் சகோதரனே. இப்பொழுது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் மக்கள் எல்லாரும் நரகத்திற்கு போவார்கள் என்று நான் கூறவில்லை. அவ்விதம் நான் கூறமாட்டேன். தேவன் தான் நியாயாதிபதியாவார்; அவர் என்ன செய்யவிரும்புகிறாரோ அதை அவர் செய்யட்டும், ஆனால் ஒருவனுக்கு பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று வேதாகமத்தில் சட்டப்படியான வேத வசனங்கள் எதுவுமே கிடையாது. இயேசுவின் நாமத்தின்படியல்லாமல் வேறு விதத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்த ஒவ்வொருவரையும் வந்து மறுபடியுமாக இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று பவுல் கட்டளையிட்டான், வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு போதகத்தை பிரசங்கித்தால் (கலா.1:8), அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்' எனக் கூறினான். ஆகவே தான் பவுல், முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன். வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொன்றை உங்களுக்கு பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.“ என்று கூறினான். 92 இப்பொழுது அது ... இங்கேயும் அங்கேயுமாக ஒரு இலக்கை நீங்கள் அடிக்க முடியாது. பிதாகுமாரன் பரிசுத்த ஆவி, 'அவர்கள் கொடுக்கட்டும், அவர்கள் எல்லாம் சரிதான்'' என்றும் பிறகு இயேசுவின் நாமம், அதையும் கொடுக்கச் செய்து, ''அது சரிதான்“ என்று கூறுவது சரியல்ல. சரியான ஏதோ ஒன்று இலக்கை அடிக்கத்தான் வேண்டும். தேவன் குழப்பத்திற்கு ஆக்கியோன் அல்ல. நீங்கள் வேதாகமம் முழுவதுமாக எங்கு வேண்டுமானாலும் புரட்டிப் பாருங்கள், அது ஒரு பொய்யான ஞானஸ்நானம் என்பதை நீங்கள் கண்டு அறிந்துகொள்வீர்கள். பிறகு வரலாற்றுக்கு சென்றுபாருங்கள். அது ஆறாம் நூற்றாண்டில் மகத்தான அக்டோபஸ் என்பவன், அப்படித்தான் என நான் நம்புகிறேன்; ஞானஸ்நானம் கொடுத்தவன் அல்லது ஒன்றான ... அது அக்டோபஸ் தான் என்று நான் கூறமாட்டேன், ஞானஸ்நானம் பண்ணப்பட்டவனின் பெயரை நான் மறந்துவிட்டேன்.... நீங்கள் அதைக் காணவேண்டுமென்றால் அதை - நிசாயா பிதாக்களுக்கு முன் புத்தகத்தில் காணலாம், 325 கி. பி. நடந்த நிசாயா ஆலோசனை சங்க கூட்டத்திற்கு முன்னர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தனர். பிறகு கத்தோலிக்க சபையானது அதிகாரத்திற்கு வந்தபோது அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தை எடுத்துக்கொண் டனர். அந்த சமயத்திற்கு முன்னர் எந்த ஒரு நபருக்கும் பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்படவேயில்லை. அது ஒரு கத்தோலிக்க பாரம்பரியமாகும். 93 அதில் அநேகத்தை லூத்தர் தன்னுடன் வெளியே கொண்டு வந்தார். மற்றதை வெஸ்லி கொண்டு வந்தார், இன்னுமாக நாம் அதனிடம் செல்கிறோம். ஆகவே அந்த கத்தோலிக்க போதகமானது, அதற்கு நம் பிதாக்களின் விசுவாசம் என்று அழைக்கப்படுகிறது, அது 144வது பக்கத்தில் காணப்படுகிறது என்று நான் நம்புகிறேன், அதில் அவர்கள் - அது, 'பிராடெஸ்டெண்டுகள் யாராவது இரட்சிக்கப்படுவார்களா-? என்பதற்கு, அது ஒருக்கால் அவர்களில் சிலர் இரட்சிக்கப்படலாம். அவர்கள் வேதாகமத்தின்படியே தான் ஜீவிப்போம் என உறுதி கூறி, அதே நேரத்தில் கத்தோலிக்க போதகத்தின் சிலவற்றை அவர்கள் கை கொள்கின்றனர்'' என்று கூறுகின்றது. பின்னும் அது, “வேதாகமம், மற்ற கத்தோலிக்கர், பிதா -கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தனர், ஆனால் நாம் அதிலிருந்து பக்தி பூர்வமானதை எடுத்து, அதை பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் மேல் வைக்கின்றோம், பிராடெஸ்டெண்டுகள் அதை அடையாளங் கண்டுகொள்கின்றனர். ஒருக்கால் அவர்களில் சிலர் இரட்சிக்கப்படலாம் என்று கூறுகிறது என்று எண்ணுகிறேன். அதனால் அவர்கள் இரட்சிக்கப்பட முடியாது-! அது சரி. கேள்வி:82 ஒன்றுக்கும் மேற்பட்ட உலகம் இருக்கின்றதா-? 94 ஆம், அநேக உலகங்கள் இருக்கின்றன, எபிரேயர் 1-வது அதிகாரம் 2-வது வசனம், எபிரேயர் 11-வது அதிகாரம் 3-வது வசனம். அநேக உலகங்கள் உள்ளன. தேவன் உலகங்களை உண்டாக்கினார், உ-ல-க-ங்-க-ள், உலகங்களை (W-O-R-L-D-S) உண்டாக்கினார். கேள்வி:83 ஒன்றுக்கும் மேற்பட்ட வானம் இருக்கின்றதா-? 95 ஆம், I-II கொரிந்தியர் 12:3ல் மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்ட ஒரு மனிதனை தான் அறிந்துள்ளதாக பவுல் கூறுகிறான். மேலும் வெளிப்படுத்தின விசேஷத்தில் இன்னும் பிறவற்றில் அதிக வானம் காணப்படுகிறது. நான் வேகமாக கடந்து செல்லப்போகிறேன், ஏனெனில் முடிக்க வேண்டிய நேரத்தைக் கடந்துவிட்டேன். இவைகளில் மற்றவற்றை வாசித்து கருத்தைக் கூறினால் பரவாயில்லையா-? கேள்வி:84 கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கின்ற ஒரு குழந்தை எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லுமா-? 96 நிச்சயமாக, அது ஒரு குழந்தையாக இருந்தால் அது மறுபடியும் பிறந்த ஒன்று. அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, எப்படியாயினும் அது மேலே சென்று விடும். உங்களுக்கு புரிகின்றதா-? கேள்வி:85 நான் சாக்கிரமந்துகளை, (SACRAMENTS) (புனித ஜெபங்களை) செய்யத் துவங்கும் போது கிறிஸ்து ஏன் எனக்கு தோன்றுகிறார்-? 97 நல்லது, உங்கள் இருதயமானது ஒரு நிலைப்பட்டு அதைச் செய்ய பரிசுத்தத்துடன் தேவனிடம் நீங்கள் வந்து கொண்டிருந்ததில் சந்தேகமேயில்லை; அதன் காரணமாகத் தான், உங்களுக்கு அவர் தோன்றினார். பாருங்கள், எனக்குத் தெரிந்த வரையில் அது தான் உண்மையான காரணமாகும். அதற்கு மேல் என்னால் கூற முடியவில்லை. அதற்கு ... நாம் பார்ப்போம். நாம்...(ஓ, ஓ . இங்கே நாங்கள் நிறுத்த விருப்பமில்லை, அப்படித்தானே-?) கேள்வி:86 நாம் உலகத்தோற்றத்திற்கு முன்னே இரட்சிக்கப்பட்டிருந்தால் - நாம்-? 98 ஆம், ஐயா-! வெளிப்படுத்தின விசேஷம் 13:8 ''நீங்கள் இரட்சிக்கப்பட்டு உங்கள் பெயரானது உலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்பாகவே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டது' என்று கூறுகின்றது. எபேசியர் 1:4 மற்றும் 5... நான் அதை வாசிப்பேன்; ஒரு நிமிடத்திற்கு மேல் ஆகாது, நீங்கள் பாருங்கள், அதை நான் மேற்கோள் காட்டவில்லை, நான் - நான்..... சரி, இதோ எடுத்து விட்டேன்; இதை நாம் வாசிப்போம். நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு ... (எபேசியர்1 ஆம் அதிகாரம் 3 வது வசனம்) நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்து இயேசுவுக்குள் (ஆங்கில வேதத்தில் உள்ளபடி - தமிழாக்கியோன்) உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்: (கவனியுங்கள்...தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு..... (கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே) .... அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே தம்முடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரப்புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். இப்பொழுது வெளிப்படுத்தல் புத்தகத்தில் .... இதோ நான் எடுத்துவிட்டேன்; இதை நான் சீக்கிரமாக வாசிக்கட்டும், ஆதலால் நீங்கள் - நீங்கள் பாருங்கள். நான் அதை மேற்கோள்காட்டவில்லை. அதை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். வெளிப்படுத்தல் 13:8, இதைச் சீக்கிரமாக கவனியுங்கள். உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். (அப்பொழுது தான் அது - சரி) கேள்வி:87 அப்படியானால் அப்பொழுது நாம் ஆவிகளாக இருந்தோமா-? 99 இல்லை, அப்பொழுது நாம் இருந்திருக்கவேயில்லை, ஆனால் தேவனுடைய சிந்தையில் நாம் இருந்தோம். அவர் அதைப் பேசினார். அப்பொழுது அது உண்டானது. இயேசு ... உலகத் தோற்றத்துக்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டி இயேசு கிறிஸ்து தான் என்று வேதாகமம் போதிப்பதை எத்தனைப்பேர் அறிவீர்கள். எப்படி-? தேவன் அதை பேசினார், ஆகவே அதை அவர் பேசினபோது அது செய்து முடிக்கப்பட்ட ஒன்றாக ஆனது. அவர் என்னைக் கண்ட போது, உலகத் தோற்றத்துக்கு முன்னே உன்னை அவர் பார்த்துவிட்டார், அவருடைய சிந்தையில் நாம் உருவகமாக மாத்திரமே இருந்தோம். பிறகு நாம் பூமிக்கு வந்தபோது, நாம் மனிதன் மற்றும் மனுஷியாக, ஆணும் பெண்ணுமாக இருந்தோம். அவர் ஆணிலிருந்து பெண்ணின் ஆவியை வேறுபிரித்து அதிலிருந்து ஒரு பெண்ணை உண்டாக்கி ஆணின் ஆவியை மனிதனுக்குள் விட்டுவிட்டார். ஒரு பெண் ஆணைப் போல் நடந்துகொள்வதை நீங்கள் காண்பீர்களானால், ஏதோ தவறு அங்கே உள்ளது. ஒரு ஆண் ஆண்மையில்லாத ஆவியைப் போன்று பெண்ணாக நடந்து கொள்வதை நீங்கள் காண்பீர்களானால், அங்கேயும் ஏதோ ஒன்று தவறாயுள்ளது. ஆகவே அவர் அப்பொழுது மனுஷனின் பக்கவாட்டில் ஒரு விலா எலும்பை எடுத்து அவனிலிருந்து ஒரு துணைவியை அவர் உண்டாக்கினார், ஆகவே அவர்கள் இருவரும் ஒன்றுதான். 100 உலகத்தோற்றத்திற்கு முன்னே நம்முடைய பெயர்களை ... ஆட்டுக் குட்டியானவர் அடிக்கப்பட்ட போது, புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் எழுதப்பட்டது, தேவனுடைய சிந்தையில் இருந்தபோது அவர் நம்மை உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே முன் குறித்தார். முன்னறிந்து, ஓ, சகோதரனே, இது சபையை எழச் செய்து இருக்கைகளினூடாக ஓடச் செய்யாதா-? இதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். மறுபடியும் பிறந்தவர்களாகிய நீங்கள், உலகத் தோற்றத்துக்கு முன்னே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் உங்கள் பெயர்களை தேவன் எழுதிவிட்டார். கிறிஸ்து மரித்து உங்களை நித்திய ஜீவனுக்கென்று அழைக்கத்தக்கதாக பரிசுத்த ஆவியை இங்கே அனுப்பியுள்ளார். நீங்கள் அதைப் பெற்றுள்ளீர்கள்; உங்களுடைய மீட்கப்படும் நாள் வரை நீங்கள் அங்கேயே இருக்கத்தக்கதாக அவர் உங்களை முத்திரித்திருக்கிறார். அல்லேலூயா-! அப்படியே தரித்திருத்தல். அப்படியே நானே தரித்திருக்கவில்லை; அவர்தான் தரித்திருக்கச் செய்கிறார். நான் என்ன செய்தேன் என்பதல்ல; அவர் என்ன செய்தார் என்பதே. ''நான் புகை பிடிப்பதை விட்டுவிட்டேன்; பொய் சொல்வதை நான் விட்டு விட்டேன்; திருடுவதை நான் விட்டுவிட்டேன்' என்பதல்ல. அது, அவர் எனக்காக மரித்த காரியம் ஆகும். அவர் என்னிலிருந்து என் ஆவியை வெளியே எடுத்து ஒரு புது சிருஷ்டியாக என்னை மாற்றிவிட்டார் இப்பொழுது அடுத்த கேள்வி... சீக்கிரமாக இதை நாம் பார்ப்போம். கேள்வி:88 சரீரம், ஆத்துமா, மற்றும் ஆவி இவைகளுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன-? 101 அழுகிப்போக வேண்டியதாயிருக்கின்ற, நீ காண்கின்ற மாம்சம் தான் சரீரமாகும். இந்த சரீரமானது தகப்பன் மற்றும் தாயினுடைய பாலுணர்வின் வேட்கையினால் பிறந்த ஒன்றாகும். இது அழுகிப்போக வேண்டும், இதனால் ஒரு நன்மையும் கிடையாது. ஆதலால் புதிய பிறப்பில், உயிர்த்தெழுதலில், நீ ஒரு புதிய சரீரத்தில் கொண்டு வரப்படும்போது, அது தேவன் ஆதாமுக்குச் செய்தது போன்று அவருடைய சிருஷ்ட்டிக்கும் வல்லமையாக அது இருக்கும், அப்பொழுது நீ வருவாய். கேள்வி:89 ஏவாள் பிசாசினால் காயினை கர்ப்பந்தரித்தாள் என்கின்ற உங்களுடைய கருத்தை தயவு கூர்ந்து நீங்கள் விளக்கி கூறமுடியுமா-? 102 நானாக அதைக் கூறினதே கிடையாது; ஏவாள் காயினை சர்ப்பத்தினால் கர்ப்பந்தரித்தாள் என்று கூறினேன். ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று “தேவனால் ஒரு மனுஷனைப் பெற்றேன்'' என்று கூறினாள். ஆதியாகமம் 4ம் அதிகாரம் 1ம் வசனம் தெளிவாகக் கூறுகின்றது. நிச்சயமாக-! எல்லா ஜீவனும் தேவனிடத்திலிருந்துதான் வரவேண்டும். ஜான் டில்லிங்கர் தேவனிடத்திலிருந்து தான் வந்தான். அடால்ப் ஹிட்லர் தேவனிடமிருந்துதான் வந்தான். ஒவ்வொரு... ஜார்ஜ் - ஜார்ஜ்விட்ஃபீல்டு தேவனிடமிருந்து வந்தார். அதே போன்று பாப் இங்கர்சால் கூட, ஒவ்வொரு நபரும் தேவனிடத்திலிருந்து வந்தவர்கள் தான். நான் கூறினதெல்லாம் இதுதான் இதை யாராவது இடித்து வீழ்த்தும்படியாகவே நான் விரும்புகிறேன். பாருங்கள்-? வேதாகமம் கூறுகிறது - அவர் (ஆதியாகமம் 3:8ல்) -நான்... அந்த இந்த கேள்வியானது ஏவாளுக்கு ஏதோ ஒன்று நேர்ந்தபோது கேட்கப்பட்டது, அவள் சர்ப்பத்தை சந்தித்தாள். இப்பொழுது சர்ப்பமானது ஒரு பாம்பாக இருக்கவில்லை; அவன் ஒரு மிருகமாக இருந்தான், சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் தந்திரமுள்ளவனாயிருந்தான். அங்கே ஒன்றுமே... 103 மனிதனையும் குரங்கையும் ஒன்றாக இணைத்துக் காட்டக்கூடிய ஏதோ ஒரு மிருகத்தின் எலும்பை இன்றைக்கு விஞ்ஞானமானது நோக்கி கொண்டிருக்கிறது. அதற்கு நெருங்கின இனமாக மனிதன் போன்று வாலில்லா ஆப்பிரிக்க குரங்கு வகையான சிம்பான்சியை அவர்கள் கண்டெடுத்துள்ளனர். அவர்களால் ஒரு எலும்பையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களால் முடியாது, ஏனெனில் அது சர்ப்பமாயிருந்தது. இது தேவனுடைய வெளிப்பாடாகும். கவனியுங்கள்-! சர்ப்பமானது ஒரு வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலத்தில் இருந்த மனிதனைப் போன்று, தேவனுக்கு - அல்லது மனிதனுக்கு அடுத்த நிலையில் இருந்த ஒன்று. ஆகவே அது தான் ஒரேயொரு காரியமாகும். சாத்தான் வேறொரு விலங்கை உபயோகிக்க நேர்ந்திருந்ததேயானால், அந்த வித்தானது ஸ்திரீயினுடைய வித்துடன் கலந்திருக்காது. எந்த ஒரு விலங்கின் வித்துடன் ஒரு மனிதனின் வித்தை உங்களால் கலக்க முடியாது. அது கிரியை செய்யாது. இந்த விலங்கிற்கு முற்றுபுள்ளி வைத்தாயிற்று - அது அழிந்துவிட்டது. தேவன் அவனை ஒரு பாம்பாக மாற்றி விட்டார். ஆனால் நினைவு கூறுங்கள்... ஏன் நீ ஒளிந்து கொண்டாய்-? ஏன் நீ உன்னையே அத்தி இலைகளினால் மூடிக் கொண்டாய்-?'' என்றார். அப்பொழுது அவர்கள் ஒருவரை நோக்கி ஒருவர் பழி சுமத்த ஆரம்பித்தனர் - ஒரு சேனையிலுள்ளவர்கள் செய்வது போல. ஆதாம், ''நீர் எனக்கு தந்த ஸ்திரீயானவள், அதின் கனியை எடுக்கும்படிக்கு என்னை கவர்ச்சியூட்டி இழுத்தாள்'' என்றான். அதற்கு அந்த ஸ்திரீயானவள், ''சர்ப்பமானது என்னை வஞ்சித்தது'' என்றாள். இப்பொழுது, வஞ்சித்தல் என்றால் என்ன அர்த்தம்-? 'அவள் - அவன் என்னை வஞ்சித்தான்'' தேவன் உன் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் நான் பகை உண்டாக்குவேன் என்று கூறினார், வித்து சர்ப்பத்திற்கு வித்தென்பது உண்மையாகவே இருந்தது, 104 அது காயீனின் மூலமாக வந்தது. பெருவெள்ளம் ஏற்பட்ட காலம் வரை மெருகேற்றப்பட்ட அறிவாளிகள், கல்வி அறிவு பெற்ற மக்கள் எல்லாருமே காயீனின் மூலமாகத்தான் வந்தனர். அதற்குப் பிறகு கொல்லப்பட்ட ஆபேல் வந்தான். இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலை பிரதிநிதித்துவப் படுத்தத்தக்கதாக அவனுடைய இடத்தில் சேத் எழுப்பப்பட்டான். அவனிலிருந்து ஆடு மேய்ப்பவர்கள், தாழ்மையான மக்கள் வேத பயமுள்ள மக்கள் இன்னும் பிறமக்கள் வந்தனர். இந்த பிரபஞ்சத்தின் பிள்ளைகள் இராஜ்யத்தின் பிள்ளைகளைக் காட்டிலும் அறிவாளிகளாகவும், சாதுரியமானவர்களாய் இருக்கிறார்கள் என்று இயேசு கூறினார். அது சரியே-! அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க நம்மால் முடியாது. அவர்களைப் போல உங்களை ஆக்கிக்கொள்ள முயற்சிக்காதீர்கள். தேவனுக்கு முன்பாக உங்களை தாழ்த்துங்கள். அறிவாளியாகவும் சாதுரியவானாகவும் இருக்க விருப்பம் கொள்ளாதீர்கள். இயேசுவை மாத்திரமே அறிந்து கொள்ள வாஞ்சை கொள்ளுங்கள், அதை அப்படியே விடுங்கள், ஏனெனில் அங்கே தான் இன்றைக்கு சர்ப்பத்தின் வித்தானது இருக்கின்றது. ஆனால், விஞ்ஞானிகளும், நாகரீகப் பாங்கான மனிதர்களும், கல்வி அறிவு பெற்றவர்களும், மகத்தான அறிஞர்களும் தங்கள் சபைகளில் இருக்கிறார்கள் என்று மக்கள் பெருமைக்குரிய சிறப்பாக கூறிக்கொள்கின்றனர். நான் அதைக் காட்டிலும் ஆரம்ப எழுத்துகளைக் கூட (a,b,C) அறியாதிருக்கிற ஆனால் அவன் கிறிஸ்துவின் வித்தாக இருக்கின்ற வரைக்கும் தேவனை நன்றாக அறிந்திருக்கிற, ஒரு மனிதனை என் சபையில் கொண்டிருப்பதையே நான் விரும்புவேன் (சரியா). 105 ஸ்திரீயின் வித்தானது, கிறிஸ்துதான் அந்த ஸ்திரீயின் வித்தாகும். கிறிஸ்துவை மரியாள் பிறப்பித்தாள். காயீன் யூதாஸ் காரியத்துக்குள் வந்தது தான் சர்ப்பத்தின் வித்தாகும். அங்கே சரியாக இயேசு மற்றும் யூதாஸ் அவதாரம் எடுத்திருந்தனர், தேவன் மற்றும் பிசாசு. கல்வாரி சிலுவையில் அங்கே நான்கு பேர் மரித்துக் கொண்டிருந்தனர்.இயேசுவின் இரு பக்கத்திலும் கள்ளர் இருந்தனர், யூதாசும் ஒரு காட்டத்தி மரத்தில் தூக்கிட்டுக் கொண்டான். மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் அதுவும் ஒரு சிலுவைதான்: அங்கே இருந்த ஒரு கள்ளன், ''நீர் தேவனுடைய குமாரனானால் எங்களை கீழே இறங்கச்செய்யும்'' என்றான். மற்றவனோ, ''கர்த்தாவே, நாங்கள் நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நீரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே. நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்'' என்று கூறினான். இயேசு, ''இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசியிலிருப்பாய்'' என்று கூறினார். சுவிசேஷப் பிரசங்கியாகிய இயேசு சிலுவையின் மீது அங்கே பிரசங்கித்துக் கொண்டிருந்தார். சாத்தான் அவிசுவாசியாகிய அந்த சர்ப்பத்தின் வித்தை தன்னுடன் எடுத்துக்கொண்டு திரும்பவுமாக பாதாளத்திற்கு சென்று கொண்டு இருந்தான். ஸ்திரீயின் வித்தாகிய அவருடனே ஒரு மனந்திரும்பின பாவியுடன் தேவன் பரலோகத்திற்கு திரும்ப சென்று கொண்டிருந்தார். நிச்சயமாக-! அது பிசாசினுடைய வித்தல்ல; அது சர்ப்பத்தின் வித்தாக இருந்தது. சர்ப்பம் வித்தைக் கொண்டிருந்த ஒன்றாக காணப்பட்டது; அதற்கு வித்து இருந்ததென்று வேதாகமம் கூறுகின்றது. அந்த சர்ப்பத்தின் வித்தானது இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் அதிகளவில் ..... இப்பொழுது நீங்கள் இதைக் குறித்து மற்றொரு கேள்வியை என்னிடம் கேட்கலாம். நமக்கு மாத்திரம் நேரம் இருந்தால், உங்களுக்கு தேவையான எல்லா காரியங்களும் என்னிடம் இருக்கின்றது.... கேள்வி:90 I-யோவான்5:18ல் காணப்படுகின்ற “பாவஞ்செய்யான்'' என்றால் என்ன என்று உங்களால் தயவு கூர்ந்து விவரித்து கூற இயலுமா-? 106 என்னே, நாம் இங்கே சரியாக அதில் இருக்கிறோம், என்று விசுவாசிக்கிறேன். ஒருக்கால் அது ... இதோ எடுத்துவிட்டேன், சரியாக இதற்கு திருப்பினேன். ஒருக்கால் நான் இதை வாசிக்கவேண்டுமென்று கர்த்தர் விரும்பியிருக்கலாம். சரி. I யோவான், தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று;... நிச்சயமாக இல்லை நான் அதை முழுவதும் விளக்கிக் கூறினேன். அவனால் பாவம் செய்யமுடியாது; அவன் தேவனால் பிறந்தவனாக இருக்கிறான்.''பாவஞ்செய்யான்'', அவனால் பாவம் செய்ய முடியாது, வித்தானது அவனுக்குள்ளாக தரித்திருக்கும். இதற்கு ஒத்ததாக நீங்கள் ஒப்பீட்டுப் பார்க்க வேறொரு வேதவசனம் உள்ளது, ரோமர் 4:8, 4 மற்றும் 5-8, தேவன்.... அநேக வருடங்களுக்கு முன்னர் தாவீது பேசினான், ''எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் (பாருங்கள்-?), ஏனெனில் அவன் பாவம்செய்யான்'' என்றான். 107 இப்பொழுது, இன்னும் ஒரு கேள்வி உள்ளது. அவ்வளவு தான். நாம் இதைப் பார்ப்போம்-! கேள்வி:91 சகோரதன் பில் மத்தேயு 19:9ல் காணப்படுகின்ற வேசித்தனம் மற்றும் விபச்சாரம் இவைகளுக்கு உள்ள வித்தியாசம் என்ன-? மத்தேயு19:9ல், இயேசு, ''ஆதலால், எவனாகிலும் தன் மனைவி, வேசித்தனம் செய்த காரணத்தினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், விபாரஞ் செய்கிறவனாயிருப்பான்“ என்று கூறினார். வேசித்தனம் மற்றும் விபச்சாரம் என்பதற்கிடையேயுள்ள வித்தியாசத்தைப் பொறுத்தமட்டில், இந்த வார்த்தையை எப்படி வேண்டுமானாலும் பொருத்தலாம். ஆனால் அவர் அங்கே எதைக் குறித்து பேசுகிறார் என்பதைத் தெளிவாக பார்ப்போமானால், திருமணமாகாத ஒரு பெண்ணால் விபச்சாரம் செய்ய முடியாது, ஏனென்றால், அவளுக்கு புருஷன் இல்லாமல் இருப்பதால் அவனுக்கு மாறாக அவளால் விபச்சாரம் செய்வதற்கில்லை. ஆனால் அது அவளுக்கோ ஒரு அசுத்தமான ஒன்றாகும். அவள் அவ்விதமாகச் செய்திருந்தால், அதை அவள் புருஷனுக்கு, அவர்கள் இருவரும் விவாகமாவதற்கு முன்னதாகவே அவள் அறிக்கை செய்ய வேண்டும். அப்படி செய்யாதிருக்கும் பட்சத்தில், அவளுடைய புருஷனுக்கு பின்னர் அது தெரிய வருமானால், அவளை தள்ளிவிட அவனுக்கு உரிமை உள்ளது, ஏனெனில் அவள் ஒரு பொய்யான வாக்கை செய்தவளாகக் காணப்படுகிறாள். ஏனெனில் வேதாகமம் கூறுகிறது, இது .... இல்லை வழக்கம் கூறுகிறது, இது உங்களுக்கு நன்றாக அறியப்படுவதாக (எனக்கும் அவ்வாறு தான் செய்யப்பட்டது) தேவனுடைய வார்த்தையின் பிரமாணம் அனுமதிக்கும் விதத்தைத் தவிர அதற்கு மாறாக தம்பதிகள் இணைக்கப்படுவார்களாயின், அவர்களுடைய விவாகம் சட்டப் பூர்வமான ஒன்றல்ல. இருதயத்தின் அந்தரங்கங்கள் எல்லாம் பகிரங்கமாக வெளிப்படத்தப்படப்போகின்ற அந்த நியாத்தீர்ப்பின் நாளிலே பதிலளிக்கப்போகிற உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்யவேண்டியதென்ன என்று நான் கட்டளையிடுகிறதாவது, சட்டப்படியாக நீங்கள் இணைக்கப்படக்கூடாது என்று உங்கள் இருவருக்கும் ஏதாவது தடை இருக்குமானால் இப்பொழுதே அதை நீங்கள் அறிக்கையிடுங்கள்'' உங்களுக்கு புரிகின்றதா. பாருங்கள்-? ஆதலால் வேசித்தனம் என்பது ஒரு இளம் பெண் அசுத்தமான ஜீவியம் செய்வாளெனில், அது தான் வேசித்தனமாகும், ஏனெனில் அவளுக்கு புருஷன் இல்லை. ஆனால் அவளுக்கு விவாகமாகி, பிறகும் அதே விதமாகவே அவள் ஜீவிப்பாளெனில், அவள் தன் புருஷனுக்கெதிராக விபச்சாரம் செய்கிறாள். 108 சில காலத்திற்கு முன்னர் ஒரு பெண் என்னிடம் வந்து, “ஓ, நான் எல்லாவற்றையும் அறிக்கை செய்து விட்டேன்'' என்றாள். அவள் மிகவும் பதற்றம் கொண்டவளாக நரம்புத்தளர்ச்சி கொண்டிருந்தாள், ''அதைக் குறித்த எல்லாவற்றையும் தேவனிடம் அறிக்கை செய்து விட்டேன்'' என்றாள். நான், ''நீ அதை உன் புருஷனிடம் அறிக்கையிட வேண்டும். நீ தேவனுக்கு கெதிராக விபச்சாரம் செய்யவில்லை; உன் புருஷனுக் கெதிராகத்தான் விபச்சாரம் செய்தாய் என்றேன். அது சரி. ஆகவே ஒரு மனிதன் ஒரு பெண்ணை விவாகம் செய்யுமுன், அந்தப் பெண்ணோ அவனை விவாகம் செய்யும் முன்னர் அசுத்தமான ஜீவியம் செய்து, பிறகு அவள் அவனிடம் வந்து திருமணம் செய்து நீண்ட காலம் சென்று பிறகு அவள் அவனிடம் “உங்களிடம் ஒன்றை நான் கூற விரும்புகிறேன். நான் வேறொரு மனிதனுடன் வாழ்ந்து திரிந்து கொண்டிருந்தேன், உங்களிடம் நான் கூறவில்லை'' என்று கூறுவாளானால், அவன் அவளைத் தள்ளி விட்டு வேறொருத்தியை விவாகம் செய்ய இவனுக்கு உரிமையுண்டு என்று இயேசு கூறினார், ஏனெனில் துவக்கத்திலேயே இவர்களுக்கு விவாகமாகவில்லை, ஏனெனில் அவனுக்கு எதிராக ஒரு - ஒரு பொய்யை வஞ்சகமாக கூறியிருந்தாள். இப்பொழுது, வேறொரு கேள்வி இங்கேயிருக்கிறது... உங்களுக்கு நன்றி... கேள்வி:92 தயவுகூர்ந்து 1 யோவான் 5:16 ஐ விளக்கிக் கூறவும். I யோவான் 5, இதோ நான் எடுத்துவிட்டேன். 109 மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல் செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அந்த பாவத்துக்கு வேண்டுதல் செய்ய நான் சொல்வேன். சரி. நாம்... இதற்கு நாம் நேரடியாக பதிலளித்து சீக்கிரமாக முடிப்போம், இது கடைசி கேள்வியாகும். நாம். மாற்கு -க்கு திருப்புவோம், மரணத்துக்கு ஏதுவான பாவம் என்னவென்று சரியாக இது விளக்கும். மரணத்துக்கு ஏதுவான பாவம் ஒன்றிருக்கிறது, அந்த பாவத்துக்கு நீங்கள் ஜெபிக்கவும் செய்யமாட்டீர்கள். மாற்குக்கு திருப்புங்கள், மாற்கு 3ஆம் அதிகாரம். மாற்கு 3 ஆம் அதிகாரம் நாம் எடுத்து பிறகு, சீக்கிரமாக முடிக்கும் முன்னர் இந்த ஒரு வேதவசனத்தை நாம் பார்ப்போம். நாம் 3, 22க்கு திருப்புவோம். எருசலேலமிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயல்செபூலைக் கொண்டு இருக்கிறான். (அவர் மக்கள் எண்ணங்களை பகுத்தறிந்ததை அவர்கள் கண்டு இருந்தனர்)... இவன் பெயல்செபூலைக் கொண்டிருக்கின்றான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள் அவர்களை அவர் அழைத்து ஒரு உவமையாய் அவர்களுக்குச் சொன்னதாவது, சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி-?... (இப்பொழுது, பிசாசினால் சுகமளிக்க முடியுமானால், எப்படி அவனால் செய்யமுடியும்-?) ... சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி-? ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலை நிற்கமாட்டாதே. ஒரு வீடு தனக்குத் தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலை நிற்கமாட்டாதே. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலை நிற்கமாட்டாமல், அழிந்து போவானே. பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக் கூடாது. கட்டினானேயாகில், அவன் வீட்டை கொள்ளையிடுவான். எப்படி அவராலே அவர்களுடைய இருதயங்களுக்குள் சென்று அதை .... கண்டுபிடிக்க முடிந்தது. பாருங்கள்-? அவர் தேவன். மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்த தூஷணங்களும் அவர்களுக்கு மன்னிக்கப் படும்; ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ் சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான். அதுதான் பிரிக்கப்படுதல் ... (ஏன் அதை அவர் கூறினார்-?) .... அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார். 110 கிறிஸ்துவுக்குள்ளிருந்து இந்த அற்புதங்களைச் செய்து கொண்டிருந்த தேவனுடைய ஆவியை இவ்விதமாக அழைத்தல், இவைகளைச் செய்தது பிசாசினுடைய ஆவி என்று அவர்கள் கூறினார்கள், இதுதான் மன்னிக்க முடியாத பாவம் என்று இயேசு கூறினார். ஆகவே நீங்கள் பாருங்கள். ஒரு மனிதன்... அவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசி , பரிசுத்த ஆவியை பரியாசம் செய்வானானால் அவனுக்காக நீங்கள் ஜெபம் செய்யாதீர்கள், அவ்விதமான ஒரு நபருக்கு ஜெபம்செய்ய உங்களுக்கு அனுமதி இல்லை. அதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா-? ஏனெனில் மரணத்துக்கேதுவான பாவமுண்டு. ஒரே ஒரு பாவம் மாத்திரமே உண்டு. எல்லா விதமான பாவமும் மனுஷர் குமாரர்களுக்கு மன்னிக்கப்படும், ஆனால் பரிசுத்த ஆவியை தூஷித்தால் அது மன்னிக்கப்படவே முடியாது என்று இயேசு கூறினார். இப்பொழுது, மக்கள் ''சரி, பரிசுத்த ஆவியை தூஷித்தல் ...'' எனலாம். தூஷணம் என்றால் என்ன-? ''ஏளனம் செய்து கேலிக் கூத்தாக்கி பரியாசம் செய்தல், தூஷணம்'' என்று அர்த்தமாகும். சரி அவரை என்னவென்று தூஷணம் செய்தார்கள்-? அவரை கிரியை நடப்பிக்கச் செய்து, அவர் செய்துகொண்டிருந்த காரியங்களை நடப்பிக்கச் செய்து, அவருக்குள் இருந்த பரிசுத்த ஆவியானவரை அவர்கள், 'இவன் பிசாசாகிய பெயல்செபூலினாலே பீடிக்கப்பட்டுள்ளான். இவனுக்குள் இருக்கின்ற குறி சொல்லுகின்ற ஒருவன், அதாவது பிசாசுதான் இவன் இந்த காரியங்களை நடப்பிக்கும்படிக்குப் பண்ணுகிறான். மக்களுடைய இருதயத்திலுள்ள அந்தரங்கங்களை அறிதல், பிலிப்பு கூட்டத்திற்கு வருமுன்னர் அவன் யார் என்று அறிந்ததாக இவன் கூறுதல், பிசாசுகளை துரத்துதல், இங்கே இந்த காரியங்களைச் செய்தல், இவன் பெயல்செபூலினாலே இதைச் செய்கிறான், இவன் ஒரு பிசாசு'' என்று கூறினர். ஆகவே இயேசு இந்த பாவத்திற்கு மன்னிப்பில்லை, இது ஜெபிக்கப்பட முடியாத மன்னிக்கப்பட முடியாத ஒரு பாவமாகும். இது மன்னிக்கப்பட முடியாது. இதை செய்கின்ற ஒரு மனிதனோ அல்லது பெண்ணோ தங்களை, என்றென்றுமாக நித்தியமாக தேவனுடைய பிரசன்னத்திற்குள் வரமுடியாதபடிக்கு முத்திரையிட்டுக் கொண்டார்கள், இவர்களுக்கு மன்னிப்பேயில்லை . 111 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா-? நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் கவனியுங்கள், நீங்கள் மிக அருமையாக இருந்தீர்கள், இந்த கேள்விகள் கடினமானவைகள்,இவை நிறைய நேரம் எடுத்தன. நீங்கள் இந்த சபைக்குள் 7.30, 8.30, 9.30, இரண்டரை மணிநேரமாக இந்த உஷ்ணமான சபையில் உட்கார்ந்து கொண்டிருந்தீர்கள். இந்த நேரம் வரை சபையாரில் தொண்னூற்றெட்டு சதவீதம் அப்படியே தங்கள் இருக்கையில் அப்படியே இருந்தனர். இதை நான் கூற விரும்புகிறேன்: ஜெபர்சன்வில்லே, இவ்வாறு நான் உணர்கிறேன்; நீ இந்த கிருபையின் நாளிலே, பாவத்துக்குள்ளாகி விலகிக் சென்றாய் என்று நான் நம்புகிறேன். முழு அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இதுவே தான் என நான் நம்புகிறேன், ஆனால் உலகத்திலேயே எனக்கு மிகவும் உத்தமமான நண்பர்களில் சிலர் சரியாக இங்கே ஜெபர்சன்வில்லில் இருக்கின்றனர். எனக்காக மரிக்கவும் தயாராக உள்ள மக்கள் இங்கே எனக்குண்டு. 112 இப்பொழுது, இவ்வாறுள்ள ஒரு உஷ்ணமான இரவு பொழுதில், நம்முடைய வாசலில் உள்ள அந்நியர்கள், ஒருக்கால் நான் வேதவசனங்களின் பேரில் பேசி அதை விவரித்த விதத்தைக்கூட விசுவாசிக்காத ஒரு நபர் இங்கே எவ்விதம் அமர்ந்து கொண்டிருப்பார் என்பதை எனக்கு கூறுங்கள், ஆனால் அவர்களோ பயபக்தியுடன் தேவபயத்துடனே உட்கார்ந்து அதை கவனித்தனர். நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்களாக. காரியங்கள் தூசிகளாய் மாறும்போது நீங்கள் தாமே கிறிஸ்து இயேசுவின் பேரில் வாழ்வீர்களாக. உங்களுடைய தேவையாயிருக்கின்ற எல்லாவற்றையும் தேவன் அளிப்பாராக. உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையெல்லாவற்றையும் அவர் உங்களுக்கு அளிப்பாராக. நான் அவருடைய ஊழியக்காரன் என நீங்கள் விசுவாசித்து, என்னுடைய ஜெபங்கள் உங்களுக்கு உதவும் என்று விசுவாசித்தால், நம்முடைய பாவங்களுக்கு பரிகாரமாக, நமக்காக மரித்த, தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை எழுப்பின பரலோகத்தின் தேவனானவர், இங்கே இப்பொழுது இந்த கட்டிடத்தில் எங்கும் வியாபித்து நிறைந்துள்ளவராகிய அவர் தாமே உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை உங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே, உங்கள் ஒவ்வொருக்காவும் நான் ஏரெடுக்கும் உத்தமமான ஜெபமாகும். சூரியன் உங்கள் மேல் வந்து உங்களை சுட்டெரித்துப் போடாத உஷ்ணமான காற்றுகள், உங்கள் மீது வீசாத ஒரு தேசத்திலே , நான் உங்களுடன் வருடக்கணக்காக இலட்சக்கணக்கான வருடங்களாக உங்கள் ஒவ்வொருவருங் கூட தேவனுடைய ராஜ்யத்தில் உட்கார்ந்து இந்த இரவுகளின் நித்தியமான காரியங்கள், மற்றும் எப்படியெல்லாம் நாம் ஒன்றாக உட்கார்ந்திருந்தோம் என்பதைப் பற்றி பேசுவேன் என நான் நம்புகிறேன். 113 அவருடைய கிருபை தாமே உங்களுடன் இருப்பதாக. உங்களுடைய வியாதிகளிலிருந்து அவர் தாமே உங்களை சுகப்படுத்துவாராக. அவர் தாமே உங்களுக்கு பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பாராக. இதை நான் இப்பொழுது எவ்வித அவமதிப்பும் இல்லாமல் கூறுகிறேன். சர்ப்பதின் வித்தைக் குறித்தும் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானத்தைக் குறித்தும், மற்றவைகளைக் குறித்தும் நான் கூறினது ஏதாவது மனஸ்தாபத்தை விளைவித்திருக்குமானால்.... இப்பொழுது, ஒருவர், ''சகோதரன் பிரன்ஹாம் ஒருத்துவக்காரர்'' என்று கூறுவாரானால், இல்லை ஐயா, நான் ஒருத்துவக்காரன் அல்ல. இயேசுவே தம்முடைய சொந்த பிதாவாக இருப்பார் என்று நாம் நம்புவதில்லை. இயேசு ஒரு பிதாவைக் கொண்டிருந்தார் என்றும் அவர் தான் தேவன் என்றும் நான் விசுவாசிக்கிறேன். ஆனால் தேவன் இயேசு என்று அழைக்கப்பட்ட இந்த சரீரத்திற்குள்ளாக கூடாரமிட்டு வாசம் செய்தார், நம்மோடிருக்கிற தேவனாகிய இம்மானுவேல் அவர் தான். இந்த தேவனைத் தவிர வேறே தேவன் கிடையாது. அவர் தான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. ஆகவே பிதா, குமாரன் பரிசுத்த ஆவி நாமம் ... கர்த்தராகிய பிதா, குமாரனாகிய இயேசு, தேவனுடைய ஆவியாகிய, லோகாஸாகிய பரிசுத்த ஆவி. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து; அது அவராகும். தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது. 114 நீங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றோ, தெளிக்கப்பட்டோ, ஊற்றப்பட்டோ அல்லது எந்த விதத்திலோ இருந்தாலும், உங்களை நான் நேசித்து, நீங்களும் நானும் தேவனுடைய ராஜ்யத்தில் சந்திப்போம் என்று என் முழு ஆத்துமாவோடும் சரீரத்தோடும் நான் ஜெபிக்கிறேன், சந்தேகத்திற்கிடமின்றி நான் விசுவாசிக்கிறேன், நான் தவறாயிருந்தால், தேவன், என்னை மன்னித்து விட்டுவிடுவார். உங்களுடைய தவற்றையும் மன்னித்து விட்டு விடுவார். ஆனால் வேதாகமத்தை பொறுத்தவரை என்னுடைய உறுதியான நம்பிக்கையானது, ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை சரியாக இலக்கை அடிக்க வேண்டும் என்பதேயாகும். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்கவில்லையெனில் மறுபடியுமாக நீங்கள் அவ்விதமாக எடுக்க வேண்டும் என நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன். 115 நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறவில்லையெனில், உங்கள் ஜீவியம் இனிமையை உணராதிருந்தால் நீங்கள் அந்நிய பாஷையில் பேசியிருந்தாலும், நீங்கள் சத்தம் போட்டிருந்தாலும், நீங்கள் மேலும் கீழும் குதித்திருந்தாலும், நீங்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்து அவர்கள் சுகமாக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் எல்லா விதமான அற்புதங்களும் அடையாளங்களும் செய்திருந்தாலும் அவை ஒரு பொருட்டல்ல. ஆனால் ஆவியின் கனிகளாகிய, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு, பொறுமை, விசுவாசம் ஆகிய இந்த எல்லா காரியங்களும் உங்களிடம் காணப்படவில்லையெனில், அப்படியானால் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்கு கட்டளையிட்டு உங்களை கட்டாயம் பண்ணுவதென்னவெனில், பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது வரும் வரைக்கும் நில்லாமல் ஜெபித்துக் கொண்டேயிருங்கள்-! நீங்கள் எவ்வளவாக அந்நிய பாஷையில் பேசியிருந்தாலும், எவ்வளவாய் நீங்கள் கூச்சலிட்டிருந்தாலும், எவ்வளவு காலமாக ஒரு சபையின் அங்கத்தினராக நீங்கள் இருந்திருந்தாலும், நீங்கள் இங்கே இருந்திருந்தாலும், அது ஒரு பொருட்டேயல்ல. நீங்கள் என்ன வெல்லாம் செய்திருந்தாலும் பரிசுத்த ஆவியானவராகிய கிறிஸ்து உங்களுடைய இருதயத்தில் தம்முடைய இடத்தை எடுக்கும் வரை, நீங்கள் உலகத்தின் காரியங்களுக்கெல்லாம் மரித்து, கிறிஸ்துவிற்காக புதிய சிருஷ்டியாக ஜீவிக்கும்வரை, அவையெல்லாம் ஒன்றுமே கிடையாது. 116 தேவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாகும். இப்பொழுது நாம் எழுந்து நிற்போம். ஓ, இது ஒரு அருமையான சபைக்கூட்டம். நீங்கள் மிக அருமையாக இருந்தீர்கள்; இப்படியே நீங்கள் நிற்கும்படிக்கு விடுவதை நான் வெறுக்கிறேன். அங்கே பின்னால் இருக்கும் சிறு எடித்தின் பிறந்த நாள் இதுவாகும். எடித் நான் உன்னுடைய... இதை எனக்காக நான் சகோதரன் நெவிலை செய்யச் சொல்லப்போகிறேன். இந்த வாலிப பெண்ணிற்கு என்ன வயதாகிறதென்று நாம் பார்ப்போம். முப்பத்தெட்டு வயது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. டேவி, இல்லை டெட்டி உன்னால் கூடுமானால் உனக்கு மகிழ்சியான பிறந்த நாளாயிருப்பதாக என்னும் பாடலுக்கு ஸ்ருதியை கொடு . சரி. உனக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளாயிருப்பதாக உனக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளாயிருப்பதாக சகோதரி எடித் உனக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளாயிருப்பதாக உனக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளாயிருப்பதாக இப்பொழுது சபையாரெல்லாருமாக சேர்ந்து, வயது செல்லாது என்று சேர்ந்து பாடுவோமாக. வயதுசெல்லாது, வயது செல்லாது, அந்த தேசத்திலே நமக்கு வயதாகாது வயது செல்லாது , வயதுசெல்லாது, அந்த தேசத்திலே நமக்கு வயதாகாது அந்த இனிமையிலே நாம் அழகான அக்கரையிலே சந்திப்போம் அந்த இனிமையிலே நாம் அழகான அக்கரையிலே சந்திப்போம். COD-11 பரிசுத்த ஆவியின் பேரில் கேள்விகளும் பதில்களும் 59-12-19 பிரன்ஹாம் கூடாரம்,ஜெபர்சன்வில், இந்தியானா, அமெரிக்கா 1. நேற்று இரவுக்குப் பிறகு நாமெல்லாரும் நிரப்பப்பட்டுள்ளோம். அநேகர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர் என்னும் நல்ல அறிக்கைகளை இன்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். 2 சகோதரன் கிரகாம் இன்றிரவு நம்முடன் கூட இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம், அவர் இங்குள்ள அந்த கூடாரத்தை சேர்ந்த நம்முடைய கூட்டாளிகளில் ஒருவர். அவர் ஊடிகாவிலுள்ள பரிசுத்த சபையின் போதகராக இருக்கிறார். சகோதரன் ஜாக்ஸன், கடந்த இரவு அவர் இங்கிருந்தார், அவர் இருந்தார் என்று நான் நினைக்கிறேன், அல்லது இப்பொழுது இங்கே கூட்டத்தில் பின்னால் எங்கோ உள்ளார், யாரோ ஒருவர் சொன்னார்…ஆம், சகோதரன் ஜாக்ஸன் இப்பொழுது கூட்டத்தில் பின்னால் உள்ளதைக் காண்கிறேன். மற்றும்—மற்றும் சகோதரன் ரடல், இன்றிரவு அவர் இங்குள்ளாரா? அவரும் “62,”-ல் நம்மைச் சேர்ந்த கூட்டாளிகளில் ஒருவர். அவர்கள் இங்கிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள்…ஓ, சகோதரன் பாட், மற்றும் இந்த எல்லா சகோதரர்களும், நாங்கள்—கூட்டத்திலுள்ள மற்றவர்களும். நீங்கள் அனைவரும் இன்றிரவு இங்கு வந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 3 இப்பொழுது, இது நியாயமென்று என்னால் காண்பிக்கமுடியுமானால், உங்களிடம் பேசுவதற்கு சிறந்த போதகர்களில் சிலரை இங்கு அழைக்கலாமென்றிருக்கிறேன், ஏனெனில் நேற்றிரவு அப்பேர்ப்பட்ட ஒரு பெரிய நேரம் இருந்த காரணத்தால், என் தொண்டை சற்று கரகரப்பாயுள்ளது. 4 இப்பொழுது என் மனைவி என்னை திருத்துபவளாயிருக்கிறாள்; சகோதரரே, நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நேற்றிரவு பின்னால் இருந்த ஜனங்களால் நான் பேசுவதை சரியாக கேட்கமுடியவில்லையென்று அவள் கூறினாள், ஏனெனில் நான் இதற்குள் பேசிக்கொண்டிருந்தேன். இப்பொழுது, நாம் துவங்கும் முன்பு, நான் ஒன்றை முயற்சி செய்யப்போகிறேன். இப்பொழுது, அது மேலானதாயிருக்குமா என்று நான் எதிர்பார்க்கிறேன். மிகவும் பின்னால் உள்ளவர்களுக்கு நன்றாகக் கேட்கிறதா? அல்லது நான் பின்னால் சென்று பேசினால் இதைவிட நன்றாகக் கேட்கிறதா? அல்லது இது நல்லதா? இப்பொழுது, தேனே, நீ இந்த முறை சரியாகக் கூறவில்லை. இங்கு நின்றால்தான் நன்றாகக் கேட்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர். சரி. ஓ, என்னே! அவள் ஒரு ஸ்திரீ. அது ஒரு நல்ல விஷயம், அவளை நீண்டகாலமாக நான் பெற்றிருக்கிறேன். அவள் கூறுவது வழக்கமாக சரியாயிருக்கும். 5 பாருங்கள், இந்த மூன்று இரவு ஆராதனைகளிலும் நாம் நிச்சயமாகவே மகத்தான நேரத்தை அனுபவித்து வருகிறோம்; நானும் அனுபவித்தேன். இப்பொழுது, இந்த ஒலி நாடாக்கள், நேற்று இரவு ஒலிநாடாக்களைத் தவிர…நான் சகோதரன் கோட்டை அழைத்து, கூடாரத்துக்கென்று இந்த ஒலி நாடாவை பதிவு செய்யும்படி கூறினேன். ஆனால் பில்லி பால் அவருடைய காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன். எனவே எனக்குத் தெரிந்த வரையிலும், ஒலிநாடா கூடாரத்துக்கென்று பதிவு செய்யப்படவில்லை. எனவே அதை நாம் இழந்துவிட்டோம். நாம் என்ன விசுவாசிக்கிறோம் என்று—யாராகிலும் கூற—அதை சபையின் நிமித்தமாக நான் அதை சபையில் வைத்திருக்க விரும்பியிருப்பேன். 6 இப்பொழுது, நான் நேரத்தோடு கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்துவிட்டால், இன்றிரவு நான் மகத்தான கலந்துரையாடல் என்பதன் பேரில் பேசப்போகிறேன். அதன்பிறகு, நாளை காலை சுகமளிக்கும் ஆராதனை உள்ளது. நாங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப்போகின்றோம். ஆகையால், நாங்கள் சென்று—இல்லை “இப்பொழுது, நான் உன்னை, உன்னை, உன்னை அழைத்துச் செல்லப் போகின்றேன்” என்று கூறமுடியாது. அது சரியாக இருக்காது. ஆனால் நாங்கள் ஒரு தொகுதி ஜெப அட்டைகளை வழங்குகிறோம், எங்கிருந்தாவது அந்த அட்டைகளோடு, நான் ஒரு சிலரை மேடையின் மேல் அழைப்பேன். அப்பொழுது பரிசுத்த ஆவி வெளிப்படுத்தத் துவங்கினால், அது கூட்டத்தின் மத்தியிலும் சென்று சுகமளிக்கும் ஆராதனைக்காக ஜனங்களைத் தேர்ந்தெடுக்கும். பின்னர், நாளை காலை, கர்த்தருக்கு சித்தமானால், சுகமளிக்கும் ஆராதனைக்கு முன்பு நான் பேசுவேன். 7 என் மனைவி சிரிப்பதை நான் காண்கிறேன். தேனே, நான் பேசுவதை உன்னால் கேட்கவே முடியயில்லையா? ஓ, நான் பேசுவதை உன்னால் கேட்க முடிகிறது. பாருங்கள், அது அருமையாயுள்ளது. அவள் மிகவும் பின்னால் உட்கார்ந்து கொள்வாள், நான் பேசுவதை கேட்க— முடியவில்லையென்றால், அவள் தன்னுடைய தலையை அசைத்து, “நீங்கள்…நீங்கள் பேசுவதை கேட்க முடியவில்லை, நீங்கள் பேசுவதை கேட்க முடியவில்லையே” என்பாள். 8 எனவே நாளை—நாளை இரவு தண்ணீர் ஞானஸ்நான ஆராதனையுடன் கூடிய ஒரு சுவிசேஷக் கூட்டம் இருக்கும். அதன்பிறகு, நாளை இரவு நான் பிரசங்கித்து முடிந்தவுடன், நாம் திரைகளை இழுத்து, நாளை இரவு தண்ணீர் ஞானஸ்நானம் இங்கு கொடுப்போம். கர்த்தருக்கு சித்தமானால், கர்த்தருக்கு சித்தமானால், காலை நான்—இல்லை நாளை இரவு நான் ஒரு பொருளின் பேரில் பேச விரும்புகிறேன்; அது ஒரு—ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டது என்பதாகும். அதன்பிறகு, புதன்கிழமை இரவு இங்கு நாங்கள் இருந்தால், புதன் கிழமை இரவு நான் இங்கு இருக்க கர்த்தர் அனுமதித்தால், நான் பேச விரும்பும் பொருள்; நாங்கள் கிழக்கில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்துகொள்ள வந்திருக்கிறோம் என்பதாகும். இப்பொழுது, அது கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தின மாலையாகும். 9 பிறகு, கிறிஸ்துமஸ் முடிந்தவுடனே, கிறிஸ்துமஸ் விடுமுறை வாரம். அப்பொழுது தான் நாங்கள் கடிதங்கள் அனைத்திற்கும்…சகோதரன் மெர்ஸியரும் மற்றவர்களும் கடிதங்களை வழக்கமாக அனுப்புவதுண்டு. நாங்கள் அவைகளைப் பரப்பி, இந்த கடிதங்களுக்கு ஜெபத்தை ஏறெடுத்து, உலகின் எந்த பாகத்துக்கு நாங்கள் செல்ல வேண்டுமென்று கர்த்தர் எங்களை வழிநடத்தவேண்டுமென்று ஜெபிப்போம். 10 இப்பொழுது, அவர்கள், கிறிஸ்தவ வர்த்தக புருஷர்கள், பிளாரிடாவில் உடனடியாக நடைபெறவிருக்கும் தங்களுடைய மாநாட்டில் இருக்கும்படி ஒரு மகத்தான அழைப்பு விடுத்துள்ளனர். அங்கிருந்து நான் கிங்ஸ்டனுக்கு சென்று, பிறகு ஹய்டிக்கு சென்று, அங்கிருந்து போர்டோ ரிக்கோவுக்கும், தென் அமெரிக்காவிற்கும் சென்று, மெக்ஸிகோ வழியாகச் செல்கிறேன். 11 ஆனால் கர்த்தர் என்னை நார்வேக்கு வழி நடத்துவதாகத் தோன்றுகிறது. ஏனென்று எனக்குத் தெரியவில்லை. “தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன்” என்னும் சிறு புத்தகம் உங்களுக்குத் தெரியுமல்லவா? அதுவே நார்வேயில் மார்க்க சம்பந்தமான மிகப்பெரிய வெளியீடாயுள்ளது. தேவன் அங்கு என்ன செய்துள்ளார் என்று சற்று யோசித்துப் பாருங்கள். நான் அங்கிருந்தபோது, வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்க அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. நான் மூன்று இரவுகள் அங்கிருந்தேன், அவர்களோ வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்க என்னை அனுமதிக்கவில்லை. எனவே தேவனால் என்ன செய்ய முடியுமென்று நீங்கள் பாருங்கள். அங்கு ஜனநெருக்கம் அதிகமாயிருந்தபடியால் அவர்கள் குதிரைகள் மேலேறிய காவற்படையினரைக் கொண்டு வந்து, நான் அந்த இடத்தை அடையும்படி ஜனங்களை தெருக்களினின்று விலக்கினர். நான் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்கவில்லை. அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைக்கும்படி செய்து; நான் அவர்களுக்காக ஜெபித்தேன். 12 எனவே…[யாரோ ஒருவர் சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகின்றார்—ஆசி.] ஆம், அதன் பின்னர், நான் நிச்சயம் செய்வேன். இப்பொழுது, நாளை காலை…இப்பொழுது, இன்றிரவு, இந்த கேள்விகளை நாம் பார்க்கலாம், ஏனென்றால் நாம் உண்மையாகவே சில நல்ல கேள்விகளைப் பெற்றுள்ளோம். கர்த்தர் எவ்வளவு நேரம் நம்மை அதன் பேரில் வைத்திருக்கப் போகின்றார் என்று எனக்குத் தெரியாது. பின்னர், நாளை காலை பில்லி பால், ஜீன், அல்லது லியோ, இவர்களில் ஒருவர் இங்கு எட்டு மணி முதல் எட்டு முப்பது மணி வரைக்கும் இங்கே ஜெப அட்டைகளை வழங்குவார். இப்பொழுது, நகரத்துக்குப் புறம்பேயிருந்து வந்துள்ளவர்களே, நீங்கள் மறந்துபோகாதபடிக்கு நான் உங்களிடத்திற்கு மறுபடியும் வருவேன். நீங்கள் ஜெபவரிசையில் வரவிரும்பினால், கூடுமான வரையிலும், நாங்கள் நகரத்துக்குப் புறம்பேயுள்ளவர்களை வரிசையில் வரவழைப்போம். 13 இப்பொழுது, சில நேரங்களில் இங்கே இந்த சபையில் அவர்கள், “எப்படியோ…” என்று சொல்லக்கூடிய நிலையை நாங்கள் அடைகிறோம். நகரத்துக்குப் புறம்பேயுள்ளவர்களை நாங்கள் இங்கு கொண்டுவரும்போது…யாராகிலும் ஒருவர், “பாருங்கள், அவர்களுக்கு என்ன கோளாறு இருந்தது என்று எனக்குத் தெரியாது. ஒருக்கால் அவர் தவறாக கூறியிருக்கலாம்” என்கிறார். ஆகையால் நாங்கள் இந்த நகரத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு வந்தால்; அவர்களோ, “நீர் அவர்களை ஏற்கனவே அறிந்திருந்திருக்கலாம்” என்கின்றனர். எனவே…பிறகு அவர்கள்—அது கூறப்பட்டுள்ளது, “பாருங்கள், நான் உங்களுக்கு சொல்லுகிறேன், அது ஜெப அட்டைகளிலேயே உள்ளன” என்கின்றனர். பாருங்கள், ஜெப அட்டைகளை வைத்திராதவர்களைக் குறித்து என்னவாயுள்ளது. ஒவ்வொரு நாளும் இவ்வாறு…கூறப்பட்டு வருகிறது. என்ன சொல்லுகிறீர்கள்? [சகோதரன் பிரான்ஹாம் ஒலிப்பெருக்கிக்கு சற்று பின்னால் நிற்கும்படியாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்—ஆசி.] ஒலிப்பெருக்கில் இருந்து பின்னால் நிற்கவேண்டுமா? பாருங்கள், நான் எப்பொழுதும் பாதையின் நடுவிலிருந்து பிரசங்கிப்பவன் என்று உங்களுக்குத் தெரியும். எனவே நான் அந்தவிதமாக அதை வைக்கலாம். இது பரவாயில்லையா? இது மேலானதாயுள்ளது. இது அருமையாயுள்ளது. அது என்னவென்று உங்களிடம் கூறுவேன். இங்குள்ள நம்முடைய—நம்முடைய ஒலிப்பெருக்கி அமைப்பு தரம் குறைந்தது, மிகவும் தரம் குறைந்தது. இப்பொழுது நல்ல ஒன்றை வாங்க நாங்கள் முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை, ஏனெனில் புது கூடாரத்தை நாங்கள் உடனடியாகக் கட்ட விரும்புகிறோம். அப்பொழுது எங்களுக்கு விசாலமான அறை உண்டாயிருக்கும் (புரிகிறதா?), நாங்கள் இங்கே சுற்றிலும் உள்ள இடத்தை சற்று விசாலமாக்கி, இன்னும் கூடுதலான இடங்களை அதில் ஏற்படுத்தினால், அப்பொழுது நாம் இங்கே இருக்கும் போது கூட்டங்களை ஏற்பாடு செய்யலாம். 14 இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், காலையில் பையன்கள், அவர்களில் ஒருவர் அல்லது மூன்று பேரும் எட்டு முப்பது மணிக்கு இடையே, இல்லை, எட்டு மணி முதல் எட்டு முப்பது மணி வரைக்கும் ஜெப அட்டைகளை வழங்குவார்கள். அப்போது எல்லோரும் வந்து இடங்களில் அமர போதிய ஒரு வாய்ப்பை அளிக்கிறது. அவர்கள் எப்படி ஜெப அட்டைகளைக் கொடுக்கின்றனர், ஏன் அதைக் கொடுக்கின்றனர் என்பதைக் குறித்தும் நான் உங்களிடம் கூறிக்கொண்டிருந்தேன். இது ஒழுங்காக இருக்க வேண்டும். பார்த்தீர்களா? இப்பொழுது, நான் இங்கு வந்தால், இப்பொழுது போலவே, “இந்த ஸ்திரீ வரட்டும், இந்த ஸ்திரீ, அந்த மனிதன், இந்த ஸ்திரீ…” என்று கூறினால் என்னவாகும்? நீங்கள் பாருங்கள், அது ஒருவிதமாக—அது ஒருவிதமாக கடினமாயிருக்கும். புரிகிறதா? பிறகு நீங்கள்…நான் அப்படி பலமுறை செய்திருக்கிறேன். நாளை காலையும் அநேகர் இல்லாமற்போனால், ஒருக்கால் நான் அப்படியே செய்யக்கூடும். நான், “நகரத்துக்குப் புறம்பேயிருந்து இங்கு வந்துள்ள எத்தனைபேருக்கு கோளாறு உள்ளது, எழுந்து நில்லுங்கள்” என்பேன். 15 சகோதரன் மெர்ஸியர், நீங்கள் என்னை மீட்க வருகிறீர்கள். நீங்கள் எனக்கு உதவி செய்யப்போகிறீர்களா? [சகோதரன் மெர்ஸியர் பதிலளிக்கிறார்—ஆசி.] ஓ, நீங்கள் வருகிறீர்கள்…அவர் தன்னைக் விடுவித்துக்கொள்ளவே வருகிறார். நான் இன்று உங்கள் பெண் சிநேகிதியிடம் பேசினேன். இப்பொழுது, நீங்கள் என்னிடம் நல்லவராயிருப்பது நலம். புரிகிறதா? சரி. அது நல்லது. சகோதரன் லியோ, அந்த தைரியத்தை நான்—நான் மெச்சுகிறேன். அது சரியில்லாதிருக்கும்போது, நாம் அதை எப்படி சரிபடுத்துவது என்று நாம் அறிந்துள்ளபடி, நம்மால்—நம்மால் இயன்ற வரையில் மிகச் சிறப்பாக, அதை சரிபடுத்துவோமாக. 16 எனவே இப்பொழுது, நகரத்துக்குப் புறம்பேயிருந்து வந்துள்ளவர்களில் கோளாறோடு உள்ளவர்களை தங்கள் கரங்களை உயர்த்தும்படி கேட்பேன். அதன்பிறகு அங்கு நான் நின்று கொண்டு, பரிசுத்த ஆவி வரத் துவங்கி முழுகூட்டத்தையும் ஆட்கொள்ளும் வரைக்கும், யாராகிலும் ஒருவர் பேரில் கவனம் செலுத்திக்கொண்டிருப்பேன். இங்கு அப்படி நடப்பதைக் கண்டவர்கள் எத்தனை பேர் இங்குள்ளனர்? நிச்சயமாக! பாருங்கள், பாருங்கள்? எனவே எந்த முறையை கடைபிடித்தாலும், அதனால் பாதகமொன்றுமில்லை. அது சரியாக… 17 இதை நீங்கள் நினைவில் கொள்ள விரும்புகிறேன், நான் மறு படியும் அதை நாளை காலை கூற முயற்சிப்பேன். புறஜாதிகளுக்கு, அவர்களுக்கு அருளப்பட்ட சுவிசேஷம் ஒரு விசுவாச சுவிசேஷமாயுள்ளது, அது கிரியைகள் அல்லவே அல்ல. பார்த்தீர்களா? நான் நேற்று இரவு கூறினதுபோன்றேயாகும். பெந்தெ கொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி விழுந்தபோது, அவர்கள் யூதர்களிடம் சென்றபோது (அப் 19:5), அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள அவர்கள் மேல் அவர்கள் கைகளை வைக்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் சமாரியரிடம் சென்றபோதும், அவ்வாறே அவர்கள் மேல் அவர்கள் கைகளை வைக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் அவர்கள் புறஜாதியாரிடம் கொர்நேலியுவின் வீட்டுக்குச் சென்றபோது, “இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில்…” அங்கு கைகள் யார் மேலும் வைக்கப்படவில்லை. 18 ஆசாரியனாகிய, யவீருவின் மகள், அந்த சிறு பெண் மரணப்படுக்கையிலிருந்தபோது, அவன், “நீர் வந்து அவள் மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள்” என்றான். ஆனால் புறஜாதியான, அந்த ரோம நூற்றுக்கு அதிபதியோ, “நீர் என் வீட்டு வாசலுக்குள் பிர வேசிக்க நான் பாத்திரன் அல்ல, ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்” என்றான். அதுதான். பார்த்தீர்களா? 19 அந்த சீரோபேனிக்கியா தேசத்து ஸ்திரீ, உண்மையில் அவள் கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள், அவள்—இயேசு அவளிடம் கூறினபோது, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” என்றார். அவள், “மெய்தான் ஆண்டவரே; ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே” என்றாள். அப்பொழுது அவர், “நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப் போயிற்று” என்றார். ஆகையால் நீங்கள் நல்ல காரியங்களைக் கூறுங்கள். மற்றவரைக் குறித்து நல்லதான எதையாவது கூறுங்கள். இயேசுவைக் குறித்து பேசுங்கள். விசுவாசமுள்ள எதையாகிலும், உண்மையான எதையாகிலும் கூறுங்கள். பிசாசுகளை அப்புறப்படுத்துவதற்கு அதுவே வழி. அவர் ஒருபோதும் கூறவில்லை—அவர் அந்த பெண் ணுக்காக ஒருபோதும் ஜெபம் செய்யவில்லை. அவள் சுகமடைந்துவிட்டதாக அவர் ஒரு வார்த்தையும் கூறவில்லை; அவர், “நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம், நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம்…” என்றார். 20 அன்றொரு நாள், ஹாட்டி ரைட், அவள் ஒன்றையுமே கேட்கவில்லை. அவள் அங்கு வெறுமனே உட்கார்ந்துகொண்டிருந்தாள். ஆனால் அவள் சரியான காரியத்தைக் கூறினாள், அது பரிசுத்த ஆவியைப் பிரீதிப்படுத்தினது. எனவே பரிசுத்த ஆவி அவளிடம் திரும்பிப் பேசி, “ஹாட்டி, உனக்கு விருப்பமான எந்தக் காரியத்தையும், உனக்கு தேவைப்படுகிறதை நீ பெற்றுக்கொள்ளும்படிக் கேள். அது உண்மையில் நடக்கிறதா அல்லது இல்லையாவென்று கண்டறிந்துகொள். எது வேண்டுமானாலும் கேள் (முற்றிலும் இழுத்துக்கொண்டு அங்கு உட்கார்ந்திருந்த ஊனமுள்ள அவளுடைய சகோதரியின் சுகத்துக்காக; அங்கே மலைகளின் மேல் அவள் தோண்டி கஷ்டப்படுவதைத் தவிர்க்க பத்தாயிரம் டாலர்கள்; குன்றிப்போயிருந்த அவளுடைய உடலில் வாலிபம் திரும்பளிக்கப்பட); நீ எதைக் கேட்க வேண்டுமானாலும், நீ அதை இப்பொழுதே கேள். அது வந்து உனக்கு இப்பொழுதே கொடுக்கப்படவில்லையென்றால், நான் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி.” அது—அது ஏதோ ஒரு காரியமாயுள்ளது, இல்லையா? 21 இயேசு, “இந்த மலையைப் பார்த்து…” என்றார். இப்பொழுது என்ன நடந்துள்ளது என்பது பற்றி—நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; அதுவே நாம் பிரவேசித்துக் கொண்டிருக்கும் ஊழியமாயுள்ளது. நாம் அந்தப் பாதையில் இப்பொழுது அதிக தூரம் சென்றுள்ளோம். விரைவில் கர்த்தராகிய இயேசுவின் வருகை இருக்கும். ஒரு நொடியில், ஒரு இமைப்பொழுதில் சபை மறுரூபமாக்கப்படுவதற்கு நமக்கு எடுத்துக்கொள்ளப்படுதலுக்கேற்ற விசுவாசம் இருக்க வேண்டும், இல்லையென்றால் நாம் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லவே முடியாது. ஆனால் கவலைப்படாதிருங்கள், அது அங்கிருக்கும். அது அங்கிருக்கும். இந்த சபையின் வல்லமை எழும்புகிறபோது, அது அதனுடைய சகோதரர்களை கொண்டு வரும்; அந்த சபையின் வல்லமை எழும்பி, அதனுடைய சகோதரர்களை கொண்டு வரும்; அந்த சபையின் வல்லமை அதன் மற்ற சகோதரர்களை கொண்டு வரும்; பின்னர் ஒரு பொதுவான உயிர்த்தெழுதல் உண்டாயிருக்கும். நாம் அதை முன்னோக்கி எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். 22 இப்பொழுது, மறந்துபோக வேண்டாம், ஜெப அட்டைகளை காலை எட்டு மணியிலிருந்து எட்டு முப்பது மணி வரைக்கும் கொடுப்பார்கள். பிறகு எத்தனை அட்டைகள் மீதமுள்ளது என்று நான் கேட்பேன், பிறகு அட்டைகள் வழங்குவதை நிறுத்திவிட்டு, நான் திரும்பிச் சென்று உட்கார்ந்துகொள்வேன் (பார்த்தீர்களா?), ஏனென்றால் அவர்கள் ஒருக்கால் அதற்குள் எல்லா அட்டைகளையுமே விநியோகம் செய்திருக்கக் கூடும், அல்லது அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அட்டைகளை அங்கே எங்கிருந்தாவது கொடுத்திருப்பார்கள். பையன்கள் எழுந்து நின்று, உங்கள் முன்னிலையில் எல்லா அட்டைகளையும் ஒன்றொடொன்று கலந்துவிடுவார்கள். பிறகு உங்களுக்கு ஒன்று வேண்டுமானால், உங்களுக்கு ஒன்று வேண்டுமானால், அல்லது அதுபோன்று இன்னும்…பிறகு நான் வரும்போது, நான்…எங்கிருந்து கர்த்தர் கூப்பிடச் சொல்லுகிறாரோ…அவர், “கூப்பிட வேண்டாம்” என்று சொல்லிவிட்டால், என்னவானாலும், (பாருங்கள்?), நான் அவர்களை கூப்பிடவேமாட்டேன். 23 நான்…அந்த ஊழியம் கிட்டத்தட்ட மறைந்து கொண்டே வருகிறது; இதைக் காட்டிலும் ஒரு பெரிய ஊழியம் வந்துகொண்டிருக்கிறது. ஞாபகம் கொள்ளுங்கள், இந்த மேடையின் மீதிருந்தோ அல்லது இந்த பிரசங்க பீடத்திலிருந்தோ கூறப்பட்ட ஒன்றாகிலும் இதுவரை தவறினதில்லை. கைப்பிடித்து வியாதியையறிந்த ஊழியத்தைக் குறித்து உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அது என்ன செய்ததென்று பார்த்தீர்களா? இருதயத்தின் சிந்தனைகளை அறிந்துகொள்ளுதல், அது என்ன செய்ததென்று பார்த்தீர்களா? இப்பொழுது இதைக் கவனியுங்கள்: வார்த்தையை உரைத்தல், அது என்ன செய்கிறதென்று பாருங்கள். பார்த்தீர்களா? நான் அநேக ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கூறினேன்—இந்த சபைக்கு (நான் இந்த கூடாரத்தை சேர்ந்தவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்)—அநேக வருடங்களுக்கு முன்பு, மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஏதோ ஒன்று செயல்பட ஆயத்தமாயிருந்தது; அது சம்பவிக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது. அது இப்பொழுது நடைபெறும் நேரத்தில் உள்ளது…அதுதானே இப்பொழுது உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஓ, நாம் எவ்வளவு நன்றியுள்ள வர்களாயிருக்கிறோம். மிக்க மகிழ்ச்சி. 24 இப்பொழுது, நாம் இங்கு சில மிகக் கடினமான கேள்விகளைப் பெற்றுள்ளோம், அவைகளை உடனடியாக நாம் பார்க்க விரும்புகிறோம். யாரோ ஒருவர் நான் வைத்திருந்த எல்லா புத்தகங்களையும் பார்த்திருக்கிறார். நான், “பாருங்கள், ஒரு அறிவாளிக்கு ஒரு புத்தகம் மாத்திரமே தேவைப்படுகிறது” என்று கூறினேன். ஆனால் நான் ஒரு அறிவாளியல்ல. எனவே ஆராய்ந்து பார்க்கும்படி எனக்கு நிறைய புத்தகங்கள் தேவையாயுள்ளன. பாருங்கள், இது கிரேக்க மொழிபெயர்ப்பு, இது வேதாகமம், இது ஒரு வேதவசன ஒத்துவாக்கியப் புத்தகம். எனவே, அது ஒரு…இந்த கேள்விகளுக்கு பதிலுரைக்க கர்த்தர்தாமே நமக்குதவி செய்து, அவருடைய தெய்வீக சித்தத்தின்படியும் அவருடைய வார்த்தையின்படியும் நம்மை வழிநடத்த வேண்டுமென்று இப்பொழுது நாம் அவரை வேண்டிக் கொள்ளப்போகின்றோம். 25 எனவே இப்பொழுது, நாம் ஜெபத்துக்காக சிறிது நேரம் நம்முடைய தலைகளை வணங்கு வோமாக. கர்த்தாவே, கடந்த மூன்று இரவுகளாக நீர் எங்களுக்கு செய்து வந்துள்ளதைக் குறித்து எங்கள் உள்ளத்தின் ஆழங்களிலிருந்து உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஓ, போதகர்கள் பின்னால் உள்ள அறையில் சந்தித்து, கரங்களைக் குலுக்கி, புதுப்பிக்கப்பட்ட விசுவாசத்துடன் மேலும்—மேலும் ஒரு புதிய பாதையை ஏற்றுக்கொள்வதைக் காண்கிறோம். தொலைபேசியில் கூப்பிட்டு…உம்முடைய பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வார்த்தை படிப்படியாகக் கூறுவதை ஜனங்கள்—உம்முடைய வார்த்தையில் புரிந்துகொண்டப் பிறகு, அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வதைக் காண்பது எங்கள் இருதயத்தைக் களிகூரச் செய்கிறது. கர்த்தாவே, அதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 26 நாங்கள் எளிய மக்கள் என்னும் காரணத்தால், நீர் காரியங்களை எங்களுக்கு மிகவும் எளிதாக்குகிறீர். நாங்கள் எப்பொழுதுமே முழுவதும் எளியவர்களாயிருக்கும்படி செய்ய வேண்டும் என்று—என்று நாங்கள் உம்மை வேண்டிக்கொள்கிறோம். ஏனெனில் அது…அந்தவிதமாக தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். உலக ஞானம் தேவனுக்கு பைத்தியமாயுள்ளது; பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங் கித்தினாலே இழந்துபோனவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று. 27 இப்பொழுது, பிதாவே, அக்கறைகொண்டுள்ள உத்தமமான இருதயங்களிலிருந்து கேட்கப்பட்டுள்ள அநேக கேள்விகள் இங்கே என்னிடம் உள்ளன. அவைகளில் ஒன்றுக்கு தவறாக விடையளிக்கப்பட்டாலும், அது அந்த நபரை தவறான வழியில் நடத்திவிடும், அவர்களைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும் அவர்களுடைய கேள்வியின் பேரில் தவறான வெளிச்சம் விழுந்துவிடும். எனவே தேவனாகிய கர்த்தாவே, உமது பரிசுத்த ஆவி எங்கள் மத்தியில் அசைவாடி இந்த காரியங்களை வெளிப்படுத்தித் தருமாறு நான் ஜெபிக்கிறேன், ஏனெனில் வேதத்தில், “கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்; தேடுங்கள் அப்பொழுது நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” என்று எழுதப்பட்டுள்ளது. கர்த்தாவே, அதைத்தான் நாங்கள் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறோம், உமது இரக்கமாகிய கதவண்டையிலே தட்டிக்கொண்டிருக்கிறோம். உமது தெய்வீக நீதியின் நிழலில் நின்றுகொண்டு, தேவனாகிய கிறிஸ்துவின் இரத்தத்துக்காகவும் பரிசுத்த ஆவிக்காகவும் மன்றாடுகிறோம். 28 மூன்று இரவுகள் பரிசுத்த ஆவியின் பேரில் பிரசங்கம் செய்து முடித்துவிட்டு இளைப்பாற வேண்டும் என்னும் காரணத்தால் இன்றிரவு நாங்கள் இங்கு வரவில்லை. நாங்கள் ஆழ்ந்த பக்தியுடனும் உத்தமத்துடனும் இங்கு வந்திருக்கிறோம். இதுவே பூமியில் நாங்கள் இருக்கும் கடைசி இரவு என்பதுபோல் நாங்கள் வந்திருக்கிறோம். எங்களுடைய ஜெபங்களுக்கு நீர் பதிலளிப்பீர் என்று விசுவாசித்து நாங்கள் வந்திருக்கிறோம். கர்த்தாவே, எங்களை உமது நித்திய ஜீவனால் இப்பொழுது திருப்தியாக்கும்படி உம்மை வேண்டிக்கொள்கிறோம். உமது வார்த்தையிலிருந்து பதிலுரைக்கும்போது, பரிசுத்த ஆவியானவர்தாமே…ஓ, தேவனே, அது எங்கள் மத்தியிலுள்ள நீர் என்று நாங்கள் அறிந்துள்ளதால், இன்றிரவு நாங்கள் வாஞ்சிக்கும் காரியங்களை அவர்தாமே எங்களுக்கு வெளிப்படுத்தி தரவேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். எங்கள் ஆத்துமாக்கள் இளைப்பாறி, எங்கள் சிந்தைகள் சமாதானம் பெற்று, தேவன் பேரில் விசுவாசம் வைத்து, அவர் வாக்களித்துள்ள ஆசீர்வாதங்களை உரிமைகோருவதற்கு முன்நோக்கி நடக்கவேண்டும் என்பதையே நாங்கள் வாஞ்சித்துள்ளோம். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 29 இப்பொழுது, ஒரு கேள்வியைத் தவிர, என்னிடம் கொடுக்கப்பட்ட எல்லா கேள்விகளையும் நான் வைத்துள்ளேன். சென்ற இரவுக்கு முந்தின இரவு, என்னிடம் ஒரு கேள்வி கேட்ட வாலிப சகோதரன் மார்டினுக்கு நான் பதிலளித்தேன், ஒரே ஒரு கேள்வி. அநேக கடிதங்கள் நேற்றிரவு இங்கிருந்தன, ஆனால் அவை ஜெப விண்ணப்பங்களாயிருந்தன. சகோதரன் மார்டின் என்னிடம் யோவான் 3:16—இல்லை யோவான் 3-ஐக் குறித்து கேள்வி கேட்டார், அதாவது, “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், அவன் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” என்னும் வசனத்தை குறித்தே என்று நான் நினைக்கிறேன், நான் எபிரேயர் நிரூபத்தின் பேரில் அனுப்பின ஒலிநாடாவுடன் ஒப்பிட்டுப் பாரத்திருந்தார். நேற்று மாலை இங்கே பின் அறையில் நான் அவரைச் சந்தித்தபோது, மேலும்—அவருக்கு பதிலுரைக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் முன்பே, அப்பொழுது அங்கேயே அந்த பொருளின் பேரில், அவருக்கு பதிலுரைத்தேன். 30 இப்பொழுது, நேற்று இரவு கூட்டத்துக்கு வராதவர் யாராகிலும் இங்குள்ளனரா? உங்கள் கரங்களை நாங்கள் காணட்டும், நேற்று இரவு இங்கு வராதவர். ஓ, நாங்கள், நிச்சயமாகவே நீங்கள் எங்களுடன் இருந்திருப்பீர்கள் என்றே விரும்பினோம். எங்களுக்கு அத்தகைய ஒரு மகிமையான நேரம் உண்டாயிருந்தது. பரிசுத்த ஆவி… 31 நான் ஒரு நிமிடம் இதை கூற விரும்புகிறேன்…இது புண்படுத்தாது. இது ஒலிப்பதிவாகின்றது. நான் இப்பொழுது கூறப்போவதில், அல்லது கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களில், இங்குள்ள எந்த போதகராவது—அல்லது எந்த நபராவது, இணங்காமலிருக்க நேர்ந்தால், சகோதரனே, அதை நீங்கள் வித்தியாசமாக எண்ணிக்கொள்ளாதீர்கள் என்றே நான் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அது—இந்த ஒலிநாடா இங்குள்ள எங்கள் கூடாரத்தில் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எங்கள் ஜனங்களுக்கு நாங்கள் போதித்துக்கொண்டிருக்கிறோம். வெவ்வேறு விசுவாசங்களைக் கொண்ட போதகர்கள் அநேகர் சுற்றிலும் இங்குள்ளனர். நான் மறுபடியும் இந்த பொருளின் பேரில் சிறிது நேரம் பேசு விரும்புகிறேன், ஏனென்றால் நேற்று இரவு வர முடியாத எங்கள் ஜனங்களில் சிலர் இன்று வந்துள்ளதை நான் காண்கிறேன். நான் சற்று நேரம் பேச, நீங்கள் இதற்கு அனுமதித்தால், நேற்று மாலை நான் பேசியதின் பேரில், அதாவது பெந்தெகொஸ்தேவின் பேரிலும், பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதின் பேரிலும் பேச விரும்புகிறேன். இப்பொழுது, கிரேக்க மொழிபெயர்ப்பான எம்பாடிக் டயக்ளாட் என்பதிலிருந்து, நேற்று மாலை நான் படித்தேன், அது இப்பொழுது என் முன்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதுவே கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மூலமொழிபெயர்ப்பு. அது மற்ற மொழிபெயர்ப்பாளர்கள், அது—மற்ற மொழிபெயர்ப்புகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாமல், இது நேரடியாக கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்பொழுது, ஆங்கில வார்த்தைகள், பல சமயங்களில் ஒரே ஆங்கில பதம் அநேக அர்த்தங்களைக் கொண்டதாயுள்ளது, அப்படிப்பட்டதற்கு நான் இப்போது போர்டு என்னும் ஆங்கிலச் சொல்லை கூறவுள்ளேன், போர்டு என்ற அந்த வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள், “பாருங்கள், நாங்கள் அவரை சலிப்படைய செய்துகொண்டிருக்கிறோம் [ஆங்கிலத்தில் போர்டு மற்றும் போரிங் என்ற வார்த்தைகள் ஒரே விதமாக ஒலித்தாலும் வித்தியாசமான அர்த்தங்களைக் கொண்டதாகும்.— மொழிபெயர்ப்பாளர்.] என்றுதான் அவர் பொருட்படுத்திக் கூறினார்” எனலாம். இல்லையே! “ஓ, அவர்—அவர் தனது உணவிற்கு பணம் கொடுத்தார்.” இல்லையே! பாருங்கள், அவர்…“அது அவர் வீட்டின் ஓரத்திலுள்ள ஒரு பலகை.” பாருங்கள், புரிகிறதா? அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்று …இந்த ஒரு வார்த்தையை நான்கு அல்லது ஐந்து வெவ்வேறு அர்த்தங்களில் உபயோகிக்க முடியும்; எனவே நீங்கள் முழு வரியையும் படித்து அர்த்தத்தை அறிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது காணுதல் என்னும் சொல். காணுதல் என்பது ஆங்கிலத்தில் “புரிந்துகொள்ளுதல்” என்று அர்த்தமாகிறது. கடல் [ஆங்கிலத்தில், சீ மற்றும் சி என்ற வார்த்தைகள் ஒரே விதமாக ஒலித்தாலும் வித்தியாசமான அர்த்தங்களைக் கொண்டதாகும்.—மொழிபெயர்ப்பாளர்.] என்பதற்கு “தண்ணீர் நிறைந்த ஒரு பகுதி” என்றும் அர்த்தமாகிறது. காணுதல் என்பதும் “நோக்கிப் பார்த்தல்” என்றே அர்த்தமாகிறது. புரிகிறதா? ஆனால் இந்த மொழிபெயர்ப்புகளில், இங்கே பயன்படுத்தப்பட்ட வார்த்தையை, அதாவது நேற்று இரவு நான் அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் உள்ளதைக் குறித்துப் பேசினேன், அங்கே அது, “அக்கினிமயமான நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்தது…” என்று கூறுகிறது. இப்பொழுது, நான் ஒரு விநாடி திரும்பிச் செல்ல விரும்புகிறேன். நாம் மேற்கொண்டு செல்வதற்கு முன்பு ஒரு விநாடி, ஒருவிதமாகவே அதை மறுபடியும் ஆய்ந்து பார்க்க, நீங்கள் விரும்புகிறீர்களா? 32 இப்பொழுது, உங்களுடைய ஜேம்ஸ் அரசனின் மொழிபெயர்ப்பு வேதாகமம், அல்லது வேறெந்த மொழிபெயர்ப்பை நீங்கள் படித்துக்கொண்டிருந்தாலும் அதைத் திருப்புங்கள்…அதை நான் படிக்க விரும்புகிறேன். இப்பொழுது மிகவும் கூர்ந்து கவனியுங்கள். அதை தவறாக புரிந்துகொள்ளவேண்டாம். இன்று அநேகர், என் சகோதரி உட்பட, அவர்களில் அநேகர் என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, கூறினார்கள்…திருமதி. மார்கன்…நேற்று மாலை இங்கிருந்தவர்களில் அநேகர். மருத்துவர்களால் கைவிடப்பட்ட எங்கள் சகோதரிகளில் ஒருத்தி திருமதி. மார்கன்; அவள் பதினாறு, பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பீடிக்கப்பட்டு லூயிவில்லில் மரிக்க வேண்டியவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தாள். அவள் இன்றிரவு இங்கு மீண்டும் உட்கார்ந்துகொண்டிருக்கிறாள் என்று நான் நினைக்கிறேன். நான் ஒலிப்பெருக்கியினுள் நேரடியாக பேசின காரணத்தால், அவளால் நேற்று கேட்கமுடியவில்லை என்று அவள் கூறினாள். அப்படிப்பட்டவர்களின் நிமித்தம் நான் இதை மறுபடியும் சிறிது நேரம் கூற விரும்புகிறேன். 33 இப்பொழுது, நான் அப்போஸ்தலர் 2 என்ற இந்த வேதபாகத்திலிருந்து படிக்கிறேன்: பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒரு மனதோடு…(இப்பொழுது, ஒரே கருத்துடையவர்களாய் என்பதைக் காட்டிலும் அது எனக்கு அதிகம் பிடிக்கும்: ஏனெனில் நீங்கள் பெரும்பாலும் ஒரு பொருளின் பேரில் ஒரே கருத்தைக் கொண்டிருக்கலாம், ஆனால் இங்கு அவர்கள் ஒருமனப்பட்டிருந்தார்கள்.)…ஒரு மனதோடு அதே இடத்தில் வந்திருந்தார்கள். அப்பொழுது ஒரு உக்கிரமான காற்று அடிக்கிறது போல வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதுமாக…நிரப்பிற்று. (முழங்கால்படியவில்லை, ஜெபம் செய்யவில்லை, ஆனால் உட்கார்ந்திருந்தனர்.)… …பிரிந்திருக்கும் நாவுகள் (நா-வு-க-ள்-நாவுகள். “பிரிந்திருக்கும்” என்பது “பிரிக்கப்பட்டது” என்றே பொருள்படுகிறது.)…அக்கினிமயமான…நாவுகள்…அவர்களுக்குக் காணப்பட்டு, ஒவ்வொருவர்…(“ஒவ்வொருவர்” ஒருமை)…அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும்…நிரப்பப்பட்டு (“மற்றும்,” இடைச்சொல்.)…பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே, வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்குகிறார்கள். இப்பொழுது வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவ பக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். …அந்தச்…இந்த செய்தி பரப்பப்பட்டவுடன், திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவர்கள் ஒவ்வொருவரும் கேட்டபடியினாலே குழப்பமடைந்தார்கள். 34 இப்பொழுது கவனியுங்கள்! அக்கினி வந்தபோது, அவை நாவுகளாயிருந்தன; அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அது பாஷையாயிருந்தது. இப்பொழுது, நாவுகளுக்கும் பாஷைகளுக்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டு. நமக்கு இவ்விரண்டும் ஒன்றே. ஆனால், கிரேக்க மொழியில் “நாவு” என்பது இந்த நாவையே பொருட்படுத்துகிறது. [சகோதரன் பிரான்ஹாம் விளக்குகிறார்—ஆசி.] இது காது. புரிகிறதா? அது ஒரு பாஷையைக் குறிக்காது; இது உங்களுடைய சரீரத்தின் பாகமாய் ஒரு நாவு உள்ளதையே பொருட்படுத்துகிறது. நீங்கள் கவனிப்பீர்களேயானால், அக்கினிமயமான நாவுகள் என்பது “நாவுகளைப் போன்றே” என்றே பொருள்படுகிறதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஒரு அக்கினிமயமான நாவைப் போல, ஒரு நீண்ட அக்கினிஜுவாலையைப் போன்றதாகும். இப்பொழுது, இப்பொழுது வலியுறுத்தப்படுகிறதைக் கவனியுங்கள். இப்பொழுது அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் அவ்வாறிருப்பதை, அதை மறந்து விடாதீர்கள். 35 இப்பொழுது, இன்றிரவு நாங்கள் ஒரு சிறு நாடகம் அளிக்கப் போகின்றோம். அதை ஏற்றுக்கொள்ளும் பொறுப்பை நான் உங்களிடம் விட்டுவிடப்போகின்றேன். இப்பொழுது நினைவிருக்கட்டும், அது உங்களுக்கு முரணாகத் தென்படுமானால், அது உங்களைப் பொறுத்தது. ஆனால் எந்த நபரும் தேவனிடத்திலிருந்து பெறக்கூடிய ஒரே வழி, விசுவாசத்தின் மூலமேயாகும். நீங்கள் முன்பே… 36 நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதில் எனக்கு விசுவாசம் இருப்பதற்கு முன்னர் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிந்திருக்கவேண்டும். நீங்கள் ஏன் உங்கள் மனைவியை மணம் புரிந்தீர்கள்? அவள் மேல் உங்களுக்கு விசுவாசம் இருந்தது. நீங்கள் அவளை சோதித்துப் பார்த்திருந்தீர்கள், அவளை கவனித்து வந்தீர்கள், அவள் எங்கிருந்து வந்தாள் என்றும், அவள் யாராயிருந்தாளென்றும் நீங்கள் கண்டிருந்திருந்தீர்கள். அந்தவிதமாகத்தான் வேதவாக்கியத்தோடும், தேவனோடுமுள்ளது. அதுதான் இந்த தரிசனங்களையும், அந்த—இந்த அக்கினி ஸ்தம்பத்தையும், இந்த எல்லா காரியங்களையும் ஏற்ப்படுத்துகிறது, ஏனெனில் தேவன் அதை வாக்களித்தார். தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார். அவருடைய வார்த்தையினால் நான் அவரை சோதித்துப் பார்த்து, அது உண்மையென்று அறிந்திருக்கிறேன். நீங்கள் அவருடைய வார்த்தையைப் பின் பற்றுகிறீர்கள். எங்காவது ஒரு சிறு குழப்பம் இருந்தால், அப்பொழுது எங்கோ தவறுள்ளது. ஏனெனில் தேவன் (கவனியுங்கள்!)—தேவன் தமது சொந்த—இல்லை தம்முடைய சொந்த பிரமாணங்களுக்கு மாறாக ஒருபோதும் கிரியை செய்ததில்லை அல்லது ஒருபோதும் செய்யப்போவதுமில்லை. குளிர் காலம் கோடை காலத்தில் வராது, அவ்வாறே கோடை காலமும் குளிர்காலத்தில் வராது. இலைகள் வசந்த காலத்தில் உதிர்ந்து, இலையுதிர் காலத்தில் மீண்டும் முளைப்பதில்லை. உங்களால் அதை அப்படி செய்ய முடியாது. 37 நேற்று இரவு ஆர்டீஷியன் ஊற்றிலிருந்து, உங்கள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதைக் குறித்து நான் கூறினதுபோன்று. அல்லது நீங்கள் பயங்கரமான இருளில் வயலின் நடுவின் நின்றுகொண்டு, நீங்கள், “ஓ, மகத்தான மின்சாரமே, நீ வயலில் இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். இப்பொழுது நான் பாதை தவறிவிட்டேன், எங்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்படி நடப்பதற்கென்று காணும்படி, வெளிச்சம் தா! வயல் முழுவதற்கும் வெளிச்சம் தர போதிய மின்சாரம் உள்ளது” என்று கூறலாம். அது உண்மை. ஆம் ஐயா! போதிய விளக்குகள் இல்லாமலும் கூட, அவை இல்லாமலே இந்த அறைக்கு வெளிச்சம் தர இங்கு போதிய மின்சாரம் உள்ளது. ஆனால் நீங்கள் அதை கையாள வேண்டும். இப்பொழுது, நீங்கள் எவ்வளவுதான் கூச்சலிட முடியாதபடி கூச்சலிட்டாலும், அது ஒருபோதும் வெளிச்சம் தராது. நீங்கள் மின்சார விதிகளின்படி செயல்புரிந்தால், அப்போது நீங்கள் வெளிச்சம் பெறுவீர்கள். 38 பாருங்கள், அதேவிதமாகத்தான் தேவனுடைய வழிகளும் உள்ளன. தேவன் வானங்கள் மற்றும் பூமியின் மகத்தான சிருஷ்கர், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாருதவராயிருக்கிறார். அவர் இன்னமும் தேவனாயிருக்கிறார். ஆனால் நீங்கள் அவருடைய பிரமாணங்களையும் கட்டளை களையும் பின்பற்றும்போது மாத்திரமே அவர் கிரியை செய்வார். நண்பர்களே, இதை நான் கூறுகிறேன்: அது தவறினதை நான் ஒருபோதும் கண்டதில்லை, அது தவறாது. 39 இப்பொழுது, நாம் கவனிப்போம். சீஷர்கள் இரட்சிக்கப்பட்டு வார்த்தையின்படி பரிசுத்தமாக்கப்பட்ட பின்பு இயேசு லூக்கா 24:49-ல் அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தார்; அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் மேல் வைத்த விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்கப்பட்டனர்; யோவான் 17:17-ல் இயேசு, “பிதாவே, உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும். உம்முடைய வசனமே சத்தியம்.” என்று கூறினவிதமாக அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டனர். அவர் வார்த்தையாயிருந்தார். 40 இப்பொழுது, அவர்கள் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், மரித்தோரை உயிரோடெழுப்பவும் அவர் அதிகாரம் கொடுத்தார்; அவர்கள் சந்தோஷத்தோடு திரும்பி வந்தனர். அவர்களுடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தன. அதையெல்லாம் இப்பொழுது நாம் பார்த்தோம் என்று உங்களுக்கு ஞாபகமிருக்கும். ஆனால் அவர்கள் இன்னும் குணப்படவில்லை. இயேசு சிலுவையிலறையப்படும் அந்த இரவு பேதுருவிடம், “நீ குணப்பட்ட பின்பு, உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்றார். 41 பரிசுத்த ஆவி என்ன…நீங்கள் நித்திய ஜீவனுக்கு ஏற்ப விசுவாசிக்கிறீர்கள், ஆனால் பரிசுத்த ஆவி வரும்போது, அது நித்திய ஜீவனாயுள்ளது. நீங்கள் அதற்கேற்ப விசுவாசிக்கிறீர்கள்…நீங்கள் பரிசுத்தமாக்கப்படுதலின்போது ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுகிறீர்கள், ஆனால் பரிசுத்த ஆவி வரும் வரைக்கும் நீங்கள் ஆவியினால் பிறப்பதில்லை. அது உண்மை. ஒரு குழந்தை தன் தாயின் கர்ப்பத்தில் ஜீவனைப் பெற்றுள்ளது, சிறு தசைகள் நடுங்குகின்றன; அது ஒரு ஜீவனாயுள்ளது. ஆனால் அது ஜீவ சுவாசத்தை தன் நாசிகளில் சுவாசிக்கும்போது, அது வித்தியாசமான ஒரு ஜீவனாயுள்ளது. அது ஒரு வித்தியாசமானதாயுள்ளது. அதுதான் அது, அது… 42 என் அருமை மெதோடிஸ்டு சகோதரனே, யாத்திரீக பரிசுத்தரே, நசரீன்களே, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பரிசுத்தமாக்குதலினின்று வித்தியாசப்பட்டது. பரிசுத்தமாக்கப்படுதல் என்பது சுத்திகரிப்பு, அது ஜீவனுக்கான ஆயத்தப்படுத்துதலாயுள்ளது. ஆனால் பரிசுத்த ஆவி வரும்போது, அதுவே ஜீவனாயுள்ளது. பாண்டத்தை சுத்தப்படுத்துகிறதே ஆயத்தப்படுத்துதலாயுள்ளது; பரிசுத்த ஆவி பாண்டத்தை நிறைத்துக்கொண்டிருக்கிறது. பரிசுத்தமாக்கப்படுதல் என்றால் “சுத்தமாக்கப்பட்டு ஊழியத்திற்கென்று ஒதுக்கி வைக்கப்படுதல்” என்று பொருள். பரிசுத்த ஆவி அதை ஊழியத்தில் உபயோகிக்கிறதாயுள்ளது. நீங்கள்தான் தேவன் சுத்தமாக்கின பாண்டமாயிருக்கிறீர்கள். 43 பரிசுத்த ஆவி என்பது உங்களுக்குள் இருக்கும் தேவனே என்று நாம் காண்கிறோம். தேவன் உங்களுக்கு மேலே அக்கினி ஸ்தம்பத்தில் மோசேயுடன் இருந்தார். தேவன் இயேசு கிறிஸ்துவுக்குள் உங்களோடு இருந்தார். இப்பொழுது தேவன் பரிசுத்த ஆவியாக உங்களுக்குள் இருக்கிறார். மூன்று தேவர்கள் அல்ல, ஒரே தேவன் மூன்று உத்தியோகங்களில் கிரியை செய்தல். 44 தேவன் தம்மை தாழ்த்தி, மனிதன் மேல் அவர் இருந்த நிலை யிலிருந்து கீழே இறங்கி வந்தார். அவன் அவரைத் தொடமுடியவில்லை, ஏனெனில் அவன் ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்து, அவரிடம் கொண்டிருந்த ஐக்கியத்தினின்று தன்னைப் பிரித்துக்கொண்டான். அப்பொழுது என்ன நேர்ந்தது? அவர் அவன் மேலிருக்க வேண்டியதாயிற்று. காளை, வெள்ளாட்டுக் கடா இவைகளின் இரத்தம் அவன் மறுபடியும் தேவ னிடம் ஐக்கியங்கொள்ள அவனை அனுமதிக்கவில்லை; ஆனால் பிரமாணங்களின் மூலமாகவும் கட்டளைகளின் மூலமாகவும், வரப்போகும் அந்த நேரத்துக்கு முன் நிழலாக, காளைகளும் ஆடுகளும் பலி செலுத்தப்பட்டன…பிறகு தேவன் இறங்கி வந்து பரிசுத்தமாக்கப்பட்ட ஒரு சரீரத்தில், கன்னிகையின் மூலம் பிறந்த ஒரு சரீரத்தில் வாசம் பண்ணினபோது, தேவன் தாமே…தேவன் என்ன செய்தாரென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்—அவர் இதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை…அவர் தமது கூடாரத்தை நமது மத்தியில் வைத்தார். தேவன் இயேசுகிறிஸ்து என்றழைக்கப்பட்ட கூடாரத்தில் வாசம் செய்தார். அவர் நமது மத்தியில் தமது கூடாரத்தைப் போட்டார்…(நான்—காலையில் அதைக் குறித்து பிரசங்கித்தேன், எனவே நான் அதை விட்டுவிடுவது நல்லது.) இப்பொழுது, அதாவது—எப்படி தேவன் கூடாரத்தில்-இல்லை நம்மோடு வாசம் செய்தார்… 45 இப்பொழுது தேவன் நமக்குள் இருக்கிறார். யோவான் 14-ல் இயேசு, “நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” என்றார். தேவன் நமக்குள் இருக்கிறார். அதன் நோக்கம் என்னவாயிருந்து? அவருடைய திட்டத்தைச் நிறைவேற்றவே. 46 தேவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. அவர் மனிதர்களிடையே கிரியை செய்ய விரும்பினார், அவர் அதை அக்கினி ஸ்தம்பத்திலே கொண்டு வந்தார், அது இஸ்ரவேல் புத்திரரின்மேல் தொங்கிக்கொண்டிருந்த தெய்வீக அக்கினியாயிருந்தது. பின்பு அதே அக்கினி இயேசு என்னும் ஒரு சரீரத்தில் வெளிப்பட்டது. அவரே அந்த அக்கினி என்று அவர் கூறினார், “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.” அவரே அந்த அக்கினியாயிருந்தார். அவர், “நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், நான் மறுபடியும் தேவனிடத்துக்குப் போகிறேன்” என்றார். அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, பரிசுத்த பவுல் அவரை—தமஸ்குவுக்குப் போகும்வழியில் சந்தித்தான்—அப்பொழுது அவனுடைய பெயர் சவுல் என்று இருந்தது, அவர் அந்த சமயத்தில் மறுபடியும் அக்கினி ஸ்தம்பத்துக்கு திரும்பிவிட்டிருந்தார். ஒரு ஒளி அவன் கண்களை குருடாக்கினது. அது உண்மை. 47 இன்றைக்கு அவர் இங்கு, அதே அக்கினி ஸ்தம்பமாக, அதே தேவனாக, அதே அடையாளங்களையும், அதே கிரியைகளையும் செய்து கொண்டிருக்கிறார். ஏன்? அவர் தமது ஜனங்களின் மத்தியில் கிரியை செய்து கொண்டிருக்கிறார். அவர் நமக்குள் இருக்கிறார். நான்…அவர் இப்பொழுது உங்களோடுகூட இருக்கிறார், “ஆனால் நான் உங்களுக்குள் இருப்பேன். நான் உங்களோடும், உங்களுக்குள்ளும், உலகத்தின் முடிவுவரை,” முடிவுபரியந்தம் உங்களுக்குள் இருப்பேன். அவர் நம்மோடுகூட இருப்பார். 48 இப்பொழுது, கவனியுங்கள். அவர்கள் எருசலேமுக்குச் சென்று அங்கு காத்திருக்கும்படி இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். காத்திருங்கள் என்னும் சொல் “காத்திருப்பது” என்றே பொருள்படுகிறது, ஜெபித்துக் கொண்டிருங்கள் என்று அர்த்தமல்ல, “காத்திருப்பது” என்றே அர்த்தமாகிறது. அவர்கள் பிரசங்கிப்பதற்கு இன்னும் தகுதியுள்ளவர்களாகவில்லை, ஏனெனில் அவருடைய உயிர்த்தெழுதலில் அவரை வெளிப்புறத்தில் ஒரு நபராக கண்டதன் மூலமாக மாத்திரமே அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் முதலாவது உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும், அவர்கள் பிரசங்கிக்கவோ அல்லது வேறொன்றும் செய்யவோ கூடாதென்று அவர்—அவர் கட்டளையிட்டிருந்தார். எந்த ஒரு போதகரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமல் தேவனால் அனுப்பப்படவில்லை அல்லது சரியான போதகராக நியமிக்கப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்…ஏனெனில் தேவன் முடிவற்றவராயிருக்கிறார். தேவன் ஒருமுறை என்ன செய்கிறாரோ, அதையே அவர் எல்லா நேரத்திலும் செய்கிறவராயிருக்கிறார். இப்பொழுது, அவர்கள் பெந்தெகொஸ்தேவுக்கு சென்று பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெறாமல் பிரசங்கிப்பதை தேவன் அனுமதிக்காமல் இருப்பாரானால், எந்த ஒரு மனிதனும் அவனுக்கு ஆழ்ந்த விருப்பம் அல்லது ஒரு ஸ்தாபனம் அவனை போதகராக நியமித்திருந்தாலும், அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் வரை ஒரு பிரசங்க பீடத்தில் பிரவேசிக்க உரிமை கிடையாது. அது முற்றிலும் உண்மை. காரணம் அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் வரையில் ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் அறிவால் விளைந்த கருத்தினால் வழிநடத்தப்படுகிறான்; பெற்றப் பிறகே, அவன் புறாவின் ஆகாரத்தை அவர்களுக்கு அளிக்கிறான்; நேற்று மாலை நாம் பேசின, ஆட்டுக்குட்டியும் புறாவும் என்னும் செய்தியைப் போன்றே. 49 இப்பொழுது கவனியுங்கள். அவர், “நீங்கள் எருசலேமுக்குப் போய் அங்கு தங்கியிருங்கள்; நான் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை அனுப்பும் வரைக்கும் அங்கு காத்திருங்கள்” என்றார். அப்பொழுது, அவர்கள் என்ன செய்தார்கள்? அங்கு புருஷர்களும் ஸ்திரீகளும் நூற்றிருபது பேர் இருந் தனர். அவர்கள் ஆலயத்திலிருந்த ஒரு மேலறைக்குள் சென்றனர். இப்பொழுது, அது பெந்தெகொஸ்தே பண்டிகையின் நாளுக்கு சமீபமாயிருந்தது, பிரகாரத்தை சுத்திகரித்தல், பஸ்கா ஆட்டுக்குட்டி பலி செலுத்தப்படுதல், அந்த—அந்த பெந்தெகொஸ்தே பண்டிகை, அறுப்பின் முதற்பலன்கள், யூபிலி, பெந்தெகொஸ்தே யூபிலி வரை. கட்டிடங்களின் மேல்… 50 இப்பொழுது, நான் இந்த நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். கிழக்கத்திய நாடுகளில் படிக்கட்டுகள் உள்ளே இருப்பது மிக ஆபூர்வம். அவை சாதாரணமாக வெளிப்புறத்தில் இருக்கும். ஆலயத்தின் வெளிப்புறத்தில், ஒரு சிறு அறைக்கு செல்லும் படிக்கட்டு ஒன்று இருந்ததாக நமக்கு கூறப்பட்டுள்ளது; அந்த படிக்கட்டு மேலே சென்று, சென்று, சென்று, முடிவில் நீங்கள் ஒரு சிறு அறையை அடைகின்றீர்கள், ஆலயத்தின் மேலுள்ள சேமிப்பு அறையைப் போன்ற ஒரு சிறு அறை, மேலறையிலுள்ள, ஒருவிதமான ஒரு சிறு அறை. அவர்கள் மேலறையில் கூடியிருந்ததாகவும் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும் வேதம் கூறியுள்ளது, ஏனெனில் அவர்கள் கர்த்தராகிய இயேசுவை வழிபட்டதனால் யூதர்கள் அவர்களை சிதறப்பண்ணுவார்களோ என்று அவர்கள் பயந்தனர், பிரதான ஆசாரியனாகிய காய்பாவும், பொந்தியுபிலாத்துவும் அவரை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தனர். எனவே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்ட எவரையும் அவர்கள் ஒழித்துவிடப்போவதாயிருந்தனர். கதவுகள் யாவும் அடைக்கப்பட்டு, அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர். 51 இப்பொழுது, அப்படிப்பட்ட அறைகளுக்கு சன்னல்கள் கிடையாது. சன்னல்கள் சிறு தடுப்புகள் போடப்பட்ட கதவுகளைப் போன்றி ருந்தன, அவைகளை நீங்கள் இழுத்துத் திறக்கவேண்டும். அந்த அறைகளில் சிறு எண்ணெய் விளக்குகள் தொங்கவிடப்பட்டு, அவை எரிந்துகொண்டிருக்கும்…நீங்கள் கலிபோர்னியாவிலுள்ள கிளிஃப்டன் சிற்றுண்டிச் சாலையின் அடித்தளத்துக்கு எப்பொழுதாவது சென்றிருந்தால், மேலறையைப் போன்ற ஒன்றை நீங்கள் அங்கு காணலாம். நீங்கள் எப்பொழுதாகிலும் அங்கு சென்றதுண்டா? எத்தனை பேர் அங்கு சென்றிருக்கிறீர்கள்? ஜனங்களே உங்களுடைய தலையை அசைப்பதை நான் காண்கிறேன். பாருங்கள், நான் என்ன கூறிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். சரி. நீங்கள் அங்கு சென்றால், கெத்சமனே தோட்டத்தைக் காண்பீர்கள்; அதற்கு முன்பு நீங்கள் அந்த கிழக்கத்திய அறைகள் ஒன்றில் நுழையவேண்டும். அது முற்றிலும் உண்மை. அங்கு ஒலிவ எண்ணெயால் நிரப்பப்பட்ட ஒரு சிறு விளக்கையும், அதில் ஒரு கம்பளி போன்ற சிறு திரி மூழ்க்கப்பட்டு அது எரிந்துகொண்டிருப்பதையும் காண்பீர்கள். 52 இப்பொழுது, அவர்கள் வெளியேயிருந்த படிக்கட்டுகளின் வழியாக ஏறி அந்த மேலறையை அடைந்தனர் என்று நாம் கூறலாம். அவர்கள் யூதருக்கு பயந்ததால், அவர்கள் உள்ளே சென்று ஒளிந்துகொண்டனர். மேலறைக்குச் செல்லும்படி இயேசு அவர்களிடம் கூறவில்லை. அவர், “எருசலேமில் காத்திருங்கள்” என்று மாத்திரம் கூறினார். அவர்கள் ஒரு வீட்டில் கூடியிருந்தால், என்ன நடந்திருக்குமென்று கூறமுடியாது. ஒருக்கால் யூதர்கள் வந்து அவர்களைப் பிடித்துக்கொண்டு போயிருக்கக்கூடும். எனவே மேல் மாடியிலுள்ள ஒரு சிறு பழைய அறைக்கு அவர்கள் சென்று, யூதர்கள் அங்கு வந்து பிடித்துக்கொள்ளாதபடி கதவைத் தாளிட்டுக்கொண்டனர். அவர்கள் அங்கு உட்கார்ந்துகொண்டு பத்து நாட்கள் காத்திருந்தனர். 53 இப்பொழுது, இப்பொழுது, நாம் அப்போஸ்தலர் 1-ம் அதிகாரத்தில் இருக்கிறோம். இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். அந்த காட்சி உங்களுக்கு புரிந்துவிட்டதா? கட்டிடத்தின் வெளிப்புறத்தில் படிக்கட்டு மேலே சென்றது, அவர்கள் அதன் வழியாக அந்த சிறு அறைக்குள் நுழைந்தனர். கீழே தேவாலயத்தில் அவர்கள் பெந்தெகொஸ்தே பண்டிகையை ஆசரித்துக்கொண்டிருந்தனர். ஓ, ஒரு மகத்தான நேரம் உண்டாயிருந்தது. இப்பொழுது, பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு, தேவன் தாம் வாக்களித்ததை அனுப்பப்போகிறார் என்னும் விசுவாசமுடையவர்களாயிருந்தனர். அவ்வாறே இங்குள்ள ஒவ்வொரு நபரும் இன்றிரவு ஒருமனப்பட்டு, என்ன நடக்கிறதென்று பாருங்கள். அது மறுபடியும் நிகழ வேண்டும். அவர்களுக்கு இருந்தவாறே, அதே விதமாகவே இது ஒரு வாக்குத்தத்தமாயுள்ளது. பார்த்தீர்களா? 54 அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? கட்டளைகளை பின்பற்றிக்கொண்டிருந்தனர், “அதுவரைக்கும் காத்திருங்கள்…” என்ற அந்த—அந்த—அந்த தேவனுடைய கட்டளையை அவர்கள் பின்பற்றிக்கொண்டிருந்தனர்; 55 இப்பொழுது, அவர்கள் யூதர்களுக்கு பயந்திருந்தனர். இப்பொழுது, அதை ஞாபகம் கொள் ளுங்கள். அவர்கள் யூதர்களுக்கு பயந்திருந்தனர். இப்பொழுது, அப்பொழுது சடுதியாக பலத்த காற்று அடிக்கிறது போல ஒரு முழக்கம் உண்டானது. அது பலத்த காற்று அல்ல; அது பலத்த காற்று அடிக்கிறது போல ஒரு முழக்கம். மொழிபெயர்ப்பாளர் அளித்துள்ள விரிவுரைகளை இன்னும் சில நிமிடங்களில் நான் படித்து காண்பிப்பேன். அது பலத்த காற்று அடிக்கிறது போல ஒரு முழக்கமாயிருந்தது. வேறுவிதமாகக் கூறினால், அது இயற்கைக்கு மேம்பட்ட காற்றாயிருந்து (ஓ!), அவர்களால் உணர முடிந்த ஒன்று. அந்த காற்று அவர்களுக்குள் இருந்தது. அப்பொழுது ஒரு—ஒரு பலத்த காற்று வந்தது, பலத்த காற்று போல ஒன்று. காற்று பலமாக அடித்துக்கொண்டிருக்கவில்லை, ஆனால் ஒரு பலத்த காற்று அடிக்கும்போது ஏற்படுகிற முழக்கம்போல், அந்தவிதமாக ஒரு முழக்கம் உண்டானது: வ்வுயூ! அதை நீங்கள் எப்பொழுதாவது உணர்ந்ததுண்டா? ஓ, என்னே! ஒரு பலத்த காற்று அடிக்கிறதுபோல. இப்பொழுது கவனியுங்கள். அது நிரப்பிற்று…இப்பொழுது, இங்கு “எல்லாவற்றையும்” என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் கிரேக்க மொழியில் “முழுவதையும் (பெரிய எழுத்தில் மு-ழு-வ-தை-யு-ம்), வீடு முழுவதையும்,” அங்கிருந்த எல்லாவிடத்தையும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அந்த வீட்டில் இருந்த விரிசல், மூலை, சந்து ஒவ்வொன்றையும் அது நிரப்பினதுபோன்று தென்பட்டது. “சகோதரரே, நான் உணருவதை நீங்களும் உணருகிறீர்களா?” என்று கேட்பதல்ல அது. இல்லை! அது ஒரு பலத்த காற்றுபோல, எல்லாவிடங்களையும் நிரப்பினது. இப்பொழுது கவனியுங்கள். “அப்பொழுது ஒரு பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல், வானத் திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி (இணைத்தல். இப்பொழுது அவைகளை இணைக்கும் இடைச்சொற்களை கவனியுங்கள். நீங்கள் அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அது கூறாத ஏதோ ஒன்றை நீங்கள் கூறுவதாகிவிடும். புரிகிறதா?)—அந்தவிதமாக (அதுதான் முதலில் நடந்தது ஒரு முழக்கமாயிருந்து, அவர்கள் மேல் ஒரு—ஒரு பலத்த காற்று அடிப்பது போன்ற ஒரு முழக்கம்)—மேலும் (உங்களுக்கு நினைவிருக்கும், நேற்றிரவு நான் கடைக்குச் சென்று ஒரு ரொட்டியும் இறைச்சியும் வாங்கினேன். அந்த ஒன்று மற்றொன்றுடன் சம்பந்தப்பட்டது. ரொட்டி ஒரு பொருள், இறைச்சி மற்றொரு பொருள். முழக்கம் என்ற ஒரு காரியம் அவர்களிடம் உண்டானது)— அப்பொழுது (அவர்களுக்கு முன்பாக) நாவுகள்—பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டன.” 56 இங்குள்ள யாராகிலும் சிசில் டிமிலினுடைய “பத்து கட்டளைகள்” என்ற திரைப்படத்தைக் கண்டதுண்டா? அதில் பத்து கட்டளைகள் எழுதப் பட்டபோது நீங்கள் கவனித்தீர்களா? அவர் எப்படி அதை எடுத்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அதில் நான் கண்ட இரண்டு மூன்று காரியங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதலாவதாக அந்த மரகத நிறம் கொண்ட ஒளி, அது அப்படியே தோற்றமளித்தது. பார்த்தீர்களா? மற்றொரு காரியம் அந்த கற்பனைகள் எழுதப்பட்டபோது, அது எழுதி முடித்த பின்பு, அந்த பெரிய அக்கினி ஸ்தம்பத்திலிருந்து சிறு அக்கினி நாவுகள் பறந்து சென்றதை நீங்கள் கவனித்தீர்களா? நீங்கள் அதைக் கவனித்தீர்களா? இப்பொழுது, பெந்தெகொஸ்தே நாளன்றும் இது அப்படித்தான் இருந்தது என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்குக் காணப்பட்டது…எனவே அவர்கள் அதைக் காண முடிந்தது. அது, “அவர்களுக்குள் விழுந்தது” என்று கூறவில்லை. அப்பொழுது அக்கினிமயமான நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு (நாம் அதை அவ்வாறே அழைப்போம்) நாவுகள், இங்குள்ள இந்த நாவைப் போன்ற நாவு [சகோதரன் பிரான்ஹாம் அதை செய்து காண்பிக்கிறார்—ஆசி.], நாவின் வடிவம் போன்ற, அக்கினி நாவு. இப்பொழுது, காது—நான் கூறினது போன்று, காது என்பது காதைக் குறிக்கின்றது; அவ்வாறே விரல் என்பது விரலைக் குறிக்கின்றது. விரல் என்றால் நீங்கள் விரலைக் கொண்டு தொட்டீர்கள் என்று அர்த்தமல்ல. அது ஒரு விரலைப் போல் காணப்பட்டது என்று பொருள்படுகிறது. அது ஒரு காது என்றால், அவர்கள் காதினால் கேட்டார்கள் என்று அர்த்தமல்ல; அது காதைப் போல் காணப்பட்டது. இது காண்பதற்கு ஒரு நாவைப் போலிருந்த அக்கினியாயிருந்தது, யாரோ ஒருவர் பேசினார் என்றல்ல, அது ஒரு நாவைப் போல் காணப்பட்ட ஒரு அக்கினி. 57 இப்பொழுது, கவனியுங்கள். கிரேக்க மொழியில் அது இங்கு எவ்வாறுள்ளது என்பதை கவனியுங்கள்: சடுதியாக ஒரு முழக்கமுண்டாகி…ஒரு பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல…(3-ம்—3-ம் வசனம்.) பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டன…(அவர்களுக்குள் பிரிந்திருக்கும் நாவுகள் இருந்ததென்றோ, அல்லது அவர்கள் ஒரு பிரிந்திருக்கும் பாஷையை பேசினர் என்றோ இல்லை; பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டன. இப்பொழுது கவனியுங்கள். அது இன்னும் அவர்கள் மேல் வரவில்லை. அது அங்கே அறையில் இருந்து, இந்தக் காற்றைப் போல சுழன்றுகொண்டிருந்தது.)…அக்கினிமயமான…போலப்…பிரிந்திருக்கும் நாவுகள்…அவர்களுக்குக் காணப்பட்டது…(அது அவர்களுக்கு முன்னால் இருந்தது) அக்கினிமயமான…போலப், (அக்கினி போன்ற நாவுகள்) அவை ஒவ்வொன்றும் (ஒருமை) ஒவ்வொருவர் மேலும் தங்கினது. (அவர்களுக்குள் சென்றது என்றல்ல; ஆனால் அவர்கள் மேல் தங்கினது.) 58 இப்பொழுது, ஜேம்ஸ் அரசனின் வேதாகமத்தில் வித்தியாசமாயிருப்பதைப் பாருங்கள்: “பிரிந்திருக்கும் நாவுகள் அவர்கள் மேல் வந்தது, இல்லை அமர்ந்தது (அது ஜேம்ஸ் அரசனின் மொழிபெயர்ப்பில் அங்கே எப்படி வாசிக்கப்படுகிறது?) அவர்கள் மேல் அமர்ந்தது.” பார்த்தீர்களா? இப்பொழுது, அது போய் அவர்கள் மேல் உட்கார முடியாது. அது நமக்குத் தெரியும். ஆனால் மூல கிரேக்க வேதம், “அவர்கள் மேல் தங்கினது” என்று கூறியுள்ளது என்று நான் நினைக்கிறேன்; இல்லையா? அதை நான் உண்மையாகவே சரியாக பரிந்துகொள்ளட்டும். ஆம்! “…அவர்கள் ஒவ்வொருவர் மேலும் தங்கினது.” ஒவ்வொரு அக்கினி நாவும் ஒவ் வொருவர் மேலும் தங்கினது. அங்கு பார்த்தீர்களா? உங்களுக்கு இது புரிகிறதா? அதுதான் நிகழ்ந்த இரண்டாவது காரியம். முதலில் காற்று, பிறகு அக்கினி நாவுகள் காணப்படுதல். 59 சிறு எண்ணெய் விளக்குகள் எரிந்துகொண்டிருந்த இந்த சிறு அறையில் அது நிகழ்ந்தது. அவர்கள் அங்கு உட்கார்ந்துகொண்டிருந்ததை சற்று யோசித்து பாருங்கள். ஒருவன், “ஓ!” என்கிறான். அவன் கட்டிடத்தைச் சுற்றிலும் பார்த்தான்; அது கட்டிடம் முழுவதிலும் இருந்தது. அப்பொழுது அவர்கள், “பாருங்கள்!” என்றனர். அக்கினி நாவுகள் கட்டிடத்தைச் சுற்றி வரத் தொடங்கின. இப்பொழுது கவனியுங்கள். அக்கினிமயமான நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டன. இப்பொழுது அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்: …ரும் (வேறொரு இடைச்சொல்; வேறொன்று சம்பவித்துது.) அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு,…(நிகழ்ந்த இரண்டாவது காரியம்.) 60 இப்பொழுது பாருங்கள், இதை நாம் மாற்றி அமைத்து, “அவர்கள் அக்கினிமயமான நாவுகளைப் பெற்று, இங்கே சுற்றி பிதற்றிக்கொண்டேயிருந்தனர்; அதன் பிறகு அவர்கள் வெளியே சென்று யாரும் அறியாத பாஷையில் பேசத் தொடங்கினர்.” என்கிறோம். நண்பனே, அதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியம் வேதவாக்கியங்களில் இல்லையே. பரிசுத்த ஆவியைப் பெறும்போது, யாரும் அறியாத பாஷையில் பேசுகிறவன் எவனும் வேதத்துக்கு முரணான ஒன்றைச் செய்கிறான். யாரும் அறியாத பாஷை பேசுவதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளவன் என்பதை இன்னும் சில நிமிடங்களில் உங்களுக்கு காண்பிக்கவும் நிரூபிக்கவும் போகிறேன், ஆனால் பரிசுத்த ஆவியைப் பெறும்போதல்ல. அது பரிசுத்த ஆவியின் ஒரு வரமாயுள்ளது. பரிசுத்த ஆவி என்பது ஒரு ஆவி. 61 இப்பொழுது கவனியுங்கள். இந்த நாவுகள் அக்கினி வடிவில் அந்த அறையில் இருந்தன, அது ஒவ்வொருவர் மேல் தங்கினது. பிறகு அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர் (இரண்டாவது காரியம்), அதன்பிறகு, அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட பிறகு, பாஷைகளில், அந்நிய பாஷைகளில் அல்ல, வெவ்வேறு பாஷைகளில் பேசினார்கள். நீங்கள் அதைக் கவனித்தீர்களா? ஆவியானவர் அவர்களைப் பேச ஏவினபடியே, அவர்கள் வெவ்வேறு பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள். இப்பொழுது, இந்த சத்தம் வெளியே பரவினது. 62 இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, நீங்கள் இதை இப்பொழுது மறந்துபோகாதபடிக்கு நாம் இந்த விளக்கத்தை மறுபடியும் புரிந்துகொள்வோம். வேதவாக்கியத்தின்படி, அவர்கள் மேலறையில் காத்திருக்கையில், சடுதியாய் பலத்த காற்று அடிக்கிறது போன்ற ஒரு முழக்கம், அவர்கள்மேல் வந்தது; அது பரிசுத்த ஆவியாயிருந்தது. அது பரிசுத்த ஆவியின் தோற்றம் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? காற்றைப் போல், இயற்கைக்கு மேம்பட்ட காற்று. பின்பு அவர்கள் கவனித்தனர். அக்கினிமயமான சிறு நாவுகள் தோன்றி, அங்கிருந்த நூற்றிருபது பேர்கள், அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அமரத் துவங்கினது. அது என்னவாயிருந்தது? அது என்னவாயிருந்தது? அது அக்கினி ஸ்தம்பம், அது தேவனே தம்மை தமது ஜனங்களின் மத்தியில் பிரித்துக்கொண்டு, ஜனங்களுக்குள் வருதல். இயேசு அதை முழுவதுமாக பெற்றிருந்தார்; அவர் ஆவியை அளவில்லாமல் பெற்றிருந்தார்; நாமோ அதை அளவோடு பெற்றிருக்கிறோம் (நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா?), ஏனெனில் நாம் சுவிகாரப் புத்திரராக இருக்கிறோம். அவருடைய ஜீவன்—அவருடைய நித்திய ஜீவன் உள்ளே வந்தது. இப்பொழுது, என்ன நடந்தது? அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். 63 இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அந்த வதந்தி எப்பொழுது தொடங்கினது? அவர்கள் மேலறையிலிருந்து வெளியே வந்து படிக்கட்டுகளின் வழியாய் கீழே இறங்கி வந்து, பிரகாரங்களுக்கு செல்ல—இல்லை—தேவாலயத்தின் வெளிப்பிரகாரத்தை அடைய வேண்டுமானால், அது அவர்களிலிருந்த இடத்திலிருந்து ஒருக்கால் ஒரு நகர வட்டார தூரம் இருந்திருக்கும், அவர்கள் மேலிருந்து கீழிறங்கி, வெளிப்பிரகாரத்தை அடைந்தனர், அங்குதான் ஜனங்கள் எல்லாரும் கூடியிருந்தனர்…அவர்கள் வெளியே வந்தபோது ஆவியினால் நிறைந்து, குடித்தவர்கள் போல் காணப்பட்டனர். ஜனங்கள், “இவர்கள் புது மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்” என்றனர். அவர்கள் அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதேயில்லை. 64 அவர்கள் ஒவ்வொருவரும், “பரிசுத்த ஆவி வந்துவிட்டது. தேவ னுடைய வாக்குத்தத்தம் என்மேல் உள்ளது. நான்—நான் ஆவியினால் நிறை யப்பட்டிருக்கிறேன்” என்று கூற முயன்றனர். அவன் ஒரு கலிலேயன், ஆனால் அவன் அரேபியனிடம் அல்லது பெரிசியனிடம் பேசினபோது, அவனவன் தன்னுடைய சொந்த பாஷையில் அதைக் கேட்டான். 65 “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளிலே (யாரும் அறியாத பாஷையில் அல்ல)—இவர்கள் பேசக் கேட்கிறோமே. பேசுகிக்கொண்டிருக்கிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?” அவர்கள் ஒருக்கால் கலிலேய பாஷையிலேயே பேசினர்…ஆனால் அவர்கள் அதைக் கேட்டபோது, அது தங்கள் ஜென்ம பாஷையில் இருந்தது. இல்லையென்றால், இந்த கேள்விக்கு நீங்கள் எனக்கு—எனக்கு பதில் கூற விரும்புகிறேன்: பேதுரு எழுந்து கலிலேய பாஷையில் பேசினபோது, அங்கு கூடியிருந்த அனைவருமே அவன் கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டு எப்படி புரிந்துகொள்ள முடிந்தது? அங்கேயே மூவாயிரம் ஆத்துமாக்கள் கிறிஸ்துவினிடம் வந்தன. பேதுரு ஒரு பாஷையில் தான் பேசினான். நிச்சயமாக! அது தேவன் செய்த ஒரு அற்புதமாயிருந்தது. பேதுரு மெசொப்பொத்தாமியாவில் குடியிருந்தவர்களுக்கும், அந்நியர்களுக்கும், யூதமார்க்கத்தமைந்தவர்களுக்கும், உலகம் முழுவதிலுமிருந்து அங்கு வந்து நின்று கொண்டிருந்தவர்களுக்கும் இதை கூறினான்…பேதுரு நின்று கொண்டு ஒரு பாஷையில் பிரசங்கித்தான், ஆனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் அதைக் கேட்டு புரிந்துகொண்டனர், அதன் விளைவாக மூவாயிரம் பேர் மனந்திரும்பி உடனடியாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றனர். அது எப்படி? 66 நண்பர்களே, பாருங்கள், என் ஸ்தாபன, பெந்தெகொஸ்தே சகோதரன் இப்பொழுதே இதை ஏற்றுக்கொள்வாரென்று என்னால் எதிர்பார்க்க முடியாது. நீங்கள் அதை வேதம் பூராவும் ஆராய்ந்து, அவர்கள் எப்பொழுதாவது பரிசுத்த ஆவியைப் பெற்று, அவர்கள் என்ன பேசுகின்றனர் என்று புரிந்துகொள்ளமுடியாத பாஷையில் பேசினார்களா என்று என்னிடம் கூறுங்கள். அவர்கள் அந்தவிதமாக அதை அங்கு பெற்றிருப்பார்களானால், இராஜாதிபத்திய தேவன்…ஒவ்வொரு முறையும் அது அந்த விதமாகவே இருக்க வேண்டும். 67 இப்பொழுது, என்னால்…இப்பொழுது, கொர்நே-…வீட்டிலே, நேற்றிரவு நாம் சமாரியாவில் என்ன நடந்ததென்று பார்த்தது, நமக்கு நினைவிருக்கிறது, அவர்கள் வேறு எந்த பாஷையிலும் கேட்டதாக அங்கு ஒன்றும் எழுதி வைக்கப்படவில்லை என்பதை நாம் கண்டறிந்தோம், அதைக் குறித்து ஒன்றும் கூறப்படவில்லை. ஆனால் அவர்கள் கொர்நேலியுவின் வீட்டிற்கு சென்றபோது, மூன்று தேசத்தார் அங்கிருந்தனர், அவர்கள் பாஷைகளில் பேசினர். அவர்கள் பேசினபோது, அவர்கள் பேசியிருந்தால், அவர்கள் அதைப் பெற்றிருந்தால், தொடக்கத்தில் அவர்கள் எப்படி பரிசுத்த ஆவியைப் பெற்றார்களோ, அதே விதமாகத்தான் இவர்களும் பெற்றுக்கொண்டதாக பேதுரு கூறினான். புறஜாதிகள் தேவனிடத்திலிருந்து கிருபையை பெற்றிருந்தனர் என்று அவர்கள் அறிந்துகொண்டனர், ஏனெனில் தொடக்கத்தில் அவர்கள் பெற்றவிதமாகவே இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். நான் ஒரு கேள்வியை இங்கே பெற்றுள்ளேன், அதன்பேரில் இன்னும் சில நிமிடங்களில் பார்க்கப் போகின்றோம். அது என்னவென்று நீங்கள் புரிந்து கொள்ளும்படியாக, அதற்கு ஆதாரமாக நான் இதைக் கூற விரும்பினேன். 68 இப்பொழுது, வித்தியாசமாக கற்பிக்கப்பட்டுள்ள ஜனங்களை என்னால் எதிர்பார்க்க முடியாது…என் அருமையான, விலையேறப் பெற்ற பெந்தெகொஸ்தே சகோதரர்களே, எனக்கு செவி கொடுங்கள். இதை நான் வெளியில் எங்கும் பிரசங்கிக்கமாட்டேன். இது…சர்ச்சையை உண்டாக்க நான் எதையும் செய்யமாட்டேன். ஆனால் நாம் சத்தியத்தை அறிந்துகொள்ளாமல் போனால், நாம் எப்பொழுது தொடங்கப் போகிறோம்? இங்கு நம்மை சரிப்படுத்த நிகழும்படியான ஏதோவொன்றை நாம் பெற்றிருக்கத்தான் வேண்டும். இப்பொழுது நாம் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கேற்ற கிருபையை இங்கே பெற்றுக் கொள்ள வேண்டும். சத்தியம் வெளியில் வரத்தான் வேண்டும். 69 ஒரு மனிதன் செவிடனாகவோ, ஊமையாகவோ இருந்து, அவனால் பேச முடியாவிட்டால் அவன் என்ன செய்வான்? அவனால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியுமா? அவனுக்கு தொடக்கத்திலேயே நாக்கு இல்லாதிருந்தால், அந்த பரிதாபமான நபர் இரட்சிக்கப்பட விரும்பினால், அவன் என்ன செய்வான்? புரிகிறதா? இது பரிசுத்த ஆவியாய், ஒரு அபிஷேகமாயுள்ளது. அந்நிய பாஷைகள் பேசுதல், பாஷைகளுக்கு அர்த்தம் உரைத்தல் போன்ற வரங்கள் அனைத்தும், நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று கிறிஸ்துவின் சரீரத்தில் வந்த பிறகே உண்டாகின்றன. ஏனெனில் அந்த வரங்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ளன. 70 இப்பொழுது, இதை நான் கூறும் காரணம்…இப்பொழுது, இங்கு பாருங்கள். அப்போஸ்தலர்களுக்குப் பிறகு முதன் முதலாக உலகில் ஸ்தாபிக்கப்பட்ட கத்தோலிக்க சபையை நீங்கள் எதிர்பார்க்க முடியுமா…கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்பட்டதோ, ஓ, கடைசி அப்போஸ்தலன் மரித்து அநேக நூற்றாண்டுகள் கழித்த பின்பே, அப்போஸ்தலர்களுக்குப் பிறகு—சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, நிசாயா ஆலோசனை சங்கம் முடிந்து உடனடியாக, நிசாயா பிதாக்கள் ஒன்றுகூடி ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்ட போது, கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்பட்டது. அப்பொழுது உலகம் முழுவதும் பரம்பின ஒரு சபையை அவர்கள் உண்டாக்கினர், அதுதான் கத்தோலிக்க சபை. அங்கே அவர்கள் ஒரு உலக சபையை ஏற்படுத்தினர். கத்தோலிக்கம் என்றால் “உலகம் முழுவதும்” என்று பொருள்; அது எங்குமுள்ளது. அவர்கள்…ரோமன்—அஞ்ஞான ரோம மார்க்கம் போப்பாண்டவரின் ரோம மார்க்கமாக மாற்றப்பட்டது. அவர்கள் பேதுருவின் இடத்தைப் பிடிக்க ஒரு போப்பாண்டவரை தலைவராக ஏற்படுத்தலாம் என்று அவரகள் எண்ணி, இயேசு ராஜ்யத்தின் திறவுகோல்களைக் கொடுத்தாரென்று அவர்கள் கூறினர். அந்த போப்பாண்டவர் பிழையற்றவராயிருந்தார், இன்னமும் இன்றைக்கும் கத்தோலிக்க சபைக்கு அவ்வாறேயுள்ளார். அதாவது…அவருடைய வார்த்தையே சட்டமும் ஒழுங்குமாயுள்ளது. அவர் பிழையற்ற போப்பாண்டவர். அது இப்படியாக நடந்து கொண்டே வந்தது. 71 அதன் பின்னர், கத்தோலிக்க உபதேசத்துடன் இணங்காத காரணத்தால் அவர்கள் கொல்லப்பட்டனர், கழு மரத்தில் எரித்து, மற்ற எல்லாவற்றையும் செய்தனர். நாம் அதையெல்லாம் ஜோசிபஸின் புனித நூல்களின் மூலமாகவும், ஃபாக்ஸினுடைய இரத்த சாட்சிகளின் புத்தகம், இன்னும் அநேக புனித…ஹிஸ்லப்பினுடைய இரு பாபிலோன்கள், அந்த—அந்த மகத்தான வரலாறுகள் ஆகியவைகளின் வாயிலாகவும் அறிந்துகொள்கிறோம். அதன்பிறகு, அது—ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக நீடித்த இருளின் காலங்களின்போது, நாம் அறிந்துள்ளபடி, வேதாகமம் ஜனங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. மேலும் அது—அது ஒரு சிறு பாதிரி யாரால் ஒளித்து வைக்கப்பட்டது என்று நாம் அறிகிறோம். 72 அதன் பின்பு முதலாம் சீர்த்திருத்தம் மார்டின் லூத்தரின் மூலம் உண்டானது. அவர் தைரியமாக வெளிவந்து, கிறிஸ்துவின் உண்மையான சரீரம்—என்று கத்தோலிக்கரால் அழைக்கப்படும் இராப்போஜனம், கிறிஸ்துவின் சரீரத்துக்கு எடுத்துக்காட்டாயுள்ள ஒன்று மாத்திரமே என்று கூறினார். அவர் இராப்போஜனத்தை பீடத்தின் கிராதிகளிலும், படிக்கட்டுகளிலும் எறிந்து, அது கிறிஸ்துவின் உண்மையான சரீரம் என்று அழைக்க மறுத்து, “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்று பிரசங்கித்தார். இப்பொழுது கத்தோலிக்க சபை அவருடன் இணங்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கமுடியாது, நிச்சயமாக முடியாது, அவர்களுடைய பிழையற்ற தலைவர் அவர்களிடம் அதை மறுக்கும்போது. சரி. 73 நீதிமானாக்கப்படுதல் என்பதைப் பிரசங்கித்த மார்டின் லூத்தருக்கு பிறகு, ஜான் வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதல் என்பதை பிரசங்கிப்பவராய் தோன்றினார். ஒரு மனிதன், நீதிமானாக்கப்பட்ட பின்பு (அது சரிதான்) அவன் பரிசுத்தமாக்கப்பட வேண்டும் என்றும், அவன் இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, பொல்லாங்கு என்னும் வேர் அவனிலிருந்து பிடுங்கப் வேண்டுமென்றும் அவர் பிரசங்கித்தார். இப்பொழுது, லூத்தரன்கள் பரிசுத்த மாக்கப்படுதலைப் பிரசங்கிப்பார்களென்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது, ஏனெனில் அவர்கள் அப்படி செய்யப் போவதில்லை. 74 வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதலை பிரசங்கித்த பின்பு, அதிலிருந்து பல சிறு பிரிவுகள் தோன்றின, வெஸ்லியன் மெதோடிஸ்டு, நசரீன் போன்றவர், அவர்கள் தங்களுடைய காலத்தில் இந்த அக்கினி எரிந்துகொண்டிருக்கும்படி செய்தனர், பிறகு பெந்தெகோஸ்தேயினர் தோன்றி, அவர்கள், “ஏன், பரிசுத்த ஆவி என்பது ஒரு அபிஷேகம், அதை நாங்கள் பெறும்போது, அந்நிய பாஷைகள் பேசுகிறோம்” என்றனர். நிச்சயமாக. அது தோன்றினபோது, நசரீன்கள், வெஸ்லியன் மெதோடிஸ்டுகள் போன்றவர் அதை விசுவாசிப்பார்களென்று நீங்கள் எதிர்பார்க்கமுடியாது. அவர்கள் விசுவாசிக்கமாட்டார்கள். அவர்கள் அதை பிசாசென்று அழைத்தனர். சரி. என்ன நடந்தது? அவர்கள் விழத் தொடங்கினர்; பெந்தெ கொஸ்தெயினர் எழும்பத் தொடங்கினர். இப்பொழுது ஒரு ஸ்தானத்தை அடையும்படி பெந்தகோஸ்து எழும்பி, அது தன்னுடைய அசைக்கப்படும் நிலையை அடைந்துள்ளது. அது ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்டு, வெளியே போய், வேறெதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவர்கள் தங்கள் சொந்த சட்டதிட்டங்களையும் நியமங்களையும் பெற்றுள்ளனர், அத்துடன் அது முடிவு பெறுகிறது. 75 இப்பொழுது, பரிசுத்த ஆவி வந்து சத்தியத்தைக் குறித்த எந்தக் காரியத்தையும் வெளிப்படுத்தி, அதை தமது சொந்த பிரசன்னத்தினாலும் தமது வார்த்தையினாலும் நிரூபிக்கும் போது, பெந்தெகொஸ்தே ஜனங்கள் “அதை நான் ஒத்துக்கொள்வேன்” என்று கூறுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கமுடியாது. நீங்கள் லூத்தர் செய்தது போலவும், வெஸ்லி செய்ததுபோலவும், மற்றவர் செய்ததுபோலவும் நீங்கள் தனிமையில் நிற்கவேண்டும். அந்த வேளை இங்குள்ளபடியால், நீங்கள் அதனோடு நிற்க வேண்டும். அதுதான் என்னை அவலட்சணமான வாத்துக் குஞ்சாக்குகிறது. அதுதான் என்னை வித்தியாசமாக்குகிறது. 76 நான் என் விலையேறப்பெற்ற சகோதரர் ஓரல் ராபர்ட்ஸ், டாமி ஆஸ்பார்ன், டாமி ஹிக்ஸ் ஆகியவர்கள் போன்று என்னால் துவங்க முடியாது, ஏனெனில் சபைகள் என்னுடன் இணங்காது. அவர்கள், “அவர் நித்திய பாதுகாப்பு என்பதில் நம்பிக்கை கொண்டவராயிருக்கிறார். அவர் ஒரு பாப்டிஸ்டு. அந்நியபாஷை பேசுவது பரிசுத்த ஆவியைப் பெற்றதன் ஆரம்ப அடையாளம் என்று அவர் நம்புவது கிடையாது. அந்த நபரிடமிருந்து விலகியிருங்கள்!” என்கின்றனர். புரிகிறதா? 77 ஆனால் அதை முகமுகமாய் சந்தியுங்கள். அதை எதிர்கொள்ளுங்கள். அவர்கள் லூத்தரன்களை எதிர்கொள்ள முடியும், அந்த—அந்த மெத்தோடிஸ்டையும் எதிர்கொள்ள முடியும். பெந்தெகொஸ்தேயினர் மெதோடிஸ்டுகளை எதிர்கொள்ள முடிகிறது. நான் இதைக் கொண்டு பெந்தெகொஸ்தேயினரை எதிர்கொள்ள முடியும். அது முற்றிலும் உண்மை. அது உண்மை. அது ஏன்? அவர் ஒளியிலியிருக்கிறதுபோல நாமும் ஒளியில் நடந்துகொண்டிருக்கிறோம். பார்த்தீர்களா? நாம் ராஜாவின் பெரும் பாதையில் நடந்து மேலே சென்று கொண்டிருக்கிறோம், நாம் அதிக தூரம் நடந்து வரும்போது, நமக்கு கிருபை அதிகம் கொடுக்கப்படுகின்றது, வல்லமை அதிகம் கொடுக்கப்படுகின்றது, இயற்கைக்கு மேம்பட்டது அதிகம் கொடுக்கப்படுகின்றது. நாம் அந்நிலையில்தான் இருக்கிறோம். இந்த நேரத்தில்தான் பரிசுத்த ஆவியானவர், அவர் துவக்கத்தில் இருந்தவிதமாகவே ஒரு ஒளியின் ரூபத்தில் இறங்கி வந்து, ஒரு அக்கினி ஸ்தம்பமாக தம்மை வெளிப்படுத்தி, அவர் பூமியில் இருந்தபோது செய்த அதே கிரியைகளை செய்து வருகிறார். இயேசு, “அது சரியா இல்லையாவென்று நீங்கள் எப்படி அறிந்துகொள்வீர்கள்? அவர்களுடைய கனிகளினாலே நீங்கள் அறிவீர்கள். என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்” என்றார். 78 இப்பொழுது, என் பெந்தெகொஸ்தே சகோதரரே. நான் உங்களுடன் கூட இருக்கிறேன். நான் உங்களில் ஒருவன். நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன். நான் அந்நிய பாஷைகள் பேசியிருக்கிறேன், ஆனால் பரிசுத்த ஆவியைப் பெறும்போது அந்நிய பாஷைகள் பேசவில்லை. நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றேன்; நான் அந்நிய பாஷைகள் பேசினேன், தீர்க்கதரிசனம் உரைத்தேன், அறிவு, ஞானம், வியாக்கியானங்கள் போன்ற வரங்களைப் பெற்றேன், மேலும் ஒவ்வொரு காரியமும் சம்பவிக்கிறது. ஆனால் நான் இவைகளில் எந்த ஒன்றுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறேன், ஏனெனில் இப்பொழுது நான் தேவனுடைய பிள்ளை. வல்லமை, தேவனுடைய அக்கினி என் ஆத்துமாவில் உள்ளது; அந்த அக்கினி நாவு அமர்ந்தது—எனக்குள் வந்து அமர்ந்து, தேவனுக்கு முரணாயிருந்த ஒவ்வொரு காரியத்தையும் சுட்டெரித்துவிட்து. இப்பொழுது நான் அவருடைய ஆவியினால் நடத்தப்படுகிறேன். அவர், “இங்கே போ” என்றால், நான் போவேன். “இங்கே போ” என்றால்; நான் போவேன். “இங்கே பேசு” என்றால்; நான் பேசுவேன். “இதை, அதை, மற்றதை செய்.” அங்கு தான் காரியமே உள்ளது, அதைப் போன்றே…நீங்கள் ஆவியினால் நடத்தப்படுகின்றீர்கள். அது தேவன் உங்களுக்குள் இருந்து கொண்டு, தமது சித்தத்தை நடப்பிக்கிறார். அது என்னவாயிருப்பினும் கவலைப்பட வேண்டியதில்லை, அவர் தமது சித்தத்தை நடப்பித்துக்கொண்டிருக்கிறார். 79 இப்பொழுது கவனியுங்கள். நாம் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்குவதற்கு முன்பு, இதை இங்கு சொல் அகராதியிலிருந்து படிக்க விரும்புகிறேன். இப்பொழுது, இது வாடிகன் மொழி பெயர்ப்பிலிருந்து, தொகுதி 7, 190—1205: “அது அந்த ஜனங்களின் குரல் பேசின அந்நியபாஷையா: அல்லது இயற்கைக்கு மேம்பட்ட பலத்த காற்று உண்டானது என்னும் அறிவிப்பு அல்லது வதந்தி ஜனக்கூட்டத்தை உணர்ச்சிவசப்படுத்தினதா என்று தீர்மானிப்பது கடினம்.” அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பொழுது கவனியுங்கள். அது ஜனங்களா… 80 நான் அதை விவரிப்பேன். இங்கு எளிய, கந்தை உடுத்திய கலிலேயர்கள் இருக்கின்றனர். அவர்கள் இங்கே வெளியே தெருவுக்கு வந்தனர். அப்படிப்பட்ட ஒன்றை இதற்கு முன்பு கண்டதில்லை: அவர்கள் தங்களுடைய கரங்களை மேலேயுயர்த்தி, அந்த மேலறையிலிருந்து படிக்கட்டுகளின் வழியாய் இறங்கி, தெருவை அடைந்தனர், அவர்கள் நிரப்பப்பட்டிருந்தனர்; ஆனால் அவர்கள் இன்னும் பேசத் தொடங்கவில்லை. பார்த்தீர்களா? அவர்கள் படிக்கட்டுகளின் வழியாய் அங்கு அடைந்தனர். இப்பொழுது, அவர்கள் தள்ளாடிக் கொண்டே வந்தனர் என்றே நாம் கூறலாம். ஜனங்கள் கூறினர்…ஒரு கிரேக்கன் என்னிடம் வந்து, நான் கலிலேய பாஷையில் பேசுகிறேன் என்று கூறுகிறான். நான் அவனிடம் ஓடிச்சென்று, “மகனே, உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்கிறேன். 81 “நான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறேன். தேவ னுடைய வல்லமை அங்கே அந்த அறையில் இறங்கினது. எனக்கு ஏதோ ஒன்று சம்பவித்தது. ஓ, தேவனுக்கு மகிமை!” என்கிறான். வேறொருவன் இங்கு வருகிறான், அவன் ஒரு கலிலேயனாயிருந்தும், ஒரு அரபு தேசத்தானிடம் அரபிய—அரபிய மொழியில் பேசுகின்றான். 82 இப்பொழுது, அவர்களால் கூற முடியாததோ, அந்த பலத்த காற்று அந்த திரளான ஜனக்கூட்டத்தை ஒன்று சேர்த்ததா, அல்லது அவர்கள் பேசின வெவ்வேறு அந்நியபாஷைகள் அவர்களைக் கவர்ந்து ஒன்று கூட்டினதா என்பதே? இப்பொழுது, வேதம் சரியாக…நீங்கள் கவனிக்க வேண்டிய இரு காரியங்கள் உண்டு. அது அப்படித்தான்…அதாவது—அதாவது வெளியிலிருந்தவன், “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?” என்றான். அவர்கள் வெவ்வேறு பாஷைகளில் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படவில்லை, ஆனால் அவர்கள் அப்படி கேட்டுக்கொண்டிருந்தனர். 83 பின்பு அதே குழு, அதே ஜனங்கள், இதற்கு விளக்கம ளித்தனர். பேதுரு ஒன்றின் மேல் குதித்து நின்று, “கலிலேயரே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக (அவர்கள் கலிலேய மொழியை உடையவர்களாயிருக்கவில்லை என்று ஜனங்கள் கூறினர்) நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள் (அவர்களெல்லாரிடமும், அவன் எந்த—எந்த பாஷையில் பேசிக்கொண்டிருந்தான்?); ஏன், நீங்கள் நினைக்கிறப்படி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே, தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது: ‘கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேல் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்’” என்று தேவன் உரைத்திருக்கிறார். இப்படியாக அவன் பேசிக்கொண்டே சென்று, “அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையிலே ஆணியடித்துக் கொலை செய்தீர்கள். அவரைக் குறித்து தாவீது…‘அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்’” என்று உரைத்திருந்தான். “ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று யாவரும் நிச்சயமாக அறியக்கடவர்கள்” என்றான். இதை அவர்கள் கேட்டபொழுது…ஆமென்! யார்? வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு மனிதனும். என்ன நடந்ததுகொண்டிருந்தது? அவன், “இப்பொழுது, நான் கலிலேய பாஷையில் பேசவேன்; இந்த பாஷையில் பேசவேன்; நான் இந்த…?…பேசுவேன்” என்று அவன் கூறிக்கொண்டிருக்கவில்லை. 84 பேதுரு இந்த வார்த்தைகளை பேசினபோது, அவர்கள், “சகோதரரே, இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டனர். பேதுரு அவர்களுக்கு அப்பொழுது அந்த விதிமுறையைத் தந்தான். அது எப்பொழுதுமே அவ்வாறே நிகழ்கிறது. பார்த்தீர்களா? 85 அது முன்னே சென்று, தேவனிடம் நெருங்கி, அருகாமையில் நடத்தல். உங்களுக்கு எப்படி தெரியும்? இப்பொழுது பாருங்கள், லூத்தர் நீதிமானாக்கப்படுதலைப் பெற்றபோது, அவர் அதை பரிசுத்த ஆவியென்று அழைத்தார். அது அவ்வாறிருந்து. தேவன் அதற்குள் சிறிதளவை அப்பொழுது நனைத்தார். அதன்பின்னர் அவர் என்ன சொன்னார்? வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதலைப் பெற்று, “மகனே, நீ சத்தமிடும்போது, அதை பெற்றுக்கொண்டாய்” என்றார். ஆனால் அதைப் பெற்றிராத அநேகரும் சத்தமிட்டனர். பெந்தெகொஸ்தேயினர் யாவரும் பாஷையில்—அறியாத பாஷையில் பேசினபோது, “மகனே, நீ பெற்றுக்கொண்டுவிட்டாய்” என்றனர். ஆனால் அவர்களில் அநேகர் அதைப் பெறாமலிருந்தனர். அதை அறிந்துகொள்வதற்கு அடையாளங்கள் என்பது போன்ற அத்தகைய காரியங்கள் ஏதும் இல்லை. இயேசு, “ஒரு மரத்தை நீங்கள் அறிந்துகொள்ளக் கூடிய ஒரே வழி” என்று கூறி, “அது கொடுக்கும் கனிகளினால் மாத்திரமே” என்றார், ஆவியின் கனிகள், ஆவியின் கனி. ஆகையால் வல்லமையினால் நிரப்பப்பட்டுள்ளள்ள ஒரு மனிதனை, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டுள்ள ஒரு மனிதனை நீங்கள் காணும்போது, அப்பொழுது நீங்கள் மாற்றப்பட்ட ஒரு வாழ்க்கையை அவனில் காண்கிறீர்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடருவதை நீங்கள் காண்பீர்கள்: “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள். ஒரு சர்ப்பம் அவர்களைக் கடிக்குமானால், அது அவர்களுக்கு தீங்கு விளைவிக்காது. அவர்கள் சாவுக்கேதுவான யாதொன்றையும் குடித்தாலும், அது அவர்களை கொன்றுவிடாது. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” என்னே! இப்படிப்பட்ட அடையாளங்கள் விசு வாசிக்கிறவர்களைத் தொடரும். ஆனால் நீங்கள் அதற்குள் வருவது எப்படி? இந்த வரங்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ளன. அந்த சரீரத்துக்குள் நீங்கள் எப்படி வருகின்றீர்கள்? நீங்கள் பேசுவதன் மூலம் அதற்குள் வருவதில்லை; ஆனால் அந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப் படுவதனால் (முதலாம் கொரிந்தியர் 12:13). நாமெல்லாரும் ஒரே ஆவியினாலே அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, இந்த வரங்களை அடைகிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக. 86 யாராகிலும் இந்த ஒலி நாடாவைக் கேட்க நேர்ந்து அல்லது இங்குள்ள யாராகிலும் இதற்கு இணங்க மறுத்தால், சகோதரனே, அதை நட்புத் தன்மையுடன் செய்வதற்கு ஞாபகம் கொள்ளுங்கள், ஏனெனில் நான் உங்களை நேசிக்கிறேன். கேள்வி:93. இன்றிரவு முதல் கேள்வி: சகோதரன் பிரான்ஹாமே, தொலைகாட்சி உலகத்துக்கே ஒரு சாபம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? 87 பாருங்கள், அதை எழுதினவர் யாராயிருப்பினும், நான் உங்களுடன் இணங்கப்போகிறேன். அவர்கள் அதை உலகிற்கு சாபமாக்கிவிட்டனர். அது உலகிற்கு ஆசீர்வாதமாக இருந்திருக்க கூடும், ஆனால் அவர்களோ அதை சாபமாக்கி விட்டனர். என் அருமை ஜனங்களே, அப்படிப்பட்ட ஒன்றை, நீங்கள் எந்தவகையில் நோக்குகிறீர்கள் என்பதை அது பொறுத்தது. தொலைகாட்சி ஒரு சாபமாகக் கருதப்படுமானால், அப்படியானால் செய்திதாளும் ஒரு சாபமே, அப்படியானால் வானொலியும் சாபமே, அநேகமுறை தொலைபேசியும் சாபமாகவே உள்ளது. பாருங்கள், பாருங்கள், பாருங்கள், புரிகிறதா? நீங்கள் அதை எவ்விதம் பயன்படுத்துகிறீர்கள் என்பதையே பொருத்ததாயுள்ளது. ஆனால் அன்றிரவு அந்த சகோதரன் கூறினவிதமாக, தொலைக்காட்சியில் இப்பொழுது சரியான நிகழ்ச்சிகளே இருப்பதில்லை; ஏனெனில் அதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. முழு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் ஏழ்மையான போதகர்கள் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு செலவு செய்ய முடியாது. எனவே…அன்றிரவு சகோதரன், வேறெங்கோ, கூறினாரென்று நான் நினைக்கிறேன், அவர், “உங்கள் வானொலியின் மேலுள்ள தூசியைத் துடையுங்கள்” என்றார், அல்லது யாரோ, அல்லது, “அதை மூலையிலிருந்து கொண்டு வந்து சுவிசேஷ நிகழ்ச்சிகளைக் கேளுங்கள்” என்றார். அது உண்மை. 88 ஆனால், அன்பார்ந்த நபரே, நீங்கள் யாராயிருந்தாலும், உங்களு டன் நான் நிச்சயம் இணங்குகிறேன். அது மானிட வர்க்கத்துக்கே மிகவும் வெறுக்கப்படத்தக்க காரியங்களில் ஒன்றாய் உள்ளது. அரசாங்கத்துக்கு வரிகளாக செல்ல வேண்டிய எல்லா பணத்தையும் அவர்கள் இங்கே எடுத்து, சிகரெட்டுகள் விஸ்கி போன்றவைகளை விளம்பரப்படுத்துவதற்காக நிகழ்ச்சிகளை நடத்தி, அரசாங்க வரிகளிலிருந்து சலுகை பெறுகின்றனர்; அதன் பிறகு அவர்கள் சுற்றி வந்து சிறு தொகையை பிரசங்கிமார்களிடமிருந்து பறிக்க, இவர்களை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்கின்றனர். நான் உங்களுடன் இணங்குகிறேன் அது மிகவும் மோசமான காரியம். இப்பொழுது, அதுவல்ல…உங்களுக்குத் தெரியும், அது நீங்கள் கண்டறிகிற ஒரு காரியமாயுள்ளது. இந்த கேள்வியைக் கேட்டது சகோதரியோ, சகோதரனோ, யாராயிருப்பினும், உங்களுக்கு என் நன்றி. கேள்வி:94. இப்பொழுது, இங்கு ஒரு நல்ல கேள்வியுள்ளது. கேள்வி: வேதாகமத்தில் முதலாம் சாமுவேல் 18:10 போன்ற இடங்களில், தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி செயல் புரிந்தது என்று எழுதப்பட்டுள்ளது. “தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி” என்பது எனக்குப் புரியவில்லை. தயவு கூர்ந்து இதை விளக்கவும். 89 பாருங்கள், கர்த்தருடைய உதவியினால், என்னால் பதிலளிக்க முடியும். தேவன் பொல்லாத ஆவியாயிருக்கிறார் என்பது இதன் அர்த்தமல்ல. ஆனால் எல்லா ஆவிகளுமே தேவனுக்குக் கீழ்ப்பட்டுள்ளது. அவர் எல்லாவற்றையும் தமது சித்தத்துக்கு ஏற்றவாறு கிரியை செய்யும்படி செய்கிறார். புரிகிறதா? 90 இப்பொழுது, உங்களுடைய கேள்வியில், சவுலைத் துன்புறுத்த தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவியைக் குறித்து நீங்கள பேசிக்கொண்டிருக்கிறீர்கள். சவுல் மனோநிலை சரியில்லாத, நொறுங்கிய நிலையில்—இருந்தான், ஏனெனில், முதலாவதாக, அவன் பின்வாங்கிப் போயிருந்தான். நீங்களும் பின்வாங்கிப் போகும்போது, ஒரு பொல்லாத ஆவியை—உங்களை துன்புறத்த தேவன் ஒரு பொல்லாத ஆவியை அனுமதிப்பார். 91 இன்னும் சிறிது நேரத்தில் ஒன்றை உங்களுக்கு படித்துக் காண்பிக்க விரும்புகிறேன். அதை குறித்து எனக்கு இங்கு மற்றொரு கருத்து உள்ளது. புரிகிறதா? ஒவ்வொரு ஆவியும் தேவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும். யோசபாத்தும் ஆகாபும் போருக்குப் புறப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? முதலாவதாக உங்களுக்குத் தெரியும், அங்கிருந்த—அவர்கள் ஒலிமுக வாசல்களில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். யோசபாத் ஒரு நீதியுள்ள மனிதனாயிருந்தான், அவன் (அந்த இரண்டு ராஜாக்களும் அங்கு உட்கார்ந்துகொண்டு, தங்கள் சேனைகளை ஒன்று கூட்டினர்) எனவே அவன், “நாம் யுத்தத்துக்கு போகலாமா அல்லது வேண்டாமா என்பதைக் குறித்து கர்த்தரிடத்தில் விசாரிப்போம்” என்றான். 92 ஆகாப் புறப்பட்டுப்போய் தன்னிடத்திலிருந்த நானூறு தீர்க்கதரிசிகள், யாவரையும் வர வழைத்தான். அவன் அவர்களைப் போஷித்து கொழுக்க வைத்திருந்தான்; அவர்கள் திடகாத்திரமுள்ளவர்களாய் இருந்தனர். அவர்கள் அங்கு வந்து, ஒரு மனதுடன் தீர்க்கதரிசனம் உரைத்து, “நீங்கள் போகலாம், தேவன் உங்களுக்கு வெற்றியைத் தருவார். நீங்கள் கீலோயாத்திலுள்ள ராமோத்தின் மேல் யுத்தம் பண்ணப் புறப்படுங்கள், அங்கு தேவன் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்” என்றனர். அவர்களில் ஒருவன் ஒரு உதாரணத்துக்காக தனக்கு இரு கொம்புகளை உண்டாக்கிக் கொண்டு, சுற்றி ஒடத் துவங்கி, “இந்த இரும்புக் கொம்புகளினால், நீர் அவர்களை தேசத்துக்குப் புறம்பே தள்ளிவிடுவீர்; அது உமக்குத் சொந்தமானது” என்றான். 93 ஆனால் உங்களுக்குத் தெரியுமா, இதனோடெல்லாம் செல்லாத ஏதோ ஒரு காரியம் ஒரு தேவனுடைய மனிதனிடத்தில் உள்ளது. பாருங்கள்? அது வேதத்துடன் ஒத்துப்போகவில்லையென்றால், ஏதோ தவறுள்ளது. எந்த உண்மையான விசுவாசியும்…எனவே யோசபாத், “பாருங்கள், இந்த நானூறு பேர்களும் காண்பதற்கு நன்றாயிருக்கின்றனர். அவர்கள் நல்லவர்கள் போல் காணப்படுகின்றனர்” என்றான். “ஓ, அவர்கள் நல்லவர்களே,” என்று ஒருவேளை ஆகாப் கூறியிருப்பான். ஆனால் யோசபாத்தோ, “இன்னும் வேறும் யாராகிலும் உங்களிடத்தில் இல்லையா?” என்று கேட்டான். நானூறு பேர் ஒருமனதுடன் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளபோது, உமக்கு ஏன் வேறு யாராகிலும் வேண்டும்? ஏனெனில் சரியாக இல்லாத ஏதோ ஒன்று உள்ளது என்று அவன் அறிந்திருந்தான். பார்த்தீர்களா? ஆகாப், “ஆம், இன்னும் ஒருவன் இருக்கிறான், அவன் தான் இம்லாவின் குமாரனாகிய மிகாயா,” என்று கூறி, “ஆனால் நான் அவனைப் பகைக்கிறேன்” என்றான். நிச்சயமாக. நீர் அவனுடைய சபையை உம்மால் முடிந்த எந்த நேரத்திலும் மூடலாம். நீர் அவனை தேசத்தை விட்டு துரத்தி விடுவீர். பாருங்கள்? நிச்சயமாகவே, “நான் அவனைப் பகைக்கிறேன்.” “நீர் ஏன் அவனைப் பகைக்கிறீர்?” “அவன் எப்பொழுதுமே என்னைக் குறித்து தீமையாக தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன்.” அப்பொழுதே யோசபாத் அங்கே—ஏதோ சரியில்லை என்பதை கண்டு கொண்டான் என்று நான் நினைக்கிறேன். எனவே அவன், “போய், மிகாயாவை அழைத்து வா” என்றான். எனவே அவர்கள் அவனிடம் சென்றனர், அவன் இங்கு வந்து…எனவே அவர்கள் மேலே சென்றபோது, அவர்கள் ஒரு தூதுவரை அனுப்பி, “இப்பொழுது, ஒரு நிமிடம் காத்திரும். இப்பொழுது, அவர்களுக்கு அங்கு தெய்வீக பாண்டித்திய பட்டம் பெற்ற நானூறு பேர் இருக்கின்றனர். அவர்கள் தேசத்திலேயே மிகச் சிறந்தவர்கள் பிஎச், எல்.எல்.டி, பட்டங்களைப் பெற்றவர்கள்” என்றான். மேலும், “இப்பொழுது, உனக்குத் தெரியும், படிப்பறிவில்லாத எளியவனாகிய நீர், அந்த குருவானவர்கள் யாவரும் கூறினதுடன் இணங்காமலிருக்க மாட்டீர்” என்றான். 94 இம்லா இதைக் கூறினான், இல்லை மிகாயா இதைக் கூறினான் என்றே நான் கூறுகிறேன்: “தேவன் ஒன்றை என் வாயில் போடாமல் நான் எதையும் சொல்லமாட்டேன், அவர் என்ன கூறுகிறாரோ அதை அப்படியே எடுத்துரைப்பேன்” என்றான். அது எனக்குப் பிரியம். அது எனக்குப் பிரியம். வேறு வார்த்தைகளில் கூறினால், “நான் வார்த்தையோடு தரித்திருப்பேன்.” மற்றவர்கள் என்ன கூறினபோதிலும் கவலைப்படவேயில்லை. அவன், “பார்,” என்று கூறி, “நான் உனக்குச் சொல்கிறேன். நீர் துரத்தப்படாலிருக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் சொன்னதையே சொல்லுவது நல்லதாகும்” என்றான். எனவே அவன் அங்கு சென்றான். அப்போது ராஜா, “நான் போகலாமா?” என்று கேட்டான். அவன், “போங்கள்” என்றான். மேலும், “இன்றிரவு எனக்கு அவகாசம் கொடுங்கள். நான் அதைக் குறித்து கர்த்தரிடத்தில் பேசட்டும்” என்றான். அது எனக்குப் பிரியம். எனவே அன்றிரவு கர்த்தர் அவனுக்கு தோன்றினார், அடுத்த நாள் அவன் அவர்களிடம் சென்றான். மேலும் அவன் சொன்னான், செல்லும்போது என்று சொல்லி விட்டு, அவன், “போங்கள்; ஆனால் இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல் மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்” என்றான். ஓ, என்னே! அது ராஜாவை கோபமூட்டியது. அவன், “நான் உம்மோடே சொல்லவில்லையா? எனக்கு அது தெரியும். அவன் எல்லா நேரத்திலும் அந்த விதமாகவே சொல்லுகிறான், எனக்கு எதிராக தீமையான ஒரு காரியத்தைச் சொல்லுகிறான்” என்றான். 95 ஏன்? அவன் வார்த்தையோடு நிலைத்து நின்றுகொண்டிருந்தான். ஏன்? அவனுக்கு முன்பிருந்த ஒரு தீர்க்கதரிசி, அந்த உண்மையான தீர்க்கதரிசியாகிய, எலியாவினிடத்திலிருந்து தேவனுடைய வார்த்தை வந்தபோது, அவன், “நீ குற்றமற்ற நாபோத்தின் இரத்தத்தை சிந்தினதால், நாய்கள் உன் இரத்தத்தையும் கூட நக்கும்” என்று உரைத்திருந்தான். அவன் தீமையானதை சொல்லியிருந்தான். எலியா பரலோகத்துக்கு சென்று விட்டான். ஆனால் எலியா தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான் என்று அவன் அறிந்திருந்தான், எனவே அவன் வார்த்தையோடு தரித்திருந்தான். அது எனக்குப் பிரியம். வார்த்தையோடு தரித்திருங்கள். 96 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக் கிறார் என்றும்; அவருடைய வல்லமை இன்றைக்கும் மாறாததாயுள்ளது என்றும்; பரிசுத்த ஆவியை விருப்பமுள்ளவன் வந்து பெற்றுக்கொள்ளக்கடவன் என்று வேதம் கூறியிருக்குமானால், அந்த வார்த்தையோடு தரித்திருங்கள். ஆம், ஐயா! மற்றவர்கள் என்ன கூறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் எவ்வளவு நன்றாக போஷிக்கப்பட்டிருந்தாலும், எத்தனை வேத பள்ளிகளுக்கு சென்றிருந்தாலும், அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. எனவே அப்பொழுது அவன் கூறினான்…தன்னுடைய தலையில் இருப்புக் கொம்புகளோடிருந்த இந்த திடகாத்திரமான நபர், ராஜா அந்த தேசத்துக்கு அப்பாலே அதை—தள்ளிவிடப்போகிறார் என்று சொல்லி, மிகாயாவின் அருகில் சென்று (இந்த சிறு போதகரின் அருகில்), அவனை வாயில் அடித்தான். மிகாயா ஒரு சிறு உருளும் பரிசுத்தன் என்று அவன் அறிந்திருந்தான், எனவே அதைக் குறித்து யாரும் ஒன்றும் கூறப்போவதில்லையென்றே, இவன் அவனை வாயிலே அடித்தான். மேலும் அவன், “நான் உன்னை ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன்” என்றான். மேலும், “தேவனுடைய ஆவி எந்த வழியாய் என்னை விட்டு உன்னோடு பேசும்படி வந்தது?” என்றான். 97 அப்பொழுது மிகாயா, “நீ சிறைபிடிக்கப்பட்டு உள்ளறையிலே உட்கார்ந்துகொண்டிருக்கும்போது அதை புரிந்துகொள்வாய்” என்றான். அவன், “தேவன் ஒரு சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கி றதைக் கண்டேன் (ஆமென்! இப்பொழுது கவனியுங்கள்!), பரமசேனை அவரைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தது” என்றான். காரியம் என்னவாயிருந்து? ஆகாபுக்கு என்ன நேரிடும் என்பதைக் குறித்து அவருடைய தீர்க்கதரிசி ஏற்கெனவே உரைத்து விட்டிருந்தான். தேவன்…அது எலியா கூறினதாயிருக்கவில்லை; அவன் அபிஷேகம்பண்ணப்பட்ட தீர்க்கதரிசியாயிருந்தான். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்னும், கர்த்தருடைய வார்த்தையாயிருந்து. மிகாயா, “ஒரு மகத்தான கலந்துரையாடலில் பரம சேனையெல்லாம் தேவனைச் சுற்றிலும் நின்றுகொண்டிருப்பதை நான் கண்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கர்த்தர், ‘தேவனுடைய வார்த்தை நிறைவேறும்படி, கொல்லப்படுவதற்காக, அவனை வெளியேக் கொண்டு வர, உங்களில் யார் சென்று ஆகாபை வஞ்சிக்கப் போகிறீர்கள்? நாம் யாரை அனுப்பலாம்?’” என்று கேட்டார். 98 பாருங்கள், இந்த ஒருவன் இப்படியும் அந்த ஒருவன் அப்படியும் சொன்னான். கொஞ்சங் கழித்து, ஒரு பொல்லாத ஆவி, ஒரு பொய்யின் ஆவி கீழேயிருந்து புறப்பட்டு வந்து, “நீர் என்னை அனுமதிப்பீரானால் நலமாயிருக்கும். நான் ஒரு பொய்யின் ஆவியாயிருக்கிறேன். நான் போய், பிரசங்கிமார்கள் எல்லாருக்குள்ளும் செல்வேன், ஏனெனில் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவி ல்லை; நான் அவர்களை சொல்லச் செய்வேன் (அவர்கள் வேதப் பள்ளியில்-பயிற்றுவிக்கப்பட்ட பையன்கள்)—நான் சென்று, அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நுழைந்து, அவர்களை வஞ்சித்து, ஒரு பொய்யை அவர்கள் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பண்ணுவேன்.” அது அதைக் கூறினதா? அது, “அந்தவிதமாகத்தான் நாங்கள் வஞ்சிப்போம்” என்றது. எனவே அது பறப்பட்டுச் சென்றது. அப்பொழுது அவர் கூறினார்—தேவன், “நீ போக உனக்கு என்னுடைய அனுமதியை அளிக்கிறேன்” என்றார் என்பதாகக் கூறினான். 99 அப்பொழுது பொய்யின் ஆவி இறங்கிச் சென்று வேதாகமப் பள்ளிகளில்-பயிற்சி பெற்றிருந்த அந்த கள்ளத் தீர்க்கதரிசிகள் அனைவரின் வாயிலும் நுழைந்து, அவர்கள் ஒரு பொய்யை தீர்க்கதரிசனமாய் உரைக்கச் செய்தது. அது தேவனுடைய சித்தத்திற்காக கிரியை செய்துகொண்டிருந்த ஒரு பொய்யின் ஆவியாயிருந்து. நான்…நீங்கள் இங்கே புரிந்து கொள்ளும்படியாக வேறொன்றை, அப்படியே ஒரு நிமிடம். இதைக் கவனியுங்கள். என்னுடன் முதலாம் கொரிந்திரியர் 5-ம் அதிகாரம், முதலாம் வசனத்துக்கு வேதாகமத்தை, ஒரு நிமிடம், திருப்பும்படி நான் விரும்புகிறேன். கொரிந்திரியர் முதலாம் நிருபத்தில்…நீங்கள் ஒன்றைக் காண விரும்பினால், தேவன் செய்கிற ஒரு காரியத்தைக் குறித்தும்—எப்படி தேவன் அந்த பொல்லாத ஆவிகளை உபயோகிக்கிறார் என்பதற்கும் இதைக் கவனியுங்கள், அவை எவ்விதம் கிரியை செய்கிறதென்று…சரி, பவுல் பேசுகிறான்; உங்களுக்குள்ளே விபசாரங்கள் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரங்களாயிருக்கின்றதே. (அது சபை மத்தியில் இருப்பதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?)…ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; …படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். (நாம் பார்ப்போம். நான் இரண்டு பக்கங்கள் திரும்பி விட்டேன் என்று நினைக்கிறேன்…)… நீங்கள் —துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். (இப்பொழுது, இங்கே ஒரு நிமிடம் பொறுங்கள். நான்…ஆம், அது உண்மை. ஆம்.) …துக்கப்… (அது தான் இது.) …துக்கப்படா… இறுமாப்படைந்திருக்கிறீர்கள். இப்படிப்பட்ட காரியஞ் செய்தவனை நீங்கள் உங்களை விட்டு நீக்காமலும். 100 எனக்குத் தெரியாது. யாராகிலும் இதற்கு விரோதமாக கருத்து தெரிவிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நான் விசுவாசிப்பது சரியென்று கூற முற்படுகிறேன்: ஒரு மனிதன் பரிசுத்த ஆவியினால் ஒரு முறை நிரப்பப்பட்டுவிட்டால், அவன் அதை இழந்துபோக முடியாது. பாருங்கள், புரிகிறதா? நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடே இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல, நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடி வந்திருக்கையில், அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன். 101 தேவன், பரிசுத்த சபைக்கு, இப்பூமியிலுள்ள தமது சரீரத்துக்கு இதை கூறுகிறார், அதாவது (இப்பொழுது, இது பழைய ஏற்பாட்டின் காலத்துக்குப் பிறகு, புதிய ஏற்பாட்டின் காலத்தில்) ஜனங்களின் மத்தியில் மிகவும் அசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து, தன் தகப்பனுடைய மனைவியுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவனுக்கு இதைக் கூறுகிறார். அவர், “அப்படிப்பட்ட காரியம் கிறிஸ்துவின் சரீரத்தில் நடந்துள்ளது…நீங்கள், சபையே, அவனை அழிவுக்காக சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள்…” என்றார். புரிகிறதா? தேவன் அனுமதிக்கிறார்…ஒன்று செய்யப்படுவதைக் காணவேண்டுமென்று அவர் நினைக்கும்போது, ஒருவருக்கு சாட்டை அடி கொடுக்க அவர் நினைக்கும்போது, அவர் பொல்லாத ஆவியை அவர்கள் மேல் அவிழ்த்துவிடுவார், ஆகையால் அது அவர்களை வேதனைப்படுத்தி—அவர்களைத் திரும்பக்கொண்டு வரும். இப்பொழுது, நாம் காணும் இந்த மனிதன் பின்னர்… 102 அதுதான் இன்றைக்கு சபைகளோடுள்ள காரியமாயுள்ளது. ஒரு மனிதன் கிறிஸ்துவின் சரீரத்துக்குள் வந்து அதன் ஒரு அங்கத்தினனாகி, பொல்லாத காரியங்களைச் செய்யத் துவங்கி, நீங்கள் ஒன்று கூடி அதே காரியத்தைச் செய்வதற்கு பதிலாக…நீங்கள், பிரான்ஹாம் கூடாரமே, அதைச் செய்யுங்கள். ஏனெனில் நீங்கள் அவனுக்காக முறையிடும் வரைக்கும், அவன் இரத்தத்தின் கீழிருக்கிறான். அவன் அந்த பழைய காரியத்தை மறுபடியும் மறுபடியும் எல்லா நேரத்திலும் செய்து கொண்டேயிருக்கிறான். ஆனால் நீங்கள் ஒன்று கூடி, அவனுடைய ஆவி—கர்த்தருடைய நாளிலே இரட்சிக்கப்படும்படிக்கு, மாம்சத்தின் அழிவுக்காக அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள். தேவனுடைய சாட்டை அப்பொழுது வருவதைக் கவனியுங்கள். பிசாசு அவனை ஆட்கொள்வதைக் கவனியுங்கள். அப்பொழுது ஒரு பொல்லாத ஆவி அவனைத் துன்புறுத்தத் தொடங்குகிறது. 103 இந்தப் பையன் இங்கே சரிப்படுத்திக்கொண்டான். அவன் திரும்பி வருகிறான். அவன் தேவனுக்கு முன்பாக உண்மையாகவே சுத்திகரிக்கப்பட்டான் என்பதை நாம் இரண்டாம் கொரிந்தியரில் கண்டறிகிறோம். 104 யோபுவைப் பாருங்கள், ஒரு பரிபூரணமான மனிதன், ஒரு நீதிமான். அவனுடைய ஆவியின் பரிபூரணப்படுத்துதலுக்காக, பொல்லாத பிசாசு அவன் மேல் வந்து, அவனைத் துன்புறுத்த, மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் செய்ய தேவன் அனுமதித்தார். புரிகிறதா? எனவே பொல்லாத ஆவிகளை…தேவன் தமது திட்டத்தையும் சித்தத்தையும் நிறைவேற்ற அநேக சமயங்களில் பொல்லாத ஆவிகளை உபயோகிக்கிறார். கேள்வி:95. இப்பொழுது, இங்கே இது உண்மையில் கடினமான ஒரு கேள்வியாயுள்ளது. கேள்வி (அது அதே நபர் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அதே கையெழுத்து போல் காணப்படுகிறது): குணப்பட்டு எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல ஒரு நபருக்கு பரிசுத்த ஆவி அவசியம் என்னும் போது, கணக்கொப்புவிக்கும் ஆண்டுகளை அடையும் முன்பு மரித்துப்போகும் குழந்தைகளின் நிலையென்ன? அவர்கள் எப்பொழுது உயிரோடெழுவார்கள்? 105 இப்பொழுது, என் சகோதரனே, சகோதரியே, என்னால் அதை உனக்கு சொல்ல முடியாது. அதற்கான வேத வசனத்தை என்னால் வேதாகமத்தில் எங்கும் காணமுடியவில்லை. ஆனால் என் கருத்துக்களை நான் வெளிப்படுத்த முடியும். இப்பொழுது, தேவனுடைய கிருபையில் விசுவாசங் கொண்டுள்ள உங்களை அது பெலப்படுத்தும். நீங்கள் பாருங்கள், இந்த நபர் அறிய விரும்புகிறார் (அது ஒரு நல்ல கேள்வி. பார்த்தீர்களா?) ஒரு குழந்தைக்கு உயிரத்தெழுதலில்—என்ன சம்பவிக்கும் என்பதை இந்த நபர் அறிந்துகொள்ள விரும்புகிறார், எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க வேண்டும் என்றால்…நான் ஏற்கெனவே கூறியுள்ளபடி, அது உண்மை. அது வேதத்தின்படியாயுள்ளது. அதுவே வேத போதனையாயிருக்கிறது. அதாவது பரலோகத்துக்கு செல்லவே முடியாது…பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்கள் முதலாம் உயிர்தெழுதலில் பங்கு கொள்வார்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். மற்றவர்கள்…மரணமடைந்த மற்றவர்கள் ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பின்பு, இரண்டாம் உயிர்த்தெழுதல், பின்பு வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு. புரிகிறதா? அதுதான் வேதத்தில் கூறப்பட்டுள்ள சரியான வரிசைக்கிரமம். ஆனால் இந்த குழந்தைகளைக் குறித்து என்ன என்பதையே இந்த நபர் அறிந்துகொள்ள விரும்புகிறார். அவர்கள்…வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்கள் பிறப்பதற்கு முன்பே பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தனரா? அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டனரா? இப்பொழுது, என்னால் அதைச் சொல்ல முடியாது. 106 ஆனால் இப்பொழுது, அதை இப்படி நாம் கூறுவோம்: மரிக்கும் குழந்தைகள், அவர்களுடைய பெற்றோர் யாராயிருப்பினும், அவர்கள் காப்பாற்றப்படுகின்றனர் என்று நமக்குத் தெரியும். இப்பொழுது, அதன் பேரில் தீர்க்கதரிசிகளின் வேத சாஸ்திரப் பள்ளி கொண்டுள்ள கருத்தோடு நான் உடன்படுகிறதில்லை. அவர்கள்—அது பாவமுள்ள பெற்றோருக்கு பிறந்ந ஒரு குழந்தை மரிக்க நேரிட்டால், அந்த குழந்தை நரகத்துக்கு சென்று, அழிந்து போகும்; அதற்கு இனிமேல் எதுவுமே கிடையாது என கூறியுள்ளனர். பாருங்கள், இயேசு…இயேசு வந்த போது யோவான், “இதோ உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றான். அந்த குழந்தை ஒரு மானிடக் குழந்தையாயிருந்தால், அது தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குள் வர வேண்டியதாயிருக்கும், பாவத்தைப் போக்க இயேசு மரித்தாரென்றால், இயேசு அந்த நோக்கத்துக்காக மரித்துள்ளபோது, எல்லா பாவமும் தேவனுக்கு முன்பாக நீக்கப்பட்டுவிட்டன. உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன. என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன. நீங்கள் மன்னிக்கப்படக்கூடிய ஒரே வழி, அவருடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வதேயாகும். ஆனால் இந்த குழந்தையோ மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது, எனவே அது ஒன்றுமே செய்திருக்கவில்லை. அது ஒன்றையுமே செய்திருக்கவில்லை. எனவே அது பரலோகத்துக்கு செல்வதற்கு முற்றிலும் விடுதலையடைந்துள்ளது. 107 ஆனால் நீங்கள், “அவர்கள் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல் வார்களா?” என்று கேட்கலாம். இப்பொழுது—இப்பொழுது, இது என் சொந்த வார்த்தை; இப்பொழுது இது என் சொந்த கருத்து. இல்லை…இதை என்னால் வேதாகமத்தைக் கொண்டு நிரூபிக்க முடியாது. ஆனால் கவனியுங்கள். பூமியின்மேல் தோன்றவிருக்கும் மானிடவர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும், தேவன் உலகத் தோற்றத்துக்கு முன்னே அறிந்திருப்பாரானால்…நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் ஒவ்வொரு கொசுவையும், ஒவ்வொரு உண்ணியையும், ஒவ்வொரு ஈயையும் அறிந்திருந்தார், அவர் பூமியின் மேலிருக்கப்போகும் ஒவ்வொன்றையும் முன்னமே அறிந்திருந்தார். அவர் அதை அறிந்திருப்பாரானால்… 108 கவனியுங்கள். மோசேயை, நாம் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். மோசே பிறந்தபோது, அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். எரேமியா தோன்றுவதற்கு முன்னமே…தேவன் எரேமியாவிடம், “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன், நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி உன்னை ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக கட்டளையிட்டேன்” என்றார். யோவான் ஸ்நானன் பிறப்பதற்கு எழுநூற்று பன்னிரண்டு ஆண்டு களுக்கு முன்பே, ஏசாயா அவனை ஒரு தரிசனத்தில் கண்டு, “அவன் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தமாயிருக்கிறான்” என்றான். 109 தேவனுடைய முன்குறித்தல் அல்லது முன்னறிதல் சிறு குழந்தை களைக் குறித்து எல்லாம் (புரிகிறதா?), அவர்கள் என்ன செய்வார்களென்றும் அறிந்துள்ளது. அவர்கள் மரித்துப் போவார்களென்றும் அவர் அறிந்திருந்தார். அவர் அறிந்திருந்தார். அதைக் குறித்து தேவனுக்குத் தெரியாமல் ஒன்றுமே நடக்க முடியாது. எதுவுமே நடக்க முடியாது…நல்ல மேய்ப்பனைப் போல், எப்படி அவர் உள்ளே சென்று…இப்பொழுது, இதற்கு வேதாகமத்தை எடுத்துக்கொண்டு, வேதம் இன்ன-இன்னவிதமாய் கூறுகிறதென்று என்னால் கூற முடியாது. இது என் சொந்த கருத்தாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். கேள்வி: 96. இப்பொழுது, அன்றிரவு நான் கூறினதன் பேரில் யாரோ ஒருவர் விளக்கம் கேட்டிருப்பதே அடுத்தக் கேள்வியாயுள்ள ஒன்றாயிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஒரு பிள்ளைப்பேற்றினால் ஒரு மனைவி இரட்சிக்கப்படுவாள் என்பதை விளக்குங்கள். 110 ஒரு பிள்ளை பெறுவதனால் மனைவி இரட்சிக்கப்படுவதில்லை. ஆனால் இப்பொழுது ஒரு நிமிடம் முதலாம் தீமோத்தேயு 2:8-க்கு திருப்புவோம். பிள்ளையைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறதென்று நாம் காண்போம். இப்பொழுது, அது ஒரு கத்தோலிக்க உபதேசம் என்பதை நான் உணருகிறேன், ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பதன் மூலம் ஒரு ஸ்திரீ இரட்சிக்கப்படுகிறாள் என்று கத்தோலிக்கன் கூறுகிறான். ஆனால் நாமோ…அதை நான் விசுவாசிப்பதில்லை. முதலாம் தீமோத்தேயு 2-ம் அதிகாரம், 8-ம் வசனத்திலிருந்து தொடங்கி, இப்பொழுது சற்று நேரம் படிப்போம். சரி, கவனியுங்கள். ஸ்திரீகளும்…தகுதியான வஸ்திரத்தினாலும்…தங்களை… தொழுதுகொள்ள வேண்டும். (நாம் அதைக் கேட்க வேண்டியதில்லை, நாம் கேட்க வேண்டுமா? இதைக் கேளுங்கள்.)…நாணத்தினாலும், (வ்வுயூ!) தெளிந்த புத்தியினாலும்,… தன்னுடைய மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேற்றப்பெற்ற வஸ்திரத்தினாலாவது (சகோதரரே, நான் உங்களுக்கு இங்கு உதவி செய்கிறேன் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை புது தொப்பிகள் அணிவது போன்றது. உங்களுக்குப் புரிகிறதா? அது கிறிஸ்தவர்களாக இருக்காது.) தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றப்படியே நற்கிரியைகளினாலும் தங்களை அலங்கரிக்க வேண்டும். உங்களுடைய ஸ்திரீகள் எல்லாவற்றிலும் அடக்கமுள்ளவர்களாயிருந்து, அமைதலோடு கற்றுக் கொள்ளக்கடவர்கள். உபதேசம்பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதியாயிருக்கவேண்டும். என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். …ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். …பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள். (இப்பொழுது, அவன் உலகப் பெண்கள் குழந்தைகளைப் பெறுவதைக் குறித்து இங்கு பேசிக்கொண்டிருக்கவில்லை.)…அவள் விசுவாசத்தில் நிலைகொண்டிருந்தால்…(புரிகிறதா? அவள் நிலைகொண்டிருந்தால். அவள் ஏற்கனவே…அப்படிப்பட்ட ஸ்திரீயைக் குறித்து, ஏற்கனவே இரட்சிக்கப்பட்ட ஸ்திரீயைக் குறித்தே அவன் பேசுகிறான். புரிகிறதா?) முழுவதும் தெளிந்த புத்தியோடு…அன்பிலும் பரிசுத்தத்திலும் 111 ஒரு குழந்தையைப் பெறுவது அவள் இரட்சிக்கும்படி செய்வ தில்லை, ஆனால் அவள் பிள்ளைகளை வளர்த்து, தன் கடமையை செய்கிறாள், ஒரு பிள்ளைக்குப் பதிலாக, இன்று அவர்கள் செய்வது போல், அவள் பூனைகளையும் நாய்களையும் மற்றும் இன்னும் என்னவெல்லாமோ வளர்ப்பதில்லை, அவர்கள் இரவெல்லாம் வெளியே சுற்றவேண்டும் என்பதற்காக, அதற்கு ஒரு தாயினுடைய அன்பை செலுத்துகின்றனர். சில ஜனங்கள் அதைச் செய்கின்றனர். மன்னிக்கவும், ஆனால் அவர்கள் அதைச் செய்கின்றனர். அதை நான் எடுத்துக் கூறுவது எனக்கே மட்டுமீறிய நாகரீகமற்றதாயுள்ளது, ஆனால் உண்மை உண்மையாகவே உள்ளது. பாருங்கள்? அவர்கள் ஒரு குழந்தையோடு இனணைக்கப்பட்டிருக்க விரும்புவதில்லை. ஆனால் பிள்ளைப்பேற்றினால், அவள் விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும், முழுவதும் தெளிந்த புத்தியோடும் நிலை கொண்டிருந்தால், அவள் இரட்சிக்கப்படுவாள். ஆனால் அது இருந்தால் என்பதாயுள்ளது, நீங்கள் மீண்டும் பிறந்திருந்தால், நீங்களும் கூட இரட்சிக்கப்படுவீர்கள். நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் சுகமடைவீர்கள், உங்களால் சுகமடைய முடியும். நீங்கள் அதை விசுவாசித்தால், அதற்காக ஆயத்தமாயிருந்தால், நீங்கள் அதற்காக ஆயத்தமாயிருந்தால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியும். அது போன்று அவள் இந்த காரியங்களைத் தொடர்ந்து செய்வாளானால் (புரிகிறதா?) அவள் இரட்சிக்கப்படுவாள், ஆனால் அவள் ஒரு ஸ்திரீ என்பதனால் அல்ல. எனவே அது சரிதான், சகோதரனே, சகோதரியே. இது கத்தோலிக்க உபதேசமே அல்ல. இப்பொழுது நான்…இங்கு மற்றொரு கடினமான கேள்வி உள்ளது. அதன்பிறகு நாம் இன்னும் ஒன்றைப் பெற்றுள்ளோம். அதற்கு பதில் கூற நமக்கு நேரம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதை விவரிக்க என் சொந்த நேரத்தை எடுத்துக்கொண்டேன். இப்பொழுது, இவை சற்று—இவை எழுப்புதலின் பின்விளைவுகளாயுள்ளன. இந்தக் கேள்விகள், இவை கூட்டங்களின் பின்விளைவுகளாயுள்ளன. கேள்வி: 97. இப்பொழுது: சகோதரன் பிரான்ஹாமே (இது தட்டச்சு செய்யப்பட்டுள்ளது), ஒரு நபர் அந்நியபாஷைகளில் பேசி அவருடைய சொந்த செய்தியை வியாக்கியானிப்பது வேதத்தின்படியானதா? அப்படியானால், தயவு கூர்ந்து விளக்கவும். முதலாம் கொரிந்தியர் இல்லை கொரிந்தியர் 14:19 மற்றும் கொரிந்தியர் 14:27-யும் கூட. 112 சரி, நாம் வேதாகமத்துக்கு சென்று அது என்ன கூறுகிறதென்று பார்ப்போம். ஆகையால் அதை நாம் வேதப்பிரகாரமாக வைத்திருக்கிறோமா என்று நாம் காண்போம். நாம் எப்பொழுதுமே வேதப்பிரகாரமாக இருக்கவே விரும்புகிறோம். கொரிந்திரியர் 14. இப்பொழுது, இந்த நபர் அறிய விரும்புவது ஒரு மனிதன் தான் பேசின அந்நிய பாஷைக்கான தன்னுடைய சொந்த செய்தியை தானே அர்த்தம் உரைப்பது வேதப்பிரகாரமானதா என்பதேயாகும். “ஆகையால், கொரிந்தியர் 14:19-ஐ விவரிக்கவும்.” நாம் 14 மற்றும் 19-ஐ பார்ப்போம். சரி, இங்குதான் நாம் இருக்கிறோம். அப்படியிருந்தும், நான் சபைகளிலே அந்நிய பாஷைகளில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும். இப்பொழுது, அடுத்தப்படியாக 27-ம் வசனம், அவர்கள் அறிய விரும்புகின்றனர். யாராவது அந்நிய பாஷையிலே பேசினால், அது இரண்டு பேர் மட்டில் அல்லது மிஞ்சினால் மூன்று பேர்…அடக்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். 113 இப்பொழுது, அந்த நபர் எதை் குறிப்பிட முயற்சிக்கிறார் என்பதையே நான் பொருட்படுத்துகிறேன் (எனக்கு தேவையான—இன்னும் சிறிது நேரத்தில் நான் ஒன்றை படிக்கப் போகின்றேன்). ஆனால் அந்த சகோதரன் அல்லது சகோதரி என்ன குறிப்பிட முயற்சிக்கிறார் என்று நான் கருதுகிறேன் என்றால், “அந்நிய பாஷை பேசும் ஒருவர், அவரே அவர் உரைத்த செய்திக்கு அர்த்தம் உரைப்பது சரியா?” என்பதே. இப்பொழுது, என்னுடைய அருமையான அன்பார்ந்த நண்பரே, நீங்கள்அதே அதிகாரத்தில் 13-ம் வசனத்தைப் படிப்பீர்களானால், அது உங்களுக்கு சொல்லும்: அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன். 114 நிச்சயமாக. அவனே தன்னுடைய செய்திக்கு அர்த்தம் உரைக்க முடியும். இப்பொழுது, நாம் சரியாக…நாம் சரியாக…பாருங்கள், நீங்கள்…அதைக் குறித்த எல்லாவற்றையும் இங்கு படியுங்கள், அப்பொழுது நீங்கள் அதனுடைய…புரிந்துகொள்ள முடியும். முழு அதிகாரத்தையும் சற்று படியுங்கள். அது மிகவும் நல்லது, அது அதை விவரிக்கிறது. 115 இப்பொழுது, அந்நியபாஷை பேசுதல்…இப்பொழுது அதன் பேரில் நாம் இருக்கையில், இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது, நான் தெய்வீக சுகமளித்தல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, வரப்போகும் உலகின் வல்லமை போன்றவைகளை விசுவாசிப்பது போல்; அந்நியபாஷை பேசுவதிலும் விசுவாசங்கொண்டுள்ளேன் என்பதை நான் கூற விரும்புகிறேன். அவைகளை விசுவாசிப்பது போலவே இதையும் விசு வாசிக்கிறேன், ஆனால் கிறிஸ்துவின் வருகைக்கு அதனுடைய ஸ்தானம் உள்ளது போல; தெய்வீக சுகமளித்தலுக்கும் அதனுடைய ஸ்தானம் உள்ளதுபோல; அந்நிய பாஷையில் பேசுதலுக்கும் அதனுடைய ஸ்தானம் உண்டு என்று நான் விசுவாசிக்கிறேன். ஒவ்வொருகாரியத்திற்கும் அதனுடைய ஸ்தானம் உண்டு. 116 இப்பொழுது, ஜனங்களாகிய உங்களிடம், இப்பொழுது இதைச் கூற எனக்கு ஒரு தருணம் கிடைத்துள்ளது, எனவே நான் அதை விளக்க விரும்புகிறேன். நான் யாரையாவது புண்படுத்தினால், அப்படி செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நான் குழப்பத்தை உண்டாக்க நினைக்கவில்லை. ஆனால் கவனியுங்கள். அந்நிய பாஷைகளில் பேசுகிற பெந்தெகொஸ்தே ஜனங்களோடுள்ள காரியம் என்னவாயிருந்து வருகிறது (நானும் கூட அதில் சேர்ந்தவன்; நானும் பெந்தெகொஸ்தேயினன். பார்த்தீர்களா?)…இப்பொழுது, இதில் இருந்து வருகிற பிரச்சனை என்னவெனில்: அவர்கள் அதை மதிப்பதில்லை என்பதேயாகும். மற்றொரு காரியம், அவர்கள் அதை சீரற்ற முறையில் விட்டு விடுகின்றனர். அவர்கள் வார்த்தைக்கு திரும்ப வருவதில்லை. 117 இப்பொழுது கவனியுங்கள். இப்படித்தான்—இப்படித்தான் சபை அமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, ஒரு பெந்தெகொஸ்தே சபையில், நான் இந்த சபைக்கு போதகராயிருப்பேனானால், அதை எப்படி அமைக்க எனக்கு விருப்பமென்பதை உங்களிடம் நான் கூறுவேன் (புரிகிறதா?), நான்—எல்லா சமயங்களிலும் அதற்கு போதகராக இருக்க நேரிட்டால் நலமாயிருக்கும். நான் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வரத்தையும் ஆதரிப்பேன். முதலாவதாக விசுவாசிகளிடம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறக் கூறுவேன். அப்பொழுது முதலாம் கொரிந்திரியர் 12-ல் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வரமும் இயங்கத்தான் வேண்டும், சரீரம் முழுவதும் இயங்கும் நிலைக்கு, நான் அவைகளைக் கொண்டு வர முடிந்தால் நலமாயிருக்கும். 118 இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால்…இப்பொழுது நான் குற்றங்குறைகளைக் கூறவில்லை. ஞாபகமிருக்கட்டும், நான் பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் தேவதூஷணம் உரைக்கும்படி—நான் ஒரு வார்த்தையும் முரணாக பேசமாட்டேன். நான் அதை தவறாக கூற மாட்டேன் என்று தேவன் அறிவார். புரிகிறதா? ஆனால் நான் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக வேதாகமத்தை ஆராய்ந்து படித்த பிறகு, வேதாகமம் கூறும் கருத்துக்களை உங்களுக்கு கூற முயற்சித்க்கும்படி மாத்திரமே இதை நான் கூறிக்கொண்டிருக்கிறேன். நான் ஏறக்குறைய முப்பது ஆண்டு களாக பிரசங்கித்து வருகிறேன். நான் எல்லாவற்றின் வழியாகவும் கடந்து வந்திருக்கிறேன்; அது எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியும். நான் ஒவ்வொரு மனிதனையும், உலகம் முழுவதிலுமுள்ள அவர்களுடைய உபதேசங்களையும் கவனித்து வந்திருக்கிறேன். அப்படி நான் செய்யக் காரணம், அதன் மீதிருந்த என் ஆர்வமாகும். அது என் பேரில் மாத்திரமல்ல, மானிடர் பேரில் கொண்டுள்ள ஆர்வமாயுள்ளது. நான் இவ்விடம் விட்டு செல்ல வேண்டும். நீங்களும் இவ்விடம் விட்டு செல்லவேண்டும். நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாக இவ்விடம் விட்டுச் சென்றால், நான் என் சொந்த ஆத்துமாவையும் மற்றும் என்னோடு கூட உங்களுடையதையும் இழந்துவிடுவேன். எனவே இது—இது அனுதின அப்பத்தைக் காட்டிலும் முக்கியம் வாய்ந்தது; இது புகழைக் காட்டிலும் முக்கியம் வாய்ந்தது; இது மற்றெல்லாவற்றைக் காட்டிலும் முக்கியம் வாய்ந்தது; இது எனக்கு ஜீவனாயுள்ளது. புரிகிறதா? நான் எப்பொழுதுமே மிகவும் ஆழ்ந்த உத்தமத்தைக் கொண்டுள்ளவனாய் இருக்க விரும்புகிறேன். 119 இப்பொழுது, நீங்கள் ஒரு பெந்தெகொஸ்தே சபைக்குச் சென்றால், முதலாவது காரியம்…(நான் அவர்கள் எல்லாருமே அப்படியென்று கூறவில்லை. சிலர் அப்படியுள்ளனர்…) பெரும்பாலும் நீங்கள் ஒரு சபைக்குச் சென்று அங்கு பிரசங்கம் செய்யத் தொடங்குகின்றீர்கள்; நீங்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும்போது, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று அந்நியபாஷையில் பேசுகின்றார். இப்பொழுது, அந்த அருமையான நபர் ஒருக்கால் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, அது பரிசுத்த ஆவி அந்த நபர் மூலமாக பேசுவதாக இருக்கலாம், ஆனால் அதைக் குறித்த காரியம் என்னவெனில், அவர்கள் பயிற்றுவிக்கப்படவில்லை. மேடையில் நடக்கும் இந்த ஊழியம், பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் பிரசங்கிக்கப்படுமானால், தீர்க்கதரிசிகளின் ஆவிகள் தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கவேண்டும். புரிகிறதா? “சகலமும்…செய்யப் படக்கடவது.” இப்பொழுது, “ஒருவன் பேசும்போது” என்று பவுல் ஏன் கூறுகிறானென்று இங்கே புரிந்துகொள்ளுங்கள், மற்றும் முன்னும் பின்னுமாக…“அவன் உள்ளே வரும்போது, எல்லாமே குழப்பாயிருந்தது.” 120 இப்பொழுது, நான் பீட அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று அந்நியபாஷையில் பேசுகிறார். அது…பாருங்கள், அப்படியானால் பீட அழைப்புக் கொடுப்பதை விட்டுவிடுவதே நலம். அது அதைத் தடுக்கிறது. புரிகிறதா? 121 பின்பு, வேறொரு காரியம். அநேகமுறை ஜனங்கள் எழுந்து நின்று அந்நிய பாஷையில் பேசுவார்கள், அப்பொழுது ஜனங்கள் உட்கார்ந்துகொண்டு மெல்லும் பசை மிட்டாயை மென்றுகொண்டு, சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். தேவன் பேசிக்கொண்டிருந்தால், அமைதியாயிருந்து, கவனியுங்கள்! அது சத்தியமாயிருக்குமானால், அது அந்த நபரிடத்தில் பரிசுத்த ஆவி பேசிக்கொண்டிருப்பதாயிருந்தால், நீங்கள் அமைதியாயிருந்து கவனித்துக் கேளுங்கள், பயபக்தியாயிருங்கள். அர்த்தம் சொல்லுதல் உங்களுக்கு வரலாம். புரிகிறதா? அமைதியாயிருந்து்; அர்த்தம் உரைத்தலை கேளுங்கள். இப்பொழுது, அர்த்தம் உரைப்பவர் யாரும் சபையில் இல்லாமற்போனால், அப்பொழுது அவர்கள் சபையில் அமைதியாயிருக்கக்கடவர்கள். 122 ஆகையால், அவர்கள் அந்நிய பாஷையில் பேசும்போது, அவர்களுக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவர்கள் என்று வேதம் கூறியுள்ளது. அந்நியபாஷை பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகின்றான். இப்பொழுது, அது அந்நிய பாஷைகள்; கிளை மொழிகள், மொழிகள் வேறு. “அவைகள் ஒன்றுமில்லை” என்று அவன் கூறுகிறான்…ஆனால் ஒரு சத்தம் உண்டாக்கும்போது ஒரு அர்த்தம் இருக்கவேண்டும். ஆனால் நீங்கள்…ஒரு எக்காளம் சத்தமிட்டால், அது என்ன சத்தமிடுகிறது (…அது எப்படி ஊதப்படுகிறது) என்று நீங்கள் அறியவேண்டும், இல்லையென்றால் யுத்தத்துக்கு எப்படி உங்களை ஆயத்தம் பண்ணவேண்டுமென்று உங்களுக்குத் தெரியாது. யாராகிலும் அந்நிய பாஷை பேசி, “டூட்” என்று சத்தமிட்டால், அவ்வளவுதான், என்ன செய்யவேண்டுமென்று யாருக்குத் தெரியும். ஆனால் எக்காளம் எழுச்சி ஒலியில் ஒசையிட்டால், அதற்கு “எழுந்திருங்கள்!” என்று அர்த்தமாகிறது. அது அடையாள அறிவிப்பு ஒலியில் ஒசையிட்டால், “கீழே இறங்குங்கள்” என்று அர்த்தமாகிறது. புரிகிறதா? அது கட்டளை ஒலியில் ஓசையிட்டால், “எதிரியைத் தாக்குங்கள்” என்று அர்த்தமாகிறது. அது ஒரு அர்த்தத்தை கொடுப்பதாய் அமைந்திருக்கவேண்டும், வெறுமனே தனிமையில் பேசுவது அல்ல. எனவே சபையில், அர்த்தம் உரைப்பவர் இல்லையென்றால், ஆனால் அர்த்தம் உரைப்பவர் இருந்தால், அப்பொழுது அந்நிய பாஷைகள் சபைக்கு உரியதாகும். 123 இப்பொழுது, என் அருமை நண்பரே, உங்கள் கேள்விக்கு, அப்படியிருந்தும், “நான் சபையிலே ஐயாயிரம் வார்த்தைகளை…(அல்லது அதற்கு மேல் என்ன கூறினாலும்) பேசுகிறதிலும் மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.” அது உண்மை. ஆனால் கீழே படிக்கவும்: “…அது வெளிப்பாட்டினால் இல்லை பக்திவிருத்திக்கேதுவாக அர்த்தம் சொல்லப்படாமற்போனால்.” புரிகிறதா? அது பக்திவிருத்திக்கு. 124 இப்பொழுது, ஒரு சிறு கருத்தை உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன், என்ன—என்ன…எழும்பிக்கொண்டிருக்கும் இந்த சபைக்கு நான் போதகராக இருந்தால், நான் போதகராக இருக்க தேவன் என்னை அழைப்பாரானால், இதோ இந்த விதமாகத்தான் நான் அதை நடத்துவேன்: வரம் பெற்றுள்ள ஒவ்வொரு வரையும் நான் கண்டுபிடிக்க முயற்சிப்பேன். ஆராதனை தொடங்குவதற்கு ஏறக் குறைய ஒரு மணிநேரம் முன்பு அவர்கள் தனியாக ஒரு அறையில் கூடும்படி செய்வேன். அவர்கள் ஆவிக்குள்ளாகி அமரட்டும். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஒருவர் வருகிறார், அவர் அந்நிய பாஷையில் பேசும் ஒரு வரத்தைப் பெற்றுள்ளார். அவர் அந்நியபாஷையில் பேசுகின்றார். எல்லோரும் அமைதியாக உட்கார்ந்திருப்பார்கள். வேறொருவர் எழுந்து அவர் பேசினதற்கு அர்த்தம் உரைக்கிறார். இப்பொழுது, அது சபைக்கு அளிக்கப்படும் முன்பு, இப்பொழுது, அது இரண்டு அல்லது மூன்று சாட்சிகளால் நிதானிக்கப்பட வேண்டுமென்று வேதம் கூறுகிறது. இப்பொழுது, அது ஆவியைப் பகுத்தறியும் வரம் கொண்ட மனிதர்களாய் இருக்க வேண்டும் (புரிகிறதா?), ஏனெனில் அநேக சமயங்களில் பொல்லாத ஆவிகள் அங்கு நுழைந்துவிடுகின்றன. புரிகிறதா? பவுல் அதைக் குறித்துப் பேசினான். ஆனால், தேவனுடைய வல்லமையும் கூட அங்குள்ளது. பொல்லாத ஆவி இல்லாத ஒரு சபையை எனக்குக் காண்பியுங்கள். தேவபுத்திரர் ஒன்று கூடியிருக்கும்போது, சாத்தான் அவர்கள் நடுவில் இல்லாத ஒரு இடத்தை எனக்கு காண்பியுங்கள். அது எல்லாவிடங்களிலும் உள்ளது. எனவே அதைக் கண்டு முகங் கோணாதீர்கள். புரிகிறதா? சாத்தான் எல்லாவிடங்களிலும் இருக்கிறான். இப்பொழுது, இங்குதான் காரியமே உள்ளது. ஒருவர் அந்நிய பாஷையில் பேசுகின்றார். இப் பொழுது, ஆவியைப் பகுத்தறியும் வரம் பெற்ற மூன்று பேர் அங்கு உட் கார்ந்திருக்கின்றனர். ஒருவர் அந்நிய பாஷையில் பேசி ஒரு செய்தியை அளிக்கிறார். இப்பொழுது, அது வேத வாக்கியங்களை எடுத்துரைப்பதாக இருக்கக் முடியாது, ஏனெனில் தேவன் வீணாக மறுபடியும் மறுபடியும் கூறுவது கிடையாது, நாமும் அப்படி செய்யக்கூடாதென்று நம்மை எச்சரித்திருக்கிறார். புரிகிறதா? எனவே அது அதுவல்ல. அது சபைக்கு ஒரு செய்தி. 125 இந்த எழுப்புதலில் இதுவரைக்கும் நமக்கு இரண்டு சம்பவங்கள் நிகழந்துள்ளன. அவைகளில் ஒன்று—பரிபூரணமாக, சரியான விதத்தில் அமைந்திருந்ததைக் கவனியுங்கள். பாருங்கள்? உள்ளே நிகழ்ந்தது. ஒரு மனிதர் எழுந்து நின்று, அந்நிய பாஷை பேசி, அதற்கு அர்த்தம் உரைத்து, உடனே திரும்பிச் சென்றார், மேலும் அளிக்கப்பட்ட செய்தி ரூபகாரப்படுத்தப்பட்டது. அன்றொரு இரவு வேறொருவர் எழுந்து நின்று, தீர்க்கதரிசனத்தின் ஏவுதலினால்—கூறி, ஒரு காரியத்தைக் கூறி, அவர் என்ன கூறிக்கொண்டிருகிறார் என்று அறியாமல்; அவர் முடிவிலே, “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்” என்றுரைத்தார். அப்பொழுது உடனடியாக ஏதோ ஒன்று என்னை ஆட்கொண்டு, “இல்லையெனில், கர்த்தர் வந்துள்ளார் என்று விசுவாசிப்பவன் பாக்கியவான்” என்று கூறினது. 126 பாருங்கள், அர்த்தம்—பிறகு பரிசுத்த ஆவி நேற்றிரவு கட்டிடத் தில் விழுந்தது. பார்த்தீர்களா? அது பக்திவிருத்திக்காகவே. ஜனங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர்களிடம் கூற முயற்சிக்கும்படிக்கே நான் அங்கு நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது பிசாசும் அவர்கள் மத்தியில் வந்து, “அதற்கு செவி கொடுக்காதீர்கள்; அப்படியே அமர்ந்திருங்கள்” என்றான். என் சகோதரி, “பில், நீங்கள் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியாயிருந்தேன்; நான் எழுந்து மதிலைத் தாண்டிச் செல்லக்கூடும் என்பது போன்ற உணர்ச்சி எனக்கு உண்டானது” என்றாள். நான், “எழுந்து குதி” என்றேன். அவ்வளவுதான். அப்பொழுது அவள், “ஆனால் நீங்கள் அப்படி பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது,” என்று கூறி, “ஜனங்கள் கூச்சலிடத் தொடங்கினர்” என்றும், “அப்பொழுது நான் ஒன்றுமற்றவள் என்னும் உணர்ச்சி தோன்றினது” என்றும் கூறினாள். 127 நான், “அது பிசாசு, அது சாத்தான். அவன் அப்படிப்பட்ட உணர்ச்சியை உண்டாக்க வந்தபோது” என்று கூறி, “நீ எப்படியாயினும் எழுந்திருக்க வேண்டும்” என்றே நான் கூறினேன். நாம் தேவனுக்கு ஆசாரியர்களாயிருந்து நம்முடைய உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலியை—பலியை அவருடைய நாமத்துக்கு செலுத்திக் கொண்டிருக்கிறோம். பார்த்தீர்களா? 128 இப்பொழுது, இங்கே இதுதான் நடந்தது. அப்பொழுது பரிசுத்த ஆவி யானவர் பேசத் தொடங்கினார், ஏனெனில் அது…“விசுவாசிக்கிறவன் பாக்கியவான்.” இரண்டு, மூன்று இரவுகளாக அதை அங்கே நான் தொடர்ந்து வலியுறுத்த முயன்றேன்; அதன் பின்பு பரிசுத்த ஆவியானவர் பேசி (ஏவுதலின் கீழ்), “கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்” என்று உரைத்தார். நான் வேறெதாவது ஒன்றைக் கூறுவதற்கு முன்பே, நான் அதை கூறி முடித்துவிட்டிருந்தேன். “கர்த்தர் இதில் வந்துள்ளார் என்று விசுவாசிக்கிறவன் பாக்கியவான்.” உங்களுக்குப் புரிகிறதா? பரிசுத்த ஆவி என்பது உங்களுக்குள் இருக்கும் தேவனே என்றே நான் இதைக் குறித்து பேசி வந்துள்ளேன். புரிகிறதா? அவர்கள் அதைப் புரிந்து கொண்டனர். பார்த்தீர்களா? பிறகு பரிசுத்த ஆவி ஜனங்களின் மத்தியில் விழுந்தது. அது—அது தீர்க்கதரிசனத்தினால், எவ்வாறு பக்தி விருத்தியடையச் செய்கிறதென்று பார்த்தீர்களா? 129 ஒரு தீர்க்கதரிசிக்கும் தீர்க்கதரிசனத்துக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. தீர்க்கதரிசனம் ஒருவரிடத்திலிருந்து புறப்பட்டு மற்றவரிடம் செல்கின்றது, ஆனால் ஒரு தீர்க்கதரிசியோ தொட்டிலில் பிறந்தது முதல் ஒரு தீர்க்கதரிசியாகவே இருக்கிறான். அவர்களிடம் “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பது உள்ளதே! அவர்களை யாரும் நிதானித்தறிவதில்லை. முன்பிருந்த ஏசாயா, அல்லது எரேமியா, அவர்களில் மற்ற எவருக்கும் முன்பாக அவர்கள் நின்று நிதானிப்பதை நீங்கள் காண்கிறதில்லை, ஏனெனில் அவர்கள், “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதை உடையவர்களாயிருந்தனரே! ஆனால் ஜனங்கள் மத்தியிலுள்ள ஒரு தீர்க்கதரிசன வரம்; நீங்கள் அதை கவனிக்க வேண்டும், ஏனெனில் சாத்தான் மெல்ல நுழைந்துவிடுவான். புரிகிறதா? இப்பொழுது. அது சரியாவென்று நிதானித்தறியப்பட வேண்டும். 130 இப்பொழுது, நாங்கள்—நாங்கள் எழுப்புதல் கூட்டம் ஒன்றை நடத்தப் போகிறோம் என்று வைத்துக்கொள்வோம். போதகர்களே நீங்கள், இதை இப்பொழுது உண்மையாகவே கவனமாய்க் கேளுங்கள். நாங்கள் ஒரு எழுப்புதலை கூட்டத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். சரி. இல்லையென்றால் நாங்கள் வழக்கமான ஒரு சபை ஆராதனையை நடத்திக்கொண்டிருக்கலாம். சபையில் அனல் மூண்டிருக்கிறது. சபை எல்லா நேரத்திலும் அவ்வாறே இருக்கவேண்டும். பாருங்கள், ஒருக்கால் ஆவியின் வரம் பெற்ற ஐந்து அல்லது ஆறு பேர் நம்மிடம் இருக்கலாம்; ஒருவர் அந்நியபாஷை பேசுகிறார், இரண்டு அல்லது மூன்று பேர் ஒருக்கால் அந்நியபாஷை பேசக்கூடும், நான்கு அல்லது ஐந்துபேர் அந்நியபாஷை பேசும் வரம் பெற்றிருந்து, அந்நியபாஷை பேசுக் கூடும். இரண்டு அல்லது மூன்று பேர் அர்த்தம் உரைக்கக் கூடும். அவர்களில் ஒன்று—இரண்டு, அல்லது மூன்று பேர் ஞானத்தின் வரத்தை உடையவர்களாயிருக்கக் கூடும். சரி. வரம் பெற்றுள்ள இவர்கள், அனைவரும் ஒன்றுகூடுகின்றனர்…நீங்கள்…நீங்கள் விளையாடுவதற்காக இந்த வரங்கள் உங்களுக்கு அளிக்கப்படவில்லை, “தேவனுக்கு மகிமை, நான் அந்நியபாஷைகள் பேசுகிறேன்! அல்லேலூயா!” என்று நீங்கள் கூறுவதற்காக இவைகள் உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அப்படியென்றால் நீங்கள்—நீங்கள்—நீங்கள் உங்களையே நீங்கள் தாழ்த்திக்கொள்கிறீர்கள். அவைகளைக் கொண்டு நீங்கள் கிரியை செய்யவே அவை உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. நீங்கள் வகிக்கும் பாகம் சபையின் முக்கிய ஆராதனை தொடங்குவதற்கு முன்பு இடம் பெற வேண்டும், ஏனெனில் ஆராதனையின்போது கல்லாதவர்களும் கூட நமது மத்தியில் இருக்கப்போகிறார்கள். 131 நீங்கள் ஒரு அறைக்குச் சென்று, அங்கு நீங்கள் உட்கார்ந்து கொள்கிறீர்கள், நீங்கள் சுவிசேஷத்தில் உடன் ஊழியக்காரராயிருக்கிறபடியால், நீங்கள் ஒன்றுகூடியிருக்கிறீர்கள். அப்பொழுது அங்கு நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள். “கர்த்தாவே, நாங்கள் அறியவேண்டுமென்று நீர் விரும்பும் ஏதாகிலும் இன்றிரவு உண்டா? ஓ, பரலோகப் பிதாவே, எங்களோடு பேசும்,” என்று உங்கள் ஜெபங்களையும், விண் ணப்பங்களையும் ஏறெடுக்கிறீர்கள்; பாடல்களைப் பாடுகின்றீர்கள். அப்பொழுது பரிசுத்த ஆவி இறங்கி வந்து யார் மேலாகிலும் விழுந்து, அவர் அந்நியபாஷை பேசுகின்றார். வேறொருவர் எழுந்து நின்று, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று கூறி, அதற்கு அர்த்தமுரைக்கிறார். அது என்ன? கவனியுங்கள். “சென்று சகோதரன் ஜோன்சிடம் அவர் வசிக்கும் இடத்தை விட்டு மாறும்படியாக கூறுங்கள், ஏனெனில் நாளை பிற்பகல் அந்த நாட்டை பலத்த புயல் காற்று ஒன்று தாக்கப் போகின்றது; அது அவருடைய வீட்டை சேதப்படுத்தப்போகிறது. அவருடைய சாமான்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டுப் போகக் கூறுங்கள்!” 132 இப்பொழுது, அது—அது நல்லதாகத் தென்படுகிறது. ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள். அங்கு ஆவியைப் பகுத்தறியும் வரம் பெற்ற மூன்று பேர் இருக்க வேண்டும். அவர்களில் ஒருவர், “அது கர்த்தரிடத்திலிருந்து வந்தது” என்கிறார். மற்றொருவரும், “அது கர்த்தரிடத்திலிருந்து வந்தது” என்கிறார். அது மூன்றில் இரண்டு பேர்— இரண்டு அல்லது மூன்று சாட்சிகள். சரி. அவர்கள் ஒரு துண்டு காகிதத்தில் அதை எழுதுகின்றனர். அதைத்தான் ஆவியானவர் உரைத்தார். சரி. அவர்கள் திரும்பி ஜெபிக்கச் சென்று, கர்த்தருக்கு நன்றி செலுத்துகின்றனர். 133 சிறிது கழித்து, “கர்த்தர் உரைக்கிறதாவது (ஒரு தீர்க்கதரி எழுந்து நின்று) கர்த்தர் உரைக்கிறதாவது, இன்றிரவு, அது நியூயார்க் பட்டினத்திலிருந்து வருகிற ஒரு பெண்ணாய் இருக்கும்; அவள் ஒரு தூக்குப் படுக்கையில் இருப்பாள். அவள் தூக்குப் படுக்கையில் கட்டிடத்துக்குள் கொண்டு வரப்படுவாள். அவள் தலையில் பச்சை நிறமுள்ள ஒரு துணியைக் கட்டியிருப்பாள். அவள் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கிறாள். அவள் இந்த விதமாயிருப்பதற்கான காரணம் என்னவெனில், கர்த்தர் அவளுக்கு விரோதமாக வைத்துள்ள காரியம்—அவளுக்கு பதினாறு வயது இருக்கும்போது, அவள் அவருடைய சபையிலிருந்து ஒரு முறை பணத்தை திருடிவிட்டாள். அவளிடம் இந்தக் காரியங்களை சொல்லும்படியாக சகோதரன் பிரான்ஹாமிடம் சொல்லுங்கள். கர்த்தர் உரைக்கிறதாவது, அவள் இதை சரிபடுத்திக்கொண்டால், அவள் சுகமடைவாள்” என்று உரைக்கிறார். ஒரு நிமிடம் பொறுங்கள். அது மிகவும் நல்லதாகத் தென்படுகிறது, ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள். ஆவியைப் பகுத்தறிபவரே, உங்கள் பெயரை நீங்கள் இந்தக் காகிதத்தில் கையொப்பமிடப் போகின்றீர்களா? நீங்கள் உங்களுடைய பெயரை கையொப்பமிடப் போகிறீர்களா? 134 “இது கர்த்தரிடத்திலிருந்து வந்தது.” ஒருவர் எழுந்து, “இது கர்த்தரிடத்திலிருந்து வந்தது” என்கிறார். அப்பொழுது—அப்பொழுது நீங்கள், “கர்த்தர் உரைக்கிறதாவது, இன்றிரவு ஒரு பெண் உள்ளே வருவதாயிருக்கும். இன்ன-இன்ன காரியம் சம்பவிக்கும்” என்று எழுதுகிறீர்கள். ஆவியைப் பகுத்தறியும் வரம் பெற்ற இரண்டு அல்லது மூன்று பேர் அதை ஆமோதித்து கையொப்பமிடுகின்றனர். இந்த செய்திகள் அனைத்தும் அளிக்கப்படுகின்றன. சரி. 135 சிறிது நேரம் கழித்து மணி அடிக்கும் ஓசையை அவர்கள் கேட்க ஆரம்பிக்கின்றனர். சபை ஆராதனை தொடங்கும் நேரம் வந்துவிட்டது. அவர்கள் எழுதப்பட்ட இந்த செய்திகளைக் கொண்டு வந்து மேசையின் மேல் வைக்கின்றனர். இந்த மேசையில்தான் இவை வைக்கப்படும். நான் எங்கோ ஓரிடத்தில் படித்து, ஜெபித்துக்கொண்டிருப்பேன். பாடல்கள் பாடப்பட்ட பின்பு, சிறிது கழித்து, நான் வெளியே வருவேன். சபை அனைத்து ஒழுங்கையும் கடைபிடித்து, ஜனங்கள் உள்ளே வந்து, உட்கார்ந்து, தியானித்து, ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர்; அப்படித்தான் நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் சபைக்கு வந்து, ஒருவ ரொடொருவர் பேசக்கூடாது, நீங்கள் சபைக்கு வந்து தேவனோடு பேசவேண்டும். உங்கள் ஐக்கியத்தை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள். புரிகிறதா? இப்பொழுது நாம் தேவனுடன் ஐக்கியம் கொள்கிறோம். நாம் இங்கு வந்து தேவனுடன் பேசுகிறோம். எல்லாமே அமைதியாயும், பயபக்தியாயும் உள்ளது, ஆவியானவர் அசைவாடுகின்றார். பாடல் ஆராதனை தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே இசைப்பேழையை இசைப்பவர் இசைப்பேழையின் அருகில் வந்து, உண்மையாகவே இனிமையாக இசைக்கத் துவங்குகிறார். என் இரட்சகர் மரித்த அந்த சிலுவையின் கீழ், அங்கே பாவத்திலிருந்து சுத்திகரிப்பிற்காக நான் கதறினேன்,… அல்லது ஒரு நல்ல இனிமையான பாடலை, உண்மையிலேயே அமைதியாக வாசிக்கிறார். அது கூட்டத்திற்குள் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தைக் கொண்டு வருகிறது. பார்த்தீர்களா? சரி. 136 ஜனங்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் உண்மையாகவே—அழத் தொடங்கி, ஆராதனை தொடங்குவதற்கு முன்பே, மனந்திரும்பி பீடத்தண்டை வருகின்றனர். பரிசுத்த ஆவி அங்கே இருக்கிறார். பார்த்தீர்களா? சபை பிரசவவேதனை அடைந்துள்ளது. கிறிஸ்தவர்கள் ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர்; அவர்கள் தங்களுடைய ஸ்தானங்களைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் மெல்லும் பசை மிட்டாயை மென்றுகொண்டு, “ஏய், லிடி, உன் உதடு வர்ணத்தை கொஞ்சம் எனக்குத் தா; எனக்கு வேண்டும்…உனக்குத் தெரியும். உனக்குத் தெரியும். எனக்கு தேவை…உனக்குத் தெரியுமா, அன்றொரு நாள் நான் கடைக்குச் சென்றிருந்தபோது, நான் உனக்குச் சொல்லுகிறேன், நான் உனக்கு அருகிலேயே இருந்தேன். நான் அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டேனா…அதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்?” என்று பேசிக்கொண்டு அமரந்திருக்கவில்லை. ஓ, இரக்கம்! அதன் பிறகு இதை தேவனுடைய வீடு என்றழைக்கின்றனர். ஏன், அது ஒரு அவமானம். கிறிஸ்துவின் சரீரம் ஒன்று கூடி வருகின்றது. நாம் அங்கு உட்காருகின்றோம். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மனிதன், “நாங்கள் அங்கு சென்றிருந்தபோது உங்களுக்குத் தெரியும், இந்த இன்ன-மற்றும்-இன்ன மற்றும் இன்ன-மற்றும்-இன்ன-மற்றும்-இன்ன…” என்கிறான். அதெல்லாம் வெளியில் பேச வேண்டும், ஆனால் இங்கே இது தேவனுடைய வீடாயுள்ளது. 137 ஜெபம் செய்துகொண்டே உள்ளே நுழையுங்கள்; உங்கள் இடத்தில் அமருங்கள். சகோதரரே, நான் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பது, உங்களுடைய சபைகளைக் குறித்தல்ல. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. நான் இந்த கூடாரத்திற்கு இதை கூறிக்கொண்டிருக்கிறேன். நான் என் சொந்த சபைக்குள் இதை கூறிக்கொண்டிருக்கிறேன். புரிகிறதா? அது உண்மை. 138 இப்பொழுது, நீங்கள் அப்படி உள்ளே வரும்போது, அப்பொழுது முதலாவதாக உங்களுக்குத் தெரியும், போதகர் வெளியே நடந்து வருகிறார். அவர் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார். அவர் இது, அது, மற்றதற்கு பதில் கூறவேண்டியதில்லை. அவர் தமது ஊழியத்தின் பனித்துளிகளிலிருந்து—நேரடியாக வெளியே வருகிறார். அவர் பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழிருந்து வந்துள்ளார். அவர் அங்கிருந்து, அதிக அக்கினி நாவுகள் ஒன்றுகூடியுள்ள இடத்துக்கு வருகிறார். அது ஏறக்குறைய இப்பொழுது ஒரு அக்கினி ஸ்தம்பம் (புரிகிறதா?), அது சுற்றி அசைவாடிக் கொண்டிருக்கிறது. அவர் அங்கு வந்து, இதை எடுத்துப் படிக்கிறார். “சபையிலிருந்து ஒரு செய்தி: ‘கர்த்தர் உரைக்கிறதாவது, சகோதரன் ஜோன்ஸ் தமது வீட்டிலிருந்து வெளியேற வேண்டும். நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு அவருடைய இடத்தை ஒரு பலத்த புயல்காற்று தாக்கும். அவருடைய பொருட்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டு செல்ல வேண்டும்.’” சகோதரன் ஜோன்ஸ் அதைக் கேட்கிறார். சரி. அது எழுதி வைக்கப்பட்டுள்ளது. “கர்த்தர் உரைக்கிறதாவது, இன்ன-இன்ன பெயருடைய ஒரு ஸ்திரீ இன்றிரவு இங்கு வருவாள். அது—அவள் இன்ன-மற்றும்-இன்னதைச் செய்திருக்கிறாள்.” (நான் உங்களிடம் ஏற்கெனவே கூறினது போன்று, பாருங்கள், அதைப் போன்றே.) சரி, அது எழுதப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதுதான் இது. அவர்கள் சபையில் ஏற்கெனவே தங்களுடைய இடத்தில் அமர்ந்துள்ளனர். சரி. 139 பிறகு போதகர் செய்தியளிக்கிறார். முதலாவது உங்களுக்குத் தெரியுமா, அவர் பிரசங்கம் செய்யத் துவங்குகிறார். எதுவுமே தடை செய்வதில்லை; அது ஏற்கனவே பேசப்பட்டுவிட்டது. இப்பொழுது, நாங்கள் தொடர்ந்து பிரசங்கம் செய்கிறோம், நாங்கள் செய்தியளித்து முடிக்கிறோம். 140 சற்று கழித்து…முதலாவதாக என்ன தெரியுமா, செய்தியளித்து முடிந்த பிறகு, ஜெபவரிசை தொடங்குகிறது. அங்கு ஒரு ஸ்திரீ வருகிறாள். அவள் வரப்போவதாக ஒருவர் அந்நிய பாஷை பேசி முன்னறிவித்து விட்டார். பார்த்தீர்களா? எனவே என்ன நடக்கப் போகிறதென்று நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். அது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். இப்பொழுது உங்கள் மேல் அக்கினி நாவுகள் நின்றுகொண்டிருப்பதனால் விசுவாசம் எப்படி அதிகரிக்கிறதென்று பாருங்கள். அந்த அக்கினி நாவுகளெல்லாம் இப்பொழுது ஒன்றுசேரத் தொடங்குகின்றன. ஏன், அது ஒரு முடிவு பெற்ற கிரியையாயுள்ளது; அவ்வளவுதான். அந்த ஸ்திரீ…நான், “நியூயார்க் பட்டினத்திலிருந்து வந்து இங்கு அமர்ந்துள்ள திருமதி. இன்னார்-இன்னார் …” என்பேன். பார்த்தீர்களா? “ஓ, அது உண்மை. உங்களுக்கு அது எப்படித் தெரியும்?” “அது கர்த்தரிடத்திலிருந்து சபைக்கு உண்டான ஒரு செய்தி. நீ பதினாறு வயதுடையவளாய் இருந்தபோது, நீ இன்ன-இன்ன இடத்தில் இருந்தபோது, அப்பொழுது—நீ சபையிலிருந்து சிறிது பணத்தைத் எடுத்துவிட்டாய், அதைத் திருடிக்கொண்டு, வெளியே போய், அதனைக் கொண்டு உனக்குத் புதிய துணிகளை வாங்கிக்கொண்டாய் அல்லவா?” “ஓ, அது உண்மை. அது உண்மை.” “அதை தேவன் இன்றிரவு எங்களுக்கு சரியாக சகோதரன் இன்னார்-இன்னார் பேசின அந்நிய பாஷை மூலம் கூறியுள்ளார். அதற்கு சகோதரன் இன்னார்-இன்னார் அர்த்தம் உரைத்தார்; இங்குள்ள சகோதரன் இன்னார்-இன்னார் அதைப் பகுத்தறிந்து, அது கர்த்தரிடத்திலிருந்து வந்தது என்று கூறினார். அது உண்மை.” “ஆம்!” “அப்படியானால், கர்த்தர் உரைக்கிறதாவது, அதை சரிபடுத்தி விடு. அப்பொழுது நீ புற்று நோயிலிருந்து சுகம் பெறுவாய்.” 141 சகோதரன் ஜோன்ஸ் வீட்டுக்குச் சென்று, வண்டிகளை ஆயத்தப்படுத்தி, பொருட்களையும், தன்னுடைய மரச்சாமான்களையும் ஏற்றிக்கொண்டு, அங்கிருந்த புறப்பட்டு செல்கிறார். அடுத்த நாள் பிற்பகல் இரண்டு மணிக்கு; ஸோவி! புயல் காற்று எல்லாவற்றையும் நொறுக்கி விடுகிறது. பார்த்தீர்களா? அப்பொழுது சபை தேவனை மகிமைப்படுத்துகிறது…“கர்த்தராகிய இயேசுவே, உமது நன்மைக்காக, உமக்கு நன்றி.” இப்பொழுது, அதுவே சபை பக்திவிருத்தி அடைவதற்கு ஏதுவாக உள்ளது. 142 இப்பொழுது, அவர்கள் கூறியுள்ளது நிறைவேறாமல் போனால் என்ன? அப்பொழுது நீங்கள் ஒரு பொல்லாத ஆவியை உங்கள் மத்தியில் பெற்றுள்ளீர்கள். அந்த பொல்லாத ஆவி உங்களுக்கு வேண்டியதில்லை. ஆகாயங்கள்—உண்மையான பெந்தெகொஸ்தே ஆவியினால் நிறைந்துள்ளபோது, உங்களுக்கு ஏன் இந்த பொல்லாத ஒன்று வேண்டும்? பிசாசினிடமிருந்து அதற்கு பதிலாக பொல்லாத ஒன்றைப் பெற்றுக்கொள்ளாதீர்கள். உண்மையான ஒன்றை பெற்றுக் கொள்ளுங்கள். தேவன் உங்களுக்காக அதை வைத்திருக்கிறார். அப்படியானால் நீங்கள் சரியென்று தேவன் ஏற்கெனவே உங்களை ரூபகாரப்படுத்தியிருந்தாலொழிய இந்த கூட்டங்களை மற்றும் எந்த காரியத்தையும் இங்கு ஒழுங்கு செய்யாதிருங்கள், ஏனெனில் சுவிசேஷத்தின் பணியில் நீங்கள் சபைக்கு உதவி செய்ய வேண்டி யவர்களாயிருக்கிறீர்கள். இப்பொழுது, அது என்னவென்று புரிந்துகொண்டீர்களா? 143 பாஷைகள், அந்நியபாஷைகள்…அவர் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறாரென்று எந்த மனிதனுமே—புரிந்து கொள்வதில்லை. அவர் பேசுகிறார்; ஆனால் ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு அர்த்தமுண்டு. அதற்கு ஒரு அர்த்தமுண்டு. [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களைக் தட்டுகிறார்—ஆசி.] “க்ளக், க்ளக், க்ளக்!” அது ஒரு—அது எங்கோ ஒரு மொழியாக அமைந்துள்ளது. 144 நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, அதை நான் நம்பவேயில்லை, ஆனால் சத்தம் எழுப்பிய ஒவ்வொன்றுக்கும், அதற்கான ஒருவிதமான அர்த்தமிருந்தது. ஒரு முக்கியத்துவமில்லாமல், ஒரு அர்த்தமில்லாமல் ஒரு சத்தமும் கிடையாது என்றே வேதம் கூறியுள்ளது. எழுப்பப்பட்டுள்ள ஒவ்வொரு சத்தத்திற்கும் ஏதொவொரு அர்த்தம் உள்ளது. ஏன், ஜனங்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன்…நான், “தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து” என்பேன். 145 உடனே அவர்களில் ஒருவர் இப்படிக் கூறுவார் [சகோதரன் பிரான்ஹாம் ஆப்பிரிக்க மொழிபெயர்ப்பாளரின் சத்தத்தை பாவனை செய்து காண்பிக்கிறார்—ஆசி.]. மற்றொருவர் இப்படி கூறுவார் [சகோதரன் பிரான்ஹாம் மீண்டும் பாவனை செய்கிறார்.] அது “தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து” என்பதாயிருந்து. பார்த்தீர்களா? அது ஒரு…எனக்கு அது ஒன்றும் புரிவதில்லை, ஆனால் அவர்க ளுக்கோ நான் உங்களிடம் பேசிக்கொண்டிருப்பது போன்று, அது ஒரு மொழியாயிருந்து. ஸூலு, ஹோசா, பாசுடோ, இன்னும் அநேக மொழிகளின் மொழிபெயர்ப்பாளர்கள் இதை மொழிபெயர்த்தபோது, அவர்கள் கூறின ஒவ்வொன்றையும் அவர்கள் புரிந்து கொண்டனர். இந்த ஜனங்கள் முணுமுணுப்பதை நீங்கள் கேட்கிறீர்களே, அது உளறுதல் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அப்படியில்லை; அதற்கு ஒரு அர்த்தமுண்டு. எனவே அதற்கு நாம் மதிப்பு கொடுத்து, அதை அதன் ஸ்தானத்தில் பொருத்த வேண்டும். 146 இப்பொழுது, ஒருக்கால் ஒரு செய்தியும் இல்லாமல் இருக்கலாம். இப்பொழுது, ஆராதனை முடிவுற்றுவிட்டது; பீட அழைப்பு கொடுக்கப்பட்டுகிறது என்று வைத்துக்கொள்வோம். சிறிது கழித்து ஒருவர் (முன்பு ஒரு செய்தியும் கொடுக்கப்படவில்லை) அவருக்குத் தருணம் கிடைக்கும் போது ஒருவர் எழுந்து நிற்கிறார். பரிசுத்த ஆவி…இப்பொழுது, வேதம், “அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், அவன் பேசாமலிருக்கக்கடவன்” என்று உரைத்துள்ளது. எவ்வளவுதான் பேசப் பிரயாசப்பட்டாலும், பேசாமலிருங்கள். 147 “என்னால் அதைச் செய்ய முடியாது” என்று சொல்லிவிடுங்கள். நீங்கள் அப்படி சொல்லிவிடலாம் என்று வேதம் உரைத்துள்ளது. புரிகிறதா? எனவே அது—அது இதனைத் தீர்க்கிறது. புரிகிறதா? அவன் பேசாமலிருக்ககடவன். 148 பின்னர், எல்லாமே ஒழுங்காயுள்ள இடத்தில் வாய்ப்பு ஏற்பட்டு, செய்தியைக் கொடுப்பதற்காக பரிசுத்த ஆவி ஒருவர் மேல் வந்தால், அப்பொழுது செய்தி கொடுங்கள். அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். அப்பொழுது அர்த்தம் வருகிறது, “இங்கு சாலி ஜோன்ஸ் என்னும் பெயருடைய ஒரு பெண் இருக்கிறாள் (அத்தகைய பெயர் கொண்ட பெண் யாரும் இங்கில்லை என்று நான் நினைக்கிறேன், ஆனால்…) சாலி ஜோன்ஸ். (புரிகிறதா?) இதுவே அவள் அழைக்கப்படும் கடைசி இரவாயிருக்கும் என்று அவளிடம் சொல்லுங்கள். அவள் தேவனிடம் அதை சரிபடுத்திக்கொள்ள வேண்டும், ஏனெனில் இவ்வவுலகில் அவள் குறுகிய காலமே இருப்பாள்.” அப்பொழுது சாலி ஜோன்ஸ் அவளால் இயன்றவரை விரைந்து பீடத்துக்கு ஓடி வருவாள் (புரிகிறதா?), ஏனெனில் அதுவே அவளுடைய கடைசி அழைப்பு. பார்த்தீர்களா? அதுதான் ஒரு செய்தி கொடுப்பது, அல்லது ஒரு ரூபகாரப்படுத்துதல், அல்லது அதைப் போன்ற ஒன்று. 149 அதுவே இயங்கிக் கொண்டிருக்கும் பெந்தெகொஸ்தே சபை. பொல்லாத ஆவிகள் புகுந்து கொள்ள வழியேயில்லை, ஏனெனில் அது ஏற்கெனவே…வேதம் வெளிப்படையாக, “ஒவ்வொருவராய் அல்லது மூன்று பேர் பேசலாம்; இன்னும் இரண்டு பேர் அது சரியாவென்று நிதானிக்க கடவர்கள்” என்கிறது. அதுதான் சபை. ஆனால் நாம் இதை இன்றைக்கு எங்கே கடைபிடிக்கிறோம்? ஒருவர் அந்நியபாஷை பேசும்போது ஒழுங்கீனமாக, குதித்து, சிரித்து; வேறெங்கோ பார்த்துக்கொண்டு வேறெதாவதைக் குறித்து பேசிக்கொண்டு, சுற்றி கூட்டத்தாரோடு; போதகர் ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருப்பது; அல்லது ஒரு கூட்டத்தார் சுற்றி வருவர். பாருங்கள், அது சரியல்ல. போதகர் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும்போது, யாராவது ஒருவர் எழுந்து தடை செய்வது…வேதாகமத்தைப் படிக்கலாம், மேலும் யாராவது…வேதாகமத்தைப் படிப்பது, வேறெவர் பின்னாலிருந்து அந்நியபாஷை பேசுவது. ஓ, இல்லை! புரிகிறதா? போதகர் பிரசங்க பீடத்தில் பிரசங்கம் செய்யும்போது, யாராவது ஒருவர் எழுந்து நின்று அந்நியபாஷை பேசி அவரைத் தடை செய்கிறார். அது பரவாயில்லை. அது பரிசுத்த ஆவி இல்லையென்று நான் சொல்ல வரவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியை எந்த சந்தர்ப்பங்களில் உபயோகிக்க வேண்டுமென்பதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும் (புரிகிறதா?), அதை எப்படி உபயோகிக்க வேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இப்பொழுது, நான்—நான் எடுக்கிறேன்…இன்னும் ஒரு கேள்விக்கு உங்களிடம் பொறுமை யுண்டா? பிறகு, நாளை ஞாயிற்றுக்கிழமை. அப்பொழுது, நாம்…நாம்…இங்கு ஒரு கேள்வி உள்ளது. அது மிகவும் அருமையான ஒன்று என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, நீங்கள் இன்னும் சில நிமிடங்கள் என்னுடன் தயவு கூர்ந்து பொறுத்துக்கொள்ளுங்கள். பின்னர், நான்…நீங்கள்—இதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஒரு நோக்கத்துக்காகவே இதுவரை பதில் கூறாமல் வைத்திருந்தேன். இதுவே என் கடைசி கேள்வி. இப்பொழுது, முதலாவது, இந்த நபர் கேட்டிருக்கும் இரண்டு காரியங்களை நான் வாசிக்கப் போகிறேன். அது ஒரு பழையத் துண்டு காகிதத்தில், அழகிய கையெழுத்தால் எழுதப்பட்டுள்ளது. அதை எழுதினது யாரென்று எனக்குத் தெரியாது, எந்த பெயரும்—அதில் கையொப்பமிடப்படவில்லை. கேள்வி: 98. சகோதரன் பிரான்ஹாமே, போதகர்கள் தங்கள் ஆராதனைகளில் பணத்துக்காக நீண்ட நேரம் நிர்ப்பந்தம் செய்து, கூட்டத்திலுள்ள இத்தனை பேர் இவ்வளவு பணம் கொடுப்பார்களென்று தேவன் அவர்களிடம் கூறினதாக கூறுவது முறையாகுமா? அது சரியாவென்று, நான் அறிய விரும்புகிறேன். அல்லது அது தவறாவென்று, நான் அறிய விரும்புகின்றேன். இது என்னை பயங்கரமாக தொந்தரவு படுத்தியுள்ளது. 150 இப்பொழுது, நீங்கள் பாருங்கள், நண்பனே, நான் உனக்கு சொல்லப் போகிறேன், நான் என்ன கருதுகிறேன் என்பதை நான் உங்களுக்குத் சொல்லப் போகிறேன். புரிகிறதா? இப்பொழுது, அது சரி என்று அர்த்தமல்ல. அது பயங்கரமானது என்றே நான் கருதுகிறேன். 151 இப்பொழுது, நான் இதை நினைத்துப் பார்க்கிறேன். தேவன் என்னை சுவிசேஷ ஊழியத்துக்கு அனுப்பினார். என்னிடம்—என்னிடம் பணமே இருக்காது…அவ்வாறு நான் அவதிப்பட்ட நேரத்தை நான் கண்டிருக்கிறேன்…அப்பொழுது நான், “காணிக்கை தட்டை ஜனங்களிடம் அனுப்புங்கள்” என்பேன். மேலாளர் என்னிடம் வந்து, “பில்லி, கவனியுங்கள், மகனே, இன்றிரவு நமக்கு கூட்டத்துக்கான செலவை கொடுத்து தீர்க்க ஐயாயிரம் டாலர்கள் குறைவாயுள்ளது. அதை செலுத்த ஜெபர்ஸன்வில்லில் உம்மிடம் பணம் உள்ளதா?” என்று கேட்பார். 152 நான், “பரவாயில்லை. தேவன் என்னை இங்கு அனுப்பினார், இல்லையென்றால் இங்கு நான் வந்திருக்கமாட்டேன். (புரிகிறதா?) காணிக்கை தட்டை ஜனங்களிடம் அனுப்புங்கள்” என்பேன். ஆனால் கூட்டம் முடிவதற்கு முன்பே, ஒருவர் வந்து, “உங்களுக்குத் தெரியுமா, இதன் செலவுக்காக ஐயாயிரம் டாலர்கள் கொடுக்க கர்த்தர் என் இருதயத்தை ஏவினார்” என்பார். பாருங்கள், பார்த்தீர்களா? முதலாவதாக, அதைச் செய்ய வழி நடத்தப்பட வேண்டும். 153 நிர்ப்பந்தம் செய்து, பிச்சையெடுத்து, பணத்தை சேகரிப்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அது ஒரு தவறான காரியம் என்றே நான் கருதுகிறேன். இப்பொழுது, சகோதரனே, நீங்கள் அதை செய்ய நினைத்தால், உங்களுடைய உணர்வுகளை நான் புண்படுத்தாதிருப்பேனாக. புரிகிறதா? அதைச் செய்யும் உரிமையை நீங்கள்—நீங்கள் தேவனிடமிருந்து பெற்றிருக்கலாம். ஆனால் நான் என்னைக் குறித்தே பேசிக்கொண்டிருக்கிறேன். எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது. 154 இப்பொழுது, போதகர்கள் கூறுவதைக் குறித்து நானும் கூட அறிந்திருக்கிறேன்…அண்மையில், நான் நின்றிருந்தேன்…இப்பொழுது, இது பெந்தெ கொஸ்தேயினர் அல்ல, இது…பாருங்கள், அது சபைகள் (பார்த்தீர்களா?), மற்ற சபைகள். அது ஒரு பெரிய தொடர் கூட்ட முகாமிலிருந்தது. கெர்டி, நீங்கள் என்னோடிருந்தீர்கள், அங்கிருந்த அநேகர் இப்பொழுது இருக்கிறீர்கள். ஒரு புகழ்பெற்ற ஸ்தாபனம்—இரண்டு அல்லது அவை மூன்று ஒன்றுசேர்ந்து, அவர்கள் அந்த முழு பிற்பகலையும் இதற்காக உபயோகித்து (அது நகரத்தில் இங்கே உள்ள நம்முடைய நவநாகரீக சபைகளைப் போன்றதான, வழக்கமான, வழக்கமான சபைகள்) ஒரு பெரிய தொடர் கூட்டத்தில்—அவர்கள் முழு பிற்பகலையும் எடுத்துக்கொண்டு, மேடையில் நின்றுகொண்டு—இந்த கூட்டத்திற்காக ஜனங்கள் பணம் கொடுக்காமல் போனால், தேவன் அவர்களுடைய பயிர்களை அழித்து போடுவார் என்றும், அவர்களுடைய பிள்ளைகளுக்கு இளம்பிள்ளை வாதம் வரும்படி செய்வார் என்றும், இப்படிப்பட்ட காரியங்களைக் கூறி அவர்களை பயமுறுத்தினர். இந்த வேதம் எனக்கு முன்பாக இருக்க, அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. அப்பொழுது நானோ, “தேவனுக்கும் அவரைப் பின்பற்றுவோருக்கும் இது தேவதூஷணம்” என்றேன். தேவன் உங்களை அனுப்பினால், அவர் உங்களை கவனித்துக் கொள்வார். அவர் உங்களை அனுப்பியிராவிட்டால், ஸ்தாபனங்கள் உங்களை கவனித்துக் கொள்ளட்டும். ஆனால்—ஆனால் நீங்கள்…தேவன் உங்களை அனுப்பினால், அவர் உங்களை கவனித்துக்கொள்வார். கேள்வி:99. பரிசுத்த ஆவியுள்ள ஒரு சபையில் கிறிஸ்துமஸ் நாடகம் நடத்துவதைக் குறித்து என்ன? 155 பாருங்கள், அது கிறிஸ்துவைக் குறித்த நாடகமானால், அதனால் பரவாயில்லை. ஆனால் அது சான்டாகிளாசைக் குறித்ததானால், அவன் பேரில் எனக்கு நம்பிக்கையில்லை. நான்—நான் பெரியவனாகிவிட்டேன்—நான் பெரியவனாகி அதிலிருந்து விலகி வந்துவிட்டேன். எனக்கு சான்டா கிளாசின் பேரில் சிறிது கூட நம்பிக்கை கிடையாது. பார்த்தீர்களா? இவர்கள் வைத்துள்ள சில சிறு கிறிஸ்துமஸ் காரியங்கள் மூடத்தனமானது என்று நான் எண்ணுகிறேன். மேலும்…அவர்கள் கிறிஸ்துவை முழுவதுமாக கிறிஸ்துமஸிலிருந்து எடுத்துவிட்டு, அதில் சான்டா கிளாசை அதில் புகுத்திவிட்டனர். 156 சான்டா கிளாஸ் ஒரு கட்டுக்கதை. (குழந்தைகளைக் குறித்த, உங்களுடைய உணர்வுகளை நான் புண்படுத்திக்கொண்டிருக்கவில்லை என்றே நான் நம்புகிறேன்.) ஆனால் நான் உங்களுக்கு சொல்லுவேன். இங்கே அண்மையில், சுமார் இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இங்கே இந்த நகரத்திலுள்ள ஒரு ஊழியக்காரர், இங்கே இந்த நகரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பெரிய சபையின்—போதகர், அதாவது நான் அவரை நன்கு அறிவேன், அவர் என்னுடைய நெருங்கிய நண்பர், அவர் என்னை சந்திக்க நடந்து வந்தார். சார்லி போஹன்னான் (சகோதரன் மைக், உங்களுக்கு என்னுடைய நல்ல நண்பர் சார்லி போஹன்னான் என்ற ஒருவர் ஞாபகமிருக்கும்)…அவர் தமது அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு, “நான் ஒருபோதும் என்னுடைய பிள்ளைகளுக்கோ அல்லது என்னுடைய பேரப்பிள்ளைகளுக்கோ அந்தப் பொய்யை இனி ஒருபோதும் கூறமாட்டேன்” என்றார். மேலும் அவர், “என் சொந்த சிறு பையனுக்கு பன்னிரண்டு வயதான போது, என்னிடம் வந்து சான்டா கிளாசைக் குறித்து பேசினான்” என்றார்…அப்பொழுது அவர் அவனிடம், “ஏன்…தேனே, நான் உன்னிடம் ஒன்றைக் கூற வேண்டும்” என்று கூற, அவனோ, “அம்மா…” என்றானாம். உங்களுக்குத் தெரியுமா, அவர் கூறியதை அவன் போய் கூறினானாம். அதன்பின்னர் அவன் திரும்பி வந்து, “அப்படியானால், அப்பா, இயேசுவும் கூட அது போன்ற காரியம்தானா?” என்று கேட்டானாம். 157 உண்மையைக் கூறுங்கள். சாண்டா கிளாஸ் என்பது கிரிஸ் கிரிங்கில் அல்லது பரிசுத்த நிக்கோலாஸ் என்று அழைக்கப்பட்ட ஒரு நபர், அநேக ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஜெர்மானிய வயோதிக கத்தோலிக்க பரிசுத்தவான் பிள்ளைகளுக்கு நன்மை செய்பவராக சுற்றித் திரிந்ததாக கூறப்படுகின்ற ஒரு கத்தோலிக்க கதாபாத்திரம். அவர்கள் அதை வழிவழியாக ஒரு பாரம்பரியமாக கைக்கொண்டு வந்துள்ளனர். ஆனால் இயேசு கிறிஸ்துவோ தேவனுடைய குமாரனாயிருக்கிறார். அவர் உண்மையுள்ளவர், அவர் ஜீவிக்கிறார். இப்பொழுது, இங்கு ஒரு கேள்வி உள்ளது, அதுவே கடைசி கேள்வி, அது ஒரு மிக… 158 இப்பொழுது கவனியுங்கள். அந்த விஷயத்தில் நீங்கள் என்னுடன் இணங்காமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் என்னோடு இணங்காமலிருந்தால், நினைவிருக்கட்டும், அது நட்பு முறையில் இருக்கட்டும், நீங்கள் அப்படிச் செய்வீர்களா? நான் உங்களை நேசிக்கிறேன், நான்—நான் உங்களை புண்படுத்த விரும்பவில்லை. நான், நான் உத்தமமாய் இருக்க விரும்புகிறேன். என்னால் முடியவில்லையென்றால்…என் மகனிடம் நான் ஒரு பொய்யைக் கூறினால், நான் ஒரு பொய்யன். புரிகிறதா? நான் அவனிடம் உண்மையைக் கூறவே விரும்புகிறேன். 159 இப்பொழுது, நான் அவனிடம் சான்டா கிளாசைக் குறித்து கூறி, நான், “ஆம், நிச்சயமாக, சான்டா கிளாஸ் உண்டு. கிறிஸ்துமஸ் இரவன்று தந்தையைக் கவனி” என்றேன். பார்த்தீர்களா? ஆம். 160 உங்களுக்குத் தெரியுமா, நேற்று முந்தின நாள் நான் அங்கு சென்றிருந்தபோது, ஒரு சிறு பெண்ணிடம் அதைக் குறித்து சோதித்துப் பார்த்தேன். நான் நேற்று முன்தினம் நிச்சயமாகவே சரியான பதிலைப் பெற்றுக்கொண்டேன். நான் அந்த கட்டிடத்தில் இருந்தேன். அவர்கள் அங்கே கீழே உள்ள குவேக்கர் மேய்ட் என்னும் இடத்தில் நின்றுகொண்டிருந்தனர். நானும் மளிகைப் பொருட்கள் வாங்க அங்கே சென்றிருந்தேன். எனவே நாங்கள், மனைவியும் நானும் அங்கிருந்தோம். அங்கு ஒரு சிறு பெண் இருந்தாள், அவள் சுமார் பதினெட்டு மாதங்கள் பூர்த்தியானவளாய் இருந்தாள். அவள் அங்கு நின்றுகொண்டு, “கலகல மணியோசை, கலகல மணியோசை…” என்று பாடினவாறே போவதும் வருவதுமாயிருந்தாள். நான் சொன்னேன்…அவளுடைய சிறிய நிலைத்தாங்கியில், உங்களுக்குத் தெரியும், சிறிய வண்டியின் பின்புறத்தில் அமைப்பது. நான், “நீ சாண்டா கிளாஸுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டேன். அவள், “திருவாளரே, அது என் தந்தை” என்றாள். நான், “தேனே, உன் சிறு இருதயம் ஆசிர்வதிக்கப்படுவதாக. நீ ஞானத்தைப் பெற்றுள்ளாய்” என்றேன். இப்பொழுது, நண்பர்களே, இது உண்மையாகவே ஒரு கடினமான கேள்வியாயுள்ளது. இதில்…அதன் பின்னர் நான் முடித்துவிடுவேன். ஓ, இது—இது அழகான வேத வாக்கியம், ஆனால் அது ஒவ்வொரு நபருக்கும் கடினமாக தோன்றக்கூடிய ஒன்று. அநேக ஆண்டுகளாக அது எனக்குப் புதிராகவே இருந்து வந்தது, ஆனால் தேவனுடைய கிருபையினால் மாத்திரமே…இப்பொழுது அங்கே பின்னால் உட்கார்ந்துகொண்டிருக்கும் என் விலையேற்றப்பெற்ற மனைவி, இந்த பிற்பகல் இந்த கேள்விக்கு நான் பதில் கூற வேண்டுமென்று அறிந்தபோது, அவள், “பில், நீங்கள் எப்படி பதில் கூறப் போகிறீர்கள்?” என்றாள். மேலும் அவள், “நானே அதைக் குறித்து எப்பொழுதுமே யோசித்து வந்துள்ளேன்” என்றாள். “என்னால் அதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை” என்றாள். மேலும் கூறினதோ… நான், “இனியவளே, இன்றிரவு வா. தேவனுடைய உதவியைக் கொண்டு என்னால் முடிந்த வரைக்கும் அதற்கு பதில் கூறுவேன்” என்றேன். கேள்வி: 100. சகோதரன் பிரான்ஹாமே, தயவுகூர்ந்து எபிரேயர் 6:4 முதல் 6 வரை விளக்குங்கள். 161 அது உண்மையிலேயே ஒரு தரம்…பாருங்கள், இப்பொழுது நீங்கள் நம்முடைய விசுவாசம், கிருபை, விசுவாசிகளின் பாதுகாப்பு, பரிசுத்தவான்களின் விடாமுயற்சி, சரியாகக் கூறினால் பரிசுத்தவான்களின் விடாமுயற்சி போன்றவைகளில் இங்கு கவனம் செலுத்த வேண்டியவர்களா யிருக்கிறீர்கள். எபிரேயர் 6-ம் அதிகாரம், 4 முதல் 6 வசனங்கள். இப்பொழுது, இதை…நான் முடித்தவுடனே, பின்னர் உங்களுக்கு இதை தெளிவுபடுத்தித் தர தேவன் எனக்குதவி செய்வாரென நான் நம்புகிறேன். என்னை மன்னிக்கவும், நான்—நான் இன்றிரவிற்கான செய்தியை வைத்துள்ளேன்; அதையே நான் நாளை காலை—ஆராதனையிலும் பிரசங்கிக்கலாமென்றிருக்கிறேன். பிறகு நான் இங்கிருந்து செல்வேன். 162 இப்பொழுது, இது உண்மையாகவே கடினமான ஒன்று. பார்த்தீர்களா? இப்பொழுது, நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இப்பொழுது நினைவிருக்கட்டும், எழும்பி சத்தமிடும் அனைத்துமே, அந்நியபாஷை பேசும் அனைத்துமே, போதகரிடம் கைகுலுக்கும் அனைத்துமே நித்திய ஜீவனைப் பெற்றிருக்கவில்லை என்று நாங்கள் விசுவாசித்து, இந்த சபையிலும் போதிக்கிறோம். நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தால், தேவன் உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்திருப்பாரானால், அதை நீங்கள் என்றென்றைக்கும் பெற்றிருக்கிறீர்கள் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். புரிகிறதா? ஏனெனில் கவனியுங்கள். அப்படி இல்லையென்றால், இயேசு ஒரு கள் ளப் போதகராக காணப்படுவார். பரிசுத்த யோவான் 5:24-ல், அவர், “என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குப்பட்டிருக்கிறான்” என்று கூறியிருக்கிறார். இப்பொழுது, அவரோடு தர்க்கம் செய்யுங்கள். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும்…பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னி டத்தில் வரமாட்டான். (நான் வேதவாக்கியங்களை எடுத்துரைத்துக்கொண்டிருக் கிறேன்.) வருகிற யாவும்…பிதா ஒருவனை முதலில் இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான், பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். (பார்த்தீர்களா?) என்னிடத்தில் வருகிறவனுக்கு நான் நித்திய ஜீவனைத் தருவேன் (பரிசுத்த யோவான் 6), கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்.” இது அவருடைய வார்த்தைகள். 163 இப்பொழுது கவனியுங்கள். நான் எபேசியர் 1-ம் அதிகாரத்துக் குச் செல்ல விரும்பினால், பவுல் பிரசங்கிக்கிறான்…இப்பொழுது, கொரிந்தியர்கள், அவர்கள் ஒவ்வொருவரும் அந்நிய பாஷையையும், ஒரு சங்கீதத்தையும் பெற்றிருந்தனர். மற்ற சபைகளில் இந்த தொல்லை இருக்கவில்லை என்பதை நீங்கள் கவனியுங்கள். அவன் அதைக் குறித்து ஒன்றுமே கூறவில்லை. அவன் ரோம சபையிலோ, எபேசு சபையிலோ எங்காவது அந்நிய பாஷையைக் குறித்து ஏதாவது கூறியுள்ளானா? இல்லையே! அவர்களுக்கும் கொரிந்தியரைப் போல் அந்நியபாஷை பேசுதலும் மற்ற வரங்களும் இருந்தன, ஆனால் அவர்கள் அதை ஒழுங்குப்படுத்தியிருந்தனர். ஆனால் கொரிந்தியர்களோ அதை ஒழுங்குபடுத்தவில்லை. புரிகிறதா? பவுல் அங்கு சென்று சபையை ஒழுங்குபடுத்தினான். இப்பொழுது, அவன்…ஓரல் ராபர்ட்ஸ் கூறுவது போல், “தேவன் ஒரு நல்ல தேவன்” என்றே நான் விசுவாசிக்கிறேன். நீங்களும் அதை விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? 164 நீங்கள், “பாருங்கள், சகோதரன் பிரான்ஹாமே, அப்படியானால் அந்நியபாஷைகள் பேசும் பெந்தெகொஸ்தேயினரைக் குறித்தென்ன?” என்று கேட்கலாம். அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக அவர்கள் பெற்றுள்ளனர். சரி, ஏன்? கவனியுங்கள். அவர் நல்ல தேவன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒரு முறை தோமா, “உங்களுக்குத் தெரியுமா, ஆண்டவரே…” என்றான். மற்றவர் அனைவரும் அவரை விசுவாசித்தனர். “ஓ, அவர் உண்மையானவர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்!” என்றனர். “ஓ,” தோமாவோ, “இல்லை, இல்லை, நான் அதை விசுவாசிக்கவில்லை. அதை நான் விசுவாசிக்க கூடிய ஒரே வழி, அதற்கான அத்தாட்சி எனக்கு இருக்க வேண்டும். அவருடைய விலாவிலும், அவருடைய கைகளில் ஆணிகள் கடாவப்பட்டதனால் உண்டான காயங்களிலும் என் விரல்களை நான் போட வேண்டும்” என்றான். அவர் நல்ல தேவன். அவர், “தோமாவே, வா. இதோ உனக்கான அத்தாட்சி” என்றார். “ஓ,” தோமா, “இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன்” என்றான். 165 அவர், “ஆம், தோமாவே, நீ என்னைக் கண்ட பிறகு, என் கையினால் தொட்ட…உன் கைகளை என் விலாவில் போட்டப்பிறகு, விசுவாசித்தாய். ஆனால் காணாதிருந்தும் என்னை விசுவாசிக்கிறவர்களுக்கு எவ்வளவு மிகுதியான பலன் உண்டாயிருக்கும்” என்றார். அவர் நல்ல தேவன். அவர் உங்கள் இருதயத்தின் வாஞ்சைகளை அருளுகிறார், நிச்சயமாக. அவரை நாம் விசுவாசிப்போமாக. அது அந்த—அது அந்த—அது சாத்தானுக்கு மரண அடியாக இருக்கிறது. சகோதரனே, ஒரு மனிதன் தேவனை அவருடைய வார்த்தையின் மூலம் ஏற்றுக் கொள்ளும்போது, அது ஒவ்வொரு முறையும் சாத்தானைக் கொன்றுவிடும். ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளும்போது, அதுவே சாத்தானுக்குக் கிடைக்கப் பெறும் மிகவும் கடினமான அடியாக இருக்கிறது. ஆம், ஐயா. நான் கூறினதுபோல, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல (இயேசு, அன்றொரு இரவு), புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்…” 166 இப்பொழுது, இதைக் கவனியுங்கள். நான் இப்பொழுது முதலாம் வசனத்திலிருந்து துவங்குகிறேன். ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு…பூரணராகும்படி கடந்து போவோமாக; (இப்பொழுது, நீங்கள் அறிய வேண்டுமென்று நான் விரும்புகிற முதலாவது காரியம்; இங்கே பவுல் யாரிடம் கூறிக்கொண்டிருக்கிறான்? எபிரெயரிடம். அவர்கள், “எபிரெயர்கள்” என்று மேலே உள்ளதை கூறுகிறபடியால், எபிரெயர் நிருபமே. அது சரியா? இயேசுவைப் புறக்கணித்த யூதர்கள்…உங்களால்—உங்களால் இப்பொழுது அதைப் புரிந்துகொள்ள முடிகிறதா? அவன் யூதர்களுக்கு இதை கூறி, நியாயப்பிரமாணம் கிறிஸ்துவுக்கு ஒரு நிழலாகவும் முன்னடையாளமாகவும் இருக்கிறதென்று அவன் காண்பிக்கிறான். பழையவை அனைத்துமே புதியவைகளுக்கு முன்னடையாளம். இப்பொழுது கவனியுங்கள்.) …கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு…பூரணராகும்படி கடந்து போவோமாக. 167 இப்பொழுது அவன் அவர்களிடம் உபதேசங்களை குறித்துப் பேசி வந்திருக்கிறான். இப்பொழுது நாம் பூரணமாக்கப்பட்ட காரியங்களைக் குறித்து பேசுவோம். இப்பொழுது, நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும் பரிசுத்த ஆவியினால் முத் தரிக்கப்படும்போது, நீங்கள் தேவனில் பரிபூரணமடைகின்றீர்கள். “தேவனால் பிறந்த எவனும் (முதலாம் யோவான்) பாவஞ் செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் பாவஞ்செய்யமாட்டான்.” 168 பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டுள்ள ஒரு மனிதன், நிரப்பப்பட்டதாக நினைக்கிறவனல்ல, ஆனால் தேவனுடைய ஆவியினால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான். ஏனெனில் தேவனுடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது, அவனால் பாவம் செய்ய முடியாது. புரிகிறதா? வேதம் அதைக் கூறுகிறதா? ஆகையால் அது அப்படித்தான். நீங்கள்…நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றல்ல, என்ன, என்னவாயுள்ளது, உலகம் உங்களை குறித்து என்ன நினைக்கிறது என்றல்ல, தேவன் உங்களைக் குறித்து என்ன நினைக்கிறார் என்பதே முக்கியம் வாய்ந்தது. பாருங்கள், புரிகிறதா? நீங்கள்…இந்நகரத்தின் நகராட்சித் தலைவர், நான் மணிக்கு நாற்பது மைல் வேகம் செல்லலாம் என்னும் உத்தரவு பிறப்பித்திருக்கும்போது, எப்படி எந்த ஒரு காவல்காரனும் என்னை சிறைப்படுத்த முடியும்? என்னை அப்படிச் செய்யவே முடியாது. அதுபோன்று தேவனுக்கு முன்பாக எப்பொழுதுமே இரத்தம் தோய்ந்த பலி இருந்து, அவர் என்னை காணவும் முடியாதபடிக்கு, அது எனக்கும் தேவனுக்குமிடையே ஒரு தடுப்புத் தாங்கியாக இருக்கும்போது, நான் எப்படி பாவம் செய்ய முடியும்? நாம் மரித்தோம், நம்முடைய ஜீவன் தேவன் மூலமாய் கிறிஸ்துவுக்குள் மறைந்து, பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, நீங்கள் எப்படி தேவனுடைய பார்வையில் எந்த தவறையாவது செய்ய முடியும்? “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு (எபிரெயர் 10) நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,” ஆனால் இங்கு மனப்பூர்வமாய் (புரிகிறதா?) பாவஞ் செய்வது கூடாத காரியம். 169 இப்பொழுது, நாம் தொடர்ந்து படிப்போம். சரி. …செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத் தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக. தேவனுக்கு சித்தமானால் இப்படியே செய்வோம். (இப்பொழுது இங்கே அவர்கள் 4-ம் வசனத்திலிருந்து தொடங்க விரும்பினார்கள்.) ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல் வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும் மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது—புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 170 இப்பொழுது, இப்பொழுது, இதை நீங்கள் அங்கிருந்து படிக்கும்போது, ஒரு மனிதன் பரிசுத்த ஆவியைப் பெற முடிந்து, அதன்பின்னர் பின்வாங்கிப் போய் இழந்து போக முடியும் என்பது போல் தென்படக்கூடும். ஆனால் அவன் அப்படி செய்வது கூடாத காரியம். புரிகிறதா? அவனால் அப்படி செய்ய முடியாது. அவன் அப்படி செய்தால், கிறிஸ்து பொய்யுரைத்ததாகிவிடும். புரிகிறதா? ஒரு தரம் பிரகாசிக்கப்படுகிறவர்கள். இப்பொழுது, இங்கு கவனியுங்கள். அவன் யாரிடம் இதை பேசிக்கொண்டிருக்கிறான்? அவன் அந்த எல்லைக்கோடு யூதர்களிடத்தில் இதைப் பேசிக்கொண்டிருக்கிறான். பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஒரு மனிதன் என்று அவன் ஒருபோதும் கூறவில்லை; அவன், “தேவனுடைய நல்வார்த்தையை ருசி பார்த்தவன்” என்றே கூறினான். 171 இப்பொழுது, இதை நீங்கள் புரிந்துகொண்டு, இதை இப்பொழுது காணத் தவறாதிருக்கும்படி நான் இதை ஒரு உவமையில் கூறட்டும். இப்பொழுது, அவன் இதை யூதர்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறான். அவர்களில் சிலர் எல்லைக் கோடு விசுவாசிகள். புரிகிறதா? அவன், “இப்பொழுது, நாங்கள் இந்த கிரியைகளைக் குறித்து பேசுவதை விட்டு, பூரணத்தைக் குறித்து பேசப் போகிறோம்” என்றான். மேலும், “இப்பொழுது, நாங்கள் ஸ்நானங்கள், மரித்தோரின் உயிர்த்தெழுதல், கைகளை வைக்குதல், இன்னும் மற்றவைகளைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்; ஆனால் இவைகளைக் குறித்து பேசுவதை நாம் விட்டு விட்டு பூரணத்தைக் குறித்து பேசுவோம். நீங்கள் பரிசுத்த ஆவிக்குள் வரவேண்டியதைக் குறித்து நாங்கள் இப்பொழுது பேசப் போகின்றோம். இப்பொழுது, நீங்கள் இந்த கூட்டத்துக்கு நீண்ட காலமாக வந்து கொண்டிருக்கிறீர்கள்…” என்றான். 172 அந்த ஜனங்களை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அவர்கள் சுற்றி சுற்றி இங்கேயே இருப்பார்கள்; அவர்கள் உள்ளேயும் வரமாட்டார்கள் அல்லது வெளியேயும் செல்லமாட்டார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பாராட்டுவார்கள். அவர்கள் சுற்றி வந்து கொண்டேயிருப்பார்கள். ஒருக்கால் பரிசுத்த ஆவி அவர்களுக்கு ஏதாவதொன்றை செய்யும், புருஷர்கள், அவர்கள் எழுந்து, கூச்சலிட்டு, தரையில் மேலும் கீழும் குதிப்பார்கள், ஆனால் அதை பெற்றுக்கொள்ள அவர்கள்தாமே ஒருபோதும் விரும்புகிறதில்லை. இல்லை, இல்லை! புரிகிறதா? அவர்கள், “ஓ, ஆமாம், அது நல்லது. ஓ, ஆனால் அதைக் குறித்து இப்பொழுது அறிந்துகொள்ள எனக்கு விருப்பமில்லை” என்று சொல்வார்கள். பாருங்கள், பாருங்கள், பார்த்தீர்களா? எல்லைக்கோடு விசுவாசிகள். அதை ருசிபார்க்கும் அளவுக்கு அவர்கள் அருகாமையில் உள்ளனர், ஆனால் அதேசமயத்தில் அவர்கள் அதைப் பெற்றுக்கொள்கிறதில்லை. புரிகிறதா? இப்பொழுது, அவர்கள் இந்நிலையிலே நீண்ட காலம் இருந்து, பிறகு அவர்கள் முழுவதுமாக அகன்று சென்று விடுகின்றனர். இக்கூடாரத்தில் அதேக் காரியத்தைச் செய்த அநேகரின் பெயர்களை என்னால் கூற முடியும். விழுந்துபோன அப்படிப்பட்டவர்களை, மனந்திரும்புதற்கேதுவாய் மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம், அவர்களுக்கு இனி மனந்திரும்புதலே கிடையாது. அவர்கள் பரிசுத்த ஆவி அவர்களை விட்டுச் செல்லும் அளவுக்கு அவரைத் துக்கப்படுத்திவிட்டார்கள். அவர்கள் மிக அருகாமையில் இருந்து வரும் வரை… 173 இங்கே, நீங்கள் என்னுடன் கூட வேதாகமத்தை திருப்புவீர்களானால் (இப்பொழுது, உங்களுக்கு நேரமில்லையென்று எனக்குத் தெரியும்) ஆனால் நீங்கள் வேதாகமத்தை உபாகமம் 1-ம் அதிகாரத்துக்கு திருப்பி அதை படித்தால், நீங்கள் அதேக் காரியத்தைப் புரிந்து கொள்வீர்கள். இப்பொழுது இதைக் குறித்துக் கொள்ளுங்கள், உபாகமம் 1-ம் அதிகாரம். இப்பொழுது, 19-ம் வசனம் தொடங்கி 26-ம் வசனம் வரைக்கும் படியுங்கள். உபாகமம்…நீங்கள் காணலாம்…இப்பொழுது பாருங்கள். இஸ்ரவேலர் எல்லாரும்…அந்த ஜனங்கள் என்ன செய்தார்கள், அவர்கள் காதேஸ்பர்னேயாவுக்கு வந்தார்கள். ஓ, நான் ஒன்றைக் காண்கிறேன்! இந்த கூடாரம், இந்த பெந்தெகொஸ்தே உலகம் இப்பொழுது காதேஸ்பர்னேயாவில் உள்ளது. சகோதரன் நெவில், அது முற்றிலும் உண்மை. நாம் காதேஸ்பர்னேயாவில், உலகத்தின் நியாயத்தீர்ப்பு ஆசனத்தில் இருக்கிறோம் (அது நியாயத்தீர்ப்பு ஆசனமாக இருந்தது). 174 வேவுகாரர்கள் புறப்பட்டு சென்றனர். யோசுவா இங்கே, “இப்பொழுது, நான் வேவுகாரர்களை அனுப்பினேன்,” இல்லை, சரியாகக் கூறினால் மோசே, “நான் பன்னிரண்டு வேவுகாரர்களை, உங்களுடைய ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு மனிதனை, தெரிந்தெடுத்து அனுப்பினேன். அவர்கள் தேசத்தை வேவுபார்த்து அங்கிருந்து ஒரு அறிக்கையை கொண்டு வர, அவர்களை அனுப்பினேன்” என்றான். அது சரியா? அவர்கள் திரும்பி வந்தபோது, அந்த பன்னிருவரில் ஒன்பது பேர், “ஓ, அது நல்ல தேசம்தான். ஆனால், ஓ, இரக்கம், நாம் அதைக் கைப்பற்ற முடியாது. ஓ, என்னே! எமோரியர் அங்கே இருக்கின்றனர். அவர்கள் அருகில் நாங்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறோம். அவர்கள் ஆயுதமணிந்தவர்களாயுள்ளனர். அவர்கள் மதில் சுவர்கள் மிகவும் பெரியதாயுள்ளன. ஓ, இது மிகவும்…ஏன், நீர் எங்களை இங்கு கொண்டு வந்ததைக் காட்டிலும் நாங்கள் எகிப்திலேயே மரித்திருந்தால் நலமாயிருக்கும்” என்றனர். 175 ஆனால் காலேபும் யோசுவாவும் அங்கு குதித்தெழுந்து அவர்களை அமைதிபடுத்தினர்; அவர்கள், “நாம் எளிதில் அதைக் கைப்பற்றிவிடலாம்” என்றனர். ஆம், ஐயா! அங்குதான் காரியமே. இப்பொழுது பாருங்கள். என்ன நடந்தது? தேவன் அதைக் குறித்த வாக்குத்தத்தத்தை கொடுத்து விட்டார் என்று காலேபும் யோசுவாவும் அறிந்திருந்தனர். “அது எவ்வளவு பெரிதாயிருந்தாலும், தடைகள் எவ்வளவாக இருந்தபோதிலும், அவை எவ்வளவு உயரமாயிருந்தாலும், அவை எவ்வளவு பெரிதாயிருந்தாலும், அதற்கும் இதனோடு எந்த சம்பந்தமில்லை. தேவன் அவ்வண்ணமாய்க் கூறியுள்ளார், எனவே அதை நாம் கைப்பற்ற முடியும்” என்றனர். அந்த இருபத்தைந்து லட்சம் பேர்களில் இவ்விருவர் மாத்திரமே, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்துக்குள் கடந்து சென்றனர் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் இவர்கள் தேவன் கூறினது உண்மை என்பதில் தங்களுடைய விசுவாசத்தை வைத்திருந்தனர். ஆமென்! 176 இப்பொழுது, கூடாரம், காதேஸ்பர்னேயாவில் நிற்கிறது. பாருங்கள், அந்த ஜனங்கள் அவ்வளவு அருகாமையில் வந்து, அந்த தேசத்திலிருந்து கொண்டு வந்த திராட்சை பழங்களையும் ருசி பார்த்தனர். அவர்கள் அந்த திராட்சை பழங்களைத் புசித்தனர். காலேபும் மற்றவர்களும் அங்கு சென்று திராட்சை குலையைக் கொண்டு வந்தபோது, இவர்கள் அந்த குலையிலிருந்து சில பழங்களை பறித்து புசித்து, “ஓ, அவை ருசி மிகுந்தவை, ஆனால் நம்மால் அதைக் கைப்பற்ற முடியாது” என்றனர். “அவர்கள் தேவனுடைய நற்கிரியையை ருசி பார்த்தனர், அவர்கள் பரிசுத்த ஆவியை ருசி பார்த்து, அதன் நன்மையைக் கண்டிருந்தனர், அதை ருசி பார்த்திருந்தனர், அவர்கள் தேவனுடைய வார்த்தையை ருசி பார்த்தனர்…” அதைப் பார்த்தீர்களா? அப்படியிருந்தும், அவர்களில் ஒருவர் கூட வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் சொந்த தேசத்திலேயே, வனாந்தரத்திலே அழிந்துபோயினர். அவர்கள் கடந்து உள்ளே பிரவேசிக்கவில்லை, அதேசமயத்தில் அதை ருசிபார்க்கும் அளவுக்கு அவர்கள் போதிய அருகாமையில் வந்தனர். ஆனால் அதை சுதந்தரித்துக் கொள்ள அவர்களுக்கு போதிய கிருபையும் விசுவாசமும் இருக்கவில்லை. அதுதான் அது. 177 இப்பொழுது, இந்த கடிதம் எழுதின அந்த அருமையான நபர் என்ன சொல்லுகிறார் என்று இப்பொழுது கேளுங்கள். நாம் அடுத்த வசனத்தைப் படிப்போம். ஒரு நிமிடம் கவனியுங்கள். பவுலைக் கவனியுங்கள். இப்பொழுதும் நாம் 7-ம் வசனத்தைப் படிப்போம்: எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதங்களைப் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிதற்கேற்றதாயுமிருக் கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. 178 இப்பொழுது, அவன் என்ன சொல்லுகிறான் என்று பார்த்தீர்களா? இப்பொழுது கவனியுங்கள். இதுவே இங்குள்ள கேள்வியாயிருந்தது; இப்பொழுது, அதன்பிறகு நாம் முடித்துவிடுவோம்…இந்தக் காரியம் அநேக ஆண்டுகளாக என்னைக் கொல்வதுபோல இருந்தது. 179 ஒரு முறை நான் இந்தியானாவிலுள்ள, மிஷாவாகா என்னுமிடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்துக்கு சென்றிருந்தேன், அங்கு ஜனங்கள் அந்நியபாஷை பேசிக்கொண்டிருந்தனர். இப்பொழுது, என் சொந்த கூட்டத்தினரின் முன்னிலையில் நான் இருக்கிறேன். நீங்கள் அந்த ஜனங்களைக் குறித்து…என் சுய சரிதையில் நான் கூற கேட்டிருக்கிறீர்கள், அந்த கறுப்பு மனிதன், “இதோ அவர், இதோ அவர்” என்று கூறினதையும் நான் கூறக் கேட்டிருக்கிறீர்கள். இப்பொழுது, அதை நான் உங்களிடம் கூறிவிட்டேன். 180 ஆனால் அதன் மற்ற பாகம்: நான் இரண்டு மனிதர்களை அங்கு கண்டேன். அவர்கள்…ஒருவர் அந்நியபாஷையில் ஒரு செய்தி கொடுப்பார், மற்றவர் அதற்கு அர்த்தம் உரைப்பார். ஒருவர் அந்நியபாஷையில் ஒரு செய்தி கொடுப்பார், மற்றவர் அதற்கு அர்த்தம் உரைப்பார். சகோதரனே, அவர்கள் அதில் சரியாக இருந்தனர். இது சற்று…அப்பொழுது நான், “என்ன ஆச்சரியம்! இப்படிப்பட்ட ஒன்றை நான் இதுவரை கண்டதில்லை” என்று நினைத்தேன். மேலும் நான், “தேவதூதர்களின் மத்தியில் நான் இருக்கிறேன்” என்று எண்ணினேன். இப்படிப்பட்ட ஒன்றை நான் இதுவரை கண்டதில்லை என்றே நான் நினைத்தேன்…ஒருவர் அந்நிய பாஷை பேசுவார், மற்றவர்… 181 அங்கு ஒரு வயோதிக பிரசங்கி ஒருவருடன் நான் உட்கார்ந்துகொண்டிருந்தேன், நீங்கள்…[ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.]…இருவரும் சில நேரத்தில் தங்களுடைய கரத்தைக் குலுக்கிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒன்றை நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் கண்டதேயில்லை. ஒருவர் அந்நியபாஷையில் ஒரு செய்தி கொடுப்பார், மற்றவர் அதற்கு அர்த்தம் உரைப்பார். என்னே, என்னே! அது மிகவும் அற்புதமாயிருந்தது! ஒருவர் பேசி, மற்றவர் அர்த்தம் உரைப்பார். இருவரும்…அவர்கள் தங்கள் கைகளை உயர்த்தும்போது, அவர்கள் முகம் சுண்ணாம்பு போன்று வெளுத்துவிடும். அப்பொழுது நான், “ஓ, என்னே, என்னே, என் வாழ்க்கை பூராவும் நான் எங்கிருந்தேன். இதுதான் அந்தக் காரியமே!” என்று எண்ணினேன். மேலும் நான், “என்னே, பெந்தெகொஸ்தேக்கள் சரியாயுள்ளனரே” என்று கூறிக்கொண்டேன். அது முற்றிலும் உண்மை. 182 இங்கு சுற்றிலும் நடப்பதைத் தவிர, நான் எதையுமே ஒருபோதும் இவ்வாறு கண்டதில்லை, அங்கே…ஒரு சில ஸ்திரீகள் எங்காவது ஒரு ஊழியத்தில் ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் சண் டையிட்டுக் கொள்வார்கள்; ஒருத்தி மற்றவளை, “சண்டைக் கோழியே” என்று அழைப்பாள்…உங்களுக்கு தெரியும், அதைப் போன்றே, இப்படியாக அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஸ்திரீகளை நான் அவமதிப்பதாக கருத வேண்டாம். ஆனால் சற்று…அது—அது மிகவும் தாழ்வான நிலையில் இருந்தது. உங்களில் யாராவது…சகோதரன் கிரகாம், உங்களுக்கு ஞாபகமிருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் சிறு பையனாக இருந்தீர்கள். எனவே, அந்தவிதமாகத்தான் அது இருந்து வந்தது. நான் அதைக் கேட்டபோது, “ஓ, என்னே, நான் தேவதூதர்களை சந்தித்துவிட்டேன்” என்றே நான் எண்ணினேன். 183 ஒருநாள் நான் வீட்டின் மூலையைச் சுற்றி வந்துகொண் டிருந்தபோது, கிட்டத்தட்ட இரண்டாம் நாள், அவர்களில் ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தது. நான், “ஐயா, நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவரும், “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். மேலும் அவர், “…உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டார். நான், “பிரான்ஹாம்” என்றேன். அவர், “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இங்கிருந்தா?” என்று கேட்டார். அதற்கு நான், “இல்லை, நான் ஜெபர்ஸன்வில்லிருந்து வருகிறேன்” என்றேன். அவர், “ஓ, அது அருமையானது. நீங்கள் பெந்தெகொஸ்தேக்காரரா?” என்று கேட்டார். நான், “இல்லை, ஐயா, நான் அதைச் சேர்ந்தவன் அல்ல” என்றேன். மேலும் நான், “பரிசுத்த ஆவியைப் பெற பெந்தெகொஸ்தேயினர் பின்பற்றும் வழிமுறையை நான் ஏற்றுக்கொள்வதில்லை” என்றும், நான், “எப்படியாயினும்” என்று கூறி, “நான் கற்றுக்கொள்ளவே இங்கு இருக்கிறேன்” என்று நான் கூறினேன். 184 அவர், “பாருங்கள், அது மிகவும் அருமையானது” என்றார். அவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய ஆவியை என்னால் பகுத்தறிய முடிந்தது (கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீயைப்போல்), அவர் ஒரு உண்மையான கிறிஸ்தவராயிருந்தார். சகோதரனே, அவர் சரியானவராகத் தென்பட்டார் என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். அவர் நல்லவராயிருந்தார். இப்பொழுது, நீங்கள் எல்லோரும் …உங்களில் எத்தனை பேர் என் கூட்டங்களில் இருந்து, அந்தக் காரியங்கள் சம்பவிக்கிறதைக் கண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு புரிகிறதா? அந்த மனிதன் எல்லாவிதத்திலும் சரியானவராக இருந்தார். எனவே அப்பொழுது, நான்—நான், “அங்கேதான்! என்னே, எவ்வளவு அற்புதம்!” என்று எண்ணினேன். 185 சுமார் அன்று மாலையளவில், எப்பொழுதோ பிற்பகலில், அந்த மற்ற மனிதனை நான் சந்தித்தேன். அப்பொழுது நான், “ஐயா, நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவரும், “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? உங்கள் பெயரென்ன?” என்று கேட்டார். நான் என் பெயரைக் கூறினேன். அவர், “…நீங்கள் ஒரு பெந்தெ கொஸ்தேக்காரரா?” என்று கேட்டார். நான், “இல்லை, ஐயா! நான் அவ்வாறு நினைக்கவில்லை, நான் சரியான பெந்தெகொஸ்தேக்காரனல்ல” என்றேன். மேலும் நான், “நான் கற்றுக்கொள்ளவே இங்கு வந்திருக்கிறேன்” என்றேன். அவர் கூறினார், நான் கூறினேன், அவர், “நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்களா?” என்று கேட்டார். நான், “எனக்குத்—எனக்குத் தெரியாது” என்றேன். “நீங்கள் எல்லோரும் அதை பெற்றிருக்கிறபடி, நான் அதைப் பெற்றிருக்கவில்லை என்று நான் யூகிக்கிறேன்” என்றேன். அவர், “நீங்கள் எப்பொழுதாவது அந்நியபாஷை பேசியிருக்கிறீர்களா?” என்றார். நான், “இல்லை, ஐயா!” என்றேன். அவர், “அப்படியானால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை” என்றார். 186 நான், “பாருங்கள், நான்—நான் அது சரியென்று யூகிக்கலாம்” என்றேன். நான், “எனக்குத் தெரியவில்லை. நான் குறைந்தது இரண்டு ஆண்டுகளாக பிரசங்கித்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறி, “எனக்கு அதைக் குறித்து அதிகம் தெரியாது” என்று நான் கூறினேன். மேலும் நான், “எனக்குத் தெரியாமலிருக்கலாம்” என்றேன். நான் தொடர்ந்து, “என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை…” என்றேன். காரணம் என்னவென்றால், நான் அங்கே அவருடைய ஆவியை பகுத்தறியும்படிக்கு (புரிகிறதா?), அவரைப் பிடிக்க முயற்சித்துக்கொண்டிருந்தேன். நான் பகுத்தறிந்தபோது, நான் எப்பொழுதாகிலும் ஒரு மாய்மாலக்காரனை சந்தித்திருந்தால், இவர் அவர்களில் ஒருவர். அவருடைய மனைவி கருமை நிறத் தலைமுடியைக் கொண்டவள்; ஆனால் இவரோ பழுப்பு நிறத் தலைமுடியைக் கொண்ட ஒரு ஸ்திரீயுடன் வாழ்ந்து வந்து, அவள் மூலம் இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தன; ஆனால் அந்நியபாஷை பேசுதல், அர்த்தம் உரைத்தல் போன்றவைகளில் அவர் பிழையற்றவராக இருந்தார். நானோ, “இப்பொழுது கர்த்தாவே, நான் எதற்குள் பிரவேசித்துவிட்டேன்?” என்றேன். தேவதூதர்களிடமிருந்து, நான் எதற்குள்ளிருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான், “நான்—நான்—நான் அடிப்படை கொள்கைக்காரன்; அது வேதாகமத்தில் இருக்க வேண்டும். அது சரியாயிருக்க வேண்டும். கர்த்தாவே, எங்கோ தவறுள்ளது. இது எப்படி முடியும்?” என்றேன். 187 அன்றிரவு நான் கூட்டத்துக்கு சென்றிருந்தேன், அந்த ஆவி அங்கு விழுந்தது; சகோதரனே, உங்களால் அதை உணர முடியும், அது பரிசுத்த ஆவியாயிருந்தது. ஆம், ஐயா! அப்படி இல்லையென்றால், அது பரிசுத்த ஆவியென்று என்னுடைய ஆவியிடம் அது சாட்சி கொடுத்திருக்க முடியாது. நான் அப்பொழுது ஒரு வாலிபப் பிரசங்கியாயிருந்தேன், அப்பொழுது ஒரு ஆவியைப் பகுத்தறிதலைக் குறித்து நான் அவ்வளவு அதிகமாக அறிந்திருக்கவில்லை. ஆனால் நான் அங்கு உட்கார்ந்துகொண்டிருந்தேன். என்னை இரட்சித்த அதே தேவன் அதே உணர்வை எனக்குத் தந் தருளினார் என்று நான் அறிந்திருந்தேன்…நான் மேற்கூரையினூடாக சென்று கொண்டிருப்பதைக் போன்று உணர்ந்தேன், அது அந்தக் கட்டிடத்தில் அப்படிப்பட்ட ஒரு அற்புதமான உணர்ச்சியாயிருந்தது. நான் நினைத்தேன்… 188 அங்கு ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தனர். நான், “என்னே, ஓ, என்னே!” என்று நினைத்தேன். இரண்டு மூன்று குழுக்கள் அங்கு ஒன்று கூடியிருந்தன. அப்பொழுது நான், “சொல்லுங்கள், என்னே! இது எப்படி இருக்க முடியும்? இப்பொழுது, அந்த மகத்தான ஆவி இந்த கட்டிடத்தில் அந்த விதமாக விழுகிறது; இங்கே, அங்கு நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தால், அந்த நபர்கள் அந்நியபாஷைகளில் பேசி, அதற்கு அர்த்தம் உரைத்து, பிழையின்றி செய்தி கொடுத்து வருகின்றனர்— ஆனால் அவர்களில் ஒருவர் மாய்மாலக்காரர், மற்றவர் ஒரு உண்மையான தேவனுடைய மனிதனாயிற்றே” என்று எண்ணினேன். மேலும் நான், “இப்பொழுது, நான் முற்றிலும் குழப்பமடைந்துள்ளேனே. என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லையே” என்று எண்ணினேன். 189 பாருங்கள், அதன்பிறகு உடனடியாக, என்னுடைய நல்ல நண்பர் ஒருவர், சகோதரன் டேவிஸ் (உங்களுக்குத் தெரியும்), என்னை ஒரு கூத்தாடி பொம்மை என்று சொல்ல ஆரம்பித்தார். அது ஒரு சிறுமியினுடைய விளையாட்டுப் பொருள் என்று உங்களுக்குத் தெரியும். எனவே, அப்பொழுது நான் விவாகமாகாமலிருந்தேன், எனவே நான்…அவர் என்னோடு அவ்வாறு கூறத் தொடங்கி, தொடர்ந்து என்னை கேலி செய்துகொண்டே வந்தார். 190 எங்களுக்கு ஒரு சிறு…உங்கள் தாயும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வெவ்வேறு இடங்களில் சிறு கூட்டங்கள் நடத்தி வந்தோம். அப்பொழுது நான் அந்த நேரத்தில் இந்த கூடாரத்தை நடத்திக் கொண்டிருக்கவில்லை, நாங்கள் வெவ்வேறு இடங்களில் சிறு கூட்டங்கள் நடத்தி வந்தோம். முடிவில் அநேக ஆண்டுகள் கழித்து ஒருநாள், இந்த கூடாரம் கட்டி முடிந்த பின்பு, நான் ஜெபம் செய்வதற்காக கிரீன்மில் என்னுமிடத்திலுள்ள என் குகைக்கு சென்றேன், ஏனெனில் சகோதரன் டேவிஸ் என்னைக் குறித்து பயங்கரமான காரியங்களை—தமது பத்திரிக்கையில் எழுதி வந்தார். நான் அவரை நேசித்தேன். ஒன்றும் நேரிடக்கூடாதென்று நான் விரும்பி, அவருக்காக நான்—நான் ஜெபிப்பதற்காக அங்கே சென்றிருந்தேன். நான் அங்கு சென்று, குகைக்குள் நான் பிரவேசித்தேன். அங்கு சுமார் இரண்டு நாட்கள் தங்கினேன். நான், “கர்த்தாவே, அவரை மன்னியும். அவர்—அவர் அதை வேண்டுமென்று—வேண்டுமென்று செய்யவில்லை” என்றேன். மேலும் நான், “உங்களுக்கு தெரியுமா…” எண்ணினேன். அப்பொழுது நான் ஒரு வேதவாக்கியத்தைக் குறித்து சற்று சிந்தித்துப் பார்க்க நேர்ந்தது. 191 நான் வெளியே சென்றேன். அங்கு ஒரு மரக்கட்டை இருந்தது (அந்த மரக்கட்டை இப்பொழுதும் அங்குள்ளது, அண்மையில் அதன் மேல் நான் உட்கார்ந்தேன்) அது மலையின் கீழே, ஓடையிலிருந்து வரும் ஒரு சிறு பாதையில் உள்ளது. நான் அந்த மரக்கட்டைக்கு இரு புறமும் என் கால்களை போட்டு உட்கார்ந்து கொண்டு, அங்கே தூரத்தில்—தூரத்திலுள்ள மலையைப் பார்த்துக் கொண்டே, என் வேதாகமத்தை மரக்கட்டையின் மேல் இப்படி வைத்தேன். நான் நினைத்ததோ, “உங்களுக்குத் தெரியுமா…” நான் ஒரு வேதவாக்கியத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன்: அதாவது, “கன்னான் எனக்கு வெகு தீமை செய்தான் என்று கூறப்பட்ட காரியங்கள்.” உங்களுக்குத் தெரியுமா…நான், “அதை நான் படிக்கலாமே என்று நினைத்து” இவ்வாறு எண்ணிக்கொண்டேன். நான் வேதாகமத்தை திறந்தேன், நான், “பாருங்கள்…” கூறிக் கொண்டேன். என் முகத்தை நான் துடைத்தேன், அப்பொழுது காற்று அடித்து, வேதாகமத்தை எபிரேயர் 6-ம் அதிகாரத்துக்கு திருப்பியது. “பாருங்கள்,” நான், “அந்த வேதவசனம் அங்கில்லையே” என்று சொல்லிக்கொண்டேன். நான் வேதாகமத்தை திரும்பவும் இந்தவிதமாக அதன் மேல் வைத்தேன். அப்பொழுது காற்று மறுபடியும் அடித்து அதை மறுபடியும் எபிரேயர் 6-க்கு திருப்பினது. அப்பொழுது நான், “இப்பொழுது, இது விசித்திரமாயுள்ளதே, காற்று மறுபடியும் அந்த வேதபாகத்திற்கே திருப்பியுள்ளதே” என்று கூறிக்கொண்டேன். எனவே நான், “பாருங்கள், அதை படிக்கலாம் என்று நினைத்து” இவ்வாறு எண்ணிக்கொண்டேன். அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: ஏனெனில் ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும்,…பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய…வார்த்தையும், இனிவரும் பெலன்களையும் ருசி பார்த்தும்,…கூடாத காரியம். நான், “பாருங்கள், அதில் ஒன்றையும் நான் காணவில்லையே” என்று நினைத்தேன். அதற்கு கீழே, அதிகாரம் முழுவதையும் படித்தேன். அதில் ஒன்றுமில்லை. நான், “பாருங்கள், அதுவே—அதுவே அதனைத் தீர்த்துவைக்கிறது” என்று கூறிக்கொண்டேன். நான்—நான் அதை இந்தவிதமாக பார்த்துவிட்டு வைத்தபோது, மறுபடியுமாக காற்று அதே இடத்திற்குத் திருப்பினது. அப்பொழுது நான் வேதாகமத்தை கையிலெடுத்து, நான், “சரி, இது என்ன?” என்று கூறிக்கொண்டேன். எனவே நான் அதை தொடர்ந்து வாசித்துக்கொண்டே, அதை வாசித்துக்கொண்டே, அதை வாசித்துக் கொண்டேயிருந்தேன், அப்பொழுதும் நான், “சரி, என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்றே கூறிக்கொண்டேன். அதன்பிறகும் நான் தொடர்ந்து வாசித்தேன்…நான் கீழே வாசித்தேன்: …ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும்,…கூடாத காரியம். அது கீழே இங்கே இவ்வாறு கூறப்பட்டுள்ள இடத்திற்கு வந்தது: எப்படியெனில், தன் மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதங்களைப் பெறும். முள்செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக் கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் நியாயத்தீர்ப்பு. 192 மேலும் நான், “அதன் அர்த்தம் என்னவென்று தெரியவில்லையே?” என்றே கூறிக்கொண்டேன். நான் சற்று…இப்பொழுது, நான் அப்பொழுது அங்கே எதைக் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. நான் அப்படியே அதையே சிந்தித்துக்கொண்டிருந்தேன். நான் அங்கு உட்கார்ந்துகொண்டிருந்தபோது, சகோதரன் டேவிஸைக் குறித்தும் மற்றவர்களைக் குறித்தும் அங்கே கர்த்தர் எனக்கு ஒரு தரிசனத்தைக் கொடுப்பார் என்று நான் நினைத்தேன். நான் அங்கு உட்கார்ந்துகொண்டிருந்தேன்; நான் நோக்கிப் பார்த்தபோது, எனக்கு முன்னால் இருந்த குழியில் ஏதோ ஒன்று சுழலுவதைக் கண்டேன். அது ஒரு உலகம் சுழன்று கொண்டிருந்ததாயிருந்தது. அது முழுவதும் வெடிப்புற்றிருந்ததைக் கண்டேன், முழுவதுமாக உழப்பட்டிருந்தைப் போன்று காணப்பட்டது. அப்பொழுது விதைகள் நிறைந்த ஒரு—ஒரு—ஒரு பெரிய பாத்திரத்தை தனக்கு முன்னால் வைத்துக்கொண்டு ஒரு மனிதன் புறப்பட்டுச் சென்றார். அவர் சென்றபோது, பூமி முழுவதும் விதை விதைத்துக்கொண்டே சென்றார். அவர் பூமியின் வளைவை சுற்றிச் சென்று, என் கண்களுக்கு மறைந்து போனார். அவர் என் கண்களுக்கு மறைந்து போனவுடனே, உண்மையாகவே இழிவான தோற்றமுடைய ஒரு மனிதன், கறுப்பு உடைகளை அணிந்து, இப்படி சுற்றிச் சுற்றிச் சென்று, வ்வுயூ, வ்வுயூ, வ்வுயூ, வ்வுயூ என்று கெட்ட விதைகளை விதைத்துக்கொண்டே சென்றான். நான் அதை கவனித்தேன், பூமி தொடர்ந்து சுழன்று கொண்டேயிருந்தது… 193 சிறிது கழித்து, கோதுமை பயிர் வளர்ந்து மேலே வந்தது. கோதுமை பயிர் மேலே வந்தபோது, அங்கே முட்செடிகளும், முட் பூண்டுகளும், களைகளும் கோதுமை பயிரின் மத்தியில் வளர்ந்து மேலே வந்தன. அவையனைத்தும் வளர்ந்தன, பால் களைச் செடிகளும், மற்றுமுள்ள யாவும் ஒன்றாகவே கோதுமையோடு வளர்ந்தன. அவை யாவும் வளர்ந்து கொண்டேயிருந்தன. அப்பொழுது உண்மையாகவே ஒரு மோசமான வறட்சி உண்டாகி, கோதுமைப் பயிர் இப்படி தலையை தொங்கவிட்டன, சிறு களைககள், முட்செடி, முட்பூண்டு, களை இவையனைத்தும் தலையை தொங்கவிட்டன. ஒவ்வொரு களையும் [சகோதரன் பிரான்ஹாம் பெருமூச்சு விடுவது போல் சப்தம் உண்டாக்குகிறார்—ஆசி.] இப்படி பெருமூச்சுவிட ஆரம்பித்ததன. உங்களால் அதைக்கேட்க முடியும். அவையனைத்துமே மழை, மழையையே அழைத்துக்கொண்டிருந்தன. 194 சிறிது கழித்து, மிகப் பெரிய ஒரு மேகம் தோன்றி, மழை பெய்து, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினது. அது அங்கு விழுந்தபோது, கோதுமை பயிர் குதித்து, “மகிமை, அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத் திரம்!” என்று ஆர்ப்பரிக்கத் துவங்கியது. அதே நேரத்தில் சிறு களையும் மேலே குதித்து, “மகிமை, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அல்லேலூயா!” என்றது. முட்களும் மற்ற யாவும் வயலைச் சுற்றி நடனமாடி, “மகிமை, அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று ஆர்ப்பரித்தன. சரி, ஆனால் நான், “என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்று கூறிக்கொண்டேன். 195 அந்த தரிசனம் என்னை விட்டு நீங்கினது; அப்பொழுது நான் அதன் பேரில் மீண்டும் யோசித்தேன்: “முள் செடிகளை முளைப்பிக்கிற நிலமோ தகாததாயுமிருக்கிறது.” அப்பொழுது நான் அதைப் புரிந்துகொண்டேன். இயேசு, “மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கிறது” என்றார். ஒரு மனிதன் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு உண்மையாகவே பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் போலவே அந்நியபாஷை பேசி, அவர்களைப் போலவே நடந்து கொண்டு, அதே சமயத்தில் தேவனுடைய ராஜ்யத்தில் இல்லாமல் இருக்க வகையுண்டு. அது முற்றிலும் உண்மை. இயேசு, “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி, ‘கர்த்தாவே, உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் (பிரசங்கித்தோம்) அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?’ என்பார்கள் என்று கூறவில்லையா?” இயேசு, “அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” என்றார். அதைக் குறித்து எப்படி? 196 இதுதான் இங்கே அதன் சரியான அர்த்தமாயுள்ளது. புரிகிறதா? அவைகள் வானத்திலிருந்து வந்த நல்ல மழையை ருசி பார்த்தன. ஆனால் தொடக்கத்திலேயே, அவர்கள் தவறாயிருந்தனர். தொடக்கத்திலேயே அவர்கள் நோக்கங்கள் சரியாயிருக்கவில்லை; அவர்களுடைய குறிக்கோள்களும் சரியாயிருக்கவில்லை. அது, உங்களால் சொல்ல முடியாது. அந்த…உங்களுக்கு தெரியும், அறுப்புக் காலத்தில் அவன், “நான் போய் அவைகளையெல்லாம் பிடுங்கிப் போடலாமா?” என்று கேட்டான். 197 அவர், “அவைகளை அறுப்பு மட்டும் வளரவிடுங்கள், அந்நாளில் இந்த முள்செடிகளும் முள்பூண்டுகளும் ஒருமித்து சுட்டெரிக்கப்படும், கோதுமையோ களஞ்சியத்தில் சேர்க்கப்படும்” என்றார். இப்பொழுது, உங்களுக்கு எது ஒரு முள்செடி, அல்லது எது ஒரு முள்பூண்டு, அல்லது எது ஒரு கோதுமை என்று எப்படி அறிந்துகொள்ளப் போகிறீர்கள்? “அவைகளுடைய கனிகளினால் அவைகளை அறிவீர்கள்.” நீங்கள் பாருங்கள், சகோதரனே, சகோதரியே, நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுக்காது. எப்படியிருந்தாலும், பாதையில் எங்காவது, அது உங்களை பிடிக்கப் போகிறது. எனவே, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நீங்கள் நாடும்போது…அந்த கேள்வியை யார் எழுதியிருந்தாலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். புரிகிறதா? 198 இப்பொழுது, அந்த காலத்து எல்லைக்கோடு விசுவாசிகள், அவர்கள் அவைகளோடு சரியாகத் தான் இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய விருத்தசேதனத்தின்படி விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் தேவன் வாக்களித்த தேசத்துக்கு, அதனுடைய முனைவரைக்கும் சென்றனர். அநேகர், ஒரு மனிதன் அந்த முனைவரைக்கும் வருகிறான். அவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறும் நிலைவரைக்கும் வந்து, அதை புறக்கணிப்பான். அவன் அதை விட்டுவிடவும் விரும்புகிறதில்லை. அவன் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் வேதாகம ஞானஸ்நானம் வரைக்கும் வந்து, பின்னர் புறமுதுகினைக் காட்டி, அதை காணாக் கூடாமல் புறக்கணிப்பான். 199 பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் எவராகிலும் எப்போதாகிலும் ஞானஸ்நானம் பெற்றதாக வேதாகமத்தில் ஒரு வேத வசனம் கூட இல்லை. கத்தோலிக்க சபை அதைத் தொடங்கி, அது லூத்தர், வெஸ்லி அவர்களின் வழியாக வந்து, இது வரைக்கும் நிலைத்திருக்கிறது. அது முற்றிலும் உண்மை. ஆனால் வேத ஒழுங்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானமே. அதுவே அப்போஸ்தலர்கள் கொடுத்த ஞானஸ்நானம். அந்த நாமத்தில் நீங்கள் ஞானஸ் நானம் பெற்று ஒரு ஸ்தாபனத்தில் இருக்க முடியாது. அது உண்மை. 200 இப்பொழுது, அந்த காரியங்கள் உங்களுக்கு புரிகிறதா? பரிசுத்த ஆவியின் அபிஷேகம், ஆவியின் வரங்கள், தேவன் அளிக்கும் காரியங்கள்…ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், நீடிய பொறுமை (ஓ, நீங்கள், “ஆனால் சகோதரன் பிரான்ஹாமே, தேவனுக்கு ஸ்தோத்திரம். நான் நீடிய பொறுமையோடிருந்து கொண்டிருக்கிறேன்” என்கிறீர்கள். அது அப்படித்தான் தென்படுகிறது. அண்மையில் நான் ஓஹையோவுக்கு சென்றிருந்த போது, யாரோ ஒருவர், நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேனோ என்று ஒரு கடிதம் எழுதி என்னைக் கேட்டிருந்தார். நான் ஒரு வார்த்தையும் கூறவில்லை. ஆனால் எப்படியோ அவர்கள் அதைக் கண்டு கொண்டனர், அப்பொழுது ஒத்துழைப்பு கொடுத்த பதினாறு போதகர்கள் பிரிந்து சென்று விட்டனர். அது நீடிய பொறுமையாயிருக்கவில்லையே!)—நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், பொறுமை, மற்றும் பரிசுத்த ஆவி. புரிகிறதா? 201 ஓ, சகோதரனே, சகோதரியே, நாம்—நாம் காதேஸ்பர்னேயாவில் இருக்கிறோம். இப்பொழுது நீங்கள் ருசி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். நேற்றிரவு பரிசுத்த ஆவி நம்மேல் விழுந்தது, அது ஒரு பலத்த காற்று போல் நம்மேல் வந்தது. உங்களில் அநேகர் மேல் அது அமர்ந்தது. இன்றைக்கு போதகர்கள் இங்கும் அங்கும் வீடுகளுக்குச் சென்று, பரிசுத்த ஆவியை நாடுபவர்களின் மேல் தங்கள் கரங்களை வைத்து அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். வேறொன்றையும் அதற்கு பதிலாக நீங்கள் ஏற்றுக்கொள்ளாதீர்கள். ஒருவிதமான சத்தத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதீர்கள். ஒருவிதமான உணர்ச்சியை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதீர்கள். தேவன் உங்களை வனைந்து, ஒரு புது சிருஷ்டியாக, ஒரு புது நபராக்கும் வரைக்கும் நீங்கள் அங்கு காத்திருங்கள். இப்பொழுது நீங்கள் ருசிபார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், அதை ருசி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள், ஆனால் புறா உங்களை மேசையண்டை வழிநடத்த இடங் கொடுங்கள், மற்றும்—மற்றும் அங்கு ஆட்டுக் குட்டியும் புறாவும் ஒருமித்து உட்கார்ந்துகொண்டு, தேவனுடைய வார்த்தையை என்றென்றைக்கும் புசித்துக்கொண்டிருப்பார்கள். வானமும் பூமியும் இல்லாமல் ஒழிந்துபோனாலும் அது நிலைநிற்கும்; தேவனுடைய வார்த்தை நிலைத்திருக்கும். அது உண்மை. 202 நான் தீவிரமானவன் என்று தயவுசெய்து எண்ண வேண்டாம். நான் அப்படி இருந்திருந்தால், அப்படியிருக்க வேண்டுமெனும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. நான்…இந்த கேள்விகளுக்கு நான் பதிலளித்துள்ளேன் என்று நான் நம்புகிறேன்; என் அறிவிற்கெட்டின மிகச் சிறந்த முறையில் நான் பதிலளித்துள்ளேன். 203 எனவே, எபிரெயர் 6-ம் அதிகாரத்தில், நீங்கள் பார்ப்பீர்களானால், பவுல், “சரி, நாங்கள் இதுவரை உங்களுடன் கூட வருவோம்” என்று கூறின எபிரெயர்களிடத்தில் இதை கூறிக்கொண்டிருக்கிறான். அவர்கள் அதுவரைக்கும் வருவார்கள். நீங்கள் பார்த்தீர்களா? “இப்பொழுது நீங்கள்…” என்றான். அது வரைக்கும் வந்து ருசி பார்த்துள்ளவர்கள். 204 நான் இந்த கட்டிடத்திற்குள் பின்னால் நோக்கிப் பார்க்க நேர்ந்தது. ஒரு ஜீவிக்கிற தேவனின் அத்தாட்சியை உங்களுக்கு காண்பிக்கப் போகின்றேன். இந்த மனிதனை நான் வெளிப்படுத்திக் கூறவில்லையென்று நான் நம்புகிறேன். அண்மையில் நான் ஒரு கூட்டத்திலிருந்து வந்தபோது, ஒரு நல்ல நண்பர் என்று உங்களிடம் அறிவித்தேன், என்னுடைய தனிப்பட்ட ஒரு நண்பர், ஒரு வேட்டைக் கூட்டாளி, எனக்கு ஒரு நல்ல மனிதனாகவே இருந்து வந்தவர், என் சபைக்கு வந்திருந்திருந்த ஒரு மனிதன், என் சகோதரனாயிருந்து வந்தவர்; அவரை நான் பஸ்டி என்றழைத்தேன். அவருடைய பெயர் எவரட் ராட்ஜர்ஸ்; அவர் மில்டவுனில் வசித்தார். அவரைக் குறித்து இங்கு நான் அறிவித்தது எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளது? அவர் இங்கு மருத்துவமனையில் படுத்திருந்தார்; மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரைக் அறுவை சிகிச்சை செய்து திறந்து பார்த்தபோது, அது புற்று நோயால் முழுவதும் பீடிக்கப்பட்டிருந்தபடியால், அவர்கள் அவருடைய வயிற்றை மறுபடியும் தைத்துவிட்டனர். “அவர் இப்பொழுதே படிப்படியாக நலங்குன்றிவிடுவார்; இன்னும் சில வாரங்களில் அவர் இறந்து விடுவார்; அவருக்குள்ளதெல்லாம் அவ்வளவுதான். அவர் மரித்துப் போய்விடுவார், அவ்வளவுதான்” என்றனர். 205 நான் இங்கே மேடையின் மேல் நின்றுகொண்டு அவருக்காக ஜெபம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் அங்கு சென்று அவரிருந்த அறைக்குள் நுழைந்தேன், என் இருதயத்தை ஏதோ ஒன்று ஏவிக் கொண்டிருந்தது. நான் அறைக்குள் நடந்து சென்று எல்லோரையும் வெளியே அனுப்பி விட்ட பிறகு…சகோதரன் எவரட் அங்கு படுத்திருந்தார். இது உங்களுக்கு ஞாபகமிருக்கும், நான் உள்ளே நடந்து சென்றேன்; நான், “சகோதரன்—சகோதரன் பஸ்டி” என்றேன். (அவரை பஸ்டி என்று நான் அழைத்தேன்.) 206 அநேக நாட்களுக்கு முன்பு நாங்கள் பிரஷ் ஆர்பர் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தபோது, மலையின் மேலுள்ள மெதோடிஸ்டுகள் அனைவரும் (கெர்டி, அவர்களில் ஒருத்தி), மெல்ல நழுவி, நான் என்ன கூறப்போகிறேன் என்பதை கேட்க, அந்தவிதமாக கிரேப் ஆர்பரின் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். மெதோடிஸ்டு சபை அவர்களை வெளியேற்றிவிடுமோ என்னும் பயம் இருந்தது. பிறகு, நான் அங்கு சென்றபோது, ஒரு தரிசனம் உண்டானது, அதில் ஒரு தகரக்குவளையில் முழுவதும் இறைச்சி குவிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். நான் சில மீன்களைப் பிடித்து, அவைகளைக் கயிற்றில்—அவைகளை கயிறுகளில் கட்டி, நான் அவைகளை கயிற்றில் கட்டி தொங்கவிட்டேன். நான் பார்த்தபோது…இவை யாவும் ஒரு தரிசனத்தில் காணப்பட்டன; அன்றிரவு பிரஷ் ஆர்பரிலுள்ள ஒரு கூட்ட ஜனங்களை நான் விட்டுச்—விட்டுச் சென்று, மலையின் மேலுள்ள சகோதரன் ரைட் என்பவரின் வீட்டிற்கு சென்றேன். அடுத்த நாள் காலை, அவர்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான், “நீங்கள் யாருமே…” என்றேன். 207 நான் அங்கு நின்று கொண்டு பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, அந்த ஒளி அங்கே வந்து; அந்த அக்கினி ஸ்தம்பம் எனக்கு முன்னால் தோன்றி, “நீ இந்த இடத்தை விட்டு காட்டுக்குப் போ; நான் அங்கே உன்னுடன் பேசுவேன்” என்றது. அது அதே நாளாயிருந்து, அதற்கு அடுத்த நாள் அவர்கள் என்னை மலையின் மேல் கண்டு பிடித்தனர். நான் மலையின் மேல் சென்றிருந்தேன்; என் காரை புதரில் மறைத்துவிட்டு, இரவு முழுவதும் மற்றும் அதற்கடுத்த நாளும் ஜெபம் செய்துகொண்டிருந்தேன். சிலர் அங்கு வந்தனர், காரைக் கண்டு பிடித்துவிட்டபடியால் அங்கே வந்தனர்…அன்றுதான் இங்குள்ள சகோதரன் கிரகாம் ஸ்னெல்லிங் பரிசுத்த ஆவியைப் பெற்று, ஊழியத்திற்கு அழைப்பும் பெற்றார். 208 அங்கே அந்த மலையின் மேல் நான் படுத்திருந்தபோது, நான் செய்ய வேண்டிய வெவ்வேறு காரியங்களை அவர்—அவர் என்னிடம் கூறினார், நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். இந்த மீன்கள் கோர்வையாக கோர்க்கப்பட்ட ஒரு தரிசனத்தைக் அவர் கொடுத்து, “அது உன்னுடைய மில்டவுன் சபை” என்றார். அதிலிருந்து நான்கு அல்லது ஐந்து மீன்கள் விழுந்துவிட்டன; நான், “அவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அது கை ஸ்பென்ஸரும் அவருடைய மனைவியும். மற்றதோ அங்கிருந்த மற்ற ஸ்பென்ஸரும் அவரைச் சார்ந்தவர்களும்” என்றார். அவர் இன்னும் வேறுபட்ட மற்றவர்களையும், என்ன வீழ்ச்சி உண்டாகும் என்றும் கூறினார். 209 நான் அவர்களிடம் கூறினேன்; நான், “நீங்கள் யாரும் புசிக்க வேண்டாம்” என்றேன். அது என் மனைவிக்கும் எனக்கும்…அது எங்களுக்கு விவாகமாவதற்கு முன்பாயிருந்து; அவள் சகோதரி ஸ்பென்ஸருடன் வீட்டுக்குச் சென்று முழு இரவும் தங்கியிருந்தாள், ஒரு அற்புதமான ஸ்திரீ. கை ஸ்பென்ஸரும் அற்புதமான மனிதன், எல்லாரைப் பார்க்கிலும் ஒரு மிகச் சிறந்த அருமையான மனிதர். அவர்—அவர் அங்கு சென்றார், ஓபல் மேடாவிடம், “இப்பொழுது, பார்…” என்றாள். மேடாவிற்கு, அவள், “இப்பொழுது, மேடா, நான் சகோதரன் பில் சொல்வதை நம்புகிறேன்” என்றாள். மேலும் அவள், “ஆனால் ஓபலுக்கு பசியெடுக்கும்போது, அவள் பன்றி இறைச்சியும் முட்டையும் சாப்பிட வேண்டும்” என்றாள். எனவே அவள் அங்கு சென்று, தன்னுடைய பன்றி இறைச்சியும் முட்டையும் பொறித்து, மேசையினருகில் உட்கார்ந்து, ஜெபம் செய்து, சாப்பிடுவதற்காக மேசையின் மேல் குனிந்தபோது, அவளால் அதை தொடமுடியாமல் அழத் தொடங்கினாள். அதன்பிறகு அவர்கள் வேட்டையாட வந்தனர். 210 அந்த நாளன்று அங்கே மலையின் மேல், என்ன நடக்குமென்று அவர் சரியாக கூறிவிட்டார். அவர், “இவர்கள் போய்விடுவார்கள், அப்பொழுது இவர்கள் போய் விடுவார்கள்” என்றார். ஆனால் தகரக்குவளையில் அடைக்கப்பட்ட இறைச்சியை அவர் நிறைய வைத்திருந்தார். மேலும் அவர், “மில் டவுன் ஜனங்களுக்கு மேலும் உபயோகிப்பதற்காக இதை வைத்துக்கொள்” என்றார். அன்றொரு இரவு நான் சகோதரன் கிரீச் பேசுவதைக் கேட்டபோது…அவர் நேற்றிரவு இங்கு உட்கார்ந்து கொண்டிருந்தார். எனக்குத் தெரியவில்லை…சகோதரன் கிரீச், இன்றிரவு இங்கிருக்கிறீர்களா? சகோதரன் க்ரீச் என்னிடம் வந்து, என்னைக் கூப்பிட்டார், சகோதரி கிரீச் அழுதுகொண்டிருந்தாள்; அவளுடைய தந்தை அங்கு படுத்துக்கொண்டிருந்தார். அவள், “சகோதரன் பில், அவரிடம் சொல்ல வேண்டாம், அவர் மரித்துக் கொண்டிருக்கிறார்” என்றாள். மேலும், “புற்றுநோய் அவரைத் தின்றுவிட்டது; மருத்துவர்கள் அவர் வயிற்றை அறுத்து பார்த்தபோது, அவர் முழுவதும் புற்று நோயால் பீடிக்கப்பட்டிருந்தார்” என்றாள். வில் ஹால் (அவரை உங்கள் அனைவருக்குமே ஞாபகமிருக்கும்), அதே மருத்துவர் அவர் வயிற்றை அறுத்து பார்த்தபோது, அவர் முழுவதும் புற்று நோயால் பீடிக்கப்பட்டிருந்தார்…நான் அணில் வேட்டைக்காக அன்று காலை புறப்பட்டு சென்று விட்டேன். அந்த அறையில் ஆப்பிள் பழங்கள் தொங்குவதை நான் கண்டேன். (அந்த சம்பவம் உங்கள் அனைவருக்கும் ஞாபகமிருக்கிறதா?) அந்த மனிதன் இன்று உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இது அநேக ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அவரும் சகோதரன் பஸ்டியும் நண்பர்களாயிருந்தனர். 211 அந்த மருத்துவமனைக்கு, புதிய மருத்துவமனைக்கு நான் சென்றேன் (அங்கே நியூ ஆல்பனியிலுள்ள அதை அவர்கள் என்னவென்று அழைக்கிறார்கள் என்று நான் மறந்துவிட்டேன்) அந்த புதிய மருத்துவமனை. நான் பஸ்டியைக் காண அங்கு சென்றிருந்தேன்; நான் அறைக்குள் நுழைந்தபோது, “சகோதரன் பஸ்டி” என்றேன். அவர், “சகோதரன் பில்” என்றார். என் கையை இறுகப் பிடித்து பலமாக கைகுலுக்கினார்; அவர் முதலாம் உலக யுத்தத்தில் ஒரு இராணுவ வீரராக பணிபுரிந்தவர், அவருடைய முன்னிலையில் இதை நான் கூறவில்லை, ஆனால் அவர் மிகவும் சிறந்த ஒரு இருதயம் படைத்தவர. அவர் என் கையைப் பிடித்துக்கொண்டார். நான் அவருடைய வீட்டிற்கு சென்றிருக்கிறேன்; அவருடைய வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன்; அவரு டைய வீட்டில் உறங்கியிருக்கிறேன், நான் அவருக்கு சகோதரனைப் போலிருந்தேன். அவருடைய பிள்ளைகளும் மற்றும் அனைவருமே, நாங்கள்—நாங்கள் இரத்த சம்மந்தமான உறவு கொண்ட சகோதரர்கள் போல் இருந்தோம். அருமையான மனிதன். 212 அவர்…ஆனால் அவர் கர்த்தரிடம் ஆழமான அனுபவத்துக்குள் வரவில்லை. அவர்…அவருக்கு நான் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன். ஆனால் அன்று அந்த மெதோடிஸ்டு போதகர், “இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்ற எவரும், என் கூடாரத்தை விட்டு வெளியேறுங்கள்” என்றார். அது சரியானதாயிருந்து. அப்பொழுது ஜார்ஜ் ரைட்டும் மற்றவர்களும் வெளியே நடந்து வந்துவிட்டார்கள். அன்று பிற்பகல் நான் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பதற்காக டாட்டன் ஸ் ஃபோர்டுக்கு சென்றேன். அவருடைய சபையோர் அனைவருமே தண்ணீருக்குள் நடந்து இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். இவ்வாறு நான் சென்று கொண்டேயிருந்தேன். அது சரியானதாயிருந்தது. தேவன் உங்களுடைய பட்சத்தில் இருந்தால், உங்களுக்கு விரோதமாயிருப்பவன் யார்? அந்த மனிதன் எங்கு சென்றார், அவருக்கு என்ன நேர்ந்தது என்று கூட எனக்கு ஒன்றுமே தெரியாது. 213 எனினும், நான் மருத்துவமனைக்குள் நடந்து சென்றேன். அங்கு பஸ்டி புற்றுநோயினால் முழுவதும் பீடிக்கப்பட்டவராய் படுத்துக்கொண்டிருந்தார், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையும் கூட அளிக்கவில்லை, அவர் அசையாதபடிக்கு அவரை கட்டிலோடு சேர்த்து கட்டியிருந்தனர். பஸ்டி என்னிடம், “சகோதரன் பில், இது ஏதோ ஒரு நோக்கத்துக்காகவே இவ்வாறு நடந்துள்ளது. ஏதோ ஒன்று சம்பவித்தது” என்றார். அதற்கு நான், “ஆம், பஸ்டி” என்றேன். நான் இப்பொழுது உங்களிடம் கூறிக் கொண்டிருந்த அந்த ஆவி பலத்த காற்று அடிப்பதுபோல், உங்களுக்குத் தெரியுமா, உள்ளே நுழைவதை உணரத் துவங்கினேன். அவர் சொன்னார்…நான் அங்கே அறைக்குள் நடந்து சென்றபோது, அந்த மூலையில் ஒரு வானவில் காணப்பட்டு, அந்த மூலையில் நின்றுகொண்டிருந்தது. ஒரு வானவில் ஒரு உடன்படிக்கைக்கு அடையாளம்; தேவனுடைய உடன்படிக்கை. தேவன் அன்று அந்த மலையின் மேல் என்னுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார். என் கரங்களை பஸ்டியின் மேல் வைத்து அவருக்காக ஜெபித்தேன். மருத்துவர்கள், “அவர் நலங்குன்றி விடுவார். அவர் மரித்துப் போய்விடுவார். ஒன்றுமே செய்வதற்கில்லை…அவர் இன்னும் சில நாட்களில் இறந்து போவார்” என்றெல்லாம் கூறினர். பஸ்டி ராட்ஜர்ஸ்…அது அநேக வாரங்களுக்கு, அநேக வாரங்களுக்கு, அநேக வாரங்களுக்கு முன்பு, பஸ்டி ராட்ஜர்ஸ், இன்றிரவு நான் என் ஜீவியத்தில் அவரைக் கண்டது போன்றே ஆரோக்கியமுள்ளவராய் பருமனடைந்து, இந்த சபையில் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சகோதரன் பஸ்டி எழுந்து நில்லுங்கள். அதோ அவர் இருக்கிறார். நாம், ஒவ்வொருவரும் தேவனுக்கு துதி செலுத்துவோமாக. அவர்கள் மேலறையில் ஒன்றுகூடி எல்லோரும் அவருடைய நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, ஊழியத்துக்கான வல்லமை வந்தது. இப்பொழுது, அன்று அவர் அவர்களுக்கு என்ன செய்தாரோ, அவர் அதையே உங்களுக்கும் செய்வார். “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். அவர்களில் நானும் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். (அல்லேலூயா!) அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். இந்த ஜனங்கள் எவ்வித உரிமையையும் பாராட்டாமல் உலகத்தின் கீர்த்தியைக் குறித்து பெருமை பாராட்டாமல் இருந்தாலும், அவர்கள் அனைவரும் தங்களுடைய பெந்தெகொஸ்தேவைப் பெற்றுக்கொண்டு, இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றனர். இப்பொழுது அவர்கள் உலகின் எல்லா திக்குகளிலும், அவருடைய வல்லமை மாறாததென்று சொல்லி வருகின்றனர். “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். அவர்களில் நானும் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன் (அல்லேலூயா!) அவர்களில் ஒருவன், அவர்களில் நானும் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். இப்பொழுது, என் சகோதரனே வந்து, இந்த ஆசீர்வாதத்தை நாடு அது உன் இருதயத்தைப் பாவத்திலிருந்து சுத்திகரிக்கும், அது சந்தோஷ மணிகளை ஒலிக்கத் துவங்கச் செய்து, உன் ஆத்துமாவை அனல்மூட்டும். ஓ, இப்பொழுது அது என் இருதயத்துக்குள் கொழுந்து விட்டு எரிகிறது, ஓ, அவருடைய நாமத்துக்கு மகிமை. “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். (நாம் அதைப் பாடுவோமாக!) ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். (அல்லேலூயா!) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். (உங்களில் எத்தனை பேர் அவர்களில் ஒருவராயிருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். ஓ, என்னே! ஓ, நான் அவர்களில் ஒருவனாக இருப்பதற்காக நான் எவ்வளவாக மகிழ்கிறேன்.) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். (அல்லேலூயா!) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். அவர்கள் மேலறையில் ஒன்று கூடி, எல்லோரும் அவருடைய நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, ஊழியத்துக்கான வல்லமை வந்தது. இப்பொழுது, அன்று அவர் அவர்களுக்கு என்ன செய்தாரோ, அவர் அதையே உங்களுக்கும் செய்வார். “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். (அல்லேலூயா!) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். இப்பொழுது, அந்த பல்லவியை நாம் மறுபடியும் பாடும்போது, நீங்கள் ஒவ்வொருவரும் திரும்பி, உங்களுக்கு பக்கத்திலுள்ள யாராவது ஒருவரிடம் கைகுலுக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், “நீங்கள் அவர்களில் ஒருவரா?” என்று கேளுங்கள். புரிகிறதா? சரி. ஓ, அவர்களில் ஒருவன் (சகோதரன் நெவில், நீங்கள் அவர்களில் ஒருவர் என்று நான் அறிவேன், சகோதரன் காப்ஸ், நீங்கள் அவர்களில் ஒருவர் என்று நான் அறிவேன். நீங்கள்…நான் அறிவேன்…?…) …அவர்களில் ஒருவன். ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். 214 ஓ, நீங்கள் அவர்களில் ஒருவராக இருப்பதற்காக மகிழ்ச்சி கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. அவர்களில் ஒருவராக இருப்பதற்கு எத்தனை பேர் விரும்புகிறீர்கள்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். சரி. இப்பொழுது, நான் இதை உங்களுக்காக பாடப் போகின்றேன். அப்படியானால் என் சகோதரனே, வந்து இந்த ஆசீர்வாதத்தை நாடு அது என் இருதயத்தைப் பாவத்திலிருந்து சுத்திகரித்து, அது சந்தோஷ மணிகளை ஒலிக்கத் துவங்கி, உன் ஆத்துமாவை அனல் மூட்டும். ஓ, இப்பொழுது அது என் இருதயத்துக்குள் கொழுந்து விட்டு எரிகிறது, ஓ, அவருடைய நாமத்துக்கு மகிமை. “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். (அல்லேலூயா!) அவர்களில் ஒருவன், நான் அவர்களில் ஒருவன். “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். 215 அந்த சிறு பெண் பேதுருவைப் பார்த்து, “நீயும் அவர்களில் ஒருவன் அல்லவா?” என்று கேட்டாள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நான் மிகவும் மகிழ்கிறேன், நீங்களும் அப்படித்தானே? உங்களுக்குத் தெரியும், பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு, “இதுதான் அது!” என்று கூறினான். இப்பொழுது, நான் எப்பொழுது, “இது அதுவாக இல்லாவிட்டால், இதை பெற்றதற்காக நான் மகிழ்கிறேன். அது வருவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறேன். அது உண்மை. இதைக் குறித்து நான் மகிழ்கிறேன். ஏனெனில் நானும் அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்; “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். 216 ஓ, கிறிஸ்து இயேசுவோடு கூட உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டு, ஆவியுடன் உரையாடி, வார்த்தையின் பேரில் உரையாடி, வரப்போகும் நன்மையான காரியங்களைக் குறித்து பேசுவது, இது அற்புதமானதல்லவா, அது மிகவும் நல்லது. அதைக் குறித்து அறிய நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன், நீங்களும் அப்படித்தானே? நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருப்பதில் மகிழ்ச்சி கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? உங்களுடைய பாவங்கள் இரத்தத்தின் கீழ் இருப்பதற்காக நீங்கள் மகிழ்ச்சி கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? அவர் இந்நாட்களில் ஒன்றில் வருவார், நாம் அவருடன் சென்றுவிடுவோம். அப்பொழுது யோசித்துப் பாருங்கள், முதுமை பருவம் அனைத்தும் நம்மை விட்டு போய்விடும்; வியாதி, துன்பம் எல்லாம் போய்விடும், அழிந்து போகக்கூடிய இந்த வாழ்க்கையே மாறிவிடும். ஓ, என்னே! இங்கு நின்ற அருமையான வயோதிக சகோதரர்களை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. நான் நினைவுகூருகிறேன்…உங்களில் எத்தனை பேருக்கு ரபி லாசனை ஞாபகமுள்ளது? என்னே, ஏறக்குறைய உங்கள் எல்லாருக்குமே. அவர் தமது பழைய கைத்தடியை இங்கு மாட்டி வைப்பார், நான் அங்கு பின்னால் உட்கார்ந்து கொண்டிருப்பேன். அவர் அந்த சிறு பாடலைப் பாடுவார்…(ஒரு நிமிடம் சகோதரன் டெடி.) நான் முயற்சி செய்வேன், அதன் ராகம் எனக்கு வருகிறதா என்று பார்ப்போம். எனக்குத் தெரியவில்லை. ஒரு மகிழ்ச்சிகரமான நாளை எனக்காக காத்திருக்கிறது, அங்கு முத்துக்கள் பதிக்கப்பட்ட வாசல்கள் விரிவாய் திறக்கும், இந்த துன்பத்தின் திரையை நான் கடக்கும்போது, நான் மறுபுறம் இளைப்பாறுவேன். என்றாகிலும் ஒருநாள் அழிந்து போகக்கூடிய உறவினருக்கு எட்டாத தூரத்தில், என்றாகிலும் ஒருநாள், அது எங்கே எப்பொழுது என்று தேவன் மாத்திரமே அறிவார், அழிந்து போகக் கூடிய வாழ்க்கையின் சக்கரங்கள் சுழலாமல் நின்றுபோகும்போது, நான் அப்பொழுது சீயோன் மலையில் வாசமாயிருக்கச் சென்றுவிடுவேன். (ஆம்.) 217 இந்த சிறு சக்கரங்கள் நமக்குள் சுழன்றுகொண்டிருக்கின்றன— பார்த்தல், ருசி பார்த்தல், உணருதல், முகருதல், கேட்டல் என்ற சிறு புலன்களும் சக்கரங்களும் அழிந்து போகக்கூடிய இந்த வாழ்க்கையில் சுழன்றுகொண்டிருக்கின்றன, என்றாகிலும் ஒரு நாள் அவை சுழலாமல் நின்றுவிடும். அப்பொழுது நானும், நீங்களும் சீயோன் மலையில் வாசம்செய்ய சென்றுவிடுவோம். ஓ, எனக்கு அது பிடிக்கும், உங்களுக்கும் அப்படித்தானே? அந்த ஆசீர்வதிக்கப்பட்ட உறுதியை நாம் பெற்றிருக்கிறோம் என்று அறிந்து கொள்ளுங்கள். சரி, எத்தனை பேருக்குத் நம்முடைய பழைய ஞானஸ்நானப் பாடல் தெரியும்? இப்பொழுது, நாம் அதை மாற்றுவோம். நாம் கூட்டத்தை முடிக்கும்போது பாடும் பாடலைப் பாடுவோம்: இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், துயரமும் துக்கமும் நிறைந்த பிள்ளையே; அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும், நீ எங்கு சென்றாலும் அதை உன்னுடன் கொண்டு செல். 218 இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல். நீ போகும்போது, அதை செய். சரி, நாமெல்லாரும் சேர்ந்து பாடுவோம். மறக்க வேண்டாம், நாளை காலை எட்டு மணிக்கு கூட்டத்திற்கான ஜெப அட்டைகள் வழங்கப்படும். கூட்டம் ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பிக்கும். நான் பத்து மணிக்கு பிரசங்கம் செய்வேன். வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் ஆராதனை சுமார் பதினொரு மணிக்குத் தொடங்கும். 219 நாளை பிற்பகல், நாளை மாலை, கூடாரத்தில் ஒரு சுவிசேஷக செய்தி கொடுக்கப்படும். நாளை இரவு, உங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பி, இன்னும் ஞானஸ்நானம் பெறாதவர்களுக்கு, அங்கே…தொட்டி திறந்திருக்கும்; நாங்கள் ஜனங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்போம். 220 இப்பொழுது நாமெல்லாரும் சேர்ந்து, நமது உச்சக் குரலில் பாடுவோம். சகோதரன் பஸ்டி, நான் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவனாகவும் தேவனுக்கு நன்றியுள்ளவனாகவும் இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியுமா, அவர் மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் அவரைப் பார்த்துவிட்டு, என்ன நினைப்பதென்றே அவருக்குத் தெரியவில்லையாம் என்றே அவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். அவர் அதே நபராயிருந்தார் என்று அவரால் நம்பவே முடியவில்லை. ஓ, தேவனால் என்ன செய்ய முடியும் என்பது இரகசியமில்லை. அது உண்மையல்லவா? சரி. இயேசுவின் நாமத்தை (அதை தொனிக்கச் செய்!) உன்னுடன் கொண்டு செல், துயரமும் துக்கமும் நிறைந்த பிள்ளையே; அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும், இப்பொழுது, நீ எங்கு சென்றாலும் அதை உன்னுடன் கொண்டு செல். விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்!), ஓ, எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையேறப்பெற்ற நாமம் (ஓ, விலையேற்றப்பெற்ற நாமம்!), ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். 221 சரி. நான் இப்பொழுது ஆராதனையை போதகரிடம் ஒப்படைக்கிறேன். அவர் சில வார்த்தைகள் கூறலாம் அல்லது நம்மை அனுப்பி வைக்கும்படி யாரையாவது கேட்கலாம், அவருடைய மனதில் என்ன இருந்தாலும் சரி.